Sunday, December 23, 2012

கமலின் விஸ்வரூபம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களுக்கு வருவது சந்தேகம்!

கமலின் விஸ்வரூபம் ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களுக்கு வருவது சந்தேகம்!


நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர். இதனால் விஸ்வரூபம் திரைக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள்  சென்னையில் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில், டி.டி.எச். முறையில் வெளியிடப்படும் விஸ்வரூபம் உள்பட எந்தத் திரைப்படத்துக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து, வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வழக்கமான முறையில்  திரையரங்குகளில் வெளியிடுவதுடன், டி.டி.எச். முறையில் வீடுகளுக்கே நேரடியாக  ரிலீஸ் செய்யவும் நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய முறைக்கு திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து  இருந்தனர். ஆனால் கமல் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தற்போது, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து எடுத்துள்ள முடிவால், விஸ்வரூபம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது சந்தேகமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் கடைசி நேரத்தில் ஏதாவது சில முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு சிக்கல் தீரவும் வாய்ப்புள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

இலங்கை கல்முனையில் 13 அடி நீளமான முதலை பிரதேச மக்களால் பிடிப்பு


இலங்கை கல்முனையில் 13 அடி நீளமான முதலை பிரதேச மக்களால் பிடிப்பு



கல்முனை, மருதமுனை பிரதேச கடற்கரையில் இன்று 13 நீளமான முதலை ஒன்று பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கடலிலிருந்த குறித்த முதலை இன்று கரைக்கு வந்தபோது மக்கள் வலைவீசிப் பிடித்துள்ளனர்.

பிடிபட்டு சில மணி நேரங்களில் இந்த முதலை உயிரிழந்துள்ளது.

இது குறித்து பிரதேசவாசிகள் குறிப்பிடுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அள்ளுண்டு ஆற்றிலிருந்து கடலுக்கு 3 நாட்களுக்கு முன்னர் இந்த முதலை வந்துள்ளது.

இன்று சற்றே மயக்க நிலையில் கரைக்கு வந்தபோது பிரதேசவாசிகளின் முயற்சியினால் வலை வீசி பிடிக்கப்பட்டது.

பிடிபட்டு சில மணி நேரங்களில் உயிரழந்து விட்டது என தெரிவித்தனர்.


இலங்கை வவுனியாவில் அடை மழை! பல கிராமங்கள் நீரில் மூழ்கின!


இலங்கை வவுனியாவில் அடை மழை! குளங்கள் உடைப்பெடுத்து பல கிராமங்கள் நீரில் மூழ்கின! யாழ். போக்குவரத்தும் பாதிப்பு




வவுனியாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக பல  கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி  மக்களும் வெளியேறி வருகின்றனர்.

அதன்படி பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 6 அவசர வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பூவரசங்குளம் ஊடன செட்டிகுளம் வீதியே இனம்காண முடியாமல் வெள்ளம் நிரம்பி  வழிந்தோடுகின்றது.

குறித்த வீதிக்கு அருகே உள்ள கந்தசாமி நகர், வீடியா நகர் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வெளியிடத் தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால் அங்குள்ள 39 குடும்பங்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் நொச்சிமோட்டைப் பாலம் மேவிப் பாய்வதனால் ஏ9 வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரியளவிலான வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஹயெஸ் போன்ற சிறியரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.





A9 Road



சூரியனைச் சுற்றி வர்ண ஒளிவட்டம் தென்பட்டுள்ளது

சூரியனைச் சுற்றி வர்ண ஒளிவட்டம் தென்பட்டுள்ளது



சூரியனை சுற்றி வர்ண ஒளிவட்டம் காணப்படுகின்றது. இலங்கை மக்களால் அவதானிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

வானவில்லில் உள்ள வர்ணங்களை போன்றே இந்த வட்டம் காட்சியளிக்கிறது.

இலங்கையில் அண்மைக்காலமாக பல விநோத சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த காட்சியும் தென்பட்டுள்ளது.

இக்காட்சியினை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.