Wednesday, August 6, 2014

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்


ஆப்ரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா வைரஸ். இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய ஆப்பிரிக்கா நாடுகளில் 1,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 672 பேர் பலியாகியுள்ளனர்.

பரவிய விதம்

விலங்கிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியுள்ளது. குறிப்பாக பழம் தின்னி வவ்வாலிலிருந்து பரவியுள்ளது.

இவ்வைரஸ் தாக்கியுள்ள மனிதர்களிலிலிருந்து மற்ற மனிதர்களுக்கு ரத்தத்தின் மூலம் பரவுகிறது.

எபோலா வைரஸ் தாக்கினால் குடும்ப உறுப்பினர்களும், சிகிச்சை அளிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் முதன்முதலில் பரவியதால் இதற்கு "எபோலா வைரஸ்" என பெயரிடப்பட்டது.

அறிகுறிகள்

அறிகுறி 1: காய்ச்சல், பலவீனம், தலை, தசை, தொண்டை வலி. 
அறிகுறி 2: மத்திய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. 
அறிகுறி 3: நோய் முற்றிய நிலையில் ரத்தவாந்தி, கண், மூக்கு, வாயில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

உலக நாடுகள் தீவிரம்

இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

பாதிப்பிற்கு தீர்வு காண்பது எளிதல்ல என்பதால் மேற்கு நாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வைரஸ் பாதிப்பு தொற்று பரவுவதை தடுக்க அந்நாட்டின் சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிதியுதவி

எபோலா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவம் அளித்து, நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் அந்நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது குறித்து உலக வங்கியின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது.

இதில் 35 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு, எபோலா நோய் பாதித்த 3 மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு ரூ.1,200 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை உலக வங்கி அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

நோய் தாக்கியவரிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும்.

மருத்துவர்களும், குடும்ப உறுப்பினர்களும் தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்த பிறகே அருகே, அவர்களின் அருகே செல்ல வேண்டும்.

நோய் தாக்குதலால் பலியான உடலை, மருத்துவரின் அறிவுரையுடன் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல் 
கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.

இயற்கை விவசாயம் எங்கே? 
இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

வாரந்தோறும் சிக்கன் அவசியமா? 
அதேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல் தாக்கத்தால் வாரம்தோறும் வீட்டில் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கியதன் விளைவு, நாட்டு கோழிகள் பற்றாக்குறையானது. இதனால், கோழியின் உற்பத்தியை பெருக்க பிராய்லருக்கு நகர்ந்தது சமூகம்.

ஆன்ட்டி பயாட்டிக் ஆபத்து 
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த  முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு மருந்து வேலை செய்யாது 
கறிக்கோழிக்கு அதிகம் ஆன்ட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் உடலில் கலந்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. ஆனால் பிராய்லர் கோழி சாப்பிடுவோருக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது. இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகமானால் உடல் சோர்வுறும், பல பக்க விளைவுகள் ஏற்படும்.

பரிசோதனை கூடத்தில் ஆய்வு 
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் அவை ஆய்வு செய்யப்பட்டன. அந்த கோழிகளினர் ஈரல், தசை, கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அளவுக்கு அதிகம் 
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்றார்.

கோழி உடலில் பல வகை மருந்துகள் 
பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 5 வகை மருந்துகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன அனைத்து கோழிகளிலும் காணப்பட்டன. அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் உறுதியாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதன் மாறிவிட்டான் 
சிக்கனால், மனிதர்கள் பாதிக்கப்படுவதை சிஎஸ்இ ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

டைபாய்டு ஏற்பட வாய்ப்பு 
சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சிஎஸ்இ எச்சரித்துள்ளது. இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக மனித குலம் திரும்பாமல் இருக்க வேண்டும்.


Friday, May 9, 2014

அமெரிக்க உளவுத்துறை NSA, மர்மமாக ஏதோ சொல்லி உங்களை சூடேற்றுகிறார்கள், இல்லையா?

அமெரிக்க உளவுத்துறை NSA, மர்மமாக ஏதோ சொல்லி உங்களை சூடேற்றுகிறார்கள், இல்லையா?அமெரிக்க உளவுத்துறை NSA, விரிவாக்கம், National Security Agency, தமது ட்விட்டர் பக்கத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை ட்விட் ஒன்றை தட்டிவிட்டது. அதில், “tqfjhcdlfdbte” என எதுவுமே புரியாத சொற்களை சேர்த்த வாக்கியங்கள் (மேலே போட்டோ பார்க்கவும்) இருந்தன. இதைப் பார்த்து இன்டர்நெட்டே கிறுகிறுத்து போயிருக்கும்.

என்னங்க சமாச்சாரம் இது?

1) சனி, ஞாயிறு நடந்த பார்ட்டிகளில் ஏற்பட்ட போதை தெளியாமல், திங்கள் காலை NSA ஆபீஸூக்கு யாரோ வந்து விட்டார்களா?

2) ஆபீஸில் யாரோ ஒருவருடைய கம்ப்யூட்டர் கீ-போர்ட்டின் மீது,  பூனை ஓடியதா?

3) எட்வார்ட் ஸ்னோடன் ரகசியங்களை அடித்துச் சென்ற ரகசியங்களால் விரக்தியில் உள்ள ஏஜென்சி, அந்த குழப்பத்தில் தமது அதி ரகசிய சங்கேத வார்த்தை ரகசியம் ஒன்றை கை தவறி, நெட்டில் தட்டிவிட்டு விட்டார்களா?

4) அல்லது, நம்மூரில் நடப்பது போல, அமைச்சரின் மூணாவது சம்சாரத்தின், மூணாம் கிளாஸ் படித்த சித்தி பொண்ணு, சிபாரிசில் பணியில் சேர்ந்து, அந்தம்மா இப்படித்தான் வேலை பழகுகிறாங்களா?

உளவுத்துறைக்கு வெளியேயும் துடிப்பான ஆட்கள் உள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, NSA-வின் இந்த ட்வீட் வெளியாகி ஓரிரு மணி நேரத்திலேயே, இந்த மர்மத்துக்கான விடை தெரியவந்து விட்டது! அடேங்கப்பா!

மர்மத்துக்கான விடை என்னவென்றால், கோட்-வேர்டுகளில் எழுதப்படும் ரகசிய மெசேஜ்களை உடைக்கக்கூடிய ஆட்களை பணியில் அமர்த்த தேடிக்கொண்டு இருக்கிறது உளவுத்துறை. அதற்கான விளம்பரத்தை, கோட்-வேர்டுகளிலேயே கொடுத்தால், எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள் என்பதை பார்க்கும் முயற்சிதான் இது.

அதாவது, “இதையே உங்களால் புரிந்துகொள்ள முடியலைன்னா.. வேலைக்கு அப்ளை பண்ணாதிங்க பிளீஸ்” என்கிறார்கள்.

கோழி கிளறியதுபோல எழுத்துக்களை குலுக்கிப்போட்டு இவர்கள் ட்வீட் செய்த மெசேஜிலுள்ள எழுத்துக்களை ஒரு ஃபுளோவில் வெவ்வேறு எழுத்துக்களாக ரீபிளேஸ் செய்தால், சரியான ஆங்கில சொற்களாக மாறி, முழுமையான வாக்கியங்களாக அவை அமையும். அதாவது, அவர்களது ட்வீட் தனவலை டீ-கோடிங் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் அதன் அர்த்தம்:

NSA-வில் எப்படி வேலை எடுக்கலாம் என அறிய ஆவலா? மே மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் அனுப்புட் ட்வீட்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் தேசத்தை பாதுகாக்க, எம்முடன் (NSA) பணியில் இணைய வாருங்கள்”

வேலைக்கு ஆளெடுக்கிறாங்க சார்!

பல மீடியாக்கள் இது தொடர்பாக உளவுத்துறை NSA-வை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர்களது செய்தி தொடர்பாளர் மார்சி மில்லர், “அந்த ட்வீட், புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் எமது அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது போல, இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு ட்வீட் வெளியாகும்.

எமது உளவுத்துறை சங்கேத சொற்களை உருவாக்குவதிலும், உடைப்பதிலும் கில்லாடிகள் என்பது தெரிந்த விஷயம்தானே. அந்த திறமையுடைய புதியவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பதற்காகவே, சங்கேத சொற்களில் இப்படி ஒருவித விளம்பரம் செய்கிறோம்.

திறமைசாலிகள் எமது ட்வீட்களை புரிந்து கொண்டு, இம்மாத முடிவில், பணிக்கு எங்கே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிந்து கொள்வார்கள். நாம், அவர்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

உளவுத்துறை இப்படியான திறமையுள்ள ஆட்களை தேடித்தேடி பணியில் அமர்த்துவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. கம்ப்யூட்டர் ஹாக்கர்கள் பலரையே பணியில் அமர்த்தியுள்ளார்கள் அவர்கள். ஆனால், அமெரிக்க உளவுத்துறையில் பணிபுரிய செக்யூரிட்டி கிளியரன்ஸ் தேவை அல்லவா? சிறு குற்றங்கள் புரிந்திருந்தால்கூட செக்யூரிட்டி கிளியரன்ஸ் கிடைக்காது அல்லவா?

அதற்கும், NSA-வின் இணையத்தள recruiting page-ல் கீழ்வரும் குறிப்பு உள்ளது:

“If you have a few, shall we say, indiscretions in your past, don’t be alarmed. You shouldn’t automatically assume you won’t be hired. If you’re really interested, you owe it to yourself to give it a shot.”

நீங்கள் கடந்த காலத்தில் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால், அதற்காக உங்களை நிராகரிக்க மாட்டோம் என்பதை டிப்ளமேட்டிக்காக சொல்லியிருக்கிறார்கள், அந்தக் குறிப்பில்! “கிரிமினல் ரிக்கார்ட் இருந்தாலும் வெல்கம்”

இவுக போகும் ரூட்டை பார்த்தால், அமைச்சரின் மூணாவது சம்சாரத்தின் மூணாம் கிளாஸ் படித்த சித்தி பொண்ணு, சிபாரிசில் பணியில் சேர்வது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறதே!


மனைவிகள் தங்களது கணவன்களை ஏமாற்றுவது நிச்சயம்! ஆய்வில் தகவல்

மனைவிகள் தங்களது கணவன்களை ஏமாற்றுவது நிச்சயம்! ஆய்வில் தகவல்பிரிட்டனில் மனைவிகள் தங்களது கணவர்களை ஏமாற்றுவது நிச்சயம், ஏனெனில் அவர்களது தாய்கள் தங்களது கணவர்களை ஏமாந்தியிருப்பதின் காரணமாக என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

பிரிட்டனில் 73 சதவிகித கணவன் – மனைவிகள் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதன் காரணம் அவர்களது தாய், தனது வாழ்க்கைத் துணையான கணவணை ஏமாற்றியதன் நிமித்தமே என்று தெரியவந்துள்ளது.

அதிலும் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், தங்களுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட  வலைதளம் ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டு உறவில் ஈடுபடுகின்றனர்.

இந்த வலைதளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மேலும் வலைதளத்தில் பதிவு செய்தவர்களில் 2000 பேரை வைத்து எடுத்த கருத்துக் கணிப்பில் 2000 பிரித்தானியர்களில், திருமணத்திற்கு பின்னர் வெளியே வைத்துள்ள உறவுகளை கணக்கிட்டுப் பார்க்கப்பட்டது.

இதி்ல் 10ல் 7 மனைவி மார்கள் கணவனை ஏமாற்றி, திருமண வாழ்க்கையை நியாயப்படுத்தும் வகையில், தங்களது தாய்களும் இதே போன்று இரகசிய வாழ்க்கையில் ஈடுபட்டதால், நாங்களும், அதையே பின்பற்றுகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதே போன்று கருத்துக்கணிப்பை கணவர்களிடம் எடுத்த பொழுது, அவர்கள், தங்களது தந்தையர்களின் இரகசிய உறவை கூறி நியாயப் படுத்தியுள்ளனர்.

எகிப்தில் வரலாற்று சிறப்புமிக்க கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் வரலாற்று சிறப்புமிக்க கல்லறை கண்டுபிடிப்பு


எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கு பகுதியில் கி.மு.1100 ஆம் காலத்தை சேர்நத கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கல்லறை பழங்காலத்தில் ராணுவப் பெட்டகங்களை பாதுகாக்கும் காவலாளி ஒருவனுடையதாகும். குறித்த காவலாளி பல்வேறு நாடுகளுக்கு அரச தூதராகவும் இருந்துள்ளார். அதற்கான குறிப்புகளும் அந்த கல்லறையின் கல்வெட்டில் காணப்படுகின்றன. இங்குதான் பல படிக்கட்டு அமைப்புகளைக் கொண்ட பிரமிடுகளில் அமைந்துள்ளன.

இங்குள்ள சக்காரா என்ற மிகத் தொன்மையான கல்லறைப் பகுதியானது மெம்பிஸ் நகர அரசர்கள் பலரையும், உயர் குடியினரையும் அடக்கம் செய்த இடுகாட்டுப் பகுதியாகும்.

இந்நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்லறை கல்வெட்டு மூலம் சக்காராவின் பண்டைய வரலாறை ஆராய்ச்சி செய்வதற்கு உதவியாக இருக்கும் என கெய்ரோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகமே அழிந்தாலும் மக்களை காப்பாற்றுவோம்: புதிய முயற்சியில் இங்கிலாந்து ஆராச்சியாளர்கள்

உலகமே அழிந்தாலும் மக்களை காப்பாற்றுவோம்: புதிய முயற்சியில் இங்கிலாந்து ஆராச்சியாளர்கள்


உலகம் அழியும்போது மனிதர்களை காப்பாற்ற புதிய முயற்சி ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் அழியும் நிலை ஏற்படுகிறபோது மனிதர்களை காப்பாற்றி அழைத்துச் செல்வதற்காக, விண்வெளி ஓடம் ஒன்றை உருவாக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விண்வெளி ஓடம் மனிதர்களை விண்வெளிக்கு கூட்டிச்சென்று, குடியிருப்பதற்கு புதிய உலகத்தை தேடும் பணியிலும் ஈடுபடும் என்றும் இதில் மனிதர்கள் உயிருடன் இருப்பதற்கு தேவையான அடிப்படை தேவைகளும் இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இப்புது முயற்சியில் இங்கிலாந்துடன் அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Thursday, March 6, 2014

உலகின் முதல் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் ‘தொழில்நுட்பக் கோளாறால்’ மரணம்

உலகின் முதல் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் ‘தொழில்நுட்பக் கோளாறால்’ மரணம் 


உலகிலேயே முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நோயாளி ஒருவர், தனது செயற்கை இருதயம் எதிர்பாராத விதமாக செயல்பாட்டை நிறுத்தியதால் மரணமடைந்துள்ளார். 

பொதுவாக இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு இருதயம் வேண்டிக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகையால் உயிர் இழப்பு அதிகமாகக் காணப்படுகிறது. 

இத்தகைய உயிர் இழப்புகளைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று செயற்கையாக இருதயம் தயாரிக்கும் முயற்சியில் இறக்கி வெற்றி பெற்றது. ஆனால், அவ்வாறு செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி மிகக் குறைந்த நாட்களிலேயே மரணமடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாற்று இருதயம்... 

அறிவியலின் துணை கொண்டு முன்னேறி வரும் மருத்துவத் துறையில் மாற்று இருதயம் கிடைக்கும் வரை செயற்கை இருதயத்தைத் தற்காலிகமாகப் பயன் படுத்தி வந்தன. இவற்றின் ஆயுட்காலம் சில தினங்கள் தான். 

கார்மேட் நிறுவனம்... 

ஆனால், அத்தகைய செயற்கை இருதயங்களின் வாழ்நாளை அதிகப் படுத்தினால் இருதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் எனக் கருதிய பிரெஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் அதற்கான முயற்சியில் இறங்கியது. 

வெற்றி.. வெற்றி... 

அதன்படி, அந்நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18-ந்தேதி பொருத்தப்பட்டது. செயற்கை இருதயம் சிறந்த முறையில் இயங்கியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

மரணம்... 

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி அவரது செயற்கை இருதயம் திடீரென தனது செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி 3ம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தோல்வி... 

அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு வரும் என எதிர்பார்த்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது சம்பந்தப்பட்ட செயற்கை இருதயக் கம்பெனி மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் 


மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?

(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்


மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்

மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second 

என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது

நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்!!

Thursday, February 27, 2014

”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு

”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு 
நாசா சமீபத்தில் கனிம வளம் மிக்க பூமியை போன்ற புதிய கோள்களை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்கள் கண்டுபிடிப்பு பற்றி நாசா செய்தி வெளியிட்டுள்ளது.அதன் படி செழிப்பான புதிய 715 உலகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருப்பதாக கூறியுள்ளது. 

வழக்கம் போல நாசாவின் கெப்ளர் தொலைநோக்கிதான் இதையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இதற்காக கெப்ளர் தொலைநோக்கிக் குழுவுக்கு நாசா நன்றி கூறியுள்ளது.

கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புரிந்து வருகிறது.. 

"இந்த ஆராய்ச்சிதான் நாங்கள் கனிம வளங்கள் நிறைந்த,செல்வச்செழிப்பான,மனிதர்கள் வாழத்தகுந்த புதிய கிரகங்களை கண்டறிய உதவி புரிந்தது" என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். 

அப்புதிய 715 கோள்களும் 305 வெவ்வேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கிரகங்களில் 95 சதவீத கோள்கள் பூமியை போன்றே பரப்பளவு, தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அங்கு மனிதர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கான நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது. எப்படியோ "இரண்டாம் உலகம்" நிஜத்திலும் இருக்கலாம் என்று நிரூபித்துள்ளது 

இந்த புதிய கண்டுபிடிப்பு.சொல்ல முடியாது ஒரு வேளை நம்மை போன்ற உருவ அமைப்பினர் அங்கு வசித்து வரக்கூட சாத்தியம் இருக்கலாம். அங்கேயும் நாராயணசாமி இருக்கலாம்.. ஆதாம் இருக்கலாம்.. ஏவாள் இருக்கலாம்.. யார் கண்டார்.


கடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்

கடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்கூகிள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளுள் Street View எனும் சேவையும் பிரபல்யம் வாய்ந்தமை அறிந்ததே.
இச்சேவையினை கூகுள் நிறுவனம் Underwater Street View எனும் பெயருடன் நீருக்கு அடியில் உள்ள அரிய தகவல்களை பயனர்களுக்காக வெளிக்கொணரும் சேவைக்கு விஸ்தரித்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயனர்களின் பார்வைக்கு விடவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Wednesday, February 26, 2014

நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்தது ஜாக்பாட் கோடி கணக்கில் தங்க நாணய புதையல்

நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்தது ஜாக்பாட் கோடி கணக்கில் தங்க நாணய புதையல்


அமெரிக்காவில் நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு யோகம் அடித்தது. அங்கு மரத்தடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணய புதையல் கிடைத்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள தம்பதி தினமும் காலையில் தனது செல்ல நாயை அழைத்து கொண்டு வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வாறு சென்ற போது ஒரு மரத்தின் அடியில் உடைந்து போன இரும்பு டின் ஒன்றின் பகுதியை கண்டனர். இதனை கண்டு அவர்களுடைய செல்ல நாயும் குரைக்கவே, அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. மண்ணுக்குள் பகுதியாக புதைந்து கிடந்த அந்த டின்னை தம்பதி கஷ்டப்பட்டு தோண்டி எடுத்தனர். உள்ளே பார்த்தால் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர். அந்த தகர டின் முழுவதும் 1400 தங்க நாணயங்கள் காணப்பட்டன.இதுகுறித்து கலிபோர்னியாவின் நாணயவியல் நிபுணர் மெக்கார்த்தி கூறுகையில், தம்பதியிடம் சிக்கிய தங்க நாணயங்கள் சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையானவையாகும். அவை 1847 முதல் 1894ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். அவற்றில் பெண் அரசியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க மதிப்பில் அதன் உண்மையான மதிப்பை அளவிட முடியவில்லை. சுமார் பத்து மில்லியன் டாலர் வரை மதிப்புடையது என்று கருதப்படுகிறது. மேலும் 19ம் நூற்றாண்டின் நாணயம் வடக்கு கலிபோர்னியாவில் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதி தங்க புதையல் நிறைந்த பகுதி என்று ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு கருத்தும் நிலவி வருகிறது. தற்போது அதனை உறுதி செய்யும் விதத்தில் தங்க நாணய புதையல் தம்பதிக்கு கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திஉள்ளது.


ஒலிம்பிக் நிறைவில் அரங்கேறிய கூத்து

ஒலிம்பிக் நிறைவில் அரங்கேறிய கூத்து


ரஷ்யாவின் சோச்சியில் நிகழ்ந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் 5 ஒலிம்பிக் வளையங்களில் நான்கு மட்டுமே தென்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ரஷ்யாவின் 22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவிற்கு வந்தது.

இந்நிலையில் வானவேடிக்கைகளுடன் நடந்த நிறைவு விழாவின் போது, சுவிசின் பனிச்சறுக்கு வீராங்கனை பாட்ரிசியா கும்மர் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தியவாறு நடந்து வந்தார்.

அப்போது நேர்ந்த மின்னணு கோளாரின் காரணமாக 5 வளையங்களுடன் தோற்றமளிக்கும் ஒலிம்பிக் சின்னம் 4 வளையங்களை மட்டுமே கொண்டு தோன்றியது.

இதனை 40,000 பார்வையாளர்கள் கண்டதுடன் ”மற்றொரு வளையம் எங்கே” என மிக கிண்டாலாக விமர்சிக்க தொடங்கினர்.

மேலும் இச்சம்பவம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் பெரும் சிரிப்பினில் ஆழ்த்தியது.

Tuesday, February 25, 2014

பூமியை நெருங்கும் வியாழன்: மார்ச் 1ல் இங்கிலாந்தில் தெளிவாக தெரியுமாம்!

பூமியை நெருங்கும் வியாழன்: மார்ச் 1ல் இங்கிலாந்தில் தெளிவாக தெரியுமாம்! 


சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இந்த நிகழ்வினை இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும். 

பூமியை விட 1,100 மடங்கு அளவில் பெரியதான வியாழன் கிரகம், பூமியில் இருந்து 435 மில்லியன் மைல்கள் தொலைவில் உயரே நிற்குமாம். 

பூமிக்கு மிக அருகே தெரியும் இது போன்ற நிகழ்வு அடுத்து வருகிற 2026ம் ஆண்டில் தான் நடக்கும்

தெளிவாக தெரியும் கிரகங்கள் 

நாம் வெறும் கண்ணால் வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி, புதன், ஆகிய ஐந்து கிரகங்களை மட்டுமே நன்றாக காணமுடியும்.

பொன் கிடைத்தாலும் 

தமிழில் ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பார்கள். ஏனெனில் புதனைக் காண்பது என்பது மிக அரிது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதே அதற்குக் காரணம். புதன் கிரகம் சூரியன் அஸ்தமித்த பிறகு மேற்குத் திசையில் அடிவானில் சிறிது நேரமே தெரியும். அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கே அடிவானில் சிறிது நேரம் தெரியும். எனவேதான் இவ்வாறு கூறியுள்ளனர்.

வியாழன் பெரியது 

சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரக‌‌ம் எ‌ன்ற பெருமையை‌ப் பெ‌ற்றது வியாழனாகு‌ம். ‌மிக‌ப்பெ‌ரிய ‌கிரகமாக ‌விள‌ங்கு‌ம் ‌வியாழனை, ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ரோமானிய ஆட்சிக் கடவுளான ஜூபிட‌ரின் பெயரா‌ல் அழை‌க்க‌ப்படு‌கிறது.

பொன் கிரகம் 

சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள ‌வியாழ‌ன் கிரகம், வி‌ண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடு‌த்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய ‌கிரகமாகும். இதனை பொன் கிரகம், குரு என்றும் தமிழில் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

எவ்ளோ பெரிய கிரகம் 

இது 88,736 மை அதாவது 1,42,800 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் பர‌ப்பளவு கொ‌ண்டது. வியாழனின் சுற்றளவு பூ‌மியைப் போல 11 மடங்கு அதிகமாகும். ‌வியாழ‌ன் ‌கிரக‌த்‌தி‌ற்கு உ‌ள்ள‌த் துணை‌க் ‌கிரக‌ங்க‌ளி‌ல் இதுவரை 28 ‌கிரக‌ங்க‌ள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்‌டு‌ள்ளன. 1610ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் நா‌ன்கு துணை ‌கிரக‌ங்களை க‌லி‌லியோ க‌ண்டு‌பிடி‌த்தா‌ர்.

பூமிக்கு அருகில் 

இந்த வியாழன் கிரகம் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இந்த நிகழ்வினை இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மூலம் பார்க்கலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

தேசிய வானியல் வாரம் 

இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் வியாழன் கிரகத்தினை பார்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன.

வாயுக்களால் நிரம்பியது 

இது குறித்து, லண்டன் நகர பல்கலை கழக கல்லூரியை சேர்ந்த வானியல் நிபுணர் ஸ்டீவ் மில்லர் கூறும்போது, சூரிய குடும்பத்தின் மிக பெரும் கிரகம் வியாழன். நாம் வாழும் பூமியை விட வேறுபட்ட உலகம் கொண்டது. அது பாறை மற்றும் சமுத்திரங்களால் ஆனதல்ல.அது வாயுக்கள் நிறைந்த பெரிய கிரகம்.

துணை கோள்களுடன் வியாழன் 

வியாழன் பல்வேறு வானிலை அமைப்புகளை கொண்டது. அதனால் அதன் மேற்பரப்பில், கோடுகள், மண்டலங்கள் மற்றும் பிற அம்சங்கள் பார்க்கும் வகையில் உள்ளது. மார்ச் 1ம் தேதி பைனாகுலர் வழியே வியாழன் கிரகத்தை தெளிவாக பார்க்க முடியும். அதனுடன் வியாழன் கிரகத்தின் 4 மிக பெரும் துணை கோள்களையும் தெளிவாக பார்க்க முடியும். அவை வியாழன் கிரகத்தை சுற்றி வருவதை சில தினங்கள் பார்க்க முடியும் என்றும் வானியல் நிபுணரான டாக்டர் கிறிஸ் ஆர்ரிட்ஜ் தெரிவித்துள்ளார்.


மெக்சிகோ கடத்தல் தலைவரை ‘தூக்கியது’, பின்லேடனுக்கு அடுத்த சி.ஐ.ஏ. ஆபரேஷன்?

மெக்சிகோ கடத்தல் தலைவரை ‘தூக்கியது’, பின்லேடனுக்கு அடுத்த சி.ஐ.ஏ. ஆபரேஷன்?பின்லேடனை கொல்லும் அதிரடி ஆபரேஷனுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. திட்டமிட்டு செயல்படுத்திய ஆபரேஷன், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ கஸ்மனை, சுற்றி வளைத்து கைது செய்ததுதான் என்பதுதான், மெக்சிகோ மீடியாக்களில் இன்றைய தலைப்புச் செய்தி!

மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ கஸ்மனை சுற்றி வளைத்து கைது செய்தது மெக்சிகோ ராணுவம்தான் என்ற போதிலும், அதன் பின்னணியில் இருந்தது அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. என்கின்றன, மெக்சிகோ மீடியாக்கள்.

கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ, மெக்சிகோவின் ரிசாட் நகரமான மஸட்லான் அருகேயுள்ள, மறைவிடம் ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய ஒரு ஏரியாவையே சுற்றி வளைத்த மெக்சிகோ ராணுவம், ஒரு துப்பாக்கி தோட்டாவைகூட விரயம் செய்யாமல், ஆளை லபக் என்று தூக்கிச் சென்றது.

“13 ஆண்டுகளாக இந்த கடத்தல் குழு தலைவரை நெருங்கவே முடியாமல் இருந்த மெக்சிகோ ராணுவம், இவ்வளவு துல்லியமாக செயல்பட்டது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ள மெக்சிகோ மீடியாக்கள், அமெரிக்க நேவி சீல் அதிரடிப் படையினரும் (பின்லேடன் வேட்டைக்கு சென்ற படை) மெக்சிகோ ராணுவத்தினரின் சீருடையில், அவர்களுடன் கலந்து சென்றே கடத்தல் தலைவரை அமுக்கினார்கள்” என்கின்றன, மெக்சிகோ மீடியாக்கள்.

இந்த கூற்றை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. “இது முழுக்க முழுக்க மெக்சிகோ ராணுவத்தினரின் ஆபரேஷன்தான். கடத்தல் குழு தலைவரை நாம் (அமெரிக்கா)  தேடப்படுவோர் பட்டியலில் வைத்திருந்தபோதிலும், இந்த ஆபரேஷனில் எமக்கு எந்த தொடர்பும் கிடையாது” என பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி கூறினார் என்கிறது, வாஷிங்டன் போஸ்ட்.

ஆமா.. தமக்கு எந்த ஆபரேஷனில்தான் தொடர்பு இருக்கிறது என்று ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது சி.ஐ.ஏ.?
Tuesday, January 21, 2014

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி! எடை குறைந்த, நவீன தொழில்நுட்பம்!!

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி! எடை குறைந்த, நவீன தொழில்நுட்பம்!!
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்தியாவின் அக்னி-4 பாலஸ்டிக் ரக ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலாசூர் சோதனை மையத்தில் நேற்று திங்கட்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

காலை 10:52 மணிக்கு வீலர் தீவிலுள்ள சோதனை மையத்தின் நான்காவது ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை, தனது முழு பயண தூரத்தையும் வெற்றிகரமாகக் கடந்ததாக சோதனை மையத்தின் தலைவர் எம்.வி.கே.வி. பிரசாத் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) அதிகாரி கருத்து தெரிவிக்கையில், “4,000 கி.மீ. தூரம் பயணித்து இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணையின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கும் வகையில் உயரிய தொழில்நுட்பங்களைக் கொண்ட நவீன கருவிகளைக் கொண்டு இயக்கி, இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

இவர் குறிப்பிடும் தொழில்நுட்பம், solid fuel rocket motor technology என்று அழைக்கப்படுகிறது.

அக்னி-4 ஏவுகணை தற்போது மூன்றாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முந்தைய பரிசோதனைகளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், ஏவுகணையில் வீச்சை அதிகரிப்பதற்கும், பே-லோட் அளவை அதிகரிப்பதற்கும், மிகவும் எடை குறைவான விதத்தில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1, 2, 3 ஆகியவை ஏற்கனவே இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளன. தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ளது அக்னி-4 என குறிப்பிடப்பட்டாலும், இதைத்தான் ‘அக்னி-2 பிரைம்’ (Agni II prime) என முன்பு உருவாக்க தொடங்கினார்கள். தற்போது, பெயரை மாற்றியுள்ளார்கள்.
Friday, January 17, 2014

அழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்

அழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பந்த்தேரா என்ற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்க பகுதியில் இருக்கும் 17 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

இதுதொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியானது.

இதில், செனகலில் தொடங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய தனிப்பட்ட வகையான சிங்கங்கள் தற்போது 400 மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கங்களின் வாழ்விடங்கள் பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், பருத்தி பயிர் செய்வதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஹெல் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அழிந்து கொண்டிருக்கும் இந்த அரிய வகை சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதி வசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Thursday, January 16, 2014

மனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம்

மனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம் பகுத்தறியும் திறன் எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று மனிதனிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் இல்லை என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். 

பொதுவாக, மனிதனையும் மற்ற உயிரினங்களையும் வித்தியாசப்படுத்துவது ஆறாம் அறிவு என்ற ஒன்று தான். உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு. 

இந்நிலையில், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.


நிரூபணம்.... 

ஆறாம் அறிவு இல்லை என்ற இந்த உண்மையை சிறிய சோதனைகள் மூலம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த ஆய்வறிக்கைகள் 'பிளோஸ் ஒன்' என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது


விளக்கம்.... 

இந்த ஆய்வின் முடிவில், ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என விளக்கப் பட்டுள்ளது.


உதாரணமாக.... 

உதாரணத்திற்கு ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் உணரும்போதும் அந்த மாற்றம் அவர்களுடைய தலைமுடி திருத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டது என்பதை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர்.

முதல் ஆராய்ச்சி... 

இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள உளவியல் ஆராய்ச்சிப் பள்ளியின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பியர்ஸ் ஹோவே கூறுகையில், ‘மாற்றங்களை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் மனிதனால் உணரமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆராய்ச்சி இது என்று குறிப்பிடுகின்றார்.

இது தான் 6வது அறிவு.... 

பொதுவாகக் குறிப்பிடப்படும் ஐம்புலன்களை சார்ந்து இல்லாமல் மனதின் மூலம் மாற்றங்களை உணரமுடியும். இதுவே இதுநாள்வரை ஆறாவது அறிவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.


யாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர்

யாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர் 
யாஹூ நிறுவன சிஇஓ மரிஸா மேயர் நிறுவனத்தின் சிஓஓவான ஹென்ரிக் டி காஸ்ட்ரோவை வேலையை விட்டு நீக்கியுள்ளார். 

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த மரிஸா மேயர் கடந்த 2012ம் ஆண்டு யாஹூ நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹென்ரிக் டி காஸ்ட்ரோ என்பவரை யாஹூ நிறுவனத்திற்கு வந்து வேலை செய்யுமாறு அழைத்தார். 

அவரது அழைப்பை ஏற்று 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் யாஹூ நிறுவனத்தில் சேர்ந்த காஸ்ட்ரோவுக்கு சிஓஓ பதவியை அளித்தார் மேயர். இந்நிலையில் காஸ்ட்ரோவுக்கும், மேயருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது.இதையடுத்து காஸ்ட்ரோவை மேயர் திடீர் என்று பணியில் இருந்து நீக்கிவிட்டார்.

பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு ஹென்ரிக் டி காஸ்ட்ரோ பணியில் இருந்து நீக்கப்பட்டதாக இரண்டு வரியில் எழுதப்பட்ட அறிக்கையை யாஹூ நேற்று மாலை சமர்பித்தது. 

காஸ்ட்ரோவுக்கு இன்று தான் யாஹூவில் கடைசி நாள். அவருக்கு 20 மில்லியன் டாலர் பங்கு போனஸாக வழங்கப்படும் என்று யாஹூ தெரிவித்துள்ளது.


Friday, January 10, 2014

சூரியனிலிருந்து வெளியேறும் மிகப்பெரிய ஒளிப்பிரளயம்

சூரியனிலிருந்து வெளியேறும் மிகப்பெரிய ஒளிப்பிரளயம்
பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சூரியன் உள்ளது.
சூரியனின் மத்தியப்பகுதியிலிருந்து கடந்த 7-ம் திகதியன்று மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக்காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது.

இந்த கிளரொளிக்காட்சியின் போது சக்தி வாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் மனிதனுக்கு தீங்கிழைக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையமுடியாது.

ஆனால் இது பூமிக்கு அருகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தகவல் தொடர்பு சாதனங்களையும், செயற்கை கோள்களுக்கும் தீங்கிழைக்கக்கூடும். மிகக்கடுமையான இந்த ஒளிப்பிரளயங்களை எக்ஸ் 1, 2, 3 என்று வகைப்படுத்துகின்றனர்.

போராளி இயக்கம் கைப்பற்றிய டேங்கருக்குள் இருப்பது ஆயில் அல்ல, ராஜதந்திர சிக்கல்!

போராளி இயக்கம் கைப்பற்றிய டேங்கருக்குள் இருப்பது ஆயில் அல்ல, ராஜதந்திர சிக்கல்!
சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி இயக்கத்தினர், சிரியா ராணுவ முகாம் ஒன்றில் கைப்பற்றியதாக அறிவித்து, போட்டோ வெளியிட்டுள்ள ஆயில் 
லாரிக்குள் பெரிதாக ஏதுமில்லை. பெற்றோலோ, டீசலோ இருக்கலாம். அல்லது, காலி லாரியாகக்கூட இருக்கலாம். அது முக்கியமல்ல. லாரியில், அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனத்தின் லோகோ (logo) இருப்பதுதான், ராஜதந்திர ரீதியில் பெரிய விஷயம்!

அது எப்படி? இதோ, இப்படித்தான்:

சிரியா அரசுக்கு எதிராக ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. அதை சிரியாவின் சில நட்பு நாடுகள் டேங்கர் (லாரி), தம்முடையது அல்ல என அறிவித்துள்ளது, அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனம்.

போராளி இயக்கம் லாரி ஒன்றை கைப்பற்றியது பெரிய விஷயமா? அது ஒரு சாதனை என்பதுபோல போட்டோ வெளியிட வேண்டுமா? அப்படி வெளியிட்டாலும், உடனே மற்றொரு நாட்டின் அரசு எண்ணை நிறுவனம் அவசர மறுப்பு அறிக்கை வெளியிடும் அளவுக்கு இந்த ஒற்றை லாரியில் அப்படி என்னதான் உள்ளது?
ரகசியமாக மீறி, சில சப்ளைகளை செய்கின்றன. இந்த ரகசிய சப்ளை செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் உண்டு. சிரியாவுக்கு ரஷ்யாவும், வேறு சில நாடுகளும் செய்யும் சப்ளைகளை அம்பலப்படுத்தும் பலத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிரியாவில் அரசு ராணுவத்தை தாக்கும் போராளிப்படைகள், தாக்குதலில் வெற்றியடைந்து ஒரு ராணுவ முகாமை கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம், அந்த ராணுவ முகாமில் உள்ள ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, முகாமை வெடிவைத்து தகர்த்து விடுவார்கள். ராணுவம் மீண்டும் அந்தப் பகுதியை கைப்பற்றினால், அவர்கள் நிலைகொள்வதற்கு ராணுவ முகாம் பில்டிங் இருக்கக்கூடாது என்பதற்காக அப்படி செய்தார்கள்.

இப்போது கதை வேறு. ராணுவ முகாமை கைப்பற்றியவுடன், ஆயுதங்களை எடுப்பதற்கு முன், முகாமுக்குள் உள்ள இதர பொருட்கள் எந்த நாட்டு தயாரிப்பு என்று பார்க்கிறார்கள். அந்தப் பொருட்கள் மற்றொரு அரசால் சப்ளை செய்யப்பட்டவை என்பதற்கு ஆதாரம் ஏதாவது கிடைத்தால், உடனே போட்டோ எடுத்து வெளியிட்டு விடுகிறார்கள்.

“இதோ பாருங்கள். ஐ.நா.வின் பொருளாதாரத்தடை இருக்கையில், இந்த நாடு ரகசியமாக சிரியா அரசுக்கு சப்ளை செய்கிறது” என்று காட்டுவதுதான், போட்டோ வெளியிடுவதன் நோக்கம். இதையடுத்து அந்த நாட்டுக்கு ராஜதந்திர ரீதியில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கும். ஐ.நா. காரணம் கேட்கும்.

இப்படி செய்வதால், இனிவரும் நாட்களில் சிரியாவுக்கு எந்த சப்ளையும் செய்ய மற்றைய நாடுகள் தயங்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம்.

இரு தினங்களுக்கு முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸின் புறநகரப் பகுதியில் உள்ள சிறிய ராணுவ முகாம் ஒன்று போராளிப் படையினரால் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த சொற்ப அளவிலான ராணுவத்தினரில் சிலர் கொல்லப்பட்டனர். வேறு சிலரோ, போட்டது போட்டபடி முகாமை விட்டு தப்பியோடினர்.

முகாமை கைப்பற்றிய போராளிப் படையினர் முகாமில் இருந்த பொருட்களை சோதனையிட்டபோது, முகாமுக்கான எரிபொருள் சப்ளை செய்த ஆயில் டேங்கர் லாரி ஒன்றை கண்டார்கள். அதன் பின்பகுதியில், அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு எண்ணை நிறுவனத்தின் லோகோ இருந்தது (பார்க்கவும் போட்டோ).

இதுதான், இந்த போட்டோவின் ராஜதந்திர முக்கியத்துவம்.

போட்டோ வெளியானதும் பதறிப்போன அஸர்பாய்ஜான் குடியரசு நாட்டின் அரசு, அந்த டேங்கர் தம்முடையது அல்ல என அவசர அவசரமாக அறிவித்த காரணம் அதுதான்.

அஸர்பாய்ஜான் குடியரசு அரசின் செய்தி தொடர்பாளர் நிஜாமிடின் குலியேவ் உடனடியாக செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி, “எமது அரசு எண்ணை நிறுவனமான சொகார் (SOCAR), சிரியாவுக்குள் எந்த ஆபரேஷனிலும் இல்லை. அந்த நிறுவனத்துக்கு, சிரியா அரசுடன் எந்த வர்த்தகமும் இல்லை. போட்டோவில் உள்ளது, சொகார் நிறுவனத்தின் டேங்கர் லாரியும் அல்ல” என்று நேற்று அறிவித்தார்.

“அந்த ஆயில் டேங்கரில், சொகார் நிறுவனத்தின் லோகோ உள்ளதே” என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “அந்த லோகோ போலியாக வரையப்பட்டுள்ளது. எமது நாட்டை அரசியல் ரீதியாக சிக்கலில் மாட்டிவிட சிரியாவில் உள்ள போராளி அமைப்பினர் செய்த சதிச்செயல் இது” என்று தெரிவித்துள்ளார்.

”லோகோ போலியானது என்பதற்கு உங்களிடம் நிரூபணம் ஏதாவது உள்ளதா?” என மற்றொரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “எமது நிபுணர்கள் இரு லோகோவையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கப்பட்டபின், ஆதாரத்தை வெளியிடுவோம்” என்றார்.

சிரியா போராளி இயக்கங்களில் கூட்டமைப்பான பிரீ சிரியன் ஆர்மியின் செய்தி தொடர்பாளர், “ஆயில் டேங்கரில் லோகோ வரைவது எமது போராளிகளின் பணியல்ல. நாம் கைப்பற்றிய டேங்கர் லாரி, இந்த லோகோ சகிதம் இருந்தது என்பதே நிஜம்” என்று தெரிவித்துள்ளார்.

சரி. அஸர்பாய்ஜான் குடியரசு அரசின் செய்தி தொடர்பாளர் நிஜாமிடின் குலியேவ், “அசலுக்கும் நகலுக்கும் உள்ள வித்தியாசத்தை எமது நிபுணர்கள் கண்டு பிடித்தபின் தாரம் தருகிறோம்” என்கிறாரே… வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல், அது போலி லோகோ என்று எப்படி அடித்துச் சொல்கிறார்?


Monday, January 6, 2014

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?

துபாயில் வீடு வாங்கினால் லம்போகினி கார் இனாம்! அருகே உள்ள நங்கை எந்த கணக்கு?
வசிப்பதற்கு ஒரு அட்டகாசமான பெந்த்ஹவுஸ் வாங்கும் திட்டம் உங்களுக்கு உள்ளதா? அதை அந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம்… ஒரு லம்போகினி ஆடம்பர கார் வாங்கும் பிளான் உள்ளதா? அதை, இந்தப் பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது கேள்வி, சின்ன வயதில் மாங்காய்க்கு கல் எறிந்திருக்கிறீர்களா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தீர்களா?

இல்லை என்றால் கவலை வேண்டாம். இப்போது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் துபாய் போக வேண்டியிருக்கும்! (ஏங்க.. போகுமிடம் துபாய். ஜாக்கிரதையாக மாங்காயை மட்டும் அடியுங்க. மாங்கனி கன்னத்தை பார்த்து கண் அடித்தால், கல்லால் அடித்து கொல்லும் தண்டனை இன்னமும் இருக்கிறதாம்)

ஒரு கல் – ரெண்டு மாங்காய் டீல் என்ன?

தமாக் பெந்த்ஹவுஸ் (Damac penthouse) வீடு வாங்கும் கஸ்டமர்களுக்கு, புத்தம் புதிய லம்போகினி கார் இனாமாக கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது ஒரு நிறுவனம்! துபாய் ஷாப்பிங் திருவிழாவுக்காக தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதற்காக, வீடு வாங்கும் ஆட்களின் பெயர்கள் எல்லாவற்றையும் சீட்டில் எழுதி, குலுக்கிப்போட்டு, அதிஷ்டசாலியாக சித்தப்பாவின் பெயரை எடுக்கும் லோக்கல் கேம் அல்ல இது. வீடு வாங்கும் அனைவருக்கும் கார் இனாம் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த டீலில் ஒரேயொரு கேட்ச், பெரிய வீடுகள் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே, லம்போகினி கார் கொடுப்பார்களாம். மற்றையவர்களுக்கு என்ன,  மந்தாகினியா?

சேச்சே, சிறிய சைஸ் வீடுகள் வாங்கினாலும் கார் இனாம் உண்டு. BMW அல்லது மினி கூப்பர் கார் கிடைக்கும் என அறிவித்துள்ளது ரியல் எஸ்டேட் நிறுவனம்!

லம்போகினி கார் சூப்பராக உள்ளதை, மேலேயுள்ள போட்டோவில் பார்த்திருப்பீர்கள். அந்த போட்டோ, துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்ட போட்டோ அல்ல. “கார் மட்டும்தான் கொடுக்கிறார்கள், அப்புறம் எதற்காக அம்மிணி போட்டோவையும் மேலே போட்டிருக்கிறீர்கள்?” என்று நீங்கள் எம்முடன் சண்டைக்கு வந்தால்,  அதற்கும் ஒரு பதில் எம்மிடம் உள்ளது.

துபாயில் கார் கொடுக்கும் தமாக் ரியல் எஸ்டேட் நிறுவனம் இலவச கார் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பிலும் ஒரு அம்மிணியின் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை 5-வது போட்டோவில் பார்க்கவும்.

நாங்களாவது பரவாயில்லை, அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காரைவிட நங்கையின் போட்டோ பெரிதாக இருக்கிறது! (வீடு வாங்கினால் இனாம், நங்கையா? காரா? என்ற சந்தேகம் எழுவதை தடுக்க முடியாது)

துபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள சில போட்டோக்களை இணைத்துள்ளோம். முதலில் அவர்கள் இனாமாக கொடுக்கும் காரின் போட்டோக்களை பாருங்கள்… அதன்பின், அந்த காரை இனாமாக பெற, நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய வீட்டின் போட்டோக்களை பாருங்கள்.

இதுதான் நாம் போட்ட போட்டோ வரிசை. இந்த போட்டோ வரிசையை  எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா?

ஒருவேளை போட்டோக்களை பார்த்துவிட்டு வாங்கும் ஆசை ஏற்பட்டு, அதற்காக சம்சாரத்திடம் அனுமதியும் பெற வேண்டிய கட்டாயம் இருந்தால்… எமது ஆலோசனை, சம்சாரத்திடம் முதலில் வீட்டின் போட்டோக்களை காட்டுங்கள்…  அப்புறம் காரின் போட்டோக்கள்…  அம்மிணியின் போட்டோ வேண்டாம்!

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!
“காலநிலை அறிவிப்பின்போது பொதுவாக நாம், ‘உயிர் அச்சுறுத்தல்’ (‘life threatening’) என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை. ஆனால், ஆம்.. தற்போது ஏற்பட்டுள்ளது ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற நிலைமைதான்” என்கிறார், கென் சிமெஸ்கோ. இவர் அமெரிக்கா பிஸ்மார்ச் பகுதியை சேர்ந்த meteorologist.

“தற்போது வெளியே உள்ள மைனஸ்-50 டிகிரி குளிரில் உடலின் பாகங்கள் ஏதாவது தொடர்ந்து 5 நிமிடங்கள் தெரியும்படி நின்றிருந்தாலே, தோலில் frostbite ஏற்பட தொடங்கும். அந்த உடல் பகுதி தொடர்ந்து குளிரில் எக்ஸ்போஸ் செய்யப்பட்டால், மயக்கமடைந்து விழுவதுடன், உயிராபத்தும் ஏற்படலாம். அதுதான் காலநிலை அறிவிப்பில் ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற எச்சரிக்கை செய்யப்படுகிறது” என்கிறார் கென்.

கடந்த இரு தினங்களாக கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடும் மோசமான காலநிலை காணப்படுகிறது. குளிர் என்றால், உங்கவீட்டு குளிர், எங்க வீட்டு குளிர் அல்ல, நிஜமாகவே கிடுகிடுக்க வைக்கும் குளிர்.

அமெரிக்கர்களுக்கு இதில் கடும் கோபம் என்னவென்றால், கனடாவின் மத்திய பகுதியில் ஆரம்பித்த குளிர்தான் படர்ந்து, அமெரிக்காவின் சில பகுதிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்! கனடாவின் கியுபக் பகுதிகளில் நேற்று முதலே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து அறிவித்தபடி உள்ளார்கள்.

கனடா, டொரண்டோவில் வீதிகளில் கொட்டியிருந்த பனி தொடர்ந்து அகற்றப்பட்ட வண்ணம் உள்ள நிலையிலும், அதன்மேல் செல்லும் வாகனங்களின் அழுத்தம் காரணமாக வீதிகளில் பனி அழுந்தி கெட்டி ஐஸாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதில் வாகனங்கள் அதிகம் சறுக்க தொடங்குகின்றன.

கிழக்கு கனடாவில் உள்ளவர்களுக்கு இது ஓரளவு பரிச்சயமான காலநிலைதான் என்ன போதிலும், கடந்த பல ஆண்டுகளாக இந்தளவு மோசமான அளவுக்கு சென்றதில்லை. குளிரில் சடுகுடு விளையாடும் கனேடியர்களுக்கே இப்படி என்றால், அமெரிக்கர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்று யோசித்து பாருங்கள்.

அதுதான், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில், ‘உயிர் அச்சுறுத்தல்’ அறிவிப்பை விடுத்துவிட்டு மிரண்டுபோய் உள்ளார்கள்! அமெரிக்க டி.வி. சேனல் ஒன்று, “செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” என்று மிரட்டுகிறது.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதிகளில் காற்றுடன் சேர்ந்த குளிர் (wind chill factor) இன்றிரவு மைனஸ் 60 வரை போகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சனி ஞாயிறு தினங்களில் மத்திய கனடா, வடகிழக்கு அமெரிக்காவில் மற்றொரு பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது. 6 முதல் 12 அங்குல பனிப்பொழிவு இருக்குமாம்.

நீங்கள் வட அமெரிக்காவுக்கு (கனடா, அமெரிக்கா) வெளியே வசிப்பவராக இருந்தால், நம்மூரில் நிலைமை எப்படி என்று பார்க்க ஆவல் உள்ளவர்களாக இருப்பீர்கள் அல்லவா? இதோ, நேற்று எடுக்கப்பட்ட சில போட்டோக்களை இணைத்துள்ளோம்.