Wednesday, April 24, 2013

கடனில் சிக்கி தீவுகளையே விற்கும் கிரீஸ் நாடும்.. கத்தார் நாட்டு ஷேக்கும்!


கடனில் சிக்கி தீவுகளையே விற்கும் கிரீஸ் நாடும்.. கத்தார் நாட்டு ஷேக்கும்!


கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டு அரசு தனது சொத்துக்களையே விற்க ஆரம்பித்துள்ளது. இதில் கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான தீவுகள், கிரேக்க மாளிகைகள், கடற்கரைகளும் அடக்கம்.

கிரீஸ் கிரைசிஸ்.. கிரீஸ் பொருளாதார சரிவு.. கிரீஸ் திவால் ஆகிவிட்டது என்று பொதுவாக படிக்கிறோமே தவிர அதன் உண்மையான பிரச்சனை குறித்து முதலில் பார்ப்பது முக்கியம்.பென்ஷனால் மூழ்கிய தேசம் இது... 

கிரீஸ் நாட்டைப் பொறுத்தவரை தனியார்மயம்- சோஷலிசம் என்ற கலவையான பொருளாதார முறையே அமலில் உள்ளது. அங்கு சில வருடம் மட்டும் அரசு ஊழியாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுவோர் மிக அதிகம். காரணம், ஊதியத்துக்கு இணையான பென்ஷனை அந்த நாட்டு அரசுகள் அள்ளிக் கொடுத்தது தான். இதனால் கொஞ்ச நாள் வேலையில் இருந்துவிட்டு விஆர்எஸ் கொடுத்துவிட்டு வீட்டிலேயே ஜாலியாக அமர்ந்தபடி பென்ஷனையே சம்பளம் அளவுக்கு வாங்கிக் கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்பவர்கள் மிக அதிகம்.


வருமான வரி தானே.. கட்டுவோம் கட்டுவோம்... 

மேலும் அந்த நாட்டின் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளமும் மிக மிக அதிகம். 1999-2007ம் ஆண்டுக்கு இடையே இந்த ஊழியர்களின் ஊதியம் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. ஆனால், அரசாங்கத்தின் வரவுகள் அதிகரிக்கவே இல்லை. அது தேய்ந்து கொண்டே வந்தது. அதே போல வருமான வரி ஏய்ப்பும் அந்த நாட்டில் மிக மிக அதிகம். அதை அரசுகளும் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை.


இதுல ஒலிம்பிக் போட்டி வேற... 

இதனால் வரவுக்கு மீறி செலவுகள் அதிகரித்தபோதும் அதை சமாளிக்க ஏராளமான கடனை வாங்கியது கிரீஸ். ஒரு கட்டத்தில் அதன் கடன் அளவுகள் அதன் ஒட்டுமொத்த வருவாய், சொத்துக்களின் அளவைக் கூட தாண்டிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது கிரீஸ். இது தான் பொருளாதாரத்துக்கு சாவு மணி அடித்தது. கடன்களில் மூழ்கி இருந்த நாடு மேலும் கடனை வாங்கி ஒலிம்பிக்குக்காக பல நூறு பில்லியன்களை செலவு செய்து தனக்குத் தானே ஆப்பு அடித்துக் கொண்டது.


நாடே திவால்... 

ஆனாலும் மக்களை நெருக்கினால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது, ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால் அதை வெளியிலேயே காட்டாமல் கடனை மேலும் மேலும் வாங்கிக் குவித்தது அரசு. ஒருகட்டத்தில், வாங்கிய கடனுக்கு வட்டியைக் கூட கட்ட முடியாமல் கிரீஸ் நாடு திணறியது. அப்போது தான் கிரீஸ் நாட்டு நிதி நிலைமை வெளியுலகுக்கே தெரியவந்தது. இதனால் முதலில் அரசு வங்கிகள் திவால் ஆகின. தொடர்ந்து பிற வங்கிகளும், அரசு மற்றும் தனியார் தொழில்துறையும் முடங்கியது. முதலீடுகள் அடியோடு நின்றுபோய்விடவே வேலைவாய்ப்புகளும் குறைந்தன. இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து நாடு முழுவதும் வேலையில்லாதோர் போரட்டங்களில் குதிக்க அது அரசியல் சமூகப் பிரச்சனையாக மாறியது.


நிபந்தனை மேல் நிபந்தனை... 

வீட்டிலேயே ஜாலியாக படுத்தபடி பென்ஷனை வாங்கி செலவழித்தவர்களுக்கு அது நின்று போனது. ஊதியம் கூட தர முடியாமல் அரசு தவிக்கவே, மக்கள் உணவு வாங்கக் கூட காசில்லாமல் திணறும் நிலை உருவானது. கிரீஸ் நாட்டின் பொருளாதார திவால் நிலையால் யூரோவின் மதிப்பும் சேர்ந்து கீழே பாதளத்துக்குப் போகவே, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து கிரீஸ் நாட்டுக்கு உதவ முன் வந்தன. ஆனால், அவை மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தன.


வெடித்தன போராட்டங்கள்... 

அதன்படி முதலில் அரசின் செலவுகளை பாதியளவுக்கும் மேல் குறைக்க வேண்டும் என்றன. இதனால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்குக் கூட நிதியைக் குறைத்தது கிரீஸ். இதனால் மருத்துவமனைகளில் மருந்துகள் கூட இல்லாத நிலை உருவானது. அனைவரையும் ஒழுங்காக வருமான வரி கட்ட வைக்க வேண்டும் என்ற அடுத்த நிபந்தனையை ஐரோப்பிய யூனியன் விதித்ததால், மக்களிடம் வரி விஷயத்தில் அரசு கடுமை காட்ட ஆரம்பித்தது. வேலையே இல்லாமல் சோத்துக்கே திண்டாடும் வேலையில் வரி கட்டச் சொல்லி அரசு நெருக்கடி தந்ததால் போராட்டங்கள் வெடித்தன.


ஜெர்மனி போட்ட கண்டிஷன்... 

அடுத்ததாக கடன்களை உடனே அடைத்தால் தான் நிதியுதவிகளைத் தருவோம் என ஐரோப்பிய யூனியன் கூறிவிட, அதற்கான வேலைகளில் கிரீஸ் இறங்கியுள்ளது. இதற்காக அரசு வங்கிகள் கடன் பத்திரங்களை வெளியிட்டு மக்களிடமே பணத்தை வசூல் செய்து வெளிநாட்டுக் கடன்களை அடைக்க முயன்றது கிரீஸ்.

ஆனால், அதை வாங்க ஆள் இல்லை. இதனால் அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியன், குறிப்பாக அந்த யூனியனின் மிக பலம் வாய்ந்த நாடான ஜெர்மனி, போட்டுள்ள நிபந்தனையை அமலாக்கும் வேலையில் இறங்கியுள்ளது கிரீஸ். இந்த நிபந்தனையின்படி நாட்டின் அனைத்துத் துறைகளையும் கிரீஸ் தனியார்மயமாக்க வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே 10 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி தருவோம் என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறிவிட்டது ஜெர்மனி.


அரசின் சொத்துக்கள் ஏலத்துக்கு... 

இந்த நிபந்தனையை அமலாக்க தனது சொத்துக்களையே, கிரீஸ் தனியாருக்கு விற்க ஆரம்பித்துள்ளது. அதாவது நாட்டையே விற்க ஆரம்பித்துள்ளது. இதன்படி தன்னிடம் உள்ள 70,000 அரசுச் சொத்துக்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது கிரீஸ் நாடு. இதில் மிகப் பழமை வாய்ந்த கிரேக்க மாளிகைகள், கடற்கரைகள், தீவுகள், அரசின் கேளிக்கை விடுதிகள் ஆகியவையும் அடங்கும். ரோட் ஐலெண்ட் எனப்படும் மிகப் பெரிய, மிகப் பிரபலமான தீவையும் விற்க முடிவு செய்துள்ளது கிரீஸ்.


ராணி எலிசபத்தின் கணவரின் மாளிகையும் விற்பனை... 

அதே போல ஏஜியன் கடல் பகுதியில் உள்ள மிகப் பெரிய கடற்கரையையும் விற்கிறது கிரீஸ். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கமாகும். மேலும் கடல் சர்பிங்குக்கு பேர் போன peninsula of Prasinisi கடற்கரையையும் விற்கப் போகிறது அந்த நாடு. மேலும் இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் கணவரான மன்னர் பிலிப் பிறந்த கிரேக்க மாளிகையும் விற்பனைக்கு வந்துள்ளது.


காத்தார் நாட்டு ஷோக்கின் ஷோக்கு!: 

இதில் கத்தார் நாட்டைச் சேர்ந்த பில்லியனரான ஷேக் ஒருவர் கிரீஸ் நாட்டின் 6 தீவுகளை விலைக்குப் பேசிவிட்டார். அதை விரைவில் வாங்கவுள்ளார். அதே போல ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் தனது மகளுக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க ஒரு தீவை 100 மில்லியன் டாலருக்கு விலை பேசி முடித்துள்ளார்.


100ல் 25 பேருக்கு வேலை இல்லை 

கிரீஸ் நாட்டில் இப்போது 100 பேரில் 25 பேருக்கு வேலை இல்லாத நிலையில், வேலையில் இருப்போரில் 50 சதவீதம் பேருக்கு பாதி சம்பளமே வரும் நிலையில், இந்தக் கொடுமைகளை எல்லாம் அந்த மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2ம் உலகப் போரில் ஹிட்லர் கிரீஸ் நாட்டை ஆக்கிரமித்தார். இப்போது ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலும் அதையே தான் செய்கிறார். அவர் 2வது ஹிட்லர் என்கின்றனர் கிரீஸ் நாட்டினர். ஆனால், இந்த ஹிட்லர் நமது ஒரே ஆபத்பாந்தவன் என்கிறது கிரீஸ் அரசு. உண்மை தானே.


Tuesday, April 23, 2013

மனித கம்ப்யூட்டர், கணித மேதை சகுந்தலா தேவி மரணம்


மனித கம்ப்யூட்டர், கணித மேதை சகுந்தலா தேவி மரணம்


மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80. கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார்.

சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சகுந்தலா தேவி கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் 3 வயதில் தனது தந்தையுடன் சீட்டாட்டம் விளையாடியபோது தான் அவரது கணிதத் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு அவர் தனது 6வது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தினார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் தனது கணிதத் திறமையை காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அவர் கடந்த 1971ம் ஆண்டில் 201 இலக்கங்கள் கொண்ட எண்ணின் 23வது வர்க்கமூலத்தை மனக்கணக்குப் போட்டு தெரிவித்தார். பின்னர் 1980ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையில் தலா 13 இலக்கம் கொண்ட 7,686,369,774,870 x 2,465,099,745,779 ஆகிய எண்களை வெறும் 28 நொடியில் பெருக்கி விடை அளித்தார்.

எண் விளையாட்டு, எண் ஜோதிடம், திகைக்க வைக்கும் கணித உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியவர் சகுந்தலா தேவி. அவரது கணித திறமைக்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/22/india-human-computer-shakuntala-devi-no-more-173863.html

விண்வெளி குப்பைகளால் விண்கலங்களுக்கு ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


விண்வெளி குப்பைகளால் விண்கலங்களுக்கு ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


விண்வெளியில் சுற்றிவரும் குப்பைகளால் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு என பல காரணங்களுக்காக எண்ணெற்ற செயற்கைக் கோள்களை நாம் பூமியிலிருந்து ஏவி வருகிறோம். இதற்காக ராக்கெட்டுகளை பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு விண்வெளிக்கு நாம் அனுப்பிய ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்கள், விண்கலங்கள் ஏராளமாக அங்கு சுற்றிக் கொண்டிருக்கின்றன.

அதில் காலாவதியான விண்கலங்கள், செயற்கைக் கோள்கள், அதை ஏற்றிச்சென்ற ராக்கெட்டுகள் மற்றும் வெடித்த சிதறி பாகங்களும் அண்ட வெளியில் சுற்றி வருகின்றன.

குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு 'லிப் டூ லிப்' வாழைப்பழம் தரும் சாமியார்...!!


குழந்தை வரம் கேட்கும் பெண்களுக்கு 'லிப் டூ லிப்' வாழைப்பழம் தரும் சாமியார்...!!


குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களிடம் சென்றால் அவர்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சியளிக்கிறார் கோவை அருகே உள்ள சாமியார். திருமணமான தம்பதியர்களுக்கு ஒரு வருடத்திற்கு குழந்தை பிறந்து விட்டால்தான் போச்சு. இல்லை என்றார் உறவினர்கள், நண்பர்களின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக பலவித சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் இருக்கின்றனர்.

ஒரு சிலர் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் சாமியாரை நாடிச் செல்வார்கள். முதல் இரண்டு ரகத்தினரையாவது ஒரு வழியில் சேர்க்கலாம். ஆனால் பிள்ளை வரத்திற்காக சாமியாரிடம் செல்பவர்களை என்னவென்று சொல்வது..


லிப் டூ லிப் டிரான்ஸ்பர் 

கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியாரோ பிள்ளை வரம் தரும் சாமியாராக இருக்கிறாராம். இதற்காக அவரை நாடிச்செல்லும் பக்தர்களுக்கு வித்தியாசமான முறையில் வரம் தருகிறார். எப்படி என்று கேட்கிறீர்களா? வாழைப்பழத்தை சாமிக்கு காணிக்கையாக படைப்பார்கள். அப்போது அதை எடுத்து சாப்பிடும் சாமியார் நன்றாக மென்று அதை வரம் கேட்கும் பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார். இந்த சேவைக்கு! பெயர் கவாள சேவையாம்.


அர்ஜூன் மனிஷா கொய்ராலா 

முதல்வன் படத்தில் உப்புக்கருவாடு பாட்டில் ஒரு சீன் வரும்... வெத்தலையை நன்றாக மென்று தின்னும் மனீஷா கொய்ராலா அதை அர்ஜூன் வாயில் டிரான்ஸ்பர் செய்வார். அப்படித்தான் வாழைப்பழத்தை ஊட்டுகிறார் சாமியார்.


ஆண்களுக்கு எலுமிச்சை 

இந்த லிப் டூ லிப் வரம் எல்லாம் பெண்களுக்கு மட்டும்தானாம். அப்போ ஆண்களுக்கு என்ன என்று கேட்கிறீர்களா? எலுமிச்சை கனியை வாயில் வைத்து துப்புவார் சாமி. அதை பிள்ளை இல்லாத ஆண்கள் துண்டை வைத்து கேட்ச் பிடிக்க வேண்டும். (இது எப்டி!)

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/23/tamilnadu-lip-to-lip-priest-attracts-childless-couples-near-kovai-173959.html#slide144746கூகுள் சர்ச்சில் ஆபாச தகவல்கள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

கூகுள் சர்ச்சில் ஆபாச தகவல்கள் வராமல் இருக்க என்ன செய்யலாம்?


கூகுள் தளத்தில் எதையாவது தேடும்பொழுது சில நேரம் ஆபாச தகவல்கள் முன்வந்து நிற்கும். கல்லூரிகள், அலுவலகங்கள் என நண்பர்களுடன் தேடும்பொழுது இம்மாதிரி நிகழ்ந்தால், அது நமக்கு சங்கடத்தை ஏற்படுவத்துவதாகவே அமையும். இதுகூட பரவாயில்லை தோழியுடனோ அல்லது தங்கையுடனோ இருக்கும்பொழுது ஏதாவது ஆபாச தகவல்கள் கூகுள் நமக்கு காட்டிவிட்டால் என்னாகும்? இந்த சங்கடங்களை தீர்க்கவும் கூகுள் வழிவகை செய்கிறது.


'தல' அஜித்...சில ஃபேஸ்புக் பக்கங்கள்...

 பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைகள் தேடலிலும் ஆபாச தகவல்கள் வராமல் இருக்கவேண்டியதும் அவசியமே! இப்பொழுது கூகுள் தேடலில் இருந்து ஆபாச தகவல்கள் வராமல் லாக் செய்வது எப்படி என்பதை விளக்கியுள்ளோம். தகவல்கள் கீழே!


விவரங்களை உள்ளிட்டு லாகின் செய்யுங்கள். பின்னர் ஓரத்தில் இருக்கும் ஆப்ஷன்ஸ் பொத்தானை அழுத்துங்கள். கிடைக்கும் மெனுவிலிருந்து சர்ச் செட்டிங்ஸ் என்பதை தெரிவுசெய்க.
அதில் Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும்.

பின்னர் Safe search Locked என்று தோன்றும் சரியாக லாக் ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு கூகுள் வழங்காது.

இதன் பின்னர் கூகுள் சர்ச் பக்கத்தில் நீங்கள் லாக் செய்ததன் அடையாளமாக வண்ண பந்துகள் தோன்றும். நீங்கள் இதனை 'அன்லாக்' செய்ய மீண்டும் சர்ச் செட்டிங்ஸ் சென்று 'அன்லாக்' என்று மாற்றிவிடுங்கள். கூகுள் கண்டிப்பாக ஒரு சிறந்த தேடுபொறிதான்...

கிணறுகளில் ஒருவகை அமிலம் கண்டுபிடிப்பு !

கிணறுகளில் ஒருவகை அமிலம் கண்டுபிடிப்பு !


சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தக் கூடிய மெலக்ஸின் வகையான அமிலம் அநுராதபுரம் பிரதேச கிணறுகளில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுர மாவட்டத்தில் சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோயாளர்கள் அதிக அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதனை அடுத்து தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒயாமடுவ, தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமிலம் எவ்வாறு கிணற்று நீரில் கலக்கிறது என்பது தொடர்பாக இதுவரை எதுவும் அறியப்படவில்லையாம்.

Monday, April 22, 2013

“மனித கம்ப்யூட்டர்” சகுந்தலா தேவி காலமானார்

“மனித கம்ப்யூட்டர்” சகுந்தலா தேவி காலமானார்
மனித கம்ப்யூட்டர் என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி பெங்களூருவில் காலமானார்.
மனித கம்ப்யூட்டர் என கணித வல்லுனர்களால் புகழப்பட்டவர் கணித மேதை சகுந்தலா தேவி(வயது 80).

மிக சிக்கலான கணிதங்களுக்கு மின்னல் வேகத்தில் விடை அளிப்பதில் வல்லவர்.

இவரது கணித திறமைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இவை தவிர பன் வித் நம்பர்ஸ், அஸ்ட்ரலாஜி பார் யூ உள்ளிட்ட பிரபலமான பல கணித நூல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வந்த சகுந்தலா தேவி கடந்த சில நாட்களாகவே சுவாச கோளாறால் அவதிப்பட்டார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா, நேற்று காலமானார்.

திருப்பதிக்கு 16கோடி ரூபாய் காணிக்கை வழங்கிய இந்தியர்

திருப்பதிக்கு 16கோடி ரூபாய் காணிக்கை வழங்கிய இந்தியர்


பணக்கார கோவிலாக பிரகாசிக்கும் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு, இப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் 16 கோடி ரூபாய் காணிக்கை வழங்கியுள்ளார்.
திருப்பதி திருமலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை காணிக்கையாக வழங்குகின்றனர்.

இவ்வாறு அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் எம்.ராமலிங்க ராஜு, ரூ.16 கோடிக்கான வரைவோலையை திருமலை- திருப்பதி தேவஸ்தான தலைவர் கே.பாபிராஜு நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு ஆகியோரிடம் வழங்கினார்.

அந்தத் தொகையில் 11 கோடி ரூபாயில் சுவாமிக்கு 35 கிலோ தங்கத்தினால் சகஸ்ர நாம மாலை செய்ய வேண்டும் என்றும், மீதி 5 கோடி ரூபாயை, திருச்சானூர் அருகே பக்தர்களுக்காக அன்னதான கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ராமலிங்க ராஜு கேட்டுக்கொண்டார். வெளிநாடு வாழ் பக்தர்கள் அளித்த காணிக்கையில், இதுதான் அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?

கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?


கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது. இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

Sunday, April 21, 2013

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 200ஆனது!


சீனாவில் கடுமையான நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 200ஆனது! 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்!சீனாவின் சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சிச்சுவான் மாகாணம் லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் நேற்று காலை காலை 8.02 மணிக்கு 13 கி.மீ. ஆழத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் அனைவரும் கட்டடங்களிலிருந்து வெளியேறி சாலையில் குவிந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிச்சுவான் மாகாண தலைநகர் செங்டுவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. அங்கிருந்த விமான நிலையத்தில் உள்ள கட்டடங்களில் சிறிய அளவில் சேதமேற்பட்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. லெஷான், சோங்கிங், குயிசோவ், கான்சு, ஷான்ஸி, யுனான் உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 6000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் யான் நகருக்கு விரைந்துள்ளனர். நிலைமையை நேரில் பார்வையிட சீனப் பிரதமர் லீ கெகியாங் யான் நகருக்குச் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

இதற்கு முன்பு, இதே சிச்சுவான் மாகாணத்தில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 அலகுகளாக பதிவானது குறிப்பிடத்தக்கது.1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்!


1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்!பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமியைப் போன்ற இரு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள கெப்லர் 62 விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்வெளியை துல்லியமாக படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள போட்டோவில் பூமியை போன்று 2 கிரகங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாறைகள், கடல்கள் மற்றும் ஈரத் தன்மையுள்ள காற்று போன்றவை தெரிய வந்துள்ளது. இந்த கிரகங்களில் நீர் இருப்பது கூட தெளிவாக தெரிகிறது.


எனவே, இவை மனிதர்கள் வாழ முற்றிலும் தகுதியானவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விண்வெளி அறிஞர்கள். இந்த கிரகங்கள் புதன் கிரகத்தில் இருந்து 3 கோடியே 70 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும், வியாழன் கிரகத்தில் இருந்து 6 கோடியே 50 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும் உள்ளன. மேலும், அங்கு உயிரினங்கள் வாழ தகுதியுடைய தட்பவெப்ப நிலை நிலவுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சூரியனை விட சிறியதாகவும், மங்கலாகவும் அவை காணப்படுகின்றன. இந்த 2 புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து கெப்லர் விண்கல ஆய்வு திட்ட தலைவர் வில்லியம் போருக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'கெப்லர் டெலஸ் கோப் கண்டு பிடித்துள்ள பல கிரகங்களில் இது மிகவும் பயனுள்ளது,' என்றார்.
சிரியாவில் யுத்தம் புரியும் போராளி இயக்கத்துக்கு அமெரிக்கா $123 மில்லியன் நிதியுதவி!


சிரியாவில் யுத்தம் புரியும் போராளி இயக்கத்துக்கு அமெரிக்கா $123 மில்லியன் நிதியுதவி!சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப் போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஒரு நாட்டுக்கு எதிராக உள்நாட்டில் யுத்தம் புரியும் போராளி இயக்கத்துக்கு அமெரிக்காவின் வெளிப்படையான நிதியுதவி அறிவித்தல், ஆச்சரியமானது.

தற்போது 123 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் எனவும், விரைவில் இந்தத் தொகை இரு மடங்கு ஆக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

“இந்த பணம், யுத்தம் புரிவதற்கான ஆயுதங்களாக வழங்கப்பட மாட்டாது” என அறிவித்துள்ள அமெரிக்கா, ஆனால், யுத்தத்தின்போது பயன்படுத்தப்படும் பொருட்கள் நிதியுதவியில் அடங்குகின்றன.

உடல் கவசங்கள் (body armor), இரவுத் தாக்குதல்களின் போது இருளில் பார்க்கக்கூடிய கருவிகள் (night vision goggles), தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும் கவச வாகனங்கள் (armored vehicles) ஆகியவற்றை போராளி இயக்கத்துக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.

அதே நேரத்தில், சிரியாவில் உள்ள போராளி இயக்கங்களுக்கு அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., ‘சுற்றுப் பாதையில்’ ஆயுதங்கள் வழங்கியதாக ஒரு தகவலும் உண்டு.

லுஃப்தான்சா விமானங்கள் நாளை பறக்காது! அடுத்த சில தினங்களுக்கு தவிர்ப்பது நல்லது!!


லுஃப்தான்சா விமானங்கள் நாளை பறக்காது! அடுத்த சில தினங்களுக்கு தவிர்ப்பது நல்லது!!ஜெர்மன் விமான நிறுவனம் லுஃப்தான்சா, நாளை (திங்கட்கிழமை) தமது அநேக விமான சேவைகளை கேன்சல் செய்வதாக அறிவித்துள்ளது. விமான நிறுவன ஊழியர்கள் நாளை ஒருநாள் ‘எச்சரிக்கை வேலைநிறுத்தத்தில்’ ஈடுபட உள்ள காரணத்தாலேயே, விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

லுஃப்தான்சா விமான நிறுவன தரை ஊழியர்கள் (ground staff) தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. அடுத்த ஆண்டு 5.2 சதவீத ஊதிய உயர்வு, மற்றும் பணி நிரந்தர வாக்குறுதிகளை கோரியுள்ளது தொழிற்சங்கம்.

இந்த கோரிக்கைக்கு நிர்வாகம் சம்மதிக்கவில்லை. அதையடுத்து நாளை ‘எச்சரிக்கை வேலைநிறுத்தம்’ நடைபெறுகிறது. அதன் பின்னரும் நிர்வாகம் இணங்கி வராவிட்டால், நிரந்தர வேலை நிறுத்தம் அறிவிக்கப்படும் என தொழிற்சங்கம் கூறியுள்ளது.

நாளை ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து செல்லவேண்டிய 1650 ஐரோப்பிய விமான சேவைகளில் வெறும் 20 சேவைகளும், 50 சர்வதேச விமான சேவைகளில் 6 சேவைகளும் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகூட நாளை ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அடுத்த சில தினங்களுக்கு லுஃப்தான்சாவை தவிர்ப்பது நல்லது.