Showing posts with label வாழ்வு முறை. Show all posts
Showing posts with label வாழ்வு முறை. Show all posts

Monday, January 6, 2014

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!

“செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” மிரளும் அமெரிக்கர்கள்!




“காலநிலை அறிவிப்பின்போது பொதுவாக நாம், ‘உயிர் அச்சுறுத்தல்’ (‘life threatening’) என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை. ஆனால், ஆம்.. தற்போது ஏற்பட்டுள்ளது ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற நிலைமைதான்” என்கிறார், கென் சிமெஸ்கோ. இவர் அமெரிக்கா பிஸ்மார்ச் பகுதியை சேர்ந்த meteorologist.

“தற்போது வெளியே உள்ள மைனஸ்-50 டிகிரி குளிரில் உடலின் பாகங்கள் ஏதாவது தொடர்ந்து 5 நிமிடங்கள் தெரியும்படி நின்றிருந்தாலே, தோலில் frostbite ஏற்பட தொடங்கும். அந்த உடல் பகுதி தொடர்ந்து குளிரில் எக்ஸ்போஸ் செய்யப்பட்டால், மயக்கமடைந்து விழுவதுடன், உயிராபத்தும் ஏற்படலாம். அதுதான் காலநிலை அறிவிப்பில் ‘உயிர் அச்சுறுத்தல்’ என்ற எச்சரிக்கை செய்யப்படுகிறது” என்கிறார் கென்.

கடந்த இரு தினங்களாக கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடும் மோசமான காலநிலை காணப்படுகிறது. குளிர் என்றால், உங்கவீட்டு குளிர், எங்க வீட்டு குளிர் அல்ல, நிஜமாகவே கிடுகிடுக்க வைக்கும் குளிர்.

அமெரிக்கர்களுக்கு இதில் கடும் கோபம் என்னவென்றால், கனடாவின் மத்திய பகுதியில் ஆரம்பித்த குளிர்தான் படர்ந்து, அமெரிக்காவின் சில பகுதிகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்! கனடாவின் கியுபக் பகுதிகளில் நேற்று முதலே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து அறிவித்தபடி உள்ளார்கள்.

கனடா, டொரண்டோவில் வீதிகளில் கொட்டியிருந்த பனி தொடர்ந்து அகற்றப்பட்ட வண்ணம் உள்ள நிலையிலும், அதன்மேல் செல்லும் வாகனங்களின் அழுத்தம் காரணமாக வீதிகளில் பனி அழுந்தி கெட்டி ஐஸாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதில் வாகனங்கள் அதிகம் சறுக்க தொடங்குகின்றன.

கிழக்கு கனடாவில் உள்ளவர்களுக்கு இது ஓரளவு பரிச்சயமான காலநிலைதான் என்ன போதிலும், கடந்த பல ஆண்டுகளாக இந்தளவு மோசமான அளவுக்கு சென்றதில்லை. குளிரில் சடுகுடு விளையாடும் கனேடியர்களுக்கே இப்படி என்றால், அமெரிக்கர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்று யோசித்து பாருங்கள்.

அதுதான், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில், ‘உயிர் அச்சுறுத்தல்’ அறிவிப்பை விடுத்துவிட்டு மிரண்டுபோய் உள்ளார்கள்! அமெரிக்க டி.வி. சேனல் ஒன்று, “செவ்வாய் கிரகத்தில் இருப்பதைவிட இன்று இங்கு குளிர் அதிகம்” என்று மிரட்டுகிறது.

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா பகுதிகளில் காற்றுடன் சேர்ந்த குளிர் (wind chill factor) இன்றிரவு மைனஸ் 60 வரை போகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சனி ஞாயிறு தினங்களில் மத்திய கனடா, வடகிழக்கு அமெரிக்காவில் மற்றொரு பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது. 6 முதல் 12 அங்குல பனிப்பொழிவு இருக்குமாம்.

நீங்கள் வட அமெரிக்காவுக்கு (கனடா, அமெரிக்கா) வெளியே வசிப்பவராக இருந்தால், நம்மூரில் நிலைமை எப்படி என்று பார்க்க ஆவல் உள்ளவர்களாக இருப்பீர்கள் அல்லவா? இதோ, நேற்று எடுக்கப்பட்ட சில போட்டோக்களை இணைத்துள்ளோம். 



















Friday, November 29, 2013

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பாவமோ குற்றமோ அல்ல.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது பாவமோ குற்றமோ அல்ல.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!


திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அளித்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை

பாவம் அல்லவே...
இருப்பினும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.


பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது

இத்தகைய உறவில், பாதிப்புகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

சட்டம் அவசியம்..

இதனால் இத்தகைய உறவில் இணையும் பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.

திருமண உறவைப் போல அங்கீகரியுங்கள்

அத்துடன் வழக்கமான திருமண உறவை அங்கீகரித்தது போல இத்தகைய உறவையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

திருமணத்துக்கு முன் உடலுறவு?

ஆனால் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை நாடாளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. இதனால் பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.

அதுவேற இதுவேற..

கள்ளத்தொடர்பு, பலதார மணம் ஆகியவை 'திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்' எனும் உறவில் சேர்க்க முடியாது. அவை குற்றச்செயல்களாகும்
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Please we welcome your comments.....


Tuesday, November 19, 2013

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைகள்!!!

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைகள்!!!


நமது வாழ்வில் பணம் முக்கியம் தான். ஆனால், நமக்கு கிடைத்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழுவோர் வெகு சிலர்தான். பலபேர் அதனை மேலும் அதிகரிக்க தனது பணிநேரத்தை விட கூடுதல் நேரம் உழைக்க முற்படுகின்றனர். இவ்வாறு இரவு வெகுநேரம் உழைப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தாலும் அதனால் ஏற்படும் உடல்நலக்குறைகள் தான் அதிகம். இவ்வாறு உடல் வருத்தி உழைப்பதை குறைத்து கிடைத்த நேரத்தில் வேலைப்பார்த்து ஆரோக்கியமான உடல்நலத்தை பெறவேண்டும்.

தற்போதைய வாழ்க்கை முறையை செயல்படுத்தி நல்வாழ்கை வாழ இன்று பலர் ஒரு மணிநேரம் மிகையாக வேலைப் பார்க்க முனைகின்றனர். வேகமாக வளர்வதற்காகவும், அயராது எதாவது சாதிப்பதற்காகவும் இது பலருக்கு தொல்லையாக மாறி வருகின்றது. அதனால் உடல்ரீதியையும், மனரீதியையும் தாண்டி உழைக்க முற்படுகின்றனர். வழக்கமான அடிப்படையில் இவ்வாறு நீண்டநேரம் வேலைப் பார்ப்பதால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கையற்ற முறையான காப்ஃபைன் உட்கொண்டு வேலைப் பார்ப்பது போன்றவை அவர்களை மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக வேலைப் பார்க்க தூண்டுகின்றது.

வழக்கமான அடிப்படையில் நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால், உங்களுடைய தூக்கம் குறைந்து இதய நோய்கள் மற்றும் ட்ரீகர் ஸ்ட்ரோக் போன்ற உடல்நலக்குறைகளை ஏற்படுத்தும். நீண்ட நேரம் வேலைப்பார்க்கும் ஆண்களுக்கு குறுகியகால மற்றும் நீண்டகால உடல்நலகுறைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால குறைகளான வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். நீண்டகால குறைகளான இதய நோய், சர்க்கரைநோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடல் எடை அதிகரிப்பு, கருத்தரிப்பதில் பிரச்சனைகள், பிரசவ கால பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

அதனால், ஆண்கள் தங்களது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். வாழ்க்கை சிறிதாக இருந்தாலும், அதனை வளமாகவும் சிறப்பாகவும் வாழ்வது மிகவும் முக்கியமானதாகும். பொறாமை மற்றும் தேவைக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் போன்றவை தான் நம்மை மிகையான நேரம் வேப் லைபார்க்கக் காரணமாக இருப்பவைகளாகும். இதன் விளைவாக நமக்கு கிடைப்பது உடல்நலக் குறைகள் மட்டும் தான்.

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால் ஆண்கள் சந்திக்கும் உடல்நலகுறைகள் என்ன என்று பார்க்கலாம்.


ஊக்குவிகளுக்கு அடிமையாகுதல்

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்க நீங்கள் நாடுவது ஊக்குவிகளும் எனெர்ஜி உயர்த்திகளுமான காப்ஃபைன் மற்றும் சிகரெட் போன்றவற்றைதான். இது நம்மை அதற்கு அடிமையாக்கி, உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கும். சிறிது காலத்திற்கு பின்னர் காப்ஃபைன் மற்றும் நிக்கோடின் அடிமைகள், நமக்கு தூக்கக் குறைபாடுகள் மற்றும் கலக்க மனநிலை போன்றவற்றில் கொண்டு போய் விட்டுவிடும்.



இரையக குடல் ஒழுங்கின்மை

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்ப்பது மற்றும் ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது போன்றவை இரையக குடல் ஒழுங்கின்மை குறைகளான வயற்றுபோக்கு, வாந்தி, பேதி, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தாலும் இரையக குடல் ஒழுங்கின்மை குறைகளை ஏற்படுத்தும்.


தூக்கமின்மை

இன்று பல ஆண்கள் இரவு வெகுநேரம் உழைப்பதால், நேரத்திக்கு தூங்குவது மற்றும் தூக்கத்தின் பண்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை புறக்கணிகின்றனர். தூக்கத்தை குறைப்பதால் ஏற்படும் தூக்கமின்மை நோய் வந்து தூங்க முடியாமல் அவதிபடுவார்கள்.


இதய குழாய் நோய்

தூங்காமல் வேலைப் பார்ப்பதற்கும் இதய நோய் வருவதற்கும் தொடர்பு இருப்பதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது இரவு நேரங்களில் வேலைபார்க்கும் ஆண்களுக்கு அதிகம் வரும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.


சர்க்கரை நோய்

இரவு நேரம் வேலைப் பார்ப்பவர்களுக்கு வரும் அடுத்த உடல்நலக்குறை சர்க்கரை நோய் ஆகும். ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது, இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது ஒழுங்கற்ற இடைவேளைகளில் சாப்பிடுவது போன்றவை ஆண்களிடையே அதிக இரத்தஅழுத்தம், அதிக சர்க்கரை, உடல்எடை அதிகரிப்பு மற்றும் சுகாதாரமற்ற இரத்தகொழுப்பு போன்றவற்றை உண்டாக்கும்.



உடல் எடை அதிகரிப்பு

இரவு அதிக நேரம் வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கக் கூடும். ஒழுங்கான சாப்பாடு சாப்பிடாமல் இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை இதற்கு வழிவகுக்கும். இரவு நேரங்களில் வேலைப்பார்ப்பதால் நமது பசியை நேர்படுத்தும் ஹார்மோனான லெப்டின் அளவு குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


மனச்சோர்வு மற்றும் மனநிலை ஒழுங்கின்மை

இரவு நேரங்களில் வேலைப் பார்ப்பவர்களிடையே மனச்சோர்வு மற்றும் மனநல ஒழுங்கின்மையான மனக்கவலை போன்றவற்றிற்கான அறிகுறிகள் தென்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இரவு நேரங்களில் வேலைப் பார்ப்பவர்களிடையே நமது மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் மூளையில் உள்ள செரோடொனின் அளவு குறைவாக இருக்கும்.


கருவுறுதலில் குறைகள்

இரவு வெகுநேரம் வேலைப் பார்ப்பதால், கருவுறுதலில் பிரச்சனை, ஆண்மை குறைபாடு, விந்தணு குறைவு போன்றவை ஏற்படும். இரவு வெகுநேரம் வேலைப் பார்க்க காப்ஃபைன் மற்றும் நிக்கோடின் போன்றவற்றிக்கு அடிமையாகி பாலினச்செயல்பாடு குறைந்து கருத்தரிக்கும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

சிறார் ஆபாசப் படங்கள்.. முடிவு கட்டப் போகும் கூகுள், பிங் சர்ச் என்ஜின்!

சிறார் ஆபாசப் படங்கள்.. முடிவு கட்டப் போகும் கூகுள், பிங் சர்ச் என்ஜின்!




சிறார் ஆபாசப் படங்களை தேடுவோரின் கண்களுக்கு.. இனிமேல் ரிசல்ட் கிடைக்காது. காரணம், இப்படிப்பட்ட ஆபாச தேடல்களுக்கு கூகுளும், மைக்ரோசாப்ட்டின் பிங் சர்ச் என்ஜினும் முடிவு கட்டப் போகின்றன.

அதாவது இத்தைகய தேடல்களை அவை பிளாக் செய்யவுள்ளன. எனவே இனிமேல் யாராவது child porn என்று டைப் செய்து சர்ச் செய்தால் அவர்களுக்கு ரிசல்ட் கிடைக்காது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார் பாலியல் விஷயங்கள் தொடர்பான தேடல்களுக்கு தடை விதித்துள்ளது கூகுள் சர்ச்சும், மைக்ரோசாப்ட் நிறுவனமும்.

இவை இனி சட்டவிரோதம்

இதுபோன்ற சிறார் பாலியல் விஷயங்களைத் தேடுவது இனி சட்டவிரோதமாக கருதப்படும். மேலும் சிறார்களின் பாலியல் படங்களைத் தேடுவது சட்டவிரோதம் என்ற எச்சரிக்கை வாசகமும் இனி இடம் பெறுமாம்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்களை ஒழிக்க

சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரப் போக்கை ஒழிக்கும் வகையில் மைக்ரோசாப்ட்டும், கூகுளும் கைகோர்த்துள்ளன. அதன் விளைவே இந்தத் தடையாகும்.

எந்த வகையிலும் இனி தேட முடியாது

மேலும் சிறார்களின் ஆபாசப் படங்களை எந்த வகையிலும் தேட முடியாதபடி கிடுக்கிப் பிடி போடவுள்ளனராம்.

150 மொழிகளில்

இதுகுறித்து கூகுள் தலைவர் எரிக் ஸ்மித் லண்டனில் கூறுகையில், விரைவில் இது நடைமுறைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் 150 மொழிகளில் எச்சரிக்கை வாசகத்துடன் கூடியதாக இனிமேல் எச்சரிக்கை வாசகம் இடம் பெறும்.

இந்திய மொழிகளிலும்

இந்தியாவின் முதன்மை மொழிகளான தமிழ், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கேமரூன் மாநாட்டைத் தொடர்ந்து

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், லண்டனில் இணையதள பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ள நிலையி்ல் இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறார்களைக் காக்க கேமரூன் அழைப்பு

இணையதள பாதுகாப்பு மாநாட்டை தொடங்கி வைத்து கேமரூன் பேசுகையில், இணையதளங்கள் மூலம் சிறார்களை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தும் செயலுக்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும். சிறார்களை பாலியல் வக்கிரங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு சர்ச் என்ஜின்களில் பெருமளவிலான மாற்றம் வர வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

கூகுள் - பிங்குக்கு அறிவுரை

மேலும் கடந்த ஜூலை மாதம் டேவிட் கேமரூன் கூறுகையில், உலக அளவில் முன்னணியில் உள்ள சர்ச் என்ஜின்கள் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்டின் பிங்தான். இவை இரண்டும் 95 சதவீத தேடுதல்களை நடத்துகின்றன. எனவே இவர்கள் நினைத்தால் சட்டவிரோதமான முறையில் சிறார்களின் பாலியல் படங்கள் மக்களுக்குக் கிடைப்பதைத் தடுக்க முடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இங்கிலாந்தில்...

இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் சிறார்கள் பாலியல் வக்கிரப் படங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பெருமளவில் இந்த இணையதள பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்படுகின்றனராம். படங்கள், வீடியோ கிளிப்புகள் வெகு சுலபமாக கிடைப்பதால் இவர்கள் இலகுவாக கெட்டுப் போகின்றனராம்.

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!




பெண்களுக்கே உரிய பிரா ... இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்கப் போகிறது.. 
அதுவும் எப்படி.. புஷ் அப் பிரா... ஆம், ஆண்களுக்காகவே பிரத்யேகமான பிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பேஷன் துறையினர்தான் இந்த லந்துக்கார வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆண்கள் மத்தியில் இது வித்தியாசமான ஆச்சரியத்தையும், சிலரது எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றுள்ளதாம்.


பெண்களுக்கு மட்டும்தானா...

பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைதான் பிரேசியர் எனப்படும் பிரா. பெண்களின் தனிச் சிறப்பான உள்ளாடையாகவும் காலம் காலமாக திகழ்கிறது.

ஆண்களுக்கு முண்டா பனியன்.. கை வச்ச பனியன்

ஆண்களைப் பொறுத்தவரை முண்டா பனியன், கை வச்ச பனியன் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.

ஆண்களுக்கும் வந்தாச்சுப்பா பிரா

ஆனால் இப்போது ஆண்களுக்கும் பிராவை கொண்டு வந்து விட்டனர். அதுவும் புஷ் அப் பிரா...

நெஞ்சை நிமிர்த்திக் காட்டுமாம்

ஆண்களுக்கு அழகே அந்த கட்டுமஸ்தான நெஞ்சுதான். ஆனால் எல்லோரும் சல்மான் பாடியோடு இருக்க முடியாதே... அப்படி இல்லாதவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இந்த புஷ் அப் பிராவை
கொண்டு வந்துள்ளனராம்.



நெஞ்சுரம் மிக்கவர்களாக தோற்றமளிக்கலாம்

இந்த புஷ் அப் பிராவை அணியும் ஆண்களுக்கு கட்டுமஸ்தான நெஞ்சு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுமாம்.


டி சர்ட் பிரா

இந்த பிராவை டி சர்ட் பிரா என்று அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான பிரா போல இது இருக்காது. மாறாக டி சர்ட்டுடன் கூடிய பிரா... இதை அணிந்தால் பைசெப்ஸ், டிரைசெப்ஸ், நெஞ்சுப் பகுதி என ஒட்டுக்காக எல்லாமே எடுப்பாக தெரியுமாம்.

படத்தில் விவேக் போல...

பிரபாகரன் படத்தில் விவேக் ஒரு குண்டாங்குறையாக டியூப்களை உடலில் சொருகி 8 பேக் காட்டுவாரே.. கிட்டத்தட்ட அது போலத்தான் இதுவும். ஆனால் இது காமெடிக்காக அல்ல, ஆண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்குமாம்.



இல்லாதவங்களுக்கு நல்லதுதானே...

இதுகுறித்து பாலிவுட் நடிகரான இஜாஸ் கான் கூறுகையில், எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப் பிரசாதம்தான். காமெடியாக இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து... என்றார்.



என்ன கருமம்டா சாமி இது...

ஆனால் சிலர் இதற்கு முகம் சுளிக்கின்றனர். கெளதம் ரோட் என்ற இன்னொரு நடிகர் கூறுகையில், ஆண்களுக்குப் பிராவா.. என்ன கருமம் இது.. ஆண் என்றாலே ஆண்மைதானே.. பிறகு எதற்கு பெண்களைப் போல பிரா.. எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.

25 வயதிற்கு பிறகு ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

25 வயதிற்கு பிறகு ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!!!


நாம் வாழும் வாழ்க்கையை பல காலங்களாக பிரிக்கலாம். ஒவ்வொரு காலத்திலும் அதற்கு முந்தைய காலத்தில் நாம் செய்து வந்த செயல்களை தொடருவது என்பது கடினமான ஒன்றாகும். அந்தந்த காலங்களில் அவற்றிக்கு உண்டான செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, 25 இருந்து 30 வயதிற்குள் ஒரு வேலையில் சேர்ந்து நமது வாழ்க்கையை நிலைப்படுத்தி கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கு 25 வயதிற்கு பிறகு வாழ்க்கை புதிதாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். இது உங்கள் எளிதான விளையாட்டான வாழ்க்கைக்கு பின்னர் வரும் வளர்பருவத்தின் தொடக்கமாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலை காலத்தின் தொடக்கத்திலோ அல்லது முதிர் பட்டப்படிப்பின் இறுதியிலோ இருப்பீர்கள். இது கவலையற்ற கனவுகள் நிரம்பிய காலத்தில் இருந்து கனவுகளை அடையும் காலமாக மாற்றும் காலமாக இருக்கும்.

நீங்கள் 25 வயதை கடந்த பின்பு புத்தகங்களும் வகுப்பறைகளும் உங்களை கட்டுபடுத்தாது. உங்கள் வாழ்வைத் தொடர இருக்கும் முக்கிய பொறுப்புகளை ஏற்க தயாராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வை அர்த்தமாக்கும் உங்கள் வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்வு 25 வயதிற்கு முன்போல் எளிதாக இருக்காது. காதலும் சந்திப்புகளும் அர்த்தம் உடையதாக இருக்கும்.

முன்புபோல் உங்கள் நண்பர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இருக்காது. இரவு பார்ட்டிகளுக்கு அடிக்கடி செல்ல முடியாது. உங்கள் விருப்பமான படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க முடியாது. உடை எடை பராமரிப்பின் காரணமாகவும் ஊட்டச்சத்து டயட் காரணமாகவும் நீங்கள் விரும்பியவாறு சாப்பிட முடியாது. முன்பு போல் உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கனவை காண முடியாது. உங்கள் பணத்தை செலவு செய்வதற்கு முன் ஓரிருமுறை யோசித்து செயல்படுவீர்கள்.

இதோ 25 வயதிற்கு பிறகு நீங்கள் செய்ய முடியாதவைகள் சில...


இரவு வெகு நேரம் கண் விழித்தல்

இளம் வயதில் அல்லது மாணவராக இருக்கும்போது நண்பர்களுடன் பேசுவது, டிவியில் படம் பார்ப்பது போன்றவற்றால் உங்கள் அன்றாட இரவு நேரம் 11 மணிவரையில் நீடிக்கும். ஆனால், 25 வயதிற்கு பிறகு உங்கள் வாழ்வில் முன்னுரிமைகள் மாறுவதால் உங்கள் இரவை 9 மணிக்கு மேல் நீடிக்க முடியாது.

மது அருந்துவது

மது அருந்துவது முற்றிலுமாக நிறுத்திவிடவில்லை என்றாலும் முன்பு போல் அதிகமாக அருந்துவது குறைந்துவிடும். உங்கள் நண்பர்கள் முன்புபோல் கம்பெனி கொடுக்க மாட்டார்கள். மேலும், நீங்கள் அந்த மகிழ்ச்சியான தருணத்தை பெரிதும் எதிர்பார்க்க மாட்டீர்கள்.

சந்திப்புகள்

ஒரு நாள் முழுவதுமான சந்திப்புகள் போன்றவைகள் மாறிவிடும். இந்த வயதில் நிகழும் சந்திப்புகள் உங்கள் வாழ்க்கை துணைவியை தேர்ந்தெடுக்கும் சந்திப்புகளாகவே இருக்கும். நீங்கள் 25 வயதிற்கு பிறகு எல்லா பெண்களையும் ரசிப்பதை தவிர்ப்பீர்கள்.

சுற்றுலாக்கள்

25 வயதிற்கு பிறகு எதிர்கால வாழ்க்கையை தொடங்கி வேலையில் உள்ள பொறுப்புகள், முடிவடையும் அட்டவணைகள் போன்றவற்றில் சிக்கி இருப்பீர்கள். இதனால், சுற்றுலாகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கடினமான ஒன்றாகும்.

உடைகள்

25 வயதிற்கு பின் , உடை அலங்காரத்தில் பெரிதும் மாற்றம் காணப்படும். முன்புபோல் சாதாரண டீஷர்ட் அணிந்து கொண்டு வெட்டிபேச்சுகளுடன் இருக்க முடியாது. உங்கள் காஷுவல் உடை கூட பார்மலாக இருக்கும்.

டயட்

சில காலம் முன்பு வரை பிட்சா மற்றும் பர்கர் போன்றவைகளை கவலை இல்லாமல் சுவைத்து கொண்டு இருந்தீர்கள். ஆனால், 25 வயதிற்கு பிறகு உடல் நலம் கருதி, கலோரி அளவு மற்றும் டயட் காரணமாக இவற்றை தவிர்ப்பது தடுக்க முடியாத ஒன்றாகும்.

செலவுகள்

25 வயதிற்கு முன்பு வரை உங்களிடம் உள்ள பணம் பெற்றோரின் பணமாக இருந்ததால் அதனை தாரளமாக செலவு செய்தீர்கள். ஆனால், இப்பொழுது நீங்கள் சம்பாதித்த பணம் என்றதால், செலவு செய்வதற்கு முன்பு ஓரிருமுறை யோசித்து செலவு செய்வீர்கள்.

நண்பர்கள்

நாம் வளர்ந்து வரும் பொழுது நம்முடன் பல நண்பர்கள் பழகிவருவார்கள். பெரும்பாலான நண்பர்கள் உங்கள் 20 களில் தான் அதிகம் இருப்பார்கள். 25 வயதிற்கு பின் உற்ற நண்பர்கள் கிடைப்பது கடினமாக ஒன்றாகும்.



Monday, November 11, 2013

ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்!!!

ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்!!! 


உலகில் நரகத்தை கூட சகித்துக்கொள்ளும் ஆண்களும் உண்டு, அதே சமயம் ஒரு ஈயின் தொல்லையை கூட சகிக்க முடியாத ஆண்களும் உண்டு. இந்த தொழில்நுட்ப யுகத்தில், ஆண்கள் தங்கள் சகிப்புத்தன்மையை மிகவும் இழப்பவர்களாக உள்ளனர். விளையாட்டு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவது போன்ற சிறிய விஷயத்திற்கு கூட அவர்கள் தங்கள் பொறுமையை இழக்கின்றனர். சிலரால் தங்கள் நண்பர்களின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாது. அது போல உயர்ந்த கொள்கையுடைய சில ஆண்களால் இலஞ்சம் போன்ற விஷயங்களை சகித்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் மாறுபட்டவர்களாக இருப்பதால், அவர்களின் வெறுப்புணர்ச்சியை பாலினத்தை வைத்து கூற இயலாது. 

ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு சில விஷயங்களாக பொய் பேசுதல், விவாதங்கள், ஒப்பிடுதல், குறைந்த அறிவுள்ள பெண்கள் போன்றவை உள்ளன. ஆண்களால் உடல் ரீதியான அழுத்தங்களை சகிக்க முடிந்தாலும், மனரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் விஷயங்களை சகிக்க முடிவதில்லை. பெண்கள் தங்கள் காதலையும் மற்றும் உறுதிப்பாட்டையும் அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ளவும், அவற்றை பெண்கள் அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்வதும் மீண்டும் மீண்டும் நடைபெறும். ஆனால் பொதுவாகவே, ஆண்களால் பெண்களைப் போன்று காதல் சார்ந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் சகித்துக்கொள்ள முடியாது. 

உன்னதமான உறவுகளில் ஏற்படும் பிரிவு, நேசித்தவர்களால் ஏமாற்றப்படுதல், நேர்மையற்ற நடத்தை போன்றவற்றை ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாது. ஆண்கள் காதலிலும் உறவுகளிலும் உண்மைவுள்ளவர்கள், அதனால் அவர்களால் ஏமாற்றத்தை தாங்கவே முடியாது. அலுவலகங்களில் ஆண்களால் நீதியற்ற காரியங்களையும் மற்றும் முறையற்ற விஷயங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாது. நேர்மையற்ற முறையில் பதவி உயர்வு பெறும் தங்கள் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்களை ஆண்களால் சகிக்க இயலாது. ஆண்கள் வெறுக்கும் மற்றும் சகிக்க முடியாத சில விஷயங்கள் பின்வருவன:

திருப்தி அளிக்காத வேலை அல்லது தொழில் 

ஆண்கள் தங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற விரும்புகிறார்கள். தங்களுக்கு திருப்தியளிக்க கூடிய வேலையையும், விரும்பும் விஷயங்களையும் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அது அவர்கள் அனுபவித்து செய்யாததாகவோ அல்லது விருப்பமில்லாமலோ இருந்தாலும், அடிமாடு போல வேலை செய்ய வேண்டியிருந்தாலும் அதனை அவர்களால் வாழ்க்கை முழுவதும் ஏற்றுக் கொள்வது கிடையாது.

அதிகமாக பேசுவது 

ஆண்கள் அதிகமான பேச்சை சகித்துக் கொள்வதில்லை. அது அவர்களுடைய அலுவலக நண்பர்களோடோ அல்லது மனைவியரிடமாக இருந்தாலும். அவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் தான் பேச விரும்புவார்கள். தங்கள் மனைவியடன் இருக்கும்போது தாங்கள் கேட்பதைவிட அதிகம் பேசவே விரும்புவார்கள்.

நேர்மையாக இல்லாதிருத்தல் 

இது பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் பொருந்தும். ஆண்களால் உண்மையற்ற உறவுகளை, பொய் மற்றும் ஏமாற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாது. ஆவர்கள் வழக்கமாக நம்பிக்கையுடன் இருக்கும் மனிதர்களிடம் எளிதில் ஏமாந்து விடுவார்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் மனைவியிடம் நேர்மை இல்லாதிருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் எல்லா காரியங்களிலும் நேர்மையுடன் இருக்கவே விரும்புவார்கள்.

ஏமாற்றுதல் 

தங்களின் திருமணம் அல்லது இதயத்தால் நேர்மை மற்றும் நம்பிக்கையில் உருவாகும் உறவுகளில் வரும் ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களுடடைய உறவு உண்மையானதாக இருந்தால், அதை பாதுகாக்கவும், மதிக்கவும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லையில்லாதவைகளாக இருக்கும்.

விவாதம் செய்தல் 

உண்மை மற்றும் தகவல்களின் அடிப்படையிலான விஷயங்களைப் பேசவே ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். உண்மையின் எல்லை மற்றும் தகவல்களை திசைமாற்றும் விவாதங்களை ஆண்கள் விரும்புவதில்லை. விவாதங்களை மோதல்கள் மற்றும் சண்டையை நோக்கி செல்லுவதற்கு முன்னரே உண்மையை அடிப்படையாக கொண்ட முடிவிற்கு கொண்டு செல்ல முயற்சிப்பார்கள்.

திரும்ப திரும்ப செய்தல் 

வேலையோ, வார்த்தையோ எதுவாக இருந்தாலும் அவற்றை மீண்டும் மீண்டும் செய்வதை ஆண்கள் வெறுப்பார்கள். ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வதை ஆண்கள் சகித்துக் கொள்வதில்லை. ஒரே விஷயத்தை பல தடவைகள் சொல்வதையும் அவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, தங்கள் தங்களுடைய காதல் மற்றும் உறுதிப்பாட்டை திரும்பத் திரும்ப கேட்கும் துணைவியரின் விஷயத்தில் அவர்கள் சகித்துக் கொள்வதில்லை.

ஆரோக்கியமில்லாத உடல்நிலை 

பெரும்பாலான ஆண்கள் சீரான உடல்நிலையையும் மற்றும் பார்க்க பளிச்சென்றும் இருப்பதையே விரும்புவார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு, தங்களுடைய உடல்நலம் மற்றும் சீரான உடல்நிலையை கவனிக்காத ஆண்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. மேலும், தங்களுடைய துணைவியரும் கூட ஊதிப்போன உடலுடன் இருப்பதை விட, எப்பொழுதும் ஆரோக்கியத்துடனும், சீரான உடற்கட்டுடனும் இருப்பதையே விரும்புவார்கள்.

மன அழுத்தம் 

ஆண்கள் அதிகமான வேலைப்பளு மற்றும் தங்களுடைய கனவுகள் அல்லது விருப்பங்களை நிறைவேற்றுவதில் கடினத்தன்மை ஆகியவற்றை எதிர் கொண்டால், அது போன்ற வேலைகளை அவர்கள் சகித்துக் கொள்வதில்லை. ஆண்கள் மேல் ஆரோக்கியமான வேலையையும் மற்றும் முறையற்ற வகையில் திணிக்கப்படும் வேலைப்பளுவையும் சகித்துக் கொள்வதில்லை.


Tuesday, November 5, 2013

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!!

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!! 


உடலுக்கு மிகவும் அவசியமானது சத்துக்கள். எவ்வளவு தான் நாக்குக்கு சுவை முக்கியமாக இருந்தாலும், உடலுக்கு சத்து தான் தேவை. நாக்குக்கு சுவை வேண்டுமென்று கண்ட கண்ட உணவை உண்டால், உடலானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். நல்ல சத்தான உணவை சுவையுடன் சமைத்து சாப்பிட்டால், சுவை, சத்து என இரண்டும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதுமட்டுமின்றி இக்காலத்தில் அவசர வேலை என்று உணவில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இதனால் குழந்தைகள் பெரும்பான்மையாக பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களும், போதிய சத்து இல்லாததால், இதய நோய்க்கு ஆளாகின்றனர். ஆகவே இதனை போக்குவது அனைவருடைய கடமையாகும். அதற்கு காலை வேளைகளில் அவசரமாக சமைத்தாலும், சத்தான உணவை சமைப்பது மிகவும் முக்கியமாகும். 

கொழுப்பு கலந்த உணவு சுவையை கொடுக்குமே தவிர, அதில் ஆரோக்கியம் என்பது துளியும் இருக்காது. இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவதி கொள்வதை தவிர்த்து, எண்ண செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செய்தல் மிகவும் நல்லது. அதற்கு சத்துமிக்க உணவை சாலட், சூப் போன்ற வகையில் சமைத்து சாப்பிட வேண்டும். ஒவ்வொன்றையும் தயாரிக்கும் பக்குவத்தில் தயாரித்து உண்டால் மிகவும் நல்லது. 

இதோ இங்கே நோயெதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், நல்ல கொழுப்பு போன்ற நல்ல உணவுகளை காண்போம்.


அவகேடா 

அவகேடாவில் MuFAs அமிலத்தின் சத்து மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றோம். ஆனால் அதில் பலவித மற்ற வைட்டமின்களும், இதயத்திற்கு நன்மை சேர்க்கும் சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் கரையக்கூடிய நார்சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. 

எப்படி சாப்பிடுவது? இதனை சாலட், சல்சாஸ் போன்ற விதங்களில் உணவில் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக அப்போது இதனுடன் சீஸ் அல்லது மாயோனைஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டாம்.  


ப்ராக்கோலி 

உயிர் கொல்லி நோய்கள் பலவற்றிலிருந்து ப்ராக்கோலி நம்மை காக்கும் என அறிவியல் மேதைகள் கூறுகின்றனர். அதிலும் இந்த பச்சை நிறக் காய்கறி புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து காக்கும். இதை எப்படி சாப்பிடுவது? இதன் இலைகளை வேக வைத்து வதக்கிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.


முட்டை 

முட்டை, கேடு என்று யார் கூறியது? முட்டையில் அரிய சத்துக்கள் உள்ளன. இதன் மஞ்சள் கருவில் இதயத்தை பாதிக்கும் கொழுப்பு தன்மை இருப்பதால், வாரத்தில் மூன்று முட்டைக்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். ஆனால் வெள்ளை கருவை தினமும் எடுத்து கொள்ளலாம். சொல்லப்போனால் உணவுகளிலேயே மிகவும் நல்ல ஆகாரம் முட்டை. 

இதை எப்படி சாப்பிடுவது? முட்டையை பொரித்தோ, ஆம்லெட் செய்தோ சாப்பிடுங்கள். அதுவும் ஒரு மஞ்சள் கருவுடன், இரண்டு வெள்ளை கருவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.  


பால் 

கொழுப்பு இல்லாத ஒரு கப் பாலை தினமும் எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம், எலும்புகளுக்கு மட்டும் சத்து கொடுக்காமல், கொழுப்பை நீக்கவும் உதவுகின்றது. 

இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸ் செய்யும் போது, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து உண்ண வேண்டும். இரவு தூங்க செல்லும் முன், மிதமான சூட்டுடன் இருக்கும் பாலை சிறிது சாக்லெட் சேர்த்து சாப்பிடுவது நல்லது.  


பருப்பு 

பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லாமல் கூந்தலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் பல சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், உடலுக்கு பலம் சேர்க்க முடியும். மேலும் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய் உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? பாதாம், முந்திரி போன்ற பருப்பை சிறிதாக நறுக்கி, காலை உணவுடன் சேர்த்து உண்டால் ஆரோக்கியம் பெற முடியும். இடைப்பட்ட நேரத்திலும், இதை ஸ்நாக்காக உண்ணலாம்.  


சால்மன் 

மீன் உணவையையும், எண்ணெயையும் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான உடல், கூந்தல் மற்றும் சருமம் போன்றவற்றை அடைய முடியும் என்று தோல் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம், கடல் உணவான சால்மனில் வைட்டமின் டி, ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்து அதிகம் இருப்பதால், இதை அதிக அளவில் உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது. 

இதை எப்படி சாப்பிடுவது? சால்மனை சுத்தம் செய்து, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது நறுக்கிய பூண்டு, மிளகு தூள் போட்டு சிறிது நேரம் கழித்து சமைத்து, அதனை வேக வைத்த காயுடன் சேர்த்து உண்ண வேண்டும்.  


டோஃபு / பனீர் 

கொழுப்பு மிகுந்த உணவுக்கு பதிலாக டோஃபுவை எடுத்து கொண்டால், உடலுக்கு மிகவும் நல்லது. சோயா உணவில் இதயத்திற்கு பலம் சேர்க்கும் நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும், பல முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. அதிலும் இது மார்பக புற்றுநோயை குணப்படுத்தும். 

இதை எப்படி சாப்பிடுவது? சாலட்டுடன் இதை சேர்த்து சாப்பிடலாம். சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, ராஜ்மா போன்றவற்றை சமைப்பது போன்றும் சமைத்து சாப்பிடலாம்.


ஓட்ஸ் 

ஓட்ஸை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால், பலன் அடைவது நிச்சயம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து இதய நோயை போக்குவதுடன் கெட்ட கொழுப்பை நீக்கும். மேலும் இரண்டாம் ரக சர்க்கரை நோயை எதிர்க்கும் ஓட்ஸை தினமும் உண்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் கிடைக்கும். 

இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸை பால் அல்லது தயிருடன் சேர்த்து உண்ணலாம். சால்மனை பொரிக்கும் முன்பு, சிறிது நேரம் ஓட்ஸில் ஊர வைத்து பொரிக்கலாம்.


ஆலிவ் 

ஆயில் ஆலிவ் ஆயில் கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை கொடுக்கும் குணம் கொண்டது. இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை எதிர்க்கும் வல்லமை கொண்ட ஆலிவ் எண்ணெயில் MUFA உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? பொரித்த மற்றும் சாலட்களில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து உண்டால், ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.  


தயிர் 

உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் தயிரை பிராதான உணவாக எடுத்து கொள்வதை பார்த்திருப்போம். அதிலும் கொழுப்பு குறைவாக இருக்கும் தயிரை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பாக்டீரியா மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. 

இதை எப்படி சாப்பிடுவது? தயிருடன் சுவைமிக்க பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்தி செய்து உண்ணலாம். அதிலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை தயிருடன் சேர்த்து உண்டால் நல்லது. அதுவும் தயிரும் மாம்பழமும் சுவையோ சுவை.  


Friday, November 1, 2013

உலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது!

உலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது!

உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் ஒருவரின் மனைவி தமது £600 டிரெஸ் கெட்டுப் போய்விட்டது என்பதற்கு, £200 அதிக இழப்பீடு கேட்டு லண்டன் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜெயித்து, செய்திகளில் இடம்பிடித்துள்ளார். £200 தொகையை வைத்து இவர் ‘டிப்ஸ்’தான் கொடுக்க போகிறார் என்றாலும், இதன் மூலம் கிடைத்திருக்கும் பப்ளிசிட்டிதான், அவருக்கு போனஸ்.

பிரபல வைர வியாபாரியும் கோடீஸ்வரருமான கிராஃப்பின் மனைவி கேத்திதான், கோர்ட்டுக்கு போனவர். இந்த கிராஃப் குடும்பம், உலகின் மிக செல்வந்த வைர வியாபார குடும்பங்களில் ஒன்று. பிரபல Graff diamonds நிறுவனம் இவர்களுடையதுதான்.

வைர மன்னர்கள் என அழைக்கப்படும் இந்தக் குடும்பத்தினரின் வசம்தான், உலகின் அதிகூடிய விலையுடைய வைரம் தற்போது உள்ளது. அந்த வைரத்துக்கு ‘கிராஃப் பிங்க்’ என இவர்களது குடும்ப பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு இந்த வைரத்தை £15 மில்லியனுக்கு வாங்கி தமது சொத்தாக வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

இந்த கோடீஸ்வர நிறுவன உரிமையாளரின் மனைவி கேத்தி, லண்டனில் நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்ள போகும்போது அணிந்துகொள்ள, £600 விலையில் Armani white suit டிரெஸ் வாங்கினார். 


போட்டோவில், இந்த டிரெஸ் அணிந்திருப்பதை பாருங்கள். அதை டிரைகிளீன் செய்ய வடக்கு லண்டன் ஹம்ப்ஸ்டெட் பகுதியில் உள்ள ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடையில் 


கொடுத்தார்.

குதிரைப் பந்தயத்துக்கு போகுமுன் அந்த டிரஸை எடுத்து பார்த்தால், பால்-வெள்ளை நிறம், சாம்பல் நிறமாக மாறிப் போயிருந்தது. அது பற்றி புகார் கொடுத்ததில், கடைக்காரர் மீண்டும் ஒருதடவை அந்த டிரெஸை டிரைகிளீன் செய்துவிட, பாத்திரம் துடைக்கும் துணியின் (dishcloth) கோலத்தில் வந்துவிட்டது டிரெஸ் என்பது கேத்தியின் குற்றச்சாட்டு.

‘பாத்திரம் துடைக்கும் துணி போல’ என வர்ணிக்கப்பட்ட கோலத்தில் உள்ள டிரெஸை, டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் கைகளில் பிடித்திருப்பதைபோட்டோவில் பார்க்கவும்.



இதையடுத்து கோடீஸ்வரி, டிரைகிளீனிங் கடையில் சண்டை போட்டதில், கடை உரிமையாளர் £400 இழப்பீடு தர சம்மதித்தார். ஆனால், டிரெஸின் முழு விலையான £600 இழப்பீடு வேண்டும் என கோடீஸ்வரி ஒற்றைக் காலில் நின்றார். சமரசம் ஏற்படவில்லை.

அதன்பின் வழக்கு போட்டு, நீதிபதி விசாரித்து, 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு, டிரைகிளீனர், £600 இழப்பீடு வழங்க வேண்டும் என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 



போட்டோவில், தீர்ப்பு வந்தபின் கோர்ட்டுக்கு வெளியே மகிழ்ச்சியுடன் கோடீஸ்வரி)

அடுத்த 24 மணி நேரத்துக்குள் இழப்பீட்டு தொகையை செலுத்தி விடுவதாக மீடியாக்களிடம் பேட்டி அளித்துள்ளார், டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் இயன் கோஹன்.

சரி. இந்த விவகாரத்தில் யாருக்கு அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளது? கோடீஸ்வரி கேத்திக்கா? டிரைகிளீனர் இயன் கோஹனுக்கா? அவரது ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடைக்கா? Armani டிசைனர் டிரெஸ்ஸூக்கா?

இல்லையாம்! பிரிட்டிஷ் மீடியாக்களின் கணிப்பின்படி, கிராஃப் குடும்பத்துக்கு சொந்தமான Graff diamonds வைர விற்பனை நிறுவனத்துக்கே அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளதாம்!

அடியாத்தீ! எப்படியெல்லாம் பப்ளிசிட்டி கிடைக்கிறது பாருங்கள்!!