Friday, October 26, 2012

மேற்கு வங்கத்தில் விநோதம் மாணவர்களே இல்லாத பள்ளியில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்

மேற்கு வங்கத்தில் விநோதம் மாணவர்களே இல்லாத பள்ளியில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்


மேற்கு வங்கத்தில் மாணவர்களே இல்லாத பெண்கள் பள்ளிகளில் வெட்டியாக பொழுதை போக்கும் ஆசிரியர்கள், மாதந்தோறும் சம்பளம் மட்டும் வாங்குகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உமா சஷி வித்யாலயா மற்றும் டரக் தாஸ் சிக்ஷா சதன் என்ற பெயரில் அரசு உதவி பெறும் 2 பள்ளிகள் உள்ளன. இரண்டுமே பெண்களுக்கான பள்ளி. பெண் கல்வியை வளர்ப்பதற்காக ஒன்று 1969லும், மற்றொறு பள்ளி 1973லும் கட்டப்பட்டது.

இந்த பள்ளிகளில் மொத்தம் 14 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், மாணவிகள்தான் ஒருவர் கூட இல்லை. அதனால், பாடம் நடத்தும் வேலையும் ஆசிரியர்களுக்கு இல்லை. பள்ளியில் நிர்வாக குழுக்களும் இல்லை. தினமும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் நாளிதழ்கள், வார இதழ்கள் படிப்பது, வம்பு பேசுவது என்று பொழுதை போக்கி வருகின்றனர்.
ஆனால், மாதா மாதம் சம்பளம் மட்டும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளாக இந்த கூத்து தொடர்கிறது.

இத்தனைக்கும் இந்த பள்ளிகள், நல்ல கட்டிடத்தில் குடிநீர், கழிப்பறை, விசாலமான அறை போன்ற வசதிகளுடன் உள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் எம்பி., எம்.எல்.ஏ.க் கள் நிதியுதவி அளித்துள்ளனர். ஆனால், மாணவிகள்தான் பள்ளிக்கு வருவது கிடையாது இது பற்றி உமா சஷி வித்யாலயாவின் தலைமை ஆசிரியை தீபிகா கோஷ் கூறுகையில், ‘‘பல ஆண்டுகளாகவே மாணவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. கடைசியாக 2009ல் 85 மாணவிகள் இருந்தனர். அதிகாரிகளின் உத்தரவுப்படி இவர்களும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.

இங்கு 8ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் உள்ளது. அதற்கு பின் வேறு பள்ளியில் சேர்ப்பது கடினம் என்பதால் பிளஸ் டூ வரை உள்ள பள்ளிகளில் மாணவிகளை பெற்றோர் சேர்க்கின்றனர். இப்போது மாணவிகளே இல்லை. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஆசிரியர்கள், பணியாளர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் கோரியுள்ளோம். ஆனால் அரசு இதை கண்டு கொள்ளவில்லை’’ என்றார்.

பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்

பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்


பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகிறது என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்ஸ்கி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில் ஹெச்ஐவி புரதம் அடங்கிய மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்றது. பசு கன்று ஈன்ற பிறகு சுரக்கும் கொலஸ்ட்ரம் என்ற பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

இது கன்றுகளை நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. பசும்பாலில் உள்ள கிரீமில் எய்ட்ஸ் வைரசை தாக்கி அழிக்கும் பக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதும், இவற்றால் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதும் உறுதியாகி உள்ளது என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது. எய்ட்ஸ் நோய் தாக்குதல் எந்த நிலையில் இருந்தால் பால் கிரீம் கட்டுப்படுத்துகிறது, எவ்வளவு கிரீம் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

நடைப்பயிற்சி செய்தால் மூளைக்கு நல்லது: ஆய்வில் தகவல்

நடைப்பயிற்சி செய்தால் மூளைக்கு நல்லது: ஆய்வில் தகவல்

வயதானவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக அவர்களின் மூளை சுருங்கி நினைவுத்திறன் படிப்படியாக குறைந்துவிடும்.
டிமெண்டியா எனப்படும் இந்த ஞாபகத்திறன் குறைபாட்டினை உடற்பயிற்சி செய்வதன் மூலம் தடுக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர், அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

மனிதர்களுக்கு வயதாகும் போது அவர்களின் மூளை சுருங்குவது இயல்பு. இப்படி மூளை சுருங்கும் போது, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.

மூளையில் கட்டளைகள் உருவாகும் இடம் கிரே மேட்டர் என்கிற சாம்பல் பகுதி என்றும், அந்த கட்டளைகளை கடத்தும் பகுதி வைட் மேட்டர் என்கிற வெள்ளைப்பகுதி என்றும் இரண்டாக அறியப்படுகிறது. இதில் வயதாக ஆக, மூளையின் வெள்ளைப்பகுதி பாதிக்கப்படும். சாம்பல் பகுதி சுருங்கும்.

60- 70 வயதுகளில் இருப்பவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதை தடுக்க முடியும் என்றும், இதன் மூலம் வயோதிகத்துடன் தொடர்புடைய டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோயை தடுக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வயதானவர்கள் தினந்தோரும் நல்ல நடைபயிற்சி செய்தாலே அதுவும் உரிய பலன் தரும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். அதேசமயம் மூளைக்கு வேலை தரும் சுருக்கெழுத்து, சொடோகு போன்ற விளையாட்டுக்கள் வயோதிகத்தில் மூளை சுருங்காமல் தடுக்கவில்லை என்றும் இவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உடற்பயிற்சியினால் ரத்த சுழற்சி ஊக்குவிக்கப்படுவதால், அது மூளை செல்களில் ரத்த சுழற்சியை அதிகப்படுத்தி மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் மூளை சுருங்காமல் தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே வயதான காலத்தில் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள், தினசரி உடற்பயிற்சி அதாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம் என்பது ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

மகாத்மா காந்தி “தேசத் தந்தை” கிடையாது: உள்துறை அமைச்சகம்

மகாத்மா காந்தி “தேசத் தந்தை” கிடையாது: உள்துறை அமைச்சகம்

நாட்டு விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்திக்கு ‘தேசத் தந்தை' என்ற பட்டம் அளிக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா, மகாத்மா காந்தி பற்றிய தகவல்களை தருமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார்.

அதில் மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்று பட்டம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மகாத்மாவைத் தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

தேச துரோகத்திற்கு எதிராக புதிய சட்டம் ரஷ்யாவில் நிறைவேற்றம்


தேச துரோகத்திற்கு எதிராக புதிய சட்டம் ரஷ்யாவில் நிறைவேற்றம்

சதித்திட்டம் மற்றும் துரோகத்திற்கு எதிராக புதியச் சட்டத்தினை தனது கீழ் சபையில் ரஷ்யா நிறைவேற்றியுள்ளது.
மேல் சபையில் நிறைவேறவுள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம் கிடைக்கும் சாட்சிகளை பொறுத்து, மரணதண்டனையோ அல்லது அதற்கேற்ற தண்டனையோ குற்றவாளிக்கு வழங்கலாம்.

இந்த சட்டம் குறித்து ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள படி தண்டனை வழங்குவது என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

இதன் மூலம் வெளிநாட்டவரையும் 20 வருடங்கள் வரை கடுமையாக தண்டிக்கலாம். பன்னாட்டு பொதுமன்னிப்பு நிறுவனம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடனான செய்தி பறிமாற்றத்தையும் இந்த சட்டத்தின் மூலம் குற்றமாக்க முடியும்.

இந்த சட்டம் பொதுமக்களின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிமாக்கும்.

மேலும் இந்த சட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நிதித் தொடர்பு வைத்துள்ளவர்களை குற்றவாளிகள் என்றும், நாட்டுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் வலைதளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, October 25, 2012

இன்று அதிகாலை கியூபாவை மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் தாக்கியது ‘சான்டி’ சூறாவளி

இன்று அதிகாலை கியூபாவை மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் தாக்கியது ‘சான்டி’ சூறாவளி

சூறாவளி ‘சான்டி’ ஜமைக்காவை கடந்து, கியூபாவின் கிழக்குப் பகுதியை தற்போது தாக்கத் தொடங்கியுள்ளது. கடும் மழை, மற்றும் அதிவேகக் காற்று, இப்பகுதியை தற்போது தாக்குகின்றன.

நேற்று (வியாழக்கிழமை) மாலை கரிபியன் கடலில் ஆரம்பித்த சூறாவளி ‘சான்டி’, ஜமைக்காவை நேற்றிரவு தாக்கி சேதம் விளைவித்த நிலையில், இன்று அதிகாலை (நள்ளிரவு கடந்த நேரத்தில்) கியூபாவை தொட்டது. கியூபா காலநிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, சுமார் 55,000 பேர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு நேற்றிரவே அப்புறப்படுத்தப்பட்டனர்.

இன்று அதிகாலை கியூபா கிழக்குப்பகுதி கடற்கரையில், அலைகள் 26 அடி (சுமார் 8 மீட்டர்கள்) உயரத்துக்கு எழுந்து, கரையைக் கடந்தன.

கியூபாவின் இரண்டாவது பெரிய நகரமான சான்டியாகோ டி கியூபா, இந்த சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம், தலைநகர் ஹவானாவில் இருந்து 750 கி.மீ. தென்கிழக்கே உள்ளது.

கட்டகரி இலக்கம்-1 ரகத்திலான சூறாவளி இது என்று அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ அளவை அடைந்ததையடுத்து, கட்டகரி இலக்கம்-2 ரகத்திலான சூறாவளியாக மாற்றம் பெற்றுள்ளது.

சூறாவளி ‘சான்டி’, கல்ஃப் ஆஃப் மெக்சிகோவை நோக்கி செல்லவில்லை என அமெரிக்க காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. (அங்குதான், அமெரிக்காவின் எண்ணை, மற்றும் எரிவாயு மையங்கள் உள்ளன)

18 மாதங்களாக அதிரடி நடவடிக்கை: இங்கிலாந்தில் 500க்கும் அதிக டுபாக்குர் பல்கலைகள் மூடல்

18 மாதங்களாக அதிரடி நடவடிக்கை: இங்கிலாந்தில் 500க்கும் அதிக டுபாக்குர் பல்கலைகள் மூடல்

இங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி பல்கலைக்கழகங்களை அதிகாரிகள் அதிரடியாக மூடியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழங்களில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் படிக்கின்றனர். ஆண்டுதோறும் இவர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

ஐரோப்பிய யூனியனை சேராத நாடுகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் எல்லை பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் குடியேற்ற துறை அதிகாரிகள் கடந்த 18 மாதங்களாக தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அப்போது, போலியாக இயங்கிய 500க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகங்களின் தலைவர் எரிக் தாமஸ் கூறுகையில், 'கடந்த ஆண்டு ஏராளமான பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு விட்டன. எனினும், வெளிநாட்டு மாணவர்களின் வருகையில் எந்த பாதிப்பும் இல்லை. மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வேறு பல்கலையில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

இந்தியா தான் எங்களுடைய கூட்டாளி: பகிரங்கமாக அறிவித்தது சீனா

இந்தியா தான் எங்களுடைய கூட்டாளி: பகிரங்கமாக அறிவித்தது சீனா

இந்தோ- சீனா போர் நடந்து அரை நூற்றாண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்தியா தனது நட்பு நாடு என பகிரங்கமாக சீனா அறிவித்துள்ளது.
கடந்த 1962ம் ஆண்டு நடந்த இந்திய சீன போரில் பங்கேற்று உயிர்நீத்த வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 20ம் திகதி புதுடெல்லியில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ, தற்போதைய சூழலில் உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, சீனா வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.

தற்போதைய சூழலில், சீனா இந்தியாவை ஒரு கூட்டாளியாகத்தான் பார்க்கின்றதே அன்றி எதிரியாக பார்க்கவில்லை என்றார்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா எப்போதும் தயாராக இருப்பதாகவும் லீ தெரிவித்தார்.

தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றனவா?


தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றனவா?

நாம் உழைக்கிறோம். பிறகு உழைப்பை நிறுத்தி ஓய்வு எடுக்கிறோம். நம்முடைய ஓய்வில் தூக்கம் ஒரு முக்கியமான பகுதி. ஆனால் தாவரங்களின் நிலை என்ன? அவை உழைக்கின்றனவா? ஓய்வு எடுக்கின்றனவா?

தாவரங்களின் உழைப்பின் பயன்தான் காய்களும், கனிகளும். தாவரங்களின் உழைப்பின் பயனை நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றின் உழைப்பைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. தாவரங்களின் உழைப்பைப் பற்றியே நாம் சிந்திக்காத நிலையில், அவை எப்போது ஓய்வெடுக்கின்றன அல்லது தூங்குகின்றன என்று ஏன் யோசிக்கப் போகிறோம்?

தாவரங்கள் மழைக் காலத்தில் ஓய்வு கொள்கின்றன என்று கூறுவது மிகையாகாது. அவை அக்காலத்தில் கும்பகர்ணர்களாகின்றன. தாவரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவை உழைத்துக் களைப்படைகின்றனவா?&nbsp;</span><span style="font-size: small;">ஆம், அவை நன்றாக உழைத்துள்ளன. எனவே நல்ல ஓய்வுக்கு அவை தகுதி உடையவை. அவற்றின் பல்வேறு உறுப்புகளும் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர்க் காலம் ஆகிய பருவங்களில் தமக்குரிய பணிகளைச் செம்மையாகச் செய்துள்ளன.

தாவரங்கள் எவ்வாறு உழைக்கின்றன என்று கேட்கலாம். மனிதர்களாகிய நாம்தான் சுவாசிக்கிறோம் என்று எண்ண வேண்டியதில்லை. தாவரங்களும் சுவாசிக்கின்றன. அவற்றுக்கும் உணவு ஊட்டும் உறுப்புகள் உள்ளன. அரும்புகள் தோன்றுகின்றன. அவை மலர்களாகின்றன. காய்கள் தோன்றி, கனிகளாகின்றன. இந்த விந்தை நிகழ்ச்சிகள் யாவும் தாவரங்களின் வெவ்வேறு உறுப்புகளின் இடைவிடாத உழைப்பைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

இவ்வளவு சிறப்பாகவும், கடுமையாகவும் உழைத்துள்ள தாவரங்களுக்கு ஓய்வு வேண்டும் அல்லவா? ஆகவே மழைக் காலமே அவற்றின் ஓய்வுக் காலம். நாம் ஓய்வெடுக்கையில் எல்லாப் பணிகளையும் மூட்டை கட்டி வைத்துவிடுவதைப் போல தாவரங்களும் தமது பணிகளை அறவே நிறுத்தி வைத்துவிடுகின்றன.

மழைக் காலம் தொடங்கும்போது சில விலங்குகள் மாண்டுவிடுகின்றன. அவற்றைப் போல இறக்காமல் வளமாக வாழும் பெரும்பாலான தாவரங்கள், குறிப்பாக இலைகளை உதிர்க்கும் தாவரங்கள் இலையுதிர்க் காலத்தில் இருந்தோ அல்லது வசந்த காலத்தில் இருந்தோ ஓய்வெடுக்கின்றன. அந்தக் காலத்தில் அவற்றின் பல்வேறு பாகங்கள் தமது பணிகளை வெகுவாகக் குறைத்துக் கொள்கின்றன.

மழைக் காலத்தில் தாவரங்களின் உயிரணுக்களில் ஈரம் இருப்பதில்லை. ஈரம் உலர்ந்து விடுகிறது. தாவரங்களில் அடங்கியுள்ள தண்ணீரில் பெரும்பகுதி, இலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான துவாரங்கள் வழியாக வெளியேறிவிடுகிறது.

வேர்களும் தண்ணீரை உறிஞ்சுவதை நிறுத்திவிடுகின்றன. மண்ணின் வெப்பநிலை குறைவதால், வேர் ரோமங்களின் உயிரணுக்களை தண்ணீர் எளிதாக ஊடுருவ முடியாது. அதன் விளைவாக உணவு உற்பத்தி, உணவு உட்கொள்ளுதல் ஆகிய நடைமுறைகள் நின்றுவிடுகின்றன.வேர்கள் தண்ணீரை உறிஞ்சுவதை நிறுத்தியபிறகு இலைகள் உபயோகமற்றுப் போய்விடுகின்றன. அவற்றில் தாவரங்களுக்குத் தேவையான பல தாது உப்புகள் இருக்கின்றன.

மழைக் காலத்தில் தாவரங்கள் தமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்கின்றன. அவற்றுக்குத் தேவையில்லாத சுண்ணாம்புச் சத்து, சிலிக்கா போன்றவற்றை இலைகளில் இருந்து அகற்றிவிடுகின்றன. இலைகளில் தாவரங்களுக்குத் தேவைப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம், மக்னீஷியம் ஆகியவற்றைத் தாவரங்கள் அடிமரத்துக்கும், மாச்சத்து அதிகமாக அடங்கியுள்ள தண்டுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன. அவை இலைகளின் நரம்புகள் வழியாக அனுப்பப்படுகின்றன.

கடைசியில், தாவரங்களுக்குத் தேவையில்லாத பொருட்களே இலைகளில் தேங்கியுள்ளன. எனவே அவற்றைத் தாவரங்கள் கீழே உதிர்த்து விடுகின்றன.
தாவரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிச் சொல்லும் ஒரு பிரிவு தாவரவியலில் உள்ளது. அந்தப் பிரிவுக்கு `பெனாலஜி' என்று பெயர். அதன் கிரேக்க மூலச் சொல் `பாட்னோமா' ஆகும். அதற்கு, `தோன்றுதல்' என்று பொருள்.

Wednesday, October 24, 2012

உலகின் டாப் 20 பல்கலைக்கழகங்கள்: இங்கு படித்தால் நீங்களும் டாப்!!

உலகின் டாப் 20 பல்கலைக்கழகங்கள்: இங்கு படித்தால் நீங்களும் டாப்!!


வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயில விரும்புவோர் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம், ‘THE rankings’ இதில் THE என்பது, Times Higher Education என்பதன் முதல் எழுத்துக்கள்.

Times Higher Education (THE), முன்பு, Times Higher Education Supplement (THES) என்று அறியப்பட்டிருந்தது. லண்டனில் வெளியாகும், மேற்படிப்பு தொடர்பான பிரசுரம் இது. மேற்படிப்பு தொடர்பான, பிரிட்டனின் மிகப் பிரபல பிரசுரம் இதுதான்.

இவர்களது 2012/13 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக ரேங்கிங் தற்போது வெளியாகியுள்ளது. உலக அளவில் மொத்தம் 200 பல்கலைக்கழகங்கள் ரேங்கிங் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அநேக யூனிவர்சிட்டிகள், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் உள்ளன.
கனடாவின் யூனிவர்சிட்டி ஆஃப் டொரன்டோ, 21-வது இடத்தில் உள்ளது. ஆசியப் பல்கலைக்கழகங்களில், யூனிவர்சிட்டி ஆஃப் டோக்கியோ, 27-வது இடத்தில் உள்ளது.

200 இருந்தாலும், ரேங்கில் முதல் 20 யூனிவர்சிட்டிகளில் படிக்கதானே அனைவரும் விரும்புவார்கள் என்பதால், இங்கு முதல் 20 யூனிவர்சிட்டிகளின் போட்டோக்களை தருகிறோம்.


1. California Institute of Technology (United States)


 

2. University of Oxford (United Kingdom)

 

 3. Stanford University (United States)

 

4. Harvard University (United States)


 

5. Massachusetts Institute of Technology (United States)


 

6. Princeton University (United States)

 

7. University of Cambridge (United Kingdom)


 

8. Imperial College London (United Kingdom)


 

9. University of California, Berkeley (United States)


 

10. University of Chicago (United States)


 

11 Yale University – United States

 

12 ETH Zurich – Swiss Federal Institute of Technology Zurich – Switzerland 

13 University of California, Los Angeles – United States

 

 

14 Columbia University – United States


 

15 University of Pennsylvania – United States


 

16 Johns Hopkins University – United States


 

17 University College London – United Kingdom


 

18 Cornell University – United States


 

19 Northwestern University – (United States)


 

 

20 University of Michigan – (United States)


 Times Higher Education ரேட்டிங்கில் 21வதில் இருந்து 200வது வரை கீழே தரப்பட்டுள்ளது. சில பல்கலைக்கழகங்களுக்கு ஒரே ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியான பல்கலைக்கழகங்களின் ரேட்டிங் எண்ணுக்கு முன், ‘=’ குறியீடு போட்டுள்ளோம்.

கடந்த வருட ரேட்டிங் பிராக்கட்டில் உள்ளது.

21 University of Toronto – Canada (19)

22 Carnegie Mellon University – United States (21)

23 Duke University – United States (22)

24 University of Washington – United States (25)

=25 Georgia Institute of Technology – United States (24)

=25 University of Texas at Austin – United States (29)

27 University of Tokyo – Japan (30)

28 University of Melbourne – Australia (37)

29 National University of Singapore – Singapore (40)

30 University of British Columbia – Canada (22)

31 University of Wisconsin Madison – United States (27)

32 University of Edinburgh – United Kingdom (36)

33 University of Illinois – Urbana – United States (31)

34 McGill University – Canada (28)

=35 University of Hong Kong – Hong Kong (34)

=35 University of California, Santa Barbara – United States (35)

37 Australian National University – Australia (38)

38 University of California, San Diego – United States (33)

39 London School of Economics and Political Science – United Kingdom (47)

40 École Polytechnique Fédérale de Lausanne – Switzerland (46)

41 New York University – United States (44)

=42 Karolinska Institute – Sweden (32)

=42 University of North Carolina – United States (43)

=44 University of California, Davis – United States (38)

=44 Washington University in Saint Louis – United States (41)

46 Peking University – China (49)

47 University of Minnesota – United States (42)

48 University of Munich – Germany (45)

49 University of Manchester – United Kingdom (48)

50 Pohang University of Science and Technology – Korea, Republic of (53)

51 Brown University – United States (49)

52 Tsinghua University – China (71)

53 Ohio State University – United States (57)

=54 Boston University – United States (54)

=54 Kyoto University – Japan (52)

56 University of Southern California – United States (55)

57 King’s College London – United Kingdom (56)

58 Katholieke Universiteit Leuven – Belgium (67)

=59 École Normale Supérieure, Paris – France (59)

=59 Seoul National University – Korea, Republic of (124)

61 Pennsylvania State University – United States (51)

=62 École Polytechnique – France (63)

=62 University of Sydney – Australia (58)

64 Leiden University – Netherlands (79)

=65 Hong Kong University of Science and Technology – Hong Kong (62)

=65 University of Queensland, Australia – Australia (74)

67 Utrecht University – Netherlands (68)

68 Korea Advanced Institute of Science and Technology – Korea, Republic of (94)

69 Purdue University – United States (98)

70 University of Göttingen – Germany (69)

70 Wageningen University and Research Center – Netherlands (75)

=72 Erasmus University Rotterdam – Netherlands (157)

=72 University of Massachusetts – United States (64)

74 University of Bristol – United Kingdom (66)

75 Rice University – United States (72)

76 University of Pittsburgh – United States (59)

77 Delft University of Technology – Netherlands (104)

78 Universität Heidelberg – Germany (73)

79 Emory University – United States (75)

80 Durham University – United Kingdom (83)

81 Université Pierre et Marie Curie – France (84)

82 Lund University – Sweden (80)

83 University of Amsterdam – Netherlands (92)

84 University of Montreal – Canada (104)

85 University of New South Wales – Australia (173)

86 Nanyang Technological University – Singapore (169)

87 Tufts University – United States (77)

88 McMaster University – Canada (65)

89 University of Groningen – Netherlands (134)

89 University of Zurich – Switzerland (61)

91 University of Colorado – United States (77)

92 Université Paris-Sud – France (Not ranked)

93 Ghent University – Belgium (106)

=94 Michigan State University – United States (96)

=94 University of Notre Dame – United States (89)

96 University of California, Irvine – United States (86)

97 University of Maryland College Park – United States (94)

98 University of Arizona – United States (97)

=99 Humboldt-Universität zu Berlin – Germany (109)

=99 Monash University – Australia (117)

=99 Rutgers, The State University of New Jersey – United States (81)

102 University of Rochester – United States (81)

103 University of York – United Kingdom (121)

104 Case Western Reserve University – United States (93)

105 Technische Universität München – Germany (88)

=106 Uppsala University – Sweden (87)

=106 Vanderbilt University – United States (70)

108 University of St. Andrews – United Kingdom (85)

109 University of Helsinki – Finland (91)

=110 University of Sheffield – United Kingdom (101)

=110 University of Sussex – United Kingdom (99)

=110 Trinity College Dublin – Ireland, Republic of (117)

113 University of Cape Town – South Africa (103)

114 Eindhoven University of Technology – Netherlands (115)

115 Maastricht University – Netherlands (197)

116 Aarhus University – Denmark (125)

117 Stockholm University – Sweden (131)

118 University of Virginia – United States (135)

119 Royal Holloway, University of London – United Kingdom (107)

120 University of Nottingham – United Kingdom (140)

121 University of Alberta – Canada (100)

=122 University of California, Santa Cruz – United States (110)

=122 University of Florida – United States (125)

=124 Chinese University Hong Kong – Hong Kong (151)

=124 Dartmouth College – United States (90)

=124 University of Warwick – United Kingdom (157)

127 Radboud University Nijmegen – Netherlands (159)

=128 Freie Universität Berlin – Germany (151)

=128 Tokyo Institute of Technology – Japan (108)

=130 University of Copenhagen – Denmark (135)

=130 University of Lausanne – Switzerland (116)

=130 University of Southampton – United Kingdom (127)

133 University of Geneva – Switzerland (130)

=134 Indiana University – United States (123)

=134 National Taiwan University – Taiwan (154)

=134 University of Utah – United States (113)

=137 Hebrew University of Jerusalem – Israel (121)

=137 Tohoku University – Japan (120)

139 University of Glasgow – United Kingdom (102)

=140 Royal Institute of Technology – Sweden (187)

=140 VU University Amsterdam – Netherlands (159)

=142 University of Basel – Switzerland (111)

=142 University of Leeds – United Kingdom (133)

144 University of Freiburg – Germany (189)

=145 Lancaster University – United Kingdom (131)

=145 Queen Mary, University of London – United Kingdom (127)

147 Osaka University – Japan (119)

148 Arizona State University – United States (127)

149 Technical University of Denmark – Denmark (178)

150 Boston College – United States (195)

=151 University of Bern – Switzerland (112)

=151 Karlsruhe Institute of Technology – Germany (196)

153 University of Exeter – United Kingdom (156)

=154 University of California, Riverside – United States (143)

=154 RWTH Aachen University – Germany (168)

=156 Texas A&M University – United States (164)

=156 Yeshiva University – United States (154)

=158 University of Birmingham – United Kingdom (148)

=158 University of São Paulo – Brazil (178)

=158 Tel Aviv University – Israel (166)

161 University of Auckland – New Zealand (173)

=162 Stony Brook University – United States (114)

=162 University of Vienna – Austria (139)

164 Université Catholique de Louvain – Belgium (169)

165 University of Delaware – United States (180)

166 Université Paris Diderot – Paris – France (169)

167 University of Texas at Dallas – United States (251-275)

168 George Washington University – United States (135)

169 University of Iowa – United States (141)

170 Ecole Normale Supérieure de Lyon – France (141)

=171 Universität Bonn – Germany (Not ranked)

=171 University of Liverpool – United Kingdom (181)

=171 University of Ottawa – Canada (185)

=174 Georgetown University – United States (138)

=174 Rensselaer Polytechnic Institute – United States (144)

=176 University of Aberdeen – United Kingdom (151)

=176 University of Adelaide – Australia (201-225)

=176 University of East Anglia – United Kingdom (145)

=176 University of Reading – United Kingdom (164)

=180 Université Joseph Fourier – Grenoble 1 – France (Not ranked)

=180 Newcastle University – United Kingdom (146)

182 City University Hong Kong – Hong Kong (193)

183 Yonsei University – Korea, Republic of (226-250)

=184 Colorado School of Mines – United States (201-225)

=184 University of Illinois – Chicago – United States (167)

=184 William & Mary – United States (146)

=187 University College Dublin – Ireland, Republic of (159)

=187 University of Twente – Netherlands (200)

189 Medical University of South Carolina – United States (162)

=190 Wake Forest University – United States (162)

=190 University of Western Australia – Australia (189)

192 University of Antwerp – Belgium (276-300)

=193 Iowa State University – United States (184)

=193 University of Miami – United States (172)

=193 Technion Israel Institute of Technology – Israel (201-225)

=196 University of Leicester – United Kingdom (197)

=196 University of Victoria – Canada (177)

198 State University of New York Buffalo – United States (201-225)

199 Johann Wolfgang Goethe-Universität, Frankfurt am Main – Germany (181)

200 Birkbeck, University of London – United Kingdom (149) 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எச்சரிக்கை : வேண்டாம் நாய்களுக்கு KISS பண்ணாதீர்கள்

எச்சரிக்கை : வேண்டாம் நாய்களுக்கு KISS பண்ணாதீர்கள்நாய்களை முத்தமிட்டால் அதன் வாய்பகுதியில் உள்ள பக்டீரியாக்கள் மனிதர்களின் பல் ஈறுகளில் நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
66 நாய்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் 81 பேரிடம் ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பல நாய்களுக்கு அதன் வாய்பகுதியில் ஏராளமான பக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த நாய்களை கொஞ்சி விளையாடும் அதன் எஜமானர்களுக்கு பக்டீரியா தொற்று ஏற்பட்டு பல் ஈறுகளில் நோய் இருந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து அமெரிக்க கால்நடைதுறை மருத்துவர் ஆன் ஹோகன்ஹாஸ், ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு நாயிடம் உள்ள அன்பை குறைக்க வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற சிகிரிய சிங்க பாதத்தின் ஒரு பகுதியில் பிளவு

உலகப் புகழ் பெற்ற சிகிரிய சிங்க பாதத்தின் ஒரு பகுதியில் பிளவு

இன்று மதியம் இலங்கையில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வில் சிகிரிய சிங்க பாதத்தின் பகுதியொன்று உடைந்து பிளவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி பழமை வாய்ந்ததும், இலங்கையின் சுற்றுலாத்தலமுமான சிகிரியாவில் அமைந்துள்ள  சிங்க பாதத்தின் ஒரு பகுதி இன்று நிலவிய கடும் இயற்கை காலநிலையால் பிளவுற்றதை அடுத்து சிங்கள மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த பல காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில்கூட ஏற்படாத இப் பிளவினால் தொடர்ந்து ஏதாவது அழிவுகள் நாட்டில் ஏற்பட்டுவிடுமோ என சிங்கள கிராமவாசிகள் மனதில் பதற்றம் தென்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், யாழில் பெய்து வரும் பருவகால மழையின் காரணமாக புல்லுக்குளத்தின் அணைக்கட்டும் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லுக்குளத்தின் அணைக்கட்டுக்கு அருகில் இருந்த மின்கம்பமும் குளத்தினுள் சரிந்து தொங்கிய வண்ணம் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் புல்லுக்குளம் ஆழப்படுத்தப்பட்டபோது அணைக்கட்டு அத்திவாரத்திற்கு கீழ் தோண்டப்பட்டமையால் மழை நீரால் சுமார் 50 அடி நீளமான அணை மண் அரிப்புக்கு உள்ளாகி குளத்தினுள் சரிந்து வீழ்ந்துள்ளது.Tuesday, October 23, 2012

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி.

 ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.  படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.

சரஸ்வதிபூஜை - அர்த்த்ம்: பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.

சாமுண்டிதேவி: நவராத்திரியில் ஒன்பதாவது நாள் தேவியானவள் சாமுண்டி மாதா என அழைக்கப்படுகிறாள். இந்த நாள் தேவிக்கு மிகவும் சிறப்பு தரும் நாளாகும். சப்தமாதர்களுள் ஒருத்திதான் சாமுண்டி. துர்க்கா தேவி மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவளை எதிர்த்து சண்டையிட மகிஷனின் அமைச்சர்களாகிய சண்டன், முண்டன் வந்தனர். துர்க்காதேவி தன் அம்சமான சாமுண்டி தேவியை அனுப்பி சண்டனையும் முண்டனையும் அழிக்குமாறு பணித்தாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரையும் வீழ்த்தியதால் அதாவது சண்ட முண்ட வதம் செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள். சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனுர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச் சன்னதி உண்டு. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும், உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும். புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பின்னி, சூன்யம் வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவராத்திரி ஒன்பதாம் ஆலயங்களில் உள்ள சப்தமாதர் வரிசையில் கொலுவிருக்கும் சாமுண்டி தேவியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் தேடி வரும்.

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கண்பார்வை தெளிவடைய


வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:


பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:


ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.  பார்வை குறைபாடை போக்கி பார்க்கும் திறனை அதிகரிக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. இனிப்பு சுவையுள்ளதால் இந்த பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை அளிக்கும் பேரிட்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். தூசு இல்லாத சுத்தமான பேரீச்சம் பழத்தைதான் வாங்கி சாப்பிட வேண்டும்..

இலங்கை அருகே காற்றழுத்தம் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும்

இலங்கை அருகே காற்றழுத்தம் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும்

 இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் ஒரு மெல்லிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் புதுச்சேரியில் சில நாட்களாக மழை கொட்டியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை போன்ற பெரு நகரங்கள் மழை நீரில் தத்தளித்தன. நேற்றும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் நேற்று மாலை வங்கக் கடலில் தென் கிழக்கு திசையில் அந்தமான் இலங்கை அருகே ஒரு மெல்லிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்த மழையில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் நீலகிரியில் பொதுவாக இந்த அக்டோபரில் அதிக கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த முறை குறைவாக பெய்துள்ளது. அதேபோல குறைவாக பெய்ய வேண்டிய விழுப்புரத்தில் மிககனமழை பெய்துள்ளது. மீனவர்கள் மாயம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன் பிடி சீசன் நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூரில் இருந்து ஏராளமான மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த வேலாயுதம் (47) என்பவரது கண்ணாடி இழை படகில் அவரும், அவரது மகன்கள் சத்தியன் (19), மாதவன் (15) ஆகியோர் கடந்த 21ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் வரை அவர்கள் கரை திரும்பாததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பூமியை தாக்ககூடிய விண்கற்களை அழிக்க விண்ராக்கெட்டுகளை தயார் செய்கிறது ரஷ்யா

பூமியை தாக்ககூடிய விண்கற்களை அழிக்க விண்ராக்கெட்டுகளை தயார் செய்கிறது ரஷ்யாபூமியை தாக்கி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விண்கற்களை அழிப்பதற்காக விண்ராக்கெட்டுகளை தயார் செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
பூமியை தாக்கி மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விண்கற்கள் விண்வெளியில் இருக்க கூடும்.

அவற்றை பூமிக்கு வெளியே விண்வெளியிலேயே மறித்து வெடிக்க செய்வதன் மூலம் திசை திருப்பவோ அல்லது முழுவதுமாகவோ அழிக்ககூடிய விண்ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இத்தகவலை ரஷ்யாவின் பிரதான ராக்கெட் மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான Energia தெரிவித்துள்ளது.

விண்வெளியில் Apophis உட்பட மிகப்பெரிய 3 விண்கற்களின் பயணப்பாதை(Orbit) பூமியின் சுற்றுப் பாதையில் இன்னும் சில தசாப்தங்களில் குறுக்கிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூமியின் சுற்றுப் பாதைக்குள் வரும் இந்த விண்கற்கள் பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகவே உள்ளது.

இதனால் இவற்றை வழியில் மறித்து சிதைக்காமல் விட்டால் அவை மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் கடலில் இவை முழுமயாக விழுந்தால் சுனாமி ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

Apophis-ற்குச் சமனான குறுங்கோள் ஒன்றுடன் மோதி அதன் பயணப் பாதையை மாற்றுவதற்கு 70 டன் TNT வெடிமருந்துடன் கூடிய ஏவுகணை தேவைப்படுகின்றது.

எனவே இந்த விண்கல்லை திசை திருப்ப RD-171 ரக ஏவுகணையால் முடியும் எனவும், Energia இவற்றை இன்னமும் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் தயாரித்து விடும் எனவும் லொபொட்டா கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த ஏவுகணைகளை தாம் Tsar Engines என அழைப்பதாகவும், இந்த ரக ஏவுகணைகளை இதுவரை வேறு எந்த நாடும் செய்ததில்லை எனவும் கூறியுள்ளார்.

3 வீரர்களுடன் இன்று விண்வெளிக்கு பயணமாகிறது சோயூஸ் விண்கலம்

3 வீரர்களுடன் இன்று விண்வெளிக்கு பயணமாகிறது சோயூஸ் விண்கலம்ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூன்று வீரர்களுடன் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து பூமிக்கு மேல் 410 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.

இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பிராண வாயு போன்றவை ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்கலங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் சார்பில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்ய, ஜப்பானிய வீரர்கள் இதில் பயணித்தனர்.

இதற்கிடையே சோயூஸ் விண்கலம் மூலம் மூன்று விண்வெளி வீரர்கள் இன்று விண்வெளிக்கு பயணமாகின்றனர்.

விண்வெளிக்கு புறப்படும் அமெரிக்க வீரர் போர்டு விண்கலத்தை இயக்கும் விமானியாக செல்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த நிலையத்திற்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆண்கள் எப்போது வயதுக்கு வருகிறார்கள் தெரிமா ...!

ஆண்கள் எப்போது வயதுக்கு வருகிறார்கள் தெரிமா ...!

பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா... ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. லேட்டஸ்டாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர்.
முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம்.
6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம்.

இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வெள்ளை இனத்தவரிடையே பூப்பெய்தும் வயது சராசரியாக 10 ஆக உள்ளதாம். அதேசமயம், கருப்பர் இனத்தவர்களிடையே 9 வயதாக பூப்பெய்தும் வயது இருக்கிறதாம்.

இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் கூட கிட்டத்தட்ட இதே வயதில்தான் ஆண்கள் பூப்பெய்துகிறார்களாம்.

வெள்ளை இன சிறார்களிடையே 6 வயதிலேயே கூட சிலருக்கு பூப்பெய்தும் அறிகுறிகள் தெரிகிறதாம். இந்த எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது. அதேசமயம், கருப்பர் இனத்தவரிடையே 6 வயதில் பூப்பெய்துவது என்பது 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

9 சதவீத வெள்ளை இன ஆண்களைப் பொறுத்தவரை சராசரியாக 6 வயதிலேயே அவர்களுக்கு விதைப் பை வளர்ச்சி நன்கு வந்து விடுகிறதாம். கருப்பர் இனத்தவர்களில் இது 20 சதவீதமாக உள்ளது.

அந்தரங்க உறுப்பு உள்ள பகுதியில் முடி வளருவது, விதைப் பை விரிவடைந்த அடுத்த ஆண்டிலேயே ஏற்படுகிறதாம். இது பொதுவாக அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியாக உள்ளதாம்.

பெண்களைப் பொறுத்தவரை மார்பக வளர்ச்சிதான் அவர்கள் பூப்பெய்யப் போவதற்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. 10 சதவீத வெள்ளை இனப் பெண்களில் 7 வயதில் இது நடைபெறுகிறதாம். கருப்பர் இனப் பெண்களில் இது 23 சதவீதமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் வயது சராசரியாக 12 ஆக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்ட போர் விமானம் பிரித்தானிய படையில் இருந்தது !

யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்ட போர் விமானம் பிரித்தானிய படையில் இருந்தது !

மறைந்துபோன பல வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளை, மலேசியாவில் வசித்த ஈழத் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக செயற்பட விரும்பியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் பணத்தை சேகரித்து, ஒரு போர் விமானத்தை வாங்கி அதனை பிரித்தானிய படைக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த விமானத்துக்கு யாழ்ப்பாணம் என்று பெயர்வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர். 1915ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி, இந்த விமானத்தை பிரித்தானிய படையிடம் கையளித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். சுமார் 97 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியர்களுக்கு தெரியாதா, மற்றும் அவர்கள் மறந்துபோன விடையங்கள் கூட தற்போது வெளியாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. சுமார் 97 வருடங்களுக்கு முன்னர், ஜேர்மன் நாட்டுடன் பிரித்தானியா போரில் ஈடுபட்டவேளை, ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு உதவியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. இதேபோலவே இந்தியாவின் மாபெரும் புரட்சியாளரான சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில், ஒரு இராணுவத்தைத் திரட்டினார். இதற்கு இந்திய தேசிய விடுதலை இராணுவம் என்று பெயர் சூட்டினார். இதில் வெளிநாட்டில் வசித்துவந்த பலர் இணைந்துகொண்டனர். ஆனால் இதிலும் மறைந்திருக்கும் உண்மை ஒன்று உள்ளது. இப் படையில் இந்தியர்கள் மட்டும் இணையவில்லை. இதில் ஈழத் தமிழர்கள் பலரும் இணைந்து போரிட்டுள்ளனர்.

அதாவது இந்திய விடுதலைக்காக ஈழத் தமிழர்களும் போராடியுள்ளனர் என்பதுதான் உண்மை. இச் செய்திகள் மலேசியாவில் இருந்து தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இந்த ஆந்தைகளின் இருப்பிடத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த ஆந்தைகளின் இருப்பிடத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?