Thursday, February 27, 2014

”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு

”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு 




நாசா சமீபத்தில் கனிம வளம் மிக்க பூமியை போன்ற புதிய கோள்களை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்கள் கண்டுபிடிப்பு பற்றி நாசா செய்தி வெளியிட்டுள்ளது.அதன் படி செழிப்பான புதிய 715 உலகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருப்பதாக கூறியுள்ளது. 

வழக்கம் போல நாசாவின் கெப்ளர் தொலைநோக்கிதான் இதையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இதற்காக கெப்ளர் தொலைநோக்கிக் குழுவுக்கு நாசா நன்றி கூறியுள்ளது.

கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புரிந்து வருகிறது.. 

"இந்த ஆராய்ச்சிதான் நாங்கள் கனிம வளங்கள் நிறைந்த,செல்வச்செழிப்பான,மனிதர்கள் வாழத்தகுந்த புதிய கிரகங்களை கண்டறிய உதவி புரிந்தது" என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். 

அப்புதிய 715 கோள்களும் 305 வெவ்வேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கிரகங்களில் 95 சதவீத கோள்கள் பூமியை போன்றே பரப்பளவு, தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அங்கு மனிதர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கான நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது. எப்படியோ "இரண்டாம் உலகம்" நிஜத்திலும் இருக்கலாம் என்று நிரூபித்துள்ளது 

இந்த புதிய கண்டுபிடிப்பு.சொல்ல முடியாது ஒரு வேளை நம்மை போன்ற உருவ அமைப்பினர் அங்கு வசித்து வரக்கூட சாத்தியம் இருக்கலாம். அங்கேயும் நாராயணசாமி இருக்கலாம்.. ஆதாம் இருக்கலாம்.. ஏவாள் இருக்கலாம்.. யார் கண்டார்.


கடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்

கடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்



கூகிள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளுள் Street View எனும் சேவையும் பிரபல்யம் வாய்ந்தமை அறிந்ததே.
இச்சேவையினை கூகுள் நிறுவனம் Underwater Street View எனும் பெயருடன் நீருக்கு அடியில் உள்ள அரிய தகவல்களை பயனர்களுக்காக வெளிக்கொணரும் சேவைக்கு விஸ்தரித்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயனர்களின் பார்வைக்கு விடவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Wednesday, February 26, 2014

நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்தது ஜாக்பாட் கோடி கணக்கில் தங்க நாணய புதையல்

நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்தது ஜாக்பாட் கோடி கணக்கில் தங்க நாணய புதையல்


அமெரிக்காவில் நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு யோகம் அடித்தது. அங்கு மரத்தடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணய புதையல் கிடைத்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள தம்பதி தினமும் காலையில் தனது செல்ல நாயை அழைத்து கொண்டு வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வாறு சென்ற போது ஒரு மரத்தின் அடியில் உடைந்து போன இரும்பு டின் ஒன்றின் பகுதியை கண்டனர். இதனை கண்டு அவர்களுடைய செல்ல நாயும் குரைக்கவே, அதில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. மண்ணுக்குள் பகுதியாக புதைந்து கிடந்த அந்த டின்னை தம்பதி கஷ்டப்பட்டு தோண்டி எடுத்தனர். உள்ளே பார்த்தால் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர். அந்த தகர டின் முழுவதும் 1400 தங்க நாணயங்கள் காணப்பட்டன.



இதுகுறித்து கலிபோர்னியாவின் நாணயவியல் நிபுணர் மெக்கார்த்தி கூறுகையில், தம்பதியிடம் சிக்கிய தங்க நாணயங்கள் சுமார் பல நூறு ஆண்டுகள் பழமையானவையாகும். அவை 1847 முதல் 1894ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். அவற்றில் பெண் அரசியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க மதிப்பில் அதன் உண்மையான மதிப்பை அளவிட முடியவில்லை. சுமார் பத்து மில்லியன் டாலர் வரை மதிப்புடையது என்று கருதப்படுகிறது. மேலும் 19ம் நூற்றாண்டின் நாணயம் வடக்கு கலிபோர்னியாவில் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதி தங்க புதையல் நிறைந்த பகுதி என்று ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு கருத்தும் நிலவி வருகிறது. தற்போது அதனை உறுதி செய்யும் விதத்தில் தங்க நாணய புதையல் தம்பதிக்கு கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திஉள்ளது.










ஒலிம்பிக் நிறைவில் அரங்கேறிய கூத்து

ஒலிம்பிக் நிறைவில் அரங்கேறிய கூத்து


ரஷ்யாவின் சோச்சியில் நிகழ்ந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் 5 ஒலிம்பிக் வளையங்களில் நான்கு மட்டுமே தென்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ரஷ்யாவின் 22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவிற்கு வந்தது.

இந்நிலையில் வானவேடிக்கைகளுடன் நடந்த நிறைவு விழாவின் போது, சுவிசின் பனிச்சறுக்கு வீராங்கனை பாட்ரிசியா கும்மர் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தியவாறு நடந்து வந்தார்.

அப்போது நேர்ந்த மின்னணு கோளாரின் காரணமாக 5 வளையங்களுடன் தோற்றமளிக்கும் ஒலிம்பிக் சின்னம் 4 வளையங்களை மட்டுமே கொண்டு தோன்றியது.

இதனை 40,000 பார்வையாளர்கள் கண்டதுடன் ”மற்றொரு வளையம் எங்கே” என மிக கிண்டாலாக விமர்சிக்க தொடங்கினர்.

மேலும் இச்சம்பவம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் பெரும் சிரிப்பினில் ஆழ்த்தியது.

Tuesday, February 25, 2014

பூமியை நெருங்கும் வியாழன்: மார்ச் 1ல் இங்கிலாந்தில் தெளிவாக தெரியுமாம்!

பூமியை நெருங்கும் வியாழன்: மார்ச் 1ல் இங்கிலாந்தில் தெளிவாக தெரியுமாம்! 


சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இந்த நிகழ்வினை இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும். 

பூமியை விட 1,100 மடங்கு அளவில் பெரியதான வியாழன் கிரகம், பூமியில் இருந்து 435 மில்லியன் மைல்கள் தொலைவில் உயரே நிற்குமாம். 

பூமிக்கு மிக அருகே தெரியும் இது போன்ற நிகழ்வு அடுத்து வருகிற 2026ம் ஆண்டில் தான் நடக்கும்

தெளிவாக தெரியும் கிரகங்கள் 

நாம் வெறும் கண்ணால் வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி, புதன், ஆகிய ஐந்து கிரகங்களை மட்டுமே நன்றாக காணமுடியும்.

பொன் கிடைத்தாலும் 

தமிழில் ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பார்கள். ஏனெனில் புதனைக் காண்பது என்பது மிக அரிது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதே அதற்குக் காரணம். புதன் கிரகம் சூரியன் அஸ்தமித்த பிறகு மேற்குத் திசையில் அடிவானில் சிறிது நேரமே தெரியும். அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கே அடிவானில் சிறிது நேரம் தெரியும். எனவேதான் இவ்வாறு கூறியுள்ளனர்.

வியாழன் பெரியது 

சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரக‌‌ம் எ‌ன்ற பெருமையை‌ப் பெ‌ற்றது வியாழனாகு‌ம். ‌மிக‌ப்பெ‌ரிய ‌கிரகமாக ‌விள‌ங்கு‌ம் ‌வியாழனை, ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ரோமானிய ஆட்சிக் கடவுளான ஜூபிட‌ரின் பெயரா‌ல் அழை‌க்க‌ப்படு‌கிறது.

பொன் கிரகம் 

சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள ‌வியாழ‌ன் கிரகம், வி‌ண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடு‌த்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய ‌கிரகமாகும். இதனை பொன் கிரகம், குரு என்றும் தமிழில் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

எவ்ளோ பெரிய கிரகம் 

இது 88,736 மை அதாவது 1,42,800 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் பர‌ப்பளவு கொ‌ண்டது. வியாழனின் சுற்றளவு பூ‌மியைப் போல 11 மடங்கு அதிகமாகும். ‌வியாழ‌ன் ‌கிரக‌த்‌தி‌ற்கு உ‌ள்ள‌த் துணை‌க் ‌கிரக‌ங்க‌ளி‌ல் இதுவரை 28 ‌கிரக‌ங்க‌ள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்‌டு‌ள்ளன. 1610ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் நா‌ன்கு துணை ‌கிரக‌ங்களை க‌லி‌லியோ க‌ண்டு‌பிடி‌த்தா‌ர்.

பூமிக்கு அருகில் 

இந்த வியாழன் கிரகம் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இந்த நிகழ்வினை இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் மூலம் பார்க்கலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

தேசிய வானியல் வாரம் 

இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் வியாழன் கிரகத்தினை பார்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன.

வாயுக்களால் நிரம்பியது 

இது குறித்து, லண்டன் நகர பல்கலை கழக கல்லூரியை சேர்ந்த வானியல் நிபுணர் ஸ்டீவ் மில்லர் கூறும்போது, சூரிய குடும்பத்தின் மிக பெரும் கிரகம் வியாழன். நாம் வாழும் பூமியை விட வேறுபட்ட உலகம் கொண்டது. அது பாறை மற்றும் சமுத்திரங்களால் ஆனதல்ல.அது வாயுக்கள் நிறைந்த பெரிய கிரகம்.

துணை கோள்களுடன் வியாழன் 

வியாழன் பல்வேறு வானிலை அமைப்புகளை கொண்டது. அதனால் அதன் மேற்பரப்பில், கோடுகள், மண்டலங்கள் மற்றும் பிற அம்சங்கள் பார்க்கும் வகையில் உள்ளது. மார்ச் 1ம் தேதி பைனாகுலர் வழியே வியாழன் கிரகத்தை தெளிவாக பார்க்க முடியும். அதனுடன் வியாழன் கிரகத்தின் 4 மிக பெரும் துணை கோள்களையும் தெளிவாக பார்க்க முடியும். அவை வியாழன் கிரகத்தை சுற்றி வருவதை சில தினங்கள் பார்க்க முடியும் என்றும் வானியல் நிபுணரான டாக்டர் கிறிஸ் ஆர்ரிட்ஜ் தெரிவித்துள்ளார்.


மெக்சிகோ கடத்தல் தலைவரை ‘தூக்கியது’, பின்லேடனுக்கு அடுத்த சி.ஐ.ஏ. ஆபரேஷன்?

மெக்சிகோ கடத்தல் தலைவரை ‘தூக்கியது’, பின்லேடனுக்கு அடுத்த சி.ஐ.ஏ. ஆபரேஷன்?



பின்லேடனை கொல்லும் அதிரடி ஆபரேஷனுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. திட்டமிட்டு செயல்படுத்திய ஆபரேஷன், மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ கஸ்மனை, சுற்றி வளைத்து கைது செய்ததுதான் என்பதுதான், மெக்சிகோ மீடியாக்களில் இன்றைய தலைப்புச் செய்தி!

மெக்சிகோ போதைப் பொருள் கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ கஸ்மனை சுற்றி வளைத்து கைது செய்தது மெக்சிகோ ராணுவம்தான் என்ற போதிலும், அதன் பின்னணியில் இருந்தது அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. என்கின்றன, மெக்சிகோ மீடியாக்கள்.

கடத்தல் குழு தலைவர் எல் சாப்போ, மெக்சிகோவின் ரிசாட் நகரமான மஸட்லான் அருகேயுள்ள, மறைவிடம் ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய ஒரு ஏரியாவையே சுற்றி வளைத்த மெக்சிகோ ராணுவம், ஒரு துப்பாக்கி தோட்டாவைகூட விரயம் செய்யாமல், ஆளை லபக் என்று தூக்கிச் சென்றது.

“13 ஆண்டுகளாக இந்த கடத்தல் குழு தலைவரை நெருங்கவே முடியாமல் இருந்த மெக்சிகோ ராணுவம், இவ்வளவு துல்லியமாக செயல்பட்டது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ள மெக்சிகோ மீடியாக்கள், அமெரிக்க நேவி சீல் அதிரடிப் படையினரும் (பின்லேடன் வேட்டைக்கு சென்ற படை) மெக்சிகோ ராணுவத்தினரின் சீருடையில், அவர்களுடன் கலந்து சென்றே கடத்தல் தலைவரை அமுக்கினார்கள்” என்கின்றன, மெக்சிகோ மீடியாக்கள்.

இந்த கூற்றை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. “இது முழுக்க முழுக்க மெக்சிகோ ராணுவத்தினரின் ஆபரேஷன்தான். கடத்தல் குழு தலைவரை நாம் (அமெரிக்கா)  தேடப்படுவோர் பட்டியலில் வைத்திருந்தபோதிலும், இந்த ஆபரேஷனில் எமக்கு எந்த தொடர்பும் கிடையாது” என பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி கூறினார் என்கிறது, வாஷிங்டன் போஸ்ட்.

ஆமா.. தமக்கு எந்த ஆபரேஷனில்தான் தொடர்பு இருக்கிறது என்று ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது சி.ஐ.ஏ.?