Friday, December 14, 2012

சிங்கிளாக இருந்தால் செய்யக்கூடிய செயல்கள்!!!


சிங்கிளாக இருந்தால் செய்யக்கூடிய செயல்கள்!!!


இந்த உலகில் காதலின்றி யாரும் இருக்கமாட்டார்கள் தான். அத்தகைய காதல் ஏன் ஒரு பெண்/ஆண் மீது மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன? பெற்றோர் மீது இருக்கக்கூடாதா? என்று பலர் கேட்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு காதலில் விருப்பமில்லை.

இதற்கு காரணம் காதல் செய்தால், இப்படி தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கும், சுதந்திரம் இருக்காது என்பதாலேயே தான். இவ்வாறு காதலின்றி சிங்கிளாக இருக்கும் போது, அதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அவ்வாறு சிங்கிளாக இருப்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களிடம் காதல் பற்றி கேட்டால், "முட்டாள்கள் தான் காதலில் விழுவார்கள்" என்று சொல்வார்கள்.

ஆனால் அத்தகைய காதலில் விழாமல், சிங்கிளாக சந்தோஷத்துடன் இருந்தால், ஒவ்வோரு நொடியையும் சந்தோஷமாக அனுபவித்து வாழலாம் என்று சொல்வார்கள். இவ்வாறெல்லாம் காதலை நினைப்பதற்கு பெரும் காரணம், இன்றைய நிறைய காதல்கள் தோல்வியிலேயே முடிவதோடு, அதனால் பலர் தற்கொலை முயற்சி என்றெல்லாம் செல்கின்றனர். எனவே தான் பலர் காதலை வெறுக்கின்றனர். சரி, இப்போது சிங்கிளாக இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போமா!!!

சிங்கிளாக இருக்கும் போது செய்யக்கூடியவை... 

* சிங்கிளாக இருக்கும் போது நண்பர்கள் தான் காதலர்கள். ஏனெனில் இந்த நேரத்தில் நமது சந்தோஷம் மற்றும் துக்கத்தை பகிர்ந்து கொள்பவர்கள் நண்பர்கள் தான். அத்தகையவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் சினிமாவிற்கு போகலாம். அதுவும் உயிர் தோழனாகவோ அல்லது தோழியாகவோ அல்லது நண்பர் கூட்டத்துடனோ இருக்கலாம். இதுவே காதலன்/காதலி இருந்தால், நண்பர்களுடன் நிம்மதியாக நேரத்தை செலவழிக்கவே முடியாது. அடிக்கடி போன் வந்து டென்சன் இருந்து கொண்டே இருக்கும்.

* எந்த ஒரு பாய் ப்ரெண்ட் அல்லது கேர்ள் ப்ரெண்ட் இல்லையென்றால், சொந்தம் கொண்டாட யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே தனியாக இருப்பதால், எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் நீங்களே ராஜா, ராணி. உங்களுக்கு மனதில் தோன்றுவதை செய்ய யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

* காதலிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் காதலன்/காதலியை ஷாப்பிங் அழைத்துச் செல்லும் போது, எவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிலும் பிடிக்கவில்லை என்று சொன்னாலும், மற்றவருக்குப் பிடித்தால் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு வாங்கி தராவிட்டால், சிறிய சண்டை ஏற்படும். என்ன கொடுமை சரவணா இது, இந்த மாதிரியான சண்டையெல்லாம் தேவையா? ஆனால் அதுவே சிங்கிளாக இருந்தால், அந்த பணத்தை வைத்து, எத்தனை விருப்பமானதை மட்டும் வாங்கி மகிழலாம். பணமும் மிச்சமாகும்.

* முக்கியமாக யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். காதலித்தால், அந்த உரிமை போய்விடும். எப்படியெனில் நீங்கள் சைட் அடிக்கும் போது, உங்கள் துணை பார்த்துவிட்டால், பிறகு அவ்வளவு தான்.

* சிகரெட், மது அருந்துதல் போன்ற எந்த ஒரு செயலையும் தைரியமாக, யாருக்கும் பயப்படாமல் செய்யலாம்.

* மன நிம்மதியுடன் எந்த ஒரு விளையாட்டையும், நண்பர்களுடன் சந்தோஷமாக விளையாடலாம். ஆனால் காதலித்துவிட்டால், எப்போது பார்த்தாலும் போன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பாருங்கப்பா, ஒரு விளையாட்டை கூட நிம்மதியா விளையாட முடியலைன்னா எப்படிப்பா முடியும்?

நீங்க சிங்கிளா இருக்கீங்களா? அப்படின்னா நீங்க என்னலாம் செய்வீர்கள் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...


11.11.11ல் நிச்சயதார்த்தம், 12.12.12.ல் விவாகரத்தை அறிவித்தார் மம்தா

11.11.11ல் நிச்சயதார்த்தம், 12.12.12.ல் விவாகரத்தை அறிவித்தார் மம்தாதிருமணமான ஓராண்டுக்குள் கணவனை விவாகரத்து செய்கிறார் நடிகை மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, சிவப்பதிகாரம் மற்றும் தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் மமதா மோகன்தாஸ்.

பாடகியும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த அவருக்கும், அவரது சிறு வயது நண்பரும், தொழில் அதிபருமான பிரஜித் பத்மநாபனுக்கும் 11-11-11 அன்று நிச்சயதார்த்தம் நடந்து 28.12.11 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நானும், என் கணவரும் பிரிவது என்று முடிவு செய்துள்ளோம். இனியும் எங்களால் ஒன்றாக இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம். நான் நடிப்பு மற்றும் பாட்டில் கவனம் செலுத்துவேன் என்றார்.

மமதா மலையாளத்தில் மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித்துடன் நடித்து வருவதுடன் இசை ஆல்பம் ஒன்றிலும் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா...

சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா...


புகைப்பிடிப்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் அந்த பழத்தை நிறுத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். ஒரு பழக்கத்தை பழகுவது எளிதானது. ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினமான செயல். அதிலும் தீயப்பழக்கங்களை நிறுத்துவது தான் மிகவும் கஷ்டமான விஷயம். அந்த தீயப்பழக்கங்களில் புகைப்பிடித்தால், உடலுக்கு என்ன கேடு ஏற்படும் என்பது நன்கு தெரியும். அதிலும் அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் உடலில் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நுரையீரல் பாதிப்பப்பட்டு, நாளடைவில் அழிந்துவிடும்.

சிலர் இந்த விஷயம் தெரிந்து, இந்த மாதிரியான கெட்டப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும் நீண்ட நாட்கள் பிடித்த சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உடலிலேயே தங்கியிருக்கும். இவை நீண்ட நாட்கள் உடலில் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அத்தகைய நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்ற சில உணவுகள் இருக்கின்றன. அந்த உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டின் வெளியேறிவிடும்.

பொதுவாக புகைப்பிடித்தால் உடலில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ சத்துக்கள் குறைந்துவிடும். இந்த சத்துக்கள் தான் நுரையீரலை பாதுகாக்கின்றன. ஆகவே இந்த சத்துக்கள் நிறைந்து உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றிவிடலாம். சரி, இப்போது உடலில் இருந்து நிக்கோட்டினை வெளியேற்றும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
ப்ராக்கோலி

இந்த காய்கறியில் வைட்டமின் சி மற்றும் பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதிலும் புகைப்பிடித்தால், உடலில் உள்ள வைட்டமின் சி சத்தானது குறைந்துவிடும். ஆகவே இந்த காய்கறியை அதிகம் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டை தவிர்ப்பதோடு, புகைப்பிடிப்பதால் சேரும் நிக்கோடின் அளவை குறைத்துவிடும். அதுமட்மின்றி, இவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறையும்.கேரட் ஜூஸ்
ஒரு முறை புகைப்பிடித்தால், அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் 3 நாட்களுக்கு உடலில் இருக்கும். அதிலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால், நிக்கோட்டின் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்தின் பொலிவை கெடுத்துவிடுகிறது. எனவே அவ்வாறு பாதிப்படையும் சருமப் பொலிவை கேரட் ஜூஸ் மீட்டு தரும். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி, உடலில் தங்கியிருக்கும் நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் அதிக வைட்டமின்கள் இருப்பதோடு, ஃபோலிக் ஆசிட் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் கர்ப்பிணிகள் உடலில் நிக்கோட்டின் அதிகமான உள்ளது என்று கவலைப்பட்டால், அப்போது பசலைக் கீரையை அதிகம் வாங்கி சாப்பிடுவது நல்லது.மாதுளை
இந்த சிவப்பு நிற பழமானது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது. ஆகவே அதிக அளவு நிக்கோட்டின் உடலில் இருப்பது போல் உணர்ந்தால், அதாவது அதிக அளவில் புகைப்பிடித்துவிட்டால், மாதுளையை சாப்பிடுவது நல்லது. இதனால் நிக்கோட்டின் வெளியேறுவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.கிவி
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கிவி பழம், உடலில் உள்ள நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும் தன்மையுடையது. எனகே கிவிப் பழத்தை சாப்பிட்டு, நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்றிவிடுங்கள்.பெர்ரி
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றுவதோடு, ஆபத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்களையும், உடலில் இருந்து வெளியேற்றிவிடுகிறது.காய்ந்த மூலிகைகள்
காய்ந்த மூலிகைகளும் உடலில் உள்ள நிக்கோட்டின் அளவை குறைத்துவிடும். அதிலும் ரோஸ்மேரி, பார்ஸ்லே, பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய், பூண்டு பொடி மற்றும் பல மூலிகைப் பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளது.

தண்ணீர்

அதிகமாக புகைப்பிடித்தால், உடலில் வறட்சியை ஏற்படுவதோடு, தீங்கை விளைவிக்கும் நிக்கோட்டின் அளவும் அதிகமாகும். ஆகவே அதிக அளவில் தண்ணீர் குடித்தால், எந்த ஒரு நச்சுப் பொருளையும், உடலில் தங்க விடாமல் தடுக்கலாம்.

7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை: மத்திய அரசு


7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை: மத்திய அரசு


இந்தியாவில் ஏழு கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என்று ராஜ்யசபாவில் தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த வேலை இல்லாத்திண்டாட்டம் இந்தியாவிற்கு, மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் 

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி திட்டங்களால், கடந்த 20, 30 ஆண்டுகளில் படித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், படித்த, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

7 கோடி பேருக்கு வேலை இல்லை 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஏற்றுமதி அதிகரிப்பு போன்றவற்றால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுகின்றன. என்.எஸ்.எஸ்.ஓ., எனப்படும், தேசிய மாதிரி சர்வே அமைப்பு, 2009 - 10ம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் படி, நாடு முழுவதும், ஏழு கோடி பேருக்கு, வேலையில்லை அல்லது அவர்களுக்கு, போதுமான வேலை இல்லை என்ற நிலை காணப்படுகிறது.

34.7 கோடி பேர் தேவை 

இது குறித்து ராஜ்யசபாவில் பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வின் படி, வரும், 2022ம் ஆண்டில், நாட்டில், 34.7 கோடி, திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவர் என்று கூறியுள்ளார்.

உலக அளவில் 3 கோடி 

உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

விவசாயத்துறை வேலை வாய்ப்பு 

உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு காரணமாகவே இந்தியாவிலும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 1993 - 94ம் ஆண்டில் விவசாய துறையில் வேலை வாய்ப்புகள் 61.67 சதவீதமாக இருந்தது.ஆனால், 2004 -05ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 52 சதவீதமாக குறைந்துவிட்டது. விவசாயத்துறை மூலம் வரும் வருமானம் அதிகமாக உள்ள நிலையில், விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது. இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலை இல்லாத்திண்டாட்டம் 

வர்த்தகம், ஓட்டல், உணவு விடுதி, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் பணி செய்பவர்கள், தங்களின் பணி பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்கின்றனர். சுய தொழில், சிறு தொழில் செய்யும் இளைஞர்களின் தொழிலை பாதிக்கும் அளவிற்கு பெரிய நிறுவனங்களும், சூப்பர் மார்க்கெட்டுகளும், ஷாப்பிங் மால்களும் ஏராளமாக வந்துவிட்டன. இது, வேலை இல்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரம் மோசமடையும்

120 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய நாட்டில் , ஏழு கோடி பேருக்கு வேலையில்லாத நிலை காணப்படுவது, வளரும் நாடான இந்தியாவிற்கு, மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

''சூப்பர் ஜூபிடர்'': வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!

''சூப்பர் ஜூபிடர்'': வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!ஹவாய் தீவுகளில் உள்ள உலகின் மிக சக்தி வாய்ந்த விண்ணியல் தொலைநோக்கி மூலம் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சைஸ் நமது ஜூபிடர் (தமிழில் வியாழன் அல்லது குரு) கிரகத்தைப் போல 13 மடங்காகும். நமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கோள் ஜூபிடர் தான் என்பது உங்களுக்குத் தெரியும் தானே..கப்பா ஆட்ரோமெடா பி..

இந்த புதிய கிரகம் கப்பா ஆட்ரோமெடா பி (Kappa Adromedae b) என்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வந்து கொண்டுள்ளது. பூமியிலிருந்து 170 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கிரகத்தின் அளவைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியே வாயைப் பிளந்தபடி இதற்கு "super-Jupiter" என்று பெயரும் சூட்டியுள்ளனர்.இந்த நட்சத்திரம் சூரியனை விட 2.5 மடங்கு பெரிது..


சூப்பர் ஜூபிடர் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்த நட்சத்திரமும் மெகா சைஸ் தான். இதன் அளவு நமது சூரியனை விட இரண்டரை மடங்காகும். ஆனால், இதன் வயது வெறும் 30 மில்லியன் ஆண்டுகள் தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் ஜூபிட்டரின் வயதும் குறைவானதாகவே இருக்கும் என்று தெரிகிறது. நமது சூரியனின் வயது 5 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்த கிரகத்துக்கும் அது சுற்றிக் கொண்டிருக்கும் நடத்திரத்துக்கும் இடையிலான தூரம் கூட மிக மிக அதிகமாக உள்ளது. இதுவும் விஞ்ஞானிகளை தலை சுற்ற வைத்துள்ளது.மிக மிக நீண்ட தூரம்...
வழக்கமாக ஒரு நடத்திரத்தை (சூரியன்) தான் முதலில் கண்டுபிடிப்பார்கள். பின்னர் தான் அதைச் சுற்றி வரும் கிரகங்களை கண்டுபிடிப்பார்கள். ஆனால், இங்கு முதலில் சூப்பர் ஜூபிடர் தான் தொலைநோக்கியில் சிக்கியது. இது தனியாக மிதந்து கொண்டிருக்கிறதே, இது சுற்றி வரும் சூரியன் எங்கே என்று நீண்ட தேடலுக்குப் பின்னரே கப்பா ஆட்ரோமெடா பி சூரியன் சிக்கியது. இரண்டுக்கும் இடையே உள்ள மிக மிக நீண்ட தூரம் தான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.


ஜப்பானிய தொலைநோக்கி..


அமெரிக்காவின் ஹவாய் தீவில் மெளனா கியா மலையில் ஜப்பான் அமைத்த சுபாரு தொலைநோக்கி தான் இந்த புதிய கிரகத்தையும் அதன் சூரியனையும் படம் பிடித்துள்ளது.


இந்தியாவில் டாப் பணக்காரர்கள்..

இந்தியாவில் டாப் பணக்காரர்கள்..இந்தியாவின் பணக்காரர்கள் யார் என்ற பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹூருன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் டாப் பணக்காரர்கள் யார்? யார்? அந்த சர்வே விவரம்.... இதில் பணக்கார பெண்மணிகளின் விவரமும் அடங்கியிருக்கிறது.முதலிடத்தில் முகேஷ் அம்பானி 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 19.3 பில்லியன் அமெரிக்க டாலர்! அம்பானிக்கு அடுத்தது யார்?
லண்டன் வாழ் இந்தியர் மிட்டல் 

முகேஷ் அம்பானியையடுத்து இந்தியாவின் 2-வது மிகப் பெரிய பணக்காரர்தான் லண்டன் வாழ் இந்தியரான தொழிலதிபர் எல்.என்.மிட்டல்.! மிட்டலோட சொத்து மதிப்பு எவ்வளவு என்கிறீர்களா? மொத்தம் 16.9 பில்லியன் அமெரிக்க டாலர்
அடுத்த டாப் அசிம் பிரேம்ஜி...
முகேஷ் அம்பானி, மிட்டல் ஆகியோரை அடுத்து இந்தியாவின் டாப் பணக்காரர்கள் யார்?

விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி (12.3 பில்லியன் டாலர்),

சன் பார்மசூட்டிகல்ஸின் திலிப் சங்வி( 8.5 பில்லியன் டாலர்),

பல்லோன்ஜி (7.9 பில்லியன் டாலர்),

எஸ்ஸார் குழுமத்தின் சாஷி அண்ட் ரவி ரூயா (7.2 பில்லியன் டாலர்),.

கோத்ரெஜ் குழுமத்தின் அதி கோத்ரெஸ் (6.9 பில்லியன் டாலர்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனர்!

லிஸ்ட்டில் சர்ச்சைக்குரிய டி.எல்.எப்.

சோனியாவின் மருமகன் வத்ரா வகையாக மாட்டிக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எப். நிறுவனத்தின் குஷால் பால் சிங்கும் இந்த டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 6.3 பில்லியன் டாலர்.

இவருக்கு அடுத்ததாக குமாரமங்கலம் பிர்லா( 5.8 பில்லியன் டாலர்),

ஹெச்.சி.எல். சிவ் நாடார் (5.7 பில்லியன் டாலர்),

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் (5.7 பில்லியன் டாலர்) ஆகியோரும் இடம் பிடித்திருக்கின்றன்ர்.இந்தியாவின் பணக்கார பெண்மணி
இந்தியாவின் பணக்கார பெண்கள் யார் என்ற விவரமும் வெளியிடப்பட்டிருக்கிறது. பணக்கார பெண்மணிகளில் அவர் இடம்பிடித்திருப்பரா? இவர் இடம்பிடித்திருப்பாரா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த பெண்மணியும் இந்தப் பட்டியலில் இல்லை...பணக்கார பெண் சாவித்ரி ஜிண்டால்

இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார பெண்களில் சாவித்ரி ஜிண்டாலுக்கு முதலிடம். அவரது சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர். அவருக்கு அடுத்த இடம்

பென்னெட் குழுமத்தின் இந்து ஜெயின். இவரது சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர்.

அடுத்த இடத்தில் இருப்பவர் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு அஹா. இவரது சொத்து மதிப்பு 690 மில்லியன் டாலர்.

பைகோன் நிறுவனத்தின் கிரன் மஜூம்தாரின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர்.

இந்துஸ்தான் டைம்சின் சோஷபா பார்தியாவின் சொத்து மதிப்பு 490 மில்லியன் டாலர்.
தங்களுக்கு காரியம் ஆக ஆண்களை மயக்கத் தயங்காத பெண்கள்!

தங்களுக்கு காரியம் ஆக ஆண்களை மயக்கத் தயங்காத பெண்கள்! 

இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் ஆண்களை மயக்கி அதை சாதிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.

ஒரு வேலை ஆக வேண்டும், அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று வரும்போது அதற்காக ஆண்களிடம் நைஸாக பேசுவது, தாஜா செய்வது போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகிறார்களாம்.

இப்படி ஈடுபடும்போது லேசு பாசாக ஆண்களை ஜொள்ளு விட வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்களாம் இங்கிலாந்துப் பெண்கள்.
சிரித்தே மயக்கும் இங்கிலாந்துப் பெண்கள்
இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக ஆண்களிடம் ஓவராக வழிந்தும், சிரித்தும் வலையில் வீழ்த்தி, மயக்கி சாதித்துக் கொள்கிறார்களாம்.


வேலை நேரத்தில்தான் ஜொள்ளு ஓவராம்

வேலை பார்க்கும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் தங்களுக்கு காரியம் ஆவதற்காக சக ஆண் ஊழியர்களிடம் நெருங்கிப் பழகுவது போல பழகி காரியம் சாதித்துக் கொள்கிறார்களாம்.செக்ஸுக்கும் ரெடியாம்

30 சதவீதப் பெண்கள், சம்பந்தப்பட்ட ஆணால் தங்களுக்கு காரியம் நல்லபடியாக முடியுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூட தயாராக இருக்கிறார்களாம்.ஆண்களுக்கும் பெண்கள்தான் வேண்டுமாம் 

அதேசமயம், தங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் நபர் பெண்ணாக இருப்பதையே ஆண்களும் விரும்புகிறார்களாம். 39 சதவீதம் பேர் இப்படிச் சொல்லியுள்ளனர். மேலும் அழகாக இருக்கும் பெண்களையே அவர்கள் தேர்வு செய்கிறார்களாம்.அழகான பெண்ணாக இருந்தால் உடனடி பிக்கப்

சாலையில் பைக்கில் செல்லும்போது அழகான பெண்கள் லி்ப்ட் கேட்டால் உடனே கொடுப்போம் என்று 42 சதவீத ஆண்கள் ஜொள்ளியுள்ளனர். அதேசமயம், அழகான ஆண் லிப்ட் கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர்தான் ஓ.கே சொல்லியுள்ளனர். இந்த சர்வேயை எடுத்த இணையதளத்தின் பெயர் என்ன தெரியுமா... Confused.com!லண்டன் இல் இருக்க தமிழ் பெண்களும் இப்படியோ (உண்மை தான்) என்று நீங்கள் யோசித்தால் அதுக்கு நாங்கள் பொறுப்பு இல்லைங்கோ

சரியாக 12-12-12-12-12க்கு அப்பாவான கல்லூரி மாணவர்

சரியாக 12-12-12-12-12க்கு அப்பாவான கல்லூரி மாணவர்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரின் மனைவிக்கு 12ம் தேதியான நேற்று பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்தது. இதனால் கல்லூரி மாணவரும், அவரது மனைவியும் பெரும் சந்தோஷமடைந்துள்ளனர்.

நேற்று 12-12-12 என்று ஒரே மாதிரியான எண்களில் வந்த நாளால், உலகமே தலைகீழாக மாறிப் போய்க் காணப்பட்டது. இந்த நாளைப் போல இன்னொரு நாளைப் பார்க்க இன்னும் நூறாண்டு காத்திருக்க வேண்டுமே என்பதால் மக்களெல்லாம் நேற்றைய நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேற்றைய நாளை விசேஷமாக கருதி, மருத்துவமனைகளிலும் நேற்று சிசேரியன் பிரசவங்கள் களை கட்டியிருந்தன. இந்த நிலையில் ஆந்திர மருத்துவமனை ஒன்றில் 12ம் தேதியான நேற்று ஒரு பெண்ணுக்கு சரியாக பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

அனந்தப்பூரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி காயத்ரி. திருப்பதியில் ஒரு தனியார் கல்லூரியில் ராஜசேகர் படித்து வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த காயத்ரிக்கு, கடந்த 9ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவரை திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு நேற்று மதியம் 12.12 மணிக்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து ராஜசேகர் கூறுகையில், என் மனைவி காயத்ரிக்கு இந்த மாதம் 20ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அரிய, அபூர்வ நாளான 12-12-12 அன்று பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் மகிழ்ச்சியுடன்.

தமிழகத்தில் கூடுதலாக 8 மணல் குவாரிகள் திறப்பு: ஒரு லாரி மணல் விலை ரூ.20,000 குறைந்தது

தமிழகத்தில் கூடுதலாக 8 மணல் குவாரிகள் திறப்பு: ஒரு லாரி மணல் விலை ரூ.20,000 குறைந்ததுதமிழகத்தில் கூடுதலாக 8 மணல் குவாரிகள் திறந்ததால் விஷமாய் ஏறிய மண்ணின் விலை குறைந்துள்ளது. தற்போது 1 லாரி மணல் ரூ.15,000 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வந்த பல மணல் குவாரிகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் மணல் தட்டுப்பாடு நிலவியது. மணல் விலை விஷம் போல் ஏறியது. மேலும் போதிய மணல் கிடைக்காமல் கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மூடப்பட்ட பல மணல் குவாரிகள் திறக்கப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மூடப்பட்டிருந்த மணல் குவாரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஆற்காடு, படாளம், மாலந்தூர். சீத்தஞ்சேரி, திருக்கழுக்குன்றம், பாலாறு உள்பட 8 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் முன்பு விழுப்புரத்திற்கு சென்று மணல் அள்ளியவர்கள் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள குவாரிகளுக்கு சென்று மணல் அள்ளுகின்றனர்.

குவாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஒரு லாரி மணலின் விலை ரூ.15,000க குறைந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜா கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 7 யூனிட் மணல் பெரிய லாரியில் 1 லோடுக்கு ரூ. 60,000 வரை விலை உயர்ந்தது. ஆனால் தற்போது விலை குறைந்து ரூ.40,000க்கு விற்கப்படுகிறது. 4 யூனிட் மணல் சிறிய லாரியில் ஒரு லோடுக்கு ரூ.25,000 வரை விலை உயர்ந்தது.

ஆனால் தற்போது ரூ.15,000க்கு கிடைக்கிறது. அரசே மணல் வழங்க வேண்டும் என்று தான் போராடி வருகிறோம். 1 யூனிட் மணலுக்கு அரசு ரூ.312 விலை நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த மணலை வெளியே கொட்டி வைத்து ஒரு யூனிட் ரூ.2,500க்கு விற்பனை செய்கிறார்கள். இதை குறைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தி வருகிறோம். சென்னை மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அரசே நேரடியாக மணல் வழங்கினால் அதன் விலை மேலும் குறையும் என்றார்.


வங்கக் கடலில் காற்றழுத்தம்- தென் மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!

வங்கக் கடலில் காற்றழுத்தம்- தென் மாவட்டங்களில் மழை பெய்யுமாம்!


வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் ஓரிரு நாட்களில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 16-ந்தேதி முதல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்திருக்கிறது. நிலம் புயலுக்குப் பிறகு ஓரிருமுறை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டாலும் அது புயலாக உருமாறவில்லை. இதனால் போதுமான மழையும் இல்லை. இந்நிலையில் இந்த காற்றழுத்ததாழ்வு நிலையினாலாவது மழை கிடைக்குமா? என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!!இரைப்பையும், சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம்.

செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

குடல் புண் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

செய்ய வேண்டியவைகள்: குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம்.

யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும்.

முறையாக இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது.

குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடும்.

Thursday, December 13, 2012

ஆண்களின் இதயத்துக்கு ஆபத்து!

ஆண்களின் இதயத்துக்கு ஆபத்து!


வயதானவர்களைத் தாக்கும் நோய்களின்  பட்டியலில் முதலிடத்தில் இருந்த மாரடைப்பு, இன்று  இளவயதுக்காரர்களிடம் இடம் பெயர்ந்திருக்கிறது. அதிலும் ஆண்களே அதிகம். ‘ஆம்பிளைங்களுக்கென்ன... பிரச்னையா? கவலையா? வீட்டை விட்டு வெளியேறிட்டா, அவங்க உலகமே வேற... ஃபிரெண்ட்ஸ், ஊர் சுத்தல்னு பிரச்னைகளை மறக்க அவங்களுக்கு ஆயிரம் வழி...’ என்பது பொதுவான கருத்து! உண்மை நிலவரமோ வேறு... வேலையிடத்துப் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாகவும், இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

‘‘ஆமாம்’’ என்று அதிர்ச்சி கொடுக்கிறார் பிரபல உளவியலாளர் வசந்தி பாபு. ஆண்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தம், திடீரென ஏற்படுவதில்லை. அது குழந்தைப்பருவ மன அழுத்தத்தின் தொடர்ச்சி என்றும் சொல்கிற வசந்தி, இதன் பின்னணியை விளக்குகிறார்...‘‘தாழ்வு மனப்பான்மை, தனிமை, குடும்பச்சூழல்னு நிறைய குழந்தைங்களுக்கு ரொம்ப சின்ன வயசுலயே மன அழுத்தத்துக்கான காரணங்கள் ஆரம்பிக்குது. ஒரே குழந்தையா வளர்றாங்க. தாத்தா, பாட்டி, அத்தை, மாமான்னு உறவுகள் தெரியாத தனித்தீவுகளா வாழறாங்க.

இன்னும் சொல்லப் போனா, அம்மா-அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தையை வளர்க்கிற சூழலே மாறி, சிங்கிள் பேரன்ட் எண்ணிக்கை அதிகமாயிட்டிருக்கு. கூடப் பிறந்தவங்களோ, நண்பர்களோ, உறவுகளோ சூழ வளரும் வாய்ப்பு கிடைக்கிற பிள்ளைங்க தப்பிச்சிடறாங்க. இன்னொரு பக்கம் விளையாட வேண்டிய வயசுல, அதை ஊக்கப்படுத்தாம, தன்னோட அந்தஸ்து, கவுரவம், ஆசைகளுக்காக அந்த வகுப்பு, இந்த வகுப்புன்னு 24 மணி நேரமும் குழந்தைங்களை பிசியா வைக்கிற பெற்றோர்கள் பெருகிட்டாங்க.

செயற்கையான மனிதர்களுக்கு மத்தியில, செயற்கையான சூழல்ல அந்தப் பிள்ளை வளர வேண்டிய கட்டாயம். சந்தோஷத்தையோ, சோகத்தையோ பகிர்ந்துக்க ஆள் இல்லாத அவலம்... அங்கே ஆரம்பிக்கிற மன அழுத்தம், குழந்தைங்க வளர வளர, தானும் சேர்ந்து வளர்ந்து, ஸ்கூல், காலேஜ்ல கூடவே வந்து, 30 வயசுல விஸ்வரூபம் எடுக்குது. இந்தக் காலத்து இளைஞர்கள் வெற்றியையோ, சாதனையையோ விரட்ட நினைக்கிறதில்லை. பணம்தான் அவங்களோட ஒரே லட்சியம். தன் நண்பனோ, சக ஊழியரோ வச்சிருக்கிற காஸ்ட்லியான மொபைல், டூ வீலரை உடனே தானும் வாங்கியாகணும், தன்னோட கேர்ள் ஃபிரெண்ட்கிட்ட நல்ல பேர் வாங்க நிறைய சம்பாதிச்சு, அதைவிட அதிகமா செலவழிக்கணும்... வாரக்கடைசின்னா பார்ட்டி போகணும்.

பார்ட்டியில கலந்துக்கிறவங்களோட லட்சணங்களான எல்லா தவறுகளையும் தானும் செய்யணும். ராத்திரியெல்லாம் தூங்காம முழிச்சிருந்து, மத்தவங்க விழிக்கிற நேரம் தூங்கறதும், கண்ட நேரத்துல சாப்பிடறதும், உடற்பயிற்சியே இல்லாததுமா புது வாழ்க்கை முறைக்கு மாறிட்டிருக்காங்க. இப்படி இயற்கைக்கு மாறாக, இன்றைய இளைஞர்கள் செய்யற ஒவ்வொரு விஷயமுமே அவங்க உடல் மற்றும் மன நலத்துக்குப் பெரிய பாதிப்பு...’’ என்கிற வசந்தி, சமீபத்தில் தான் கண்டு மிரண்ட ஒரு சம்பவத்தை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ஒரு பள்ளிக்கூட வாசல்... குழந்தைங்களை ஏத்திட்டு வெளியே வரிசையா வேன் வருதுங்கிறதால, எதிர்ல டூவீலர்ல வந்த 21 வயசு இளைஞரை கொஞ்ச நேரம் வெயிட் பண்ணச் சொன்னார் ஸ்கூல் வாட்ச்மேன். அந்த இளைஞனுக்கு வந்ததே கோபம். வண்டியை நிறுத்திட்டு, பாய்ஞ்சு வந்து, வாட்ச்மேனை அறைஞ்ச அந்தக் காட்சி என்னை மிரள வச்சது. அஞ்சு நிமிஷம் பொறுமையா இருக்க முடியாத அளவுக்கு அந்த இளைஞனுக்கு அப்படி என்ன டென்ஷன்? தோண்டித் துருவிப் பார்த்தா, அவனுக்கு வேலையிடத்துல ஏதாவது அவசரமா இருக்கலாம். ப்ராஜெக்ட்டை முடிக்கலைன்னு அவனோட பாஸ் திட்டியிருக்கலாம். இப்படித்தான் இருக்காங்க இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் பலரும்...

புதுசா கல்யாணமான ஜோடி நிறைய பேர் ரெண்டு பேருக்குள்ளயும் பிரச்னைன்னு என்கிட்ட ஆலோசனைக்காக வராங்க. முதல்ல பையன்கிட்ட பேசுவேன். ‘பேசிப் பாருங்க மேடம்... எப்படியாவது சேர்ந்து வாழ அட்வைஸ் பண்ணுங்க’ன்னு சொல்வாங்க. அடுத்து அந்தப் பெண்கிட்ட பேசினா, ‘இது சரியா வராது மேடம்... வெட்டி விட்ருங்க’ம்பாங்க. ‘அவன் ஏமாத்திட்டான்’னு சொல்லிட்டிருந்த காலம் மாறி, இன்னிக்கு ‘அவ ஏமாத்திட்டா’ன்னு சொல்றது அதிகமாயிடுச்சு. காதல் தோல்வியோ, கல்யாண முறிவோ... பெண்களைவிட, ஆண்களைத்தான் இப்ப அதிகம் பாதிக்குது. வருத்தமான விஷயம்னாலும் சொல்லித்தான் ஆகணும்.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கொள்கை இப்ப இல்லை. தன் மனைவிக்கு வேற ஆண்களோட தொடர்பு இருக்கிறதை சகிச்சுக்க முடியாமலும் மன அழுத்தத்துல புழுங்கறாங்க.  இப்படி வேலை, வீடுன்னு திரும்பின பக்கமெல்லாம் டென்ஷன், எந்தப் பிரச்னையை எப்படி அணுகறதுங்கிற தெளிவின்மை, பகிர்ந்துக்க ஆளில்லாம மனசுக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்கிறது, சரியான சாப்பாடு இல்லாததுன்னு எல்லாம் சேர்ந்துதான் 30 பிளஸ்ல ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துது’’ என்கிற வசந்தி, தீர்வுகளாக சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

தனிமையைத் தவிருங்க. அம்மா, அப்பா, ஃபிரெண்ட்ஸ் - இப்படி யார்கிட்டயாவது தினமும் கொஞ்ச நேரம் மனசு விட்டுப் பேசுங்க. பணத்துக்குப் பின்னாடி ஓடற வாழ்க்கையிலேருந்து விலகி இருங்க. பணத்தை விரட்ட, உங்க சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டுத் திணறாதீங்க. எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வேலையை மட்டும் செய்யப் பழகுங்க. பிடிச்ச நபர்கள்கூட இருக்கிறது, பிடிச்ச வேலையைச் செய்யறது, பிடிச்ச இடத்துல இருக்கிறதுன்னு உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிற விஷயங்களைச் செய்யுங்க.

சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி ரொம்பவே முக்கியம். பாசிட்டிவான மனப்பான்மையை வளர்த்துக்கோங்க. எப்பேர்ப்பட்ட பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கும். அது என்னங்கிறதைக் கண்டுபிடியுங்க. பிரச்னைகளைப் பகிர்ந்துக்க ஆளே இல்லையா? மனநல ஆலோசகர்களை நாடுங்க. உங்களோட பிரச்னைக்கு, நீங்க யோசிக்காத ஒரு கோணத்துல அவங்க தீர்வு சொல்வாங்க. அது உங்களுக்கு மன  உறுதியையும், நம்பிக்கையையும் தரும்.

சூட்டுடம்புக்கு ஏற்றது புடலங்காய்

சூட்டுடம்புக்கு ஏற்றது புடலங்காய்


புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும்.

உடலுக்கு வலு கொடுக்கும்.  தேகம் மெலிந்து  இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும்.  வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும்.  உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும்.  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.

ரயிலில் ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்ற வேண்டாம்

ரயிலில் ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்ற வேண்டாம்சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஓடும் ரயிலில் கற்பூரம் ஏற்ற வேண்டாம் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ரயில் மூலம் சபரிமலை செல்கின்றனர். சேலம் வழியே சபரிமலை சீசனுக்காக சுமார் 25 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் செல்லும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். ரயிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கற்பூரம் ஏற்ற வேண்டாம் என்றும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தலா 400 லிட்டர் அளவு கொண்ட 4 தண்ணீர் தொட்டிகள் உள்ளது. இதில் 1600 லிட்டர் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த தண்ணீரை கழிவறைக்கும், முகம், கை கழுவுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் அதிகாலையில் குளித்து விடுகிறார்கள்.

இதனால் தண்ணீர் காலியாகிவிடுகிறது. இதர பயணிகள் தண்ணீர் இன்றி தவிக்க நேரிடுகிறது. பக்தர்கள் வீணாக தண்ணீரை செலவு செய்யக்கூடாது. ரயில்களில் உள்ள கழிவறையில் குளிக்க கூடாது. ஐயப்ப பக்தர்கள், ரயில் பெட்டிக்குள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது சிறிய கற்பூர துண்டு கீழே விழுந்து விட்டால் பெரும் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ரயில் பெட்டிக்குள் கற்பூரம் ஏற்ற வேண்டாம் எடுத்துரைத்து வருகிறோம். எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓடும் ரயிலில் கற்பூரம் ஏற்ற வேண்டாம்.இவ்வாறு தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீது சந்திராவுக்கு கொரிய அரசின் கௌரவம்

நீது சந்திராவுக்கு கொரிய அரசின் கௌரவம்நடிகை நீது சந்திராவுக்கு தற்காப்பு கலைக்கான கருப்பு பெல்ட்டை கொரிய அரசு வழங்கவிருக்கிறது.

தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்தவர் இந்தி நடிகை நீது சந்திரா.

தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகும் ஆதிபகவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கொரிய தற்காப்பு கலையான டேக்வாண்டோவை கற்றுள்ள நீது சந்திரா, இதில் மூன்று ப்ளாக் பெல்ட்டுகளை ஏற்கனவே வாங்கியுள்ளார்.

தற்போது நான்காவது ப்ளாக் பெல்ட் வாங்க உள்ளார், இதற்கான விழா வருகிற 13ஆம் திகதி டெல்லியில் நடக்கிறது.

இவ்விழாவில் கொரிய அரசு நான்காவது ப்ளாக் பெல்ட்டை நீதுவுக்கு வழங்கி கௌரவிக்க உள்ளது.

இதுபற்றி நீது சந்திரா கூறுகையில், என் குடும்பத்தில் நான் மட்டுமே விளையாட்டுடன் கல்வியையும் சேர்த்துக் கற்றேன்.

மற்றவர்களை போல நானும் பொறியியல், மருத்துவம் என்று படித்திருந்தால் இதுபோன்ற விருதுகளை இழக்க வேண்டி இருந்திருக்கும்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தற்காப்பு கலையில் சாதிக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

நான் இந்த அளவு சாதித்ததற்கு என் அம்மாதான் காரணம். அவர் என்னை உற்சாகப்படுத்தி இருக்காவிட்டால் இது சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கொரிய அரசின் இந்த பெருமைக்குரிய பெல்டை வாங்கிய ஒரே இந்திய பெண் நீது சந்திரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சினிமாவில் முதன் முறையாக புதிய முயற்சியாக உருவாகும் "ஒன்"

உலக சினிமாவில் முதன் முறையாக புதிய முயற்சியாக உருவாகும் "ஒன்"கொலிவுட்டில் வெங்காயம் என்ற வித்தியாசமான படத்தை இயக்கியதன் மூலம் பாராட்டு பெற்றவர் சங்ககிரி ராஜ்குமார்.
இவர், தனது அடுத்த படத்திற்காக முற்றிலும் புதுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

உலக சினிமாவிலே இதுவரை யாரும் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட்டதில்லை என்றும் அவர் நம்பிக்கையோடு கூறுகிறார்.

"ஒன்" என்னும் பெயரிலான அந்த படத்தை முழுக்க முழுக்க அவர் மட்டுமே உருவாக்கியிருக்கிறார்.

உதவியாளர் என்று கூட வேறு ஒருவரை நாடாமல் மற்ற துறைகளுக்கும் வேறு யாரையும் பணிக்கு வைத்து கொள்ளாமல் இயக்கம் முதல் நடிப்பு வரை எடிட்டிங் முதல் டப்பிங் வரை அனைத்து துறைகளையும் அவரே கையாண்டிருக்கிறார்.

இப்படி நம்பமுடியாமல் ஒரு திரைப்படத்திற்கான எல்லா வேலைகளை அவர் ஒருவரே மேற்கொண்டிருக்கிறார்.

படத்தில் 300க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கின்றன என்று சொல்லும் ராஜ்குமார் அனைத்து பாத்திரங்களிலும் கிராபிக்ஸ் உதவியோடு தானே தோன்றுவதாக கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படம் தற்போதே ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் முன்னோட்டத்தை அமெரிக்காவில் திரையிட அழைத்துள்ளார்.

இப்படத்தின் 80 சத‌வீத பணிகள் முடிந்து விட்டன‌ என்றும் விரைவில் எல்லா வேலைகளும் முடிந்து சர்வதேச அளவில் "ஒன்" திரைப்படம் வெளியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

இறப்பு என்பது இறுதியானது இல்லை: 34 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞன்

இறப்பு என்பது இறுதியானது இல்லை: 34 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞன்


உயிர் பிரிந்ததற்கு பின்னரும் 34 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர், இறப்பு என்பது இறுதியானது இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.
புதுடெல்லியைச் சேர்ந்த ஜூனேஜா என்பவரின் மகன் அன்மோல்(வயது 21), கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வந்தான்.

கடந்த சனிக்கிழமை இரவு சாலை விபத்து ஒன்றில் சிக்கிய அன்மோலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனால் மனமுடைந்து விட்ட பெற்றோர், உடனடியாக எடுத்த முடிவுதான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளது.

தங்களது மகனின் உடலில் உள்ள எத்தனை உறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அத்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிடம் கூறினர்.

புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அன்மோலின் கல்லீரல், இதய வால்வுகள், கணையம், சிறுநீரகங்கள் என பல்வேறு உடல் உறுப்புகள் சுமார் 34 பேருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டது.

இதன் மூலம் 21 வயது இளைஞன் 34 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளான்.

இந்தியாவில், உடலின் அதிகபட்ச உறுப்புகளை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த முதல் பெற்றோரே அன்மோலின் பெற்றோர்தான்.

எத்தனையோ மூளைச் சாவடைந்தவர்களின் குடும்பத்தினரை அணுகி, உடல் உறுப்பு தானம் குறித்து பேசினாலும், அவர்கள் மத இறுதிச் சடங்குகளைக் காரணம் காட்டி உறுப்பு தானத்துக்கு முன் வரமாட்டார்கள்.

ஆனால், இங்கு பெற்றோரே தானாக முன்வந்து தானம் அளித்துள்ளனர்.

இவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் என்று புலங்காகிதம் அடைந்துள்ளனர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்.

தங்கள் மகனின் மரணத்தின் மூலம் அவனது வாழ்க்கை முடிந்துவிடாமல், பலரது உருவில் அவன் வாழ வகை செய்துள்ளனர் என்று உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

12.12.12 தினத்தில் 12 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

12.12.12 தினத்தில் 12 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை


உலக மக்கள் மிக விஷேட நாளாக கருதிய நேற்று (12.12.12) 12 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்தது.
கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தை ஒன்றுக்கு 2 கைகளிலும் சேர்த்து 12 விரல்கள் இருந்தன.

அந்த குழந்தையின் தந்தை ஷானு, ஆட்டோ ஓட்டுநர் ஆவார். தாயின் பெயர் திவ்யா.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யாவுக்கு 18ம் திகதி பிரசவம் இருக்கும் என்று டொக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, உறவினர்கள் அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 12 விரல்கள் இருந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் இதனை அதிசயமாக பிறரிடம் தெரிவித்தனர்.

மேலும், இதை அறிந்த பலரும் அந்த குழந்தையை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டியிட போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் அறிவிப்பு

அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டியிட போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் அறிவிப்பு


அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்ச் மீது சுவீடன் நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு உள்ளதால், தற்போது பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் வருகிற 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதாவது, விக்கிலீக்ஸ் என்ற பெயரில் கட்சியை உருவாக்கி, போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

மேலும் தனது விக்கிலீக்ஸ் இணையத்தை விரும்பும் 1.7 மில்லியன் உறுப்பினர்களும், 2.1 மில்லியன் பேஸ்புக் ஆதரவாளர்களும், அவுஸ்திரேலியாவில் தனக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய முன்வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியா மாகாணத்தில் ஜுலியன் அசாஞ்ச் போட்டியிடக்கூடும் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

Wednesday, December 12, 2012

இந்த குருவியை கண்டால் லண்டனில் உள்ளவர்களுக்கு பயம் !

இந்த குருவியை கண்டால் லண்டனில் உள்ளவர்களுக்கு பயம் !
அட எதை தான் பார்த்து பயப்பிடுவது என்று ஒரு வரை முறையில்லையா என்று நீங்கள் கேட்க்கலாம். ஒரு பாம்பைப் பார்த்து, இல்லை என்றால் ஒரு புலியைப் பார்த்து பயப்பிடலாம். ஆனால் குருவி, கொக்கைப் பார்த்து எல்லாமா பயப்பிட முடியும் ? என்று நினைக்கதோணும். ஆனால் இங்கே நீங்கள் படத்தில் பார்க்கும் குருவி ஸ்கண்டி- நேவிய நாடுகளில் வசிக்கும் குருவி. நோர்வே, ஸ்வீடன், போன்ற கடும் குளிர் காலநிலை நிலவும் நாடுகளில் இக் குருவி வசிக்கிறது. குறிப்பாக இந் நாடுகளில் உயர் அழுத்தம் ஏற்பட்டால், அங்கே இருக்கும் குளிர் காற்று அப்படியே தாழ் அமுக்கம் ஏற்படும் நாடுகளுக்குச் சென்றுவிடும். தற்போது இதேபோன்றதொரு கால நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து, ஸ்கண்டி நேவிய நாடுகளில் உயர் அழுத்தம் ஏற்பட இருக்கிறது. மற்றும் பிரிட்டனில் தாழமுக்கம் ஏற்பட இருக்கிறது. எனவே அந் நாட்டல் உள்ள குளிர் அப்படியே பிரித்தானியாவுக்கு நகரவுள்ளது என்று, கால நிலை அவதான நிலையம் ஏற்கனவே கூறிவிட்டது.

ஆனால் அதற்கும் இக் குருவிக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா ? அட இந்தக் குருவி கடும் குளிரில் இருந்து பழக்கப்பட்டு விட்டது. கொஞ்சம் குளிர் குறைஞ்சாலும் அது தாங்காது. தற்போது ஏற்பட்டிருக்கும் கால நிலை மாற்றத்தை இது நன்றாக உணர்ந்துள்ளது. ஸ்கண்டி நேவிய நாடுகளில் இருந்து குளிர் காற்று லண்டன் நோக்கி நகரும் என்று, இக் குருவிக்கு நன்றாகத் தெரியும். ஏன் எனில் தற்போது காற்று நகர ஆரம்பித்துவிட்டது. எனவே குளிர் காற்று நகரும் திசையில் இவை பறந்து தற்போது லண்டன் வந்துவிட்டன. இவ்வகையான குருவிகள் பலவற்றை லண்டனில் தற்போது காணக்கூடியதாக உள்ளதாக, பறவைகளை அவதானிக்கும், அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வகையான குருவிகள், லண்டன் வந்தால், கூடவே குளிர் காலநிலையைக் கூடவே கொண்டுவரும் என்று, முதியவர்கள் சொல்வார்களாம். விஞ்ஞானிகள் சொல்வது ஒருபுறம் இருக்க, முதியவர்களிடமும் வயதானர்களிடம் மிகுந்த அனுபவம் இருக்கிறது என்பது தான் முக்கியமான விடையம் இல்லையா ?

அமெரிக்க அரசுக்கு ரூ.10,368 கோடி செலுத்த எச்எஸ்பிசி வங்கி ஒப்புதல்

நிதி முறைகேடு வழக்கில் அமெரிக்க அரசுக்கு ரூ.10,368 கோடி செலுத்த எச்எஸ்பிசி வங்கி ஒப்புதல்


அமெரிக்காவில் நிதி முறைகேடு புகாரில் சிக்கிய எச்எஸ்பிசி, அரசுக்கு இழப்பை சரிகட்ட ரூ.10,368 கோடி செலுத்த முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நிதிச்சந்தையை எச்எஸ்பிசி வங்கி மூலமாக ஈரானும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் மற்றும் போதை மருந்து கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க சட்ட விதிகளை மீறி, நிதிமுறைகேடுகளில் இந்த வங்கி ஈடுபட்டதாக அமெரிக்க நிதித்துறை கடந்த ஜூலையில் குற்றம்சாட்டியது.

இதனடிப்படையில் அந்த வங்கியின் கணக்குகள் பற்றி விசாரணை தொடங்கப்பட்டது. இதில், அமெரிக்க நிதி மோசடி தடுப்பு சட்டத்தை இந்த வங்கி பின்பற்றாதது தெரிய வந்தது.
இந்நிலையில், லண்டனை தலைமையிடமாக கொண்டு, ஆசியாவை மையமாக வைத்து செயல்படும் இந்த வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் கல்லிவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் எங்கள் வங்கியின் வர்த்தக பரிமாற்றத்தில் நடந்த விதிமீறல்கள் வருத்தத்துக்குரியது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் பார்த்து கொள்வோம். நிதிமோசடி விவகாரம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் சமரசத்துக்கு வந்துள்ளோம். இதன்படி, அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்காக ரூ.10,368 கோடியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

700 கிமீ பாயும் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

700 கிமீ பாயும் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றிஅணு ஆயுதங்களுடன் 700 கிமீ பாயும் அக்னி 1 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.அணு ஆயுதங்களுடன் தரையில் இருந்து புறப்பட்டு 700 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 1 ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள், 12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும், 1000 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனும் கொண்டவை.

ஒடிசா மாநிலம் வீலர் தீவில் உள்ள சோதனை தளத்தில் இன்று அக்னி 1 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அக்னி 1  ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி இதே தளத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கடற்பசுவின் மேல் சவாரி: கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பெண்

கடற்பசுவின் மேல் சவாரி: கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பெண்


அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் கடற்பசு ஒன்றின் மேல் சவாரி செய்து புகைப்படம் எடுத்த பெண்ணொருவரு மீது புளோரிடாவின் சட்டங்களை மீறியதாக குற்றஞ்சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

புளோரிடாவில் பாதுகாக்கப்பட்ட வேண்டிய உயிரினங்களில் ஒன்றான கடற்பசுவிற்கு தொந்தரவு கொடுத்தல், அதனைத் தாக்குவது, அதன் இருப்பிற்கு இடையூறு விளைவிப்பது போன்றவை சட்டவிரோத செயல்களாக சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுளளன.இந்நிலையில், இச் சட்டத்தைப் பற்றி அறிந்திராத மேற்படி பெண் கடற்பசுவின் மேல் படுத்திருந்து சவாரி செய்த தனது புகைப்படத்தைப் இணையப்பதிப்பில் ஏற்ற அது ஊடகங்களில் வெளியாகிறது.

இந் நிலையில் இந்தப் பெண் யாரென பொலிசார் தேட, அவராகவே தன்னை அறிமுகப்படுத்தி தான் பணிபுரியும் இடத்தையும் தெரிவிக்க அங்கு சென்ற பொலிசார் அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.


இந்த கடற்பசுக்கள் தொடர்பான சட்டவரைவு தனக்கு தெரியாது என்ற வாதத்தை அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட போதும் வழக்கிற்கான தீர்ப்பை நீதிமன்றமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்தாவரங்களையே உணவாக்கும் கடற்பசுக்கள் 12 அடி நீளம் வரை வளரும் என்பதோடு சுமார் 1,800 இறாத்தல் வரை எடையுடையவையாக வளரும். இரண்டு வருடங்களிற்கு ஒரு முறை குட்டியீனும் இவ்வினம் ஒரு தடவையில் ஒரு குட்டியை ஈனும்.

அது குரங்கல்ல… மகனைப் போலவே வளர்த்தேன்…

அது குரங்கல்ல… மகனைப் போலவே வளர்த்தேன்… என்னிடமே தந்துவிடுங்கள். ரொறன்ரோப் பெண்ணின் உருக்கமான வேண்டுகோள்.
ஐக்கியா என்ற அங்காடியின் வாகணத்தரிப்பிடத்தில் தவறவிடப்பட்டு வட அமெரிக்காவினது ஊடகங்களையெல்லாம் தன்வசம் இழுத்து வைத்திருக்கும் டார்வின் எனப் பெயரிடப்பட்ட குரங்குக்குட்டியை தன்னிடமே மீண்டும் தருமாறு அதன் உரிமையாளர் உளமுருகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உரிமையாளர் மேற்படி அங்காடிக்கு சென்றிருந்த சமயம் காரிலிருந்து தப்பி வெளியே வந்த மேற்படி குரங்குக்குட்டி வனவிலங்குப் பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அதுவரை உரிமையாளருக்கு நடந்தது ஏதுமே தெரியாது. எனினும் வனவிலங்கப் பாதுகாப்பு பிரிவிற்கு குரங்கை மீட்கச் சென்ற அவரிற்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு குரங்கு பறிமுதல் செய்யப்பட்டது.


இதற்கான காரணம் யாதெனில் ரொறன்ரோவின் நகராட்சிச் சட்ட வரையரைகளின் பிரகாரம் குரங்கு உள்ளிட்ட சில அசாதாரண விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்ப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு குரங்கு வளர்வதற்கேற்ற சீதோஸ்ன நிலையும் கனடாவில் இல்லையென்பதேயாகும்.

இந் நிலையில் தற்போது உலகெங்குமே யூரியூப் மூலம் வியாபித்திருக்கும் டார்வின் என்ற இக் குரங்கு வீட்டில் வளர்ந்த விதம் தொடர்பான வீடியோக்கள் அது மிகவும் செல்லப்பிள்ளையாவே வளர்ந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன.


இந்நிலையில் அந்தக் குரங்குக்குட்டியை ஒரு மகன் போலவே வளர்த்தேன், தயவு செய்து அதனை ஒரு தடவையாவது பார்க்க அனுமதியுங்கள் என அதன் உரிமையாளர் தற்போது குரங்குக்குட்டியுள்ள சரணாலயத்திற்குத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டார்கள்.

இருந்தபோதும் தான் மகனைப் போல வளர்த்த இந்தக் குரங்குக் குட்டியைப் மீளப்பெறாமல் விடுவதில்லையெனக் கங்கணம் கட்டிநிற்கின்றார் வழக்கறிஞரான மேற்படி பெண்மணி.

அமெரிக்க இராணுவத்தின் மிக-இரகசியமான விண்வெளி ஓடம் பறப்பில்

அமெரிக்க இராணுவத்தின் மிக-இரகசியமான விண்வெளி ஓடம் மூன்றாவது பரீட்சார்த்தப் பறப்பில்அமெரிக்க இராணுவத்தின் புரட்சிகளில் மற்றுமொறு மைல்கள் எனக் கருதப்படும் சிறிய விண்வெளி ஓடம் மூன்றாவது பரீட்சார்த்த பயணத்தை விண்வெளிக்கு மேற்கொண்டுள்ளது. இராணுவ மற்றும் விஞ்ஞான வெற்றியெனக் கருதப்படும் இந்த ஓடம் அற்லஸ் வீ என்ற ஒரு விண்வெளிச் செலுத்தியின் உதவியுடன் இன்று விண்ணிற்கு ஏவப்பட்டது.

எக்ஸ் 37பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஓடம் முதற்பறப்பில் சுமார் ஏழு மாத காலத்தை விண்வெளியில் செலவழித்திருந்தது. இரண்டாவது பறப்பில் சுமார் ஒருவருடத்தை விண்வெளியில் செலவளித்திருந்தது. தற்போதும் ஆட்களில்லாமல் அனுப்பப்படும் இந்த விண்வெளி ஓடம் எந்த நோக்கத்திற்காக அணுப்பப்படுகிறது என்பது தெரியவில்லையாயினும்,

விண்வெளியில் நிலைகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான செய்மதிகளை கண்காணிக்கும் உளவுபார்க்கும் சென்சர் ஆய்வை மேற்கொள்ளவே செல்கிறது என ஹேஸ்யம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 மீற்றர் நீளமும் முந்தைய விண்கலங்களின் அளவில் நான்கில் ஒரு பங்கேயுள்ளதுமான இந்த விண்கலம் மனிதர்களுடன் விண்வெளிக்குச் சென்று வரும் வடிவமைப்பைக் கொண்டுள்ளதாயினும் இப்போதைய பறப்புக்களில் விண்வெளி வீரர்கள் யாரும் செல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலம் பாரம்பரிய விண்கலத்தைப் போலல்லாது சிறிய காலத் தயாரிப்புடன் உடணயே விண்வெளிக்குச் செலுத்தக்கூடியதாகவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


தப்புச் செய்வதற்கு வெட்கப்படாத திருமணமான பெண்கள் – கலாச்சாரம் மாறுகிறதா?

தப்புச் செய்வதற்கு வெட்கப்படாத திருமணமான பெண்கள் – வட அமெரிக்கக் கலாச்சாரம் மாறுகிறதா?40 வயதான போலா 37 வயதான ஜில் இவர்கள் இருவருமே 60 வயதான அமெரிக்காவின் “நான்கு நட்சத்திரத்” தளபதியின் சாம்ராஜ்யத்திற்கே முடிவுகட்டிய மாற்றாறின் திருமதிகள். போலாவிற்கு இரண்டு பிள்ளைகள், ஜில்லிற்கு மூன்று பிள்ளைகள். இருவருக்குமே ஆரம்பர வாழ்க்கை இணைபிரியாத கணவர்கள். இவ்வளவற்றையும் விலை வைத்தே இருவரும் இந்த 60 வயது நாயகனின் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

இதுவே இப்போது பல கேள்விகளை வட அமெரிக்காவில் எழுப்பியுள்ளது. முன்பெல்லாம் திருமணமான ஆண்கள் இளம்பெண்களுடன் தொடர்பு கொள்ளவதே செய்தியாக இருந்து வந்தன. ஆனால் இப்போது பந்தாவிற்காகவும், அந்தஸ்தத்திற்காகவும், கமிராக்களின் வெளிச்சம் தங்களின் மீது படவேண்டும் என்பதற்காகவும் திருமணமான பெண்களே வயதான “கௌரவமான” ஆண்களை வலைபோட்டுப் பிடிக்கிறார்கள்.


நான்கு நட்சத்திரத் தளபதி டேவிட் பெட்ராஸ் கூட மண பந்தத்தில் இணைந்து 37 வருடங்கள். மனைவியுடன் எவ்வளவு பந்தம் என்பதை தனது பேட்டிகளிலெல்லாம் தெரிவித்த்திருந்தவர். அவருக்கே புதிய பாடம் கற்பித்த இந்த மாற்றாறின் திருமதிகளின் செயல் புதிய கலாச்சார மாற்றம் வட அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாக என்ற விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.

இதுகுறித்து குடும்பநல அறிவுரைஞர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இப்போது இப்படி தனது கணவருடன் வாழ்ந்து கொண்டே மாற்றானுடன் தொடர்பு கொள்வது ஒருவகை “விவாகரத்தாகவே” கருதப்பட வேண்டியது என்று தெரிவித்தார். கௌரவத்தைப் பேண குடும்பமாக வாழ்ந்தாலும், இருவருமே வேறு திசைகளிலேயே பயணிக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது என்றார்.

திருமண பந்தத்தை விலைபேசுபொருளாக வைத்து இவ்வாறு பெண்கள் துணிந்து செயற்படுவது குடும்பத்தைப் பிரிக்கும் பிள்ளைகளில் வாழ்க்கையைச் சீரழிக்கும் என்பதையெல்லாம் கருத்திலெடுக்காது இந்தப் பெண்கள் துணிவதற்கு காரணமே அவர்கள் கணவரை விடவும் புகழான ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்பதேயாகும்.


இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒரு உளவியளாலர் பெண்கள் சமூகத்தின் முன்மாதிரிகள். அவர்கள் தான் சமூகக்கட்டுப்பாட்டை, குடும்ப ஒழுக்கத்தை பேணி உறவுப்பாலத்தை வளப்பவர்கள். இந்த மாதிரி இரகசியத் தொடர்பால்கள் இதர திருமண முடித்த ஆண்களையும் ஒரு முறை சந்தேகம் கொள்ள வைத்தாலும் வைக்கும் எனத் தெரிவித்தார்.

கௌரவமான அல்லது சமூக அந்தஸ்த்துடன் இருக்கும் ஆண்களையே இவ்வாறு பெண்கள் குறிவைப்பது அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் ஒரு தற்காலிகப் பெருமிதத்தை அனுபவிக்கவே என்பதேயாகும்.

கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீனுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டல்

கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீனுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டல்இந்தியாவில் கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், திரிசூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ் கிணற்றில் இந்த கண்ணில்லாத கெளுத்தி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன் கட்டமைப்பில், கண்களே இல்லாத கெளுத்தி மீன்களை காண்பது அரிது.

இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும் நிலத்தின் அடியில் சேறும் சகதியும் இருக்கும் பகுதியில் வசிப்பவை ஆகும்.

அப்துல் கலாமின் பெயர் சூட்டல்

இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அறிவியல் துறைக்கு அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர் இந்த மீனினத்துக்கு சூட்டப்பட்டதாக இதில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

வாழும் இடங்கள்

இவ்வகையான மீனினங்கள் ஆழமான கிணறுகள், ஆழ் நீர் நிலைகளில் இருக்கும் சுரங்கங்கள் போன்ற இடங்களில் வாழும்.

கண்கள் இல்லாத இந்த வகையான கெளுத்தி மீன்கள் குறித்த கண்டுபிடிப்பும், அது தொடர்பிலான ஆய்வுகளும் மிகவும் ஆச்சரியம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்த குழுவில் இருந்த கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் கடல்சார் உயிரியல்துறையில் பேராசிரியராக இருக்கும் டொக்டர் பிஜாய் நந்தன் தெரிவித்தார்.

"மீனினம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த விடயங்களை மட்டும் இவ்வகையான அரிய மீன்களின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துவதில்லை.

அதற்கு அப்பாற்பட்டு, பல உயிரினங்கள் எப்படித் தோன்றின? எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது என்பது போன்ற நுண்ணிய விடயங்களை அறிந்து கொள்ளவும் இவ்வகையான கண்டுபிடிப்புகள் உதவுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மிகச் சிறியது


மிகவும் சிக்கலான சுற்றுச்சூழலில் வாழும், ரத்த மீன்கள் என்றழைக்கப்படும் இந்த அரிய வகை மீனினங்கள், ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் சுமார் 3.78 சென்டி மீற்றர் நீளம் உள்ளவை.

இந்தப் புதிய மீனினத்தின் புறத்தோற்றம் குறித்த அடிப்படை ஆய்வுகள் முடிந்து விட்டதாகவும், அதனுடைய மூலக் கூறுகள், அது தோன்றிய விதம் குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டொக்டர் பிஜாய் நந்தன் கூறுகிறார்.

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: ஜெசிந்தாவை பேட்டி கண்டவர்களின் கதை

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: ஜெசிந்தாவை பேட்டி கண்டவர்களின் கதை


ஊடக உலகில் பல மாற்றங்களிற்கு ஒரு மரணம் வழிவகுத்துச் சென்றதென்றால் அது இலண்டனில் இடம்பெற்ற ஜெசிந்தாவினுடைய மரணமாகத் தான் இருக்கும். ஊடகதர்மம் பற்றிய பல கருத்து வாதங்களை உருவாக்கிய இந்த மரணம் குறித்த விசாரணைகள் இன்னமும் முடியவில்லை.

இருந்தபோதும் இந்தப் பேட்டியை எடுத்த இரண்டு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் நேற்றைய தினம் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியை கண்ணீரோடு வழங்கினர். இந்த குரலை மாற்றி வைத்தியசாலைக்கு தொலைபேசி எடுப்பது என்ற நிகழ்வு ஒரு திட்டமிடப்படாதது என்று கூறினர்.

இருந்தபோதும் இவர்கள் இருவரும் மேற்படி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் என்ற பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதுடன், இவர்களிற்கு தொழில்நுட்ப ரீதியில் உதவிய ஏனைய கலைஞர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பி நகரைச் சேர்ந்த ஜெசிந்தாவின் முடிவு லண்டன் பொலிசாரினால் அவுஸ்திரேயா வரை விசாரிக்கப்படுவதற்கு இந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் தான் காரணம். அவர்களே இப்படியான ஒரு விபரீதம் இடம்பெறும் என்பதை தாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லையென்று தெரிவித்துள்ளனர்.


மர்மமான முறையில் மரணமடைந்த செவிலியரின் குடும்பத்துக்கு இழப்பீடு

பிரிட்டனில் மர்மமான முறையில் மரணமடைந்த செவிலியர் ஜெஸிந்தாவின் குடும்பத்துக்கு ரூ.2.84 கோடி இழப்பீடு வழங்க போவதாக அவுஸ்திரேலிய வானொலி நிறுவனம் அறிவித்துள்ளது.

வானொலி அறிவிப்பாளர்களால் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமது அறிவிப்பாளர்கள் செய்த தவறுக்குப் பொறுப்பேற்று செவிலியர் ஜெசிந்தாவின் குடும்பத்துக்கு ரூ.2.84 கோடி இழப்பீடு வழங்கப் போவதாக அவுஸ்திரேலிய வானொலி நிறுவனமான சதர்ன் கிராஸ் ஆஸ்டரியோ அறிவித்துள்ளது.

அதேபோல், இந்த ஆண்டு இறுதிவரை விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயையும் இந்தக் குடும்பத்துக்கு வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.

ஜெசிந்தாவின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள இந்நிறுவனம் சம்பந்தப்பட்ட 2 அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதையும் நிறுத்தி வைத்துள்ளது.