Saturday, February 2, 2013

வாக்கிங் சென்றவருக்கு திமிங்கல’வாந்தி’யால் அடித்த லக்!

வாக்கிங் சென்றவருக்கு திமிங்கல’வாந்தி’யால் அடித்த லக்!

இங்கிலாந்தில் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் "வாந்தி" முலம் ஒருவருக்கு லக் அடித்துள்ளது. ஆம் அதன் மூலம் லட்சாதிபதியாக உயர்ந்துள்ளார் அந்த நபர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கென் வில் மென். வழக்கம் போல் தனது நாயுடன் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டு இருத்தபோது, கரை ஓரம் ஒதுங்கி கிடந்த பாறை போன்ற ஒரு பொருளை அவரது நாய் மோப்பம் பிடித்தவாறே நின்றது.

முதலில் கல் போன்று தோன்றியதால் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் நடக்க தொடங்கினார். ஆனால் நாய் அதை விட்ட பாடில்லை. அதனால் அந்த பொருள் என்ன என்று பார்க்க நினைத்த கென் வில் மென், அதை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தார். அப்பொழுது, துர்நாற்றமும் நறுமணம் கலந்து ஒரு மாதிரி கலவையாக வீசவே, அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.

பின்னர்தான் அது திமிங்கலம் எடுத்த வாந்தி என தெரியவந்தது. சில நேரங்களில் திமிங்கலம் தான் உட்கொண்ட உணவை வயிற்று கோளாறு காரணமாக உடனடியாக வெளியே தள்ளிவிடுமாம். அந்த கழிவு பல மாதங்கள் கடல் நீரில் மிதந்தவாறு இருக்கும். மேலும் அதன் மீது வெயில் பட பட பறை போன்று இறுகி பின்பு கடற்கரையில் ஒதுங்குகிறது. இது பெர்ப்பியூம் தயாரிக்க பயன்படும் மிக முக்கியமான மூலப்பொருள். இதுதான் கடற்கரையில் வாக்கிங் போனபோது கென் வில் மென்க்கு கிடைத்துள்ளது.

மிக அபூர்வமாக அதுவும் இயற்கையாக கிடைக்கும் இதன் விலை மிக மிக அதிகம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த திமிங்கல வாந்தியை ஏற்கனவே 65 ஆயிரம் டாலருவுக்கு (சுமார் 35 லட்சம் இந்திய ரூபாய்) விலை தர முன்வந்துள்ளார். ஆனால் திமிங்கலத்தின் வாந்தியை பரிசோதனை செய்து அதன் உண்மை விலையை கண்டு அறிந்த பின்னர் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளார் கென் வில் மென்.

வாந்தி மூலம் ஒருவர் லட்சாதிபதியாக மாறியுள்ளார். நல்ல ‘லக்' தான் அவருக்கு அடித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/02/world-man-offered-65k-lump-whale-vomit-169052.html

Friday, February 1, 2013

கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!


கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!: பிப்ரவரி 1- ந் தேதி...2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்...ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது!

2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். ஆனால் பூமி சுற்றுப் பாதைக்கு வந்த போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந் தேதியன்று இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இன்று கூட அமெரிக்காவில் கொலம்பியா விண்கல விபத்தில் உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயணித்து மரணித்தோரின் 12 குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 15 வயது சிறுவனும் 32 வயது இளைஞரும் அடக்கம்.

கொலம்பியா விண்கல விபத்துக்கு அது பூமியிலிருந்து கிளம்பியபோது, சிதறி விழுந்த ஒரு foam துண்டு தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விண்கலம் புறப்படும்போதே இந்த போம் துண்டு அதன் மீது விழுந்து, அந்த விண்கலத்தின் வெப்பத்தைத் தாங்கும் பாதுகாப்பு கவசத்தில் துளையை ஏற்படுத்திவிட்டது.

இதனால் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது, ஏற்படும் மிக உயர் அழுத்த வெப்ப நிலையால் வெடித்துச் சிதறிவிடும் என்பது அப்போதே நாஸா விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துவிட்டது.இது குறித்து நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான வெய்ன் ஹாலே தமது இணையதள பக்கத்தில் பக்கம் பக்கமாக விவரித்திருக்கிறார்.

அதில், கொலம்பியா விண்கலம் பழுதடைந்திருப்பது பற்றி நாங்கள் முன்னரே விவாதித்தோம். ஆனால் அதன் தெர்மல் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் பழுதை சீராக்க முடியாது என்று இயக்குநர் ஹான் ஹர்போல்ட் என்னிடம் கூறிவிட்டார். இந்தத் தகவல் விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களுக்கு தெரிவிக்ககக் கூடாது என முடிவு செய்யப்பட்டது என ஒரு அதிர்ச்சி தகவலை பதிவு செய்திருக்கிறார்.

அதாவது கொலம்பியா விண்கலத்தில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் நிச்சயம் அது வெடித்து சிதறிவிடும் என்பது நாசாவுக்கு முன்பே தெரிந்திருக்கிறது.

ஆனால் அதை விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருக்கின்றனர். இதனால் அந்த விண்கலத்தில் பயணித்த 7 பேரும் பூமிக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் விண்கலம் வெடித்து சிதறி பலியாயினர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/01/world-how-columbia-crew-died-ignorance-169013.html


கூந்தல் உதிருதா? யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....


கூந்தல் உதிருதா? யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....யூகலிப்டஸ் என்றதுமே அதன் மணம் நினைவுக்கு வந்து, மனதை அமைதிப்படுத்தும். ஏனெனில் அந்த அளவு அதன் வாசனையானது சூப்பராக இருக்கும். அத்தகைய யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் யூகலிப்டஸ் எண்ணெயில், அழகைத் தரும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதே சமயம், இந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம். நிறைய மக்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர, இந்த எண்ணெயை பயனப்டுத்துவார்கள். மேலும் இந்த எண்ணெயை தலைக்கு தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். இதனால் ஸ்கால்ப் ஆரோக்கியத்துடன் இருந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

எனவே இத்தகைய யூகலிப்டஸ் எண்ணெயை எப்படியெல்லாம் கூந்தலுக்கு பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று பார்ப்போமா!!!

யூகலிப்டஸ் ஆயில் ஹேர் பேக்குகள்: யூகலிப்டஸ் ஆயில் மசாஜ்: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும் வைக்க, யூலிப்டஸ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, இரவில் படுக்கும் போது தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பட்டுப் போன்று இருக்கும்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் எலுமிச்சை: ஒரு பௌலில் வெதுவெதுப்பான எண்ணெயை விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து, கூந்தலுக்கு நன்கு தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிக்க வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்தல் தடைபட்டு, அதன் வளர்ச்சி அதிகமாகும்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெய்: கூந்தல் நன்கு வலுவோடு, நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், யூகலிப்டஸ் ஆயிலுடன், பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக வெதுவெதுப்பான முறையில் சூடேற்றி, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் ரோஸ்மேரி ஆயில்: இது மற்றொரு முறை. இதில் யூகலிப்டஸ் எண்ணெயுடன், ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக சூடேற்றி, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் செம்பருத்திப்பூ: இதற்கு செம்பருத்திப்பூவை கொதிக்கும் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பின் அந்த பூவை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் செம்பருத்திப் பூவை ஊற வைத்த நீரில் அலசி, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் இயற்கையான முறையில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

இவையே கூந்தல் உதிர்தலைத் தடுக்க யூகலிப்டஸ் ஆயிலைப் பயன்படுத்தும் முறை. இந்த மாதிரி நீங்கள் எப்போதாவது செய்ததுண்டா? இல்லையெனில் உடனே முயற்சி செய்து, கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரித்து, நீளமான அடர்த்தியான கூந்தலைப் பெறுங்கள்.

ராக்கெட் விபத்து: சாட்டலைட்டுடன் புறப்பட்ட 40 விநாடிகளில் கடலில் வீழ்ந்தது!

ராக்கெட் விபத்து: சாட்டலைட்டுடன் புறப்பட்ட 40 விநாடிகளில் கடலில் வீழ்ந்தது!அமெரிக்க சாட்டலைட் ஒன்றை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் புறப்பட்ட ராக்கெட் ஒன்று, புறப்பட்ட சில விநாடிகளிலேயே செயல்படாமல் கீழே வீழ்ந்தது. இதையடுத்து, அமெரிக்க சாட்டலைட்டும் பசிபிக் கடலில் வீழ்ந்தது.

உக்ரேனியன் தயாரிப்பு Zenith-3SL ராக்கெட், பசிபிக் கடலின் மிதக்கும் ஏவுதளம் (floating platform) ஒன்றில் இருந்து, அமெரிக்காவின் இன்டெல்சாட்-27 சாட்டலைட்டை விண்வெளிக்கு கொண்டுசெல்ல புறப்பட்டது. புறப்பட்டு சுமார் 40 விநாடிகளில் ராக்கெட் செயலிழந்தது. உடனடியாகவே, சாட்டலைட்டுக்கு தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த தொடர்பு இழக்கப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க சாட்டலைட் பசுபிக் கடலில் மூழ்கிவிட்டது.

ஆரம்ப தரவுகளின்படி, ராக்கெட்டின் இஞ்சின் ஏதோ காரணங்களுக்காக ஆட்டோமேட்டிக்காக நின்றுவிட்டது. அதற்கான காரணங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!


விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!


இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.

இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!


பூண்டு 

இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.மாதுளை 

இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.
வாழைப்பழம் 

வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.


பசலைக் கீரை 

பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது

மிளகாய் 

மிளகாய் என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.


தக்காளி 

இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும்.


தர்பூசணி 

தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.


வைட்டமின் சி உணவுகள் 

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும்.


ஆப்பிள் 

பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.

 

முந்திரி 

ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்

 

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணம்

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணம்


கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணமாகி வருன்றமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அப்பிரதேச மீனவர்கள், இந்த கடற்பரப்பில் நேற்று முன்தினம்  மாத்திரம் 42 டொல்பின்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற கடற்றொழில் நடவடிக்கைகளின் போதே டொல்பின்கள் மரணிப்பதாக மீனவர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக புதிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவிக்கையில், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.Thursday, January 31, 2013

பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 3 அணைகளை கட்டுகிறது சீனா: இந்தியா கவலை

பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 3 அணைகளை கட்டுகிறது சீனா: இந்தியா கவலை


பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட சீன அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில் யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது.

சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே மூன்று அணைகளை கட்ட அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அணை கட்டுவது குறித்து அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது.

சீன வெளியுறவு அதிகாரி ஹாங் லீ குறிப்பிடுகையில், இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றில் நீரின் வேகம் குறையாது.

தற்போது கட்டப்பட உள்ள அணையிலிருந்து நாங்கள், மின்சாரம் தயாரிக்கவில்லை என்றார்.

கொழும்பில் ஹெலிக்கொப்டர் மூலம் பீரிஐ பக்ரீரியாவைத் தெளிக்க திட்டம்

கொழும்பில் ஹெலிக்கொப்டர் மூலம் பீரிஐ பக்ரீரியாவைத் தெளிக்க திட்டம்கொழும்பு நகர்ப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பீரிஐ (BTI) பக்ரீரியாவை ஹெலிக்கொப்டர் மூலம் தெளிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று கியூப தூதுவர் இந்திரா லொஜேசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலிலே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

இத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி கோருவதற்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓரிரு தினங்களில் அவ் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கொழும்பு நகர்ப்பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக காணப்படுவதுடன், டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாலே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, January 30, 2013

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்!!அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில் அந்த நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது.

ஒரு குரங்குடன் கூடிய விண்கலத்துடன் பிஸ்காம் என்ற ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சுமார் 120 கி.மீ. தூரத்தை எட்டிய இந்த ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்குத் திரும்பியது (re entry). அதில், குரங்கும் உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எங்களது முயற்சியில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சில நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை எங்களது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ரீ எண்ட்ரி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ராக்கெட்டை மாற்றி வடிவமைத்தால் அதை ஏவுகணைகளாக மாற்ற முடியும். இந்த ஏவுகணை பூமியிலிருந்து சில நூறு கி.மீ. உயரே சென்று அங்கிருந்து திரும்பி தாக்க வேண்டிய நாட்டின் இலக்கு நோக்கி திரும்பி பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தாக்குதலை நடத்த முடியும்.

ஏற்கனவே அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஈரானால் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை தயாரிப்பும் சாத்தியம் என்பதையே இந்த ராக்கெட் சோதனை உறுதிப்படுத்துகிறது. இது இஸ்ரேல், அமெரிக்காவுக்கான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

ஆனால், அணு குண்டு தயாரிக்கவில்லை என்றும், மின்சார உற்பத்திக்காகவும், கேன்சர் ட்ரீட்மென்ட் உள்ளிட்ட மருத்துவ காரணங்களுக்காகவுமே அணு சக்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரான் கூறி வருகிறது.

இது குறித்து பிரான்சின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான புருனோ குருசெல்லே கூறுகையில், ஈரானின் இந்த ரீ எண்ட்ரி தொழில்நுட்ப ராக்கெட் மிகப் பெரிய சாதனையாகும். பூமிக்கு வெளியே ராக்கெட்டை ஏவி அதில் பொறுத்தப்பட்ட விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தை நோக்கி திரும்பி வரச் செய்யும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

விண்வெளிக்கு ராக்கெட்டையோ, விண்கலத்தையோ ஏவி அதை பத்திரமாக திரும்பி வரச் செய்ய உயர் அழுத்தத்தைத் தாங்கும், உயர் வெப்ப நிலையைத் தாங்கும் தொழில்நுட்பம் தேவை. இதை ஈரான் பெற்றுவிட்டது. இதனால் இந்த ராக்கெட்டை ஏவுகணையாக மாற்றி அதனால் அணு ஆயுதங்களைக் கூட நெடுந்தொலைவுக்கு ஏவ முடியும் என்றார்.

2011ம் ஆண்டிலேயே விண்வெளிக்கு குரங்கை அனுப்புவோம் என்று ஈரான் கூறி வந்தது. ஆனால், அந்த ஆராய்ச்சிகளில் தேக்கம் ஏற்பட்டதால் சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பின் தனது முயற்சியில் வென்றுள்ளது ஈரான்.

இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம்!

இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம்!ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.

அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள்.
இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மக்கள் வாழ்கிறார்கள். எனினும் இவர்கள் எந்த அளவுக்கு இலங்கைச் சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்கிற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.
அருகி வரும் இந்த மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்தும் ஆழ்ந்த கவலைகள் எழுந்துள்ளன.

அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள்!!

அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள்!!


நாம் நினைத்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு சம்பாதிக்கிறார்கள், சில தொழில்நுட்ப முன்னோடிகள். அவர்களின் சம்பளம் எவ்வளவு, அவர்கள் யார் என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளீர்களா? கவலை வேண்டாம் நாங்க இருக்கோம்!

தொழில்நுட்ப உலகில்தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்தானது பொதுவாக பரவியுள்ள சூழலில், நாம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலும் அதையே உறுதிப்படுத்துகிறது.
தகவல்கள் படங்களாக!!

எலும்புகளின் ஆரோக்கியம் பற்றிய 9 கட்டுக்கதைகள்!!!


எலும்புகளின் ஆரோக்கியம் பற்றிய 9 கட்டுக்கதைகள்!!!


உடலில் எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. முந்தைய காலத்தில் பொதுவாக மக்களுக்கு எலும்புகளில் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டி பிறகே ஏற்படும். ஆனால் தற்போதைய நவீன உலகில், மக்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புகள் சம்பந்தமான பிரச்சனைகள் இளம் வயதிலேயே ஏற்படுகிறது.

ஆனால் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் பிரச்சனை பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் தான் ஏற்படுகிறது. ஆனால் அதேசமயம் ஆண்களும் கால்சியம் குறைபாட்டினால், இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இது போன்று உடலின் ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் பற்றி நிறைய நம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகள், இன்னும் மக்கள் மத்தியில் உள்ளன.

எனவே அந்த மாதிரியான கட்டுக்கதைகளை முறித்து, அறிவியல் பூர்வமான உண்மைகளை தெரிந்து கொண்டு நடந்து கொள்வது சிறந்தது. இப்போது எலும்புகள் பற்றிய மக்களின் கட்டுக்கதைகள் என்னவென்று பார்த்து, அதை உடனே முறித்து, அறிவியல் பூர்வமான உண்மைகளை உணர்ந்து கொள்வோமா!!!
கட்டுக்கதை - 1 

பெண்கள் மட்டும் தான் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனைக்கு ஆளாவார்கள் என்பது. உண்மையில் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை உடலில் கால்சியம் குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி, கால்சியம் குறைவாக இருக்கும் ஆண்களுக்கும் ஏற்படும்.கட்டுக்கதை - 2 

சரியான நிலையில் உட்காராமல் இருந்தால், முதுகு வலி ஏற்படும் என்பது. ஆனால் பொதுவாக முதுகு வலியானது உருவாவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சிறு காரணம் தான் சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.
கட்டுக்கதை - 3 

ஆஸ்டியோபோரோசிஸ் மாதவிடாய் பிறகு தான் ஏற்படும். உண்மையில் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருக்கும் போது உண்டாகும். ஒரு வேளை மாதவிடாய் சரியாக நடைபெறாவிட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும்.
கட்டுக்கதை - 4 

கால்சியம் அதிகம் எடுத்தால், சிறுநீரக கற்கள் ஏற்படும் என்று நினைப்பது. ஆனால் உண்மையில் கால்சியம் ஒரு கரையக்கூடிய ஒரு சத்து. இத்தகைய சத்து, சிறுநீரகத்தில் தங்கி, கற்களை உண்டாக்கும் என்று சொன்னால் நம்ப முடியுமா? வேண்டுமெனில் கடல் உணவுகளில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட், சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்கும்.கட்டுக்கதை - 5 

ஆண்களை விட பெண்களுக்கு தான் கால்சியம் அதிகம் வேண்டும் என்று சொல்வது. உண்மையாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான அளவில் தான் கால்சியம் சத்துக்கள் வேண்டும். வேண்டுமெனில் பெண்களுக்கு 51 வயது அல்லது மாவிடாய் நின்ற பின்னர் அதிக அளவில் கால்சியம் வேண்டும், ஆண்களுக்கு 71 வயதுக்கு மேல் அதிகம் தேவைப்படும்கட்டுக்கதை - 6 

கால்சியம் குறைவாக சாப்பிடுவதால் மட்டும் தான் ஆஸ்டியோபோரோசிஸ் உண்டாகிறது என்பது. பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸ் ஹார்மோன் பிரச்சனையால் தான் உண்டாகிறது. அதற்காக கால்சியம் அளவுக்கு குறைவாக எடுத்தாலும், அந்த பிரச்சனை உண்டாகும் தான். சொல்லப்போனால், கால்சியம் உள்ள உணவுகளை உண்டால் மட்டும், அவை உடலில் முற்றிலும் செல்லாது, அத்துடன் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், தான் கால்சியம் சத்து உடலில் உறிஞ்சப்படும்.கட்டுக்கதை - 7 

முதுகு வலி ஒரு பொதுவான பிரச்சனை என்று நினைப்பது. ஆம், இது ஒரு சாதாரண பிரச்சனை தான், ஆனால் இது சுகாதாரப் பிரச்சனையால் உண்டாவதில்லை. இதனை சரியாக கவனிக்காமல் இருப்பதால் தான், அவ்வப்போது வலி ஏற்படுகிறது.கட்டுக்கதை - 8 

முதுகு வலிக்கு அறுவைசிகிச்சை செய்வது தேவையில்லாதது என்று சொல்வது. உண்மையில் அடிக்கடி முதுகு வலி வந்து, தண்டுவடத்திற்கு அதிக அழுத்தம் கொடுப்பதால், அவை இன்னும் அதிகம் தான் ஆகும். மேலும் அவ்வாறு அதிகமானால், தண்டுவடத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நடக்க முடியாத நிலை வந்துவிடும். எனவே மருத்துவரை அணுகி, அதனை சரியாக பரிசோதித்து, வேண்டிய சிகிச்சை மேற்கொள்வது நல்லது.கட்டுக்கதை - 9 

எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைக்கு ஓய்வு சரியான தீர்வாக இருக்கும் என்று நினைப்பது. ஆனால், அவ்வாறு ஓய்வு எடுத்தால், அவை எலும்பிற்கு இன்னும் தோய்வை தான் ஏற்படுத்தும் என்று நிறைய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நேரத்தில் ஓய்வு எடுப்பதற்கு பதிலாக ஏதாவது உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்த தீர்வை தரும்.மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்

மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்தங்கள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக மிக குறைந்த விலையில் ஐபோனை தயாரிக்க அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய சூழலில் மொபைல் போன் சந்தையில் மிக குறைவான விற்பனை பங்கினையே அப்பிள் கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் மட்டும் இதன் விற்பனை ஓங்கியுள்ளது.

மற்ற நாடுகளில் அப்பிள் நிறுவன பங்குகளின் பங்கு மிக மிக குறைவே, எனவே வளர்ந்து வரும் நாடுகளில் தன் போன்களை விற்பனை செய்திட அப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முடிவிற்குள் வர இருக்கும் இந்த ஸ்மார்ட் போனின் விலை 100 டொலரிலிருந்து 149 டொலருக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனத்தின் போன்களுக்கு கடும் போட்டியாக அப்பிள் போன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனை சீனாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஆண்- பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்பு சுவர்: சவுதியில் புதிய சட்டம்

ஆண்- பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்பு சுவர்: சவுதியில் புதிய சட்டம்


சவுதி அரேபியாவில் ஆண், பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்பு சுவர்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஆணும், பெண்ணும் தனியாக சந்தித்து பேசுவது, பழகுவது போன்ற செயல்கள் அந்நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு பெண்கள் உள்ளாடை விற்பனை மையங்களில் வேலை செய்யும் ஆண்களை வெளியேற்றி விட்டு, பெண்களை பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது ஆண்களும், பெண்களும் இணைந்து பணிபுரியும் எல்லா இடங்களிளும் 5 அடிக்கு மேற்பட்ட உயரமான தடுப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பணியிடங்களில் ஆண்களால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் அதிகம் வந்ததை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சவுதி தொழிலாளர்கள் நல அமைச்சர் அப்டெல் பகி தெரிவித்துள்ளார்.

பிக்மி எனப்படும் பத்து சிற்றானைகள் விஷம் தின்று சாவு

பிக்மி எனப்படும் பத்து சிற்றானைகள் விஷம் தின்று சாவு”பிக்மி” என்று அழைக்கப்படும் வெறும் 8 அடி உயரம் கொண்ட இந்த சிற்றானைகள் உலகில் அழிந்து வரும் உயிரினங்களுள் ஒன்றாகும். இவை மலேசியக் காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை பத்து சிற்றானைகள் விஷம் தின்று இறந்து கிடந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழு பெண் யானைகளும், 3 ஆண் யானைகளும் வயிறு மற்றும் குடல் பகுதியில் புண், மோசமான ரத்தக்கசிவு ஆகிய காரணங்களால் இறந்து போனதாக இவற்றின் சவப் பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

இவை தம்மை அறியாமல் விஷப்புல் பூண்டுகளைத் தின்றனவா அல்லது யாரேனும் திட்டமிட்டே விஷம் வைத்துக் கொன்றார்களா என்று விசாரணை நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாத சிற்றானைக் குட்டி மட்டும் இறந்து கிடந்த தனது தாயை விழிக்க வைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தது. அந்தக் குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

திட்டமிட்ட படுகொலையாக இருந்தால் கொலைகாரர்கள் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள். எனினும் பரிசோதனைக் கூடத்தில் இருந்து வர வேண்டிய அறிக்கைக்காகக் காத்திருப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மசீது மஞ்சு(Masidi Manjun) தெரிவித்துள்ளார்.

உலக வன விலங்கு கூட்டமைப்பில் இந்த சிற்றானைகளின் எண்ணிக்கை 1500 ஐ விடக் குறைவாக உள்ளது. இவை குழந்தைத்தனமான முகமும், பெரியகாதுகளும், நீண்ட வாலும் கொண்டவை.

வனவிலக்கு பாதுகாப்பு துறையின் முயற்சிகளாலும், வாழிடப் பாதுகாப்பினாலும், இப்போதும் அழிவில் சிக்கிக் கொள்ளாமல் அவற்றின் எண்ணிக்கையில் வளர்ந்து வருவதாக மசீது தெரிவித்துள்ளார்.  

பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.


நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா?


இலங்கையில் பள்ளிக்கூட, பல்கலைக்கழக வயது எல்லைகள் குறைப்பு

இலங்கையில் பள்ளிக்கூட, பல்கலைக்கழக வயது எல்லைகள் குறைப்பு


இலங்கையில் பள்ளிக்கூட மற்றும் பல்கலைக்கழக அனுமதி வயது எல்லைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, பள்ளிக்கூடங்களுகான அனுமதி வயது 4 ஆகவும், பல்கலைக்கழக அனுமதி வயது 16 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளை பின்பற்றியே இந்த வரையறை மேற்கொள்ளப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய முறையின்படி 12 ஆம் தரத்தில் உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்கள் தமது 16 வது வயதில் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, January 29, 2013

தொலைந்து போன வாலிபரின் ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப் பூச்சிகள்

தொலைந்து போன வாலிபரின் ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப் பூச்சிகள்அவுஸ்திரேலியாவில் 18 வயதான மேத்யூ ஆலன் என்ற வாலிபர் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்.
வீட்டாரும் பொலிசாரும் தேடிப்பார்த்தும் அவனைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இவர் தனது அலைபேசி, வங்கி அட்டை போன்ற எதையும் எடுத்துச் செல்லாததால் அவரைக் கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

இந்நிலையில் காட்டுப்பகுதியில் மலையேறச் சென்ற இருவர் சனிக்கிழமையன்று வெஸ்ட்லே காடுகளுக்குள் ஓர் வாலிபர் இருப்பதாக பொலிசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே பொலிஸ் படை அங்கு விரைந்தது.

புதர்கள் மண்டிய காட்டுப்பகுதிக்குள் சென்று பொலிசார் தேடியபோது அங்கு ஒரு வாலிபர் உருக்குலைந்த நிலையில் உடல் மெலிந்து, கால்களில் புண்களுடன் ஓரிடத்தில் போக வழி தெரியாமல் சிக்கியிருப்பதைப் பார்த்தனர்.

அருகில் சென்று பார்த்த போது அவர் உடலெங்கும் அட்டைப்பூச்சிகள் அப்பிக் கிடந்தன. அவை அவரது ரத்தத்தை உறிஞ்சி அவரை மெலியச் செய்துவிட்டன.

கொசுக்கடியால் அவர் உடல் விகாரமாகத் தோன்றியது. ஒன்பது வாரங்களாக அவன் அந்த மலைப்பகுதியில் ஓடிய ஓடைநீரைக் குடித்தபடி இருந்திருக்கிறார்.

அந்த நீரும் வற்றிவிட்ட நிலையில் அவரது உடல் வாடிவிட்டது. நாவும் வறண்டு விட்டது. அவரது உடலில் 50 சதவீதம் எடை குறைந்துவிட்டது. கண்களும் இருண்டுவிட்டன.

அவரைப் பொலிசார் மீட்டுவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உடல் சற்றுத் தேறியதும் அவர் அங்கு சென்றது ஏன், எப்படி, எதற்கு என்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

எலும்புகள் நொறுங்கிய நிலையில் உயிர் வாழும் அதிசய குழந்தை

எலும்புகள் நொறுங்கிய நிலையில் உயிர் வாழும் அதிசய குழந்தைஉடலில் 30 எலும்புகள் நொறுங்கி பிறந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக நல்ல நிலையில் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் செஷயர் பகுதியை சேர்ந்தவர் மிலி சிம்சன், இவர் கர்ப்பமாக இருந்த போது ஸ்கேன் செய்த மருத்துவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையில் எலும்புகள் வலுவற்று இருப்பதாகவும், பல எலும்புகள் உடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல எலும்புகள் உடைந்துள்ளதால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மிலியை கருக்கலைப்பு செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் அவர் கருக்கலைப்புக்கு மறுத்து, பிரசவம் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிலிக்கு குழந்தை பிறந்தது. பிறந்த போது, விலா எலும்புகள் உள்பட மொத்தம் 30 எலும்புகள் அவளது உடலில் நொறுங்கிய நிலையில் இருந்தன.

கால்சியம் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட  பிரிட்டில் போன் டிசீஸ் என்று மருத்துவர்கள் கூறினர். உடலுக்கு ஒரு வடிவம் கிடைக்காமல் கூனி குறுகிய நிலையிலேயே இருந்த குழந்தை 8 மாதங்களுக்கு பிறகு தான் உட்காரவே தொடங்கியது.

சமீபத்தில் 2-வது பிறந்தநாளை வெற்றிகரமாக கொண்டாடியும் உள்ளது. தொடர்ச்சியாக கால்சிய மருந்துகள் மற்றும் சிகிச்சை எடுத்து வருகிறாள். ஆனாலும் கூட லேசாக விழுந்தாலே, சற்று அழுத்தமாக தொட்டாலே எலும்புகள் உடைந்து விடுகிறதாம்.

‘இவள் ஒரு ஆச்சரியம்.. அற்புதம்.. சிறப்பாக வளர்த்துக் காட்டுவேன்’ என்று சந்தோஷமாக தெரிவித்து வருகிறாராம் மிலி.

Monday, January 28, 2013

போப் பறக்க விட்ட புறாவை கடித்துக் குதறிய சீகல்... வாடிகனில் 'ஷாக்'!

போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீகல்... வாடிகனில் 'ஷாக்'!
வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல் எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக் களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்து விக்கித்து நின்றனர்.

சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று.

போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார். அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து போப்பாண்டவர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடும் வேதனையில் துடித்தபடி புறா சீகல்லிடமிருந்து தப்பித்து ஓடிப் பறந்ததைப்பார்த்து கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். புறாவை சரமாரியாக கடித்துக் குதறிய பின்னர் அந்த சீகல் பறவை அங்கிருந்து பறந்தோடி விட்டது.

இத்தனைக்கும் ரோம் நகரிலிருந்து வந்த 2000 இளைஞர்கள் நடத்திய அமைதிப் பேரணி போப்பாண்டவர் உரை நிகழ்த்திய செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் நேற்று முடிவடைந்தது. இதன் அறிகுறியாகவே புறாவைப் பறக்க விட்டார் போப்பாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்

மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்மிஸ்டு கால் செய்வதற்கும், மண்டபத்தின் வெளியே செருப்பை விட்டு விட்டு வருவதற்கும் என்ன ஒற்றுமை?  யாரும் எடுத்து விடக் கூடாதே என்ற டென்ஷன்தான். இப்படி மிஸ்டு கால் பற்றி ஏராளமான ஜோக்குகள் உலா வருகின்றன. மிஸ்டு கால் கொடுப்பவர்களை ஏதேதோ சொல்லி கேலியும், கிண்டலும் செய்கிறோம். ஆனால், மிஸ்டு கால் கொடுப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி அளவுக்கு மிச்சம் ஆகிறது என்று ஒரு சர்வே கூறுகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் அந்த நல்லவர்களை இனிமேல் கிண்டல் செய்யாதீர்கள்...  இந்தியாவில் பிரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் 96 சதவீதம் பேர் மிஸ்டு கால் பார்ட்டிதான். இதில் சிக்கனமான பெற்றோரும் உண்டு. பிள்ளைகள் டியூசனுக்கு போய் சேர்ந்ததும் ஒரு மிஸ்டு கால். அங்கிருந்து மீண்டும் புறப்படும் போதும் மிஸ்டு கால். ஷாப்பிங் முடித்து விட்டு, கார் டிரைவரை அழைக்க ஒரு மிஸ்டு கால். ஆனால், இதையெல்லாம் தாண்டி, வங்கிகள், நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்கள், உணவு விடுதிகள், அரசியல் கட்சிகளும் இந்த மிஸ்டு கால் முறையை பயன்படுத்தி ஏராளமான பணத்தை மிச்சப்படுத்துகின்றன.

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அவரது சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு பற்றி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கிறது. மற்றொரு எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மினி&ஸ்டேட்மென்ட் கிடைக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இதே போன்ற சேவையை வழங்குகின்றன.மராத்தி நாளிதழ் தனது சந்தாதாரர்களை, ‘ஒரு மிஸ்டு கால் கொடுங்கள், சந்தா புதுப்பிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளது. அதே போல், மிஸ்டு கால் கொடுத்தால் எந்தெந்த தியேட்டர்களில் எந்த திரைப்படம் ஓடுகிறது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை அன்னா ஹசாரே தொடங்கியபோது, இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 180 நாட்களில் 2.5 கோடி பேர் மிஸ்டு கால் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் கூட மிஸ்டுகால் முறையை பயன்படுத்துகின்றன என்று அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.