Friday, November 2, 2012

சுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு

சுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு





சுவிஸ் வங்கியிருப்பு ரகசியமாக வைக்கப்படும் என்ற கொள்கைக்கு விடை கொடுத்துவிட்டதாக UBS வங்கியின் தலைமை நிர்வாகி செர்கியோ எர்மோட்டி கூறினார்.
இது குறித்து எர்மோட்டி அளித்த பேட்டியில், உலகளவில் இனி 20000 பேர் தம் வங்கியில் வேலை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.

அப்போது சுவிஸ் வங்கிகள் ரகசியம் காத்தல் என்ற கொள்கையினால் பட்ட பாடுகளையும் விவரித்தார்.

சுவிஸ் வங்கிகள் தமது வாடிக்கையாளர் மற்றும் அவரது வங்கியிருப்பு குறித்த விபரங்களை ரகசியமாக வைத்ததால், அந்தப் பணத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றிய அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு உதவிய குற்றத்திற்காக 2009ம் ஆண்டில் 780 மில்லியன் டொலர் அபராதமாக செலுத்த நேர்ந்தது.

UBS வங்கியைத் தொடர்ந்து மற்ற வங்கிகளுக்கும் அமெரிக்கா நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.

இந்தத் துன்பத்துக்கு சுவிஸ் வங்கிகள் பின்பற்ற வந்த ரகசியக் காப்பு கொள்கையே காரணம்.

எனவே இனி வாடிக்கையாளரின் பெயர் மற்றும் வங்கியிருப்பு ரகசியமாக வைக்கப்பட மாட்டாது.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க 5000 வாடிக்கையாளரின் விபரங்களை அந்நாட்டிற்கு சுவிஸ் வங்கி அளித்தது.

மேலும் வங்கிகளில் வேறு சில மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டியிருப்பதால் ஆட்குறைப்பு அவசியமாகிறது.

தற்போது 64,000 பேர் பணிபுரிகின்றனர். ஆனால் 2015ம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 54000 ஆகிவிடும் என்றார்.

ஆட்குறைப்புக்கு முக்கிய காரணம் வங்கியின் இந்த மூன்றாம் காலாண்டறிக்கை காட்டிய 2.2 பில்லியன் ஃபிராங்க் இழப்பாகும்.

இந்த இழப்பை ஈடு கட்ட நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டியிருப்பதால் ஆட்குறைப்பு அவசியமாகிறது என்று எர்மோட்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!