Wednesday, October 31, 2012

சூடானில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேலை தாக்க முடிவா?

சூடானில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேலை தாக்க முடிவா?





சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் சமீபத்தில் இரண்டு தடவை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்வதாக கருதி, இந்த தொழிற்சாலை மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக சூடான் குற்றம்சாட்டியது. இதற்கு இஸ்ரேல் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே சூடானின் நட்பு நாடான ஈரான் 2 போர் கப்பல்களை அனுப்பி உள்ளதாகவும், இவைகள் சூடானின் செங்கடல் பகுதியில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பகுதியில் தீவிரவாத செயல், கடற்கொள்ளையர்களை ஒடுக்கவே போர் கப்பல்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், 2 நாட்டு தளபதிகளும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இஸ்ரேலை மிரட்டவே ஈரான்- சூடான் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!