Thursday, February 28, 2013

அழிவின் விளிம்பில் ஊர்வன வகை உயிரினங்கள்

அழிவின் விளிம்பில் ஊர்வன வகை உயிரினங்கள்இலங்கையில் அழிவின் விளிம்பில் இருக்கும் ராட்சதப் பல்லி ஒன்று

ஊர்வன வகை உயிரினங்கள் பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஊர்வன வகைகளில் ஐந்தில் ஒன்று அழிந்து போகும் ஆபத்தான நிலையில் உள்ளதாக லண்டனிலுள்ள உயிரியல் கழகத்தின் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.பல ஆமை இனங்களும் அழிவில் விளிம்பில் உள்ளன.
 விவசாய நிலங்களின் அதிகரிப்பு, கணக்கு வழக்கில்லாமல் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது, தேவைக்கு அதிகமான அளவில் வேட்டையாடப்படுவது ஆகிய காரணங்களினால் வாழ்விடங்கள் குறைந்து போனதே இந்த ஊர்வன வகைகளின் அழிவுக்கு முக்கிய காரணம் என அந்த ஆய்வு கூறுகிறது.

முதலைகள், பல்லிகள், ஆமைகள், பாம்புகள் உட்பட 19 வகையான ஊர்வன வகைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளன என்றும், அச்சுறுத்தலான சூழலில் வாழும் அவற்றில் பத்தில் ஒரு பங்கு அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை எழுதியுள்ள டாக்டர் மோனிக்கா போஹ்ம், சுற்றுச் சூழல் மாற்றங்கள் ஊர்வன வகைகளை வெகுவாக பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகளவில் இருநூறு வல்லுநர்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆயிரத்து ஐநூறு வகையான ஊர்வன உயிரினங்களை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் 9,500 வகைகளுக்கு மேலான ஊர்வன உயிரினங்கள் உள்ளன.

முதலைகளும் அழிவிலிருந்து தப்பவில்லை

"எங்கிருந்தோ வந்தது புதன்"

"எங்கிருந்தோ வந்தது புதன்"


               சூரியனும் அதன் அருகில் இருக்கும் புதன் கோளும்

சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே புதன் அறியப்படுகிறது.

ஆனால் அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள்.

புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மீள்சிந்தனையைத் தொடங்கியுள்ளார்கள்.

அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.
அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் கோளை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பியப் படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

புதன் கோளின் மேற்பரப்பு குறித்து புதிய புகைப்படங்கள் வந்துள்ளன

புதன் கோள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், பின்னர் அது மிதந்து வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமியிலிருந்து புதனைப் பார்க்கும்போது மங்கிப் போன பழுப்பு நிற உருண்டையாக தெரியும். ஆனால் அந்தத் தோற்றத்துக்கு மாறாக அதன் மேற்பரப்பு புகைப்படங்களில் வேறு மாதிரியாகக் காணப்படுகிறது என தற்போது கிடைத்துள்ள புகைப்படங்களை பார்த்த பின்னர் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

புதிய புகைப்படங்களில் புதனின் பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்குகள் ஆரஞ்சு வண்ணத்திலும், சில பகுதிகள் ஆழ்- நீல வண்ணத்திலும் இருப்பது தெரிகிறது.

புதிய கண்டுபிடிப்புகள், புதிய கேள்விகள்

புதிர் கிரகம் ?

ஒளி ஊடுறுவ முடியாத மர்மமான தாதுப் பொருளையே அந்த ஆழ்-நீல வண்ணம் காட்டுகிறது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் ப்ளீவெட் கூறுகிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே, புதன் வேறு எங்கோ உருவாகி மெல்ல மெல்ல வான் மண்டலத்தில் மிதந்து நகர்ந்து தற்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடாக உள்ளது.
அந்தக் கோளில் இருக்காது என்று கருதப்பட்ட விஷயங்கள் அங்கு உள்ளன என்றும் அது மேலும் தமது கருத்தை வலுப்படுத்துவதாகவும் அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

'ஆழ் நீல வண்ணம் குறித்து வியப்புகள்'

புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப்பதையும், அதன் துருவப் பகுதியிலும் அதே போன்று காணப்படுவதாகும் கூறும் விஞ்ஞானிகள், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளில் இப்படி உறைபனி இருக்கும் என்று யார் தான் எண்ணியிருப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோல விரைவில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் போன்றத் தனிமங்களும் மிக அதிக அளவில் காணப்படுவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள் இவையெல்லாம் பெரும் புதிராக உள்ளன எனவும் கூறுகிறார்கள்.

நன்றி BBC

பூச்சி உண்ணும் தாவரங்கள் எப்படி உணவைப் பெறுகின்றன?

பூச்சி உண்ணும் தாவரங்கள் எப்படி உணவைப் பெறுகின்றன?இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள ஜவஹர்லால் நேரு தாவரவியல் ஆராய்ச்சிப் பூங்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் எப்படி அவற்றை ஈர்க்கின்றன என்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச தாவரவியல் சஞ்சிகையான பிளாண்ட் பயாலஜியில் அவர்கள் இது குறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

பூச்சிகளை உண்ணும் சில தாவரங்கள், நீல வண்ணத்தில் பிரகாசமான ஒளியை உமிழும் மின் விளக்குகள் போலச் செயல்படுகின்றன என்று தமது ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

பல வகையான பூச்சி உண்ணும் தாவரங்களில் உள்ள சில பகுதிகள் இவ்வகையில் ஒளியை உமிழும் மையங்களாக இருக்கின்றன எனவும், அந்த ஒளி பூச்சி புழுக்களை கவர்ந்திழுக்கின்றன என்றும் அவர்கள் தமது அக்கட்டுரையில் எழுதியுள்ளனர்.

இவ்வகையான பூச்சி உண்ணும் தாவரங்கள், தமது உணவை சுவை, மணம் மற்றும் வண்ணத்தின் மூலமே கவர்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறிவந்தனர்.

நீல வண்ணத்தை உமிழும் தாவரங்கள் அதன் காரணமாகவே பூச்சிகளை தம்மை நோக்கி இழுக்கின்றன என்பது இதுவரை அறியப்படாத ஒன்று என, அந்த ஆய்வுக் குழுவின் ஒரு உறுப்பினரான டாக்டர் சாபுலால் பேபி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மிகவும் மங்கலான சூழலிலும் இந்தத் தாவரங்கள் வெளியிடும் நீல ஒளி, புழு பூச்சிகளை சுண்டி இழுக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நன்றி BBC

லார்ஜ் ஹாட்ரன் கொலைடர் புதுப்பிக்கப்படுகிறது

லார்ஜ் ஹாட்ரன் கொலைடர் புதுப்பிக்கப்படுகிறதுஅணு துணிக்கைகளை மோதச் செய்து அவை குறித்த பரிசோதனைகளை செய்ய உதவும் பெரிய இயந்திரமான லார்ஜ் ஹாட்ரன் கொலைடர் என்னும் கருவி புதுப்பிக்கப்படுகிறது.

இதுவரை மாயமாக இருந்த ஹிக்ஸ் போசொன் துணிக்கைகளை கண்டுபிடிக்க இந்தக் கருவி விஞ்ஞானிகளுக்கு உதவியது.

சுவிட்சர்லாந்தின் சேர்ன் பரிசோதனைக்கூடத்தில் இருக்கும் இந்தக் கருவி, பல புதிய விடயங்களை சேர்ப்பதற்கும் பழுதுபார்ப்பதற்குமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அடுத்த வருட இறுதியில் அது மீண்டும் செயற்படத்தொடங்கும் போது, மிகவும் சக்திவாய்ந்த துணிக்கைகளை வேகமாக மோதச் செய்யும் தனது சாதனைகளையே அது முறியடித்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
4 வருடங்களுக்கு முன்னர் செயற்படத்தொடங்கிய இந்த லார்ஜ் ஹட்ரன் கொலைடர் இயந்திரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட பின்னர் இதுவரை தனது உச்ச வேகத்தில் அது இயக்கப்படவில்லை.

பேச்சொலியைப் பாகுபடுத்திப் புரிந்துகொள்ளும் சிசுக்கள்'

பேச்சொலியைப் பாகுபடுத்திப் புரிந்துகொள்ளும் சிசுக்கள்'தாயின் கருப்பையில் இருக்கும் சிசுக்கள், பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, வெளியில் இருந்து வரும் பேச்சொலிளிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்கின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

28 வார கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை ஒளி ஸ்கேன்கள் மூலம் சோதனை செய்ததில், பிக்கார்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஒன்று, வெவ்வேறு வார்த்தைப் பதங்கள் மற்றும் ஆண் , பெண் குரல்களை, சிசுக்கள் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது என்று தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.
கர்ப்பப்பையில் இருக்கும்போதே சிசுக்களால் ஒலிகளைக் கேட்க முடியும் என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒன்றுதான். சிசுக்களின் காதுகள் 23 வாரம் கர்ப்பத்தில் இருக்கும்போது வளரத்தொடங்குகின்றன.
மனித மூளைக்கு பேசப்படும் மொழியைப் புரிந்துகொள்ளத்தேவையான உள்ளார்ந்த அறிவுத்திறன் இருப்பதாக தாங்கள் நம்புவதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.

நன்றி BBC

லெமூரியா கண்டம் உண்மையா?

லெமூரியா கண்டம் உண்மையா?இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு நிலவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆரம்பத்தில் ஏறக்குறைய ஒரே கண்டமாக இருந்தது என்று கூறும் இந்த நிலவியலாளர்கள், இதற்கு ரொடினியா என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பரப்பானது பல்வேறு கண்டங்களாக பிரிந்து படிப்படியாக ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும், இந்த பிளவு மற்றும் நகர்வின்போது பூமியில் மிகப்பெரிய நிலப்பகுதி ஒன்று இந்திய பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் இந்த நிலப்பகுதிக்கு மொரிஷியா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த நிலப்பகுதியானது, சுமார் 2000 முதல் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு மேலே இருந்திருக்கலாம் என்றும் நிலவியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
மொரீஷியா என்கிற இந்த நிலப்பகுதியானது, பூமியின் நிலப்பகுதிகள் பல்வேறு கண்டங்களாக பிரிந்து தற்போது நாம் பார்க்கும் விதத்தில் நிலைபெற்ற காலகட்டத்தில், சிறு சிறு பகுதிகளாக பிளவுபட்டு படிப்படியாக கடலுக்குள் மூழ்கி விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.
உலகம் ஒரே கண்டமாக இருந்தது
உலகம் முழுவதும் ரொடினியா என்கிற ஒரே கண்டமாக இருந்தபோது தற்போதைய இந்திய பெருநிலப்பரப்பும் மடகாஸ்கரும் ஒன்றுக்கு ஒன்று அடுத்தடுத்து இருந்த நிலப்பகுதிகளாக இருந்ததாக கூறும் நிலவியலாளர்கள், இந்த ரொடினியா கண்டம் பலபிரிவுகளாக பிளவுபடத்துவங்கி, ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக பிரிந்து செல்லத்துவங்கியபோது, மொரிஷியா கண்டம் காணாமல் போனதாக கருதிவந்தனர்.


அப்படி காணாமல் போன அந்த மொரிஷியா நிலத்தில் ஒரு பகுதியை தாங்கள் தற்போது கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மொரிஷியஸ் தீவுகளின் கடற்கரை மணலை ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு தாங்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த மணல்துகள்களை தாங்கள் ஆராய்ந்தபோது அந்த பகுதியில் சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு நடந்த எரிமலைக்குழம்பின் தடயங்களை அதில் கண்டதாக தெரிவிக்கும் நிலவியல் நிபுணர்கள், அந்த எரிமலைக்குழம்புடன் கூட, அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சிர்கோன் என்கிற துகள்களையும் தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சிர்கோன் துகள்கள் கண்டங்களின் மேல்பரப்பில் காணப்படுபவை, மிக மிகத் தொன்மையானவை (சிர்கோன் துகள்கள் சுமார் 1970 முதல் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை), என்று சுட்டிக்காட்டும் நார்வே நாட்டின் ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ட்ரோண்ட் டோர்ஸ்விக், மொரீஷியஸ் தீவுப்பகுதியில் நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மூழ்கிய கண்டம் மேலேவந்து மொரீஷியஸ் தீவுநிலப்பகுதியுடன் மோதி மீண்டும் கடலுக்குள் சென்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார்.

மொரீஷியஸ் தீவுக்கு கீழே புதையுண்டிருப்பது என்ன?

எனவே, மொரீஷியஸ் தீவுகளுக்கு கீழே கடலுக்குள் சுமார் பத்துகிலோமீட்டர் ஆழத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் மொரீஷியா கண்டத்தின் சிலபகுதிகள் இருக்கலாம் என்றும் பேராசிரியர் டோர்ஸ்விக் கருதுகிறார்.
இந்தியப்பெருங்கடலுக்குள் மூழ்கியிருக்கும் மொரீஷியா கண்டத்தின் ஒரு சிறுபகுதி இன்னமும் கடலுக்கு வெளியில் தெரியலாம் என்று கருதும் இவர், இந்தியப்பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சீஷெல்ஸ் தீவு அப்படியானதொரு நிலமாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.

சீஷெல்ஸ் தீவுகள் ஒருகாலத்தில் மடகாஸ்கர் தீவுகளுக்கு வடக்கே இருந்ததை சுட்டிக்காட்டும் நிலவியலாளர்கள், இந்த தீவின் நிலப்பகுதி இதுவரை நினைத்ததைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும், இந்திய பெருங்கடலில் விரவிக்கிடக்கும் வேறு நில தீவுப்பகுதிகளையும் ஆராயவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

இப்படியாக கடலுக்குள் காணாமல் போன உலகின் ஆதிகண்டமான மொரீஷியாவின் மிச்ச சொச்சங்களை கண்டறிவதற்கான மேலதிக ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் டோர்ஸ்விக்.
இதில் தமிழர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை அளிக்கும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டின் தென்கோடி நிலப்பரப்பான ராமேஸ்வரத்துக்கும் தெற்கே கடலுக்குள் லெமூரிய கண்டம் என்கிற கண்டம் மூழ்கியிருப்பதாக பல ஆண்டுகளாக தமிழறிஞர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது.
இந்த பின்னணியில், நோர்வோ நாட்டு நிலவியல் விஞ்ஞானிகள் கூறும் மொரீஷியா என்கிற கண்டத்திற்கும் தமிழறிஞர்கள் கூறும் லெமூரியா என்கிற கண்டத்துக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதை தமிழறிஞர்களும், இந்திய நிலவியலாளர்களும் ஆராய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

நன்றி BBC

விண்ணில் ஸ்மார்ட்போனை நிலைநிறுத்தியது இந்தியா

விண்ணில் ஸ்மார்ட்போனை நிலைநிறுத்தியது இந்தியா
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 25ம் தேதியன்று, பி.எஸ்.எல்.வி,சி20 ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதிலிருந்து, இந்தியா,பிரான்ஸ் கூட்டு தயாரிப்பான சரள் செயற்கைகோள் உட்பட வெளிநாடுகளின் 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் ஒன்று ஸ்ட்ராண்ட்,1. இதை இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி மைய விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளது.

இந்த செயற்கைக்கோளில் 3யூ,க்யூப்செட் என்ற 4.3 கிலோ எடை கொண்ட நவீன விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளும் (சதுரமானது), போன்சாட் என்ற அதிநவீன ஸ்மார்ட்போனும் உள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஸ்மார்ட்போன் ஒன்று, இந்திய ராக்கெட் மூலம் சோதனைக்காக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுகள் உள்ளன. விண்வெளிச் சூழ்நிலையில், இவை எவ்வாறு செயல்பட உள்ளது என்பது குறித்து ஆராயப்பட உள்ளது. - See more at: http://dinakaran.com/News_Detail.asp?Nid=42004#sthash.cZqxaj7o.dpuf

ஒரு நிமிடத்தில் 137 முத்தம் பெற்று பாகிஸ்தான் நடிகை கின்னஸ் சாதனை

ஒரு நிமிடத்தில் 137 முத்தம் பெற்று பாகிஸ்தான் நடிகை கின்னஸ் சாதனை ஒரு நிமிடத்தில் 137 ஆண்கள் பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கின் கையில் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். கடந்த 26ம் தேதி வீணாவின் பிறந்தநாள் அன்று இந்த சாதனை மும்பையில் நிகழ்த்தப்பட்டது. முத்தமிட்ட 137 ஆண்களும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கு முன் நடிகர் சல்மான் கையில் ஒரு நிமிடத்தில் 108 பேர் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். 2011ம் ஆண்டு “கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் ஆப் இந்தியா தோடா’’ என்ற டி.வி. நிகழ்ச்சியின் போது சல்மான் இந்த சாதனையை ஏற்படுத்தினார்.  இந்த சாதனையை பிறந்தநாளில் முறியடிக்க தான் திட்டமிட்டதாகவும் அதன்படி முறியடித்து விட்டதாகவும் வீணா கூறினார். வீணா நடிக்கும் “தி சிட்டி தாட் நெவர் டைய்ஸ்“ என்ற இந்திபட விளம்பரத்துக்காக இந்த சாதனை முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இன்னும் 19 கின்னஸ் சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 (((வேலை வெட்டி இல்லாத எதாவது அமைப்பு இருந்தால் .... உங்களுக்கு ஒரு வேலை வந்துவிட்டது ...)))

Wednesday, February 27, 2013

மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!


மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!


உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் அந்த பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு ஏதேனும் தீர்வுகளை சொன்னால், அந்த தீர்வுகள் அனைத்து பிரச்சனைகளுக்குமே சரியாக இருப்பதில்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனைகள் அனைத்து வருவதற்கு நமது பழக்கங்கள் தான் முக்கிய காரணம். அதற்காக இந்த பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க முடியாது தான். ஆனால் பழக்கமாக கொள்ளாமல் இருக்கலாமே!

ஏனெனில் பழக்கவழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால், தூக்கமின்மை, மூளையில் பாதிப்பு போன்றவை ஏற்படும். நாம் ஏற்கனவே தூக்கமின்மையை ஏற்படுத்தும் பழக்கங்களை பார்த்துவிட்டோம். ஆனால் உடலில் உள்ள முக்கியமான பகுதியான மூளையையும் ஒருசில செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அத்தகைய மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் என்னவென்று பார்த்து, அந்த செயல்களை அடிக்கடி செய்வதை தவிர்த்து, மூளைக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாமே!!!

புகைப்பிடித்தல் 

புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும்.


உணவை தவிர்த்தல் 

சிலர் காலை வேளையில் உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அவ்வாறு உணவுகளை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறையும். இதனால் மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது தடைபட ஆரம்பிக்கும்.


அதிகமாக சாப்பிடுவது 

உணவுகள் உடலுக்கு எப்படி ஆரோக்கியத்தை தருமோ, அதே சமயம் தீங்கையும் விளைவிக்கும், அவை அனைத்தும் உணவை உண்ணும் அளவிலேயே உள்ளது. ஆம், உணவை அளவாக உண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால், பின் மூளைத் தமனிகளை கடினமடையச் செய்து, ஞாபக சக்தியை குறைத்துவிடும்.


அதிகப்படியான சர்க்கரை
அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், பின் உடலில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் உடலில் உறிஞ்சாமல், உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை தடை செய்யும்.


காற்று மாசுபாடு 

உடலில் ஆக்ஸிஜனை அதிகம் உறிஞ்சுவது மூளை தான். ஆகவே மாசடைந்த காற்றை அதிகம் சுவாசித்தால், அது நேரடியாக இதயத்திற்கு செல்கிறதோ இல்லையோ அது மூளைக்கு தான் முதலில் செல்லும். இதனால் மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால், மூளையின் செயல்திறனானது குறைந்துவிடும்.


தூக்கமின்மை 

நல்ல தூக்கம் இல்லாவிட்டால், நாள் முழுவதும் ஓய்வின்றி செயல்படும் மூளையானது சோர்ந்து, போதிய ஓய்வில்லாததால் மூளையில் உள்ள செல்கள் இறக்க நேரிடும். மேலும் தூங்கும் போது முகத்தை போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கக் கூடாது. ஏனெனில் பின் மூளைக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், மூளையானது பாதிக்கப்படும்.


மோசமான நிலையிலும் வேலை 

உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் வேலை செய்வது அல்லது படிப்பது போன்றவற்றை மேற்கொண்டால், மூளையின் திறன் குறைவதோடு, மூளையும் பாதிக்கப்படும்.


குறைவாக பேசுவது 

அதிகமாக பேசுவதன் மூலம் மூளையின் செயல்திறனை மேம்படுத்த முடியும்.சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் சிலர் குழந்தையை தாமதமாக பெற்றுக் கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் பலர் குழந்தையை சீக்கிரம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இதற்காக மருத்துவரிடம் கூட சென்றிருப்பார்கள். இருப்பினும் குழந்தையை சீக்கிரம் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும். இதற்கு காரணம் பொறுமை இல்லாதது தான்.

எனவே அவ்வாறு குழந்தையை சீக்கிரம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுபவர்களுக்கு, ஒரு சில ஈஸியான முறைகளை அனுபவசாலிகளிடம் கேட்டு, பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்து, அழகான குழந்தையைப் பெற்று மகிழுங்கள்.

* கர்ப்பமாவதற்கு, சரியான மாதவிடாய் சுழற்சி இருக்க வேண்டும். அவ்வாறு சரியான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருந்தால், அது இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மாதவிடாய் சுழற்சியை சீராக வைப்பதற்கு, அதற்கேற்ற உணவுகளை முதலில் சாப்பிட வேண்டும்.

* கர்ப்பமடைவதற்கு ஓவுலேசன் தான் சரியான நேரம். எனவே விரைவில் கர்ப்பமடைய வேண்டுமெனில், ஓவுலேசன் நாட்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முயற்சி செய்தால், நிச்சயம் கர்ப்பமடைய முடியும்.

* ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை தான் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் ஃபோலிக் ஆசிட் குறைவாக இருப்பதால் தான் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆகவே ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், பருப்பு வகைகள், சிட்ரஸ் பழங்கள், காராமணி, ப்ராக்கோலி மற்றும் தானியங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், கர்ப்பமடைவதற்கான வாய்ப்பானது அதிகரிக்கும்.

* தினமும் உறவில் ஈடுபடுவதை விட, இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொண்டால், விந்தணு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் எந்த நிலையில் உறவு கொண்டால், விந்தணு எளிதில் கருப்பையை அடையும் என்பதையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்வது நல்லது.

* அதிக உடல் எடை கூட கர்ப்பத்திற்கு தடை ஏற்படுத்தும். எனவே தினமும் உடல் எடையை சீராக வைக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் எடையை குறைவதோடு, உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, சீரான இரத்த ஓட்டமும் கர்ப்பமாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

இவற்றையெல்லாம் சரியாக தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் கர்ப்பமாக முடியும்.

Read more at: http://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2013/how-get-pregnant-within-month-002725.html

19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா

19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறாஆந்திரமாநிலத்தில் நடைபெற்ற புறா பந்தயத்தில் காஞ்சிரத்தை சேர்ந்த புறா 740 கி.மீ. வான்வெளி தூரத்தை 19.35 மணி நேரத்தில் பறந்து வந்து சாதனை படைத்துள்ளது.

காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசனும், சென்னை பீஜியன் அசோஷியசனும் இணைந்து ஆந்திர மாநிலம் சிறுப்பூரில் இருந்து கடந்த 23ம் தேதி புறா பந்தையத்தை நடத்தின. இதில் மொத்தம் 11 புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லோகநாதனின் 2 புறாக்களும் போட்டியில் பங்கேற்றன.

பிப்ரவரி 23-ம் தேதி காலை 9.15 மணிக்கு புறாக்கள் பறக்க விடப்பட்டன. இந்த நிலையில் லோகநாதனின் புறா பிப்ரவரி 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதாவது 19.35 நிமிடத்தில் (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கணக்கில் சேர்க்கப்படவில்லை) 740 கி.மீ. வான்வெளி தூரம் பறந்து வந்து முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

இது குறித்து லோகநாதன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புறாக்கள் வளர்த்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நான் வளர்த்து வரும் புறாக்களை பந்தயத்தில் பறக்கவிட்டு வருகிறேன். இப்போது சாதித்த புறா கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் வாராங்கல் - காஞ்சிபுரம் இடையே 570 கி.மீ. வான் வெளி தூரத்தை 10.49 மணி நேரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது.

2 வயது புறா 500 கி.மீ. தூரம் வரைதான் பறக்கும். ஆனால் இந்த புறா முதல் ஆண்டிலேயே 500 கி.மீ. தூரத்துக்கு மேல் பறந்தது. இப்போது 2 வயதில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. புறாவின் அடையாளத்துக்காக உறுப்பினர்கள் மற்றும் ஊரை குறிக்கும் வகையில் கால்களில் வளையங்கள் கட்டிவிடப்படும் என்றார் லோகநாதன். சூரியனின் திசைக்கேற்பவும், இரவில் நட்சத்திரங்களின் திசைக்கேற்பவும் இடங்களைக் கண்டுபிடிக்கும் திறமை புறாக்களுக்கு இயற்கையாகவே உண்டு. எனவே புறாக்களை எங்கு கொண்டுசென்று விட்டாலும்கூட அவைகள் தான் வசிக்கும் கூண்டுக்கு வந்து சேர்ந்துவிடும். மேலும் மணிக்கு 100 கி.மீ. தூரம் வரை பறக்கும் சக்தி புறாக்களுக்கு உண்டு.

குறிப்பாக ஹோமர் இன புறாக்கள்தான் நீண்டதூரம் வேகமாக பறக்கும் திறன் படைத்தது. எனவே புறா பந்தயங்களுக்காக ஹோமர் இன புறாக்களை காஞ்சிபுரத்தில் அதிக அளவில் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இவ்வாறு ஹோமர் புறாக்களை வளர்க்கும் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து "காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசன்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருவுற்ற பெண்களின் வலிப்பு மருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு

கருவுற்ற பெண்களின் வலிப்பு மருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்புபிரிட்டனில் கடந்த 1960ஆண்டுகளில் மகளிரின் கர்ப்பகாலத்தில் ஏற்படுத்தும் மயக்கம், வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றிக்கு கொடுத்த தாலிடோமைட்(Thalidomide) மருந்தால் ஏறத்தாழ இரண்டாயிரம் குழந்தைகள் ஊனமாகப் பிறந்துள்ளனர்.
பெண்களின் வலிப்பு நோய், வலி, மனஅழுத்தம் ஆகியவற்றிற்காகக் கொடுத்த எப்பிலிம்(Epilim) மருந்து குழந்தைகளின் மனநலத்தைப் பாதித்துள்ளது.

எப்பிலிம் என்ற இந்த மருந்து 1973ம் ஆண்டு பிரிட்டனில் அறிமுகமானது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணூறு குழந்தைகள் இந்த மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து ஆட்டிசம் என்ற நோய்யுடனும், மூளைக் கோளாறுடனும், சில குழந்தைகள் தம் முதுகெலும்பு ஒரு பகுதி வெளியே தெரியும்படியும் பிறந்துள்ளன.

கேரன் பக்(Karen Buck) என்ற தாய் இதுபோன்ற பாதிப்புடைய பிரிட்ஜட்(Bridget) என்ற தனது 14 வயதுப் பெண்ணைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்ற அஞ்சியபடி இருக்கிறார். ஏனெனில் பிரிட்ஜட் இன்னும் சில வாரங்களில் இறக்கப் போவது உறுதியாகியுள்ளது.மடகாஸ்கர் இரட்டை சூறாவளி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

மடகாஸ்கர் இரட்டை சூறாவளி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!மடகாஸ்கர் நாட்டில் அடித்த சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஐ எட்டியுள்ளது. 16 பேரை காணவில்லை. 84 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23,000 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியக்கடலின் தென்மேற்கு பகுதியில், ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மடகாஸ்கர் நாட்டில் ஹருனா என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி பலத்த மழையுடன் தாக்கியது. சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில்
தாக்கிய இந்த புயல், இரண்டு தடவைகள் தாக்கியதால் சேதம் அதிகம் ஏற்பட்டது.

தேசிய நிவாரண மையத்தின் கணிப்பின்படி, 1,500 வீடுகள் சேதமடைந்தன. 6,000 ஹெக்டர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.


ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது

ஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்ததுதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள், பணம், தங்கம், வைரம் மற்றும் வைடூரியம் உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கை அளிக்கின்றனர். ஏழுமலையான் கோயில் உண்டி, ஆர்ஜித சேவா, தலைமுடி விற்பனை, தங்கும் அறைகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 40 ஆண்டுகளாக டெபாசிட் செய்து வருகின்றனர். பக்தர்கள் நன்கொடை வழங்கும் பணமும் வங்கியில் செலுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் டெபாசிட் தொகை இரண்டு மடங்காக உயர்ந்தது.தேவஸ்தானம் வங்கியில் செலுத்திய பணத்துக்கான வட்டியையும், வங்கியிலேயே செலுத்துவதால் முதலீட்டு தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உண்டியல் காணிக்கை மூலம் வரும் பணம், நகைகள் உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.கடந்த 2002- 2003ம் நிதியாண்டு பட்ஜெட்டில் 629 கோடி வங்கி முதலீடு இருப்பதாக கூறப்பட்டது. இதன் மூலம் வந்த வட்டி மற்றும் அதன் பிறகு செலுத்தப்பட்ட முதலீடு சேர்த்து, கடந்த 2012- 2013 ஆண்டு பட்ஜெட்டில் 4,674 கோடியாக உயர்ந்தது. தொடர்ந்து, வட்டி மற்றும் முதலீடு சேர்த்து இப்போது ஏழுமலையான் கோயில் வங்கி டெபாசிட் 5,207 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் மேலும் 100 கோடி முதலீடு செய்யப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழுமலையான் கோயில் முக்கிய வருமானம் உண்டியல் மூலமாக வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு உண்டியல் வருமானம் 601 கோடியாக இருந்தது. இது, 2010& 2011ம் ஆண்டில் 694 கோடியாகவும், 2011- 2012ம் ஆண்டு  756 கோடியாகவும் உயர்ந்தது. இந்த ஆண்டு 850 கோடியை தாண்டி உள்ளது. தொடர்ந்து, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.

மின் கம்பிகளில் இருந்து கசியும் மின்சாரம் நிலங்களில் பாய்கிறது

400 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பிகளில் இருந்து கசியும் மின்சாரம் நிலங்களில் பாய்கிறதுகோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 400 கிலோவாட் மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியம் கடந்த 4 ஆண்டுகளுக்கு அளித்த திட்ட முன்மொழிவுக்கு அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, அவிநாசி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி துணை மின்நிலையத்திற்கு புதிய மின்பாதை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. உயரழுத்த மின்சார கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 பிரிவுகளாக, ஒவ்வொரு பிரிவிலும் 2 கம்பிகள் கொண்ட மின்பாதை அமைக்கப்பட்டது. 45 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டவரில் தரை மட்டத்தில் இருந்து 20 மீ. உயரத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பணிகள் முடிவுற்ற நிலை யில் புதிய மின் பாதையில் மின்சாரம் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 22ம் தேதி மேட்டூரில் இருந்து புதிய மின் பாதையில் சோதனை ஓட்டமாக மின்சாரம் வழங்கப்பட்டது. 400 கிலோ வாட் மின்சாரம் என்பதால் அதன் பாதைகளில் மின்வாரிய அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இந்த மின் பாதை செல்லும் வழித்தடமான கோபியை அடுத்த சிறுவலூர் அருகே உள்ள மணியகாரன்புதூரில் உள்ள விளை நிலங்களில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயிகளை மின்சாரம் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இந்த இடங்களில் இன்டிகேட்டர் வைத்து மின்சாரம் பாய்வதை உறுதி செய்தனர். இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். டவர் அமைத்த ஒப்பந்ததாரர்களும் சோதனை செய்து இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சரி செய்யும் வரை புதிய மின் பாதை யில் மின்சாரம் கொண்டு செல்லக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tuesday, February 26, 2013

தனியாக பயணம் செய்ய டெல்லி பாதுகாப்பில்லை... ஆய்வில் தகவல்


தனியாக பயணம் செய்ய டெல்லி பாதுகாப்பில்லை... ஆய்வில் தகவல்

பயணம் என்பது பலவிதங்களில் பெண்களுக்கு ஏற்படுகிறது. பணி நிமித்தமாகவோ, விடுமுறையை கழிக்கவோ சாலைகளில் பயணம் செய்தாக வேண்டியுள்ளது. இந்த பயணம் பாதுகாப்பானதாக உள்ளதா? என்பது பற்றியும், எந்த நகரத்தின் சாலைகள் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றது என்றும் டிரிப் அட்வைஸைர் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

94 சதவிகித பெண்கள் தங்களின் பயணத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதாக கூறியுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் கூட அந்த பயம் நீடிப்பதாகவும் கூறியுள்ளனர். 6 சதவிகித பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல பயப்படுவதாக கூறியுள்ளனர். 24 சதவிகித பெண்கள் இந்தியாவில் தனியாக பயணிக்க அச்சப்படுவதாக கூறியுள்ளனர்.

இந்திய சாலைகளில் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கருதுகிறார்கள். இதில் மற்ற பெருநகரங்களைக் காட்டிலும் டெல்லி நகரம் தான் மிகவும் பாதுகாப்பற்றது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தன்னம்பிக்கை அதிகரிப்பு 

இந்த ஆய்வில் பணிபுரியும் பெண்கள், சுய தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் பங்கேற்றனர். பழங்காலத்தில் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேற அச்சப்படுவார்கள். அதனை உடைக்கும் வகையில் இன்றைக்கு அநேகம் பெண்கள் தன்னம்பிக்கையோடு தனியாக பயணம் செய்வதை விரும்புகின்றனர்.


தனியாக பயணம் 

விடுமுறை நாட்களில் தனியாக சந்தோசமாக பயணிக்க விரும்புவதாக 76 சதவிகிதப் பெண்கள் கூறியுள்ளனர். 41 சதவிகித பெண்கள் பணி நிமித்தமாக தனியாக பயணிப்பதை விரும்புவதாக கூறியுள்ளனர். 34 சதவிகித பெண்கள் தனியாக பயணிப்பதையும், பிரமிப்பூட்டும் பயணத்தையும் விரும்புவதாக கூறியுள்ளனர்.


இரவில் பயணிப்பது ரிஸ்க் 

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, சாலைகளில் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 50 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்தனர். இரவு நேரத்தில் தனியாக பயணம் செய்ய பயப்படுவதாக 73 சதவீதம் பெண்கள் தெரிவித்தனர்.


கொல்கத்தா பாதுகாப்பானது 

டெல்லி மற்றும் மும்பையில் உள்ளவர்களைக் காட்டிலும் கொல்கத்தா பெண்கள் சாலைகளில் பயணம் செய்வதை பாதுகாப்பாக கருதுகிறார்கள்.

டெல்லி பாதுகாப்பற்ற நகரம் 

டெல்லி மிகவும் பாதுகாப்பற்ற நகரம் என்று 84 சதவீதம் பெண்கள் கூறினர். எனினும் மும்பையில் 74 சதவீதம் பெண்கள் மட்டுமே இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.


சென்னைப் பெண்கள் 

அதே சமயத்தில் சென்னையில் உள்ள பெரும்பாலான பெண்கள், தங்களுடைய நகரம் டெல்லியை காட்டிலும் பாதுகாப்பானது என்று கூறினர். எனினும் மும்பையை போல சென்னை அவ்வளவு பாதுகாப்பான நகரம் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


ஆயுதங்களுடன் பயணம் 

33 சதவிகித பெண்கள் தனியாக பயணிக்கும் போது மிளகாய்த்தூள், கத்தி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பயணிப்பதாக கூறியுள்ளனர். பணி நிமித்தமாக பெரும்பாலான பெண்கள் தனியாக பயணம் செய்வது அதிகரித்துள்ளதாக டிரிப் அட்வைசர் இன்டியா நிறுவனத்தின் நிகில் கஞ்ஜூ கூறியுள்ளார். இதில் 78 சதவிகிதம் பேர் தங்கும் ஹோட்டல்களின் பாதுகாப்பு பற்றியும் கூறியுள்ளனர்.


பாதை பற்றிய விசாரணை 

வெளியே புறப்படுவதற்கு முன்பு தாங்கள் செல்லும் வழியை பற்றி பெரும்பாலான பெண்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். முன்பின் தெரியாத சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது வழியை தெரிந்து கொள்ள இதே எண்ணிக்கையிலான பெண்கள் வழிப்போக்கர்களையே நம்பி இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


லாஸ் வேகாஸில் வீட்டு பின்புறத்தில் நாயுடன் உறவு கொண்ட இளம்பெண் கைது

லாஸ் வேகாஸில் வீட்டு பின்புறத்தில் நாயுடன் உறவு கொண்ட இளம்பெண் கைது


அமெரிக்காவில் காரா வான்டெரயக்(23) என்னும் இளம்பெண் திறந்தவெளியில் நாயுடன் உல்லாசம் அனுபவித்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் காரா வான்டெரயக்(23). அவர் தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள திறந்த வெளியில் தான் வளர்க்கும் பிட் புல் வகையைச் சேர்ந்த நாயுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் முகம் சுளித்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்தபோது அவர் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு நாயுடன் தனது லீலையைத் தொடர்ந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் ஒன்று மனம் நலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று லாஸ் வேகாஸ் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரா போலீசாரிடம் தனது பெயரைக் கூட தெரிவிக்க முடியாத போதையில் இருந்துள்ளார். தான் எந்த ஆண்டில் இருக்கிறோம் என்பதே அவருக்கு தெரியவில்லை. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் நாயை விலங்குகள் நலச் சங்கத்திடம் ஒப்படைத்தனர்.

இனி ரஷ்யாவில் புகைப்பிடிக்க முடியாது

இனி ரஷ்யாவில் புகைப்பிடிக்க முடியாது


ரஷ்யாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா இம்மாதம் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதை ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்த்து வாக்களித்தார். இந்த சட்ட மசோதாவில் ஜனாதிபதி விலாடிமிர் புதின் கைசாத்திட்டார். இந்த புதிய தடை சட்டம் வருகிற யூன் 1ம் திகதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும்.

அதன் பின்னர், தங்கும் விடுதிகள், பேருந்துகள், இரயில், விமானம், கப்பல் மற்றும் விமான நிலையம், இரயில் நிலையத்துக்கு 15 மீற்றர் உள்பட்ட இடத்தில் புகை பிடிக்கக்கூடாது.
ஹோட்டல்கள், காபிபார், உணவு விடுதிகள் ஆகியவற்றில் மேலும் ஓராண்டில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை கண் பார்வையில் தெரியும்படி வைக்கக்கூடாது என்றும் சிகரெட்டு கம்பெனிகள் பரிசு சீட்டு குலுக்கல், திருவிழா ஸ்பான்சர்ஸ் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்பது இந்த தடை சட்டத்தில் அடங்கும்.

ரஷ்யாவில் 10 பேரில் 4 நபர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் இச்சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.24 மணி நேரமும் விறைப்பாக இருக்குமாம் முதலையின் இனப்பெருக்க உறுப்பு !

24 மணி நேரமும் விறைப்பாக இருக்குமாம் முதலையின் இனப்பெருக்க உறுப்பு !இவ்வளவு ஆண்டுகள் கழித்து விஞ்ஞானிகள் ஒரு உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்கள். உலகில் அநேகமாக இனப் பெருக்கம் செய்யும் உயிரினத்தில் ஆண் இனம் முக்கியமானது. ஆண் இனத்தில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பில் இருந்து வெளியாகும் விந்து கரு முட்டைக்குள் செல்வதால் தான் கருக்கட்டல் நடைபெறுகிறது. இதற்கு ஆணின் இனப்பெருக்க உறுப்பு விறைப்படையவேண்டும். பொதுவாக மிருங்கள் ஆனாலும் சரி, இல்லை என்றால் மனிதர்கள் ஆனாலும் சரி, ஒரு உணர்ச்சி வசப்படும்பொழுது தான், ஆண் இனப்பெருக்க உறுப்பு விறைப்படைகிறது. ஏனைய நேரங்களில் அது சாதாரண நிலையில் தான் காணப்படும்.

ஆனால் தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள விடையம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஆண் முதலைக்கு இனப்பெருக்க உறுப்பு உடலுக்குள் மறைந்து காணப்படுகிறது. அது தேவைப்படும்போது வெளிப்படுகிறது. ஆனால் அது 24 மணி நேரமும் விறைப்பாகவே இருக்கும். எனவே அது வெளிப்பட்டவுடன் உடலுறவு கொள்ள முடியும். இப்படி உலகில் எந்த ஒரு உயிரினமும் இருப்பதில்லை என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அது சரி இவ்வளவு நாளும் சிட்டுக் குருவி லேகியம் வாங்க அலைந்து திரிந்த எங்க ஆட்க்கள், இனி முதலை லேகியம் கிடைக்குமா என்று அலையாமல் இருந்தால் சரி.


ரூ.2.4 லட்சத்தில் வாசனை திரவியம்: பென்ட்லீ அறிமுகம்!

ரூ.2.4 லட்சத்தில் வாசனை திரவியம்: பென்ட்லீ அறிமுகம்!


ஆடம்பர கார் தயாரிப்பாளரான பென்ட்லீ நிறுவனம் வாசனை திரவியங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில், ஸ்பெஷல் எடிசனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெர்ஃப்யூம் பாட்டிலின் விலை ரூ.2.4 லட்சம். அதாவது, மாருதியின் புதிய ஆல்ட்டோவின் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

இந்த வாசனை திரவியங்கள் ஆண்களுக்கானது என்பதோடு, ஆடம்பர ரகத்தை சேர்ந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவியங்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற லாலிக் நிறுவனத்துடன் இணைந்து வாசனை திரவியங்களை பென்ட்லீ அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பென்ட்லீ இயக்குனர் லின்ட்சே கூறுகையில்,"எங்களது பிராண்டின் ஆடம்பரத்தை பரைசாற்றும் வகையில் லாலிக் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய வாசனை திரவியங்களை அறிமுகம் செய்துள்ளோம்.

பென்ட்லீயும், லாலிக்கும் ஒன்றுபோல் நூறாண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட நிறுவனங்கள். இந்த புதிய வாசனை திரவியங்கள் இரு பிராண்டுகளின் மதிப்பை வெகுவாக உயர்த்தும்," என்றார்.

பென்ட்லீயின் கிறிஸ்டல் ஸ்பெஷல் எடிசனின் 40 மில்லி கொண்ட பாட்டில் 2.4 லட்சம் விலையில் கிடைக்கும். பிற வாசனை திரவியங்கள் ரூ.3,500 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவியங்கள் தவிர ஷாம்பூ, முக சவரத்திற்கு பின்னர் பயன்படுத்தும் லோஷனையும் பென்ட்லீ அறிமுகம் செய்திருக்கிறது.

இனி யாருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கக் கூடாது - யாஹூ சிஇஓ அதிரடி உத்தரவு


இனி யாருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கக் கூடாது - யாஹூ சிஇஓ அதிரடி உத்தரவுயாஹூ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான மரிசா மேயர் தனது தொடர் அதிரடி நடவடிக்கைகளால் தொடர்ந்து பரபரப்பான செய்தியாகவே இருந்து வருகிறார். தற்போது அவர் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அதாவது யாஹூ ஊழியர்கள் யாரும் இனிமேல் வீட்டிலிருந்து பணியாற்ற முடியாது, கூடாது என்பதே அந்த புதிய நடவடிக்கை.

கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் இருக்கிறது யாஹூ. கூகுள் விஸ்வரூபத்தின் எதிரொலியாக இன்று யாஹூவைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்து, யாஹூவை தூக்கி நிறுத்தும் பணியில் மரிசா மேயர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பணியில் அமர்ந்ததும், ஒவ்வொரு யாஹூ ஊழியருக்கும் இலவச உணவு, புத்தம் புதிய ஸ்மார்ட் போன்கள் வழங்க உத்தரவிட்டார் மேயர். ஊழியர்களைத் தட்டிக் கொடுத்த கையோடு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் முடுக்கி விட்டார். தற்போது ஊழியர்கள் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையிலான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதாவது யாஹூ ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒர்க்கிங் பிரம் ஹோம், அதாவது வீட்டிலிருந்து பணியாற்றுவது என்ற சலுகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் மேயர்.

இனிமேல் யாரும் வீட்டிலிருந்து பணியாற்றக் கூடாது. அனைவரும் அலுவலகத்திற்கு வந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்று யாஹூ நிறுவனத்தின் மனித வளப் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது.

ஊழியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வேலை செய்தால்தான் அவர்களுக்குள் நட்புறவு, தோழமையுணர்வு, புரிந்து கொண்டு செயல்படுதல், விட்டுக் கொடுத்தல் உள்ளிட்டவை ஏற்படும். இது வேலைக்கும் நல்லது, ஊழியர்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பது மேயரின் கருத்தாகும்.

 வீட்டிலிருந்து வேலை பார்ப்பது என்பது பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்குத் தரும் ஒரு சலுகையாகும். ஆனால் இதை தற்போது பல நிறுவனங்கள் ரத்து செய்ய ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் பல நிறுவனங்களில் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது யாஹூவும் இதைக் கையில் எடுத்திருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.