Thursday, June 13, 2013

சாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்!

சாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்!உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் சாரநாத். இந்த சிறு கிராமம் புகழ் பெற்றிருக்க காரணமாக விளங்குவது கௌதம புத்தர் தனது முதல் போதனையை செய்த இடமாக இங்கிருக்கும் பூங்கா தான். மேலும், இந்த இடத்தில் தான் முதல் பௌத்த சங்கமும் தொடங்கப்பட்டது.

புத்தருடன் உள்ள ஆழமான தொடர்பின் காரணமாக, சாரநாத் இந்தியாவிலுள்ள முக்கியமான பௌத்த மத புனிதத் தலமாக உள்ளது. உண்மையில், சாரநாத்தில் தான் இந்தியாவின் மாபெரும் சக்ரவர்த்தியாக இருந்த மகா அசோகர் சில ஸ்தூபிகளையும் மற்றும் இங்கு மிஞ்சியிருக்கும் தூண்களில் புகழ் பெற்ற கலைச்சின்னமான அசோகர் தூணையும் உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த தூணில் இருக்கும் நான்கு சிங்கங்கள் தான் இன்றைய இந்தியாவின் தேசிய சின்னமாக உள்ளன. மேலும், இந்த தூணில் இருக்கும் அசோக சக்கரம் இந்திய தேசிய கொடியின் மையத்தை அலங்கரித்து வரும் சின்னமாகவும் உள்ளது.

1907-லிருந்தே பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் இந்த இடத்தில் செய்யப்பட்டு, பல்வேறு பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு, அவை இந்தியாவில் பௌத்த மதத்தின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை படம் போட்டுக் காட்டும் வகையில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சாரநாத்தை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள்

பல்வேறு பௌத்த சமய கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை கொண்டிருக்கும் சாரநாத்தில் உள்ள சில தொல்பொருட்கள் கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

இந்த நினைவுச்சின்னங்களில் இருக்கும் பழங்கால எழுத்துக்களை படித்து அவற்றில் உள்ள செய்திகளை தெரிவிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள், பௌத்த மத புனிதப் பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு முக்கியமான இடமாக சாரநாத் திகழ்கிறது.
இங்கிருக்கும் மான் பூங்காவில் கௌதம புத்தர் தனது முதல் போதனையை தொடங்கியதால் அது சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் வந்து செல்லும் இடமாக உள்ளது. உண்மையில், மான் பூங்காவில் இருக்கும் தமேக் ஸ்தூபி உள்ள இடத்தில் தான் புத்தர் தனது எண்-வழி மார்க்கங்களைப் பற்றிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார்.

சாரநாத்தில் இருக்கும் மற்றுமொரு ஸ்தூபியான சௌகான்டி ஸ்தூபியில் தான் புத்தருடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் மற்றும் அகழ்வாய்வு பகுதியில், அசோகரின் கல்தூண் உட்பட பல்வேறு பழமையான நினைவுச்சின்னங்கள் பலமுறை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சாரநாத் அருங்காட்சியகத்திலும் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 1931-ம் ஆண்டில் மகா போதி சங்கத்தால் கட்டப்பட்ட மூலகாந்தா குடி விஹார் இவற்றில் சமீபத்தில் சேர்க்கப்பட்டதாகும்.

இவை மட்டுமல்லாமல் இங்கிருக்கும் தாய் கோவில் மற்றும் காங்யு திபெத்திய மடாலயம் ஆகிய இடங்களும் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாகும்.

டைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன – ஆய்வாளர் பிரையன் ஜே. போர்டு!

டைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன – ஆய்வாளர் பிரையன் ஜே. போர்டு!


பூமியிலையே மிக பெரிய உயிரினம் என்று கருதப்படும் டைனோசர் அழிந்து போய் பல ஆண்டுகள் ஆனாலும் அவை பற்றிய கருத்துக்களும் ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது இந்த நிலையில் டைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன என்று தெரிவித்துள்ளார் ஆய்வாளர் ஒருவர்,

இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரையன் ஜே. போர்டு, டைனோசர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பேராசிரியரான இவர், பி.பி.சி. வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனோசர்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், ‘மிகப் பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அதன் இரையைத் தேடுவது என்பது அதற்கு சிரமமானது. அது சாத்தியமற்றது. டைனோசரின் வால், நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிந்திருக்கிறது’ என்றார்.

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

ஆத்துல போட்டாலே அளந்து போடணும்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆத்துக்கே அப்படினா, நம்ம வயித்துக்குள்ள போடறத பத்தி யோசிக்க வேணாமா? அளவுக்கு மிஞ்சினால், அமுதமும் நஞ்சுதான். எந்த உணவுப் பொருளையுமே நன்கு பக்குவமாக சமைத்து, பதமாக சாப்பிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், புட் பாய்சன் எனச் சொல்லப்படும் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப் படும் அபயம் உண்டு.

சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...


காஜூ மர்சு... 

ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.

ஹாட் டாக்ஸ்... 

அமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.

நம்மூரு கப்பக்கிழங்கு.... 

அதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ருபார்ப் இலைகள்... 

ருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.

சன்னாக்‌ஷி... 

அதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.

குரங்கு மூளை... 

நம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.

புகு மீன்... 

புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கி பழம்... 

ஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.


விஷக் காளான்... 

ஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.


கென்னடியுடன் மர்லின் மன்றோ! சினிமா, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கென்னடியுடன் மர்லின் மன்றோ! சினிமா, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ மறைந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும், அவர் மீதான மோகம் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில், அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடியுடன் உறவு கொண்டது அம்பலம் ஆகியுள்ளது.

இந்த உறவு, தனியார் உளவாளியின் பார்வையில் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஜான் கென்னடி, ஜன நாயக கட்சியை சேர்ந்தவர்.

ஜனநாயக கட்சியை களங்கப்படுத்துவதற்காக, ஹோவர்டு கியூக்ஸ் என்பவர் பிரெட் ஓடாஷ் என்ற தனியார் உளவாளியை இந்த உளவு வேலையில் ஈடுபடுத்தினார்.

மர்லின் மன்றோவின் நடவடிக்கைகளை உளவு பார்த்து வந்த பிரெட் ஒடாஷ், ஜான் கென்னடி–மர்லின் மன்றோ அந்தரங்க காட்சியை பார்த்துள்ளார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் இத்தகவலை வெளியிட் டுள்ளார். இது, ஆலிவுட் சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொட்டாவி.... இது தாங்க உலகிலேயே மோசமான தொற்று வியாதியாம்!!!

கொட்டாவி.... இது தாங்க உலகிலேயே மோசமான தொற்று வியாதியாம்!!!ஆ... என முதலை கணக்கில் யாராவது நம் முன்னால் வந்து கொட்டாவி விட்டால் நாம் என்ன சொல்லுவோம், ‘சோம்பேறி, உன் சோம்பலை என்கிட்டயும் ஒட்ட வச்சுடாதனு'தான... ஆனா, அதுக்கு முன்னாடி நாம அத விட ஒரு கொட்டாவி பெருசா விட்டுடுவோம்ல. உண்மையிலயே, உலகின் மிக வேகமான தொற்று வினை 'கொட்டாவி' தானாம்.

ஆனால், அது சோம்பேறிகளின் சிக்னல் என்பதெல்லாம் பொய். அதற்கான அறிவியல் காரணாங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்கள் விஞ்ஞானிகள். சூடான முளையை குளிர்விக்கத்தான் நாம கொட்டாவி விடுறோமாம். பல நோய்களுக்கு சுய பரிசோதனையா கொட்டாவி அமையுதுனு பல ஆச்சர்யத் தகவல்களைச் சொல்றாங்க ஆராய்ச்சியாளர்கள்.

புரியாத புதிர்... 

இருமல், தும்மல், விக்கல் மாதிரி கொட்டாவியும் ஒரு உடலியல் நிகழ்வு தான் என்றாலும், மற்றவைகளைப்போல அறிவியல்பூர்வமான காரணம் மட்டும், இதுவரையில் ஒரு புரியாத புதிர் தான்.

கொட்டாவி எண்ணிக்கை... 

ஆனால், காலத்தைப் பொறுத்து கொட்டாவியின் எண்ணிக்கை மாறுமாம். 'சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு' என்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!


மூளை சூடாச்சுனா இப்படித்தான்... 

இந்த ஆய்வின் மூலம், வெப்ப அளவு கொட்டாவி ஏற்படுவதற்கான காரணி என்றும், கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

சீசனுக்கு தகுந்த படி மாறும்... 

சீசனுக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளதாம். கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நாம் ஏன் கொட்டாவி விடுறோம்னா... 

கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உஸ்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறதாம்.

நோய்க்கான அறிகுறி... 

கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் உதவியிருக்கிறதாம் இந்த ஆய்வு.

சுய பரிசோதனை... 

அளவுக்கு அதிகமா கொட்டாவி விடுவதன் மூலம், உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதை அறிந்து கொள்ள உதவும் ஒரு முன்பரிசோதனையாகக் கூட எடுத்துக்கொள்ளலாமாம்.

கருவறையிலேயே ஆரம்பிச்சாச்சு... 

சமீபத்தில், கருவில் இருக்கும் குட்டிப்பாப்பா கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். மேலும், இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது, ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர். இப்படிக் கொட்டாவி விடுவதன் மூலம் குழந்தையின் தாடைப் பகுதி நன்கு விரிய வாய்ப்பு கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம்!

11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம்!அண்டத்தில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள சிற்ப விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கரும்பள்ளம் அண்டவெளியில் சுற்றிவரும் குப்பைகளை விழுங்கி அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கிருந்து மிக அதிவேகத்தில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பால் வீதியில் கரும்பள்ளத்தின் செயல்பாடுகளும், நட்சத்திர உற்பத்தியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது வானியல் ஆராய்ச்சியாளர்களை பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

சிற்ப விண்மீன் திரளுக்குள் இருக்கும் இந்த கருங்குழியின் அளவானது நமது சூரியனை விட 5 மில்லியன் மடங்கு பெரிது என்று கூறப்படுகிறது. சந்திரா மற்றும் நஸ்டர் விண்கல ஆய்வகத்தில் பாதிவாகியுள்ள இந்த கருங்குழி மீண்டும் இன்னும் சில வருடங்களில் காணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

வாடிகனில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்: போப் பிரான்சிஸ் வருத்தம்

வாடிகனில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்: போப் பிரான்சிஸ் வருத்தம்
வாடிகன் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அங்குள்ளவர்களில் சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத குருவான போப் பிரான்சிஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த உறுப்பினர்களோடு இரண்டு நாட்களுக்கு முன் உரையாற்றினார்.

அப்போது வாடிகன் நிர்வாகத்தைப் பற்றியும், அங்குள்ளவர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பேசுகையில், வாடிகன் நிர்வாகத்தில் மிகப் பெரும் ஊழல்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து நிர்வாகிகள் கவலைப்படுவதில்லை.

மேலும் இங்குள்ள சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாடிகன் நிர்வாகத்திற்கு மிகப் பெரும் களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிர்வாகிகளின் இந்த செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக உள்ளது. கூடிய விரைவில் இவற்றை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் புதிய நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் புதிய நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்புவிண்வெளியிலுள்ள பால் வீதியில் ஒரு இருட்டு பள்ளத்திற்குள் ஆயிரம் நட்சத்திரங்களை உள்ளடக்கிய நட்சத்திர மண்டலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க- ஹவாய் தீவு வி.எம். கெக் ஆய்வுக்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள உலகின் அதி நவீன சக்திவாய்ந்த டெலெஸ்கோப் இந்த நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளது.

இந்த மந்தமான குள்ள நட்சத்திர மண்டலத்திற்கு சேகு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

பால் வீதியில் இதுபோன்று குள்ள நட்சத்திர மண்டலம் இருப்பதாக முன்னரே கணித்து சொல்லப்பட்டு இருந்ததாகவும், அதை கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக தேடி கொண்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, June 12, 2013

392 அடி உயர வல்லபாய் படேல் சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்க மோடி திட்டம்

392 அடி உயர வல்லபாய் படேல் சிலை : விவசாயிகளிடம் இரும்பு சேகரிக்க மோடி திட்டம்வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து இரும்பு சேகரிக்கும் திட்டத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடங்குகிறார்.இரும்பு மனிதர் என்று போற்றப்படும் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் 392 அடி உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைக்கப்படும் என்று மோடி ஏற்கனவே அறிவித்தார். சர்தார் சரோவர் அணைக்கு எதிரே நிறுவப்பட உள்ள இந்த சிலைக்காக, நாடு முழுவதும் 5 லட்சம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சிறிய அளவிலான இரும்பு துண்டுகள் சேகரிக்கப்படும் என்று காந்திநகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அறிவித்தார்.படேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி முதல் இதற்கான தேசிய அளவிலான பிரசாரம் தொடங்கும் என்றும் மோடி கூறினார். பா.ஜ.வின் பிரசார குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தழுவிய பிரசார திட்டத்தை மோடி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுத்தை சாவு

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுத்தை சாவு


கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த, திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா வன விலங்கு பூங்காவில் இருந்த சிறுத்தை பாலாஜி உடல் நலக்குறைவால் நேற்று இறந்தது. திருமலை அடிவாரம் சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா வன விலங்கு பூங்கா உள்ளது. இங்கு 1998ம் ஆண்டு 12 வயதுடையை ஒரு ஆண் சிறுத்தை, மான்களை வேட்டையாடிய போது வனத்துறையினரிடம் பிடிபட்டது.


அப்போது, அதன் எடை 113 கிலோவாக இருந்தது.இதையடுத்து, வனத்துறையினர் பிடிப்பட்ட சிறுத்தையை பாலாஜி என பெயர் வைத்து வன விலங்கு பூங்காவில் வைத்து பாரமரித்து வந்தனர். சாதாரணமாக சிறுத்தைகள் 12 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும். 55 முதல் 65 கிலோ எடை மட்டுமே இருக்கும். தற்போது, 27 வயதான சிறுத்தை பாலாஜி கடந்த 2 தினங்களாக வயது முதிர்ச்சி காரணமாக மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. மேலும், உணவு சாப்பிட முடியாமல் இருந்த பாலாஜி நேற்று அதிகாலை திடீரென இறந்தது. இறந்த சிறுத்தை பாலாஜி, உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த சிறுத்தை என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Tuesday, June 11, 2013

சவுதி பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி மரணம்!

சவுதி பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி மரணம்!சவுதி அரேபியாவில் பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளார். சவுதியின் வடமேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்திலேயே இவர் நடந்து சென்றிருக்கிறார்.

கிராமம் ஒன்றில் இருந்து அமலாஜ் நகரத்தை நோக்கி காரில் பாலைவன வீதியில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, இவரது கார் செயலிழந்து போனது. அந்த பாதையில் வேறு யாரும் வராத நிலையில், காரை விட்டு இறங்கி இவர் அடுத்த கிராமத்தை நோக்கி நடக்க தொடங்கியிருக்கிறார்.

அடுத்த கிராமம் 40 கி.மீ. தொலைவில் இருந்தது.

அந்தக் கிராமத்தை அடைந்த அவர், அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்று ஏராளமாக தண்ணீர் குடித்திருக்கிறார். அதையடுத்து மயங்கி விழுந்து, மரணம் அடைந்து விட்டார். கடும் வெப்பம், மற்றும் உடலில் இருந்து நீரிழப்பு காரணமாக மரணமடைந்தார் என்று அமலாஜ் நகர போலீஸ் தெரிவித்துள்ளது.
ஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...

ஒரு ‘கூடை’யிலே எங்கள் குடியிருப்பு...குகைகளில் வாழ்ந்த மனிதன், இன்று கட்டிட கலையில் புகுந்து விளையாடுகிறான். கட்டிடங்களை விதவிதமாக உருவாக்கி மகிழும் ரசனை இன்று உலகம் முழுதும் பரவிக் கிடக்கிறது. அப்படித்தான், அமெரிக்காவில் உள்ள ‘லாங்கபெர்கர் கூடை' தயாரிப்பு நிறுவனம் தங்களது தலைமையகக் கட்டிடத்தை கூடை பொன்ற அமைப்பில் உருவாக்கி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

என்ன வடிவத்தில் தங்களது தலைமையகக் கட்டிடத்தைக் கட்டலாம் என யோசித்த போது, அது தங்களது தயாரிப்பை பிரதிபலிப்பதாக இருந்தால், நன்றாக இருக்கும் என நிர்வாகம் யோசித்ததாம். அதன் விளைவாக உருவானது தான் இந்தக் ‘கூடைக் கட்டிடம்'. ஓஹையோ மாநிலத்தில் அமைந்துள்ள இந்தக் கூடைக்கட்டிடத்தில் மொத்தம் ஏழு மாடிகள் உள்ளன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், மொத்தம் 3 கோடி டாலர் செலவில் இதை உருவாக்கியுள்ளனர். இந்த கூடைக் கட்டிடத்தை கட்டி முடிக்க ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஆனதாம்.

டாப் 5 வாட்டர் ப்ரூப் போன்கள்

டாப் 5 வாட்டர் ப்ரூப் போன்கள்


இன்று ஸ்மார்ட் போன்கள் பல படிகள் ஏறினாலும் அதிலும் மிகச் சிறப்பான வாட்டர் ப்ரூப் போன்களையே விரும்புகின்றனர். மழையிலோ அல்லது நாம் எங்கெயாவது போனை தவற விடும்போது நமக்கு வாட்டர் ப்ரூப் போன்கள் நன்கு உழைக்கின்றது. 2013 ல் பல வாட்டர் ப்ரூப் போன்கள் வெள்வந்துள்ளது. இதோ அவற்றிள் டாப் 5 யை பார்ப்போம்....


சோனி எக்ஸ்பிரியா Z 

இதை நீங்கள் தண்ணிருக்குள் போட்டாலும் ஒன்றும் ஆகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.


HTC பட்டர்பிளை 

இது 5 இன்ச் டிஸ்பிளேயுடன் ஹை டெக் ஆக தயாரிக்கப்பட்டது.


சோனி எக்ஸ்பிரியா ZR 

எக்ஸ்பிரியா Z யை விட உயரிய தொழில்நுட்பத்தில் இது தயாரிக்கப்பட்டது.


சாம்சங் கேலக்ஸி X கவர் 2 

சாம்சங்கே உரிதான உயரிய தொழில்நுட்பதிதுல் இது தயாரிக்கப்பட்டது.


சாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்

 இது X கவர் 2 யை விட அதிக ஆற்றல் கொண்டது.Monday, June 10, 2013

உலகில் ஏழல்ல அதிசயங்கள்....


உலகில் ஏழல்ல அதிசயங்கள்....


நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ...


சஹாரா கண்... 

மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தது.


ஸ்பாட்டட் லேக்... 

கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில் உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும் உள்ளேயே தங்கி விடுமாம். இதன் காரணமாக, நல்ல சீசன் காலத்தில், ஏரித்தண்ணீரில் மின்னலாய் காணப்படும் புள்ளிகளாலேயே ஏரிக்கு ஸ்பாட்டட் ஏரி என்று பெயர்.


ரத்த நீரூற்று... 

அண்டார்டிகாவில் உள்ள டேலாய் பனிப்பாறையில் இருந்து ரத்தநிற தண்ணீர் வழிந்த வண்ணமே இருக்குமாம். தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான இரும்புத்தாதே இந்த தண்ணீரின் நிற மாற்றத்திற்குக் காரணமாம்.


நகர்ந்த கற்கள்... 

150 பவுண்ட் எடை கொண்ட சில அதிசய கற்கள் 700 அடி வரை நகர்ந்ததற்கான அடையாளங்கள் மண்ணில் காணப்படுகின்றன். ஆனால், சத்தியமாக பலர் சேர்ந்து நகர்த்துவது கூட சாத்தியமில்லாததே. இந்தப் பாறைகள் அமெரிக்காவில் காணப்படுகின்றன.


ரெட்பா ஏரி... 

பிங்க் கலரில் உள்ள ஏரி நீரில் வளரும் ஒரு வகை காளான்களால் இந்த தண்ணீர் பிங் கலரில் காணப் படுகிறது.


மார்பிள் டிசைன் குகை.... 

இயற்கையாகவே, யாரோ வண்ணங்கள் கொண்டு விளையாடியது போன்ற குகை ஒன்று சிலியில் அமைந்துள்ளது.குகாஇயின் அடிப்பாகத்தில் ஓடும் பச்சை மற்றும் நீல வண்ண ஏரிகளின் பிரதிபலிப்பாலேயே இந்தக் குகை இவ்வாறு விநோதமாக காட்சி அளிக்கிறதாம்.


பனி சிலைகள்... 

அண்டார்ட்டிகா பனியால் ஆன கண்டம் என்பது தானே நமக்குத் தெரியும். ஆனால், அது பனிச் சிற்பங்களின் கலைக்கூடம். ஏறக்குறைய ஒவ்வொரு சிலையும் 60 அடி உயரம் வரை உள்ளன. பனி மென்மேலும் படிவதால், சிலைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வண்ணமாக உள்ளன.


குழிப் பனியாரங்கள்... 

வெனிசுலாவில் காணப்படும் சரிசரிநாமா மலையில் சுமார் ஆயிரம் அடி ஆழம் வரை கொண்ட திடீர்க்குழிகள் 1961ம் ஆண்டுவாக்கில் கண்டறியப்பட்டன.


மல... மல.. சாக்லெட் மல 

பிலிப்பைன்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாக்லெட் மலைகள் காணப்படுகின்றன. 700 அடி உயரத்தில் பார்ப்பதற்கு சாக்லெட் போன்று தோற்றமளிப்பதாலேயே இவற்றிற்கு இந்தப் பெயர். மற்றப்படி சாக்லெட் மலை இனிப்பாக இருக்கும் என்றெல்லாம் எண்ணி நீங்கள் ஏமாந்து போனால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...

ஆப்பிளின் அடுத்த அவதாரம்!


ஆப்பிளின் அடுத்த அவதாரம்!


ஆப்பிளின் பிராடக்ட்ஸ் க்கு இன்று உலகம் முழுவதும் இருக்கும் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த தலைமுறைக் கணிப்பொறியை உருவாக்க ஆரம்பித்து விட்டது. அவை நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே தொழில்நுட்ப்பத்துடன் வெளிவர இருக்கிறது. இது உலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பதை நாம் அறிந்ததே. இதோ ஆப்பிளின் அடுத்த தலைமுறைக் கணிப்பொறியை படத்தில் காணலாம்...

http://v.theonion.com/onionmedia/videos/videometa/172/zen_mp4.mp4

மரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் எத்தனை கிலோ தெரியுமா உங்களுக்கு...?

மரத்தில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் எத்தனை கிலோ தெரியுமா உங்களுக்கு...?நாம் சுவாசித்து வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனைத் தருகின்றன மரங்கள் என்பது நாமறிந்த அறிவியல் தான். ஆனால், ஆண்டொன்றுக்கு மரமொன்று எவ்வளவு ஆக்ஸிஜனைத் தருகிறது என்று நான் என்றாவது யோசித்திருக்கிறோமா? ஒரு ஆண்டுக்கு ஒரு மரம் கிட்டத்தட்ட 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறதாம். இதை ராமாபுரம் கிராஅமத்து மாற்று மேலாண்மை சிறப்பு மையம் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தில் மரங்களின் மகிமை குறித்து பேசும் போது, சிஇசி அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தயாநிதி தெரிவித்தார்.

மேலும், சுற்றுச்சூழலில் மரங்களின் பங்கு என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுகையில், 'ஒரு மரம் ஆண்டுக்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஓராண்டிற்கு கிடைக்கும் ஆக்சிஜன் 18 மனிதர்களின் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது. 2.6 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.

நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவிற்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். எனவே, கிராம மக்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்' எனக் கூறினார்.

ICC regrets the mishap at the Opening Ceremony


ICC regrets the mishap at the Opening Ceremony


ICC has sent their reply for the letter which was sent regarding clarifications at the mishap at the opening ceremony. During the opening ceremony of the Champions Trophy 2013, the organizers played a Hindi song tune instead of a Sri Lankan flavored music track during the segment of the flag raising to the field.

Apart from Sri Lanka, rest of the 7 countries were honored with their own cultural music at the prestige moment.

The International Cricket Council Tournament Director Chris Tetley has written to SLC conveying his regret about the incident.  He has further stated that the ICC will take up the matter for a discussion with the Event Managers of the event who was entrusted to carry the opening ceremony of ICC Champions Trophy 2013 without any problems.


Read more: http://www.cricturf.com/champtrophy/6054-icc-regrets-the-mishap-at-the-opening-ceremony.html#ixzz2VnoMQLp5

Read more about asia cup by CricTurf

ICC has sent their reply for the letter which was sent regarding clarifications at the mishap at the opening ceremony. During the opening ceremony of the Champions Trophy 2013, the organizers played a Hindi song tune instead of a Sri Lankan flavored music track during the segment of the flag raising to the field.

Apart from Sri Lanka, rest of the 7 countries were honored with their own cultural music at the prestige moment.

The International Cricket Council Tournament Director Chris Tetley has written to SLC conveying his regret about the incident.  He has further stated that the ICC will take up the matter for a discussion with the Event Managers of the event who was entrusted to carry the opening ceremony of ICC Champions Trophy 2013 without any problems.ICC has sent their reply for the letter which was sent regarding clarifications at the mishap at the opening ceremony. During the opening ceremony of the Champions Trophy 2013, the organizers played a Hindi song tune instead of a Sri Lankan flavored music track during the segment of the flag raising to the field.

Apart from Sri Lanka, rest of the 7 countries were honored with their own cultural music at the prestige moment.

The International Cricket Council Tournament Director Chris Tetley has written to SLC conveying his regret about the incident.  He has further stated that the ICC will take up the matter for a discussion with the Event Managers of the event who was entrusted to carry the opening ceremony of ICC Champions Trophy 2013 without any problems.


Read more: http://www.cricturf.com/champtrophy/6054-icc-regrets-the-mishap-at-the-opening-ceremony.html#ixzz2VnoMQLp5

Read more about asia cup by CricTurf