Tuesday, October 30, 2012

700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்

700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்



ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன் 700 தொன் தங்கத்தை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள கடற்பரப்பில் இக் கப்பல் காணாமல் போயிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பசுபிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்ய கப்பலொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. மேற்படி கப்பல், கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையுடன் ஒக்ஹொட்ஸ்க் கடலுக்கு கிழக்கில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. தெஹரானிலிருந்து ஒக்ஹொட்ஸ்க் கடலூடாக பெக்லிஸ்டோவ் தீவை நோக்கி இந்த கப்பல் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கப்பலில் உள்ள தங்கத்தின் பெறுமதி தொடர்பில் அறிவிக்க பொலிமெடல் சுரங்க நிறுவனம் மறுத்து வருகின்றது. இந் நிலையில் இந்துமாகடலில் நிலைகொண்டுள்ள தமது மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல், மற்றும் கரையோரக் காவற்படையின் உதவி தேவைப்பட்டால் தாம் உதவத் தயாராக இருப்பதாக கோத்தபாய இரகசிய செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளாராம். இதேவேளை சோமாலியக் கொள்ளையர்களைக் கையாள, என சில வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து இயங்கிவருகின்றனர். இவர்களும் இலங்கை கடற்படையினரும் இணைந்து இக் கப்பலை தேட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!