Thursday, July 18, 2013

ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் புது ‘எடைக்குறைப்புத்’ திட்டம்

ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் புது ‘எடைக்குறைப்புத்’ திட்டம் 


உடல் எடையில் ஒரு கிலோவைக் குறைத்தால், ஒரு கிராம் தங்கம் பரிசளிக்க இருப்பதாக கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது துபாய் அரசு. இன்று மனிதனுக்கு பெரும் எதிரியாக இருப்பது உடல் பருமன் தான்.

அதன் காரணமாகவே பலருக்கு இளமையிலேயே பல நோய்கள் உண்டாகி மரணம் கூட நேரிடுகிறது. துபாயில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் துபாய் அரசு உடல் எடையைக் குறைத்தால் தங்கம் என அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

புதிய சுகாதார திட்டம்... 

துபாயில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டம் தான், இந்த ஒரு கிலோ எடையைக் குறைத்தால் ஒரு கிராம் தங்கக் காசு திட்டம். இது, உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டமாம்.

முன்பதிவு அவசியம்... 

இந்தத் திட்டத்தில் வெற்றி பெற விரும்புபவர்கள் முதலில் தற்போதைய தங்களது எடையை வரும் வெள்ளிக்குள் பரிசோதித்து பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்.

ஒரு மாதகால அவகாசம்... 

அடுத்து வரும், ஒருமாத காலத்திற்குள் குறைந்தப்பட்சமாக 2 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட உடல் எடையை குறைத்துக் காட்டுபவர்களுக்கு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தங்கம் பரிசாக வழங்கப்படும் எனவும், இதில் பங்கு பெற உச்சவரம்பு ஏதுமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.

உடற்பயிற்சியில் ஆர்வம்... 

இதன் மூலம், மக்கள் துரித உணவகங்களில் அதிகம் சாப்பிடுவதை கைவிட்டு, உடற் பயிற்சியின் மீது ஆர்வம் காட்டுவர் என துபாய் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


1,21,653 சஹாரா ஊழியர்கள் தேசிய கீதம் பாடி கின்னஸ் சாதனை: பாகிஸ்தானின் சாதனை முறியடிப்பு

1,21,653 சஹாரா ஊழியர்கள் தேசிய கீதம் பாடி கின்னஸ் சாதனை: பாகிஸ்தானின் சாதனை முறியடிப்பு
1,21,653 இந்திய ஊழியர்கள் இணைந்து தேசியகீதம் பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்னர் 42,813 பேர் ஒன்று கூடி தேசீய கீதம் பாடப்பட்ட பாகிஸ்தான் சாதனை இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராய் தலைமையில், உத்திரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் முன்தினம் சகாரா நிறுவனத்தாரின் சாதனை முயற்சியாக 1,21,653 ஊழியர்கள் இணைந்து இந்தியாவின் தேசியகீதத்தை ஒருங்கிணைந்து பாடினார்கள்.

நமது தேசிய கீதத்தை உருவாக்கிய ரபிந்தரநாத் தாகூரின், 152ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நோக்கில் நடைபெற்றது இந்த முயற்சி. இதுவரை 42,813 பாகிஸ்தானியர்கள் சேர்ந்து தங்கள் நாட்டின் தேசியகீதத்தை இசைத்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.

தற்போது நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனைக் குழு மேற்பார்வையிட்டு கின்னஸில் இடம்பெற சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, இனி இந்த நிகழ்ச்சியே சாதனை நிகழ்ச்சியாக அறிவிக்கப் பெறும்.

இந்த சாதனை குறித்து சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதோ ராயிடம் கேட்டபோது, 'தேசிய கீதத்தை ஒருங்கிணைந்து பாடுவதில் பாகிஸ்தான் நாடு முன்னணியில் இருக்கிறது என்பதனை அறிய வந்தபோது, நமது நாட்டினர் இந்த சாதனை முயற்சியில் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்.

மேலும், இதற்காக ஒரு குழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியபோது எங்களின் சாதனை நிகழ்ச்சி எந்தத் தடையுமில்லாமல் நிறைவேற்றப்பட்டது' என அவர் கூறினார்.Wednesday, July 17, 2013

ஓடியாடி வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் வராது... ஆய்வில் தகவல்

ஓடியாடி வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் வராது... ஆய்வில் தகவல் 


ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய், குறிப்பாக பெண்களை அச்சுறுத்தும் மார்பகப்புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வீட்டு வேலைகளை செய்வதன் மூலம் எந்த பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியத்தை பெற்றுவிடலாம்

வாரத்தில் ஐந்து முறை வீதம், 30 நிமிடங்களுக்கு பிஸிக்கல் ஆக்டிவிட்டி மூலம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். ஒரே முறையில் 10 நிமிடங்கள் நீங்கள் அதைச் செய்யலாம். உங்களுடைய தினசரி அட்டவணையில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளவும்.

மார்பகப்புற்றுநோய் வராது 

வீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.

அதிக வேலை ஆரோக்கியம் 

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது.

அப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது.

சுறுசுறுப்பாக இருங்களேன் 

எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம். எனவே குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பது, குப்பை வாருவது, வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்வது என வாரத்தின் பெரும்பான்மையான நாட்களில் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும்.

மாடிப்படி ஏறுங்களேன் 

கொஞ்சம்' வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம். லிப்ட் உபயோகிப்பதற்குப் பதிலாக மாடிப்படிகளை உபயோகிக்கலாம். பிரயாணம் செய்யும்போது வீட்டு வாசலில் இறங்குவதற்குப் பதிலாக ஒரு பஸ் நிறுத்தம் முன்பதாக இறங்கி வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் நடந்து போகலாம். செல்லப்பிராணியோடு அதிகாலையில் வாக்கிங் போகலாம், இதுபோன்


100 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ணாடிகள்’ மூலம் சூரியஒளியை தரிசிக்கும் ‘ருஜூகான்’மக்கள்

100 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ணாடிகள்’ மூலம் சூரியஒளியை தரிசிக்கும் ‘ருஜூகான்’மக்கள் 


கிட்டத்தட்ட சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நார்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவி கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெற இருக்கிறது. நார்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் நகரம்... 

1907-ம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழிற்நகரம் உருவானது.


வெயிலை வாங்க.... 

குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.


மாற்றுத் தீர்வு... 

ருஜூகான் நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து கடந்த ஐந்து வருடங்களாகவே திட்டமிடப் பட்டு வந்தநிலையில், தற்போது சரியான ஒரு மாற்றுத் தீர்வு கண்டறியப் பட்டுள்ளது.


கண்ணாடிகள் மூலம்... 

அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது.


இருந்த இடத்திலேயே... 

இத்திட்டம் கடந்த 1-ந்தேதி முதல் செயல் படுத்தப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தே தற்போது சூரிய ஒளியைப் பெறுகின்றனர்.


இத்தாலி விண்வெளி வீரரின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு...: பாதியில் நின்ற நடைப்பயணம்

இத்தாலி விண்வெளி வீரரின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு...: பாதியில் நின்ற நடைப்பயணம் 
நாசா விண்வெளி மையத்திலிருந்து சமீபத்தில், ஆறு விண்வெளிவீரர்களை விண்ணிற்கு அனுப்பியது. விண்வெளியில் நடத்தப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணியுடன், கேபிள் இணைப்பு போன்ற பணியையும் செய்வதற்காக அவர்கள் ஆறு மணி நேரம் விண்வெளியில் இருப்பதாக திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், வேலையை ஆரம்பித்த ஒருமணி நேரத்திற்குள்ளாக இத்தாலி வீரரின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு ஆரம்பித்ததால் அவரது நடைப்பயணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

முதல் இத்தாலி வீரர்... 

நாசா அனுப்பிய ஆறு விண்வெளி வீரர்களில் லுகா பர்மிடானோ என்ற இத்தாலி வீரரும் ஒருவர். இவர் தான விண்ணில் நடக்க இருக்கும் முதல் இத்தாலியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இவர் நேற்று, கிறிஸ்டோபர் காசிடி என்ற மற்றொரு வீரருடன் இணைந்து லுகா விண்வெளியில் நடக்க ஆரம்பித்தார்.

வியர்வையா இது... 

நடக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பர்மிடானோ தனது பின்னந்தலையில் நிறைய தண்ணீர் இருப்பதுபோல் உணர்ந்துள்ளார். முதலில் அதனை வியர்வை என நினைத்த லுகா, பின்னர் நீரின் அளவு அதிகரித்ததால் சந்தேகமடைந்துள்ளார்.


தண்ணீர் பாக்கெட் லீக்... 

தனது சந்தேகத்தினை அவர் தனது சக வீரரிடம் கூறியபோது, தண்ணீர் அருந்துவதற்காக உள்ள தண்ணீர்ப் பையில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என அவர் சமாதானாம் கூறியுள்ளார்.

கண்ணீல் நீர்... 

நேரமாகமாக, தண்ணீர் அவரது கண்ணில் நிறைய ஆரம்பித்துள்ளது. பின்னர் படிப்படியாக நீர் காது, மூக்கு என நிறைய ஆரம்பித்ததனால், நாசாவின் அறிவிப்புகளைக் கூட அவரால் கேட்க இயலாத நிலை உண்டானது.


உலர வைக்கப்பட்டது... 

உடனடியாக விண்வெளி மையத்திற்கு திரும்பிய லுகாவின் ஹெல்மெட் கழட்டப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் ஈரமான லுகாவின் தலை துவட்டி உலர வைக்கப் பட்டது. பின்னர் உற்சாகத்துடன் லுகா கையசைக்கும் காட்சியை நாசா தொலைக்காட்சியில் பார்த்த பின்னரே அனைவருக்கும் நிம்மதி பெரு மூச்சு வந்தது.

ஏற்கனவே, ஒருமுறை... 

ஏற்கனவே, இதேபோன்று 2004ம் ஆண்டு ஏற்பட்ட நீர்க்கசிவால் 14 நிமிடங்களிலேயே அவர்கள் தங்கள் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


நடந்தது என்ன? 

லுகாவின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு ஏற்படக் காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று இவர்களின் விண்வெளி நடை ஒரு மணி 32 நிமிடம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.


உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் திறப்பு

உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் திறப்பு

பிரமாண்ட முறையில் விரிவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் திறக்கப்பட்டுள்ளது.
உலக வணிக அமைப்பின் இயக்குனர் பாஸ்கல் லாமி(Bascal lamy), சுவிசின் பொருளாதார கூட்டாட்சி அமைச்சர் சார்லஸ்(Charles) மற்றும் ஜெனிவா மண்டல அரச தலைவர் ஆகியோர் இக்கட்டிடத்தினை திறந்து வைத்தனர்.

இக்கட்டிடமானது 130 மில்லியன் பிராங்க் செலவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் தலைமையகத்தின் தளமானது 20,000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் நவீனமயமான இக்கட்டிடம் கட்டுவதற்காக சுவிஸ் அரசாங்கத்திடமிருந்து 70 மில்லியன் பிராங்க் வட்டியில்லாமலும் 60 மில்லியன் பிராங்க் வட்டியோடும் வாங்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தை கட்டுவதற்கு பல வகையான பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருந்தது. ஏனெனில் இந்த இடமானது பொது பூங்கா இருந்த இடம் என்பதால் இத்திட்டத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல பிரச்சாரங்கள் மற்றும் தடைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி 70 நாடுகளைச் சார்ந்த நபர்களும், ஜெனிவாவில் 629 ஊழியர்களும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 16, 2013

ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்!!!

ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்!!!ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், காதலையும் கொட்டிக் கொடுக்கும் ஆண்களுக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த மற்றொரு பக்கமும் இருக்கிறது. காதல் நிறைந்த அவர்களின் ஒரு பக்கத்திற்காக அவர்களை விரும்பலாம் அல்லது மூர்க்கத்தனமான மற்றொரு பக்கத்திற்காக அவர்களை வெறுக்கலாம். ஆனால் எந்தப் பெண்ணாலும் அவர்களது வாழ்க்கையில் ஆண்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.

இப்படி காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் கொடுமைகள் புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய 10 கொடிய விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இதில் கொடுமை என்னவென்றால் இந்த செயல்கள் எல்லாம் தவறுகளே அல்ல, மிக இயல்பானவை தான் என்று ஆண்கள் நினைப்பதுதான்!! சரி, அந்த கொடிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

மிகப்பெரும் தன்முனைப்புடன் செயல்படுதல் 

தெரியாத இடத்திற்கு போக வேண்டியிருந்தால், ஆண்கள் பெரும்பாலும் யாரிடமும் வழி கேட்க மாட்டார்கள். எவ்வளவு எரிபொருள், நேரம் வீணானாலும் தாங்களே கண்டுபிடிக்க வேண்டுமென அலைந்து கொண்டே இருப்பார்கள். ஆண்களின் தன்முனைப்பை (ego) மையப்படுத்திய செயல்பாடுகளுக்கு இது ஒன்றே மிகப்பெரிய உதாரணம். இத்தகைய தன்முனைப்பை ஆண்கள் நிச்சயம் காதலியிடம் கூட காண்பிப்பார்கள்.

குறிப்பிட்ட விசயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளல் 

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் பெயர்களையும், அவர்களின் சாதனைகளையும் அட்சரம் பிசகாமல் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தவர்கள், நெருக்கமானவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் ஆண்டு விழாக்களை நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் மறக்கும் ஒரு வித்தியாசமான நோயால் அவர்கள் மூளைகள் அவஸ்தைப்படுகின்றன.


கடைக்கண்ணால் பார்த்தல் (குறிப்பாக மார்பகங்களை) 

ஆண்கள் அனைவருமே பெண்களின் மார்புகளை கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, அவர்கள் 'ஜொள்' வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை!

வெளிப்படையாகவே பொறாமைப்படுதல் 

அநேகமாக ஆண்கள், இந்த குணத்தை தங்கள் தாயிடமிருந்து தான் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள்.


பாசாங்கில் பெருமை கொள்ளுதல் 

மிகவும் சுதந்திரமான மற்றுட்ம மிகவும் நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், தங்கள் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது!

அளவுக்கு அதிகமான அக்கறை காட்டுதல் 

வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, "எங்கே இருக்கிறாய்?" என நச்சரித்துக் கொண்டே இருக்கும் தொலைபேசி அழைப்புகளை தான், அளவுக்கு அதிகமான அக்கறை என்கிறோம். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி.

எல்லாம் வல்ல ஆணாக வலம் வருதல் 

உதவிகள் செய்ய முடிந்த ஆணாக இருப்பது நல்லது தான். அதற்காக "இந்த உலகில் என்னால் ஆகாத காரியமே கிடையாது" என்ற ரீதியில் அலைவது நன்மையை விட தீமையையே உருவாக்கும். குறிப்பாக தன்னால் குழாய்ப் பணியாளர், மின்னாளுனர், பொருளாதார வல்லுனர், ஆசாரி போன்றோரின் வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என நினைக்கும் போது கண்டிப்பாக தீமை தான்! ஏனெனில்

உணர்வுகளை உதாசீனப்படுத்துதல் 

பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள். பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், ஆண்கள் வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்.


நண்பனை வழிபடுதல் 

திருமணத்திற்குப் பிறகு, எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதில் ஆண்களுக்கு ஏற்படும் குழப்பம், பெண்களை எரிச்சலடையச் செய்கிறது. ஏனெனில் தன்னுடன் தனியாக நேரம் செலவழிக்க விரும்பும் காதலியை நொந்து கொள்ளும் ஆண்கள், ரம்மியமான காதல் பொழுதுகளில் கூட நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு கூத்தடிப்பது நியாயம் தானா என்பதை ஆண்கள் யோசிக்க வேண்டும்.

உடலுறுவு சமயங்களில் காமப்பிசாசாக நடத்தல் 

உடலுறவின் போது ஆர்வத்துடன் ஒத்துழைக்கும் ஆணை பெண்களுக்குப் பிடிக்குமென்றாலும், பாலுணர்வைத் தூண்டும் படங்களைப் பார்த்து, அதில் காண்பிக்கப்படும் உடலுறவுக் காட்சிகளைப் போன்றே நிஜத்திலும் வேண்டும் என ஆண்கள் விரும்பும் போது, அது பெண்களுக்கு மிகுந்த சங்கடத்தையே தருகிறது. பெண்களும் விரும்பும் வண்ணம் உடலுறவு கொள்ளாமல், அவர்களை நிர்பந்தத்திற்கு உட்படுத்தி தோற்ற பின், ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை.


பால் புரட்சியால் பரிதாப நிலை காளைகள் அழிகின்றன பசுக்கள் பெருகுகின்றன

பால் புரட்சியால் பரிதாப நிலை காளைகள் அழிகின்றன பசுக்கள் பெருகுகின்றன


காங்கயம் காளை


தமிழகத்தில் விவசாயப் பணிகளுக்கு காளைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏர் உழவு, பரப்பு அடித்தல், கிணற்று நீர் இறைப்பு, வண்டி இழுத்தல் உள்ளிட்ட விவசாயத்தின் முக்கியமான பணிகளுக்கு காளைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. விவசாயிகளின் வாழ்வில் காளைகள் முக்கிய அம்சமாக இருந்தது. 

காலப் போக்கில் விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளுக்கும் நவீன ரக இயந்திரங்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. உழவு பணிக்காக அரிதாகவே காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. எந்த வேலையும் இல்லாததால் காளைகள் ஒதுக்கப்பட்ட இனமாக மாறிவிட்டன. 

மாநில அளவில் 1.11 கோடி பசுக்களும், 15 லட்சம் காளைகளும் இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், பசு மாட்டிற்கு இணையாக காளைகள் இருந்தன. தற்போது மாடுகளுடன் ஒப்பிடும் போது காளைகளின் எண்ணிக்கை 5 சதவீதம் கூடம் இல்லாமல் போய் விட்டது.  ஆயுசு முடியும் நிலையில் உள்ள காளைகள் அடிமாடாக இறைச்சி கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது அதிகமாக நடக்கிறது. சில உள்ளாட்சி அமைப்புகளில் காளை மாடுகள் குப்பை வண்டி இழுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் காளைகளை காக்க, கால்நடை பராமரிப்பு துறையினரும், கால்நடை பல்கலைக் கழகத்தினரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

மாறாக பால் உற்பத்தியை மட்டுமே பிரதானமாக கொண்டு கலப்பின காளைகளை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. தற்போது மாநிலத்தில் ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரிசியன், ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் கலப்பினம், சிந்தி, காங்கயம், உம்ளாச்சேரி, பர்கூர், புலியகுளம் காளைகள் இருக்கின்றன. 

கோவை, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கருமாற்று தொழில் நுட்பம் தீவிரமாக நடக்கிறது. இதுவரை உயர்ரக காளையில் இருந்து 241 தரமான கருக்கள் பெறப்பட்டுள்ளது. 175 பசுக்களில் கருமாற்றம் செய்து வீரியம் மிக்க, அதிக பால் தரும் பசுக்களை பெறும் முயற்சி நடக்கிறது. ஈச்சங்கோட்டை, நீலகிரி, ஒசூரில் அயலின கால்நடை பண்ணை இருக்கிறது. 117 வீரிய ரக காளைகளின் மூலமாக இங்கே கடந்த ஆண்டில் 50.90 லட்சம் உறைவிந்து உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டில் 48.82 லட்சம் உறை விந்து உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை சுமார் 10 லட்சம் உறை விந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உறைவிந்து குப்பிகள் திரவ நைட்ரஜன் மூலமாக கோவை, ஈரோடு, சேலம் உட்பட 20 இடங்களில் சேமிக்கப்பட்டு வருகிறது. உறை விந்து உற்பத்தியை அதிகரிக்க நடப்பாண்டில் 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாநில அளவில் 3,429 செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் இருக்கின்றன. இங்கே உறைவிந்து மூலமாக சினை உருவாக்கும் பணி தீவிரமாக நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் சுமார் 30 லட்சம் பசுமாடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. 

தமிழக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாடுகளுடன் காளைகளை இணை சேர விடும் காலம் மாறி விட்டது. தொற்று நோய் பரவலை தடுக்கவும், வீரிய ரக கன்றுகளை பெறவும் சினை ஊசி திட்டம் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. காளை கன்று கேட்பவர்கள் அரிதாக இருக்கிறார்கள். பசு மாடுகள் மூலமாக வருவாய் கிடைக்கிறது. காளைகள் உழவு பணிக்கு மட்டுமே உதவுகிறது. எனவே விவசாயிகள் காளையை தவிர்த்து வருகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டில் ஒரு நபருக்கு தினமும் 231 மி.லி பால் என்ற அளவில் உற்பத்தி இருந்தது. 2012ம் ஆண்டில் ஒரு நபருக்கு தேவையான பால் 265 மி.லி என்ற அளவில் உயர்ந்தது. நடப்பாண்டில் மேலும் 30 மி.லி அளவிற்கு பால் உற்பத்தி அதிகரிக்கும்,‘‘ என்றார்.

அழிவின் விளிம்பில் காங்கயம் காளைகள்: காங்கயம் காளைகள் கம்பீரத்தின் அடையாளமாக மதிக்கப்படுகிறது. காட்டெருமையை வீழ்த்தும் திறன் உள்ளதாக காங்கயம் காளைகள் கருதப்படுகிறது. இந்த காளைகள் மாநில அளவில் சில ஆயிரம் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. முரட்டு திமிலுடன் வலம் வரும் இந்த காளைகளை பராமரிப்பது சவாலானது. தரமான உணவு இருந்தால் மட்டுமே இந்த காளைகளை நன்றாக வளர்க்க முடியும். சீறி பாய்வதில் வல்லமை கொண்ட காங்கயம் காளைகள் ஜல்லிகட்டுகளும், ரேக்ளா ரேஸ்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 

பாரம்பரிய பெருமை மிக்க காங்கயம் இனத்தை பெருக்க சுமார் 5 லட்சம் உறை விந்து குப்பிகள் தயாராக இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டில் ஆயிரத்திற்கும் குறைவான விவசாயிகளே காங்கயம் காளைக்கான சினை ஊசி போட முன் வந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் காங்கயம் இனம் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.

12 லிட்டர் பால் கறக்கும்...

கடந்த காலங்களில் ஜெர்சி ரக பசுக்கள் மூலமாக அதிகளவு பால் கிடைத்தது. ஒரு ஜெர்சி ரக பசு, தினமும் 30 முதல் 35 கிலோ தீவனம் சாப்பிட்டு 7 முதல் 9 லிட்டர் பால் கொடுத்து வந்தது. ஆனால், ஹோல்ஸ்டீன் பிரிசியன் ரக பசுக்கள் தினமும் இதே அளவு தீவனம் தின்று 11 முதல் 12 லிட்டர் பால் கறக்கிறது. இதையறிந்த பால் உற்பத்தியாளர்கள், ஹோல்ஸ்டீன் பிரிசியன் ரக கன்றுகளை உருவாக்கும் சினை ஊசி கேட்டு கருவூட்டல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். 

மாநில அளவில் இந்த இன மாடுகள் பால் உற்பத்திக்காக அதிகரித்து வருகிறது. ஒரே இனம் மிகவும் அதிகமானால் மரபியல் ரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே சதவீத அடிப்படையில் ஜெர்சி, சிந்தி, உம்பளாச்சேரி போன்ற பிற ரக கன்றுகளை உருவாக்கும் பணி நடக்கிறது. ஆண்டுதோறும் காளைகளின் எண்ணிக்கை 2 முதல் 3 சதவீதம் வரை குறையும் வாய்ப்புள்ளது. இனப்பெருக்கத்திற்காக மட்டுமே காளைகளை பயன்படுத்தும் நிலை உருவாகி விட்டது. 

மனுஷங்கதான் பழசை சீக்கிரமா மறந்துடுவாங்க... யானைங்க அப்படி இல்லையாம்!

மனுஷங்கதான் பழசை சீக்கிரமா மறந்துடுவாங்க... யானைங்க அப்படி இல்லையாம்!
பழைய நண்பர்களை மறக்காமல் அப்படியே நினைவு வைத்திருப்பதில் யானைகள்தான் பெஸ்ட்டாம். ஒரு ஆய்வு சொல்கிறது. நண்பர்களை மறப்பது இப்போதெல்லாம் பேஷனாகி விட்டது. நமக்காக அவர்கள் செய்த விஷயங்களை மறப்பது ரொம்பச் சுலபமாகி விட்டது. இந்த நிலையில் யானைகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஒரு ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, யானைகளின் குணாதிசயம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

மறக்காத நினைவுகள் 

யானைகளைப் பொறுத்தவரை அதன் மனதில் ஒரு விஷயம் பதிந்து விட்டால் சாகும் வரைஅதை மறக்காதாம். குறிப்பாக பழகிய பழக்கத்தை, நண்பர்களை அது மறக்கவே மறக்காதாம்.

பழகுவதில் விருப்பம் 

மனிதர்களைப் போலவே யானைகளும் கூட நட்பை விரும்புகின்றனவாம். நிறைய யானைகளுடன் பழக வேண்டும் என்பதே ஒவ்வொரு யானையின் மன நிலையாகவும் இருக்கிறதாம்.

ஹாய் ஹாய்... 

தான் பழகிய யானையை எங்காவது பார்த்து விட்டால் உடனே அருகில் ஓடிப் போய் நட்பு பாராட்டத் தவறாதாம் யானைகள். பழகிய பழக்கத்தை மறக்கவும் செய்யாதாம்.

கூட்டம் கூட்டமாக 

யானைகள் எப்போதுமே சிறு சிறு கூட்டமாகத்தான் இருக்கும். யானைகளுக்குத் தனிமை பிடிக்காதாம். குறிப்பாக பெண் யானைகளுடன் இருப்பதையே ஆண் யானைகள் அதிகம் விரும்புமாம்.

வயசாயிட்டா தனியாப் போய்டும் 

அதேசமயம் வயதான யானைகள் தனிமையை அதிகம் விரும்புமாம். அவை தனித்தே இருக்கவும் விரும்புமாம்.

உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் 

பெண் யானைகளைப் பொறுத்தவரை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை விட நண்பர்களுக்குத்தான் அதிக மதிப்பு கொடுக்கின்றனவாம். எப்போதும் நண்பர்கள், உறவினர்கள் புடை சூழ இருக்க வேண்டும் என்றே அவை விரும்புகின்றனவாம்.

வாசனையை வைத்தே 

தனக்குப் பழக்கமான யானை தூரத்தில் இருந்தாலும் கூட வாசனையை வைத்தே கண்டுபிடித்து அங்கு ஓடி விடுமாம் யானைகள்.

100 யானைகளிடம் ஆய்வு 

இந்த ஆய்வுக்காக இலங்கையில் உள்ள உடா தேசிய பூங்காவில் உள்ள 100 பெண் ஆசிய யானைகளிடம் சோதனை நடத்தினர். 20 மாதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பரவாயில்லையே.. பழசை மறக்காமல் இருப்பதில் நம்மளை விட யானைங்க ரொம்ப தேவலாம் போல!


நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்
நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹப்பளி தொலைநோக்கி மூலம் இந்த புதிய நிலா குறித்த இருப்பு தெரிய வந்துள்ளது. நெப்ட்யூனைச் சுற்றி இது வலம் வந்து கொண்டுள்ளதாம். இது நெப்ட்யூனின் 14வது நிலாவாகும்.

நீல பச்சை கிரகம் 

நெப்ட்யூன் நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கிரகம் ஆகும். இந்த கிரகத்திற்கு இதுவரை 13 நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஹப்பிள் கண்டுபிடித்த 14வது நிலா 

இந்த நிலையில் நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு நிலவைக் கண்டுபிடித்துள்ளனர் ஹப்பிள் துணையுடன். இது அக்கிரகத்தின் 14வது நிலாவாகும்.


நிலாவுக்குப் பெயர் வச்சாச்சு 

இந்த நிலாவுக்கு S/2004 N 1 என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலவின் சுற்றளவு 19 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நெப்ட்யூனின் நிலவுகளிலேயே இதுதான் சிறியதாம்.மங்கலாத் தெரியுதே... 

இந்த நிலவானது சிறிதாகமட்டுமல்லாமல், மங்கலாகவும், பிரகாசம் இன்றியும் காணப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தை விட 100 மடங்கு டிம்மாகவும் இது காணப்படுகிறது.


ஜூலை 1ம் தேதி கண்டுபிடித்தார்கள் 

கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிலாவைக் கண்டுபிடித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/16/world-new-neptune-moon-discovered-179241.html#slide244530

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... சீக்கிரம் அத மாத்திக்கோங்க...

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... சீக்கிரம் அத மாத்திக்கோங்க... 
அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம். அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். போதிய தூக்கம் இல்லையென்றால் ஒருவருக்கு பல வகையில் உடல்நல கோளாறுகள் ஏற்படும். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்த பல வகையான சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பாட்டி வைத்தியங்களை கையாளுகின்றனர்.

ஆனால் இதற்கு எதிர்மறையாக நடந்தால் என்ன செய்வது? என்ன புரியவில்லையா? அதிக நேரம் தூங்குவதால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டால், சொகுசாக, சந்தோஷமாக இருக்கும் என்று பலர் சொல்வார்கள். ஏன் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என்றும் கேட்கலாம்? கண்டிப்பாக கேட்க வேண்டும். ஏனெனில், நீண்ட நேரம் தூங்குவதால் கண்டிப்பாக பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் சில பிரச்சனைகளை கீழே பார்க்கலாம். அதுமட்டுமின்றி, அத்தகைய பழக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகளையும் பார்ப்போம்.

சர்க்கரை நோய் 

தினமும் இரவு அதிக நேரம் தூங்குவதால் அல்லது போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் பருமன் 

அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்களில், ஆறு வருட காலத்தில் 21% மக்களின் எடை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

தலைவலி 

அடிக்கடி தலைவலி வரும் நபர்கள், வார இறுதி அல்லது விடுமுறைகளில் அதிக நேரம் தூங்க முற்பட்டால், அதனால் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செரோடோனினும் அடங்கும்.

முதுகு வலி 

முன்பெல்லாம் முதுகு வலி என்று மருத்துவர்களிடம் சென்றால், படுக்கையில் நேராக படுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால் அதையும் தாண்டி அதிகமாக தூங்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் முதுகு வலி உள்ளவர்களை அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மன அழுத்தம் 

அதிகமாக தூங்குவதை விட, தூக்கமின்மை தான் மன அழுத்தத்துடன் அதிக தொடர்பில் இருந்தாலும், மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15% நபர்கள் அதிகமாக தூங்குகிறார்கள். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே எந்த ஒரு நோய்க்கும் போதிய தூக்கம் தான் நிவாரணியாக விளங்கும்.

இதய நோய் 

செவிலியர் ஆரோக்கிய ஆய்வு, கிட்டத்தட்ட 72,000 பெண்களை ஆய்வில் பயன்படுத்தியது. அந்த ஆய்வின் படி 38% பெண்கள் தினமும் 11 மணி நேரம் தூங்குகிறார்கள் என்றும், தினமும் 8 மணி நேரம் தூங்கும் பெண்களை வி,ட இவர்களுக்கு தான் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறுகிறது.

மரணம் 

தினமும் இரவு ஒன்பது அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.

வேகமாக விழித்திட முடிவு செய்யவும் 

அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம். இதை விட சுலபமாக இதை சொல்ல முடியாது. பல நேரங்களில் அதிக நேரம் தூங்குவது என்பது தப்பிக்கும் வழிமுறையாகும். ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.

அதிக நேரம் தூங்குவதை தடுப்பதில் ஆர்வமூட்டவும் 

இந்த ஆர்வத்தை வரவழைக்க பல வழிகள் இருந்தாலும், சுலபமான ஒரு வழியை பார்க்கலாமா... 1. ஏன் அதிக நேரம் தூங்க கூடாது என்பதற்கு ஆணித்தனமான ஒரு காரணத்தை முடிவு செய்யுங்கள். அதில் தெளிவாக இருங்கள். 2. அதனை உறுதியான மற்றும் நேர்மறையான கூற்றாக எழுத வேண்டும். அப்படி எழுதும் போது நிகழ்கால நடையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு, "நான் தினமும் உற்சாகத்துடன் காலையில் 7 மணிக்கு எழுந்திருப்பதால், என்னை நினைத்து மிகவும் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்."

தூக்கத்தை பற்றிய அபிப்பிராயத்தை மாற்றவும் 

தூக்கம் என்பது வாழ்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓட வேண்டும். முக்கியமாக சுகத்திற்காக தான் தூக்கம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.

ஒரே நேரத்தை எப்போதும் கடைபிடிக்கவும் 

தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், விழிக்கவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினாலும், குறைந்தது ஒரே நேரத்தில் எழுந்திருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.

நன்றாக தூங்கவும் 

நல்ல தரமுள்ள ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பல எளிய முறைகள் உள்ளன. அப்படி தூங்குவதால், உடலுக்கு தேவையான ஆற்றலானது கிடைத்து விடும். அதற்கு குறைந்தது நாம் செய்ய வேண்டியவை: - ஒரே மாதிரியான தூக்க ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும். - மதிய நேரத்தில் காஃப்பைன் உள்ள உணவை தவிர்க்கவும். - இரவு நேரத்தில் புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும். - கண்களை சூரிய ஒளியில் குறைந்தது 2 மணி நேரமாவது வெளிக்காட்ட வேண்டும்.

படிப்படியாக அதிக தூக்கத்தை குறைக்கவும் 

ஒரு வாரத்தில் 30-60 நிமிட தூக்கத்தை குறைக்க வேண்டும். முதலில் அது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இந்த புதிய தூக்க ஒழுங்கு முறையுடன் ஒத்துப்போவதற்கு 7-10 நாட்கள் ஆகும். முக்கியமாக இதில் குறிப்பிட்ட அளவையே கடைபிடிக்க வேண்டும். அதிகமாக தூக்கத்தை தொலைக்க வேண்டாம். தினமும் இரவு 6-8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதுப்போக தினமும் 20-40 நிமிடங்கள் வரை குட்டி தூக்கமும் போடலாம்.


Monday, July 15, 2013

ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற என்னவெல்லாம் செய்கிறாங்க பாருங்க!

ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற என்னவெல்லாம் செய்கிறாங்க பாருங்க! 


ஃபேஸ்புக்கில் போடும் புகைப்படத்தில் அழகாகத் தோன்றுவதற்காக பலர் அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை என்று பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர். ஃபேஸ்புக் மோகம் இளம் வயதினரை மட்டுமல்ல நடுத்தர மற்றும் வயதானவர்களையும் விடவில்லை.

ஃபேஸ்புக்கில் தங்கள் பக்கத்தில் ப்ரொபைல் போட்டோ போடுகின்றனர். இந்த ஃப்ரொபைல் போட்டோவில் அழகாகத் தோன்ற மக்கள் என்ன கூத்தெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியுமா? ப்ரொபைல் போட்டோவில் பளிச்சென்று தெரிய பலர் அறுவை சிகிச்சை வரை செல்கிறார்களாம்.

அழகு சிகிச்சை 

இந்தியாவில் 20 மற்றும் 30களில் இருக்கும் நபர்கள் ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற லேசர் சிகிச்சை, நாடியை அழகாக்கும் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி என்று பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த பைத்தியம் அதிகரிக்கும் 

ஃபேஸ்புக்கிற்காக அழகு சிகிச்சை செய்துகொள்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவர் அனிப் திர் தெரிவித்துள்ளார். ஆண்கள் ரூ.1.20 லட்சம் செலவு செய்து நாடியை அழகாக்கும் சிகிச்சையை அதிகளவில் பெறுகிறார்களாம்.

பெண் தேடும் படலம் 

ஃபேஸ்புக்கில் திருமணத்திற்கு பெண் தேடும் ஜஸ்மீத் சிங் என்பவர் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக லிப்போசக்ஷன் செய்யப் போகிறாராம். ஒல்லியாக இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தார்களாம்.

ஒரு போட்டோவுக்கு இத்தனை அழும்பா? 

ஃபேஸ்புக்கில் ஒரு போட்டோ போட இவ்வளவு பணம் செலவு செய்து அழகு சிகிச்சை பெறத் தான் வேண்டுமா?


கூடங்குளம் அணுமின் நிலையம் நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியது

கூடங்குளம் அணுமின் நிலையம் நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியது 
கூடங்குளம் அணுமின் நிலையம் நேற்று நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியது. விரைவில் அணு மின்சாரம் உற்பத்தியாகவுள்ளது.

இதை இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஆர். சின்ஹா அறிவித்துள்ளார். கூடங்குளத்தில் அணு உலையை செயல்படுத்துவதற்கான பணிகள் மும்முரமக நடைபெற்று வந்த்ன. இதை மும்பையில் இருந்து வந்த அணுசக்தி ஆணையத்தின் மூன்று நபர் குழு நேற்று ஆய்வு செய்தது.

இதையடுத்து அணு மின் நிலையம் செயல்பாட்டை நேற்று நள்ளிரவுவாக்கில் தொடங்கியது. அணு உலையில் முதலில் உஷ்ண வெளிப்பாடு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணுசக்தி ஆணையத் தலைவர் சின்ஹா, கூடங்குளம் அணு உலை இனி முழுமையாக இயங்கும் என்று தெரிவித்தார்.

கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இங்கு ஒரு மாதத்தில் 400 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்டும் என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் புரோகித் தெரிவித்தார்.

இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அணு உலையில் அணு பிளவுக்கும், மின்சார உற்பத்தியை தொடங்கவும், கடந்த 11ஆம் தேதி அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, இந்திய அணுசக்தி துறை தலைவர் ஆர்.கே. சின்ஹா, இந்திய அணுசக்தி கழக தலைவர் கே.சி. புரோகித் ஆகியோர் நேற்று கூடங்குளம் வந்து, அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர்.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், மத்திய மின் தொகுப்புடன் இணைக்கப்படும். பின்னர் அதிலிருந்து மின்சாரம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். தற்போது முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளம் 2வது அணு உலையை பொறுத்தவரை, மாதிரி எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 8 மாதங்களில், இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும்.


ஹனி, பாப்பா மெயில் அனுப்பியிருக்கா.. 'சுச்சூ' போய்ட்டாளாம்... 'நேப்பி' மாத்தி விடுவியாம்...!!

ஹனி, பாப்பா மெயில் அனுப்பியிருக்கா.. 'சுச்சூ' போய்ட்டாளாம்... 'நேப்பி' மாத்தி விடுவியாம்...!! 
மம்மியும், டாடியும் மட்டும்தான் மெயில் அனுப்பி கலக்க முடியுமா என்ன... இனி நீங்க பெத்த குட்டீஸும் மெயிலைத் தட்டி மிரட்டும் காலம் வரப் போகிறதாம். அது ஒரு கனாக் காலம்.. அப்படியெல்லாம் இனிமே சொல்லப்படாது.. இது மெயில் காலம்.. வெயில் காலத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியும்..

ஆனால் இந்த மெயில்கள் படுத்தும் பாடு இருக்கே.. ரொம்பக் கஷ்டமப்பா. எதுக்கெடுத்தாலும் மெயில்.. சாப்ட்டியா, தூங்கிட்டியா.. இப்படி. இந்த நிலையில் மெயில் அனுப்புவோர் வரிசையில் விரைவில் புத்தம் புதிதாக பூமிக்கு வந்த குட்டி தேவதைகளும் இணையப் போகின்றனவாம். கேட்கவே மிரண்டு வருதுல்ல.. தொடர்ந்து படித்து அரண்டு போங்கள்...

அப்பா பிசி.. அம்மா பிசியோ பிசி... 

இப்பவெல்லாம் அப்பாக்களும், அம்மாக்களும் ஆளாளுக்கு வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் நிலை. இந்த நிலையில் குழந்தைகளைக் கவனிக்க பக்கத்தில் இருக்கும் பெற்றோரை விரல் நகத்தை விட்டு எண்ணி விடலாம்.

தட்டி எழுப்ப வந்துருச்சு டெக்னிக்கல் பட்டன் 

நம்மளைக் கவனிக்காம இவங்க பாட்டுக்கு வேலையைப் பார்க்கிறாங்க பாரேன் என்று புலம்பும் குட்டீஸ்களும் அதிகரித்து வருகின்றனர். இவர்களுக்காகவே ஒரு நவீன சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

பாப்பா உடலில் பேபிகுரோ 

இந்த புதிய சாதனத்திற்குப் பெயர் பேபிகுரோ.. இதை பிறந்த குழந்தையின் உடலுடன் இணைத்து விடுவார்களாம். பாப்பா, உச்சா போனாலோ அல்லது டபுள்ஸ் போய்ட்டாலோ உடனே இந்த சாதனத்திலிருந்து பாப்பாக்களின் அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும் ஒரு மெயில் போகும்...வேகமாக வந்து ஜட்டியை மாத்தி விட்டுப் போங்கய்யா என்று.

அது மட்டுமா.. 

இன்னும் கேளுங்க! உச்சா போவதை மட்டும் கவனிக்க இந்த சாதனம் கிடையாது. குழந்தையின் இதயத் துடிப்பு, உடல் தட்பவெப்பம், மூச்சு விடுவதில் உள்ள மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் அது கண்காணித்து அதையும் பெற்றோருக்கு மெயில் மூலம் தெரிவிக்குமாம்.

கடுப்பா இருக்கான்னும் கூட சொல்லுமாம்...! 

அதை விட முக்கியமானது.. குழந்தை சந்தோஷமாக இருக்கிறதா.. அல்லது கடுப்பாக இருக்கிறதா என்பதையும் சொல்லுமாம் இந்த சாதனம். அப்படியே, பாப்பாவை அம்மா அடிச்சா உடனே போலீஸ்காருக்கு மெயில் போவது போலவும் செட் செஞ்சு விட்ருங்கப்பா... (எங்கோ ஒரு இடத்தில் அடிதடியில் 'சிக்கி' அவதிப்படும் ஒரு குழந்தையின் மைன்ட் வாய்ஸ்..)


அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை செய்தால் அம்மா ஆக முடியாதாம்!

அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை செய்தால் அம்மா ஆக முடியாதாம்! 


மகப்பேறு பிரச்சினைதான் இன்றைய இளம் தலைமுறையினரின் தலையாய பிரச்சினையாக உள்ளது. மாறிவரும் உணவுப்பழக்கம், மாசடைந்த சுற்றுச்சூழல் போன்றவை மகப்பேற்றினை பாதிக்கும் காரணிகளாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை பார்ப்பதும் மகப்பேறு பிரச்சினைக்கு காணரமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். வேலைப் பளுவுக்கும் இனப்பெருக்கத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஒரு லட்சத்து இருபதாயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கர்ப்பம் தரிப்பதில் தாமதம் 

இங்கிலாந்தில் சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சீரற்ற முறையில் வேலை செய்பவர்கள் அதாவது அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரப் பணி செய்யும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் 80 சதவீதம் கூடுதல் காலம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதை சப்-பெர்ட்டிலிட்டி என்று சொல்கிறார்கள்.

நைட் ஷிப்ட் வேலை 

தொடர்ச்சியாக நைட் ஷிப்ட் வேலை செய்து வந்த பெண்களில் 29 சதவீதத்தினர் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மாதவிடாய் பிரச்சினைகள் 

அதே போல பகல் இரவு என்று மாறி மாறி வேலை செய்யும் பெண்களில் 22 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.