Thursday, August 29, 2013

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!


பறக்கும் கார் பற்றி 1930களில் இருந்தே சொல்லப்பட்டு வந்தாலும், தற்போதுதான், நிஜமாகவே பறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு சோதனை பறத்தல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான டெராஃபூகியா, தமது தயாரிப்பான பறக்கும் காரை பப்ளிக்கில் முதலாவது தடவை பறக்க விட்டுள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் பறந்துவிட்டு, வெற்றிகரமாக வீதியில் இறங்கியது இவர்களது பறக்கும் கார். (இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், மொத்தம் 40 நிமிடம் பறந்துள்ளது)

இந்த கார் பாதி செடான் கார், பாதி பிசினெஸ் ஜெட் விமானம் என்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியாருக்கு சொந்தமான பிசினெஸ் ஜெட்டில் பறந்து ஒரு விமான நிலையத்தில் இறங்கியபின், நகருக்குள் செல்ல மற்றொரு காரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இனி கிடையாது.

சோதனை பறத்தலின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் தந்திருக்கிறோம். 2015-ம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது. அனேகமாக அந்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிடலாம், பா.ஜ.க. அரசு (!) அனுமதி கொடுத்தால்!

Join with us on Facebook  >>>

              அறிவியல்

Wednesday, August 28, 2013

"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.

"உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயம்.
வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.

உடல் சூடு, மலச்சிக்கலை போக்க
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

வயிற்றுக்கோளாறு நீங்க
ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அழகுக்கு பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.
அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.

பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.
மேலும் பல பயன்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.

நமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.
குளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.

கூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன.
வறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.
பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


Join with us on Facebook  >>>

              அறிவியல்

வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ராஜபாளையம் மாணவிகள்!

வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ராஜபாளையம் மாணவிகள்!


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம் என நடுநிலைப்பள்ளி மாணவிகள் கடந்த ஒரு வருடமாக சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகேயுள்ளது கே.கம்மாபட்டி கிராமம். இங்குள்ள கிராமத்தில் 200 வீடுகள் இருக்கின்றன. அங்கு வசிக்கும் அனைவரும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஸ்ரீவில்லிப்புத்து£ர் யூனியனுக்கு சொந்தமான அரசு துவக்கப்பள்ளி இங்குள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 50 மாணவர்களும், 25 மாணவிகளும் இந்த பள்ளியில்தான் படிக்கின்றனர். மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. கடந்த ஒராண்டுக்கு முன்பு வரை ராஜகம்பளத்தை சேர்ந்த ஒரு வயதான பெண்மணிதான் சத்துணவை சமைத்து போட்டு வந்தார். அவர் பணியிலிருந்து விலகிய பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.

கே.கம்மாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்கபள்ளியில் காலியாக இருந்த சத்துணவு சமையல்காரர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மரகதவள்ளி (25) என்பவர் சமையல்காரராகவும், சரவணக்குமாரி (30) என்பவர் சமையல் உதவியாளராகவும் அரசு நியமனம் செய்தது. கடந்த 30.7.12 அன்று பள்ளி மாணவர்களுக்கு ஆசையாக மதிய சத்துணவை சமைத்து விட்டு மாணவர்களை சாப்பிட அழைத்தனர். ஆனால், 'பிற ஜாதியினர் சமைத்த சாபப்பாட்டை எங்கள் பிள்ளைகள் சாப்பிட்டால் தீட்டு வரும்' என்று சொல்லி பெற்றோர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து சென்று விட்டனர்.

 பின்னர் சமைத்த சாப்பாட்டை மாடுகளுக்கு போட்டு விட்டு சத்துணவு பணியாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர். உடனே இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. கலெக்டர், சத்துணவு திட்ட அதிகாரிகள் எல்லோரும் பேச்சு வார்த்தை நடத்தியும். கே.கம்மாபட்டி ஊர் மக்கள், 'வேறு ஜாதியினர் சமைத்த சத்துணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்' என்று சொல்லி தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். ஆனால் சத்துணவு பணியாளர்கள் தினமும் சத்துணவை சமைத்து விட்டு பிள்ளைகளுக்காக காத்திருப்பதும், பிறகு சாப்பாட்டை கீழே கொட்டுவதும் என இப்போது வரை வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி சத்துணவை புறக்கணிக்கும் போராட்டம் தொடங்கியது. இப்போது ஒராண்டு கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 11.7.13 அன்று சத்துணவு திட்ட இணை இயக்குனர் வசந்தி, இந்த கிராமத்துக்கு சென்று ஊர் பெரியவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் அவர்கள் பழைய பல்லவியை பாடியிருக்கின்றனர்.
பிறகு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்த பிறகு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் சத்துணவு சாப்பிடட்டும், மாணவிகள் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லி அனுப்பினார்களாம். இப்போது 23 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிடுகிறார்கள். மாணவிகள் எப்போதும் போல் சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.

எல்லாம் ஜாதி படுத்தும்பாடு. வேறு என்னத்தை சொல்ல?


Join with us on Facebook  >>>

              அறிவியல்

அமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்

அமெரிக்கா இணையத்தில் கூகுளை பின்னுக்கு தள்ளி யாஹூ முதலிடம்: காம்ஸ்கோர்காம்ஸ்கோர் நிறுவன பகுப்பாய்வில் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, யாஹூ இணையதளம் 2013 ஜூலை மாதத்தில் அமெரிக்கா இணையத்தில் பல தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. யாஹூ கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கூகிள் செயல்பாட்டை பின்னுக்கு தள்ளியுள்ளது. 

காம்ஸ்கோர் மீடியா மெட்ரீக்ஸ் தரவரிசையில் 50க்கும் மேற்பட்ட அமெரிக்கா பண்பு அறிக்கையில் யாஹூ தளங்கள் 2013 ஜூலை மாதத்தில் 225,359,000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து சுகுள் தளங்கள் 192.251.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது, மைக்ரோசாப்ட் தளங்கள் 179.595.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது, ஃபேஸ்புக் தளங்கள் 142.266.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது மற்றும் ஏஓஎல் தளங்கள் 117.395.000 தனிப்பட்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது. 

இணையத்தில் பார்வையாளர்களுக்கு சென்றடையும் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன, காம்ஸ்கோர் இன் விளம்பர ஃபோகஸ் தரவரிசையின்படி முதலாவது இடத்தில் உள்ளது. காம்ஸ்கோர் இன் விளம்பர ஃபோகஸ் தரவரிசையில் யாஹூ 87.2 சதவீதம் அடைந்துள்ளது. அதாவது, ஜூலை மாதத்தில் மொத்த மாதிரி அளவிலான 225 மில்லியன் இணைய பயனர்களில் 87.2 சதவீதம் யாஹூ தளங்களில் பதிவு செய்யப்பட்டது. கூகுள் 80.6 சதவிகிதம் அடைந்து நான்காவது இடத்தில் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கூகுளை இரண்டாவது நிலைக்கு தள்ளி யாஹூ முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம், யாஹூ இரண்டாவது காலாண்டின் நிகரலாபம் கடந்த வருடத்தில் இருந்ததைவிட கடுமையாக உயர்ந்துள்ளது, ஆனால் வருவாய் பின் தங்கியுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. நிகர லாபம் எதிர்பார்த்ததை விட $331 மில்லியன் முன்னேற்றம் அடைந்துள்ளது, கடந்த வருடத்தில் இருந்ததைவிட நடப்பு ஆண்டில் 46% உயர்ந்துள்ளது, ஆனால் கூட்டாளர்களுக்கு செலுத்தும் முறைகளை தவிர்த்தால் வருமானம் 1% குறைந்து $1.07 பில்லியனாக உள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

வாழ்க்கையில் தரிசிக்க முடியாத அற்புதம்

வாழ்க்கையில் தரிசிக்க முடியாத அற்புதம்


உலகில் ஒரே நேரத்தில் ஒரு பாகம் இரவாகவும், மற்றைய பாகம் பகலாகவும் இருப்பதை அறிந்திருக்கிறோம். அனால, ஒரே சமயத்தில் இரவையும், பகலையும் காணும் சந்தர்ப்பம் கிட்டி இருக்கிறதா?

நிச்சயம் பூமியிலிருந்து கொண்டு அதனை தரிசிக்க முடியாது! எனவே தான், செய்மதி மூலமாக அந்த அறிய வாய்ப்பை மக்களின் தரிசனத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம், உலகின் ஓர் பகுதியில் பகலாகவும், மற்றைய பகுதி இருளால் சூழப்பட்டுள்ளதாகவும் உள்ளநிலையை காட்டுகிறது!Join with us on Facebook  >>>

              அறிவியல்

தினமும் முட்டை சாப்பிடலாமா?

தினமும் முட்டை சாப்பிடலாமா?
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன.

14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.

இவர்கள்உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.

சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள்இதய நோயைக் குணப்படுத்துகிறது.

அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல்பார்த்துக் கொள்கிறது.

இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை.

ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி.

சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம்.

முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.

எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் (Unsaturatedfat) முட்டையில் உள்ளன என்கிறார் டாக்டர். டொனால்ட் மெக்மைரா.

1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன.

இது 2 வருட ஆய்வு. இது போக, 1986ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், மிருக வைத்தியர்கள் என தினமும் முட்டை சாப்பிட்டனர்.

இந்த டாக்டர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது.

இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக்அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள்,
37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.

அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவிக்கிறது.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள்.

இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துக் சாப்பிட்டால் கெடுதல்தான்.

ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம்.

ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.

இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும்.

நீரழிவு நோயாளிகள் தினமும்முட்டை சாப்பிடக்கூடாது.
இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.

மற்றவர்கள் முட்டையைக் கண்டு பீதி கொள்ளாமல் சிறந்த சத்துணவாக முட்டையைதினமும் உணவில் சேர்த்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று அமெரிக்கன்
எக் போர்ட்டின் நியூட்ரிஷியன் சென்டர் அறிவித்துள்ளது.

Join with us on Facebook  >>>

              அறிவியல்