Thursday, July 19, 2012


கைகளை கட்டினால் வேகமாக ஓட முடியாது ஏன்?

கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு மையம் நமது காலடியில் விழும். இதனால் நமது உடல் சமநிலையில் நிற்க முடிகிறது. நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றம் பெறுவதால் ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில், நமது கைகள் கட்டப்பட்டிருக்குமானால் உடலின் சமநிலை தடுமாறி கீழே விழ நேரிடும்.

மேலும், இயல்பாக நடக்கும்போதோ, ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை கால்கள் முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குவதனால், ஈர்ப்பு மையம் உடலின் அடிப்பகுதியிலேயே நிலைபெற்றிருக்குமாறும், அதனால் உடலின் சமநிலை தடுமாறாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும்போதும், ஓடும்போதும் மேற்கூறிய சமநிலை பராமரிக்கப்படுவதில்லை. எனவே அந்நிலையில் ஓடுவதோ அல்லது நடப்பதோ மிகவும் கடினமான செயலாகிவிடுகிறது.

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் ஏன் இயக்க முடியாது?

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும்.

அடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி ஆகும். மேலும், இவற்றில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் குறைவு. இந்நிலையில், பெட்ரோல் இயந்திரத்தில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது.
அடுத்து டீசல் இயந்திரத்தில், பெட்ரோல் இயந்திரத்தில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் இயந்திரங்களுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.

\

ஒன்றரை அடி உயர அதிசயம் உலகின் தம்மாத்தூண்டு சிறுமி
சீனாவின் ஹூவாய்ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி லியாங் சியாவோசியாவோ. வயதுக்குரிய வளர்ச்சி இல்லாததால், 54 செ.மீ. உயரமே இருக்கிறாள். உலகின் மிக சிறிய சிறுமி லியாங்தான். பிறக்கும் போது 1.05 கிலோ எடை, 33 செ.மீ. உயரம் இருந்தாள். 3 ஆண்டுகளில் 22 செ.மீ. உயரமே வளர்ந்திருக்கிறாள். எடை தற்போது 2.5 கிலோ இருக்கிறாள். எடை குறைவாக இருப்பதால் சாங்சா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அங்கிருக்கும் மற்ற குழந்தைகளோடு தட்டு தடுமாறி விளையாடுகிறாள். ‘மரபியல் குறைபாடு காரணமாக அவளது உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. அவள் இனி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை.


வயதானாலும் இவ்வளவு உயரம்தான் இருப்பாள்’ என்கின்றனர் டாக்டர்கள். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லோட் நகரில் உள்ள மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு முன்பு நிக்கி , சாம் மூர் தம்பதிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. ரொம்ப ரொம்ப குறைப் பிரசவம். 25 வாரங்களே ஆன குழந்தை பிறந்தது. ஒரு சோடா பாட்டில் அளவே இருந்த குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் போராடினர். 6 மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதன் பலனாக குழந்தை உயிர் பிழைத்துள்ளது. கென்னா க்ளெயிர் மூர் என பெயரிடப்பட்ட அந்த குழந்தை நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனது. கென்னா, உலகில் உயிர் வாழும் சிறிய குழந்தைகளில் ஒருத்தி என்ற பெருமையை பெற்றுள்ளாள்.இத்தாலியில் மோனாலிசாவின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தினை வரைவதற்கு மொடலாக இருந்த லிஸா கிரார்தினியின் எலும்புக் கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் தான் லிஸா கிரார்தினி.

இந்த பெண் தொடர்பாக அவ்வப்போது பல தகவல்கள் வெளிவந்தாலும், அவற்றில் சில தகவல்கள் மட்டுமே உண்மையானவை.

இந்நிலையில் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள், புளொரொன்சில் உள்ள புனித உர்சுலா மடமொன்றில் லிஸா கிரார்தினியின் எலும்புக் கூடுகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மோனாலிசா இத்தாலியில் லா கியோகொண்டா என அறியப்படுகின்றது.

நவீன வராலாற்று ஆசிரியர்களும் மோனாலிசா படத்திற்கு மொடலாக இருந்தவர் லிசா டெல் கியோகொண்டா என ஏற்கொண்டுள்ளனர்.

வரலாற்றுக் குறிப்புகளின் படி, அப்பெண் தனது கணவர் இறந்ததற்கு பின்பு துறவியாக மாறியதாகவும், அவர் மரணமடைந்த பின்னர் அம் மடத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓட்டுடன், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் ஒத்துப் போகின்றதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
இவரது எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மேலும் இரண்டு எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்விரண்டு எலும்புக்கூடுகளும் அவரது பிள்ளைகளின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
லிசா டெல் கியோகொண்டாவின் எலும்புக் கூடும் மற்றைய இரண்டு எலும்புக்கூடுகளும் ஒத்துப்போகின்றனவா எனப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இதன் பின்னர் அவரது மண்டையோட்டினை வைத்து நவீன தொழில்நுட்பங்களின் மூலம் அவரது முகம் எவ்வாறு இருந்தது என்பதனை உருவகப்படுத்த முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இவற்றையடுத்து மோனாலிசாவின் மர்மப் புன்னகைக்கும் விடைகிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Tuesday, July 17, 2012


ஒலிம்பிக் சுடர் குறித்த அரிய தகவல்
ஒலிம்பிக் போட்டியில் மிக முக்கியமானது உலகம் முழுவதும் சுற்றிவரும் ஒலிம்பிக் சுடர் விளக்கு ஆகும்.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான சுடர் விளக்கு கடந்த ஆண்டு யூன் 8ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டது.* மரியாதை, திறமை, நட்புணர்வு என்ற ஒலிம்பிக் கோட்பாட்டை குறிக்கும் வகையில் இந்த விளக்கு 3 பக்கங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த விளக்கின் உயரம் 800 மி.மீற்றர்., எடை 800 கிராம்.

* ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் 8000 பேர் இந்த விளக்கை ஏந்திச் செல்ல உள்ளதால், இதில் 8000 துளைகள் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.* இதனால் விளக்கின் உட்புறத்தை தெளிவாகப் பார்க்க முடிவதுடன், சுடரின் வெப்பம் ஏந்திச் செல்பவரின் கைகளை பாதிக்காமல் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

* இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர்கள் எட்வர்ட் பார்பர், ஜே. ஆஸ்ஜர்பி இணைந்து இதை உருவாக்கியுள்ளனர்.

* இங்கிலாந்து முழுவதும் 8,000 மைல் தூரத்துக்கு சுடர் ஓட்டம் நடைபெறுகிறது.

பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்பெண்களுக்கு தெரியாத ஆண்களை பற்றிய உண்மைகள்
எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. சொல்லப்போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள். அவை என்னென்னவென்று சிறிது பார்ப்போமா!!!

ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள் தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன்னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமையல், அவர்களது மனநிலையைப் பொறுத்ததே ஆகும்.

பெண்களை விட ஆண்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள். ஆண்கள் அனைவரும் ‘பெண்கள் உணர்ச்சிவசப்பட்டால் அழுவார்கள்’ என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கம் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

நிறைய பேர் நினைக்கின்றனர், ஆண்கள் அனைவருக்கும் காம உணர்வு அதிகம், அவர்கள் எப்போதும் அந்த சிந்தனையிலேயே இருப்பர். ஆனால் உண்மையில் அவர்கள் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை, அவர்களது ஹார்மோன் தான் அவர்களை அவ்வாறு தூண்டுகிறது. இது நிறைய ஆராய்ச்சியில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாடவில்லை என்றால் கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப் பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.


Monday, July 16, 2012

எந்த வயதில் திருமணம் செய்யலாம்


எந்த வயதில் திருமணம் செய்யலாம்
திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறி கொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு திருமணத்தை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனையைப் பற்றி தெரியவில்லை. மேலும் திருமணத்தை தள்ளிப் போட்டால் தான், குடும்பத்தின் பாரத்தை உடனே சுமப்பது போல இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறி, மேலும் அவ்வாறு 25 வயதில் ஆகாமல், அதற்கு மேல் நடந்தால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர்.
திருமணமானது 28-30 வயதில் ஏற்பட்டால், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் 30 வயதிற்கு மேல் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. அவ்வாறு நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மேலும் வாழ்க்கையை மனைவி/கணவருடன் சந்தோஷமாக எங்கேயும் சுற்றி அனுபவிக்க முடியாது. குறிப்பாக குடும்பத்தை சரியாக நடத்த எந்த ஒரு திட்டத்தையும் ஒழுங்காக போட முடியாது. அதுவே 25 வயதில் நடந்தால், மனைவி/கணவரோடு சந்தோஷமாக ஊர் சுற்றி, நன்கு அனுபவித்து, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, குடும்பத்தை எப்படியெல்லாம் நல்ல நிலைக்கு கொண்டு வரலாம் என்று எதையும் யோசித்து செய்ய முடியும்.
திருமணமானது 25 வயதில் நடந்தால் இருவரும் நன்கு புரிந்து கொண்டு, ஒரு மனபக்குவத்திற்கு வர முடியும். மேலும் நண்பர்களுடன் எங்கேனும் இருவரும் ஒன்றாக சென்று விட்டு எந்த நேரத்திலும் வீட்டிற்கு வரலாம். அப்போது யாரும் எந்த தடையும் போட முடியாது. ஏனெனில் அப்போது நீங்கள் புதுமணத் தம்பதியர்களாகவே தெரிவீர்கள். ஆகவே எவரும் தடைவிதிக்க முடியாது. மேலும் உங்கள் சந்தோஷத்திற்கு எந்த இடையூறும் இருக்காது.

மேலும் இந்த வயதில் திருமணமானது நடந்தால், ஒரு 30 வயது ஆகும் போது உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு வரும். குடும்பத்தை எப்படி நடத்தினால், எதிர்காலத்தில் நாமும் நம் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நன்று புரியும். இருவரும் தவறு செய்தால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உங்களுக்கு சொல்லி, உங்களது தவறை திருத்துவார்கள். சொல்லப்போனால் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும். அது பிற்காலத்தில் உங்களது குழந்தைக்கு சொல்லிப் புரிய வைக்க உதவியாகவும் இருக்கும்.

30 வயதில் திருமணம் செய்தால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு திருமணம் செய்வதற்குள் நீங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிடுவீர்கள். முக்கியமாக சொல்லப் போனால், அவர்கள் காலேஜ் வரும் போது உங்களுக்கு 50 வயதாகியிருக்கும். அந்த வயதில் வேலைக்கு செல்வது என்பது சற்று கடினமான விஷயம். உடல் நிலையும் அதற்கு ஒத்து போகாது. மேலும் அந்த வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும்.

ஆகவே திருமணம் செய்ய சரியான வயது 25 தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். என்ன நண்பர்களே! நீங்க எப்ப திருமணம் செய்யலாம்-னு இருக்கீங்க!!!!

விண்ணில் பறந்த படியே ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய நேரப்படி இன்று காலை 8.40 மணியளவில் கஜகஸ்தானின் பைகனூர் விண்வெளி நிலையத்தில் இருந்து சோயூஸ் விண்கலம் வாயிலாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரண்டாவது முறையாக சென்றார் சுனிதா வில்லியம்ஸ்(வயது 47).

இவர் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சோயூஸ் அடைகிறது.

இந்நிலையில் தற்போது வரும் 27ஆம் திகதி லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இப்போட்டிகளை விண்ணில் இருந்தபடியே காண்பதற்காக, சோயூஸ் விண்‌கலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இதில் இருந்தபடியே ஒலிம்பிக் போட்டிகளை பார்த்து ரசிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.


இன்று மீண்டும் விண்வெளிக்கு பயணம் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(வயது 46) 2வது முறையாக விண்வெளிக்கு பயணம் புறப்பட்டு சென்றார்.

இன்று காலை 8.40 மணிக்கு(இந்திய நேரப்படி) கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து, விண்வெளிப் பயணம் புறப்பட்டார்.

அவருடன் ரஷ்யா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த 2 விண்வெளி வீரர்களும் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இம்மூவரும், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள 32 பேர் கொண்ட குழுவுடன் வரும் 17ஆம் திகதி இணைந்து கொள்வர் என நாசா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் அதிக நாள்(195 நாள்கள்) தங்கி ஆய்வு செய்த வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.