Friday, October 25, 2013

ஒரு சதம் (பைசா) விலையில் ராட்சத கப்பல், மறக்க முடியாத வரலாற்று பின்னணியுடன்!

ஒரு சதம் (பைசா) விலையில் ராட்சத கப்பல், மறக்க முடியாத வரலாற்று பின்னணியுடன்!ஒரு சதம் (பைசா) பணத்தை வைத்து இந்தியாவில் எதுவும் வாங்க முடியாது. அமெரிக்கா, கனடாவில் ஒரு சதத்தை penny என்பார்கள். கடைக்கு போனால், அங்கேயும் எதுவும் வாங்க முடியாது. ஆனால், அமெரிக்க கடற்படை தலைமைச் செயலகத்துக்கு 1 அமெரிக்க சதத்துடன் போனால், ஒரு கப்பலை வாங்கலாம்.

காகிதக் கப்பல் அல்ல, நிஜ கப்பல். அதுவும் சாதா கப்பல் அல்ல. அமெரிக்க வரலாற்றில் இடம் பெற்றுள்ள விமானம் தாங்கி கப்பல். அமெரிக்க கடற்படைக்காக கட்டப்பட்ட முதலாவது supercarrier இதுதான். பெயர் யு.எஸ்.எஸ். பாரஸ்ட்டல்.

இந்த கப்பல் தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில், இதை வெளிநாட்டு கடற்படைகளுக்கு விற்றுவிட முயற்சிகள் நடந்தன. எந்த நாடும் வாங்க முன்வரவில்லை. சரி. இனாமாக கொடுக்கலாம் என்று முயற்சி செய்து பார்த்தார்கள். யுத்த நினைவுச் சின்னங்களை வைத்திருக்கும் பொருட்களை மியூசியங்களை கேட்டுப் பார்த்தார்கள்.

ஊகும். பெற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

அதற்கு காரணங்கள் இரண்டு. ஒரு காரணம், மிகப் பிரமாண்டமான இந்தக் கப்பலை கடலில் நிறுத்தி பராமரிப்பதற்கு ஏகப்பட்ட செலவாகும். இரண்டாவது, தற்போது இந்தக் கப்பல் உள்ள இடத்தில் இருந்து (பிலடெல்ஃபியா கடற்படை தளம்), இழுத்துச் செல்லவே மில்லியன் கணக்கான டாலர்கள் தேவை.இப்படி அனைவராலும் கைவிடப்பட்ட இந்த ‘புகழ்பெற்ற’ சூப்பர்காரியர் கப்பலை, அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஆல்-ஸ்டார் மெட்டல்ஸ் என்ற நிறுவனம் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. அந்த விலைதான், 1 சதம்! (October 22, 2013)

கப்பலுக்கு விலை 1 சதம் என்று எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

இந்த நிறுவனம் பழைய கப்பல்களை வாங்கி அதில் இருந்து இரும்பு, மற்றும் உலோகங்களை பிரித்து விற்கும் நிறுவனம். யு.எஸ்.எஸ். பாரஸ்ட்டல் கப்பல் மிகப் பெரியது என்பதால், அதை இழுத்துச் செல்ல ஏற்படும் செலவு, உடைப்பதற்கான செலவு, மீதி பாகங்களை டிஸ்போஸ் செய்வதற்கான செலவு எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து, கப்பலில் இருந்து பிரித்து எடுக்கக்கூடிய உலோகத்தின் மதிப்பு எவ்வளவு என்பதையும் கணிப்பிட்டபின், தமக்கு சொற்ப லாபமே கிடைக்கும் என்று சொல்லியது.

“வேண்டுமானால் இலவசமாக கொடுங்கள், எடுத்துச் செல்கிறோம்” என்றது நிறுவனம்.

ஆனால், தனியார் நிறுவனத்துக்கு எதையும் இலவசமாக கொடுக்க அமெரிக்க பாதுகாப்பு சட்டத்தில் இடமில்லை. இதனால் 1 சதம் என்று விலை நிர்ணயித்தார்கள்.

மொத்தத்தில் கப்பவை விற்பதால், கடற்படைக்கு பேரீச்சம்பழம் கூட கிடைக்காது!

இந்தக் கப்பல், அமெரிக்க சரித்திரத்தில் இடம்பிடித்த கப்பல் என்றோமே. அந்த விபரம் என்ன?

1967-ம் ஆண்டு, ஜூலை 29-ம் தேதி, இந்தக் கப்பல் மேல்தளத்தில் பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. கப்பல் மேல்தளத்தில் இருந்த ராக்கெட் ஒன்று, தவறுதலாக வெடித்தது. இது விமானம்தாங்கி கப்பல் என்பதால், மேல் தளத்தில் பல விமானங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன.

தவறுதலாக வெடித்த ராக்கெட், கப்பல் மேல்தளத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு புறப்பட தயாராக நின்ற A-4 Skyhawk விமானத்தை போய் தாக்கிறது. அந்த விமானத்துக்குள் இருந்த இளம் விமானி ஜான் மக்கெயின், விமானத்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார். ஆனால், அவரது விமானம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, கப்பல் தளத்தில் இருந்த மற்றைய விமானங்களும் வெடிக்கத் தொடங்கின.

அமெரிக்க கடற்படை வரலாற்றின் மிகப்பெரிய விபத்துக்களில் இதுவும் ஒன்று. 134 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 21 விமானங்கள் சேதமடைந்தன.

சரி. தவறுதலாக வெடித்த ராக்கெட், முதலில் தாக்கிய விமானத்துக்குள் இருந்த இளம் விமானி ஜான் மக்கெயின், விமானத்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார் என்று சொன்னோமே.. அதன்பின் அவருக்கு என்ன ஆனது? இந்த விபத்தில் அவருக்கு மார்பிலும் காலிலும் பலத்த அடி.

அதிலிருந்து குணமடைந்தபின், மீண்டும் போர் விமானங்களை செலுத்தியபோது, அவரது விமானம் வியட்னாமில் சுட்டுவீழ்த்தப்பட்டது. அதிலும் உயிர் தப்பினார். ஆனால், வியட்னாமியர்களிடம் போர் கைதியாக சிக்கிக் கொண்டார். ஐந்தரை ஆண்டுகள் போர் கைதியாக இருந்தார். அதன்பின் விடுவிக்கப்பட்டு 1973-ம் ஆண்டு அமெரிக்கா வந்தார்.

பின்னாட்களில் அரசியலில் ஈடுபட்டு செனட்டர் ஆனார். நாட்டுக்காக அவர் புரிந்த சேவை காரணமாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டார். ஆம். அந்த இளம் விமானிதான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, ஒபாமாவிடம் தோற்றுப்போன ஜான் மக்கெயின் (John S. McCain III)!
ரூபாய் நோட்ல ஐலவ்யூ சொல்லாதீங்க… செல்லாம போயிடும்!

ரூபாய் நோட்ல ஐலவ்யூ சொல்லாதீங்க… செல்லாம போயிடும்! அட்ரஸ் தொடங்கி ஐலவ்யூ வரை ரூபாய் நோட்டில் கிறுக்கிவைக்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு துண்டு சீட்டை விட மோசமாக பணத்தை கையாளுகின்றனர். 

இனி பணத்தில் கிறுக்கினால் அது செல்லாது என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 

இதன்படி பேனா, பென்சில், ஸ்கெட்ச், க்ரேயான்ஸ் ஆகிய எழுது பொருட்களால் ரூபாய் நோட்டுக்களில் ஏதாவது எழுதப்பட்ருந்தால், அந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போய்விடும். 

அவசரத்திற்கு அட்ரஸ் 

இந்திய இறையாண்மையின் சின்னமாக விளங்கும் ரூபாய் நோட்டுக்களை பெரும்பாலோனோர் அவமரியாதை செய்கின்றனர். அவசரத் தேவைக்கு தொலைபேசி எண்களை எழுதுவதற்கும், முகவரிகளை எழுதுவதற்கும் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

கடவுளை கூப்பிட 

சிவ சிவா, ஜீசஸ் நெவர் பெயில்ஸ், காட் பிளஸ் யூ, என்றும் பல வாசகங்களை பணத்தில் எழுதுகின்றனர். கவிதைகள், நடிகர்கள், நடிகைகள் பெயர், விளையாட்டு வீரர்கள் பெயர் போன்றவற்றை கூட எழுதுகின்றனர்.

காதலை சொல்ல 

கல்லூரி மாணவர்கள், மாணவிகள் தங்கள் நாண்பர்கள், காதலன், காதலி பெயர்கள், பிறந்த தேதி, ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று எழுதுகின்றனர்.

கார்ட்டூன் வரைய 

சிறுவர்கள் ஸ்கெட்ச், கி கார்ட்டூன் ஓவியங்கள் வரைந்து விளையாடுகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், பணத்தில் கிறுக்கிவைக்கின்றனர். படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் படித்தவர்களும் பணத்தினை மதிப்பதில்லை.

அரசு நிறுவனங்களில் 

ரூபாய் நோட்டுக்களைப் பொறுத்தவரை, மக்கள் மட்டுமின்றி, வியாபாரிகள், வங்கி பணியாளர்கள், தபால் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பணம் பட்டுவாடா தொடர்பான பணி மேற்கொள்ளும் அதிகாரிகளே பெரும்பாலும் இந்த தவறைச் செய்கின்றனர்.

சிவப்பு மையில் 

ரூபாய் நோட்டு கட்டுகளில் இருக்கும் பணத்தின் எண்ணிக்கையைத் எளிதில் தெரிந்துகொள்ள வசதியாக 25, 50, 75, 100 என்ற எண்களை சிவப்பு, கறுப்பு நிற பேனாவாலும், பென்சிலாலும் குறிப்பிடுகின்றனர். மின் கட்டண மையத்தில் பணம் வசூலிப்பாளரே மக்களிடம் 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதில் மின் இணைப்பு எண்ணை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் மக்களும் நோட்டுகளில் பேனாவால் எழுதிவிடுகின்றனர்.

ரிசர்வ் வங்கி 

ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்படுத்தும் முறை குறித்து ரிசர்வ் வங்கி இணையதளத்தில், ‘‘இந்திய இறையாண்மையின் சின்னமாக விளங்கும் ரூபாய் நோட்டுக்களை அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாலையாக அணிவித்து அவமரியாதை செய்யாதீர்கள்‘‘ என்று செய்தி வெளியிட்டிருந்தது.

பணமாலை 

ஆனாலும், தேர்தல் நேரங்களில் ரூபாய் நோட்டுக்களை தலைவர்களுக்கு மாலையாக அணிவித்து போட்டா பிடித்துக் கொள்வது தற்பொழுது ஒரு கலாச்சாரமாகவே நிகழ்ந்து வருகிறது.

செல்லாது செல்லாது 

இனி பணத்தில் பேனா, பென்சில், ஸ்கெட்ச், க்ரேயான்ஸ் ஆகிய எழுது பொருட்களால் ரூபாய் நோட்டுக்களில் ஏதாவது எழுதப்பட்ருந்தால், அந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போய்விடும். ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விழிப்புணர்வு வருமா? 

அரசு பணப் பட்டுவாடா பிரிவில் இருக்கும் ஊழியர்கள் ரூபாய் நோட்டுக்களில் எழுதுவதையும், எழுதச் சொல்லுவதையும் நிறுத்த வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிவரும் காலங்களிலாவது ரூபாய் நோட்டுக்களில் எழுதுவது தடுக்கப்படலாம்.


Thursday, October 24, 2013

அமெரிக்க பூங்காவில் இருந்து ரூ.37 லட்சம் வைர கல்லை கண்டெடுத்த 14 வயது சிறுமி

அமெரிக்க பூங்காவில் இருந்து ரூ.37 லட்சம் வைர கல்லை கண்டெடுத்த 14 வயது சிறுமி 


அமெரிக்காவில் உள்ள பார்க் ஒன்றில் ரூ. 36 லட்சத்து 92 ஆயிரத்து 504 மதிப்புள்ள 3.85 காரட் வைரக் கல்லை 14 வயது சிறுமி ஒருவர் கண்டெடுத்துள்ளார். 

அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனா கிளைமர் தனது குடும்பத்தாருடன் கடந்த சனிக்கிழமை அர்கன்சாஸில் உள்ள டைமண்ட்ஸ் ஸ்டேட் பார்க்கிற்கு சென்றார். வைரங்கள் புதைந்து கிடக்கும் அந்த பார்க்கை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அவர்கள் கண்டெடுக்கும் வைரத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என்ற பாலிசியும் உள்ளது. 

இந்நிலையில் அந்த பார்க்கில் சுமார் 2 மணிநேரமாக வைரத்தை தேடி சுற்றிய தனாவின் முயற்சி இறுதியில் வெற்றி பெற்றது. அவர் ரூ.36 லட்சத்து 92 ஆயிரத்து 504 மதிப்புள்ள 3.85 காரட் வைரக் கல்லை கண்டெடுத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், 

முதலில் ஏதோ சாக்லேட் பேப்பர் என்று நினைத்தேன். அதை தொட்டபோது அது மார்பிள் என்று நினைத்தேன். ஆனால் அது வைரம் என்றார். 

37 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பார்க்கில் இருந்து இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 400 வைரக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. தனா தான் எடுத்த வைரத்தை மோதிரமாக செய்து போடுவாராம் இல்லை என்றால் அதை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் கல்விச் செலவுகளை கவனித்துக் கொள்வாராம்.


http://www.craterofdiamondsstatepark.com/digging-for-diamonds/default.aspx#Carat

Wednesday, October 23, 2013

சிரியா போர்: கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொல்லும் கொடூர ‘சிகரெட் போட்டி’

சிரியா போர்: கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொல்லும் கொடூர ‘சிகரெட் போட்டி’ 
சிரியப் போரில் கருவில் இருக்கும் குழந்தையைச் சுட்டால் சிகரெட் பரிசு என கொடூரப்போட்டி அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து மருத்துவர் ஒருவர். 

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சிரியாவில், அந்த நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. இதன் விளைவாக அதிபர் ஆதரவு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டு போர் 3-வது ஆண்டாக நீடித்து வருகிறது.இந்த நிலையில் சமீபத்தில் தலைநகர் டமாஸ்கஸ்சின் புறநகர்ப்பகுதிகளில் அதிபர் ஆதரவு படையினர் பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுத தாக்குதல்களை நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என 1300-க்கும் மேற்பட்டோர் துடிதுடிக்க உயிரிழந்தனர். 

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணி புரிந்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் நாட் என்ற மருத்துவர் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் சிரியாவில் கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது...

தாக்குதலுக்கு ஆளான கர்ப்பிணிகள்... 
சிரியாவில் போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியாகின்றனர். நான் இதுவரை 20 ஆண்டுகள் போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளேன். ஆனால், இங்குதான் கர்ப்பிணி பெண்களை தாக்கி கொலை செய்வதை பார்க்கிறேன்.

சிகரெட் போட்டி.... 
மறைந்திருந்து தாக்கும் சிலர் அவர்களது பயிற்சிக்காக அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் சுடுகின்றனர். இதில் மிக கொடூரமாக இருந்தது என்னவென்றால் கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசுவை சுட்டு கொல்பவர்களுக்கு சிகரெட்டுகள் வழங்கப்படும் போட்டியும் நடைபெறுகிறது.

நிறைமாத கர்ப்பிணிகள்... 
ஒரு நாள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட இரண்டு நிறைமாத கர்ப்பிணிகளின் கர்ப்பப்பை துப்பாகியால் சுடப்பட்டு, அவர்களின் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தன.

நரகத்தை விடக் கொடிது.... 
இந்த கொடுமையை எவ்வாறு விவரிப்பது என்ற எனக்கு தெரியவில்லை. இது நரகத்தில் ஏற்படும் துயரத்தைவிடவும் கொடியது' எனத் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு... 
தற்போது லண்டன் திரும்பியிருக்கும் டேவிட், ‘சிரியாவில் தேவையான மருத்துவ உதவிகள் மக்களை சென்றடைவதில்லை' எனக் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : அவர் இதை செய்தது யார் என்பதை குறிப்பிடவில்லை ஆயினும் சண்டை பிடிக்கும் இரு சற்றும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். சிறந்த அறிவுரைகள் கூறும் இந்த மதத்தில் பிறந்த இவர்கள் போன்றோரின் செயல்களினால் முழு மதமும் அவமானப்படுகின்றது.

Tuesday, October 22, 2013

விமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போயிங் 747 விமானங்கள்!

விமானிகளின் தவறு: வானில் மோதி கொள்ள இருந்த இரு போயிங் 747 விமானங்கள்!
சுமார் 1000 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இரு போயிங் 747 ஜம்போ ஜெட் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளவிருந்த விபத்து கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு விமானங்களின் விமானிகளும், தரையில் ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை சரியாக செயல்படுத்தாத காரணத்தாலேயே, இந்த பயங்கர நிலை ஏற்பட்டது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் இரு விமானங்களுக்கும் இடையே வெறும் 100 அடி இடைவெளி மட்டும் இருந்துள்ளது.

வானில் மோதிக்கொள்ள இருந்த இரு விமானங்களில் ஒன்று, பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 747 விமானம். லண்டனில் இருந்து கனடாவின் வான்கூவருக்கு அது பறந்து கொண்டிருந்தது. மற்றைய 747 விமானம், லுஃப்தான்சாவின் பிராங்பர்ட் – வாஷிங்டன் விமானம்.

வெவ்வேறு இடங்களில் புறப்பட்ட இரு விமானங்களும், ஸ்காட்லாந்து அருகே, அட்லான்டிக் சமுத்திரத்தின் மேலே பறக்கத் தொடங்குமாறு பிளைட் பிளான் கொடுக்கப்பட்டிருந்தது.

இரு விமானங்களும் அட்லான்டிக் சமுத்திர பகுதிக்கு வந்தபோது, கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்த ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவர் ரேடாரில், அவை மிக ஆபத்தான அளவில் நெருக்கமாக பறப்பதை அவதானித்தார், ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர்.அபாய நிலையை உணர்ந்துகொண்ட ஏர் ட்ராபிக் கன்ட்ரோலர், இடதுபுறம் பறந்த விமானத்தை மேலும் இடதுபுறம் திரும்புமாறும், வலதுபுறம் இருந்த விமானத்தை மேலும் வலப்புறம் திருப்புமாறும் ரேடியோ சாதனம் மூலம், அறிவுறுத்தல் கொடுத்தார்.

இரு விமானங்களில் இருந்த விமானிகளும், அந்த அறிவுறுத்தலுக்கு நேர்மாறான முறையில் விமானத்தை திருப்பினர்.

அதாவது இடதுபுற விமானம் வலதுபுறம் திரும்பியது, வலதுபுற விமானம் இடதுபுறம் திரும்பியது!

அதையடுத்து இரு விமானங்களும் ஒன்றையொன்று நோக்கி பாரலலாக நெருங்கிச் செல்லத் தொடங்கின (மேலேயுள்ள வரைபடம் பார்க்கவும்).

இப்படி சிறிது நேரம் பறந்த நிலையில்தான் நல்ல வேளையாக இரு விமானங்களில் இருந்த 4 விமானிகளும், தமது விமானத்தை நோக்கி மற்றொரு விமானம் வருவதை நேரில் கண்டனர்.

4 விமானிகளும் உடனடியாக செயல்பட்டு, ஒரு விமானம் சடுதியாக மேலுயர, மற்றைய விமானம் சடுதியாக கீழ்நோக்கி டைவ் அடிக்க, மிகப் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.

இந்த விமானங்கள் அபாயகரமான அளவில் மிக நெருக்கமாக பறப்பதை ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் இருந்து அவதானித்து கூறியும், அந்த அறிவுறுத்தல் தலைகீழாக செயல்படுத்தப்பட்ட சம்பவம், சிவில் ஏவியேஷன் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது இரு விமானங்களும் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து 30 மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தன.

கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய UK Airprox Board விசாரணை தற்போதுதான் முடிந்து, இந்த விஷயம் வெளியாகியுள்ளது.

ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் கன்ட்ரோலர்கள் பணிபுரியும் சூழ்நிலையையும், அங்கு விமானங்களின் நகர்வுகளை மானிட்டர் செய்ய அவர்கள் பயன்படுத்தும் ராடார் சாதனங்களையும், நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்க்காவிட்டால் போட்டோக்களை பார்க்கவும்.

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!!

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்!!! 
உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள். ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அத்தகைய ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையைத் தான் விளைவிக்கும். 

எப்போதும் பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும். அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் தான் மிகவும் ஆபத்தானது. இப்போது ஆப்பிள் ஜூஸை பருகினால் விளையும் தீமைகள் என்னவென்று பார்ப்போமா!!! 

இதயத்திற்கு ஆபத்து 

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இது உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அதாவது கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஆர்செனிக் 

ஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எடை அதிகரிப்பு 

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் ஊட்டச்சத்து நிபுணர்களும், ஆப்பிள் ஜூஸை தினமும் பருகிப் பாருங்கள், உடல் எடை அதிகரிப்பதை நன்கு காணலாம் என்று சொல்கின்றனர்.

அதிகப்படியான கார்போஹைட்ரேட் 

ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால், இதயத்திற்கு எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நீரிழிவு 

ஆப்பிள் ஜூஸ் போடும் போது, அதில் செயற்கை இனிப்பான சர்க்கரையை பயன்படுத்தினால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவுக்கு வழிவகுக்கும்.

நார்ச்சத்து இல்லாதது 

பொதுவாக ஆப்பிளில் புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், முக்கியமாக நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் சுத்தமாக நார்ச்சத்து இருக்காது.

பற்களில் பிரச்சனை 

ஆப்பிள் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

பதப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஜூஸ் 

பாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான இரசாயங்கள் சேர்ப்பதால், அது உடலின் ஆரோக்கியத்தை இன்னும் அதிகம் பாதிக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

குறிப்பு 

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், ஆப்பிளை ஜூஸ், ஸ்மூத்தி என்று செய்து குடிக்காமல், அதனை அப்படியே சாப்பிடுங்கள். மேலும் நிபுணர்களும் இதனையே பரிந்துரைக்கிறார்கள்.


விண்வெளியில் உருவான ‘கழிவுப்பொருள் டைனோசர்’... நவம்பரில் பூமிக்கு வருகிறது

விண்வெளியில் உருவான ‘கழிவுப்பொருள் டைனோசர்’... நவம்பரில் பூமிக்கு வருகிறது 
அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் இருந்தபடியே அழகிய டைனோசர் பொம்மை ஒன்றை தனது மகனுக்காக உருவாக்கியுள்ளார்.

பொதுவாக தாயுள்ளம் என்பது எதைப் பார்த்தாலும், அதைத் தன் குழந்தைக்கு கொடுத்தால் அது விரும்புமா என்ற சிந்தனையிலேயே இருக்கும் என்பது உண்மை. அது உணவானாலும் சரி, விளையாட்டுப் பொருளானாலும் சரி.

இந்த உணர்வு சராசர் பெண்ணிற்கும் சரி, விண்வெளி வீரரானாலும் சரி ஒன்று தான் என்பதை நிரூபித்துள்ளது இந்தச் சம்பவம்.

விண்வெளி வீராங்கனை.... 

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேரன் நைபர்க். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி ஆராய்ச்சி செய்து வருகிறார்.


டைனோசர்.... 

கேரன் விண்வெளியில் இருந்தாலும், பூமி திரும்பும் போது தன் குழந்தைக்கு எதையாவது தர வேண்டும் என விரும்பியுள்ளார். அதன்படி, அங்கு தன் கைகளுக்குக் கிடைத்த கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி டைனோசர் பொம்மை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

ஸ்பேஸ் ஜங்.... 

விண்வெளிக் கழிவுகளில் உருவான முதல் பொம்மை என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த டைனோசர் ‘ஸ்பேஸ் ஜங்' எனப்படும் பொருட்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.

துணிப்பொம்மை... 

ரஷிய உணவு கொள்கலன்களில் ஒட்டப்பட்டு வரும் கொக்கி பட்டைத் துணி ( வெல்க்ரோ) மாதிரியான துணி வகையைக் கொண்டு இந்த டைனோசரை உருவாக்கியிருக்கிறார் கேரன். பொம்மையின் உள்ளே பயன் படுத்திய பழைய டி-சர்ட்டின் கிழிசல்களை அடைத்துள்ளாராம்.


பிளஸ்சி.... 

இந்த டைனோசர் பொம்மைக்கு பிளஸ்சி எனப் பெயரிட்டுள்ளார் கேரன்.

விண்வெளிப்பரிசு... 

வருகிற நவம்பர் மாதம் பூமி திரும்பும் போது இந்த டைனோசர் பொம்மையை தனது 3 வயது மகன் ஜாக்குக்கு கொடுக்கத் தீர்மானித்துள்ளாராம் கேரன்.

விண்வெளிக் குளியல்.... 

விண்வெளியில் இருந்தபடியே தலையை ஷாம்பு போட்டு அலசுவது எப்படி என செய்து காட்டினாரே அந்த கேரன் தான் தற்போது டைனோசர் பொம்மை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


காஸ்ட்லி பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண செலவு… ஹம்மா! - கட்டாயம் படிங்க பாஸ் !!!

காஸ்ட்லி பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண செலவு… ஹம்மா! - கட்டாயம் படிங்க பாஸ் !!!


பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமராக வைத்திருப்பது, மிகவும் காஸ்ட்லியான விஷயம் என தெரியவந்துள்ளது. காரணம், பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக செலவான மக்களின் வரிப் பணம் 640 கோடி ரூபாய்.

மற்றைய உலக நாடுகளுடன் உறவை பலப்படுத்தவே பிரதமர் 70 தடவைகள் வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டியிருந்தது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் உறவைப் பலப்படுத்த பிரதமரே 70 தடவைகள் பறக்க வேண்டும் என்றால், இதற்காகவென்று பதவியில் உள்ள வெளியுறவு அமைச்சர் எத்தனை தடவைகள் பறந்திருக்க வேண்டியிருந்திருக்கும்?

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘உறவை பலப்படுத்த’ அதிக செலவான நாடு, மெக்சிகோ. பிரதமரின் சிங்கின் சிங்கிள் மெக்சிகோ பயணத்துக்காக மட்டும், 27 கோடி ரூபா செலவாகியது. அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது பிரதமரின் அமெரிக்கப் பயணம். அதற்கான பில், 23 கோடி ரூபாய்.

பொதுவாக குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் தமது பயணங்களை கோடை விடுமுறையின் போதே மேற்கொள்வது வழக்கம். அதேபோல நமது பிரதமர் சிங் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள ‘சிறப்பு காலம்’ ஏதாவது உண்டா?

ஆம், உண்டு.

முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருக்கும் போது, 24 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார் பிரதமர் சிங்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கெல்லாம் தலைவராக செயல்பட வேண்டிய பிரதமர், நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருக்கும் போது, அதற்கு கட் அடித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு சென்று உலக நாடுகளுடன் உறவை பலப்படுத்திவிட்டு திரும்பியுள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம் அல்லவா?

Monday, October 21, 2013

பொய் சொல்ற பொண்ணுங்களை மட்டும் நம்பவே நம்பாதீங்க...!

பொய் சொல்ற பொண்ணுங்களை மட்டும் நம்பவே நம்பாதீங்க...! 


அலுவலகத்தில் 8 வகையான 'அல்ப்பை' பெண்கள் இருப்பதாக மெல்போர்னைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணரும், எழுத்தாளருமான மெரெடி ஃபுல்லர் தெரிவித்துள்ளார். 

அலுவலகத்தில் பல தரப்பட்ட பெண்கள் பணியாற்றுவார்கள். இதில் 8 வகையான 'அல்ப்பை' பெண்கள் உள்ளனர் என்று மெல்போர்னைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணரும், எழுத்தாளருமான மெரடித் ஃபுல்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வொர்க்கிங் வித் மீன் கேர்ள்ஸ் என்ற புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். 

அந்த 'அல்ப்பை'களிடம் சற்று ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். அந்த 8 வகை அல்ப்பைகள் யார் யார் என்று பார்ப்போம்.


தலைக்கனம் பிடிச்சது 

சில தலைக்கனம் பிடித்த பெண்கள் அலுவலகத்தில் உள்ள யாரையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.


சதா குறைபாடுவது 

சில பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் உங்கள் வேலையில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.


வாயாலே பாயாசம் 

சில பெண்கள் வாயாலே ஊருக்கு பாயாசம் காய்ச்சி கொடுக்கும் அளவுக்கு இனிப்பாக பேசுவார்கள். ஆனால் உண்மையில் இரட்டை முகம் உடையவர்கள்.


நான் தான் 

சில பெண்கள் நான் தான் ஸ்டார் நீ வேலைக்காரன் என்ற நினைப்பில் இருப்பார்கள்.


விளாசல் பார்ட்டி

சில பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு கத்திக் கொண்டே இருப்பார்கள்.


பொய்க்கோழி 

சில பெண்கள் தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்வார்கள். அவர்களை எப்பொழுதும் நம்பவே கூடாது.


போட்டி 

சில பெண்கள் எதற்கெடுத்தாலும் போட்டி போடுவார்கள்.


ஃபிராடு 

சில பெண்கள் தங்களின் வேலையை அடுத்தவர்களை வைத்து செய்து முடித்துவிட்டு அதை தாங்கள் செய்ததாகக் கூறுவார்கள்.


ஒரு கோடி அமெரிக்க டொலர் (சுமார் 131 கோடி இலங்கை ரூபா, 60கோடி இந்திய ரூபா)) பெறுமதியான பிரா

பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் நடத்தும் வருடாந்த கண்காட்சியில்ஒரு கோடி அமெரிக்க டொலர் (சுமார் 131 கோடி இலங்கை ரூபா, 60கோடி இந்திய ரூபா)) பெறுமதியான பிராவை அணிந்து காட்சிப்படுத்துவதற்கு மொடல் அழகி கென்டிஸ் ஸ்வான்போல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் வருடாந்தம் நியூயோர்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சியின்போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டொலர் பெறுமதியான ஃபான்டெஸி பிராவையும் அறிமுகப்படுத்துவது வழக்கம்.

இந்த பிராவை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மொடல் அழகிகள் காத்திருப்பர். உள்ளாடை மொடலிங் துறைக்கான பெரும் கௌரவமாகவும் இது கருதப்படுகிறது.

இம்முறை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கென்டிஸ் ஸ்வான் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். 18 கரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப்பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து பெறப்பட்டஇ வைரங்கள்இ நீலக்கற்கள்இ 4200 இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற நகை வடிவமைப்பு நிறுவனமான ஆழரயறயன நிறுவனத்தால் விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனத்துக்காக பிரத்தியேகமாக இந்த பிரா தயாரிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் தடவை இத்தகைய ஆடம்பர ஃபாண்டெஸி பிராவை விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ளோடியா ஷிபர் அந்த பிராவை அணிந்து நடந்தார்.

2000 ஆம் ஆண்டு 1.5 கோடி டொலர் பெறுமதியான பிராவை கிஸெல் பன்ட்சென் அணிந்து நடந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சியில் பிரேஸிலைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரியா அம்ப்ரோஸியோ 25 லட்சம் டொலர் பெறுமதியான பிராவை அணிந்தார்.

இம்முறை இந்த வாய்ப்பு கிடைத்தமையால் தான் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக 23 வயதான கன்டிஸ் ஸ்வான் போல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘எனது உடலுக்குப் பொருத்தமான அளவில் பிராவை தயாரிப்பதற்காக எனது உடலின் மாதிரி உருவமொன்றை அவர்கள் செய்யவேண்டியிருந்தது. அப்போதிருந்து இந்த பிராவை அவர்கள் எப்படி செய்வார்கள்?

அது எப்படி காட்சியளிக்கும்? என நான் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இந்தளவு பெறுமதியான ஆடை ஆபரணம் எதையும் நான் ஒருபோதும் அணியவில்லை.

இந்த பிராவுக்குப் பாதுகாப்பாக இரு மெய்ப்பாதுகாவலர்களும் வருவர். இதை நாம் மிகக் கவனமாக கையாள வேண்டியுள்ளது’ எனவும் கன்டீஸ் ஸ்வான்போல் கூறியுள்ளார்.

மறுபடியும் ஒரு மழைக்காலம்.. ஆனா ஆரம்பிச்சதுமே சென்னை திணறுதேப்பா...!

மறுபடியும் ஒரு மழைக்காலம்.. ஆனா ஆரம்பிச்சதுமே சென்னை திணறுதேப்பா...! 
இதோ.. வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தின் வாசல்படிக்கு வந்து விட்டது. ஆனால் ஆரம்பிப்பதற்குள்ளாகவே சென்னை திணறிப் போய்க் கிடக்கிறது. ஒரு மழைக்கே சென்னை நகரம் திணறுகிறது. இதே நிலைதான் பல காலமாக.. நிவாரணத்தைத்தான் தேட வேண்டியிருக்கிறது. 

தொடர் மழையை மக்கள் முழுமனதோடு தாங்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.. ஆனால் நகரம்தான் அந்த ஸ்திரத்தில் இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது. 

ஏற்கனவே சேதமடைந்து போயுள்ள சாலைகள், குண்டும் குழியுமாக காணப்படும் புறநகர்கள், சரியான மழை நீர் வடிகால்கள் இல்லாத நகரின் பெரும்பாலான பகுதிகள் என்று ஏகப்பட்ட ஓட்டைகள்.. இந்த நிலையில் மழை அடுத்த சில நாட்களில் அடை மழையாக அவதாரம் எடுத்தால் நகரம் என்னாகுமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.

தயார் நிலையில் இல்லாத தலைநகர்... 

எப்போதுமே மழை வந்து விட்டால் போதும் சென்னை தத்தளித்துப் போய் விடும். அது சாதாரண மழையாக இருந்தால் கூட நகரமே ஸ்தம்பிக்கும். காரணம், முறையான தயார் நிலையில் அரசு இயந்திரமும், மக்களும் இல்லாததால்.

மழை நீர் வடிகால்கள் எங்கேப்பா... 

நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி இருக்கிறது என்றாலும் கூட அவை முறையாக இல்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்பு பல்லைக் காட்டுகிறது. இதனால் கால்வாயில் போக வேண்டிய மழை நீர் சாலைகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது.

கக்கூஸ் தண்ணீர் வேற... 

இதில் பல இடங்களில், குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் அல்லது மழை நீர் வடிகால், கழிவு நீர் வடிகால் இல்லாத இடங்களில் கழிவறை தண்ணீரையும் கூட பலர் மழை நீர் வடிகால்களில் இணைத்து விட்டுள்ளனர். மழைக்காலத்தில் இவையெல்லாம் சாலையில் ஓடி மூக்கைப் பொத்திக் கொண்டு மிதக்கும் நிலைதான் காணப்படுகிறது.

நோய்கள் மறுபக்கம் 

இப்படிப்பட்ட அசுத்தமான சூழல் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் மழைக்காலத்தில் மக்களை அலைக்கழிக்கிறது.

கால்வாய்கள் அடைத்துக் கிடக்கின்றனவாம்... 

சென்னை நகரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழை நீர்க்கால்வாய்கள் பல இடங்களில் அடைத்துக் கிடப்பதாக அதிகாரிகளே சொல்கிறார்கள். இதனால் பெரு மழை வந்தால் நிச்சயம் நகரம் வெள்ளக்காடாகும் என்றும் அவர்களே கூறுகிறார்கள்.

புதிய மாநகராட்சிப் பகுதிகளில் பெரும் பீதி 

சென்னை மாகநராட்சியுடன் சில காலத்திற்கு முன்பு இணைக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் கழிவு நீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி ஆகியவை ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது. இங்கெல்லாம் மக்கள் பெரும் பீதியில்தான் உள்ளனர். இந்த நிலைதான் வருடா வருடம் தொடர்கிறது.. இன்னும் எத்தனை மழைக்காலத்திற்கு நீடிக்கப் போகிறதோ...  


சச்சின் விளையாடும் கடைசி ஆட்டம்: ரசிகர்களுக்கு ஒரு 'கெட்ட' செய்தி

சச்சின் விளையாடும் கடைசி ஆட்டம்: ரசிகர்களுக்கு ஒரு 'கெட்ட' செய்தி 
சச்சின் டெண்டுல்கர் விளையாடும் கடைசி போட்டியைக் காண ரசிகர்களுக்கு மிகக் குறைவான அளவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. 

சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுகிறார். 

இந்த போட்டிகளில் மும்பை வாங்கேட ஸ்டேடியம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறுகின்றன. ஈடன் கார்டனில் நடக்கும் போட்டி தான் சச்சின் விளையாடும் கடைசி போட்டியாகும்.

சிறப்பான ஏற்பாடு 

சச்சினின் கடைசி போட்டியை மறக்க முடியாத ஒன்றாக ஆக்க பெங்காள் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அமிதாப், ஷாருக் 

சச்சினின் கடைசி ஆட்டத்தை காண வருமாறு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு கெட்ட செய்தி 

ஈடன் கார்டனில் சச்சின் விளையாடும் இறுதி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு வெறும் 5,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் பல்வேறு கிளப் உறுப்பினர்கள், பிரபலங்களுக்காக 67,000 இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது.

இதயத்துடிப்பு நின்றது போன்று 

சச்சின் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தியைக் கேட்டதும் எனது இதயத் துடிப்பு நின்றது போன்று உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அவரையும், அவரது ஆட்டத்தையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றார் அமிதாப் பச்சன்.


வருகின்றது சூப்பர் வேக பயணிகள் விமானம்! லண்டன் – சிட்னி வெறும் 2 மணி நேரத்தில்!!

வருகின்றது சூப்பர் வேக பயணிகள் விமானம்! லண்டன் – சிட்னி வெறும் 2 மணி நேரத்தில்!!பிரிட்டிஷ் நிறுவனம் வெர்ஜின் அட்லான்டிக்குக்கு சொந்தமான தனியார் விண்கலம் SS2, சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மொஜாவ் பாலைவனத்தில் இயக்கப்பட்ட டெஸ்ட் பிளைட், விண்வெளி உல்லாசப் பயணத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது.

வெர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்தின் மற்றொரு ப்ராஜெக்ட், SS2 விண்கலம். விண்வெளியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதும், விண்வெளியில் ஹோட்டல் ஒன்றை அமைத்து, உல்லாசப் பயணிகளை அதில் தங்க வைப்பதும் இந்த அட்வென்சர் ப்ராஜெக்ட்டின் நோக்கம்.

மொஜாவ் பாலைவனத்தில் டெஸ்ட் பிளைட்டை செலுத்திச் சென்றவர்கள், விண்வெளி வீரர்களான மார்க் ஸ்டக்கி மற்றும், கிளின்ட் நிக்கோலஸ். SS2 விண்கலத்தை சுமார் ஒரு மணி நேரம் பறக்கவிட்டபின், பத்திரமாக தரையிறங்கினார்கள் இவர்கள்.

SS2 விண்கல சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததில், தற்போது மற்றொரு சாத்தியத்தை ஆராயத் தொடங்கியுள்ளார்கள். அது என்னவென்றால், இந்த விண்கலத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக விமானங்களை தயாரிப்பது. அது நடந்துவிட்டால், நாடுகளுக்கு இடையிலான பயண நேரம், வெகுவாக குறைந்துவிடும்.

உதாரணமாக, தற்போது சோதனை செய்யப்பட்ட SS2 விண்கலத்தின் வேகத்துடன் லண்டனில் இருந்து சிட்னிக்கு (ஆஸ்திரேலியா) ஒரு அதிவேக விமானம் பறக்க விடப்பட்டால், அதன் பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக இருக்கும்!

தற்போது லண்டனில் இருந்து சிட்னிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ், அல்லது குவான்டஸ் ஏர்வேஸ் விமான சேவையில் பயணம் செய்தால் (ஏர்பஸ், அல்லது போயிங் விமானங்கள்) பயண நேரம் சுமார் 21 மணிநேரம் 30 நிமிடங்கள். அந்த பயணத்தை வெறும் 2 மணி நேரத்தில் பறக்க முடிந்தால் எப்படியிருக்கும்?

சிவில் விமானப் பயணத்தின் அடுத்த கட்டம், இதுவாகத்தான் இருக்கப் போகிறது.ஆனால், இதில் ஒரு கேட்ச் இருக்கும். இந்த அதிவேக பயணத்துக்கான டிக்கெட் கட்டணம், வழமையான பயண டிக்கெட்டைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும்.

முன்பு அதிவேக சூப்பர்சோனிக் கொன்கோர்ட் விமானம் இயக்கப்பட்ட நாட்களில், பாரிஸ் – நியூயார்க் ரூட்டில் ஏர் பிரான்ஸூம், லண்டன் – நியூயார்க் ரூட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸூம் சூப்பாசோனிக் விமானங்களை இயக்கின. அவற்றுக்கான கட்டணம், வழமையாக இந்த ரூட்டில் உள்ள பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் கட்டணத்தைவிட அதிகம்!

இதுவும், அப்படியொரு ‘உயர்ந்த கட்டணத்தில்’ இயக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சரி. விமானம் ஏறத்தானே அப்படி கட்டணம். போட்டோ பார்ப்பது இலவசம் அல்லவா? SS2 விண்கல சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை தொகுத்து தருகிறோம், பார்த்து வையுங்கள்.

இன்னும் சில வருடங்களில் பயணிகள் விமானங்களும் இந்த ஷேப்பில் பறக்கப் போகின்றன. நீங்கள் முதலிலேயே பார்த்து விடுங்கள். சார்.. உங்களுக்கு ஏன் தலைமுடி நிறைய நரைக்குதுன்னு தெரியுமா....?

சார்.. உங்களுக்கு ஏன் தலைமுடி நிறைய நரைக்குதுன்னு தெரியுமா....? 
இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது முடி நரைத்தல். இப்போதெல்லாம் இந்த பிரச்சனை பரவலாக பல பேரை தாக்குகிறது. முக்கியமாக இளம் வயது ஆண்களையும், பெண்களையும். வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் இதர பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது. 

இன்று பல இளைஞர்கள் சாம்பல் நிறம் முதல் வெண்ணிற இளநரை முடியுடன் சுற்றி திரிவதை காண்கிறோம். வெறும் 34 வயதான கேடீ ஹோம் என்ற ஹாலிவுட் நடிகையை சாம்பல் நிற நரைத்த முடியுடன், நியூயார்க் நகரத்தில் ஒரு உணவகத்தில் காண முடிந்தது. சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த இளநரை வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. நம் நாட்டிலும் இந்த பிரச்சனை அதிகளவில் உள்ளது. இதை பற்றி வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாமா?

எப்படி ஆரம்பிக்கிறது? 

பொதுவாக அடர்த்தியான கருமையான முடி உதிர தொடங்கும் போது, மெல்லிய வெண்ணிற முடி தெளிவாக தென்பட தொடங்கும். இப்படி கொட்டும் முடி சில மாதங்களுக்கு நீடிக்கும். ஆனால் திடீரென ஒரு இரவில் கொட்டிவிடும் முடிகளால் கூட இது ஏற்படலாம். நரைப்பதற்கு கூட ஒரு அமைப்பு உள்ளது. 


ஆண்களுக்கு எப்படி ஆரம்பிக்கிறது? 

ஆண்களுக்கு தாடியில் ஆரம்பிக்கும் நரை, பின் மீசைக்கு வந்து அங்கிருந்து தலையின் பகுதிகளுக்கு பரவும். நெஞ்சு முடி நரைக்க சில வருடங்கள் ஆகும்.


பெண்களுக்கு எப்படி ஆரம்பமாகிறது? 

பெண்களுக்கோ உச்சந்தலையில் தொடங்கும். பின் இந்த நரை அப்படியே பிற இடங்களுக்கு பரவி, முதுமைத் தோற்றத்தைத் தரும்.


ஏன் இது நடக்கிறது? 

பல இளைஞர்கள் இந்த பிரச்சனைக்காக ஆலோசனை கேட்க வருவது அதிகரித்து கொண்டே போகிறது. ஹார்மோன் சமமின்மை, கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கம், தாழ் தைராய்டிசம், ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை, உணவுச்சத்துப் பற்றாக்குறை, எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது.

எப்போது வேண்டுமானும் முடியானது நரைக்கும் 

சில நேரங்களில் 8 வயதான சிறுவர்களுக்கு கூட, லேசாக முடி நரைப்பதுண்டு. பின் அவர்கள் வளர வளர நரை முடியும் அதிகரிக்கும். மேலும் 25 வயதை கொண்ட பெண்கள் இந்த முடி நரைக்கும் பிரச்சனையை பற்றி அதிகமாக கவலை கொள்கிறார்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது.

முதல் காரணம் 

முதல் காரணம் தவறான உணவு பழக்கங்கள். உணவில் சில வைட்டமின் பி, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் அயோடின் போன்றவற்றில் குறைபாடுகள் இருந்தால், இந்த பிரச்னை ஏற்படும்.

இரண்டாவது காரணம் 

இரண்டாவது மன கவலைகள். மன அழுத்தம் ஏற்பட்டால், தலை சருமம் கடுமையான டென்ஷனுக்கு உள்ளாகும். அது நல்ல முடி வளர்ச்சிக்கு அளித்து வரும் ஊட்டச்சத்திற்கு தடையாக நிற்கும். இதுப்போக மன அழுத்தம், இரத்த சோகை, ஆரோக்கியமற்ற தலை சருமம், தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருப்பது மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் இளநரை உண்டாகிறது.

இதற்கான தீர்வு என்ன? 

நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம். மேலும் டாக்டர் ஷாஹ் என்பவர் இதற்கான சில வழிகளை பரிந்துரைக்கிறார். "சீரான முறையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சரியான முடி மற்றும் தலை சரும பராமரிப்பு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் நடவடிக்கைகள் என இவை அனைத்தும் அவசியம். இதற்கு தற்காலிக, பாதி நிலை மற்றும் நிரந்தர தீர்வுகள் இருக்கிறது. முடிக்கு மருதாணி தடவினால், அது தற்காலக தீர்வாகும். சந்தையில் உள்ள ஹேர் டையை வாங்கி முடிக்கு தடவினால், அது பாதி நிலை தீர்வாக விளங்கும். அதிலும் அது அம்மோனியா கலக்காத டையாக இருக்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார்.


டிப்ஸ் 

தலைக்கு பிரிங்ராஜ் எண்ணெயை தடவ வேண்டும். மேலும் காபிக்கு பதிலாக கிரீன் டீயை பருக வேண்டும். அதேப்போல் போலிக் அமிலம் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், முடி நரைப்பதை தடுக்கலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான முடியையும் பெறலாம்.


வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை 
வங்கக் கடலில் தென் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இப்போது வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. 

இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,

தென் வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டுள்ளதால் இது மேலும் வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர்.


ரஷ்யாவில் சாரதியில்லாமல் பயணித்த ரயிலினால் பரபரப்பு

ரஷ்யாவில் சாரதியில்லாமல் பயணித்த ரயிலினால் பரபரப்பு


ரஷ்யாவின் தெற்கு மாஸ்கோ நகரில் இருந்து ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் ரெயில் நிலையம் நோக்கி அதிவேக மெட்ரோ ரெயில் புறப்பட்டது.
அதற்கு எதிர்புறத்தில் வந்த மெட்ரோ ரெயிலின் டிரைவர், எதிரே ஒரு ரெயில் டிரைவரே இல்லாமல் அதிவேகமாக வந்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

சற்று தூரத்தை கடந்ததும் ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் மற்றும் குச்மின்கி ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள குகை பாதையில் எதிரே சென்ற ரெயிலின் டிரைவர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதை அவர் கவனித்தார்.

இதுதொடர்பாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் அளித்ததையடுத்து, டிரைவர் இல்லாமல் சென்ற ரெயில் 'ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம்' மூலம் ரியான்ஸ்கி புராஸ்பெக்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஓட்டிக் கொண்டிருக்கும் ரெயிலில் இருந்து கீழே விழும் அளவிற்கு அந்த டிரைவர் கதவை திறந்து வைத்துக்கொண்டு அஜாக்கிரதையாக இருந்தது ஏன்? என்பது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

முதல் உலகப் போர் நூற்றாண்டை அனுசரிக்க பிரான்ஸ் முடிவு

முதல் உலகப் போர் நூற்றாண்டை அனுசரிக்க பிரான்ஸ் முடிவு
முதல் உலகப் போர் நூற்றாண்டை அனுசரிக்க பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன.

கடந்த 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை முதல் உலகப் போர் நடந்தது, இதில் 85 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

இந்த போரில் தொடர்புடைய பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இப்போர் நூற்றாண்டை அனுசரிக்க திட்டமிட்டு உள்ளன.

இது தொடர்பாக 30 நாடுகளின் அதிகாரிகள் பாரிஸ் நகரில் கூடி பேசினர்.

முதல் உலகப் போர் நூற்றாண்டு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்பது குறித்த அறிவிப்பை பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அடுத்த மாதம் 8ம் திகதி அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.