Saturday, March 30, 2013

இந்தியாவில் இன்டர்நெட் சேவை மந்தம்! எகிப்து அருகே ஆழ்கடல் கேபிளில் நாசவேலை!!


இந்தியாவில் இன்டர்நெட் சேவை மந்தம்! எகிப்து அருகே ஆழ்கடல் கேபிளில் நாசவேலை!!இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் இன்னும் 20 – 25 நாட்களுக்கு மந்தமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுக் கடலில் போடப்பட்டுள்ள இன்டர்நெட் கேபிள்களில், எகிப்துக்கு அருகே நாச வேலை நடந்துள்ளதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்குமுன், கடல் அடியே கேபிள்களை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்துள்ளதாக எகிப்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த மூன்று ஸ்கூபா டைவர்களும் (மேலே போட்டோவில் உள்ளவர்கள்) எகிப்தின் அலெக்சான்ட்ரியா துறைமுகத்துக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கேபிள்களை வெட்டும் முயற்சியில் இருந்தபோது, எகிப்திய கடற்படை ரோந்துப் படகு இவர்களை கைது செய்தது.

கடந்த 2 நாட்களாக இன்டர்நெட்டின் வேகம் உலகின் பல பகுதிகளிலும் மகா மந்தமாக உள்ளது. ஸ்பாம் ஊடுருவலே இதற்குக் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது இரண்டு முக்கிய நடுக் கடல் கேபிள்கள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்னும் 20 – 25 நாட்களுக்கு இன்டர்நெட் வேகம் மகா மந்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அரசின் BSNL மற்றும் MTNL, தனியாரான Bharti Airtel, Tata Communications ஆகியவற்றின் இணைப்புகள்தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

14 நாடுகள் வழியாக நடுக் கடல் வழியாக வரும் கேபிள்களில் விஷமிகள் திட்டமிட்டு நாச வேலையில் ஈடுபட்டதால் டேட்டா அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே மந்த நிலைக்குக் காரணம். பிரான்ஸ் முதல் எகிப்து வரையிலும், அதேபோல ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு சேதத்தைச் சந்தித்துள்ளன.

இன்டர்நெட் வழங்குவோர் சங்கத்தை சேர்ந்த ராஜேஷ் ச்ஹாரியா, “தற்போது பண்டிகை காலம் என்பதால், இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு. இதனால், வேகத்திலும் பாதிப்பு குறைவு. ஆனால், திங்கட்கிழமை முதல் மேற்கண்ட இன்டர்நேட் சேவை வழங்குவோரின் இணைப்புகளைப் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்” என்றார்.

Thursday, March 28, 2013

மர்ம எண்கள்!

மர்ம எண்கள்!


‘‘சிம்பிளா கேக்கறேன்... 24157817 ஃபிபனோச்சி நம்பரா?’’
‘‘ஆமா, 22வது ஃபிபனோச்சி நம்பர்... பை தி வே... அது மந்தைவெளி பி.சுப்ரமணியத்தோட ஃபோன் நம்பர்’’
‘எந்திரன்’ படத்தில் நாம் கேட்ட டயலாக்தான் இது. இதைப் பார்த்தபோதே அது என்ன ஃபிபனோச்சி நம்பர் என்று நீங்கள் சிந்தித்திருக்கிறீர்கள்தானே? வாங்க, நீங்கதான் நம்மாளு. உலகின் அடிப்படையே இந்த ஃபிபனோச்சி நம்பர்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

13ம் நூற்றாண்டில் இத்தாலியக் கணக்கு நிபுணரான லியோனார்டோ ஃபிபனோச்சி என்பவர் வகுத்த எண் வரிசைதான் இந்த ஃபிபனோச்சி எண்கள். பூஜ்ஜியத்தில் தொடங்கி, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144 என்று செல்கிறது இந்த எண் வரிசை.
இந்த வரிசையை உற்று கவனித்தாலே தெரிந்துவிடும். ஒரு எண் தனக்கு முன் உள்ள எண்ணோடு கூட்டப்பட்டு அந்தக் கூட்டுத் தொகையே அடுத்த எண்ணாக இந்த வரிசையில் அமர்கிறது.

சரி, இந்த எண்களில் என்ன விசேஷம்?
‘‘உங்கள் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் எத்தனை கிளைகள் உள்ளன என்று எண்ணிப் பாருங்கள். அல்லது ஒரு அன்னாசிப் பழத்தில் உள்ள முள் முனைகளை எண்ணிப் பாருங்கள். அதில் வரும் கூட்டுத் தொகை ஃபிபனோச்சி வரிசை எண்களில் ஒன்றாக இருக்கலாம்’’ என்று பல காலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள் கணித நிபுணர்கள்.

இந்தக் கூற்றை விஞ்ஞானிகள் உதாசீனப்படுத்தியே வந்தனர். ஆனால், இன்று கணித மேதைகளும் விஞ்ஞானிகளும் இந்த ஃபிபனோச்சி எண்களை நுட்பமாக ஆராயத் துவங்கி யிருக்கிறார்கள். அண்டத்தின் இயக்கத்துக்கும் இந்த எண்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த ஃபிபனோச்சி எண்கள் புகாத அம்சமே உலகில் இல்லை எனலாம். உலக இலக்கியங்கள் அனைத்திலும் உள்ள யாப்பு அமைப்பு முறை கூட இந்த எண் வரிசையை அடிப்படையாகக் கொண்டிப்பதை கணக்கிட்டிருக்கிறார்கள் நிபுணர்கள்.

இது மட்டுமல்ல... பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்ததிலும் அடிக்கடி ‘ஃபிபனோச்சி’ எண் வரிசையின் அடிப்படையில் இவை நடைபெறுவது தெரிந்தது. குதிரைப் பந்தயத்தில் கூட ஜெயிக்கும் குதிரைகளின் எண்களை வரிசைப்படுத்தியபோது, அது ஃபிபனோச்சி எண் வரிசைப்படி இருந்திருக்கிறதாம்.

விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள நட்சத்திர எண்ணிக்கை கூட இந்த வரிசை எண்களில் ஒன்றாக இருக்கிறதாம். இதனால்தான் இந்த எண் வரிசைக்கும் அண்டங்களின் உருவாக்கத்துக்கும் ஏதோ அபூர்வத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒருவேளை, ஆண்டவன் போடுவது இந்தக் கணக்குதானோ!

அண்டங்களை அசைத்தவர்! : மறுபக்கம்

அண்டங்களை அசைத்தவர்! : மறுபக்கம்


விண்கோள்களின் சுற்று விதிகளை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர்   (Johannes Kepler).   விஞ்ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர்.

1571ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி ஜெர்மனியின் வெய்ல்டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்துகெட்ட குடும்பத்தில் பிறந்தார். ராணுவ சிப்பாயாக இருந்த தன் தந்தையை ஐந்து வயதிலேயே இழந்தார். தாத்தாவின் விடுதியில் தாயுடன் வளர்ந்தார். அங்கேயே பணிப் பையனாக மாறிய அவர், 1587ல் ஒரு செல்வந்தர் அளித்த நிதி உதவியால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணித விஞ்ஞானம், வானியல், இசை முதலியவற்றைப் படித்தார். கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளையும் மதக் கல்வியையும்கூட கற்றார்.

படிப்பின் இடையிலேயே ஆஸ்திரியா யூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதிலேயே கஷ்டமான கணக்காக நாம் சொல்வோம். ஒரு கணித மேதையாக கெப்ளருக்கு இந்தக் கஷ்டக் கணக்கு பிடித்திருந்தது. வானியல் பற்றியே அவர் எந்நேரமும் சிந்தித்தார். பல வருட அவதானிப்புக்குப் பிறகு, ‘வானில் கோள்கள் அசைகின்றன. ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட விதியின் படி சீராகவே நகர்கின்றன’ என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார்.

வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை இவரையே சாரும். தொலைநோக்கி யில் ஒளி எவ்வாறு ஊடுருவுகிறது என்பதை ஆய்வு செய்து, இவர் உருவாக்கிய மாதிரி தொலைநோக்கியை ஆதாரமாக வைத்துத்தான் கலிலியோ தன் முதல் தொலைநோக்கியைப் படைத்தார்.

கணிதத் துறையிலும் கெப்ளர் சாதிக்காமல் விடவில்லை. மிகச்சிறு எண் கணக்கியலை ஆரம்பித்து கால்குலஸ் எனும் துறையைத் துவக்கியவர் இவரே. அதுவே, பிற்காலத்தில் கால்குலஸ் கணிதத்தை வளர்ச்சி அடையச் செய்ய நியூட்டனுக்கு உதவியது.

சூரியனை கோள்கள் சுற்றி வருகின்றன என்ற ‘பரிதி மையக் கோட்பாட்டை’ ஆதரித்த கெப்ளர், அதற்காக வானவியல் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட ஈடுபட, அவரது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது. இருப்பினும் விடாது போராடி, கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளை வானியல் துறைக்குத் தந்தார் அவர்.

ஜோதிடத்துக்கும் வானவியல் வளர்ச்சிக்கும் பெரும் இணைப்புப் பாலமாய் வாழ்ந்த கெப்ளர் சில காலம் நோயுற்று 1630ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தனது 59வது வயதில் காலமானார். 1604ம் ஆண்டில் அவர் கண்டுபிடித்த புதிய விண்மீனுக்கு கெப்ளர் சூப்பர்நோவா என இப்போது பெயரிட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படிப்பட்ட மாமனிதர்களின் பெயர்கள் பால்வீதி எங்கும் நிறைந்திருக்கட்டும்!

நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்!

நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்!நேற்று உங்கள் இன்டர்-நெட் இணைப்பு ஸ்லோவாக இருந்ததா? உங்கள் இணைப்பில் ஏதோ கோளாறு என்று தலையை உடைத்துக் கொண்டீர்களா? விவகாரம், வேறு.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோஸ்ட் நிறுவனம் செய்த சேட்டையால், நேற்று உலகம் முழுவதும் பல பகுதிகளில் இன்டர்நெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. மிகவும் மந்த கதியில் இன்டர்நெட் இயங்கியதால் பலரும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது.

இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பாம் (உங்களுக்கு புண்ணியமாக போகும், ‘ஸ்பேம்’ என்று படித்துவிடாதீர்கள்.. விபரீத அர்த்தம் வந்துவிடும்!) ஊடுருவலே இந்த மந்த நிலைக்குக் காரணம். இதனால் நேற்று கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே துண்டிக்கப்பட்டு, மக்கள் சிரமப்பட்டுள்ளனர்.

நேற்று தொடங்கிய இந்த மந்த நிலை, இன்றும் பல பகுதிகளில் நீடித்து வருகிறது.

ஸ்பாம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனிவாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமான Spamhaus என்ற அமைப்புதான் இந்த ஸ்பாம் ஊடுருவலைக் கண்டுபிடித்து, எச்சரிக்கை விடுத்தது. அவர்கள் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, நெதர்லாந்தைச் சேர்ந்த ‘Cyberbunker’ என்ற நிறுவனம்தான் இந்த ஸ்பாமை பரப்பியுள்ளது.

‘Cyberbunker’ ஒரு வெப்-ஹோஸ்ட்டிங் நிறுவனம். மேலேயுள்ள போட்டோவில் பாழடைந்த பில்டிங் ஒன்றில் தெரிவதுதான், இதன் தலைமைச் செயலகம். ஒரு தமாஷ் என்னவென்றால், இந்த பில்டிங், முன்பு நெதர்லாந்தில் நேட்டோ பங்கராக செயல்பட்டு வந்தது.

தற்போது இந்த நிறுவனம் தற்போது கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.

இந்த ஸ்பாம் தாக்குதல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட பாதிப்பு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று Spamhaus தெரிவித்துள்ளது. இணையதள வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய ஸ்பாம் தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

இந்த தாக்குதலால் நேற்று முழுவதும் இணையதள இணைப்பு வேகம் மகா மந்தமாகி இருந்தது. வீடியோக்களை அனுப்புவது, பார்ப்பது ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைக்கு இன்று நிலைமை பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Read more: http://viruvirupu.com/cyber-attack-internet-spam-50764/#ixzz2Oofoi2jt

Kids Who Watch 3+ Hours of TV: More Likely to Lie, Cheat Later! Shocking Study!!

Kids Who Watch 3+ Hours of TV: More Likely to Lie, Cheat Later! Shocking Study!!


Children’s use of technology, Spend too much time with TVs and iPads, might lead  a lovable toddler into real trouble. We’re all pretty convinced, by now, that too much screen time is bad for children.

But how much is too much? Is it just TV, or should we be threatened by video games, too? Is it worse if it’s violent? Mindless? Does calling it educational make everything better?

For guidance on these neurosis-inducing conundrums, researchers at the University of Glasgow turned to a representative sample of 11,000 U.K. children born at the dawn of the new millennium, and thus more or less guaranteed to have been raised in television’s glow.

Data on how much time kids spent watching TV and playing electronic games, as reported by their mothers, was collected when they were five.

The mothers also rated their childrens’ psychological health and social ability on a ten-point scale; once when they were five, and again when they were seven. The researchers analyzed the kids’ psychosocial adjustment in terms of how much screen time they had spent at age five.

RESULTS: There was a small but significant .13-point increase in “conduct problems” — antisocial behaviors like fighting, bullying, lying, cheating, and stealing — at age seven for kids who watched three or more hours of TV per day at age five.

The same didn’t occur for excessive play with electronic games. And neither was associated, either positively or negatively, with the childrens’ emotional symptoms, hyperactivity/inattention, ability to make friends, or prosocial behaviors like empathy and concern for others.

IMPLICATIONS: Three hours is a lot of time, especially for a 5-year-old, and only 15 percent of the children in the study spent that much time or more in front of the TV.

Then again, fewer than 2 percent of the children watched zero TV (while over three percent exceeded 7 hours). As a whole, they spent less time playing computer and video games, with most playing for less than an hour per day and about a third not playing at all.

The risks they found are small, and they failed to look at the content of the shows and games occupying their subjects’ time, but the authors write that parents’ worries about TV exposure are “justifiable.” If the question is whether kids who binge on Sesame Street will be better prepared to learn without it affecting their ability to get along in the classroom, their answer is a tentative “no.”

ஸ்பேம் ஊடுறுவல் - உலகின் பல பகுதிகளில் இன்டர்நெட் மகா மந்தம்!


டச்சு நிறுவன திருவிளையாடல்.. ஸ்பேம் ஊடுறுவல் - உலகின் பல பகுதிகளில் இன்டர்நெட் மகா மந்தம்!


நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோஸ்ட் நிறுவனம் செய்த சேட்டையால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் இன்டர்நெட் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிகவும் மந்த கதியில் இன்டர்நெட் இயங்குவதால் பலரும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. நேற்று தொடங்கிய இந்த மந்த நிலை இன்றும் பல பகுதிகளில் நீடித்து வருகிறது. இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பேம் ஊடுறுவலே இந்த மந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டுள்ளனர். ஸ்பேம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனிவாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமான ஸ்பேம்ஹவுஸ் என்ற அமைப்புதான் இந்த ஸ்பேம் ஊடுறுவலைக் கண்டுபிடித்து அதுகுறித்த எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், நெதர்லாந்தைச் சேர்ந்த சைபர் பங்கர் என்ற நிறுவனம்தான் இந்த ஸ்பேமை பரப்பியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் தற்போது கருப்பு்ப பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.

இந்த ஸ்பேம் ஊடுறுவலால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று ஸ்பேம்ஹவுஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இணையதள வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய ஸ்பேம் தாக்குதலில் இதுவும் ஒன்று நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

இந்த ஸ்பேம் தாக்குதலால் இணையதள இணைப்பு வேகம் மகா மந்தமாகி விட்டது. எந்த ஒரு இணையதளத்தையும் முழுமையாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், வீடியோக்களை அனுப்புவது, பார்ப்பது ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த ஸ்பேம் தாக்குலால் லண்டன் இன்டர்நெட் எக்ஸ்சேஞ்சிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாம். இன்றும் பிரச்சினை தொடருகிறது. இருப்பினும் நேற்றைக்கு இன்று நிலைமை பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/28/world-spammer-on-black-list-slows-global-net-172344.html

பாலஸ் வேண்டாம், கெஸ்ட் ஹவுஸே போதும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்

பாலஸ் வேண்டாம், கெஸ்ட் ஹவுஸே போதும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்வாடிகன் நகரில் வீடு தயாராகியும் தொடர்ந்து கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கி வருகிறார் போப் ஆண்டவர். போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் பதவி விலகியதை தொடர்ந்து புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் போப் ஆண்டவர் தேர்வுக்காக வாடிகன் நகருக்கு வந்திருந்தார். மேலும் கடந்த 13-ம் தேதி முதல் அங்குள்ள ஒரு ஹோட்டலில்தான் தங்கியிருந்தார்.

அதன் பின்னர் அவர் கெஸ்ட் ஹவுஸுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது அவருக்கு வாடிகன் நகரில் போப் ஆண்டவருக்கான வீடு புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இருந்தும் அவர் உடனடியாக போப் ஆண்டவர் இல்லத்திற்கு செல்ல தயாராக இல்லை. தொடர்ந்து தான் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸிலேயே இருக்க விரும்புகிறார்.

தினசரி தான் நடத்தும் பிரார்த்தனைக்கு வாடிகன் தோட்ட ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்களுக்கு அழைப்பு கொடுத்து பங்கேற்க செய்கிறார். போப் ஆண்டவர் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் பிடாரிக்கோ லாம்பார்டி கூறும்பொழுது, 'போப் ஆண்டவர் எவ்வளவு நாள் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பார் என தெரியவில்லை. ஆனால் அவர் கூடிய விரைவில் போப் ஆண்டவர் இல்லத்திற்கு வருவார்' என்றார்

கருத்தடைக்கு பயன்படும் பரு ஒழிப்பு மாத்திரை

கருத்தடைக்கு பயன்படும் பரு ஒழிப்பு மாத்திரை


பிரான்சில் ஆண்டுதோறும் 20 இளம்பெண்கள் கருத்தடை மாத்திரைகளால் உயிரிழப்பதாக பிரான்ஸ் மருந்து துறை(France’s Medicines Agency) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், கடந்த 1990ம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கப்படும் டயான்-35(Diane) என்ற கருத்தடை மருந்து வீரியம் மிக்கவையாகவும், ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகளை உருவாக்கி அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்ககூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

பிரான்சில் ஒவ்வொரு வருடமும் நாற்பத்திரண்டு லட்சம் பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

ஜேர்மனியைச் சேர்ந்த பேயர்(Bayer) நிறுவனம் ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தி முகத்தில் பரு உருவாகாமல் தடுக்க டயான்-35 என்ற மருந்தைத் தயாரித்தது.

இந்த மருந்து ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதால் கருமுட்டை உற்பத்தி ஆகாது என்று கருதி கருத்தடை மாத்திரையாகவும் மருத்துவர் பலர் பரிந்துரைத்தனர்.

ஆனால் இதன் மூலம் உண்டாகும் ஆபத்து காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் அரசு பரு ஒழிப்புக்கு தரும் என்ற டயான்-35 மருந்தை கருத்தடைக்குப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்துள்ளது.

டயான்-35 என்ற பரு ஒழிப்பு மாத்திரை உலகளவில் 116 நாடுகளில் கரு ஒழிப்பு மாத்திரையாக விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மணிடோபாவின் கடுமையான பனிப்பொழிவு: வெள்ளத் தடுப்புக்கு தயாராகும் அரசு

மணிடோபாவின் கடுமையான பனிப்பொழிவு: வெள்ளத் தடுப்புக்கு தயாராகும் அரசுகனடாவிலுள்ள மணிடோபாவில் அமைந்துள்ள பிரேரீஸ்(Prairies) மலை பகுதிகளில் தற்பொழுது கடுமையாக பனிப்பொழிவு காணப்படுவதினால் இன்னும் சில தினங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உறுதியாகி விட்டது.
எனவே இதற்கு தேவையான வெள்ள அபாயத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கனடா அரசு தயாராகி வருகின்றது.

இது குறித்து கனடா அவசர நடவடிக்கைகள் துறையின் அமைச்சரான ஸ்டீவ் ஆஷ்டன்(Steve Ashton) கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு இதே நேரத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ள பெருக்கால் பெரும் துயரத்தை சந்தித்தோம்.

ஆனால் இனி வரும் காலங்களில் அந்த அளவிற்கு வெள்ள பெருக்கு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இனி வரவிருக்கும் வெள்ள பெருக்கிற்கான செலவிற்கு 1.2 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கன் விமானம் மயிரிழையில் தப்பியது!

ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கன் விமானம் மயிரிழையில் தப்பியது!


இலங்கையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று பாரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலேயில் இருந்து இலங்கை வந்த யு.எல்- 114 என்ற விமானம், மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றபோதே, இந்த விபத்து நேரிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தின் முன்புறத்தில் தாக்கியது.

இதனால் விமானத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்தன.

விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மூத்த அதிகாரிகளும், விமானிகளும் சேதங்களை ஆய்வு செய்தனர்.  முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், துப்பாக்கிக் குண்டுத் துளை போன்ற பல துளைகளும் காணப்பட்டதாக மூத்த விமானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமுக்கத்தினால், கண்ணாடி உடைந்திருந்தால், விமானி வெளியே தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.  சம்பவத்தின் போது அந்த விமானத்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.

அவர்களில் மத்தளவில் இருந்து கட்டுநாயக்க செல்வதற்காக ஏறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நான்கு உறவினர்களும் அடங்குவர்.  எனினும் அந்த விமானம் மத்தலவில் பயணிகள் எவரையும் இறக்கி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பறவைகள், மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு விமானங்களின் இரைச்சல் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளது.

மத்தள விமான நிலையம் திறக்கப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவும் இது போன்றதொரு பாரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

பரீட்சார்த்தமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் ஒன்றின் மீது பறவைக் கூட்டம் மோதியதால், அந்த விமானத்தை செலுத்திய இளைய விமானி நிலைகுலைந்து போயிருந்தார்.

பின்னர் மூத்த விமானி ஒருவர் விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் தான், அந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

கௌதம புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை!

கௌதம புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை!- நாகொட விபஸ்ஸி தேரர் --- செம காமடி போங்க --- இதுக்கு பகிரங்க விவாதம் வேற


கௌதம புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை என ரத்மலானை தர்ம ஆய்வு மையத்தின் பணிப்பாளர் நாகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
கௌத புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்திருந்தார்.

கௌதம புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை. அதனால் பௌத்த மத வழிபாடுகளுக்காக இந்தியாவிற்கு செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உடுவே தம்மாலோக தேரரின் இந்தக் கருத்து குறித்து பகிரங்க விவாதம் நடாத்தத் தயார் என நாகொட விபஸ்ஸி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிடுவதனையிட்டு உடுவே தம்மாலோக தேரர் வெட்கப்பட வேண்டும்.

தமிழ் புலம்பெயர் மக்களின் பிரச்சாரங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உடுவே தம்மாலோக தேரர் சிக்கியிருக்கின்றார் என நாகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

இது அறிவியலுக்கு எந்த ஒரு விதத்திலும் சம்பந்தமில்லாத ஆக்கம், இதை பிரசுரிப்பத்தின் நோக்கம் வெளியில் எத்தனை அறிவாளிங்க புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்க பார்த்தீங்களா???

Wednesday, March 27, 2013

தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா? இதைப் படிங்க!


தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா? இதைப் படிங்க!


தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான். சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.

தங்க நகை அணிவது அழகுக்காக என்பதை விட அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம்முன்னோர்கள். பழங்காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி நகைகளை அணியவும், தாமிரம், பித்தளை பாத்திரங்களை உணவு சமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

எகிப்து, இந்தியா, சுமேரியா நாகரீகங்களின் கால கட்டத்திலே தாமிரம், வெள்ளி, தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளதை வரலாற்றுச் சான்றுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இன்றைக்கும் நம் வீட்டில் உள்ள தங்க தந்தட்டி போட் பாட்டிகள் தாமிரப் பானையில் தண்ணீர் ஊற்றிவைப்பதும், பித்தளை கும்பாவில் கம்மங்கூழ் ஊற்றிக் குடித்தும் உடம்பை கூல் ஆக வைத்திருக்கின்றனர்.

அதனால் என்னதான் நன்மையிருக்கு மேற்கொண்டு படியுங்களேன்.அங்கங்களை டச் பண்ணும் 

காதில், மூக்கில், கழுத்தில், கைகளில் அணியும் தங்க நகைகள் நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது என்கின்றனர் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள்.


உயிர் ஓட்டப்பாதையில் பாதுகாக்கும் 

நம் உடலின் நரம்பு மண்டலங்களைப் போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை' என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இவற்றை தூண்டுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது அக்குப்பஞ்சர்.


மாமன் மடியில உட்காந்து காது குத்துங்கப்பா 

கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள வர்மப்புள்ளிகளை தூண்டும் விதமாகவே வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, மாமன் மடியில் அமர்ந்து மொட்டை போட்டு காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் நம்முன்னோர்கள்.


உடம்பில தேஜஸ் அதிகரிக்கும் 

அதேபோல தங்கத்தை காது, மூக்கு கைகளில் போடுவதற்குக் ஸ்பெசல் காரணம் என்னவெனில், தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும் என்கின்றனர் நிபுணர்கள்.


வெள்ளிக் கொலுசுமணி 

தேபோல் கால்களில் போடப்படும் வெள்ளிக்கொலுசு பெண்களின் கால்நோவுகளை நீக்குகிறதாம். மாதவிலக்கு சமயத்தில் அதிகஅளவில் சிரமத்திற்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்கிறதாம்.


கட்டாயம் நகை போடுங்க 

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படும் என்கின்றர் நிபுணர்கள்.!


தாமிரப்பானைல தண்ணீர் 

அதேபோல் தாமிரப் பானையில் இரவில் தண்ணீர் ஊற்றிவைத்து அதை காலை நேரத்தில் குடித்தால் அது அருமருந்து என்கிறது ஆயுர்வேதம். அதேபோல் வெள்ளி தம்ளர் உபயோகித்தாலும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். தமிரம் உடலில் ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்குமாம். சரும ஆரோக்கியத்தையும், கூந்தலை ஆரோக்கியமாகவும் பேணிக்காக்கிறதாம். அடப்போங்கப்பா தங்கமும்,வெள்ளியும், தாமிரமும் விக்கிற விலையில இதெல்லாம் எங்கே என்று யோசிக்கிறீர்களா? அப்போ காசு செலவழித்து மருத்துவமனைக்கு போங்க என்கின்றனர் நிபுணர்கள்.பொறியியல் மாணவர்களின் முதல் சாய்ஸ் கூகுளில் வேலை.. அடுத்தது...

பொறியியல் மாணவர்களின் முதல் சாய்ஸ் கூகுளில் வேலை.. அடுத்தது மைக்ரோசாப்ட், இன்போசிஸ்


இந்தியாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி உள்ளிட்ட கம்ப்யூட்டர் பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் பணியில் சேர விரும்பும் நிறுவனங்களில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தை மைக்ரோசாப்ட்டும், இன்போசிஸ் நிறுவனமும் பிடித்துள்ளது.

சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான நீல்சன் நடத்திய 'Campus Track Technology School survey' என்ற சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.73 கல்லூரிகளில் 2,500 மாணவர்களிடம்.. 

 இந்த சர்வே கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 73 தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரிகளில் 2,500 மாணவர்களிடம் கருத்தைக் கேட்டு நடத்தப்பட்டது.


ஆண்டு வருமானம் ரூ. 11 லட்சம் வேண்டும்: 

இந்த மாணவர்கள் தங்களது துவக்க ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 11 லட்சம் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு இந்த எதிர்பார்ப்பு ரூ. 9.3 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு தங்களது ஊதிய எதிர்பார்ப்பை 20 சதவீதம் உயர்த்தியுள்ளனர் மாணவர்கள்.


கூகுள், மைக்ரோசாப்ட், இன்போசிஸ்: 

மாணவர்கள் சேர விரும்பும் நிறுவனங்கள் என்ற சாய்ஸ் கொடுக்கப்பட்டபோது பெரும்பாலானவர்கள் தேர்வு செய்தது கூகுள் நிறுவனத்தைத் தான். அடுத்த இடத்தை மைக்ரோசாப்ட் பிடித்துள்ளது. 3வது இடத்தை இன்போசிஸ் பிடித்தது.


டிசிஎஸ், ஐபிஎம், பேஸ்புக்: 

இதற்கு அடுத்த 3 இடங்களை டிசிஎஸ், ஐபிஎம், பேஸ்புக் ஆகியவை பிடித்துள்ளன.


சாப்ட்வேர் மட்டுமே தொழில் அல்ல.. 

இன்னொரு நல்ல விஷயமும் இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்துக்கு வேலைக்குப் போவதே ஜென்ம சாபல்யம் என்று கருதாமல், ஏராளமான மாணவர்கள் எரிசக்தித்துறை, ஆட்டோமொபைல், செமிகண்டக்டர், மின்துறை, டெலிகாம் போன்ற துறைகளில் சேரவும் ஆர்வம் காட்டியுள்ளனர்.


63 சதவீதம் ஐடி தான்.. 

63 சதவீத மாணவர்கள் ஐடி, சாப்ட்வேர் துறைகளில் சேரவே விருப்பம் தெரிவித்தாலும் மிச்சமுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் எரிசக்தித்துறையிலும், அடுத்தபடியாக ஆட்டோமொபைல் துறையில் சேரவும், மற்றவர்கள் செமிகண்டக்டர், மின்துறை, டெலிகாம் துறையில் சேரவும் ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்களில் பலர் சேர விரும்பும் நிறுவனமாக பிஎச்இஎல் அரசு நிறுவனமும், எல் அண்ட் டி நிறுவனமும், என்டிபிசி பொதுத்துறை நிறுவனமும் உள்ளன.


3 வருடத்தில் பணி மாறுவோம்.. 

அதே போல சர்வேயில் 50 சதவீத மாணவர்கள் பணியில் சேர்ந்த 3 வருடத்தில் அதைவிட்டு விலகி உயர் படிப்புக்குச் செல்வோம், இன்னொரு நல்ல வேலைக்குப் போவாம் என்றும் கூறியுள்ளனர்.

பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு மேலும் ஓராண்டு தடை

பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு மேலும் ஓராண்டு தடை


பருப்பு வகைகள் தேவை உள்நாட்டிலேயே அதிகமாக இருந்ததால், அவற்றை ஏற்றுமதி செய்ய முதன்முதலில் 2006ம் ஆண்டில் 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், அவ்வப்போது தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

கடைசியாக இம்மாதம் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் காபுலி கொண்டைக் கடலை, இயற்கை  உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட பருப்பு மற்றும் பயறு வகைகளை ஆண்டுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் சேமிப்பு ரூ.62,708 கோடியாக உயர்வு

வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் சேமிப்பு ரூ.62,708 கோடியாக உயர்வு


கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) வங்கிகளில் ரூ.62,708 கோடி சேமித்து வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர். அவர்கள் உழைத்து வங்கிகள் மூலம் சேமித்து வைத்துள்ள தொகை 2012 டிசம்பர் கணக்குப்படி ரூ.62,708 கோடியாக உயர்ந்துள்ளது.

 இதில், ஸ்டேட் வங்கி குழும வங்கிகளில் மட்டும் 40.58 சதவீதம் அதாவது ரூ.25,445 கோடி சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் கேரள என்ஆர்ஐ சேமிப்பு ரூ.23,395 கோடியாக உள்ளது. சிறு நகரங்களை சேர்ந்தவர்களின் சேமிப்பு 62.85 சதவீதமாகவும், நகரங்களை சேர்ந்தோரின் சேமிப்பு 31.34 சதவீதமாகவும், கிராமப்புறங்களை சேர்ந்தோர் சேமிப்பு 5.81 சதவீதமாகவும் உள்ளது.

கேரளாவை சேர்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் அதிகமாக ரூ.17,258 கோடியை என்ஆர்ஐகள் சேமித்துள்ளனர். தனியார் வங்கிகளை பொறுத்த வரையில் கேரளாவை தலைமையிடமாக கொண்ட பெடரல் வங்கியில் அதிகமாக ரூ.11,032 கோடி சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.

சேர்ந்தவுடனேயே கோடீஸ்வரன் ஆனான் யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலை

சேர்ந்தவுடனேயே கோடீஸ்வரன் ஆனான் யாகூ இணையதள நிறுவனத்தில் 17 வயது சிறுவனுக்கு வேலைலண்டனை சேர்ந்த 17 வயது சிறுவன் நிக் டிஅலாய்சியோ, பள்ளியில் படித்து வருகிறான். இவனது தந்தை நிதிநிலைமை ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது தாய் வக்கீலாக பணியாற்றுகிறார். இவர்களுக்கும் கம்ப்யூட்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், டிஅலாய்சியோ கம்ப்யூட்டர் புலியாக இருக்கிறான். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிப்பது குறித்து 12 வயதிலேயே ஆராய ஆரம்பித்து விட்டான். இப்போது, ‘சம்ளி’ என்று புதிய அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளான்.

‘சம்ளி’யின் விசேஷம், ஒரு பெரிய நாவலை கூட, ஸ்மார்ட் போனில் படித்து விடக்கூடிய அளவுக்கு சுருக்கி தருவதுதான். இதுகுறித்து கடந்த நவம்பர் மாதம், இணையதளத்தில் டிஅலாய்சியஸ் செய்தி வெளியிட்டான். இதுதொடர்பாக யாகூ உள்ளிட்ட பல்வேறு இணையதள நிறுவனங்களிடமும் அவன் பேசினான். இதில் ‘சம்ளி’ அப்ளிகேஷனை வாங்கிக் கொள்ள யாகூ நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இதன்படி, லண்டனில் உள்ள யாகூ நிறுவனத்தில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் பல கோடி ரூபாய் கொடுத்து ‘சம்ளி’யை பயன்படுத்தும் உரிமையை யாகூ பெற்றுகொண்டது. இதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 3 கோடி அமெரிக்க டாலர்(சுமார் ரூ.162 கோடி) கொடுக்கப்பட்டுள்ளதாக யாகூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டிஅலாய்சியோவுக்கு யாகூ நிறுவனத்திலேயே பல லட்சம் சம்பளத்தில் வேலையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஅலாய்சியஸ் கூறுகையில், ‘‘15 வயதிலேயே என்னுடைய சம்ளியை கண்டுபிடித்து விட்டேன். அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தேன். இதுதொடர்பாக பல நிறுவனங்களிடம் பேசினேன். யாகூவைதான் இறுதியாக நான் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய பள்ளிப்படிப்பு முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் யாகூ அலுவலகத்துக்கு எந்த நேரத்தில் சென்று வேலை பார்ப்பது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறேன்’’ என்றான்.

'பள்ளி'யறையாக மாறிய பவளப்பாறைகள்... லட்சத்தீவில் குவிந்த விஞ்ஞானிகள்!

'பள்ளி'யறையாக மாறிய பவளப்பாறைகள்... லட்சத்தீவில் குவிந்த விஞ்ஞானிகள்!லட்ச்சத்தீவில் உள்ள பவளப்பாறைகளில் இன்று நடக்கும்

செக்ஸ் காட்சியைக் காண அங்கு பெருமளவில் விஞ்ஞானிகள் குவிந்துள்ளனர் செக்ஸ் காட்சி என்றதும் ஷகீலா நடித்த மலையாளப் படத்தின் ரிலீஸோ என்று நினைக்க வேண்டியதில்லை. இது வேறு மாதிரியான காட்சி...

அதாவது லட்சத்தீவில் உள்ள பவளப் பாறைகளில் படிந்துள்ள கடல் வாழ் விலங்குகள் ஹோலி தினமான இன்று கருத்தரிக்கும் வேலையில் இறங்கும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இது ஒரு அரிய காட்சியாகும், நிகழ்வாகும். இன்று முழுவதும் இது நடைபெறும். இதைக் காணத்தான் விஞ்ஞானிகள் அங்கு குவிந்துள்ளனர்.

நீருக்குக் கீழ் பவளப் பாறைகளில் நடைபெறும் இந்த அதிசய நிகழ்வினைக் காண விஞ்ஞானிகள் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். முட்டைகள், விந்தனுக்கள் வெளியீட்டின் காரணமாக தண்ணீரே இளஞ்சிவப்பு நிறத்தி்ற்கும், பழுப்பு நிறத்திலும், பச்சை நிறத்திலும் மாறிக் காணப்படுகிறதாம்.

38 நகரங்களில் ஏப் 1 முதல் செட் டாப் பாக்ஸ் இல்லாமல் 'டெட்' ஆகப் போகும் டிவிகள்!


38 நகரங்களில் ஏப் 1 முதல் செட் டாப் பாக்ஸ் இல்லாமல் 'டெட்' ஆகப் போகும் டிவிகள்!


நாட்டின் 38 நகரங்களில் செட் டாப் பாக்ஸ் வசதி இல்லாமல் எந்த சானலையும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பார்க்க முடியாது. தற்போது நாட்டின் 67 சதவீத வீடுகளில் செட் டாப் பாக்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும் கூட 38 நகரங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பெருமளவிலான டிவி பெட்டிகள் உறை நிலைக்குப் போகவுள்ளன. காரணம் இந்த டிவிகள் செட் டாப் பாக்ஸ் வசதியைப் பெறத் தவறி விட்டன என்பதால்.
அனலாக்குக்கு மூடு விழா 

அனைத்து டிவி நிறுவனங்களும் ஏப்ரல் 1ம் தேதியன்று தங்களது அனலாக் சி்க்னல் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளன. எனவே அன்று முதல் டிஜிட்டல் வசதி கொண்ட சான்ல்களை மட்டுமே மக்கள் பார்க்க முடியும்.


ஆக்ரா - கோவை 

இந்தியாவைப் பொறுத்தவரை ஆக்ரா, அகமதாபாத், அலகாபாத், அமிர்தசரஸ், அவுரங்காபாத், பெங்களூர், போபால், சண்டிகர், கோவை.


ஹைதராபாத் - மைசூர் 

பரீதாபாத், காஸியாபாத், ஹவுரா, ஹைதராபாத், இந்தூர், ஜபல்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கல்யாண்-டோம்பிவிலி, கான்பூர், லக்னோ, லூதியானா, மீரட், மைசூர்.


நவி மும்பை - விசாகப்பட்டனம் 

நாக்பூர், நாசிக், நவி மும்பை, பாட்னா, புனே, பிம்ப்பிரி சின்ச்வாட், ராஜ்கோட், ராஞ்சி, ஷோலாபூர், ஸ்ரீநகர், சூரத், தானே, வடதோரா, வாரணாசி, விசாகப்பட்டனம் ஆகிய நகர்களில் டிஜிட்டல் வசதி இல்லாத டிவிகளில் சானல் எதையும் பார்க்க முடியாது.


100 சதவீத டிஜிட்டல் மயமாக்கல் 

இந்த நகரங்களைப் பொறுத்தவரை, ஹைதராபாத், அமிர்தசரஸ், சண்டிகர், அலகாபாத் ஆகிய நகரங்களில் 100 சதவீத டிஜிட்டலைசேஷன் முடிந்துள்ளதாம்.தானே புனேவில் 75 சதவீதம் 

ஜோத்பூர், தானே, அவுரங்காபாத், ஜெய்ப்பூர், புனே, பரீதாபாத், நாசிக், காஸியாபாத் ஆகிய நகரங்களில் 75 சதவீத அளவுக்கு முடிந்துள்ளது. மற்ற 28 நகரங்களில் பாதி அளவுக்கு முடிந்துள்ளது.

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலை… மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் குமுறும் எரிமலை… மக்கள் வெளியேற்றம்
இந்தோனேஷியாவின் டொமோஹோன் நகரிலுள்ள லோக்கோன் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. அதனால்,எரிமலையை சுற்றியுள்ள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டின் தேசிய மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது. ஆயிரத்து 689 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை முதல் சாம்பலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பை வெளியேற்றியது. எரிமலை சீற்றத்தால் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் அதன் சாம்பல் படிந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கட்டுள்ளனர். எரிமலையின் நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அருகிலுள்ள கிராமங்களின் பாதுகாப்பு பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றில் பறந்து வானில் சிக்கிய குழந்தை மரணம்

காற்றில் பறந்து வானில் சிக்கிய குழந்தை மரணம்
தெற்கு லண்டனிலுள்ள க்ரோண்டன்(Croydon) நகரில் ஒரு தாய் தனது மூன்று வயது குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
தன் குழந்தையை வீட்டு வாசலின் நடைபாதையில் தள்ளுவண்டிக்குள் வைத்து விட்டு ஒரு பொருளை எடுக்க மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது வீசிய பயங்கரமான சூறைக்காற்று குழந்தையிருந்த தள்ளுவண்டியை சாலைக்கு உருட்டி சென்றது.

அந்நேரத்தில் அதன் வழியே வந்து கொண்டிருந்த மெர்செடிஸ் ஸ்பிரிண்ட்டர்(Mercedes Sprinter) வானுக்கு கீழே குழந்தை பறந்து போய் அதன் சக்கரத்தில் சிக்கி கொண்டது.

வேன் ஓட்டுநருக்கு நிலைமை புரிவதற்கு முன்னரே கார்ச் சக்கரத்தில் நசுங்கி குழந்தை மரணமடைந்து விட்டது.

வானை பிரேக் போட்டு நிறுத்திய ஓட்டுநர் வண்டியை விட்டு இறங்கி வந்து பார்த்தபொழுது குழந்தை ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.

உடனே சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவ ஊர்தி வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள தூய ஜார்ஜ் மருத்துவமனைக்கு குழந்தை எடுத்துச் செல்லப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வான் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மே மாதம் விடுதலை பெருவதற்கான பிணையினை பெற்றுள்ளார்.

நெப்போலியன் மனைவிக்கு அணிவித்த வைரமோதிரம் ரூ.5 ½ கோடிக்கு ஏலம்

மாவீரன் நெப்போலியன் மனைவிக்கு அணிவித்த வைரமோதிரம் ரூ.5 ½ கோடிக்கு ஏலம்


மாவீரன் நெப்போலியன் தனது முதல் திருமணத்தின் போது மனைவி ஜோசபினுக்கு அணிவித்த வைர மோதிரம் ரூ.5 ½ கோடிக்கு ஏலம் போனது.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த மோதிரம் பிளவுபட்ட நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில் பதிக்கப்பட்டுள்ள நீல நிற கற்களும், வைரக் கற்களும் ஒரு காரட் எடைக்கும் அதிகமானதாகும். இந்த அறிய வகை மோதிரம், பிரான்சில் உள்ள ஓசெனாட் மையத்தில் ரூ.5 ½ கோடிக்கு(ரூ.550 லட்சத்துக்கு) ஏலம் போனது.

ஏற்கனவே, இதை வோஷிங்டனில் ஏலம்விட ஏற்பாடு செய்யப்பட்ட போதும் பிரான்சில் நிர்ணயிக்கப்பட்டதைவிட 50 மடங்கு அதிகமாக ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.