Thursday, July 25, 2013

சவுதி இளவரசி என்று சொல்பவர், முன்னாள் ‘மலிவு விலை’ விபசாரியா? பரபரப்பு வழக்கு!

சவுதி இளவரசி என்று சொல்பவர், முன்னாள் ‘மலிவு விலை’ விபசாரியா? பரபரப்பு வழக்கு!பிரிட்டிஷ் கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, சவுதி இளவரசி (என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் பெண்), கடந்த இரு மாதங்களில் தமது பர்ஃபியூம் செலவே 1 மில்லியன் டாலர் என்று நீதிபதி முன் தெரிவித்தார்.

நேற்று வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த இவர், அதி விலையுயர்ந்த ரால்ஸ்-ராய்ஸ் ஆடம்பர காரில் வந்து இறங்கினார். காரின் லைசென்ஸ் பிளேட்டில், HRH என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் இதே வழக்கில் சாட்சியம் அளித்த மற்றொருவர், தம்மை சவுதி இளவரசி என்று சொல்லிக்கொள்ளும் இவர், ஒருகாலத்தில் எதியோப்பியாவில் ‘மலிவு விலை விபச்சாரியாக’ இருந்தார் என்று கோர்ட்டில் சாட்சியமளித்தார்.

பிரிட்டிஷ் மீடியாவில் ‘மர்ம இளவரசி’ என்று குறிப்பிடப்படும் இவர், 14 மில்லியன் பவுன்ட்ஸ் பெறுமதியுள்ள ஆடம்பர பிளாட்டுகளை வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் என இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மோசடி வழக்கே தற்போது நடந்துவருகிறது.

வழக்கு விசாரணைக்காக ரால்ஸ்-ராய்ஸ் ஆடம்பர காரில் முகத்திரை அணிந்து, 5 அங்குல உயர ஹீஸ்ஸூடன் வந்திறங்கினார், ‘இளவரசி’ சரா அல்-அமோடி.

இவருக்கு ஆடம்பர வீடுகளை விற்றவர்கள், “முன்னாள் விபசாரியான இவர், சவுதி இளவரசி என்று பொய் சொல்லி எம்மை ஏமாற்றி, ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளார். அவற்றை திரும்ப தரவேண்டும்” என்று மனு செய்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த சரா அல்-அமோடி, “நான் நிஜமாகவே சவுதி இளவரசிதான். கடந்த இரு மாதங்களில் எனது பர்ஃபியூம் செலவே 1 மில்லியன் டாலர். வேண்டுமானால் ஆதாரம் காட்டவும் முடியும். சவுதியில் இருந்து மாதாமாதம் எனது பாக்கெட் மணியாக 5 மில்லியன் பவுன்ட்ஸ் வந்து சேர்கிறது. நான் இளவரசியாக இல்லாவிட்டால், இவ்வளவு பணம் வருமா?” என்று கேட்டார்.

“சரி. மாதம் 5 மில்லியன் பவுன்ட்ஸ் பணம் வந்ததற்கு வங்கி ஆதாரம் உள்ளதா?” என கேட்டதற்கு, “சவுதியில் நாங்கள் வங்கியெல்லாம் யூஸ் பண்ணுவதில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு சூட்கேஸில் பணத்தை போட்டு அனுப்பி வைத்து விடுவார்கள்” என்றார்.

இதே ‘இளவரசி’ சரா அல்-அமோடி மீது முன்பு மற்றொரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனது ஆண் மாடல் நண்பர் ஒருவருடன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, நைட்கிளப்பில் அட்டகாசம் பண்ணியதுதான், அந்த வழக்கு.

நேற்றைய வழக்கு விசாரணையின்போது வக்கீல் ‘இளவரசி’யிடம் “நீங்கள் மது அருந்துவீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த இவர், “இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் கேட்க முடியாத கேள்வி இது” என்றார்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த எதியோப்பியாவில் பிறந்து தற்போது லண்டனில் பர்னிச்சர் வியாபாரியாக உள்ள நெகாத் அலி, “இந்த பெண்ணை எனக்கு பல காலமாகவே தெரியும். எதியோப்பியாவை சேர்ந்த ‘மலிவு விலை’ விபசாரி இவர். ஏமன் நாட்டில், இவரும், இவரது தாயாரும் ஒரு ரெஸ்ட்டாரென்ட்டும் நடத்தி வந்தனர். இவரது முகத்திரை அணியாத போட்டோ பத்திரிகையில் வெளியானபோது, அடையாளம் கண்டுகொண்டு, நானே சுயமாக சாட்சியமளிக்க வந்துள்ளேன்” என்றார்.

சுவாரசியமான இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


1மில்லியன் பவுன்ட்ஸ் பர்ஃபியூம் இளவரசியை நீங்களும் பார்த்து வையுங்களேன்!

உங்கள் சிம் காட்டால் ஆபத்து:

உங்கள் சிம் காட்டால் ஆபத்து:


பல மில்லியன் கணக்கான மக்கள் பாவிக்கும், மோபைல் போன் சிம் காட்டால் அவர்களுக்கு ஆபத்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டில் உள்ள நபர் ஒருவரே இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் அரை பில்லியன் சிம் காட்டுகள் பாதுகாப்பு குறைவாகக் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். அந்த சிம் காட்டுகளை நீங்கள் பாவிப்பவர்களாக இருந்தால், நீங்கள் எந்த போனைப் பாவித்தாலும் அதில் வைரஸைப் புகுத்தமுடியும் என்றும் அவர் கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக நீங்கள் விலையுயர்ந்த போனைப் பாவித்தால் கூட அதனுள் வைரஸை புகுத்த முடியுமாம். வைரஸ் என்றதும் , நாம் நினைப்போம் நாம் தரவிறக்கம்(டவுன்லோட்) செய்தல் தான் வைரஸ் வரும் என்று. ஆனால் இது மிகவும் வித்தியாசமான ஒன்றாகும்.

அதாவது வைரஸை அனுப்ப நினைக்கும் குற்றவாளிகள் ஒரு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினால் போதும். எஸ்.எம்.எஸ் உடன் வைரஸை அனுப்பினால், அது குறிப்பிட்ட சிம் காட் ஊடாகச் சென்று மோபைல் போனைத் தாக்குமாம். இவ்வகையான வைரஸை எப்படி அனுப்புவது என்பது பல குற்றவாளிகளுக்கு தெரியும் என்றும் பலர் கூறுகிறார்கள். இதனால் பலர் பாதிப்படையக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பலரது சிம் காட் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், சராசரியாக 8 பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவராவது இவ்வகையான சிம் காட்டையே பயன்படுத்துகிறார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே வித்தியாசமான எஸ்.எம்.எஸ் வந்தால் அதனை திறக்கவேண்டாம் என்றும் , அதில் உள்ள லிங்கை அழுத்தி வேறு இணையத்துக்கு செல்லவேண்டாம் என்றும் ஜேர்மன் ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 24, 2013

ஏழுமலையான் பக்தர்களால் பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்தது ஆந்திரா

ஏழுமலையான் பக்தர்களால் பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்தது ஆந்திரா


திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் ஆந்திரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருமலையில் 10 நூற்றாண்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தாஜ் மகால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஜந்தா&எல்லோரா ஆகிய சுற்றுலா தளங்களை விட இங்கு அதிக உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் ஆந்திராவுக்கு 20.68 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.

தமிழ்நாடு 18.41 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்த்து 2வது இடத்தையும், உத்தரப்பிரதேசம் 16.84 சுற்றுலா பயணிகளை ஈர்த்து 3வது இட த்தையும் பிடித்துள்ளன.2010ம் ஆண்டில் 74.80 கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 2011ல் 86.50 கோடியாக அதிகரித் தது. இது 2012ல் 19.87 சதவீதம் உயர்ந்து 103.60 கோடியாக உயர்ந்தது. முதல் 10 இடங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த 10 மாநிலங்களும் மொத்தம் 84.5 சதவீத உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளன.அதேபோல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவதும் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 2012ம் ஆண்டில் அதிகபட்சமாக 51 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தமிழ்நாடு (36 லட்சம்), டெல்லி (23 லட்சம்) ஆகியவை முறையே 2 மற்றும் 3ம் இடங்களை வகிக்கின்றன.

Tuesday, July 23, 2013

இனி, ஏவிய கால் மணி நேரத்தில் விண்ணைத் தொட்டு விடுமாம் ராக்கெட்கள்

இனி, ஏவிய கால் மணி நேரத்தில் விண்ணைத் தொட்டு விடுமாம் ராக்கெட்கள் 
வெறும் 15 நிமிடத்தில், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ராக்கெட் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப் படும் ராக்கெட்டுகளின் பயணநேரம் பல மணி நேரங்கள் ஆகும். ஆனால், ராக்கெட்டுகளின் பயண நேர விரயத்தை குறைக்கும் வகையில் மாற்றுப் பாதையினை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

தற்போது, அம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது, காற்றை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ராக்கெட்டின் உதவியால் 15 நிமிடத்தில் விண்வெளியை அடைய முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சாப்ரீ என்ஜின்... 

ஒலியை விட வேகமாக சீறிப்பாயும் அதிநவீன 'சாப்ரீ' என்ஜின் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள். இவற்றைப் பயன் படுத்தி உருவாக்கும் ராக்கெட்டுகளை சாதாரண விமான ஓடுதளத்திலேயே பயன் படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஒலியை விட 5 மடங்கு வேகம்... 

மேலும், இந்த ராக்கெட் ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்க கூடியது. அதாவது, கிட்டத்தட்ட மணிக்கு 19 ஆயிரம் மைல் (30,577 கி.மீ) வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன் மிக்கது.

ஓட்டுநர் தேவையில்லை... 

ஆளின்றி இயங்க கூடிய, மிகவும் எடை குறைந்த இந்த ராக்கெட் 15 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரவ ஹைட்ரஜன்... 

‘சாப்ரீ' என்ஜின் இயங்க திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிபொருளை எடுத்துக் கொள்கிறது.


ஆப்பிள், தக்காளி தோலை தூக்கி போட்றாதீங்க...: வாட்டர் பில்டரா பயன்படுத்தலாம்!

ஆப்பிள், தக்காளி தோலை தூக்கி போட்றாதீங்க...: வாட்டர் பில்டரா பயன்படுத்தலாம்!


ஆப்பிள் மற்றும் தக்காளியின் தோலை பயன் படுத்தி குடிநீரை சுத்திகரிக்க இயலும் என சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளார் கண்டு பிடித்துள்ளார். தற்போது, நீரை சுத்திகரிக்க பல்வேறு முறைகள் கடைபிடிக்கப் படுகின்றன.

ஆனால், அவற்றின் விலைகளோடு ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறியவர்கள் அவற்றை வாங்கிப் பயன் படுத்துவது என்பது பெரும்பாலும் சாத்தியமில்லாத ஒன்றாகி விடுவது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம், பெரும்பான்மையான நோய்கள் நீர் மூலமாக பரவுகின்றன என்பதும் நிஜம். எனவே, தற்போது சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த செலவில் தண்ணீரை சுத்தப்படுத்தும் முறைமையைக் கண்டறிந்துள்ளனர்.

குடிநீர் சுத்திகரிப்பு... 

சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளவர் ராம்கிருஷ்ணா மல்லம்பட்டி. அடிப்படையில் இவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது கண்டுபிடிப்பு தான் தோல்கள் மூலம் நீரை தூய்மையாக்கும் தொழிற்நுட்பம்.

நீக்கும் தன்மை... 

பொதுவாக, தக்காளி தோல்கள் மாசுபட்ட தண்ணீரின் கழிவு பொருட்கள், அதில் கரைந்திருக்கும் ரசாயனம் மற்றும் சாய பொருட்கள், பூச்சி கொல்லி மருந்துகளை நீக்கும் தன்மை கொண்டவை.

உறிஞ்சும் திறன்... 

அதே போன்று ஆப்பிள் தோலுக்கு தண்ணீரில் கரைந்து கலந்திருக்கும் கழிவுகளை உறிஞ்சும் சக்தி உள்ளது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு... 

ஆகவே, இவற்றின் தோல்களைப் பயன் படுத்தி அசுத்தமாக உள்ள நீரை குடிநீராக மாற்ற இயலும் என நிரூபித்திருக்கிறார் ராமகிருஷ்ணா.

குறைந்த செலவு... 

இந்தப் புதிய தொழிற்நுட்பத்தின் மூலம் நீரைத் தூய்மைபடுத்த மிகக் குறைந்த அளவு செலவே ஆகும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் இவர்.

கரண்ட் வேணும்... 

ஆனால், இவரது இந்த கண்டுபிடிப்பிற்கு மின்சாரமும், சிறிதளவு ரசாயனமும் தேவை என்பது முக்கிய விஷயம்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/23/world-scientists-purify-water-using-fruit-peels-179661.html#slide253483

புற்றுநோயிலிருந்து முழுமையாக மீளலாம்... பிரிட்டன் விஞ்ஞானிகள் நம்பிக்கை

புற்றுநோயிலிருந்து முழுமையாக மீளலாம்... பிரிட்டன் விஞ்ஞானிகள் நம்பிக்கை புற்றுநோய் தாக்கியவர்களை முழுவதுமாக குணப்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் தாக்கியவர்களில் மீண்டவர்கள் ஒருசிலர்தான். ஆனால் புற்றுநோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றும் சில நோயின் தீவிரம் தாங்கமுடியாமல் மரணிக்கின்றனர். நோய் தாக்குதலை விட நோய் பற்றிய அச்சம்தான் பலரது மரணத்திற்கு காரணமாகிறது.

பிரிட்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் வார்த்தைகள் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிரிட்டன் சதாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் புற்றுநோயை குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது, eEF2K என்ற புரதமே புற்றுநோய் செல்லின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், எனவே eEF2K புரதத்தின் வளர்ச்சியை தக்க மருந்துகள் மூலம் தடுப்பதனால்,

புற்றுநோய் செல்லின் வளர்ச்சியையும் முறியடித்துவிடலாம் எனவும் அவர்களை நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புற்றுநோய் செல்லின் வளர்ச்சி, உடலின் வளர்ச்சிக்கு உதவும் மற்ற செல்களின் வளர்ச்சியை காட்டிலும் அபரிமிதமாக இருக்கும். eEF2K புரதத்தில் உள்ள உள்ள ஒரு செல்லுலார் கூறுதான் கேன்சர் செல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான செல் பாதிக்கப்படாத அளவிற்கு eEF2K புரதத்திலுள்ள செல்லுலார் கூறின் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் புற்றுநோயிலிருந்து மனிதன் இறப்பதை தடுத்து விடலாம். எனவே தற்போது, eEF2K புரதத்தின் வளர்ச்சியை தடை செய்யும் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சிசிக்சை முறை இன்னும் 5 வருடத்திற்குள் நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


மாதா மாதம் சம்பளம் வாங்குறீங்களா... அப்படீன்னா கண்டிஷனா நீங்க ஐடி தாக்கல் செய்தாக வேண்டும்!

மாதா மாதம் சம்பளம் வாங்குறீங்களா... அப்படீன்னா கண்டிஷனா நீங்க ஐடி தாக்கல் செய்தாக வேண்டும்! மாதச் சம்பளதாரர்கள் அத்தனை பேரும் இனிமேல் தவறாமல் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுவரை வருடத்திற்கு ரூ. 5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டுவோர் மட்டுமே தற்போது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். இதை மாற்றி தற்போது மாதச் சம்பளம் வாங்கும் அத்தனை பேரும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

2 வருடமாக தாக்கல் இல்லை 

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் பழைய நடைமுறையின்படி, 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை.

இனி தாக்கல் செய்ய வேண்டும் 

தற்போது இந்த நிலையை மாற்றியுள்ளதால், ரூ. 5 லட்சத்திற்குக் கீழ் வருவாய் ஈட்டுவோரும், இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

ஏன் விலக்கு... 

ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில் மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் படிவங்களை தாக்கல் செய்வதாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் மூலம் கம்ப்யூட்டரில் பதிவேற்றுவதில் உள்ள சிரமம் காரணமாகவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.

ஆன்லைன் வந்துருச்சே... 

அதனால் விலக்கு நீக்கம் தற்போது ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது மிகவும் எளிமையாக இருக்கிறது. எனவே, ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்களுக்கான விலக்கு நீட்டிக்கப்படவில்லை. அவர்கள் 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

எளிதானது... பாதுகாப்பானது 

அவர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் முறை, எளிதானது, பாதுகாப்பானது. அதில் டிஜிட்டல் கையெழுத்தும் கட்டாயம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் தாக்கல் செய்த படிவங்கள், மிகவிரைவாக கையாளப்படும்

ரூ. 5 லட்சத்துக்கு மேல் 

ஆன்லைன் தாக்கல் கட்டாயம் 5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட மாத சம்பளக்காரர்கள் ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வதை வருமான வரித்துறை கடந்த மே மாதம் கட்டாயம் ஆக்கியது நினைவிருக்கலாம்.