Thursday, November 1, 2012

புயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய கப்பல்

புயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய கப்பல்\


 



தானே புயல் அபாயம் காரணமாக, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் சென்று பத்திரமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் நின்ற 20 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன.

ஆனால், ஒரே ஒரு சரக்கு கப்பல் மட்டும் சென்னை துறைமுகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் நின்றது. இதில், 14 சிப்பந்திகளும் இருந்தனர். தென்கொரியா நாட்டை சேர்ந்த இந்த கப்பல், கோர்ட்டு உத்தரவுப்படி சிறை பிடிக்கப்பட்டு நின்றதால், அதை நடுக்கடலுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், அந்த கப்பல் மட்டும் பழைய இடத்திலேயே தொடர்ந்து நின்றது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தானே புயல் தாக்குதலில் சிக்கிய இந்த சரக்கு கப்பல், நேற்று அதிகாலை மெரினா கடற்கரைக்கு அருகே ஐ.என்.எஸ். அடையார் பின்புறம் தரை தட்டிநின்றது. இதுகுறித்த தகவல், கடலோர காவல் படை அதிகாரிகளுக்கும், துறைமுக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற அதிகாரிகள், கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதில் உள்ள 14 சிப்பந்திகள் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சரக்கு கப்பல் கடந்த 22 மாதங்களாக சென்னை அருகே சிறைப்பிடிக்கப்பட்டு தத்தளித்து வருவதும், அதில் உள்ள சிப்பந்திகள் சரியான முறையில் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதும் தொடர்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்கொரியா நாட்டில் இருந்து சரக்கு ஏற்றிச் செல்வதற்காக ஓ.எஸ்.எம். அரினா என்ற சரக்கு கப்பல் சென்னை துறைமுகம் நோக்கி வந்தது. துறைமுகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில், சரக்கு ஏற்ற தயாராக காத்திருந்தது. அந்த கப்பலில் 18 சிப்பந்திகள் இருந்தனர். bஇந்த நிலையில், குத்தகை முறையில் கப்பலை வாடகைக்கு எடுத்திருந்தவருக்கும், கப்பல் உரிமையாளருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கப்பல் குத்தகைதாரர் இதுகுறித்து, கொல்கத்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

உடனடியாக, அந்த கப்பலை சிறைபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது, கப்பல் சென்னை துறைமுகம் அருகே நின்றதால், அங்கேயே சிறைப்பிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த சிப்பந்திகளும் அதிர்ச்சி அடைந்தனர். br brஅதேநேரத்தில், கப்பல் உரிமையாளரோ, கப்பலில் உள்ள சிப்பந்திகளுக்கு ஊதியம் வழங்கவும், சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யவும் சம்மதித்தார். ஆனால், முதல் 6 மாதங்கள் மட்டுமே அந்த ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது. அதன்பிறகு, அவர்களுக்கு அது நிறுத்தப்பட்டது.

இதனால், சிப்பந்திகள் கடலில் பசிப் பட்டினியுடன் தவித்து வந்தனர். அவர்களுக்கு, சென்னை துறைமுகத்தில் உள்ள ஏஜெண்டுகள் இங்கிருந்து உணவு அனுப்பி உதவி செய்தனர். இந்த நிலையில், கப்பலில் உள்ள 18 சிப்பந்திகளும் சம்பளம் வழங்காதது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

உடனடியாக, 18 சிப்பந்திகளுக்கும் சம்பளம் மற்றும் உணவு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, கப்பல் உரிமையாளர் 18 சிப்பந்திகளையும் பணிமாற்றம் செய்ததுடன், புதிதாக பர்மாவை சேர்ந்த 14 இளைஞர்களையும் சிப்பந்தியாக வேலைக்கு சேர்த்தார். அவர்களுக்கு தொடர்ந்து சம்பளமும், உணவும் வழங்கி வருகிறார்.

கடந்த 22 மாதங்களாக இந்த சரக்கு கப்பல் சென்னை துறைமுகம் அருகே கடலில் திக்குத் தெரியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்தான், தானே புயல் தாக்குதலுக்கு உள்ளாகி கரை ஒதுங்கியுள்ளது. தற்போது, இந்த சரக்கு கப்பலை, முட்டுக் கப்பல் மூலம் தள்ளி கடலுக்குள் செலுத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.">

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!