Friday, November 2, 2012

சென்னை கடந்த நீலம் புயல் அடித்த பகுதிகளின் போட்டோக்கள்

சென்னையை கடந்த நீலம் புயல் அடித்த பகுதிகளின் போட்டோக்கள்




“இதோ வருகிறது” என்று இன்று பூராவும் மிரட்டிக் கொண்டிருந்த நீலம் புயல், சென்னை – மகாபலிபுரம் அருகே நேற்று மாலை 4.45 மணி அளவில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால், கடற்கரை பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.

புயல் கரையை கடந்த போது கடற்கரையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த போட்டோ தொகுப்பில், புயலடித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை காணலாம். போட்டோக்களை பார்த்தாலே, எந்த ஏரியா என்பது புரியும் என்பதால், ஒவ்வொரு போட்டோவுக்கும் விளக்கம் கொடுக்கவில்லை.

நம்மாளுங்களுக்கு தகிரியம் ஜாஸ்தி. பீச்சில் சூறாவளி வந்தாலென்ன, தி.மு.க. கொள்கை விளக்க கூட்டத்தில் குஷ்பு வந்தாலென்ன நெருக்கத்தில் போய் பார்த்தால்தான் திருப்தி! நேற்று நெருக்கத்தில் பார்க்காதவர்கள், அட்லீஸ்ட் போட்டோக்களில் பாருங்களேன்.


(இந்த புயலிலும் மெரீனாவில் நின்று கடலை போடுபவர்களை மன்னித்து விடுங்கள் PLS)














































































































No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!