Friday, November 2, 2012

ஊட்டியில் வெப்பநிலை 6.2 டிகிரி

ஊட்டியில் வெப்பநிலை 6.2 டிகிரி




நிலம் புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை தொடர்ந்தது. இதனால், ஊட்டியில் நேற்று வெப்பநிலை 6.2 டிகிரி செல்சியசாக இருந்தது. மழை, காற்று மற்றும் கடுங்குளிர் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டும் மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்தனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் லாட்ஜ் அறைகளில் முடங்கினர். ஊட்டி நகர சாலைகளும் வெறிச்சோடின. பஸ்களில் கூட்டம் குறைந்து இருந்தது. கடுங்குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்சம் 6.2 டிகிரியும் நிலவியது.

1 comment:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!