Friday, November 2, 2012

ஓபாமா அழுதுவிட்டார்: கோரமாக மாறிய அமெரிக்கா !

ஓபாமா அழுதுவிட்டார்: கோரமாக மாறிய அமெரிக்கா !






அமெரிக்காவின் அட்டலான்டிக் கரையோரத்தை கடும் புயல் தாக்கியுள்ளது. பல கட்டடங்கள், வீடுகள், பாடசாலைகள் தொழிற்சாலைகள், என்று அனைத்து இடத்தையும் இப் புயல் தாக்கி அழித்துள்ளது. வீடுகளை இழந்து மக்கள் வேலையையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். இவர்களில் பலரை அமெரிக்க அவசர உதவிப் பிரிவினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதேவேளை தனது சொந்த வீட்டை, வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில், அப்பகுதியில் நின்று தனது வீட்டு அழிந்துபோன இடத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த பெண்மணியை ஆகாயத்தில் இருந்து பார்த்த பராக் ஒபாமா, தனது உலங்கு வானூர்தியை அவ்விடத்தில் தரையிறக்கச் சொல்லியுள்ளார்.

அப் பெண்மனை அணைத்து அவரது சோகத்தில் பங்கெடுத்த ஓபாமா, நிச்சயம் நிவாரணங்கள் கிடைக்க உடனடி உதவிகளைச் செய்யவிருப்பதாகக் கூறினார். அத்தோடு அட்டலான்டிக் கரையோரத்தை, உலங்குவானூர்தி மூலம் பார்வையிட்ட அவர் கண்கலங்கிய காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வெளியாகி மக்கள் மனதை நெருடியுள்ளது. இதனால் நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தலில், பராக் ஓபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக சில கருத்துக் கணிப்புகள் சொல்கிறது.

புயல் இன்னும் ஓயாத நிலையில், உலங்குவானூர்தியில் செல்வது ஆபத்து என்று தெரிந்தும், அவ்விடத்துக்கு பராக் ஓபாமா சென்றுள்ளார் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஓபாமாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கடுமையாக எச்சரித்துள்ள நிலையில் கூட அவர், புயல் தாக்கிய இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படி இருப்பார்களா நம்ம தலைவர்கள்.



(பாவம் பிழைக்க தெரியாத மனுஷன் .... நாலுபேர் நனைதுகிட்டு குடை பிடிக்க ஆள் இல்லை போல.. எங்கய்யா போய்டாணுக நான் தான் தலைவன் நான் தான் பிரதிநிதி என்கிற நம்ம தலைவனுக ஒருத்தனை யும் நிலம் வந்ததும் பார்க்க முடியல)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!