Friday, November 1, 2013

உலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது!

உலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது!

உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் ஒருவரின் மனைவி தமது £600 டிரெஸ் கெட்டுப் போய்விட்டது என்பதற்கு, £200 அதிக இழப்பீடு கேட்டு லண்டன் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜெயித்து, செய்திகளில் இடம்பிடித்துள்ளார். £200 தொகையை வைத்து இவர் ‘டிப்ஸ்’தான் கொடுக்க போகிறார் என்றாலும், இதன் மூலம் கிடைத்திருக்கும் பப்ளிசிட்டிதான், அவருக்கு போனஸ்.

பிரபல வைர வியாபாரியும் கோடீஸ்வரருமான கிராஃப்பின் மனைவி கேத்திதான், கோர்ட்டுக்கு போனவர். இந்த கிராஃப் குடும்பம், உலகின் மிக செல்வந்த வைர வியாபார குடும்பங்களில் ஒன்று. பிரபல Graff diamonds நிறுவனம் இவர்களுடையதுதான்.

வைர மன்னர்கள் என அழைக்கப்படும் இந்தக் குடும்பத்தினரின் வசம்தான், உலகின் அதிகூடிய விலையுடைய வைரம் தற்போது உள்ளது. அந்த வைரத்துக்கு ‘கிராஃப் பிங்க்’ என இவர்களது குடும்ப பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு இந்த வைரத்தை £15 மில்லியனுக்கு வாங்கி தமது சொத்தாக வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

இந்த கோடீஸ்வர நிறுவன உரிமையாளரின் மனைவி கேத்தி, லண்டனில் நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்ள போகும்போது அணிந்துகொள்ள, £600 விலையில் Armani white suit டிரெஸ் வாங்கினார். 


போட்டோவில், இந்த டிரெஸ் அணிந்திருப்பதை பாருங்கள். அதை டிரைகிளீன் செய்ய வடக்கு லண்டன் ஹம்ப்ஸ்டெட் பகுதியில் உள்ள ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடையில் 


கொடுத்தார்.

குதிரைப் பந்தயத்துக்கு போகுமுன் அந்த டிரஸை எடுத்து பார்த்தால், பால்-வெள்ளை நிறம், சாம்பல் நிறமாக மாறிப் போயிருந்தது. அது பற்றி புகார் கொடுத்ததில், கடைக்காரர் மீண்டும் ஒருதடவை அந்த டிரெஸை டிரைகிளீன் செய்துவிட, பாத்திரம் துடைக்கும் துணியின் (dishcloth) கோலத்தில் வந்துவிட்டது டிரெஸ் என்பது கேத்தியின் குற்றச்சாட்டு.

‘பாத்திரம் துடைக்கும் துணி போல’ என வர்ணிக்கப்பட்ட கோலத்தில் உள்ள டிரெஸை, டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் கைகளில் பிடித்திருப்பதைபோட்டோவில் பார்க்கவும்.இதையடுத்து கோடீஸ்வரி, டிரைகிளீனிங் கடையில் சண்டை போட்டதில், கடை உரிமையாளர் £400 இழப்பீடு தர சம்மதித்தார். ஆனால், டிரெஸின் முழு விலையான £600 இழப்பீடு வேண்டும் என கோடீஸ்வரி ஒற்றைக் காலில் நின்றார். சமரசம் ஏற்படவில்லை.

அதன்பின் வழக்கு போட்டு, நீதிபதி விசாரித்து, 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு, டிரைகிளீனர், £600 இழப்பீடு வழங்க வேண்டும் என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டோவில், தீர்ப்பு வந்தபின் கோர்ட்டுக்கு வெளியே மகிழ்ச்சியுடன் கோடீஸ்வரி)

அடுத்த 24 மணி நேரத்துக்குள் இழப்பீட்டு தொகையை செலுத்தி விடுவதாக மீடியாக்களிடம் பேட்டி அளித்துள்ளார், டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் இயன் கோஹன்.

சரி. இந்த விவகாரத்தில் யாருக்கு அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளது? கோடீஸ்வரி கேத்திக்கா? டிரைகிளீனர் இயன் கோஹனுக்கா? அவரது ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடைக்கா? Armani டிசைனர் டிரெஸ்ஸூக்கா?

இல்லையாம்! பிரிட்டிஷ் மீடியாக்களின் கணிப்பின்படி, கிராஃப் குடும்பத்துக்கு சொந்தமான Graff diamonds வைர விற்பனை நிறுவனத்துக்கே அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளதாம்!

அடியாத்தீ! எப்படியெல்லாம் பப்ளிசிட்டி கிடைக்கிறது பாருங்கள்!! 

போப் நாற்காலியில் காலாட்டிய வாண்டு

போப் நாற்காலியில் காலாட்டிய வாண்டு


மேடையில் போப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் வேகமாக வந்து அவர் இருக்கையில் அமர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கம் போல, பிரார்த்தனை கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்று உரையாற்றி கொண்டிருந்தார். பிள்ளைகள், பேரன், பேத்திகளை வளர்ப்பதில் குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின்  முக்கிய பங்கு  பற்றி  அவர் பேசிக்கொண்டிருந்தார். 

கூட்டத்தில் பெரும்பாலும், வயதான தம்பதிகள் தான் இருந்தனர்.  அவர்கள் போப் பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. நான்கு வயது சிறுவன் திடீரென மேடையேறி, போப் நாற்காலியில் உட்கார்ந்தது தான் சலசலப்புக்கு காரணம். மேடையில் இருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு வியப்பு. 

போப் கவனமும் இதில் திரும்பியது.  அவர் மேடையில் திரும்பி பார்த்தார். ஒரு வாண்டு , தன் இருக்கையில் அமர்ந்து இருப்பதை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தார். அந்த சிறுவனோ சீரியசான மூடில் இருந்தான். அவரையே கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்து, காலாட்டியபடி இருந்தான்.  

 போப் பேச்சை தொடர்ந்தார். அவர் பேச்சை விட, அவன் மீது தான் பலரின் கவனம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவன் அவர் காலை பற்றிக்கொண்டான். அதையும் அவர் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார். அவன் பெயர் விவரம் தெரியவில்லை. போப் பேசிய பின், அவரை பார்த்து சற்று விலகி, சடசடவென மேடையில் இருந்து இறங்கி போய், தன் பெற்றோருடன் உட்கார்ந்து கொண்டான்.

மாவிரனுக்கும் பாம்பைக் கண்டால் பயம் ஏன் ?

மாவிரனுக்கும் பாம்பைக் கண்டால் பயம் ஏன் ?


விலங்குகளுக்கு மட்டும் அல்ல, மனிதர்களுக்கும் பாம்பை கண்டால் பயம். ஆனால் உன்மையில் நெப்போலியன் போன்ற மாவீரனுக்கும் பாம்பை கண்டால் பயன் தோன்றும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது பாம்பு ஒன்றை நாம் முதலில் கண்டால், அந்த செக்கன் எமது மூளையில் முதலில் ஏற்படுவது பயம். பின்னர் நாம் அதனை சமாளித்துக்கொள்கிறோம் என்று விளக்கம் கூறுகிறார்கள். சிறுவயதில் இருந்தே பாம்பை காண்டிராத குழந்தை ஒன்று பெரியவராக வளர்ந்தபின்னர் பாம்பைக் கண்டால் அவர் மூளையில் ஏற்படும் மாற்றம் எப்படி இருக்கும் ? என்றும் மற்றும் பாம்பை முதலிலேயே கண்டவர் திடீரென ஒரு பாம்பை கண்டால் அவர் மூளையில் என்ன மாற்றம் ஏற்படும் என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் என்னவென்றால் இரண்டு மூளைகளுமே ஒரே மாதிரி ரியாக் பண்ணுவதே இதற்கு காரணம் ஆகும்.

இதற்கு காரணம் என்ன ? மனிதனுடைய மூளையில், சில விடையங்கள் ஏற்கனவே பாதுகாத்து வரப்படுகிறது. அனேகமாக மனிதனின் மூளை அனுபவங்களைக் கொண்டு தான் விடையங்களை சேமித்து வருவதோடு அனுபவங்களைக் கொண்டு தான் கற்றும் வருகிறது. இன் நிலையில் பாம்பு என்னும் பிராணி கடிக்கும். அதனால் மரணம் சம்பவிக்கும் என்று மனித மூளைக்கு தெரியாத இடத்தில், அவ்வகையான மூளை ஏன் பாம்பை கண்டதும் பயம் கொள்கிறது ? இதுவே விஞ்ஞானிகளின் கேள்வியாக உள்ளது. இதனால் ஜெனட்டிக் மெமரி என்று சொல்லப்படும், சில விடையங்களை நமது மூளை பிறவியில் இருந்தே நினைவில் வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்று கண்டுபிடித்துள்ளார்கள் விஞஞானிகள். இந்த நினைவு திறன், கரு உருவாகும் முன்னரே காணப்படுகிறது(அதாவது மனிதனின் டி.என்.ஏ) வில் காணப்படுகிறதா என்று அவர்கள் தற்போது ஆராய முறபட்டுள்ளார்கள். 

இதற்கு பாம்பும்-கீரியும் நல்லதொரு உதாரணம் ஆகும். என்ன தான் தனது வாழ் நாளில் கீரி பாம்பை பார்க்காமல் வளரலாம். ஆனால் அது தற்செயலாக ஒரு பாம்பை கண்டால் நிச்சயம் அதனுடன் சண்டையிடவே செய்யும். அது ஏன் அப்படி செய்ய வேண்டும் ? ஏன் அவர்கள் எப்போதும் எதிரியாக இருக்கிறார்கள் என்பதனையும் ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். மனிதனின் மூளை பல மில்லியன் ரகசிகயங்களை உள்ளடக்கியது. அதனை முழுமையாகக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பெரும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். அதிலும் தற்சமயம் உள்ள மனிதர்கள் தமது மூளையின் திறனில் 20% சதவீகிதத்தை மட்டுமே பாவித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 25 அல்லது 30 சதவிகிதத்தை பாவிக்க ஆரம்பித்தால், பல தொழில் நுட்ப்ப வளர்சியை நாம் அடைந்திருப்போம். பிற கிரகங்களுக்கு செல்லும் வழியை கூட கண்டுபிடித்திருப்போம் என்கிறார்கள்.

Thursday, October 31, 2013

திடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்: இவை கார், பில்டிங்கை விழுங்கும் அளவு பெரியவை!

திடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்: இவை கார், பில்டிங்கை விழுங்கும் அளவு பெரியவை!சமீப காலமாக உலகின் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு நகரங்களில் திடீரென பூமியில் துவாரம் ஏற்படுவது பற்றிய செய்திகள் வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

துவாரம் என்பது, சின்னதாக எலி புகுந்து செல்லும் சைஸ் துவாரங்கள் அல்ல. சில இடங்களில் னிலத்தில் ஏற்படும் துவாரங்கள், பெரிய பில்டிங்கையே விழுங்குகின்றன. வீதிகள், கார்கள் எல்லாம் உள்ளே போய்விடும் அளவுக்கு மிகப் பெரிய துவாரங்களும் ஏற்படுகின்றன. முன்பு எப்போதாவது ஏற்படும் இந்த துவாரங்கள், தற்போதெல்லாம் அடிக்கடி ஏற்படத் தொடங்கியுள்ளன.

இதை, sinkholes என்பார்கள். வெளியே நடக்கும்போது பாதிக்காது, நமக்கு நேரும்போதுதான் பாதிப்பு தெரியும் என்ற விதத்தில், சமீபத்தில் கனடா, மொன்ட்ரியோல் நகரில் திடீரென இந்த நில துவாரம் ஏற்பட்டபோது, கனடாவில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரே, கனேடிய மீடியாக்களில் sinkholes பற்றி கதை கதையாக பேசத் தொடங்கினார்கள்.

இதுவரை உலகில் ஏற்பட்ட நில துவாரங்களில் மிகப் பெரியது, வென்சூலா நாட்டில் ஏற்பட்டது. சிமா ஹம்போல்ட்டில் ஏற்பட்ட துவாரம், 18,000,000 கியூபிக் மீட்டர் அளவுக்கு பெரியது என்றால், அது எந்தளவு பெரிய துவாரம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். மிக ஆழமான துவாரம் ஏற்பட்டது சீனாவின் சொங்குவின் பகுதியில். 2,172 அடி ஆழமான துவாரம் அங்கு ஏற்பட்டது.

அமெரிக்காவில், காலநிலை அட்டகாசமான மாநிலம் என்று கருதப்படும் புளோரிடாவில்தான் இந்த துவாரங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஐரோப்பாவில், இத்தாலியில் அதிகம் ஏற்படுவது வழக்கம்.

நிலத்தில் துவாரம் என்று நாம் சொல்லும்போது, ஏதோ பொட்டல் வெளியில் பூமி வெடிப்பது என்று நினைக்காதீர்கள். பல துவாரங்கள், நகரங்களில், மக்கள் வசிக்கும், நடமாடும் பகுதிகளில் ஏற்படுகின்றன என்று சொன்னால், அதை கற்பனை செய்வது கடினமாக இருக்கலாம். போட்டோ பார்க்கலாமா?

உலகின் வெவ்வேறு பகுதிகளில் திடீரென பூமியில் sinkhole துவாரங்கள் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சிலவற்றை தருகிறோம். ஒவ்வொன்றாக பாருங்கள். அப்போதுதான் நாம் குறிப்பிடும் அந்த துவாரங்களின் நிஜ உருவத்தை தெரிந்து கொள்ள முடியும்.Tuesday, October 29, 2013

நாளை இன்போசிஸ் மீது அமெரிக்காவினால் விதிக்கப்படவுள்ள ரூ. 215 கோடி ருபா அபராதம் !!!!!

வுிசா முறைகேடு... இன்போசிஸ் மீது ரூ. 215 கோடி அபராதம் விதிக்கும் அமெரிக்கா! 


சட்டவிரோதமாக விசாக்களைப் பயன்படுத்தியது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க அரசு, 3.5 கோடி டாலர் அபராதத் தொகையை விதிக்கவுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ. 215.32 கோடியாகும். 

ஒரு நிறுவனம் மீது அமெரிக்கா விதிக்கும் வரலாறு காணாத அபாரதத் தொகையாகும் இது என்பதால் பரபரப்பு நிலவுகிறது. 

இதுவரை அமெரிக்காவில் எந்த ஒரு நிறுவனத்திற்கும் இப்படி ஒரு அபராதத் தொகையை அமெரிக்க அரசு விதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏன் இந்த அபராதம் 

இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது மற்றும் தான் சார்ந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தியபோது ஒர்க் விசாவுக்குப் பதில் விசிட்டர் விசாவை பெருமளவில் பயன்படுத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது முறைகேடானது என்பது அமெரிக்காவின் வாதமாகும்.

நாளை அபராதம் விதிக்கப்படும் 

இன்போசிஸ் மீதான அபராத உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

எச்1பிக்குப் பதில் பி 1 

குறுகிய கால வர்த்தகப் பயணத்திற்காக அமெரிக்க அரசு பி 1 விசாவை வழங்குகிறது. இது ஒர்க் விசா அல்ல. அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமானால், வெளிநாட்டினர் எச்1 பி விசாவைத்தான் பெற வேண்டும். ஆனால் இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு பி 1 விசாவைப் பெற்று அங்கு அனுப்பி பணிகளைச் செய்ய வைத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.

பெருமளவிலான ஊழியர்கள் 

இப்படி முறைகேடாக விசாவைப் பயன்படுத்தி பல ஊழியர்களை சட்டவிரோதமாக நீண்ட காலம் தங்க வைத்து பணியில் அமர்த்தியதாகவும் இன்போசிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் வேலையைப் பறித்து விட்டனராம் 

இதுதொடர்பாக விசாரணை நடத்திய விசாரணைக் குழுவினர், இன்போசிஸ் நிறுவனத்தின் செயலால், நல்ல தகுதியும், திறமையும் இருந்தும் அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளது இன்போசிஸ். மேலும் அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என்பதற்காக, குறைந்த ஊதியத்தைப் பெறும் இந்தியர்களுக்கு தனது வேலைகளை இப்படி முறைகேடாக விசாக்களைப் பயன்படுத்தி அது செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதாம்.

இன்போசிஸ் விளக்கம் 

இந்த விவகாரம் குறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள இமெயில் செய்தியில், இதுதொடர்பாக தங்களது அமெரிக்க வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


21 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை: விமானநிலையம் மூடல்

21 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை: விமானநிலையம் மூடல் 


கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய எரிமலையான எட்னா நேற்று வெடித்துச் சிதறியது. அதன் எதிரொலியாக கடானியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் உயரமான எட்னா எரிமலை, தெற்கு இத்தாலியில் சிசிலி தீவில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பே இந்த எரிமலை வெடிக்கும் சூழ்நிலையில், புகை கசிந்து கொண்டே இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில், நேற்று எட்னா எரிமலை வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து கரும் புகையுடன் எரிமலை குழம்பு பீறிட்டு பாய்ந்தவண்ணம் உள்ளது.

எட்னா எரிமலை சிசிலியில் கடானியா விமான நிலையம் அருகே உள்ளது. எனவே, அதில் இருந்து வெளியேறிய புகை விண்ணிலும், விமான நிலையத்திலும் பரவிக் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப் பட்டு கடானியா விமான நிலையம் மூடப்பட்டது. 

கடந்த 1992-ம் ஆண்டு வெடித்த எட்னா எரிமலை கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இது வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.