Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Thursday, June 13, 2013

சாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்!

சாரநாத் - பௌத்த மத வரலாறு தொடங்கிய இடம்!



உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் சாரநாத். இந்த சிறு கிராமம் புகழ் பெற்றிருக்க காரணமாக விளங்குவது கௌதம புத்தர் தனது முதல் போதனையை செய்த இடமாக இங்கிருக்கும் பூங்கா தான். மேலும், இந்த இடத்தில் தான் முதல் பௌத்த சங்கமும் தொடங்கப்பட்டது.

புத்தருடன் உள்ள ஆழமான தொடர்பின் காரணமாக, சாரநாத் இந்தியாவிலுள்ள முக்கியமான பௌத்த மத புனிதத் தலமாக உள்ளது. உண்மையில், சாரநாத்தில் தான் இந்தியாவின் மாபெரும் சக்ரவர்த்தியாக இருந்த மகா அசோகர் சில ஸ்தூபிகளையும் மற்றும் இங்கு மிஞ்சியிருக்கும் தூண்களில் புகழ் பெற்ற கலைச்சின்னமான அசோகர் தூணையும் உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த தூணில் இருக்கும் நான்கு சிங்கங்கள் தான் இன்றைய இந்தியாவின் தேசிய சின்னமாக உள்ளன. மேலும், இந்த தூணில் இருக்கும் அசோக சக்கரம் இந்திய தேசிய கொடியின் மையத்தை அலங்கரித்து வரும் சின்னமாகவும் உள்ளது.

1907-லிருந்தே பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் இந்த இடத்தில் செய்யப்பட்டு, பல்வேறு பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு, அவை இந்தியாவில் பௌத்த மதத்தின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை படம் போட்டுக் காட்டும் வகையில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சாரநாத்தை சுற்றியுள்ள முதன்மையான சுற்றுலா தலங்கள்

பல்வேறு பௌத்த சமய கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை கொண்டிருக்கும் சாரநாத்தில் உள்ள சில தொல்பொருட்கள் கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

இந்த நினைவுச்சின்னங்களில் இருக்கும் பழங்கால எழுத்துக்களை படித்து அவற்றில் உள்ள செய்திகளை தெரிவிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள், பௌத்த மத புனிதப் பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு முக்கியமான இடமாக சாரநாத் திகழ்கிறது.
இங்கிருக்கும் மான் பூங்காவில் கௌதம புத்தர் தனது முதல் போதனையை தொடங்கியதால் அது சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் வந்து செல்லும் இடமாக உள்ளது. உண்மையில், மான் பூங்காவில் இருக்கும் தமேக் ஸ்தூபி உள்ள இடத்தில் தான் புத்தர் தனது எண்-வழி மார்க்கங்களைப் பற்றிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார்.

சாரநாத்தில் இருக்கும் மற்றுமொரு ஸ்தூபியான சௌகான்டி ஸ்தூபியில் தான் புத்தருடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் மற்றும் அகழ்வாய்வு பகுதியில், அசோகரின் கல்தூண் உட்பட பல்வேறு பழமையான நினைவுச்சின்னங்கள் பலமுறை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், சாரநாத் அருங்காட்சியகத்திலும் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 1931-ம் ஆண்டில் மகா போதி சங்கத்தால் கட்டப்பட்ட மூலகாந்தா குடி விஹார் இவற்றில் சமீபத்தில் சேர்க்கப்பட்டதாகும்.

இவை மட்டுமல்லாமல் இங்கிருக்கும் தாய் கோவில் மற்றும் காங்யு திபெத்திய மடாலயம் ஆகிய இடங்களும் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடங்களாகும்.

Thursday, April 11, 2013

மளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்மணி'யாக உயர்ந்த தாட்சர்!


மளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்மணி'யாக உயர்ந்த தாட்சர்!


சிலரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.. அப்படிப்பட்டவர்களில் மார்கரெட் தாட்சருக்கு முக்கிய இடம் உண்டு. மாகி என்றும், இரும்புப் பெண்மணி என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர் தாட்சர். மறைந்த தாட்சர்தான் இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். மிகுந்த தைரியமும், மதி நுட்பமும், துணிச்சலாக செயல்படும் தன்மையும் கொண்டவர் தாட்சர்.

சாதாரண மளிகைகடைக்காரின் மகளாக பிறந்த தாட்சர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக, உலகமே பார்த்து வியக்கும் தலைவராக மாறியது வரலாறு. தாட்சரின் வாழ்க்கையிலிருந்து சில துளிகள்...



1925ல் பிறந்து... 

1925ம் ஆண்டு கிராந்தம் என்ற இடத்தில் மார்கரெட் ராபர்ட் என்ற பெயருடன் பிறந்தார் தாட்சர்.


ஆக்ஸ்போர்டில் கல்வி 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்தார் தாட்சர்.


1951ல் திருமணம் 

1951ம் ஆண்டு டெனிஸ் தாட்சரை மணந்தார்.


இரட்டைக் குழந்தைகள் 

தாட்சர் தம்பதிக்கு கரோல் மற்றும் மார்க் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.


1959ல் எம்.பி. ஆனார் 

1959ம் ஆண்டு முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தாட்சர்.


டோரிகளின் தலைவியானார் 

1975ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியானார் மார்கரெட் தாட்சர்.


79 முதல் 90 வரை பிரதமர் 

1979ம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானார் தாட்சர். அதன் பின்னர்1990 வரை அவர் அசைக்க முடியாத பிரதமராக பதவியில் தொடர்ந்தார்.


வரலாறு படைத்தவர் 

1975ல் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு வில்லி ஒயிட்லா போட்டியிட்டார். அவரை எதிர்த்து துணிச்சலுடன் களம் இறங்கிய மார்கரெட் தாட்சர் தேர்தலி்ல் வெற்றி பெற்றபோது அனைவரும் அசந்து போயினர். காரணம், கட்சித் தலைவராக பெண் ஒருவர் வெற்றி பெற்றது அதுவே முதல் முறை என்பதால்.


நாட்டின் முகத்தை மாற்றியவர் 

பிரதமர் பதவியில் மார்கரெட் தாட்சர் இருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் முகத்தையே அவர் மாற்றியமைத்தார். உலகின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருந்தார்.


அனைவரையும் ஒருங்கிணைத்தவர் 

நாடு எப்படி இருக்க வேண்டும், நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்டிப்புடன் செயல்படுத்திக் காட்டியவர் தாட்சர். அரசியல்வாதிகள், நிர்வாகம், தொழிற்சங்கங்கள் என மூன்று முக்கியப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து அரசை நடத்தியவர் தாட்சர்.


பொருளாதாரத்தை நிமிர்த்தியவர் 

சரிந்து போய்க் கிடந்த இங்கிலாந்தி பொருளாதாரத்தை தூக்கிய நிறுத்திய பெருமையும் தாட்சருக்கு உண்டு. மிகப் பெரிய சாதனைகளை தாட்சர் இதில் படைத்துள்ளார்.


அப்பாவைப் போல பொறுப்பானவர் 

மார்கரெட்டின் தந்தை ராபர்ட் மிகவும் சிக்கணமாக வாழ்க்கை நடத்தியவர். ஒரு காசு செலவழிப்பது என்றாலும் பலமுறை கணக்குப் பார்த்து செய்தவர். மளிகைக் கடை வியாபாரம்தான் ராபர்ட்டின் குடும்பத்தைக் காப்பாற்றியது என்பதால் எப்போதும் வியாபாரம், வியாபாரம் என்றிருப்பார். தந்தையைப் பார்த்து தான் நிறையக் கற்றுக் கொண்டதாக தாட்சர் பலமுறை கூறியுள்ளார்.


அழகிய கவிஞர் 

சிறுவயதில் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார் மார்கரெட் தாட்சர். இவருக்குப் பிடித்த கவி மேதை ருட்யார்ட் கிப்ளிங்.


ஆய்வாளராக சில காலம் 

வேதியியலில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் ஆய்வில் இறங்கினார். சில காலம் எஸ்ஸக்ஸில் உள்ள பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் ஆய்வாளராகவும் வேலை பார்த்துள்ளார்.


தேர்தலில் தோல்வி.. காதலில் வெற்றி 

1950ல் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்த சோகம் அவரைத் தாக்கிய நிலையில் டெனிஸ் தாட்சரை சந்தித்தார். காதலில் விழுந்தார். அடுத்த ஆண்டே இருவரும் மணம் புரிந்து கொண்டனர்.


1959ல் மாபெரும் வெற்றி 

சில தேர்தல்களில் நின்று தோல்வியடைந்த நிலையில், 1959ல் நடந்த தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் மார்கரெட்.


மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் 

இவர் பின்னர் கல்வி அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தார். அப்போது இவர் செய்த காரியம், இவருக்கு சுவாரஸியமான பட்டப் பெயரை பெற்றுத் தந்தது. பள்ளிகளுக்கு வழங்கிய இலவச பால் திட்டத்தை ரத்து செய்தார் தாட்சர். இதனால் இவரை எதிர்க்கட்சியினர் மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் என்று கேலி செய்ய ஆரம்பித்தனர்.


இங்கிலாந்தின் காமராஜர் 

ஆனால் கல்வித்துறைக்கு இவர் நிறைய செய்துள்ளார் என்பதுதான் முக்கியமானது. கிட்டத்தட்ட இங்கிலாந்தின் காமராஜர் என்று கூறும் அளவுக்கு கல்விக்கு நிறைய செய்துள்ளார். பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். 16 வயது வரை கட்டாயக் கல்வித் திட்டம் அதில் ஒன்று. நர்சரி பள்ளித் திட்டத்தை விரிவுபடுத்தினார்.


எதிர்க்கட்சித் தலைவியாக கலக்கியவர் 

எதிர்க்கட்சித் தலைவியாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றியுள்ளார் தாட்சர். தனது கட்சியை அடிமட்ட அளவில் ஸ்திரப்படுத்தினார். அனைவரும் பார்த்து மிரளும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்தி கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். தன்னையும் இந்த காலகட்டத்தில் வளர்த்துக் கொண்டார்.


பிரதமராக பிரமாதப்படுத்தியவர் 

பிரதமர் பதவியில் முதல் முறையாக அமர்ந்தபோது பல சீர்திருத்தங்கள மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார் தாட்சர். அதில் முக்கியமானது வருமான வரி விகிதத்தை குறைத்தது. இதுபோக மேலும் பல வரி சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார்.


தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பினார் 

அயர்லாந்து தீவிரவாதிகள் வைத்த குறியில் ஒருமுறை தாட்சர் சிக்க நேரிட்டது. 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரைட்டன் நகரி்ல நடந்த கட்சி மாநாட்டின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் தாட்சர் உயிர் தப்பினார். ஆனால் 6 பேர் உயிரிழந்தனர்.


தைரியமாக எதிர்கொண்டார் 

இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்த தாட்சர், தீவிரவாதிகளை கண்டு பயப்பட மாட்டேன், பூண்டோடு ஒழிப்பேன் என்று வீராவேசமாக பேசியபோது இங்கிலாந்து மக்கள் அசந்து போயினர்.


அயர்லாந்து தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார் 

சொன்னதற்கேற்ப தீவிரமாக செயல்பட்ட தாட்சர், 1985ம் ஆண்டே அயர்லாந்து தீவிரவாத அமைப்புக்கும், இங்கிலாந்து அரசுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமையை மாற்றினார்.


புயலுக்குப் பின் 

அமைதி பிரதமராக பல காலம் இங்கிலாந்தை திறம்பட இயக்கிய தாட்சர் தனது ஓய்வுக்குப் பின்னர் பொது வாழ்க்கையில் தலை காட்டாமல் ஒதுங்கியிருந்தார். சுயசரிதம் எழுதினார். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார். குறிப்பாக அவரது மனம் கவர்ந்த அமெரிக்காவை வலம் வந்தார்.


பெரும் வெற்றிடம் 

சாதாரண ஒரு தலைவராக மார்கரெட் தாட்சர் இருந்ததில்லை. இரும்புப் பெண்மணியாக, புத்திசாலியாக, புதுமை விரும்பியாக திகழ்ந்தவர். சாதாரணர்கள் முதல் ராஜ குடும்பம் வரை, எலிசபெத் ராணிவரை அத்தனை பேரின் அன்பையும் பெற்றிருந்தவர் தாட்சர். அவரது மறைவு நிச்சயம் இங்கிலாந்தில் பெரும் வெற்றிடத்தையே ஏற்படுத்தியுள்ளது. தாட்சருக்குப் பிறகு பெயர் சொல்லும் பிரதமரை இங்கிலாந்து கண்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!


















Thursday, January 17, 2013

இலங்கையின் வடக்கின் சப்த தீவுகள்

இலங்கையின் வடக்கின்  சப்த தீவுகள்



இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:

லைடன் தீவு (வேலணைத்தீவு)
புங்குடுதீவு
நயினாதீவு
நெடுந்தீவு
அனலைதீவு
எழுவைதீவு
ஊர்காவல் துறை

இவற்றுள் லைடன் தீவு புங்குடுதீவு காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன.

ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு.



தீவுகளின் பெயர் விபரங்கள்

சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:

பெயர்                           ஆங்கிலத்தில்          ஒல்லாந்தர் பெயர்           கந்தபுராண பெயர்

வேலணைத்தீவு     Velanaitivu                        Leiden (லைடன்)                  சூசை
புங்குடுதீவு                Punkudutivu                      Middleburgh                              கிரவுஞ்சம்
நயினாதீவு                Nainativu                           Harlem                                       சம்பு
காரைநகர்                 Karaitivu                           Amsterdam                                 சாகம்
நெடுந்தீவு                 Neduntheevu                      Delft (டெல்ப்ற்)                    புட்கரம்
அனலைதீவு            Analaitivu                           Rotterdam                                  கோமேதகம்
எழுவைதீவு             Eluvaitivu                           Ilha Deserta                                இலவு

வரலாறு

தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும் தீவு மக்களின் உணவு மொழி போன்ற சில அம்சங்கள்கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.
போர்த்துகேயர் (1505 - 1658), ஒல்லாந்தர் (1656 - 1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள்.



சமூகம்

யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர் வயல்களிலிலும் மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்குநிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும் சம ஆசனம் சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம் பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது.

யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில் (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர் புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்".

இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில்விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்க்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள்.



பொருளாதாரம்

விவசாயம் மீன்பிடி வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை.நில வளம் நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல் தோட்ட செய்கை மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின்புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை பேணியும் வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர் வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக உயர் கல்வி தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம்.


அரசியல்

தீவுகள் அரசியல் முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான் இந்திய அமைதிகாக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை. மேலும் இலங்கை அரசு தீவுப்பகுதிகளை ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை. எனினும் நயினா தீவில் உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம் ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

புலம்பெயர்ந்தோர் ஊர் ஒன்றியங்கள்
இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்யது வருகின்றார்கள். ஆபத்து உதவிகள் வைத்திய உதவிகள் பாடசாலைகள் மீள் கட்டமைப்பு சனசமூக நிலையங்கள் பராமரிப்பு தொழில் வள உதவிகள் (படகுகள் மீன் வலைகள் இழுவை இயந்திரங்கள்விதைகள் விவசாய நுட்பங்கள் மர வேலை கருவிகள்) பொருள் சந்தைப்படுத்தல் ஏற்றுமதிஉதவிகள் போக்குவரத்து மேம்படுத்தல் மின்சத்தி வழங்குதல் கணணி கல்வி ஊக்குவிப்பு தொலை தொடர்பு மேம்படுத்தல் குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்புகோயில்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.
இவ் அமைப்புகள் தொடர்பு தகவல்கள் வியாபார/விளம்பர கைநூல்களில் இருக்கின்றன.

Monday, January 14, 2013

பக்தர்கள் பார்க்க வசதியாக ஏழுமலையான் ஆபரணங்கள் மியூசியத்தில் வைக்க ஏற்பாடு

பக்தர்கள் பார்க்க வசதியாக ஏழுமலையான் ஆபரணங்கள் மியூசியத்தில் வைக்க ஏற்பாடு





திருப்பதி ஏழுமலையான் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால ஆபரணங்கள் பக்தர்கள் பார்வையிடும் வகையில் திருமலை மியூசியத்தில் வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி:  திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கடந்த 1952 முதல் சுவாமிக்கு பயன்படுத்தி வரும் ஆபரணங்கள், பயன்படுத்தாத ஆபரணங்கள், நாணயங்கள் என அனைத்தையும் தேவஸ்தான கருவூலத்தில் வைத்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இவற்றில் காணிக்கை உண்டியலில் செலுத்தப்பட்ட பழங்கால புராண வரலாற்று நாணயங்கள் 10 டன் வரை உள்ளது.

இவற்றை மூத்த பேராசிரியர்கள் மற்றும் தொல்லியியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து வருங்கால இளம் தலைமுறையினர் சுவாமி மீது பக்தியோடு, அவை எந்த காலத்தில் இருந்து எந்தெந்த நாடுகளில் இருந்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டது என்பதையும் நாணயங்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆராய்ச்சி செய்து ஆங்கிலத்தில் தயாரான புத்தகத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திருப்பதியில் சமீபத்தில் நடந்த விழாவில் வெளியிட்டார்.

மேலும் சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க வளையல், கடயம் உள்ளிட்ட 250 வகையான ஆபரணங்கள், கிருஷ்ணதேவராயர் காலம் முதல் 1000 ஆண்டுகள் பழமையான சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தாத ஆபரணங் களை பக்தர்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் திருமலையில் உள்ள எஸ்.வி. மியூசியத்தில் வைக்கப்பட உள்ளது. மியூசியத்தினுள் சென்றாலே குறைந்தது 4 மணி நேரமாவது ஆபரணங்களை பார்வையிட்டு அவை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன என்றார்.

Tuesday, December 11, 2012

புதிய மற்றும் பழைய உலக அதிசயங்கள் 7 Part 1

புதிய மற்றும் பழைய உலக அதிசயங்கள் 7   Part 1


நமக்கெல்லாம் புதிதாக உள்ள உலக அதிசயங்களைதான் பெரும்பாலும் தெரிந்திருக்கும் …. ஆனால் பண்டைய உலக அதிசயங்களும் பிரமிக்க தக்கதாக உள்ளது …. அவற்றையும் இங்கே உங்கள் பார்வைக்காக முதலில் வைத்து தொடர்ந்து புதிய ஏழு அதிசயங்களையும் பார்வையிடலாம் ….
பண்டைய உலக அதிசயங்கள்

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பண்டைய உலக அதிசயங்கள் ஏழு


பண்டைய உலக அதிசயங்கள். வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழ். கிசாவின் பெரிய பிரமிட், பபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, ஆர்ட்டெமிஸ் கோயில், மௌசோல்லொஸின் மௌசோலியம், ரோடொஸின் கொலோசஸ், அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம்.14ம் நூற்றாண்டை சேர்ந்த இடாய்ச்சு ஓவியர் மார்த்தன் வான் யீம்சூகெர்க் வரைந்தது.

தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.

1) கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

2) பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.

3) ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஔஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.

4)ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

5) மௌசோல்லொஸின் மௌசோலியம், காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

6) ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.

7) அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.

இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சி யொன்றினால் விழுந்துவிட்டது.

01) கிசாவின் பெரிய பிரமிட் (பண்டைய உலக அதிசயம்)
கிசாவின் பெரிய பிரமீடு (அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே. இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதும் இதுவேயாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2560 என்று கணக்கிடப்பட்டுள்ளது
 
கி.மு 2560 இல் கட்டப்பட்ட கிசாவின் பெரிய பிரமிடு கி.பி 2005 ஆம் ஆண்டு தோற்றம்

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.

பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், பசோல்ட், கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )
வரலாறும் விளக்கமும்


கிசாவின் பெரிய பிரமிட்19 ஆம் நூற்றாண்டு stereopticon அட்டைப் புகைப்படம்
இது 4வது வம்ச எகிப்திய பாரோ மன்னனான கூபுவின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூபுவின் தலைமை பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமீடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடிங் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படிக்கு இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 தொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல 2.3 மில்லியன். இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 – 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
கட்டுமான பொருள்கள்

கிசா பிரமீடு 2.3 மில்லியன் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்க்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அரசனின் பகுப்பறையை சுற்றிலும் 20 முதல் 80 தொன்கள் எடையுள்ள மிகப்பெரிய கட்டுமான கற்களானது அமைக்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் 500 மைல்களுக்கு அப்பாலுள்ள அஸ்வான் எனுமிடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன. பாறைகளில் வரிசையாக சிறு துளையிட்டு அந்த துளைகளில் மரத்தாலான ஆப்புகளை அந்த துளைகளில் இறுக்கி அவற்றின் மீது நீரை ஊற்றும்போது மரம் ஈரத்தின் காரணமாக உப்பலாகி பாறைகளில் பெரிய விரிசலை ஏற்படுத்துகிறன இந்த பிரபலமான முறைதான் பழங்கால எகிப்தியர்கள் கற்களை வெட்டி எடுக்கவும் உதவியிருக்கிறன. இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கற்களானது படகுகளை மூலம் நைல் நதியின் வழியாக கட்டுமான இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டிருக்கிறன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட 5.5 மில்லியன் தொன்கள் எடையுள்ள சுண்ணாம்பு கற்களும் 8000 தொன்கள் எடையுள்ள கிரானைட் கற்களும் 500000 தொன்கள் எடையுள்ள சாந்து கலவையும் இதன் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன.

வார்ப்பு கற்கள்


இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன வரப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய தட்டையான மேல்பரப்புடைய கற்கள் ஆகும். உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்பு கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்பு கல்லானது பிரமீடுக்கு தேவையான வடிவத்தை கொடுக்கிறது. இன்றைய நிலையில் உள்பக்கமாக அமைக்கபெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் கெய்ரோவில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன.


02) பபிலோனின் தொங்கு தோட்டம் (பண்டைய உலக அதிசயம்)


பபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.

ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை




03) ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (பண்டைய உலக அதிசயம்)






 ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை (Statue of Zeus at Olympia) கிமு 433 இல் பீடியாஸ் என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரீஸ் நாட்டில் செதுக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது.


இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது.


04) ஆர்ட்டெமிஸ் கோயில் (பண்டைய உலக அதிசயம்)


துருக்கியின் இசுத்தான்புல் நகரில் உள்ள மினியாதுர்க் பூங்காவில் காணப்படும் ஆர்ட்டெமிசு கோயிலின் மாதிரி வடிவம்.
ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.
ஆர்ட்டெமிஸ்

ஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு, அறுவடை, இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.


Friday, November 30, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - இறுதி பாகம்

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - இறுதி பாகம்

கடந்த அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்





மாயன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பந்து விளையாட்டு ஒன்றை விளையாடி இருக்கின்றனர். அதனுடன் அவர்கள் உலக அழிவையும் தொடர்பு படுத்தியிருக்கின்றனர் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன். இந்தப் பந்து விளையாட்டு மாயன்களின் மிக முக்கியமான ஒரு சடங்காக அப்போது இருந்திருக்கின்றது என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், அதை ஆராயப் போன சமயத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. அதாவது, மாயன்களின் பிரதேசங்களில் மட்டும்தான் இந்த விளையாட்டு, விளையாடப்பட்டது என்று நினைத்து ஆராயச் சென்றவர்களுக்கு, அதையும் தாண்டி மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா எனப் பல நாடுகளில் இந்தப் பந்து விளையாட்டு விளையாடப்பட்டு வந்திருக்கிறது தெரிய வந்தது.

மெக்சிக்கோ, குவாத்தமாலா, பெலிசே, ஹொண்டுராஸ், எல் சல்வடோர் மட்டுமில்லாமல், நிகுரகுவா, அரிஸோனா ஆகிய நாடுகளிலும் இது விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன் கரீபியன் தீவுகளிலும் (Caribbean islands), கியூபாவிலும் கூட இந்தப் பந்து விளையாட்டு, விளையாடப் பட்டிருக்கிறது. அப்படி விளையாடியதற்கான மைதானங்கள் அந்த நாடுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, மேலும் ஆராய்ந்தபோது ஆச்சரியங்களும், மர்மங்களும் மாயன்கள் பிரதேசங்களில் மட்டுமல்லாமல், தென்னமெரிக்கப் பிரதேசங்கள் அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்தது. ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடங்கள், ஒரு பொக்கிசப் புதையலாகவே அதற்கு அப்புறம் அமைந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு இருந்தன அந்த நாடுகள். அந்த நாடுகளில் உள்ள மர்மங்கள் எவை என்று நான் இங்கே ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்லப் போனால், இத்தொடர் 2012 டிசம்பர் மாதத்திலும் முடிந்து விடாமல் போய்விடும் ஆபத்து உண்டு. எனவே எனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் உங்களுக்காகத் தருகிறேன். இதற்கும், இப்பொழுது நான் எழுதும் தொடருக்கும் சம்பந்தம் இல்லாவிடினும் கூட, தகவல் அடிப்படையில் இதை உங்களுக்குத் தர விரும்புகிறேன்.

மாயன்கள், பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும், அவர்களின் ‘இன்கா’ இனம் தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறது. நாம் தென்னமெரிக்கா என்னும் பெரிய நிலத்தை, ஏனோ சரியாகக் கவனத்தில் எடுப்பதில்லை. அமெரிக்கா என்றாலே, எமக்குக் கண்ணுக்குத் தெரிவது ‘யுஎஸ்ஏ’ (U.S.A) என்றழைக்கப்படும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும், கனடாவும் மட்டுமே! இந்த இரு நாடுகளுமே அமெரிக்கா என்னும் பதத்தில் எமக்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் இவை தாண்டி அதிக நாடுகளைக் கொண்டது தென்னமெரிக்கா.



இப்போ நான் சொல்லப் போவது, சாதாரண வரலாற்றுச் சம்பவம் அல்ல. பெரும் மர்மத்தை தன்னுள்ளடக்கிய சம்பவம் அது. மாயன்களின் பிரதேசத்துக்குச் சற்றுக் கீழே வாழ்ந்த, ‘நாஸ்கா’ என்னும் இனத்தவர் பற்றி முன்னரே உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அவர்களும் தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) நாட்டில் வாழ்ந்தவர்கள்தான். அந்தப் பெரு நாட்டுக்குக் கீழே இருக்கும் நாடுதான் ‘சிலி’ (Chile). ‘சிலி’ நாடு, நீண்டதொரு நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச் சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர் ‘ஈஸ்டர் தீவு’ (Easter Island) என்பதாகும். ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும் அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.



மனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில், கடலின் நடுவே இருக்கும் இந்தத் தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள். அத்தீவைச் சுற்றி, வரிசையாக மிகப் பெரிய மனிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக் காரணம். ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போல, இரண்டு மீற்றர்கள் உயரத்தில் இருந்து, பத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்து விட்டீர்களா….? உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80 தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை? ஏன் செய்தார்கள்? யாருக்கும் தெரியவில்லை.





இந்தச் சிலைகள் ‘மோவாய்’ (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில் கணித்திருந்தாலும், சரியான கணக்குத் தெரியவில்லை. இந்தச் சிலைகளை ஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள்? எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு இன்று வரை எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.




இந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள்? செதுக்கிய இந்தச் சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்? அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள்? என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும், கேள்விகளாகவும் எம்முன்னே நிற்கின்றன. அந்தத் தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை க் கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல் இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும், அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாத ஒரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.


அந்தத் தீவில், வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக் கண்டால் அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிக நீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலை. ஒரு வேளை அந்தச் சிலை செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள்? எப்படி நகர்த்தியிருப்பார்கள்? எதற்கும் விடையில்லை. எல்லாமே……! எல்லாமே….! ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.


மோவாய்’ (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள், தீவைச் சுற்றி நிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றன. தலைகள், உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான். அதிகம் ஏன், கடலுக்குள்ளும் மோவாய்கள் கிடக்கின்றன.




இந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன? இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? அவசியம் என்ன? மொத்தத்தில் சிந்தித்துப் பார்த்தால், 2012 இல் உலகம் அழிகிறதோ இல்லையோ, எமக்குப் பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள் இருக்கின்றன.


இது போலவே இன்னுமொரு ஆச்சரியமான இடம் ஒன்றும் தென்னமெரிக்காவில் உண்டு. அந்த இடத்தை ஏற்கனவே தமிழ்நாட்டில் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ‘மச்சு பிச்சு’ (Machu Picchu) என்றழைக்கப்படும் மலை நகரம் அது. மிக ஆச்சரியமான நகரம். இந்த மச்சு பிச்சுவை நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? ‘சூப்பர் ஸ்டார்’ ரஜனிகாந்தும், ஐஸ்வர்யாராயும் ‘எந்திரன்’ திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை, இந்த இடத்தில்தான் பாடுவார்கள். இந்த மச்சு பிச்சுவும் தென்னமெரிக்காவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டு போவதற்கு எமக்குக் காலம் போதாது. நம்மை மாயாவும், டிசம்பர் மாதமும் வருந்தி அழைப்பதால் இவற்றை இங்கேயே விட்டுவிட்டு மாயாவின் பந்து விளையாட்டுக்குப் போகலாம்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும் நாம் இப்போ விளையாடும் கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து. இந்தப் பந்தை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான், உலக அழிவை அடையாளப் படுத்துகிறது என்று சொல்லியிருந்தேன். “பந்து விளையாட்டுக்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்?” என்றும் உங்களுக்கு கேள்வி இப்பொழுது எழலாம். ஆனால் மாயன்களைப் பொருத்தவரை இவை இரண்டுக்குமே நிறையச் சம்பந்தம் உண்டு. மாயன்கள் அவை இரண்டையுமே ஒன்றாகக் கலந்து தங்கள் உலக அழிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறது. மிகப் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே, பந்து விளையாட்டுகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக பாஸ்கெட்பால், பேஸ்பால், உதைபந்தாட்டம், கிரிக்கெட், டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால் விளையாடப்படும் விளையாட்டுகள்தான். ஆனால், உலகிலேயே மனித இன வரலாற்றிலேயே, விளையாடப்பட்ட முதல் பந்து விளையாட்டு என்றால், அது மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.


கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டை, மாயன்கள் விளையாடியதாகப் பதிவுகள் உண்டு. அதுவும், அவர்கள் விளையாடிய பந்து இரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்து, பதப்படுத்தி, அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர். மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் பந்துகளை அகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இப்போதும் அவை விளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றன. மாயன்களின் பந்து விளையாட்டு, இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்ட திட்டங்களும், விதிகளும் உள்ள ஒரு விளையாட்டாகவே விளையாடப் பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தப் பந்து விளையாட்டு, விளையாடப்படும் மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது. மிக நேர்த்தியாகவும், அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தன விளையாட்டு மைதானங்கள். ஆங்கிலக் காப்பிட்டல் ‘I’ என்னும் எழுத்தைப் போல அமைந்த மைதானம், அண்ணளவாக 30 மீற்றர் நீளமும், இரண்டு பக்கம் நீளமான சுவர்களையும் கொண்டது.




மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டு, தற்போது விளையாடப்படும் உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்தது போல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம். நாம் விளையாடும் உதைபந்தாட்டமும், பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்து நாம் பெற்றதாக இருக்கலாம்.







பந்து விளையாடும் மைதானத்தின் நடுவே, இரண்டு பக்கச் சுவர்களிலும் இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டு. விளையாட்டில் பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்து. இந்தப் பந்தைத் தமக்கென இருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப் பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.




தலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பங்கேற்பார்கள். அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோ, கால்களையோ கைகளையோ தலையையோ பந்தில் படும்படியாகப் பயன்படுத்த முடியாது. “அப்படி என்றால் எப்படிப் பந்தை அடிப்பது?” என்றுதானே கேட்கிறீர்கள்.

இடுப்பினாலும், முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும். இது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? ஆனாலும் மாயன்கள் அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல, விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது, மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.



மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, ‘பிட்ஷி’ (Pitzi) என்று அழைக்கின்றனர். இந்த விளையாட்டின் போது, இரு பக்கமும் விளையாடும் ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார். இப்போதுள்ள ‘கப்டன்’ (Captain) போல. எந்த அணி தோற்கின்றதோ, அந்த அணியின் தலைவர் பூசை, புனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டு மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார்.

“என்னடா இது? விளையாட்டிலும் கொலையா? விளையாட்டு என்பதே பொழுது போக்குவதற்கானதுதானே! இப்படி விளையாடுவதும் ஒரு விளையாட்டா?” என்று நினைப்பீர்கள். உண்மைதான். நீங்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டு மொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு. “அட…! போங்கப்பா….! விளையாட்டில் தத்துவமா? தத்துவத்துடன் கொலையா….?” என்று நீங்கள் சலித்துக் கொள்லலாம். ஆனால் அந்தத் தத்துவமே, எங்கள் உலகம் அழியும் கோட்பாட்டை உள்ளடக்கியது என்று சொன்னால் வாயடைத்துத்தான் போவீர்கள்.

இதை நான் உங்களுக்குப் புரிய வைப்பதற்கு, மாயன்களின் வேதப் புத்தகமான, ‘பொபோல் வூ’ (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். ‘பொபோல் வூ’ என்னும் நூல் சொல்லும் கதையில் பூமி, சூரியன், சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது, அத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையான இடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறது. அந்தக் கருமை இடத்துக்கு அருகே சூரியன் சென்றால், சூரியனும், உலகமும் அழிந்து விடும் என்றும் சொல்லியிருக்கிறது. தாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன் இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.


அந்தப் பொபோல் வூ அப்படி என்ன கதை சொன்னது? அது பற்றிப் பார்ப்போமா……? இப்போது பொபோல் வூ சொல்லும் கதைக்கு வரலாம்…….!
மாயன்களைப் பொறுத்தவரை பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வாசலாக அமைந்த ஒரு இடம் உண்டு. அது ஒரு மிகப் பெரிய கருமையான இடம். குழி போன்றது அது. அந்தக் கருங் குழியில்தான் மரணத்தின் கடவுள் (God of Death) இருக்கின்றார். மரணத்தின் கடவுள் வாழும் இடத்தின் பெயர் ‘ஷிபால்பா’ (Xibalba). ஷிபால்பாவைப் ‘பாதாள உலகம்’ (Under World) என்றும், ‘பயங்கரத்தின் இருப்பிடம்’ (Place of Fear) என்றும் மாயன்கள் சொல்கின்றனர்.




அது போல, மாயன்களுக்கு மூத்தவராக, ‘ஆதி தந்தை’ (First Father) என்னும் ஒருவரும் இருந்தார். அவருக்கு ஒரு இரட்டைச் சகோதரரும் இருந்தார். இவர்கள் இருவரும் மிகத் திறமையான பந்து விளையாட்டுக்காரர்கள். ஒருதரம் இவர்கள் இருவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சத்தம் ஷிபால்பாவில் வாழும் மரணத்தின் கடவுளுக்குக் கேட்டது. அந்தச் சத்தம் அவரது அமைதியைக் குலைத்தது. எனவே ஆதி தந்தையையும், அவரது இரட்டைச் சகோதரனையும் போட்டிக்குப் பந்து விளையாட ஷிபால்பாவுக்கு அழைத்தார் மரணத்தின் கடவுள். பந்து விளையாட்டுக்கு அழைக்கப்பட்டதால், அந்த அழைப்பை அவர்களால் மறுக்க முடியவில்லை. அதனால், அவர்கள் பந்து விளையாடுவதற்குப் பால்வெளி மண்டலத்தின் வாசலில் அமைந்திருக்கும் கரிய இடத்துக்குச் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள், பந்து விளையாடப் படாமலே ஏமாற்றப்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.


இந்த ஆதி தந்தைக்கு, இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களும் இரட்டையர்கள்தான். இவர்கள் இருவரும் தந்தையையும், தந்தையின் சகோதரரையும் போல பந்து விளையாட்டில் திறமைசாலிகளாக இருந்தனர். இவர்களின் இருவரின் பெயரும் ‘ஹூன் அப்பு’ (Hun Ahpu), ‘இக்ஸ்பலங்கா’ (Xbalanque) ஆகும். “இந்தப் பெயர்களில் என்ன இருக்கிறது?” என்றுதானே நினைக்கிறீர்கள். அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன. அதற்குப் பின்னர் வரலாம்………! ஆதி தந்தையின் மகன்கள் இருவரும் பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதால், அவர்கள் இருவரும் மரணத்தின் கடவுளால், பந்து விளையாட்டு விளையாட அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் தந்தை இப்படியே அழைக்கப்பட்டுப் பின்னர் சதியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்திருந்தார்கள் இரட்டையர்கள். அதனால் சில தந்திரங்களைக் கையாண்டு, பந்து விளையாடியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தை மரணத்தின் கடவுளுக்கு ஏற்படுத்தினர்.

அதன்படி விளையாடப்பட்ட பந்து விளையாட்டில் இரட்டையர்கள், மரணத்தின் கடவுளை வென்றனர். அதனால் அவர்கள் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும், பல வருடங்களின் பின்னர் மீண்டும் அவர்கள் பந்து விளையாட்டுக்கு அழைக்கப்படுவார்கள். ‘பொபொல் வூ’ சொல்லும் கதை இதுதான். இவற்றைக் கதையாகப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்ததில், இதில் அடங்கியிருக்கும் சம்பவங்கள் எம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. இனி நான் சொல்லப் போவதைச் சற்று நிதானமாகக் கவனியுங்கள்.

கதையில் வரும் பெயர்களின் அர்த்தம் என்ன தெரியுமா……? ‘ஹூன்’ (Hun) என்றால் மாயன் மொழியில் ‘முதல்’ என்று அர்த்தம். ‘அப்பு’ (Ahpu) என்றால் ‘சூரியன்’ என்று அர்த்தம். அதாவது ஹூன் அப்பு என்றால், முதல் சூரியன் என்று அர்த்தம். அதன் இரட்டைச் சகோதரர்தான் ‘இக்ஸ்பலங்கா’ எனப்படும் சந்திரன். கதையின்படி, ஒவ்வொரு 26000 வருசங்களும் இவர்கள் பந்து விளையாட பால் வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன் வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான். நமது நவீன விஞ்ஞானத்தின் மூலம் இந்தக் கறுப்பு இடத்தை நாம் அவதானித்து இருக்கிறோம். ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் நமது பூமியும், சூரியனும், பால்வெளி மண்டலமும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, இந்த கருமையான இடத்திற்கு மிக அருகில் சூரியன் வந்து விடுகிறது என்பதும் கணிக்கப்பட்டிருக்கிறது.


ஒவ்வொரு 26000 வருசத்துக்கு ஒருதரம் மரணத்தின் கடவுள் பந்து விளையாட அழைப்பார். அதில் சில சமயங்களில் இரட்டைச் சகோதரர்கள் தப்பலாம். ஆனால் அடுத்த பந்து விளையாட்டுக்குப் பின்னர் அழைக்கப்படுவார்கள். அதற்கு 26,000 வருசங்கள் தேவை. ஒவ்வொன்றிலும் தப்ப வேண்டும். 2012 டிசம்பர் 21ம் திகதி தப்பவே முடியாது என்பதுதான் மாயன்களின் கணிப்பு.
இப்போது, மாயன்கள் எப்படித் தாங்கள் விளையாடும் பந்து விளையாட்டில் இந்தக் கதையைக் கொண்டு வந்து பொருத்துகின்றனர் என்று பாருங்கள்.

பந்து விளையாடும் மைதானம்தான் ‘பால் வெளி மண்டலம்’ (Milky Way). அதன் நடுவே உள்ள வளையங்கள்தான் ‘கரும்பள்ளம்’ (Dark Rift). விளையாடப்படும் பந்துதான் எங்கள் சூரியன். அந்தப் பந்தை யார் எந்த வளையத்தினுள் போடுகின்றனரோ, அதைப் பொறுத்து, போட்டவருக்கு வெற்றி என்று கருதப்பட்டு விளையாட்டு முடிவடைகிறது. அதாவது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கரும்பள்ளத்தை நோக்கி நகரும் சூரியன், அதனால் அழிந்துவிடுகிறது. அத்துடன் எல்லாமே முடிவடைந்து விடுகிறது. அதன் அடையாளமாக விளையாட்டின் அணித் தலைவரின் தலை வெட்டப்படுகிறது. இந்தக் கதையையும், நான் இந்தத் தொடரில் முன்னர் விவரித்த 26000 வருடக் கணக்குகளினால் எப்படி பூமி அழியலாம் என்று சொன்னவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவ்வளவு திட்டவட்டமாக மாயன்கள் உலகம் அழியும் என்கிறார்களே, உண்மையில் உலகம் அழியுமா? இல்லை இது வெறும் காரணமே இல்லாத தேவையற்ற பயம்தானா? ஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படி அழியும்? இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம் எஞ்சியிருப்பவை. அத்துடன் கூடக் கொஞ்ச பயமும்.
உலகம் அழியுமா? அழிந்தால், எப்படி அழியலாம்? அல்லது தப்பலாம்?


உலகம் 2012 டிசம்பர் 21ம் திகதியன்று அழியுமா? அழியாதா? என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். ‘உலகம் நிச்சயம் அழியும்’ என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள் என்றாலே மாயமும், மர்மமும் என்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா? இல்லையா? என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து,இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.

அதற்கு முன்னர், கடந்த(27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச் சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம் நடந்தது24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப் பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? என்பதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ‘என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன்.

விசயம் இதுதான்……..! எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஎஸார் (Hector Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும்,சிசேன் இட்ஷா (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப் பிரயாணம் மேற் கொண்டிருந்தார். இந்தப் பிரமிட்டைப் பற்றி முன்னர் பல தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக் கண்டுகளித்த சிலிஎஸார்,தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிட்டைப் பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர் மகள்களைப் போட்டோ எடுத்தது தனது ‘ஐபோன்’ மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது, படத்தில் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அப்படி என்னதான் அந்தப் போட்டோவில் இருந்தது என்பதை நீங்களே பாருங்கள்.




முதல் படத்தில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு சில செக்கண்டுகளின் பின்னர் எடுத்த படத்தில், அந்தப் பிரமிட்டின் உச்சியிலிருந்து மேல் நோக்கி மெல்லிய, ‘ரோஸ்’ நிற ஒளிவீச்சு காணப்படுகிறது. அடிப்படையில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, யாரோ போட்டோஷாப்பில் (Photoshop) செய்த கிராபிக்ஸோ என்ற எண்ணமே தோன்றும். அப்படியொரு செயற்கைத்தனம்தான் அந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் இதை ஆராய்ந்த அனைவரும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் வேலை செய்யப்படவில்லை என ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்த அனைத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்தப் படத்தில் எந்தவித சாகசங்களும், மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அடித்துச் சொல்கின்றனர். இந்தப் படத்தின் தாக்கத்தைக் கேள்விப்பட்ட நாஸா (NASA) விஞ்ஞானிகள் கூட படத்தைப் பரிசோதித்து, அதில் கிராபிக்ஸ் வேலை செய்யபடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வு, எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு, நாஸா விஞ்ஞானிகள் இப்படிப் பதில் சொன்னார்கள். அதாவது, ‘போட்டோ எடுக்கப்பட்ட ஐபோன் கேமராவில் உள்ள லென்ஸின், சென்சரின் (Sensor) ஏற்பட்ட தவறான கணிப்பினால் இப்படி ஏற்பட வாய்ப்பு உள்ளது’என்றார்கள்.

கேமராக்களின் சென்சர்களில் ஏற்படும் தவறுகளால் இப்படிப்பட்ட படங்கள் உருவாவது என்னவோ உண்மைதான். அது மிகச் சரியாக இங்கும் நடந்திருக்குமா என்று யோசிப்பதற்குப் பலர் தயங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வெறும் 17 செக்கண்டுகளின் முன்னர் எடுத்த படத்தில் இல்லாமல், இந்தப் படத்தில் மட்டும் சென்சர் தவறு செய்யுமா?அத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமா? அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும்? எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா? இவைதான் அவர்களின் சந்தேகம். ஏற்கனவே நாஸா உண்மையைச் சொல்லாது என்னும் பெயர் அதற்கு இருக்கும் போது,இதைச் சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.

மழை பெய்யத் தயாராகும் தருணங்களில், கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்னல் தாக்கின் மூலமாக, சென்சரின் தவறில் இப்படிப்பட்ட படம் உருவாகியிருக்கலாம் என்று நாஸா விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப வேண்டும் என்றே எனது மனதும் நினைக்கிறது. இதுவரை, உலகின் மிஸ்டரிகளையும், ஆச்சரியங்களையும் உங்களுக்குப் படிப்படியாகச் சொல்லி வந்த எனக்கு, பலவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் சொல்வதால், அவற்றை நம்புகிறேன் என்றும் பலர் என்னைப் பற்றி நினைக்கலாம். நான் உங்களுக்கு இப்படி, இப்படியெல்லாம் மிஸ்டரிகள் இருக்கின்றன என்ற தகவல்களைத் தருவது என்பது வேறு,அதை நம்புவது என்பது வேறு. அதனால் மேற்படி செய்தியையும் நம்புவதற்கு என் மனமும் இடம் தரவில்லை. ஆனால் என்னைத் தடுமாற வைத்த இன்னுமொரு நிகழ்வை அடுத்து நான் கண்டபோது அசந்து போனேன். இதை எந்த வகையில் சேர்ப்பது என்றே என்னால் சொல்ல முடியவில்லை. அதை நீங்களும் பாருங்களேன்.

போஸ்னியா (Bosnia) நாட்டில் விஸிகோ (Visiko) நகரில், தற்செயலாக ஆராய்ச்சியாளர்களால் ஐந்து பிரமிட்டுகள் (Pyramid) கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்தில் மட்டும்தான் பிரமிட்டுகள் இருக்கின்றன என நினைத்திருக்கும் நமக்கு, மாயன் பிரமிட்கள் தந்த அதிர்ச்சிகள் போதாதென்று, போஸ்னியாவிலும் பிரமிட்டுகள் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கும்.

பிரமிட்டுகள் இங்கு மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் உண்டு. என்ன,நமக்குத்தான் அவற்றை அறிந்திருக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. மெக்சிக்கோ, எல் சல்வடோர், குவாத்தமாலா அதிகம் ஏன், எமக்கு அருகில் இருக்கும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுகள் இருக்கின்றன. போஸ்னியாவில் இருக்கும் ஐந்து பிரமிட்டுகளும், சூரியன், சந்திரன், ட்ராகன் (Dragon), பூமி, அன்பு ஆகிய ஐந்துக்கும் அடையாளமாய் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிட்டுகளின் வயதைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். 12000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை அவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டுகளிலே மிகவும் பழமையானவை அவை.


ஆனால், நான் இப்போது சொல்ல வந்தது இந்தப் பிரமிட்டுகளைப் பற்றியல்ல. இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மீண்டும் இன்னுமொரு தொடர் ஆரம்பிக்க வேண்டும். எனவே பிரமிட்டின் தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்கிறேன்.
2010 களில் போஸ்னியாப் பிரமிட்டுகளை ஆராயச் சென்ற பௌதிகவியலாளர்கள், சூரியப் பிரமிட்டிலிருந்து ஒளிவீச்சு ஒன்று மேலே செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்த ஒளிக் கற்றை ஒன்பது மீட்டர்கள் அகலத்தில் மேல் நோக்கி வெளிவருகின்றது என்பதையும் கண்டுபிடித்தனர். அத்துடன் இந்த ஒளிக் கதிர்வீச்சின் சக்தியையும், அதாவது அதன் அலை நீளத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அது 28 கிலோ ஹேர்ட்ஸ் (kHz) அளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. இது பௌதிகவியல் விஞ்ஞானிகளாலேயே கண்டு பிடிக்கப்பட்டதால், எவரும் மறுக்கவில்லை.


இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது பற்றி என்ன முடிவுக்கு வரலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் பிரமிட்டில் இருந்து ஒளிவீச்சு வெளிவரும் என்றால், ஏன், மாயன்களின் பிரமிட்டிலிருந்தும் வெளிவரக் கூடாது? மாயன் பிரமிட்டின் ஒளிவீச்சை மறுப்பவர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. அதிர்ச்சி அத்தோடு விட்டுவிடவில்லை. மெக்ஸிக்கோவில் இருக்கும், இதுவரை நாம் கேட்டேயிராத ஒரு பிரமிட்டின் மூலமாக வந்திறங்குகிறது இன்னுமொரு அதிர்ச்சி. மெக்ஸிக்கோவில் இருக்கும் சந்திர பிரமிட்டை, 2000 ஆண்டில் படம் எடுத்தார்கள். அந்தப் படத்தில் என்ன தெரிகிறது என்பதையும் பாருங்கள்.


எல்லாமே போட்டோஷாப் வேலைகள்தானா? எல்லாமே கிராபிக்ஸ்தானா?இல்லை, இவை எடுத்த அனைத்துக் கேமராக்களின் சென்சர்களும் பழுதாகிவிட்டனவா? இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமா?இவை உண்மையென்றால், மாயனின் ‘சிசேன் இட்ஷா’ பிரமிட்டில் எடுத்தது மட்டும் ஏன் பொய்யாக இருக்க வேண்டும்? இந்த ‘சிசேன் இட்ஷா’பிரமிட்டின் அதிசயங்களையும், அதன் கட்டட அமைப்புகளைப் பற்றியும் முன்னர் நான் சொல்லியிருக்கிறேன். அத்துடன், அது பற்றி இன்னுமொரு அதிசயமும் உண்டு, அதைப் பின்னர் சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்காமல் சொல்ல வேண்டுமல்லவா?

சிசேன் இட்ஷா பிரமிட் மாயன்களால், ‘குக்கிள்கான்’ என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.

இந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களான நம்மிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிறது. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.

இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. “அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேசம்” என்றா கேட்கிறீர்கள்?அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.


புரிகிறதா? பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். “அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்” என்று யோசிக்கிறீர்களா?

உலகில் எந்த ஒரு இடத்திலும்,வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன என்று மக்கள் நம்பும்போது, அதை மறுப்பதற்கு நிமிடம் எதுவும் இல்லாமல் போகிறது.

சரி, இப்பொழுது மீண்டும் நாம் உலக அழிவுக்கு வரலாமா….?
முதலில், உலகம் அழிவது என்றால் என்னவென்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் அழிய வேண்டும் என்றால், அது இரண்டு வழிகளில் நடைபெற வேண்டும். 1. சூரியக் குடும்பத்தின் தலைமகனான சூரியன் அழிந்தால், அதனுடன் சேர்ந்து, பூமி உட்பட அனைத்துக் கோள்களும் அழிந்து போவது. 2. சூரியனுக்கு எதுவும் நடைபெறாமல், பூமி மட்டும் அழிவது. இங்கு, பூமி மட்டும் அழிவது என்று பார்த்தாலும், அதிலும் இரண்டு வகைகள் உண்டு. 1. நாம் வாழும் பூமியை ஏதோ ஒன்று மோதி அது சிதறியோ, வெடித்தோ அழிந்துவிடுவது. 2. பூமி அப்படியே இருக்க,பூமியில் உள்ள உயிரினங்கள் உட்பட அனைத்தும், நெருப்பினாலோ,நீரினாலோ, குளிரினாலோ, வெப்பத்தினாலோ அழிந்துவிடுவது.
மேலே கூறியதில் ஒன்றிலிருந்து முதலில் நாம் தெளிவாக வெளிவந்துவிடலாம்.

அதாவது, சூரியன் அழியுமோ என்னும் சந்தேகம் மாயன்களின் கதைகளிலிருந்தே நமக்கு ஏற்பட்டிருந்தது. மாயன்களின்’பொபோல் வூ’ என்னும் புத்தகம் சொன்னபடி, சூரியன் கருமையான இடத்தை நோக்கி ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் செல்வதால், அதனால் ஈர்க்கப்பட்டு அழியலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் ஆராய்ந்ததில், மாயன்கள் சொல்லியபடி ஒரு கருப்பு இடத்தை நோக்கிச் சூரியன் நகர்வது உண்மைதான் என்றாலும்,அந்தக் கருப்பு இடம் ஒரு திடமான இடமல்ல. அதாவது ஒரு நட்சத்திரம் போலவோ, கோளைப் போலவோ திடமான இடமல்ல. மில்க்கிவேயில் கோள்கள், நட்சத்திரங்கள் என்னும் திடமானவை இருப்பது போல,தூசுக்களும், வாயுக்களும் ஒன்று சேர்ந்து கோடான கோடி கிலோ மீட்டர் பரவி, பல இடங்களில் இருட்டுப் போல இருக்கின்றன.

பார்க்கும்போது மிகப்பெரிய இருண்ட பகுதி போல அவை தோன்றினாலும், அவை வெறும் வாயுக்களும் தூசுக்களும்தான். திடமான நட்சத்திரங்கள், கோள்களுக்கு அவற்றின் மையப் பகுதியில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். ஆனால் இப்படிப் பரவி இருக்கும் இந்தக் கருமையான தூசுக்களுக்கும் ஈர்ப்பு விசை இருந்தாலும், அவை மையப் பகுதியைக் கொண்டிருக்காமல் இருப்பதால், பெரிய அளவில் ஈர்ப்பு விசைகளைக் கொண்டிருக்க முடியாது. இப்படி ஒரு கருமையான இடம் எமது சூரியன் பிரயாணம் செய்யும் இடத்துக்கு அருகிலும் உண்டு என்பது உண்மைதான். அதைத்தான் மாயன்கள் ‘ஷிபால்பா’ என்னும் மரணக் கடவுளின் இடம் என்று அழைத்தார்கள்.





மாயன்கள் சொல்லியது போல, சூரியனுக்கு எந்தத் தீங்கும் வரமுடியாது. அதாவது சூரியனைக் கவர்ந்திழுத்து அழிக்கவல்ல ஈர்ப்பு சக்தி அந்த கருப்புப் பள்ளத்துக்குக் கிடையாது. இங்கு பிளாக் ஹோல் (Black hole)என்பதற்கும், இதற்கும் வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிளாக் ஹோல் என்பதுதான் பிரபஞ்சத்திலேயே ஈர்ப்பு விசை அதிகமான ஒன்று. ஆனால் இது அதுவல்ல. மில்க்கிவேயின் மையப் பகுதியில் ஒரு ப்ளாக் ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கிறது. மிக மிக மிகத் தூரத்தில். எனவே சூரியன் அழியாது என்பதில் நாம் திடமாக இருக்கலாம்.

அத்துடன் சூரியன் அழியலாம் என்னும் விபரம் கூட, மாயன்களின் பிற்காலப் புத்தகமான பொபோல் வூவில்தான் இருக்கிறது. ஆரம்பகால மாயன் காலண்டர்களிலோ, புத்தகங்களிலோ இல்லை. நமது சூரியன்,என்றாவது ஒருநாள் தன் சக்திகள் அனைத்தும் முடிந்து அழிந்து போகும் நிலை வரும் என்றாலும், அதற்கு பில்லியன் பில்லியன் வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை யாராவது பிழைத்திருதந்தீர்கள் என்றால்,அது பற்றி எமக்கு அறியத் தரவும். சூரியன் அழியாது என்றதும், எம்முன் எஞ்சி இருப்பது பூமியின் அழிவு மட்டும்தான். பூமியின் அழிவிலும் இரண்டு விதமான அழிவு உண்டு எனச் சொல்லியிருந்தேன். அதில் முதலாவது, பூமியுடன் ஏதாவது மோதுவதால் பூமி அழிவது என்பதாகும். இதைச் சற்றே நாம் பார்க்கலாம்.

இதுவரை நாம் பார்த்ததில், ‘நிபிரு’ அல்லது ‘பிளானெட் எக்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு கோள் பூமிக்கு அருகே வரலாம் என்பது முக்கியமானது. இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதை நாஸா மறுக்கிறது. அப்படி ஒரு கோள் இருந்தால், அது இப்போதே விஞ்ஞானிகளின் கண்களுக்கு அகப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். ஆனால் அந்த நிபிருவின் வேகம் மிக அதிகம் என்பதால், அது பூமியை அண்மிப்பதற்கு மிகச் சிறிய காலம்தான் தேவை எனவும், தற்போது அது எமது கண்ணுக்குத் தென்படாத தூரத்தில் இருப்பதாகவும் நாஸாவை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். அத்தோடு அது ஒரு கருமையான கோள் என்றும், பிரபஞ்சத்தில் ஒளிபடாத, கருமையான எதுவுமே தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்றும் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதற்கு 50க்கு 50 என்ற சாத்தியங்கள்தான் இருப்பதாக நாம் எடுக்க வேண்டும். அப்படி அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அப்புறம் அது நிச்சயம் நமக்குத் தெரியத் தொடங்க வேண்டும். எனவே ஆகஸ்ட் மாதம் வரை நாம் காத்திருக்கலாம். அப்போதும் எமக்கு நிபிரு தெரியாத பட்சத்தில் அந்தப் பயத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம். தெரிந்தால், மூட்டையைக் கட்டலாம்.

இதற்கு அடுத்ததாக சொல்லப்படும் பூமியை நோக்கிய மோதல் என்றால் விண்கற்கள்தான். உண்மையில் இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு விசயமும் கூட. பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அது எப்போது என்பதுதான் கேள்வி. பூமியை நோக்கி வந்து தாக்கக் கூடிய விண்கற்கள் எமது சூரியக் குடும்பத்திலேயே, பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றில் இதுவரை கணித்ததன்படி ஆயிரம் விண்கற்கள் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவு பெரியவை. இவை போல ஒன்று தாக்கித்தான் முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. அந்த நேரத்திலும் பூமி முழுமையாக அழிந்தது. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன. நூறு மீட்டர் பருமனுள்ள ண்கல் ஒன்றே போதுமானது பூமியை அழிக்க. ஆனால் இவற்றில் பல ஒரு உதை பந்தாட்ட மைதானதை விடப் பெரியன.


 

உலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும்,ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் அவதானித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்லின் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில் அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் டிசம்பர் 22ம் திகதி அளவில் பூமியை வந்து தாக்கக் கூடியதாக எந்த விண்கல்லும் இல்லை என்றே விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்பதற்குச் சாத்தியம் மிகக் குறைவு. இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.2012 டிசம்பர் 22 ம் திகதி விண்கல் தாக்காது என்றுதான் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்லும் ஒன்று எம்மை நடுங்க வைக்கிறது. அதாவது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான் அது.எனவே, நிபிரு என்ற ஒன்றினால் ஆபத்து வருமென்றால் நமக்கு ஆகஸ்டில் புரிந்து போய்விடும், விண்கல் பயம் என்பது டிசம்பர் 22 வரை தேவையில்லாதது. என்னைக் கேட்டால் இந்த இரண்டைப் பற்றியும் கவலைப்படத் தேவையே இல்லை என்றே சொல்வேன்.

இப்போது நம்மிடையே எஞ்சியிருக்கும் பூமியின் அழிவு என்பது பின்வரும் நான்கு வகையில்தான் அனேகமாக இருக்கலாம்.

1. சுனாமி,பூகம்பம் போன்ற தொடர்ச்சியான் இயற்கை அழிவுகள் 

2. பூமிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் ‘சசூப்பர் வோல்கான்’ (Supervolcan) எனப்படும் பாரிய எரிமலைகளின் வெடிப்பு. 

3. பூமியின் வட தென் துருவங்கள் இடம் மாற்றம் (Pole shift)

 4. சூரிய வெப்பக் கதிரின் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் மின்காந்த விளைவுகளும்.


இவை எல்லாவற்றையும் நாம் சரியாக கவனித்துப் பார்த்தால், இவை எல்லாமே ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விளைவுகளையே கொடுப்பவை. உதாரணமாக, பூமியின் வட-தென் துருவங்கள் இடம் மாறுவதை நாம் கருத்தில் கொள்வோம். துருவமாகத் தற்போது இருக்கும் இடம் வெப்பப் பிரதேசமாகவும், வெப்பப் பிரதேசம் துருவமாகவும் மாறினால், தற்சமயம் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து போகும். அவை மட்டும் கரைந்தால் போதும். பூமியின் அத்தனை நிலப்பகுதிகளும் பல நூறு மீற்றர்களுக்கு நீரினால் மூழ்கிவிடும். அதன் ஆரம்பக் கட்டமாக ஏற்படுவது பாரிய சுனாமிகளும்,பூகம்பங்களுமாகத்தான் இருக்கும். மாயன்களிடமிருந்து எமக்குக் கிடைத்த நான்கு புத்தகங்களில், ‘ட்ரெட்னர் கோடெக்ஸ்’ (Dredner Codex) என்பதில்தான்2012 உலக அழிவு பற்றி விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி பூமியானது நீரினாலும், நெருப்பினாலும் சூழப்பட்டு அழிவதாகத்தான் உள்ளது.

பூமியின் துருவங்கள் இடம் மாறுவதற்கும், பூமியில் தனித்தனியாக சுனாமிகளும், பூகம்பங்களும் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதற்கும் சாத்தியங்கள் தற்சமயம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சுனாமிகளும், பூகம்பங்களும் தனித்தனியே ஆங்காங்கே ஏற்பட்டாலும்,அவை ஒட்டுமொத்த உலகை அழிவை ஏற்படுத்திவிடாது. அதுவும் டிசம்பர்22க்குள் ஏற்படவே முடியாது. இதனடிப்படையில் கடைசியாக, எம்மிடையே எஞ்சியிருப்பன இரண்டே இரண்டு வியசங்கள் மட்டும்தான். அவை 1.சூரியனின் வெப்பக் கதிர் வீச்சு, 2. சசூப்பர் வோல்கான். இந்த இரண்டினாலும் ஏற்படப் போகும் அழிவை, எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. இவை இரண்டிற்கும் 2012 டிசம்பர் அழிவுக்கும் சம்பந்தம் இருக்கலாமா என்று கேட்டால், உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இல்லை என்று பதில் சொல்வதே இல்லை. இவற்றிற்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்துடன் ஒரு சாரார் சொல்ல, இருக்கிறது என்று ஒரு சாரார் அடித்துச் சொல்ல, எஞ்சியவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இல்லை என்று மறுக்கவில்லை.

“இது என்னப்பா புதுக் கதை? சூப்பர் வோல்கான் என்று ஒரு புதுச் சரடு விடுகிறாரே இவர்” என்று வழமை போல நீங்கள் நினைக்கலாம். ஆனால் பூமியை அழிவை நோக்கி நகர்த்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன இந்த சூப்பர் வோல்கான்கள் என்று சொன்னால் அதில் பொய் ஏதுமில்லை. நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் எரிமலை போன்றவை அல்ல இவை. இவை எல்லாமே மலைகள் போல அல்லாமல், சாதாரணமாக நிலத்தின் கீழ் அடங்கியிருப்பவை. மொத்தமாகப் பூமியில் எட்டு சூப்பர் வோல்கான்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக 2012 டிசம்பர் உலக அழிவுக்குக் காரணமாக அமையும் என்று நம்பப்படும் சூப்பர் வோல்கான்,அமெரிக்காவில் உள்ள ‘யெல்லோ ஸ்டோன்’ (Yellowstone) என்பதுதான்.


அமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன். 102 கிலோமீட்டர் நீளம், 82 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது. உண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு. இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.



கிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய நகரம் ஒன்றே பூமிக்குக் கீழே எரிந்தபடி இருக்கின்றது என்று சொல்லக் கூடியதாக உள்ளது. அது எப்போது வெடித்து வெளிவருமோ என்று தெரியாத நிலையில், அதனால் ஏற்படும் சுடு நீர் ஊற்றுகளைப் பார்க்க மக்கள் அங்கே கூடுகிறார்கள். இந்த யெல்லோ ஸ்டோன் மட்டும் வெடிக்குமானால், ஒட்டுமொத்த அமெரிக்காவே சில நிமிடங்களில் காலியாகிவிடும். அது கடற்பகுதியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் உலகம் எங்குமே, சுனாமி மற்றும் பூகம்ப அழிவு எற்படும். அதுமட்டு மல்லாமல் இந்த வோல்கான் வெடிப்பதனால், அதன் பாதிப்பின் தொடர்ச்சியாக, உலகின் மற்றைய ஏழு சூப்பர் வோல்கான்களும் வெடிக்கும் சாத்தியங்களும் உண்டு. இதனால் ஏற்படுவது ஒட்டுமொத்த உலக அழிவுதான்.

இதற்குச் சாத்தியம் எப்போது உண்டு என்று கேட்டால்,இப்போதே உண்டு என்றுதான் பதில் வருகிறது. அநேகமாக இந்த யெல்லோ ஸ்டோன், டிசம்பர் 22 இல் வெடிக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. அதற்கான சீற்றங்களும் அங்கே காணப்படுகிறது என்பதும் உண்மைதான். இந்த யெல்லோ ஸ்டோன் வெடிப்பின் அழிவைத்தான் மாயன்கள் குறிப்பிட்டார்களோ என்று பலர் இப்போது சந்தேகப்படுகிறார்கள். காரணம், இதனால் ஏற்படும் அழிவுகள் நெருப்பினாலும், நீரினாலும் ஏற்படுவதாகவே இருக்கிறது. நாம் இப்போது கடைசியாக எம்மிடையே எஞ்சியிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதலுக்கு வரலாம். மேலே சொன்ன அழிவுகளை சிலர் மறுத்துப் பேசினாலும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆபத்து உண்டு என்றால், அது இந்தச் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதல்கள்தான். இதற்குச் சாட்சியாக சமீபகாலங்களாக சூரியன் தனது வெப்பக் கதிர்வீச்சுகளை மிகவும் அதிகமாக்கியிருக்கிறது.



சூரியனின் இந்த கதிர்வீச்சுத் தாக்குதல் ஒரு புயல் போல பூமியைத் தாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித் தாக்கும்போது அதனுடன் சேர்ந்து உருவாகும் மின்காந்த அலைகளின் தாக்குதல்கள் பூமியின்,இரண்டு துருவங்களுக்கு ஊடாக பூமியின் உள்நுழைந்து, பூமியில் இருக்கும் அனைத்துவிதமான மின்னியல் சாதனங்களையும் தொழிற்பட முடியாமல் செய்துவிடும். அத்துடன் பூமி நினைக்க முடியாத அளவு வெப்பமாகி எல்லாமே அழியும் நிலைக்கு வந்துவிடும். இதன் மூலம் நாம் எப்படி அழிவோம் என்ற கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம். ஆனால், இந்த சூரியக் கதிர்த் தாக்கத்தால் பூமி மொத்தமாக அழிவைச் சந்திக்கும். இந்த சூரியத் தாக்குதல் 2012 இல் நடப்பதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டு என்பதே பலரின் அனுமானமாக இப்போது இருக்கிறது.






நான் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாத எந்த ஒரு அழிவையும் நம்பப் போவதில்லை. அதையே நம்பிக்கையாகவும் உங்களுக்குத் தரப் போவதும் இல்லை. இந்தத் தொடரை நான் எழுதுவதால், 2012 இல் உலகம் அழியும் என்னும் மூட நம்பிகையைப் பலருக்கு நான் விதைப்பதாக சிலர் எண்ணியிருந்தார்கள். எனது நோக்கம் நிச்சயம் அதுவல்ல. மூடநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானவன் நான். எந்த ஒரு விளைவுகளுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு என நம்புபவன் நான்.

அப்படி விளக்கம் கொடுக்க முடியாதவற்றை ‘மிஸ்டரி’ என்னும் ஒரு தொகுதிக்குள் அடைத்து வைத்து படிப்படியாக அதற்கான விடைகளை அறிய விரும்புபவன். அதனால்தான், அறிவியலுடன் சம்பந்தப்பட்ட மாயனின் இந்தத் தொடரை என் கைகளில் எடுத்தேன். என்னைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதன் அவசியமே, ‘என்னை யாரும் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்புபவன்’ என்னும் ஒரு வட்டத்தில் அடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

மொத்தத்தில் உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கேட்டால், ஆம், நூறு சதவீதம் உலகம் அழியக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அது 2012 டிசம்பர் 22 இல் அழியுமா என்று கேட்டால், அதற்குரிய சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றே சொல்லக்கூடியதாக இருக்கிறது. தற்காலப் பூமியின் நடைமுறைகளும் அவற்றையே சாட்சிப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.
ஆனால், “2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா?” என என்னைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் கேட்பீர்களேயானால், நான், “2012 டிசம்பர் 23ம் திகதி உங்களுடன் தேனீர் அருந்தத் தயாராக இருக்கிறேன்” என்றுதான் சொல்வேன்.
பிற்குறிப்பு: இதுவரை இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வந்த உங்களுக்கு, என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்து உங்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தால், அதற்கு இந்தத் தொடரை நான் எழுதத் தூண்டிய, என் அண்ணன் மகள் அருளினிக்குத்தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் முதல் முறையாக இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்
-ராஜ்சிவா
நன்றிகள்: திரு.ராஜ்சிவா

முற்றும்