Wednesday, October 31, 2012

மெரினா பீச்சுக்கு செல்ல வேண்டாம் : போலீசார் வேண்டுகோள்

மெரினா பீச்சுக்கு செல்ல வேண்டாம் : போலீசார் வேண்டுகோள்




புயல் கரையை கடக்கும்வரை மெரினா கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகி உள்ள நிலம் புயல் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வழக்கத்தை விட அதிக காற்று வீசுகிறது. கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது. பல அடி தூரம் எழும்பும் ராட்சத அலை காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இதனால், மெரினா தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு ஏற்கனவே, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை மீறி யாரும் கடலுக்குள் சென்று விடக்கூடாது என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், புயல் கரையை கடக்கும்வரை கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தயார் நிலையில் சென்னை போலீசும், தீயணைப்பு படை வீரர்களும் உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!