Thursday, March 14, 2013

இளநரையால் அவதிப்படுபவர்களுக்காக

இளநரையால் அவதிப்படுபவர்களுக்காக

வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும்.
இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.

இந்த குறைபாட்டை நீக்க....

• சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் குளிக்க பயன்படுத்தலாம்.

• இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவிகிதம் தவிர்க்க முடியும்.

• பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும்.

• ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கிண்ணம் தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.


செம பார்மில் இருக்கும் சூரிய பகவான்... ஆரம்பமே 99 டிகிரி!: அப்ப அக்னி நட்சத்திர நாட்களில்?!

செம பார்மில் இருக்கும் சூரிய பகவான்... ஆரம்பமே 99 டிகிரி!: அப்ப அக்னி நட்சத்திர நாட்களில்?!

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்க வேண்டிய கோடை வெயில் இப்போதே வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. மேலும் மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கள் ஜோராக நடக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை.

இந் நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. ஆகா, பரவாயில்லையே., மார்ச் மாசம் கூட மழை பெய்யுமே, வெயில் கம்மியாத்தான் இருக்கும் போல இருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, சூரிய பகவான் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 99 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 97 டிகிரியும், மதுரை, வேலூர் தஞ்சையில் 95 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.

கோடை காலத்தின் தொடக்கத்திலேயே 99 டிகிரி பதிவானதால் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் 110 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேலூரில் தான் மிக அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய பகுதியில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது நினைவுகூறத்தக்கது.

கோடை காலம் தொடங்கி விட்டதால் சர்பத் கடைகளில் கூட்டம் களை கட்டி வருகிறது. அதே போல இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றின் விற்பனையும் ஜோராக உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டிசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், சூழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, அதன் மூலக்கூறுகள், வேதிக் கட்டமைப்பு தகவல்களை கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது.

இதில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்ஃபர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்டவைகள் தேவையான அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையே என்றும், எதிர்காலத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

க்யூரியாசிட்டிக்கு முன் செவ்வாய் கிரகத்தின் இன்னொரு பகுதியில் தரையிறங்கிய மார்ஸ் எக்ஸ்பிரஸ், அங்குள்ள மிகப் பெரிய ஆற்றின் படத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். இந்த ஆறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஈரமிக்க மணற்பரப்பும் ஆற்றின் வழித்தடமும் மட்டும் அப்படியே உள்ளதைப் படம் பிடித்திருந்தது.


சீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம்

சீன ஆற்றில் இறந்த பன்றிகளின் உடல்கள் காரணமாக அச்சம்


இறந்து மிதந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியாளர்கள்
சீனாவின் ஷாங்காய் நகருக்கருகே உள்ள ஒரு ஆற்றில் ஆயிரக்கணக்கான இறந்து போன பன்றிகள் மிதந்துவந்ததை அடுத்து அந்த நதி நீரைக் குடிப்பது பற்றிய அச்சங்கள் பரவியிருக்கின்றன.

ஷாங்காய் நகர அதிகாரிகள் இந்த பன்றிகள் பிரச்சினையால் நதி நீர் மாசுபடவில்லை என்று நகரவாசிகளுக்கு உறுதியளித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் ஷாங்காய் அருகே ஓடும் ஹுவாங்பூ நதியில் சுமார் 6000 பன்றி உடல்கள் மிதந்து வந்த நிலையில், அவற்றை நகர சுத்திகரிப்புப் பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.

இந்த பன்றிகள் நதியின் மேல் பகுதியில் வசிக்கும் விவசாயிகளால் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.பன்றிகள் எதுவும் தொற்றுவியாதியால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக இறந்தது போல தெரியவில்லை என்று கூறும் அரச ஊடகங்கள், ஆனால் சில பன்றிகளின் உடல்களில் நோய் ஏற்பட்டு இறந்ததன் கூறுகள் காணப்படுவதாகக் கூறின.
இந்தப் பன்றிகள் கடுங்குளிர் காரணமாக இறந்தன என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஆற்றில் நீரின் தரம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைப் போலவே ஏறக்குறைய இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஆனால் இணையத்தில் எழுதும் சிலர், இந்த விளக்கங்கள் குறித்து அவநம்பிக்கை தெரிவித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் இந்தச் சம்பவம் குறித்து முழு விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

முகநூல் "விருப்பங்கள்" ஒருவரை அடையாளம் காட்டிவிடும்

முகநூல் "விருப்பங்கள்" ஒருவரை அடையாளம் காட்டிவிடும்


பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து, கட்டுரை, புகைப்படம் அல்லது காணொளியை விரும்புகிறார் என்றால் அதை தெரிவிப்பதற்கு லைக் என்கிற பொத்தானை அழுத்தினால் அவர் அதை விரும்புகிறார் என்று பொருள். இப்படி ஒருவர் தனது முகநூலில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆளுமையை காட்டும் அல்கோரிதம்

இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்திஎட்டாயிரம் முகநூலர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் முகநூலில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும்

உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
அடுத்ததாக, இந்த முகநூலர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள்.

உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள்.

இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற முகநூலர்களில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. அதேபோல முகநூலர்களின் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.
இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார், முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. ஒருவருக்கு திருமணமானதா இல்லையா என்பதையும், ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தனிமனித அந்தரங்கத்துக்கு ஆபத்து

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் விரும்பிய விஷயங்களில் வெளிப்படையாக பாலியல் விவரங்களை அடையாளப்படுத்தும் விவரங்கள் எவையும் இல்லை. மாறாக இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொதுவான விஷயங்களை இவர்கள் விரும்பியிருந்த விதத்தை வைத்தே இந்த அல்கோரித கணக்கீட்டின் படி இவர்களின் அடையாளங்கள் சரியாக கணிக்க முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இது விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளித்தாலும், தனிமனித அந்தரங்கத்தை பாதுகாப்பதில் இது மிகப்பெரிய சவால்களை தோற்றுவிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.
உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும்.

இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம்.
அதேசமயம், தனிமனிதரின் முகநூல் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.
இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, முகநூலில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முகநூலில் இருக்கும் பிரைவசி செட்டிங்குகள் எனப்படும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்கள் பார்க்கதபடி செய்ய முடியும் என்று கூறும் அந்தரங்க பாதுகாவலுக்கான அமைப்புக்கள், தேவைப்படுபவர்கள் அதை செய்துகொள்வது நல்லது என்றும் பரிந்துரை செய்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், முகநூலில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.

அடேங்கப்பா... 27 கோடிக்கு மார்புகளை இன்சூரன்ஸ் செய்யும் ஹாலிவுட் நடிகை!

அடேங்கப்பா... 27 கோடிக்கு மார்புகளை இன்சூரன்ஸ் செய்யும் ஹாலிவுட் நடிகை!


ஹாலிவுட்டைச் சேர்ந்த கவர்ச்சி நடிகை ஜெனீபர் லவ் ஹெவிட், தனது மார்புகளை ரூ. 27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப் போகிறாராம்.

மிகப் பெரிய மார்புகளுடன் ஹாலிவுட்டில் வலம் வருபவர் ஜெனீபர். இப்போது இந்த முன்னழகை பெரும் தொகை கொடுத்துப் பாதுகாக்கப் போகிறாராம் ஜெனீபர்.

34 வயதாகும் ஜெனீபர் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஆமாம், எனது அழகிய மார்புகளை இன்சூரன்ஸ் செய்யப் போகிறேன். ரூ.27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யும் திட்டம் உள்ளது. சிலர் குறைந்த தொகைக்கு இன்சூரன்ஸ் கேட்டார்கள். ஆனால் எனது மார்புகள் அவ்வளவு குறைந்தவை அல்ல. எனவே ரூ. 27 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்ய தீர்மானித்துள்ளேன். இதை விட குறைந்த தொகைக்கு எனது மார்புகளை என்னால் இன்சூர் செய்ய முடியாது என்றார் பெருமையுடன் தனது மார்புகளைப் பார்த்தபடி.

இதற்கு முன்பு ஜெனீபர் லோபஸ்தான் மிகப் பெரிய தொகைக்கு தனது மார்புகளை இன்சூர் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல டோலி பார்டான் என்ற இன்னொரு நடிகை தனது இரு மார்புகளையும் தலா 3 லட்சம் டாலர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வைத்துள்ளார்.

தனது சைஸுக்கேற்ற பிரா மற்றும் பாண்டீஸை ஜெனீபரே வடிவமைத்துக் கொள்கிறார் என்பது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.

புதிய போப் தேர்வு: ஆயிரம் ஆண்டுகளின் பின் ஐரோப்பியர் அல்லாத ஒருவர்!

புதிய போப் தேர்வு: ஆயிரம் ஆண்டுகளின் பின் ஐரோப்பியர் அல்லாத ஒருவர்!புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது, 76. போப் ஆண்டவர் பிரான்சிஸ்-1 என்று அழைக்கப்படுவார்.

புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க வாடிகனில் கூடிய கத்தோலிக்க மத கார்டினல்கள்களால், முதல் 3 சுற்று வாக்குப் பதிவில் புதிய போப் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக வாக்கெடுப்பு நடந்த சிஸ்டின் தேவாலய புகை போக்கியில் கரும்புகை வெளியானது.

கரும்புகை வெளியேறினால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்று அர்த்தம்.

நேற்று நடந்த 4-வது சுற்று வாக்குப்பதிவில் புதிய போப் ஆண்டவராக ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். ஐரோப்பாவைச் சேராத ஒரு நபர் போப் ஆண்டவராக கிட்டத்தட்ட 1,300 ஆண்டுகள் கழித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் அர்ஜென்டினா தலைநகரான பொனஸ் ஏரஸ் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப்பாக இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டில் கார்டினல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை தெரியப்படுத்த புகைபோக்கில் வெண்புகை வெளியேற்றப்பட்டது.