Friday, October 11, 2013

கிர் காடுகளில் அதிகரிக்கும் சிங்கக்குட்டிகள்

கிர் காடுகளில் அதிகரிக்கும் சிங்கக்குட்டிகள்
உலகிலேயே ஆசிய சிங்கங்களுக்கான ஒரே வனவிலங்கு சரணாலயமாக கிர் காடுகள் இருந்து வருகின்றன.
கடந்த 2010 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, 97 ஆண் சிங்கங்கள், 162 பெண் சிங்கங்கள், 152 குட்டிகள் ஆக மொத்தம் 411 சிங்கங்கள் அங்கிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இது கடந்த 2005 ஆம் ஆண்டு இருந்த 48 சதவிகிதத்தைவிட அதிகரித்து 62 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காட்டில் 80-85 புதிய குட்டிகளின் வரவு காணப்படும். இந்தக் குட்டிகள் முதல் ஆண்டு உயிருடன் இருப்பது மிகவும் முக்கியம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களின் கருத்தின்படி 56 சதவிகிதமே மூன்றாவது ஆண்டில் உயிருடன் காணப்படுகின்றன.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 100 குட்டிகள் உயிருடன் காணப்படுவதாக கணக்கீடுகள் தகவல் தருவது அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக குட்டிகளின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தைத் தொடுவதால் தங்களின் விலங்குகள் பாதுகாப்பு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாகவே இந்த அதிகாரிகள் கருதுகின்றனர்.ஒவ்வொரு வருடமும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்குக் காரணம் ரோந்துப் பணியில் உள்ள ஊழியர்களும், அருகிலுள்ள கிராமப்புறத்தினரும் தங்களுக்கு அளிக்கும் ஒத்துழைப்புதான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர்கள் பகுதியில் ஏதேனும் காயமடைந்து கிடக்கும் குட்டியைப் பார்க்க நேரிட்டால் அலட்சியப்படுத்தாமல் அவர்கள் உடனே தங்களுக்குத் தகவல் அளிப்பதால் தங்களால் அவற்றைக் காப்பாற்ற முடிகின்றது என்றனர். இது குட்டிகளின் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைக்கின்றது என்று குஜராத்தின் தலைமை வன பாதுகாப்பு அதிகாரியான சி.என்.பாண்டே தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியம் கிர் காடுகளை ஆபத்தான பட்டியலிலிருந்து நீக்கி ஒப்பீட்டளவில் ஆரோக்கியமான ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த பாதுகாப்பு மையத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இதனால் பார்வையாளர்களுக்கு இந்தக் குட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது என்று துணை பாதுகாப்பு அதிகாரியான சந்தீப் குமார் கூறினார். ஆயினும், குஜராத் அரசின் விருப்பத்திற்கு மாறாக உச்ச நீதிமன்றம் சிங்கங்கள் உயிர் பிழைப்பதற்கான நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு அவற்றுள் சிலவற்றை மத்தியப் பிரதேசத்தின் குனோ-பல்பூர் வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளது.

Thursday, October 10, 2013

காதலரால் கர்ப்பமான டயானா... ராஜகுடும்பத்தால் கௌரவக்கொலை செய்யப்பட்டாரா?

காதலரால் கர்ப்பமான டயானா... ராஜகுடும்பத்தால் கௌரவக்கொலை செய்யப்பட்டாரா? 
காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் தான் இளவரசி டயானா ராஜ குடும்பத்தால் கௌரவக் கொலை செய்யப்பட்டார் என புதிய அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவியான டயானா தனது காதலருடன் காரில் பயணம் செய்த போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேகமாகச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார்.

அவரது மரணம் குறித்து இன்னும் மர்மம் விலகாத நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், சமீபத்தில் டயானாவின் மரணம் குறித்து வெளிவந்துள்ள புத்தகத்தில் விபத்தில் சிக்கிய போது டயானா கர்ப்பமாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானா.... 

இங்கிலாந்து இளவரசர் சார்லசை காதல் திருமணம் செய்து கொண்டவர் டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சார்லசுடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக அறிவித்தார் டயானா.

விவாகரத்து செய்ய .... 

இங்கிலாந்து ராஜ குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அறிவிப்பால், டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபெத் வற்புறுத்தினார்.

விபத்தில் பலி.... 

இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு ஆண்ட காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகரில் காரில் சென்ற போது தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார். சுரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா - டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.

ரகசிய ஏற்பாடு.... 

ஏற்கனவே, கடந்த மாதம் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என குற்றம் சாட்டினார்.

புதிய புத்தகம்.... 

இந்நிலையில், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மருத்துவக் குறிப்பேடு... 

அதில், விபத்தில் சிக்கிய டயானாவை பாரீசில் உள்ள பிட்டி - சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தபோது அவரது வயிற்றை 'எக்ஸ்-ரே' எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 - 10 வார கருவினை கண்டதாகவும், இத்தகவல் ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கௌரவக்கொலை.... 

மேலும், அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி இங்கிலாந்து அரண்மனை டயானாவைக் கௌரவக்கொலை செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மூடி மறைக்கப்பட்ட ரகசியம்.... 

கர்ப்பமாக இருந்த டயானாவின் வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டதாகவும் அலன் பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அனால் மேற்கூறிய புத்தகத்தில் தனது காதலருடன் திரிந்தது தவறு என்றோ அது ராஜா குடும்பத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றோ அவருக்கு வில்லியம்ஸ் ஹரி என்று குழந்தைகள் இருந்தபோதும் இன்னொரு உறவினூடாக ஏற்படுத்திய குழந்தை தவறு என்றோ குறிப்பிடப்படவில்லை 

ஒரே ஒரு பர்சன்ட்தான்.. ஆனால் உலக வளங்களின் 46% இவர்கள் வசம்தானாம்!

ஒரே ஒரு பர்சன்ட்தான்.. ஆனால் உலக வளங்களின் 46% இவர்கள் வசம்தானாம்! 
உலகின் மிகப் பெரும் பணக்கார கோடீஸ்வரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டும் உலக வளங்களில் 46 சதவீதம் குவிந்து கிடப்பதாக கிரெடிட் சூஸ் ஆய்வுக் கழகம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடாக தொடர்ந்து அமெரிக்காவே முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உலக கோடீஸ்வரர்களின் வருவாய் 68 சதவீத உயர்வையும் கண்டுள்ளதாம்.

241 டிரில்லியன் 

டாலர் வருவாய் உலக அளவிலான மொத்த வருமான எண்ணிக்கை இன்றைய தேதிக்கு 241 டிரில்லியன் டாலராகும்.

10 ஆண்டுகளில் 68 சதவீதம் உயர்வு 

கடந்த 10 ஆண்டுகளில் இது 68 சதவீதம் உயர்வாகும்.

மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்களிடம் 

உலக பொருளாதார வளத்தின் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உள்ளது.

தனி நபரின் சராசரி வருவாய் 51,600 

டாலர் ஒரு தனி நபரின் சராசரி வருவாயும் உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது 51,600 டாலராக அது உயர்ந்துள்ளது.


சமச்சீர் இல்லை 

ஆனால் இந்த தனி நபர் வருவாய் உயர்வானது சமச்சீராக இல்லை. அதாவது பணக்காரர்களிடம் மட்டுமே இந்த வருவாய் உயர்வு காணப்படுகிறதாம்.

10 சதவீத கோடீஸ்வரர்களிடம் 86 சதவீத சொத்துக்கள் 

உலக அளவில் உள்ள பெரும் பணக்கார கோடீஸ்வரர்களில் 10 சதவீதம் பேரிடம் மட்டும் 86 சதவீத சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றனவாம்.

டாப் 1 சதவீதம் பேரிடம் 46 சதவீத உலக பொருளாதாரம் 

அதேபோல பெரும் பணக்காரர்களில் டாப் இடத்தில் உள்ள ஒரு சதவீதம் பேரிடம் உலக அளவிலான சொத்துக்களில் 46 சதவீதம் குவிந்திருக்கிறதாம்.

2018ல் 334 டிரில்லியன் டாலராகும் 

2018ம் ஆண்டு வாக்கில் உலகப் பெரும் பணக்காரர்களின் சொத்துக்களின் அளவு 334 டிரில்லியன் டாலரைத் தாண்டும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

பெரும் பணக்கார நாடுகள் 

1 லட்சம் டாலருக்கும் மேற்பட்ட வருமானத்தைக் கொண்ட தனி நபர்களை அதிகம் கொண்ட பணக்கார நாடுகள் பெரும்பாலும் வடக்கு அமெரிக்கா, மேற்கு ஐரோப்பியா, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிகம் உள்ளனவாம்.

சுவிட்சர்லாந்து டாப்... 

இப்படி அதிக அளவிலான தனி நபர் சொத்துக்களை வைத்துள்ளவர்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவும், தொடர்ந்து நார்வே, லக்ஸம்பர்க் ஆகியவையும் உள்ளன.

கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்வு 

உலக அளவில் 2012ம் ஆண்டுக்குப் பின்னர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கர்கள்தான்.

ஜப்பானில் குறைந்தனர் 

அதேசமயம், ஜப்பானில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியா... 

பிரிக் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வளரும் பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளன. இந்த நாடுகளில், சராசரியாக தலா 5830 பெரும் பணக்கார கோடீஸ்வரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உலக அளவில் 5 சதவீத உயர்வு 

உலக அளவில் பிரிக் நாடுகளில் பணக்காரர்களின் எணணிக்கை 5 சதவீதம் உயர்ந்து, 19 சதவீதமாக உள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/business/46-per-cent-global-wealth-owned-by-richest-1-per-cent-credit-suisse-185143.html#slide366804

இலங்கை அரசின் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை: கின்னஸ் சாதனை புத்தகம் - 9 பிரதியமைச்சர்கள் இன்று பதிவிப் பிரமாணம்

இலங்கை அரசின் அமைச்சரவை உலகின் மிகப் பெரிய அமைச்சரவை: கின்னஸ் சாதனை புத்தகம் - 9 பிரதியமைச்சர்கள் இன்று பதிவிப் பிரமாணம்


உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர்.

இதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்தது.

கின்னஸ் சாதனை புத்தகத்தின் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இன்றும் புதிய பிரதியமைச்சர்கள் பலர் பதவியேற்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன்..!

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன்..!
Blackspot angelfish என்று அழக்கப்படும் ஒரு வகை மீன், பெண்ணாக இருந்து ஆணாக மாறுகிறது!. ஆனால் இம்மாற்றம் ஒரு மீன் தான் விரும்பியவுடன் நடைபெறுவதில்லை. இந்த மாற்றங்கள் சில பிரத்யேகமானகாரணங்களுக்காக நிகழ்கிறது!

இந்த ஏஞ்சல்வகை மீன்கள் குழுக்களாக வாழும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆண் மீனும், (நீலக் கலரில் உள்ள மீன்), மற்றும் நான்கு பெண் மீன்கள் (மஞ்சள் நிற மீன்கள்) இருக்கும்.

ஆண் ஏஞ்சல் மீன் மட்டுமே திடகாத்திரமானதும், வலிமை மிக்கதுமாக இருக்கும். ஆண் மீன்தான் அங்குள்ள மற்ற பெண் மீன்களுக்கு முழுப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

அதாவது அக்குழுவிற்கு காவலாளி. எப்பொழுது அந்த ஆண் மீன் இறந்து விடுகிறதோ அக்குழுவிற்கு ஒரு காவலாளி தேவைப்படுகிறார். அப்பொழுது அங்குள்ள பெண் மீன்களில் பெரிய உருவமுடைய மீன் தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொள்ளத் துவங்குகிறது.

முதலில் தன் உருவத்தை மிகப் பெரிதாக வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. பிறகு ஒரு வாரத்தில், அப்பெண்மீன் தன் நிறத்தை மஞ்சள் கலரில் இருந்து நீலக் கலருக்கு மற்றிக் கொள்கிறது, மெதுமெதுவாக அந்தப் பெண்மீன் தன் நடவடிக்கைகளை ஆண் மீனைப்போல் மாற்றிக் கொள்கிறது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதன் உடலில் கருப்புக் கோடுகள் உருவாகிறது. இம்மாற்றம் அந்த மீன் தற்பொழுது முழு ஆணாக மாறிவிட்டதை சுட்டிக் காட்டுகிறது.

இந்த மாற்றம் hermaphroditism (இரு பாலுறுப்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள நிலை) என அழைக்கப்படுகிறது.

வங்கக் கடல் புதிய புயலுக்கு பெயர் பாய்லின்!

வங்கக் கடல் புதிய புயலுக்கு பெயர் பாய்லின்! 


வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயலுக்கு பாய்லின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. "பாய்லின்' என்ற தாய்லாந்து மொழி சொல்லுக்கு நீல நிற கல் என்று பொருள். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள இந்தப் புயல், ஆந்திரம் - ஒடிசா மாநிலங்களுக்கு இடையே வரும் 12-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வட அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை உருவானது. பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காலை வலுப்பெற்று, மாலையில் புயலாக மாறியுள்ளது. 

புதன்கிழமை இரவு வரையிலான நிலவரப்படி இது விசாகப்பட்டணத்தில் இருந்து 1100 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இப்போது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. 

இது ஒடிஷாவின் கலிங்கப்பட்டணம் - பாரதீப் இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கும். பாய்லின் புயல் உருவானதைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் சுமார் 175-185 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புயலால் ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும். 

தமிழகத்தில் கனமழை 

இந்த நிலையில் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 

வட தமிழகத்தில் பஞ்சப்பட்டி -120, கிருஷ்ணகிரி - 90, பையூர் - 80, தோகைமலை, அறந்தாங்கி, பென்னாகரம், ஒகேனக்கல், செங்கம், கீரனூர் - 70, ஊத்தங்கரை, சாத்தனூர் அணை, ராயக்கோட்டை - 60 போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 

ஒசூர், அரூர், செஞ்சி, சேலம், ஏற்காடு, திருவண்ணாமலை, ஆம்பூர், தருமபுரி வாழப்பாடி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 

தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.


சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெற, இளமை மிடுக்காக, ஆண்மை பெருக, ரத்தப்போக்குக் கட்டுப்பட, கால் எரிச்சல் கட்டுப்பட

வேர் உண்டு வினை இல்லை! --- தண்ணீர்விட்டான் ,சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி
சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், சதமுலை, நீர்வாளி, நாராயணி, சீக்குவை என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மூலிகைத் தாவரம் தண்ணீர்விட்டான். இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. உலர்ந்த நிலையில் தண்ணீர்விட்டான் வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும்கொண்ட தண்ணீர்விட்டான் வேர்கள், உடலைப் பலமாக்கவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யவும் உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றவும் ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்... 

பசுமையான தண்ணீர்விட்டான் வேர்களை நீரில் நன்றாக அலசிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சுத்தம் செய்த வேர்களை நீர்த்தன்மை போக வெயிலில் உலர்த்தி எடுத்து நன்கு இடித்துத் தூளாக்கிக்கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டான் வேர்த் தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனைப் பசுவின் நெய்யோடு சேர்த்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரு வேளைகள் உட்கொண்டு வரவேண்டும். இதனால், சோர்வு நீங்கி உடல் நன்கு பலம் பெறும்.

சுத்தம் செய்து உலர்த்தி இடித்துப் பொடித்த தண்ணீர்விட்டான் வேர்த் தூளை தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடிக்க வேண்டும். 30 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். இதனால், இளமை மிடுக்கு உண்டாவதோடு ஆண்மை பெருகும்.பசுமையான தண்ணீர்விட்டான் வேரை நீரில் அலசிச் சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். நான்கு ஸ்பூன் அளவு வேர்ச் சாற்றுடன் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரை கலந்து உட்கொள்ள வேண்டும். இதனை நாள் ஒன்றுக்கு காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான ரத்தப்போக்குக் கட்டுப்படும்.

கால்களில் உண்டாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர்விட்டான் வேர்ச்சாறு எடுத்து தினமும் காலையிலும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும், கால்களிலும் பாதங்களிலும் நன்கு பூச வேண்டும். தொடர்ந்து பூசிவந்தால் கால் எரிச்சல் கட்டுப்படும்.

காதல் உணர்வை தூண்டும் உணவுகள்

காதல் உணர்வை தூண்டும் உணவுகள்காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால்  இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற  வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும்.


மனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.

ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொரு ளாகக் கருதப்படுகிறது.  ஒயினா னது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.


உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில்  நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது. முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மை யான கடல் வாழ் உயிரினம் கடல் சிப்பி. ஓட்டிற்குள்  இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது.ஆனால் அறிவியல் பூர்வமாக இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன்  ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது. ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை  உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல்  சிப்பிகளை உண்பாராம்.ரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம்  நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது. நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது  என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரடோனின் (serotonin)  ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன.ஆண், பெண் ஆகிய இருபாலருக்குமே பாலியல் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகடோ (வெண்ணைய் பழம்). இப்பழமானது மெக்சிகோவின் மையப் பகுதியில் 14, 15ம், 16ம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்‘ என்றே அழைத்தனர்.பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்த பழத்தில், வைட்ட மின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவை  அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில்  வியப்பேதுமில்லை.அஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில்  பிரான்ஸ் நாட்டில், திருமணத்திற்கு முதல் நாள், மணமகன்களுக்கு, மூன்று வேளையும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம்.

பொட்டாசியம்,  வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஃபோலிக்  அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப்  பெண்களுக்கு மிகவும் நல்லது.


இனிமையான மணமுடைய  மூலிகை துளசியாகும். இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு’ என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் திறனையும் பெருக்க உதவுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன.


இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த  நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை  தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.


மிளகாயின் காரத்தன்மை உடலினை சூடேற்றி, காமத்தை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பத்தை உயர்த்துகிறது.

வியர்வையையும் உற்பத்தி செய் கிறது. மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் கேப்சைசினானது, உடலில்  எண்டோர்ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனை களை தூண்டி, இதயத்துடிப்பை அதிகரிக்கச்  செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.

முக்கியமாக ஒரு பொருளானது காமப்பெருக்கி என்று நம்பி அதனை உண்டு வந்தாலே, ஒருவரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக  நம்பப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் இயற்கை தந்த பொருள்கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும்  இல்லை. இதனால் இவற்றை, தாராளமாக உண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.


Wednesday, October 9, 2013

அதிநவீன சிறப்பம்சங்களுடன்... அமெரிக்காவில் புதிய 100 டாலர் நோட்டு வெளியீடு

அதிநவீன சிறப்பம்சங்களுடன்... அமெரிக்காவில் புதிய 100 டாலர் நோட்டு வெளியீடு 
இந்த புதிய 100 டாலர் நோட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு புழக்கத்திற்கு வெளியிடப்படுவதாக முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தாமதமாக நேற்று வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில், மத்திய நிதி மசோதா பிரச்சினையில் இந்தப் புதிய நோட்டுகள் அச்சிடுவதற்கான செலவினங்கள் சேர்க்கப் படாததால் அவற்றை வெளியிடுவதில் தற்போது எந்தத் தடையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுவடிவமைப்பு.... 

அமெரிக்காவில், கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு டாலர் மற்றும் இரண்டு டாலர் நோட்டுகளைத் தவிர மற்ற அனைத்து மதிப்பிலும் உள்ள நோட்டுகள் கள்ளத்தனமாக அச்சடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

கள்ளநோட்டடிப்பது கடினம்... 

பொதுமக்கள் இந்த புதிய நோட்டை அங்கீகரிப்பதற்கு எளிதாகவும், நகலெடுக்க முற்படும்போது கடினமாகவும் விளங்கக்கூடிய வகையில் இதில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்... 

ஒரு நீல, 3-டி பாதுகாப்பு நாடா, நோட்டை அசைக்கும்போது செப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறும் தன்மை கொண்ட மையினால் அச்சடிக்கப்பட்ட எழுத்துகள் போன்றவை இந்த புதிய டாலர் நோட்டின் பாதுகாப்பு அம்சங்களாகும்.

கலர் மாறும் 100... 

நோட்டின் பின்புறமுள்ள பெரிய எண்ணான 100லும் இந்தக் கலர் மாற்றம் ஏற்படும் தன்மை, முன்புறமுள்ள 100 என்ற எண்ணிலும் தோன்றும் இந்தக் கலர் மாற்றம் போன்றவை இந்தப் புதிய நோட்டின் சிறப்பம்சங்களாகும்.

பிராங்க்ளின் படம்.... 

மற்ற டாலர் நோட்டுகளைப் போலவே, முன்னாள் அமெரிக்க அதிபர் பெஞ்சமின் பிராங்க்ளினின் படம் புதிய நோட்டில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் பழைய டாலர் நோட்டுகளில் அவரைச் சுற்றி இருக்கும் ஓவல் வடிவம் இந்தப் புதிய நோட்டில் காணப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?

உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?
இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.

பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? 


பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

அப்ளிகேஷன்களுக்குத் தடா:


பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

அணுகுவதற்குத் தடை:


 உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

இறுதி நடவடிக்கை:


பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரிக்கும் ஜப்பான் ஆபாச நடிகை

ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரிக்கும் ஜப்பான் ஆபாச நடிகை
உலகெங்கும் உள்ள தனது ரசிகர்களிடமிருந்து விந்தனுக்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த உடா கொஹகு என்ற ஆபாசப் பட நடிகை. இதுவரை 100 பேரிடமிருந்து விந்தனுக்களை அவர் சேகரித்துள்ளாராம். தான் அடுத்து நடிக்கவுள்ள செமன் கலெக்ஷன் 2 என்ற ஆபாசப் படத்திற்காக இந்த விந்தனு சேகரிப்பாம்.

டிவிட்டரில் வேண்டுகோள் 

டிவிட்டரில் இதுதொடர்பாக அவர் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். அதில், உலகெங்கும் உள்ள எனது ரசிகர்கள் தங்களது வி்ந்தனுக்களை பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


வந்து குவிந்த பாட்டில்கள் 

இதையடுத்து அவருக்கு பாட்டில்கள் மூலம் விந்தனுக்களை ரசிகர்கள் அனுப்பி வைத்தனர். இதுவரை 100 பேரிடமிருந்து வந்துள்ளதாம்.


10 நாட்களுக்குள் 

கடந்த 10 நாட்களுக்குள் இத்தனை பாட்டில்கள் வந்துள்ளனவாம். ஒவ்வொரு பாட்டில் மீதும் அவரவர் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனராம்.


குழந்தை போல பாதுகாப்பேன் 

இந்த விந்தனுக்களை மிகவும் பத்திரமாக பாதுகாக்கப் போவதாகவும், தனது குழந்தைகள் போல நினைத்துப் பாதுகாக்கப் போவதாகவும் கூறியுள்ளார் உடா. ஆனால் இந்த விந்தனுக்களை வைத்து உடா என்ன செய்யப் போகிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது.


‘கடவுளின் துகள்கள்’ கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் விருது

‘கடவுளின் துகள்கள்’ கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் விருது
பூமி உட்பட கிரகங்கள் எல்லாம் பல லட்சம் ஆண்டுகளுக்கு  முன் உருவாவதற்கு காரணம் ‘கடவுளின் துகள்கள்’  தான்  என்று உலகுக்கு சொன்ன பிரபல விஞ்ஞானிகள் இரண்டு பேருக்கு இயற்பியலுக்கான நோபல் விருது அளிக்கப்படுகிறது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி பிரான்காய்ஸ் யெங்க்லர்ட்; பிரசல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். பிரிட்டனை சேர்ந்தவர் பீட்டர் ஹிக்ஸ். எடின்பரோ பல்கலைக்கழக ஆராய்ச்சி நிபுணர்.

கடந்தாண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரப் பகுதியில் விஞ்ஞானிகள் சேர்ந்து பிரமாண்ட அணுத்துகள்களை ‘கொல்லீடர்’ என்ற ராட்சத குழாயில் மிக அசுர வேகத்தில் மோத விட்டு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அணுத்துகள்கள் இப்படி மோதியதால் தான் பூமி உட்பட பிரபஞ்சத்தில் கிரகங்கள் தோன்றின என்பதை உலகுக்கு உறுதி செய்தனர். 

இந்த கண்டுபிடிப்புக்கு முதன்முதலில் காரணமானவர்கள் தான் பீட்டர் ஹிக்ஸ் மற்றும் யெங்க்லர்ட். கடந்த 1964ல் யெங்க்லர்ட் மற்றும் அவர் நண்பர் ராபர்ட் பிரவுட் சேர்ந்து ‘கடவுளின் துகள்கள்’ மூலம் தான் பிரபஞ்சம் உண்டானது என்பதை வெளிப்படுத்தினர்.  ஆனால்,  அந்த ஆராய்ச்சி முழுமை பெறவில்லை.   இவர் வெளியிட்ட சில வாரங்களில் பீட்டர் ஹிக்ஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரும் கடவுளின் துகள் என்பதை சொல்லி, அதன்மூலம் தான் உலகம் உண்டானது; கிரகங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்றார். 

இவர்கள் இருவரின் ஆய்வு முடிவுகளின் படி, கடந்தாண்டு விஞ்ஞானிகள் கூட்டாக சுவிட்சர்லாந்தில் ஆய்வு மேற்கொண்டு உலகுக்கு ‘கடவுளின் துகள்கள்’ பற்றி நிரூபித்தனர். இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதன் மூலம், மேரி கியூரி, ஆல்பர்ட் ஈன்ஸ்டின் வரிசையில் சேர்ந்துள்ளனர். 

கடந்தாண்டு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த செர்கி ஹரோகி, அமெரிக்காவை சேர்ந்த டேவிட் வைன்லேண்ட் ஆகியோருக்கு கம்ப்யூட்டர் உருவாவதற்கான இயற்பியல் ஆராய்ச்சி  முடிவுகளை வெளியிட்டிருந்தனர். விஞ்ஞானிகள் ஹிக்ஸ், யெங்க்லர்ட் இருவருக்கும் வரும் 11 ம் தேதி சுவீடனில் நடக்கும் விழாவில் நோபல் விருது அளிக்கப்படும்.

எக்ஸ்ட்ரா தகவல்

பிரபல விஞ்ஞானி ஆல்ப்ரட் நோபல் நினைவாக நோபல் விருது ஒவ்வொரு  ஆண்டும் நார்வேயில் உள்ள நோபல் அகாடமி மூலம் அளிக்கப்படுகிறது. ரொக்கப்பரிசு 
7 கோடியே 20 லட்சம் மற்றும் தங்க மெடல், பாராட்டிதழ் அளிக்கப்படும்.

இப்படியும் ஒரு ஆய்வு முடிவு ஏழையாக இருந்தால் 90 வயது வரை வாழலாம்

இப்படியும் ஒரு ஆய்வு முடிவு ஏழையாக இருந்தால் 90 வயது வரை வாழலாம்
ஏழையாக இருந்தால் போதும், ஏழை நாட்டை சேர்ந்தவராக இருந்தால் போதும், கண்டிப்பாக 90 வயது வரை வாழலாம். என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான். பணம், வசதி இருந்தால் போதும், 90 வயது வரை வாழலாம் என்று தான் இத்தனை  ஆண்டு காலமாக பேசப்பட்டு வருகிறது. இது போல பணக்கார நாடாக இருந்தால் வாழ்நாளும் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மரபு நம்பிக்கையை தகர்க்கிறது நெதர்லாந்து நிபுணர்கள் ஆய்வு முடிவு.

நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது. 

இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை நெருங்க முடியாமல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால் பணக்காரர்கள் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது.  அதே சமயம், ஏழைகள் பலரும் 90 வயதை தாண்டி வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்த தகவல், இந்த ஆராய்ச்சி குழுவுக்கு பெரும் வியப்பை  ஏற்படுத்தியது. 1950 ல் இருந்து 2008 வரை அமெரிக்கா, பிரிட்டன் , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட 19 நாடுகளில் உள்ள இறப்பு சதவீதம் 70 , 74 வயதுள்ளவர்கள் 0.45 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. 

இதேபோல,  இந்தியா போன்ற வேறு சில மொத்த உற்பத்தி திறன் சதவீதம் குறைவாக உள்ள வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களில் இதே வயதினர் இறப்பு சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, 90 வயது வரை வாழ்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது தெரியவந்தது. 

இப்படி வாழ்நாள், முதுமை விஷயங்களில் ஆராய்ச்சி செய்த நிபுணர்களுக்கு , நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் வாழ்நாள் நீடிப்பு  ஆகிய இரண்டும் எந்த வகையில் ஒத்துப்போகின்றன. வாழ்நாளை ஒரு நாட்டின் உற்பத்தி திறன்  எந்த வகையில் முடிவு செய்கிறது  என்பதற்கு மட்டும் உறுதியான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை; இது தொடர்பாக ஆராய்ச்சி நீடிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.


Join with us on Facebook  >>>

              அறிவியல்

2.10.2020 அன்றுடன் உலகில் சாக்லேட்டே கிடைக்காதாம்!

2.10.2020 அன்றுடன் உலகில் சாக்லேட்டே கிடைக்காதாம்! 


2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி உலக சாக்லேட் பயன்பாட்டுக்கு இறுதி நாள் என்று கூறப்படுகிறது. 

உலகில் சாக்லேட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக சாக்லேட் உள்ளது. இந்நிலையில் சாக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

2.10.2020 

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சாக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

தேவை அதிகரிப்பு 

சாக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது. கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

ஐரோப்பா, அமெரிக்கா 

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்

கொக்கோ 

கொக்கோ செடியை வளர்த்தால் கொக்கோ பீன்ஸ்கள் கிடைக்க 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை அதிகரிக்கும் 

கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போவதால், அதுவும் தீரப் போவதால் இன்னும் சில ஆண்டுகளில் சாக்லேட் விலை வெகுவாக அதிகரிக்குமாம்.

7 ஆண்டுகளில் 

அதிகரித்து வரும் தேவையால் அடுத்த 7 ஆண்டுகளில் உலகில் கொக்கோ கிடைக்காது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு

உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சிகரமானவர் என்று ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். எஸ்கொயர் பத்திரிக்கை உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தான் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியைக் கேட்டு ஸ்கார்லெட் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார்.

2வது முறை 

முன்னதாக கடந்த 2006ம் ஆண்டும் உலகின் கவர்ச்சிகரமான பெண்ணாக 28 வயதாகும் ஸ்கார்லெட் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கார்லெட் 

இந்த பட்டத்தை இரண்டு முறை வென்ற ஒரே பெண் நான் தான், சரியா?. நான் திரைத்துறையில் இருப்பவள். விரைவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் பல அம்மா கதாபாத்திர வாய்ப்புகளாக இருக்கும் என்றார் ஸ்கார்லெட்.

ரயன் ரேனால்ட்ஸ் 

ஸ்கார்லெட்டின் முன்னாள் கணவரும், நடிகருமான ரயன் ரேனால்ட்ஸ் உலகின் கவர்ச்சிகரமான ஆணாக கடந்த 2010ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் 

ஸ்கார்லெட்டுக்கும் அவரது காதலரான பத்திரிக்கையாளர் ரொமெய்ன் டாரியாக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


சீனாவில் கடும் உறைபனி: நெடுஞ்சாலைகள் மூடல் - விமானங்கள் ரத்து

சீனாவில் கடும் உறைபனி: நெடுஞ்சாலைகள் மூடல் - விமானங்கள் ரத்து
சீனாவின் பல்வேறு மாகானங்களில் பெய்து வரும் உறைபனியால் பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
பனி மூட்டம் அடர்த்தியாக உள்ளதால் தலைநகர் பீஜிங் உள்பட சில விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

பீஜிங் நகரை வட கிழக்கு சீனாவுடன் இணைக்கும் ஹர்பின் நெடுஞ்சாலை, ஷங்காய், டியான்ஜின், ஹிபெய் ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், டியான்ஜின் மாகாணத்தில் 14 விரைவு சாலைகளம், ஹிபெய்யில் 13 விரைவு சாலைகளும், லியானிங் மாகானத்தில் 15 விரைவு சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் தேசிய தினத்தையொட்டி ஒருவாரம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலைகளும் விரைவு சாலைகளும் மூடப்பட்டதால் விடுமுறையை கழிக்க வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


தெலுங்கானா பிரச்சினையால் தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீரும் குறைந்தது

தெலுங்கானா பிரச்சினையால் தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீரும் குறைந்தது 
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தால் தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீரின் அளவு பெருமளவு குறைந்துள்ளது. 

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஆண்டுக்கான தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி திறந்து விடப்பட்டது. 6ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டுக்கு தண்ணீர் வந்தது. 

கடந்த மாதம் 18ம் தேதி வரை தமிழகத்துக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கண்டலேறுவில் இருந்து 600 கன அடியாக திறக்கப்படும் தண்ணீர், சேதாரம் போக ஜீரோ பாயின்ட்டுக்கு 200 கனஅடி வரை வரவேண்டும். ஆனால் தற்போது 75 முதல் 80 கனஅடி வரை மட்டுமே வந்துகொண்டு இருக்கிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தெலங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறி காளஹஸ்தி அருகே உள்ள தொட்டாம்பேடு, வரதய்யபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மதகுகளில் வரும் தண்ணீரை, ஆந்திர விவசாயத்துக்கு திருப்பி விடுகின்றனர். இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. 

கால்வாயில் 4 முதல் 5 அடி உயரம் வரை வரவேண்டிய தண்ணீர் 2 அடி மட்டுமே வந்துகொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு குறைந்த அளவு தண்ணீர்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. போராட்டக்காரர்களுக்கு தெரியாமல் மதகை திறந்துவிட்டால், அவர்கள் மீண்டும் விவசாயத்துக்கு தண்ணீரை திருப்பி விடுகின்றனர் என்றனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குவாண்டனமோ சிறைச் சாலை மூடப்படுகிறது

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குவாண்டனமோ சிறைச் சாலை மூடப்படுகிறது 


தீவிரவாதிகளை அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்படும் குவாண்டனமோ சிறைச்சாலையை மூடுவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் அல்குவைதா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட அல்குவைதா தீவிரவாதிகள் அனைவரும் கியூபா அருகே உள்ள குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டனர்.

குவாண்டனமோ சிறைச் சாலையில் தீவிரவாதிகள் கொடூர சித்திரவதைகளுக்குள்ளான செய்திகள் வெளியாகி உலகை உலுக்கியது. இந்த நிலையில் தற்போது அந்த சிறைச்சாலையை மூடிவிட்டு அங்குள்ள கைதிகளை வேறு நாடுகளுக்கு மாற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதற்காக வழக்கறிஞர் பால் லூயிஸ் என்பவை சிறப்புத் தூதராக நியமித்துள்ளது. அவர் வரும் நவம்பர் மாதம் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு குவாண்டனமோ சிறைச் சாலையை மூடுவதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்வார்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

Monday, October 7, 2013

70.5 லட்சம் லிட்டர் பீர் குடித்த குடிமகன்கள்… நிறைவடைந்த பீர் திருவிழா

70.5 லட்சம் லிட்டர் பீர் குடித்த குடிமகன்கள்… நிறைவடைந்த பீர் திருவிழா 
ஜெர்மனியில் நடைபெற்ற பாரம்பரியம் மிக்க பீர் திருவிழா நேற்றோடு நிறைவடைந்துவிட்டது. இந்த ஆண்டு 70.5 லட்சம் பீர் குடித்து தீர்த்துள்ளனராம். ஜெர்மனி நாட்டில் மியூனிச் நகரில் பீர் திருவிழா கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. 

உலகில் உள்ள எல்லா வகை பீர்களையும் ருசிக்க விரும்புபவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு பீரை ருசிப்பர். இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. விழாவின்போது எல்லா வகை பீர் பானங்களும் தாராளமாக வினியோகம் செய்யப்படும். 

இளவரசர் திருமணம் 

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு பட்டத்து இளவரசர் லுத்விக் என்பவருக்கு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டு அவரது திருமண நாளை கொண்டாட இந்த விழா நடந்தது. பெரிய பீர் பீப்பாயில் பீர் நுரைத்து தள்ளும் காட்சி அப்போது இடம் பெற்றது. குதிரைப் பந்தயமும் நடத்தது. பின்னர் விவசாய கண்காட்சியும் இந்த விழாவில் சேர்ந்தது. கடந்த 1960 முதல் குதிரைப் பந்தயம் ரத்தானது. இந்த ஆண்டு, 200வது ஆண்டு விழா கொண்டாடப்படுவதால் மீண்டும் குதிரைப் பந்தயம் நடந்தது.


சர்வதேச திருவிழா 

உலகில் பல ஆண்டுகள் தொடர்ந்து, நீண்ட நாட்கள் நடக்கும் விழா இது என்ற சாதனையும் படைத்துள்ளது. முதலில் ஜெர்மானியர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், பின்னர் ஐரோப்பாவைச் சேர்ந்த பல நாட்டு மக்கள் கலந்து கொண்டனர். இப்போது இந்த விழா சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளதால், பல நாட்டு மக்களும் வித, விதமான பீரை ருசிக்க ஜெர்மனியில் குவிகின்றனர்.

செப்டம்பர் டூ அக்டோபர் 

அக்டோபர்பெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த பீர் திருவிழா மியூனிச்சில் ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு பாரம்பரிய விழாவாகும். 16 நாட்கள் இது நடைபெறும். செப்டம்பர் 23ம் தேதி வழக்கமாக இது தொடங்கும். அக்டோபர் முதல் வாரத்தில் முடிவடையும்.


உற்சாகத்திருவிழா 

பீர் குடிப்பது, ரோலர்காஸ்டர் உள்ளிட்டவற்றில் ஏறி உல்லாசமாக விளையாடுவது என்று இங்கு வரும் மக்கள் 16 நாட்களும் தடபுடலான உற்சாகத்தில் மிதப்பார்கள். பவேரிய கலாச்சாரத்தின் ஒரு முக்கியப் பகுதிதான் இந்த விழா. 1810ம் ஆண்டுமுதல் இந்த விழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

6.9 லட்சம் பேர் 

அந்த ஆண்டு பீர் திருவிழாவில் 6.9 லட்சம் மக்கள் பங்கேற்றதாக கூறுகிறது புள்ளிவிபரம். பெரும்பாலும் சொந்த நாட்டு குடிமகன்கள் தானாம். 20 சதவிகிதம் பேர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்.


70.5 லட்சம் லிட்டர் பீர் 

இந்த ஆண்டு திருவிழாவில் சுமார் 70.5 லட்சம் லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளதாம்.

ரோஸ்ட் சிக்கன் 

பீர் குடிப்பது மட்டுமல்லாது 509,000 சிக்கன் ரோஸ்ட், 59000 பன்றிக்கறி, என விதவிதமான உணவுகளும் லட்சக்கணக்கில் விற்றுத்தீர்ந்துள்ளன.

201 வழக்கு பதிவு 

திருவிழா என்றால் பிரச்சினை இல்லாமலா? பீர் திருவிழாவிலும் முதல்நாளிலேயே 201 வழக்குகளை பதிவு செய்யப்பட்டதாக ஜெர்மன் நாளேடு ஒன்று தெரிவிக்கிறது.

பீர் திருவிழா நிறைவு 

இந்த ஆண்டு திருவிழா தற்போது நிறைவடைந்துவிட்டது. துப்பாக்கியால் குண்டு முழங்க அதனை அறிவித்தனர். இனி பீர் பிரியர்கள் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

சில ஆண்டுகள் ரத்து 

காலரா நோய் பரவிய சமயத்திலும் உலகப் போர்களின் போதும் சில ஆண்டுகள் இந்த விழா நடக்கவில்லை. இவ்வாறு 24 ஆண்டுகள் இந்த விழா நடக்கவில்லை. மற்ற எல்லா ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்றது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 8 லட்சம் பேருக்கு ஆபத்து

இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 8 லட்சம் பேருக்கு ஆபத்து
இமயமலைப் பகுதிகளில் ரிக்டர் ஸ்கேலில் 8 புள்ளி அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால், ஜம்மு,காஷ்மீர், அருணாச்சல பிரதேசம்உள்ளிட்ட மாநிலங்களில் 8 லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து என தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் எச்சரித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின் துணைத்தலைவர் எம். சசிதர்ரெட்டி  கூறியிருப்பதாவது: வடகிழக்கு மலைப்பிரதேச பகுதிகளான இமாச்சல பிரதேசம் முதல் ஜம்மு,காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

அங்கு 8 புள்ளி ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் நடந்தால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரும். இமாச்சல பகுதிகளில் 53 ஆண்டுகள் இடைவெளியில் நிலநடுக்கம் நடந்துள்ளது.  முதலில் 1897ம் ஆண்டு நடந் தது. பிறகு 1950ம் ஆண்டில் தான் ஏற்பட்டது. இதே போல அந்த மண்டலத்தில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

1950ம் ஆண்டுக்கு பிறகு அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. அதே சமயம் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும். அதிக அளவில் பொருட்சேதமும் உண்டாகும். அதனால் அங்குள்ள வீடுகள் இடிந்தால் உயிர்சேதம் ஆகாமல் இருக்கும் வகையில் குடியிருப்புக்களை அமைக்க வேண்டும். நிலநடுக்கம் எங்கே, எப்போது ஏற்படும் என்று துல்லியமாக நாம் சொல்ல முடியாது. ஆனால் தேசிய பேரிடர் மேலாண் ஆணையம் இதிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு சசிதர்ரெட்டி கூறியுள்ளார்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்


ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள்

ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள்
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது.  11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல். ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்தவந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார். 

இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். அதை தலையில் சுமந்தவாறு  இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். 

பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில்  கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு  ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் 1961-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்து உள்ளனர். தற்போது மக்கள் தொகை 3 லட்சத்தை எட்டி உள்ளது. கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள்  உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு  உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு  மெருகூட்டப்படுகிறது.
இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம்,  மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி.  13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது.  ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர். 

ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான்.  ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. 

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்