Friday, May 3, 2013

ஹலோ, நான் கிரகாம் பெல் பேசறேன்...

ஹலோ, நான் கிரகாம் பெல் பேசறேன்...தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல். தொலைபேசிக்குப் பின் ஒலி பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட கிரகாம் பெல் தனது குரலை ஒரு தகட்டில் பதிவு செய்து வைத்தார். அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர்.

தொலைபேசி கண்டுபிடிப்புக்காக அறியப்பட்டிருந்தாலும், கிரகாம் பெல் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளார்.

அலெக்சாண்டர் கிரகம் பெல் 1847-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் 1876-ம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட அடிகோலினார். .

தொலைபேசி கண்டுபிடித்த பின் 9 வருடம் கழித்து அவர் புதிய முயற்சியாக, குரலை பதிவு செய்யும் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இவர் 1885-ம் வருடம் ஏப்ரல் 15-ம் தேதி அவரது குரலை மெழுகு தடவிய காட்போர்ட் தகட்டில் பதிவு செய்துள்ளார்.

இது அமெரிக்காவில் உள்ள சுமித் சோனியன் அருங்காட்சியகத்தில் பழமையான ஒலித் தகடுகள் பாதுகாக்கும் பிரிவில் 138 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த தகட்டில் பதியப்பட்டிருக்கும் கிரகாம் பெல்லின் குரலை, கம்ப்யூட்டரின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்டெடுத்துள்ளனர். அதில் அவர், 'கேளுங்கள் என் குரலை - அலெக்சாண்டர் கிரகாம் பெல்' என்று கூறியுள்ளார்.

மேலும் இதில் வரிசையாக எண்களை அவர் கூறியுள்ளார். அத்துடன் 'மூன்றரை டாலர்கள்', 'ஏழு டாலர்கள் மற்றும் 29 சென்ட்டுகள்' என்று பல பண மதிப்புகளையும் பதிவு செய்துள்ளார். இதனால் அவர் இதனை வணிக விசயங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு

தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு


இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத் தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள் ளது என பாதியில் நிறுத்தி விட வேண்டாம். இதை ஒவ் வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டு ம் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத் தியவன் ராஜ ராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயி னும் இவற்றில் முரண்பாடுகள் காணப் படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப் பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படை யில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜ ராஜன் காலத்தில் கை யாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்துகொள் வது அவசியம்…

பெரிய கோயில் அளவு கோல்


எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதி னாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விர லோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதா வது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்ப தே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவ றையின் இரு தளங்களிலும் விமா னத்தின் பதின்மூன்று மாடி களும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. அலகு களின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சது ரம். கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமான த்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகு கள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடி கிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகு கள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திற னைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ் வொரு அடுக்கிலும் நான்கு கற் கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின் றன என்பதைக் கவனித்த பின் னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு


180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்ட ப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம். கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணை க்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமா னத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக் கும் அதன் உயரத்து க்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமை க்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு


கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப் படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப் பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமா னம் கட்டுவதற்குச்சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது. இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட் ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தி ன் சுவர்கள் இணைக்கப்பட்டி ருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக் கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட் டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமி ருக்கிறது.


தஞ்சை பெரியகோவில் - கல்வெட்டுகள் 

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (ய உதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆத அஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத் துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத் தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத் தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைக ளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்து ச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாக விருந்தது.

தஞ்சை பெரியகோவில்


மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முத லிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

6 அங்குல எலும்புக்கூடு பாரிய தலையுடன் மீட்பு - மனிதனுடையதாம்!

6 அங்குல எலும்புக்கூடு பாரிய தலையுடன் மீட்பு - மனிதனுடையதாம்!


சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது.

அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் பின், அது 6 அல்லது 8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த மனித சிறுவனுக்குரியது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வானது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது.


திருமணம் செய்ய ரத்தப் பொருத்தமும் கண்டிப்பாக பாருங்கள்!

திருமணம் செய்ய ரத்தப் பொருத்தமும் கண்டிப்பாக பாருங்கள்!


”கல்யாணத்தில் இணைகிற இருவருக்கு வேறு எந்தப் பொருத்தங்கள் அவசியமோ, இல்லையோ ரத்தப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப் பட வேண்டும்.

பெண்ணின் ரத்தப் பிரிவு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றும் கூட திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பெரும்பாலானோர் பார்க்கிறார்கள். சில இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது. முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப் பொருத்தங்களும், அதில் 7 வரை இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாகஇதில் ரத்தப் பொருத்தம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம் காலமாக இருந்து வருவதுதான்.

இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் கூறியிருக்கிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது – உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. – குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது.

இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும் பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.

சிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு.பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும்.

ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச் சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.

ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization ஏற்படும்.

இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது.

முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது.

முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும்.

இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள்.

குழந்தைRh + தாய்Rh – என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம் செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும்.

இது எல்லாம் முதல் குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்.

ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது.

இதற்கு அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம் குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின் முன்னேற்றங்கள்.” என்கிறார்கள் மருத்துவர்கள்!

- ஸ்ரீவித்யா -

Tuesday, April 30, 2013

பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?

பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?


 
நீங்களும் நானும் திறந்த வெளியில் ஏதோ ஓரிடத்தில் நிற்கிறோம்.அங்கிருந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் பனிக்கட்டியால் மூடப்பட்ட வட துருவத்துக்குப் போய்ச் சேருவோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் உறைந்த பனிக்கட்டிப் பிரதேசமான தென் துருவத்துக்குப் போய்ச் சேருவோம்.

மாறாக நாம் நிற்கிற இடத்திலிருந்து பெருச்சாளி பள்ளம் தோண்டுவதைப் போல பள்ளம் தோண்டியபடி பூமியின் மையத்தை நோக்கி நேர் கீழாகப் போவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.  

சில கிலோ மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே வெப்பம் தகிக்கும். அந்த வெப்பத்தில் நாம் வெந்து போய் விடுவோம்.

உலகில் மிக ஆழமான தங்கச் சுரங்கங்களில் பாறையை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும்.தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள டாவ் டோனா தங்கச் சுரங்கம் தான் உலகின் மிக ஆழமான சுரங்கமாகும்.அதன் ஆழம் 3.9 கிலோ மீட்டர்

அச்சுரங்கத்தில் பாறைகளின் வெப்பம் 60 டிகிரி செல்சியஸ். சுரங்கத்தில் அந்த இடத்தில் வெப்ப நிலை 55 டிகிரி செல்சியஸ். அவ்வித வெப்ப நிலையில் தொழிலாளர்களால் பணியாற்ற இயலாது எனபதால் மேலிருந்து குழாய்கள் மூலம் தொடர்ந்து உடைந்த  ஐஸ் கட்டிகளை அனுப்பி வெப்பதைக் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்கிறார்கள்.சுமார்  நான்கு கிலோ மீட்டர் ஆழத்திலேயே இந்த கதி.

பூமியின் மையம் என்பது தரை மட்டத்திலிருந்து 6,371 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளது. ஆகவே பூமியின் மையத்தில் வெப்பம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

பூமியின் மையத்தில் வெப்பம் 5,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் சில பரிசோத்னைகள் மூலம் இபோது புதிதாகக் கணக்கிட்டதில் இது 6,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகிட்டத்தட்ட சூரியனின் மேற்புறத்தில் உள்ள வெப்பத்துக்குச் சமமானது.

பூமியின் மையம் இரும்பால் ஆனது. ஆனால் அந்த வெப்ப நிலையிலும் அது குழம்பாக இல்லாமல் படிக வடிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

பூமியின் மையம் இந்த அளவுக்கு வெப்பமாக இருப்பதற்குக் குறைந்தது மூன்று காரணங்கள் உண்டு.பூமி தோன்றிய போது மையத்தில் இருந்த வெப்பம் அவ்வளவாகக் குறையவில்லை. இரண்டாவதாக பூமியின் மையம் கடும் அழுத்தத்தில் இருக்கிறது. எந்த அளவுக்கு அழுத்தம் உள்ளதோ அந்த அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும். பூமியின் மையத்தில் உள்ள அழுத்தமானது தரை மட்டத்தில் உள்ளதைப் போல பத்து லட்சம் மடங்காக உள்ளது.

பூமியில் மேலும் மேலும் ஆழத்தில் யுரேனியம், பொட்டாசியம் தோரியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் அதிகமாக உள்ளன.இந்த கதிரியக்க உலோகங்கள் இயற்கையாக சிதைவுக்கு உள்ளாகின்றன. அப்போது வெப்பம் தோன்றும். பூமியின் மையம் பயங்க்ர வெப்பத்தில் உள்ளதற்கு இதுவும் காரணம்.

 பூகம்பங்க்ள் ஏற்படும் போது தோன்றும் அலைகள் பூமியின் பல்வேறு அடுக்குகளின் தடிமன், அடர்த்தி ஆகியவை பற்றித் தெரிவிக்கின்றன.ஆனால் பூமியின் மையத்தில் உள்ள வெப்பம் பற்றி அவை தெரிவிப்பதில்லை.

ஆகவே  பூமியின் மையத்தில் உள்ள வெப்பம் எந்த  அளவில் இருக்கலாம் என்று அறிய நவீன ஆராய்ச்சிகூடங்களில் சோதனைகளை நடத்தலாம் இதற்கான சோதனை பிரான்ஸ் நாட்டில் கிரெனோபிள் என்னுமிடத்தில் உள்ள European Synchrotron Radiation Facility (ESRF) என்னும் ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்பட்டது. இது பல ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து நிறுவியதாகும்.இங்கு மிகுந்த ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்கும் வசதிகள் உள்ளன்

பூமியின் மையத்தில் இருக்கின்ற அளவுக்கு செயற்கையாக அழுத்தத்தை  உண்டாக்குவதற்கென விசேஷக் கருவி உள்ளது.உள்ளங்கையில் வைத்துக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு அது சிறியது.Diamond Anvil Cell  என்பது அதன் பெயர்.அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.

இக்கருவியில் எதிர் எதிராக வைர ஊசிகள் உண்டு. இந்த இரு வைர  ஊசிகளின் நுனிகளுக்கு  நடுவே உள்ள நுண்ணிய இடைவெளியில் நுண்ணிய உலோகப் பொருளை வைக்கலாம். பூமியின் மையத்தில் இரும்பு உள்ளது என்பதால் மிக நுண்ணிய இரும்புத் துணுக்கை வைத்தார்கள். பின்னர் அந்த இரும்புத் துணுக்கு மீது பயங்கரமான அழுத்தத்தைப் பிரயோகித்தனர்.

அதே சமயத்தில் லேசர் கருவி மூலம் இரும்புத் துணுக்கின் வெபபத்தை அதிகரித்துக் கொண்டே போயினர். அப்படியான சோதனையின் போது கடும் எக்ஸ் கதிர்களை கொண்டு இரும்புத் துணுக்கைத் தாக்கினர்.இதன் பலனாக இரும்பு அணுக்கள் பல விளைவுகளைக் காட்டின. இபபரிசோதனைகளின் போது வெவ்வேறு கட்டங்களில் அழுத்தம் அதிகரிக்கப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது. அதே போல வெப்ப அளவும் அவ்வப்போது மாற்றப்பட்டது.

இப்படியான நுணுக்கமான சோதனைகள் மூலமே பூமியின் மையத்தில் வெப்பம் எந்த அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது.

பூமியின் உட்புறம் பற்றி ஆராய்கிற  நிபுணர்கள், பூமியின் காந்தப் புலம் பற்றி ஆராயும் நிபுணர்கள், பூகம்பங்களை ஆராயும் நிபுணர்கள் என பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு பூமியின் மையத்தில் இருக்கக்கூடிய வெப்பம்  பற்றிய தகவல் தேவைப்படுகிறது.அந்த நோக்கில் தான் இந்த ஆராய்ச்சி நடத்த்டப்பட்டது.

ஆசையை வெல்ல பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி: அமெரிக்க இணையத்தளம்


ஆசையை வெல்ல பெண்களை நிர்வாணமாக்கி உடன் தூங்கினார் காந்தி: அமெரிக்க இணையத்தளம்


மகாத்மா என்று இந்திய மக்கள் கொண்டாடும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இணையதளமான கிராக்கட் டாட் காம் மகாத்மாக காந்தி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பல போராட்டங்கள் நடத்தி இந்தியாவுக்கு சதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை புனிதராக மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் தனது 70 வயதில் கூட இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி இருக்கும் தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார்.

காந்தி ஆசிரம விதிப்படி அங்குள்ள பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும். ஆசையை வெல்ல அவர் இவ்வாறு செய்தாராம். காந்தி வங்கம் சென்றபோது தனது 18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி தூங்கச் செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், காந்தியை பற்றிய பிற சர்ச்சைகள் குறித்து இன்னொரு பத்திரிக்கையின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்...

ஹிட்லருக்கு கடிதம் 

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் நாட்டின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை நாங்கள் ஒரு போதும் சந்தேகித்தது இல்லை. மேலும் உங்கள் எதிர்ப்பாளர்கள் கூறுவது போன்று நீங்கள் ஒரு அரக்கன் என்று நாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காந்தி ஒரு 'கே(gay)' 

காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை அண்மையில் வெளியான சில கடிதங்கள் வலுப்படுத்தியுள்ளன. தென்னாப்பிரிக்க பாடி பில்டர் ஹெர்மன் காலன்பாக் மற்றும் காந்தி இடையேயான கடிதங்கள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.

காந்திக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? 

காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால் காந்திக்கு ஏன் அந்த நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதும் சர்ச்சையாக உள்ளது.

செயற்கை கருத்தரிப்பு மூலம் 14 வயது மகள் கட்டாய கர்ப்பம்: தாய்க்கு 5 ஆண்டு சிறை

செயற்கை கருத்தரிப்பு மூலம் 14 வயது மகள் கட்டாய கர்ப்பம்: தாய்க்கு 5 ஆண்டு சிறைநான்காவது குழந்தைக்காக தனது மூத்த மகளின் கர்ப்பப்பைக்குள் கட்டாயமாக விந்தணுவை செலுத்தி, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை விவாகரத்து செய்து விட்டு இங்கிலாந்தில் குடியேறினார். அங்கு 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். மேலும், ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டார். ஆனால், அது தனது குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணினார். அதற்காக அவர் விபரீத முயற்சியில் இறங்கினார்.

இதற்காக தேவையான விந்தணுவை டென்மார்க்கில் உள்ள ஒரு நிறுவணம் மூலம் இண்டர்நெட்டில் ஆர்டர் செய்து பெற்றுள்ளார் அப்பெண். பின் தனது தத்து குழந்தைகளில் மூத்தவளான 14 வயது மகளை இதற்காகத் தேர்ந்தெடுத்தார்.

அதற்காக தனது 14 வயது மகளின் கர்ப்ப பைக்குள் தானமாக பெறப்பட்ட விந்தணுவை கட்டாயப்படுத்தி செலுத்தினார். இதனால் செயற்கை முறையில் அப்பெண்ணை கருத்தரிக்க செய்தார்.

இது குறித்து அச்சிறுமி கூறுகையில், இதன் மூலம் என் அம்மா என்னை மேலும் அதிகமாக நேசிப்பார் என்பதால் இதற்கு நான் சம்மதித்தேன். தான் விரும்பியதை அடைய எதையும் செய்யும் மனப்போக்கு அவருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சிறுமியை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கியது மிகப்பெரிய குற்றமாகும். எனவே, அந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் ஜாக்சன் குற்றம் சாட்டப்பட்ட அந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

Monday, April 29, 2013

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!!உலகில் உள்ள அனைவருக்குமே ஒருசிலவற்றில் அதிகப்படியான விருப்பம் இருக்கும். அத்தகைய அதிகப்படியான விருப்பதால், அதனைப் பெறுவதற்கும், பின்பற்றுவதற்கும் அதிக ஆர்வம் செலுத்துவதால், நம்முடன் பழகுபவர்களுக்கு அது பொறுமையை இழக்கச் செய்து, சில சமயங்களில் எரிச்சலூட்டும் படியாகவும் இருக்கும். இவற்றில் பெண்களின் செயல்கள் தான் ஆண்களை கோபமூட்டும். உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. இது போன்று பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத செயல்கள் உள்ளன.

அவற்றில் ஐந்து செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

* வெளியே கிளம்புவதற்கு 10-15 நிமிடம் போதுமானது. ஆனால் பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, அவ்வாறு கிளம்பி வந்த பின், பெண்கள் தாம் எப்படி இருப்பதாகவும் கேட்பார்கள். அப்போது ஆண்கள் பெண்களின் மனது குளிரும் வகையில் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இநத் நேரம் காத்திருந்ததை விட, கேட்ட கேள்விக்கு சரியாக பதிலளித்தும் பெண்கள் ஒப்புக் கொள்ளாதது, ஆண்களுக்கு கோபத்துடன் எரிச்சலையும் உண்டாக்கும்.

* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் முகத்தை அழகுடன் வெளிப்படுத்துவதற்கு மேக்-கப்பை போடுவார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும். ஆகவே அளவான மேக்-கப் போடுவது இயற்கையான அழகை வெளிப்படுத்துவதோடு, கவர்ச்சியாகவும் இருக்கும்.

* எப்போது டேட்டிங் சென்றாலும், ஆரம்பத்தில் பெண்கள் கூச்சப்பட்டு, பசித்தாலும் அளவாகவே சாப்பிடுவார்கள். ஆனால் அதுவே நன்கு பழகிவிட்டால், நன்கு ஒரு கட்டு கட்டுவார்கள். இவ்வாறு நன்கு எதற்கும் கூச்சப்படாமல் இருப்பவர்களையே ஆண்களுக்கு பிடிக்கும். அதைவிட்டு சரியாக சாப்பிடாமல் இருந்தால், பின் சீன் போடுகிறார்கள் என்று நினைத்து ஆண்களுக்கு மனதில் ஒருவித எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண்களுக்கு எப்போதும் தம்முடன் இருப்பவர்கள், எந்த ஒரு கூச்சமுமின்றி நன்கு வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆகவே எப்போதும் கூச்சப்படாமல் எப்போதும் போன்று நடக்க வேண்டும்.

* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும். அதுமட்டுமின்றி, அவர்களுடன் போகும் போது டெபிட் கார்டு போதாது, கூடவே க்ரிடிட் கார்டும் எடுத்து செல்ல வேண்டி வரும்.

* இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். அதிலும் கூந்தல் என்று வந்துவிட்டால், கூந்தலை எப்படியெல்லாம் ஸ்டைலாக சீவலாமோ, அவை அனைத்தையும் முயற்சித்து பார்ப்பார்கள். அவ்வாறு முயற்சிப்பது தவறல்ல. ஆனால் அது நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது. மேற்கூறியவாறு பெண்கள் இல்லாமல் இருந்தால், நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!!!

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!!!கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது.

அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது. இந்த நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது. மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது.

மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? சரி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?

வயிற்றுப்போக்கு 


வயிற்றுக் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மேன்கனீஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன. மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவும்.


எடை குறைவு 

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் அதனை பருகினால் வயிறு நிறைந்து போவதால், அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.


நீரிழிவு 

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.


வைரஸ் நோய்கள் 

சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகள் நம் உடம்பை தாக்குவதால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அஅடங்கியிருப்பதால், மேற்கூறிய வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது.உடல் வறட்சி 

உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.இரத்த அழுத்தம் 

இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.சிறுநீரக கற்கள் 

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும்.


சரும பிரச்சனைகள் 

பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.


புற்றுநோய் 

சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.


கொலஸ்ட்ரால் 

மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, இளநீரில் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறினாலும், அது வெறும் தொடக்க நிலையிலே இருக்கிறது. ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.பொலிவான சருமம் 

இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களின் கலவை உள்ளன. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாக மின்னும்.

அன்புள்ள மகனே, இது தான் டி.என்.ஏ!!


அன்புள்ள மகனே, இது தான் டி.என்.ஏ!!


நமது செல்களில் இருக்கும் ஏணிப்படிகள் தான் நமது தோற்றத்தை, குணத்தை, சந்ததியை நிர்ணயிக்கின்றன. இந்த ஏணிப்படி தான் டிஎன்ஏ.நம் வாழ்வின் ரகசியமே ATGC தான்: 

அடினைன் (A), குவானைன் (G), சைட்டோசின் (C), தையமின் (T), என்ற நான்கு அமினோ அமிலங்கள் தான் (புரதங்கள்) இந்த ஏணிப்படியை உருவாக்குகின்றன. நியூக்ளியோடைட்ஸ் எனப்படும் இந்த ATGC எந்த வரிசையில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்தே 'நாம்' உருவாகிறோம், வாழ்கிறோம். நம் வாழ்வின் ரகசியமே இந்த ATGC ஏணிப்படி தான்.


பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்சன்: 

இந்த டிஎன்ஏவின் வடிவத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிரிக் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட்சன் ஆகிய உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். 1953ம் ஆண்டு இவர்கள் டிஎன்ஏவின் வடிவத்தை கண்டுபிடித்தனர்.

மகனுக்குக் கடிதம்: 

இந்த கண்டுபிடிப்பு குறித்து தனது மகன் மைக்கேலுக்கு டிஎன்ஏவின் (முதல்) ஸ்கெட்ச் படங்களுடன் கடிதம் எழுதினார் கிரிக். அப்போது மைக்கேலுக்கு வயது 12. ஒரு சிறுவனுக்குப் புரியும் வகையில் தனது கடிதத்தில் டிஎன்ஏவின் வடிவம், அதன் முக்கியத்துவம் குறித்து அழகான படங்களையும் வரைந்து அனுப்பி வைத்தார் கிரிக்.


ரூ. 30 கோடிக்கு ஏலம்: 

இப்போது அந்தக் கடிதம் 6 மில்லியன் டாலர்களுக்கு, அதாவது ரூ. 30 கோடிக்கு ஏலம் போயுள்ளது. நியூயார்க் நகரில் இந்தக் கடிதத்தை மைக்கேல் ஏலம் விட்டபோது அதை வெளியில் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ரூ. 30 கோடி தந்து வாங்கிச் சென்றுள்ளார்.


அழகிய கடிதம்: 

அந்தக் கடிதத்தில் கிரிக் எழுதியிருப்பதாவது: ''அன்புள்ள மகன் மைக்கேல், நானும் வாட்சனும் இணைந்து ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளோம் என்று நினைக்கிறோம். de-oxy-ribose-nucleic-acid என்ற டிஎன்ஏவின் வடிவத்தை கண்டுபிடித்துள்ளோம். டிஎன்ஏ மிக அழகாக இருக்கிறது மைக்கேல், சுற்றிச் சுழன்ற ஒரு ஏணிப்படி மாதிரி!. டிஎன்ஏ என்பது ஒரு குறியீடாக (code) இருக்கலாம் என்று நானும் வாட்சனும் நினைக்கிறோம். அதில் தான் ஒரு மனிதனின் எல்லா ரகசியங்களும் பொதிந்து கிடக்கின்றன. நீ பள்ளி விடுமுறையில் ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வரும்போது, சோதனைச் சாலையில் டிஎன்ஏவை நேரில் காட்டுகிறேன்... (என்று விரிகிறது அந்தக் கடிதம்)

இப்படிக்கு,
அன்புள்ள அப்பா''


கடிதங்களின் வாழ்நாள் டிஎன்ஏ மாதிரியே: 

ஒரு டிஎன்ஏ ஆராய்ச்சியாளர் தனது கடும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியிலும் 12 வயதே ஆன மகனுக்கு தனது கண்டுபிடிப்பு குறித்து ஆர்வமும் ஆனந்தமும் கலந்து எழுதிய இந்தக் கடிதம் தான் ரூ. 30 கோடிக்கு ஏலம் போயுள்ளது. நாம் எஸ்எம்எஸ் யுகத்துக்காரர்கள்.. பிள்ளைக்கோ, பெற்றோருக்கோ ஒரு கடிதமோ, மெயிலோ எழுதக் கூட நம்மிடம் நேரமும் பொறுமையும் இல்லையே. கடிதங்கள் டிஎன்ஏ மாதிரியே மிக அழகனாவை, அதன் வாழ்நாள் டிஎன்ஏ மாதிரியே மிக நீண்டது!


அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்...

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்...
நோய் எதிர்ப்புச் சக்தி நமது மூக்கில் உள்ள கழிவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்... ஆம் என நிரூபித்திருக்கிறார் சாஸ்க் விஞ்ஞானி.

துணை பேராசிரியராக சாஸ்கட்ச்வன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்காட் நேப்பர் சொல்கிறார், நாம் கெட்டபழக்கம் என ஒதுக்கும் பல விஷயங்களில் நன்மை தருபவனவும் உள்ளன. மூக்கை விரல் விட்டு குடைவதும் அவற்றில் ஒன்று என்கிறார்.

மேலும் இப்பழக்கம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உருவாகக்கூடிய ஒரு குணம் என்றும், நோயெதிர்ப்புச் சக்தி ஊக்கி என்றும் கூறுகிறார்.நீங்க எப்படி பாஸ்... 

பெரும்பாலான குழந்தைகள் கட்டாயம் தங்களது மூக்கில் இருந்து வரும் கழிவை நிச்சயம் ருசி பார்த்தவர்களாகவே இருப்பார்கள் என அடித்துச் சொல்கிறார்.

சாப்பிட்டால் ஆரோக்கியம்... 


மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே.... நல்லதாம்.

நுரையீரல் காரணி... 


மூக்கில் ஒளுகும் சளி அல்லது சளி போன்ற திரவத்தில் நுரையீரலைக் காக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம். அதனை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுகிறதாம்.

இயற்கை நோய்த்தடுப்பு மருந்து... 


இயற்கையான நோய்த்தடுப்பு மருந்தாக மூக்கில் உருவாகும் கழிவுகள் செயல்படுகின்றனவாம். எனவே, அவற்றை சாப்பிடுதல் மிகவும் நல்லது என ஸ்காட் நிரூபித்துள்ளாராம்.

துடைச்சாக் கூட போதுமாம்... 


மூக்கை துடைத்த கர்ச்சீப் அல்லது டிஸ்யூவைக் கொண்டு உடலின் பாகங்களைத் தேய்க்கும் போது அல்லது துடைக்கும் போது கூட உடலில் நல்ல ஆண்டிபாடிஸ் பெருகச் செய்கிற ஆற்றல் அவற்றிற்கு உண்டாம்.

இது வெறும் ஆரம்பம் தான்... 


ஸ்காட்டின் ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளனவாம். விரைவில் விரிவான ஆராய்ச்சி முடிவை வெளியிடுவாராம்.

எது நல்லது... எது கெட்டது... 


தற்போது மனிதர்களின் மூக்கில் இருந்து எந்த வகையான மூக்குக் கழிவுகள் மனிதனுக்கு உண்பதன் மூலம் வேறு வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்த ஆய்வில் இருக்கிறாராம் ஸ்காட்.