Friday, May 9, 2014

அமெரிக்க உளவுத்துறை NSA, மர்மமாக ஏதோ சொல்லி உங்களை சூடேற்றுகிறார்கள், இல்லையா?

அமெரிக்க உளவுத்துறை NSA, மர்மமாக ஏதோ சொல்லி உங்களை சூடேற்றுகிறார்கள், இல்லையா?



அமெரிக்க உளவுத்துறை NSA, விரிவாக்கம், National Security Agency, தமது ட்விட்டர் பக்கத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை ட்விட் ஒன்றை தட்டிவிட்டது. அதில், “tqfjhcdlfdbte” என எதுவுமே புரியாத சொற்களை சேர்த்த வாக்கியங்கள் (மேலே போட்டோ பார்க்கவும்) இருந்தன. இதைப் பார்த்து இன்டர்நெட்டே கிறுகிறுத்து போயிருக்கும்.

என்னங்க சமாச்சாரம் இது?

1) சனி, ஞாயிறு நடந்த பார்ட்டிகளில் ஏற்பட்ட போதை தெளியாமல், திங்கள் காலை NSA ஆபீஸூக்கு யாரோ வந்து விட்டார்களா?

2) ஆபீஸில் யாரோ ஒருவருடைய கம்ப்யூட்டர் கீ-போர்ட்டின் மீது,  பூனை ஓடியதா?

3) எட்வார்ட் ஸ்னோடன் ரகசியங்களை அடித்துச் சென்ற ரகசியங்களால் விரக்தியில் உள்ள ஏஜென்சி, அந்த குழப்பத்தில் தமது அதி ரகசிய சங்கேத வார்த்தை ரகசியம் ஒன்றை கை தவறி, நெட்டில் தட்டிவிட்டு விட்டார்களா?

4) அல்லது, நம்மூரில் நடப்பது போல, அமைச்சரின் மூணாவது சம்சாரத்தின், மூணாம் கிளாஸ் படித்த சித்தி பொண்ணு, சிபாரிசில் பணியில் சேர்ந்து, அந்தம்மா இப்படித்தான் வேலை பழகுகிறாங்களா?

உளவுத்துறைக்கு வெளியேயும் துடிப்பான ஆட்கள் உள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, NSA-வின் இந்த ட்வீட் வெளியாகி ஓரிரு மணி நேரத்திலேயே, இந்த மர்மத்துக்கான விடை தெரியவந்து விட்டது! அடேங்கப்பா!

மர்மத்துக்கான விடை என்னவென்றால், கோட்-வேர்டுகளில் எழுதப்படும் ரகசிய மெசேஜ்களை உடைக்கக்கூடிய ஆட்களை பணியில் அமர்த்த தேடிக்கொண்டு இருக்கிறது உளவுத்துறை. அதற்கான விளம்பரத்தை, கோட்-வேர்டுகளிலேயே கொடுத்தால், எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள் என்பதை பார்க்கும் முயற்சிதான் இது.

அதாவது, “இதையே உங்களால் புரிந்துகொள்ள முடியலைன்னா.. வேலைக்கு அப்ளை பண்ணாதிங்க பிளீஸ்” என்கிறார்கள்.

கோழி கிளறியதுபோல எழுத்துக்களை குலுக்கிப்போட்டு இவர்கள் ட்வீட் செய்த மெசேஜிலுள்ள எழுத்துக்களை ஒரு ஃபுளோவில் வெவ்வேறு எழுத்துக்களாக ரீபிளேஸ் செய்தால், சரியான ஆங்கில சொற்களாக மாறி, முழுமையான வாக்கியங்களாக அவை அமையும். அதாவது, அவர்களது ட்வீட் தனவலை டீ-கோடிங் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் அதன் அர்த்தம்:

NSA-வில் எப்படி வேலை எடுக்கலாம் என அறிய ஆவலா? மே மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் அனுப்புட் ட்வீட்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் தேசத்தை பாதுகாக்க, எம்முடன் (NSA) பணியில் இணைய வாருங்கள்”

வேலைக்கு ஆளெடுக்கிறாங்க சார்!

பல மீடியாக்கள் இது தொடர்பாக உளவுத்துறை NSA-வை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர்களது செய்தி தொடர்பாளர் மார்சி மில்லர், “அந்த ட்வீட், புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் எமது அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது போல, இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு ட்வீட் வெளியாகும்.

எமது உளவுத்துறை சங்கேத சொற்களை உருவாக்குவதிலும், உடைப்பதிலும் கில்லாடிகள் என்பது தெரிந்த விஷயம்தானே. அந்த திறமையுடைய புதியவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பதற்காகவே, சங்கேத சொற்களில் இப்படி ஒருவித விளம்பரம் செய்கிறோம்.

திறமைசாலிகள் எமது ட்வீட்களை புரிந்து கொண்டு, இம்மாத முடிவில், பணிக்கு எங்கே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிந்து கொள்வார்கள். நாம், அவர்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

உளவுத்துறை இப்படியான திறமையுள்ள ஆட்களை தேடித்தேடி பணியில் அமர்த்துவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. கம்ப்யூட்டர் ஹாக்கர்கள் பலரையே பணியில் அமர்த்தியுள்ளார்கள் அவர்கள். ஆனால், அமெரிக்க உளவுத்துறையில் பணிபுரிய செக்யூரிட்டி கிளியரன்ஸ் தேவை அல்லவா? சிறு குற்றங்கள் புரிந்திருந்தால்கூட செக்யூரிட்டி கிளியரன்ஸ் கிடைக்காது அல்லவா?

அதற்கும், NSA-வின் இணையத்தள recruiting page-ல் கீழ்வரும் குறிப்பு உள்ளது:

“If you have a few, shall we say, indiscretions in your past, don’t be alarmed. You shouldn’t automatically assume you won’t be hired. If you’re really interested, you owe it to yourself to give it a shot.”

நீங்கள் கடந்த காலத்தில் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால், அதற்காக உங்களை நிராகரிக்க மாட்டோம் என்பதை டிப்ளமேட்டிக்காக சொல்லியிருக்கிறார்கள், அந்தக் குறிப்பில்! “கிரிமினல் ரிக்கார்ட் இருந்தாலும் வெல்கம்”

இவுக போகும் ரூட்டை பார்த்தால், அமைச்சரின் மூணாவது சம்சாரத்தின் மூணாம் கிளாஸ் படித்த சித்தி பொண்ணு, சிபாரிசில் பணியில் சேர்வது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறதே!


மனைவிகள் தங்களது கணவன்களை ஏமாற்றுவது நிச்சயம்! ஆய்வில் தகவல்

மனைவிகள் தங்களது கணவன்களை ஏமாற்றுவது நிச்சயம்! ஆய்வில் தகவல்



பிரிட்டனில் மனைவிகள் தங்களது கணவர்களை ஏமாற்றுவது நிச்சயம், ஏனெனில் அவர்களது தாய்கள் தங்களது கணவர்களை ஏமாந்தியிருப்பதின் காரணமாக என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

பிரிட்டனில் 73 சதவிகித கணவன் – மனைவிகள் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதன் காரணம் அவர்களது தாய், தனது வாழ்க்கைத் துணையான கணவணை ஏமாற்றியதன் நிமித்தமே என்று தெரியவந்துள்ளது.

அதிலும் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், தங்களுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட  வலைதளம் ஒன்றின் மூலம் தொடர்பு கொண்டு உறவில் ஈடுபடுகின்றனர்.

இந்த வலைதளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மேலும் வலைதளத்தில் பதிவு செய்தவர்களில் 2000 பேரை வைத்து எடுத்த கருத்துக் கணிப்பில் 2000 பிரித்தானியர்களில், திருமணத்திற்கு பின்னர் வெளியே வைத்துள்ள உறவுகளை கணக்கிட்டுப் பார்க்கப்பட்டது.

இதி்ல் 10ல் 7 மனைவி மார்கள் கணவனை ஏமாற்றி, திருமண வாழ்க்கையை நியாயப்படுத்தும் வகையில், தங்களது தாய்களும் இதே போன்று இரகசிய வாழ்க்கையில் ஈடுபட்டதால், நாங்களும், அதையே பின்பற்றுகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதே போன்று கருத்துக்கணிப்பை கணவர்களிடம் எடுத்த பொழுது, அவர்கள், தங்களது தந்தையர்களின் இரகசிய உறவை கூறி நியாயப் படுத்தியுள்ளனர்.

எகிப்தில் வரலாற்று சிறப்புமிக்க கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் வரலாற்று சிறப்புமிக்க கல்லறை கண்டுபிடிப்பு


எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கு பகுதியில் கி.மு.1100 ஆம் காலத்தை சேர்நத கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கல்லறை பழங்காலத்தில் ராணுவப் பெட்டகங்களை பாதுகாக்கும் காவலாளி ஒருவனுடையதாகும். குறித்த காவலாளி பல்வேறு நாடுகளுக்கு அரச தூதராகவும் இருந்துள்ளார். அதற்கான குறிப்புகளும் அந்த கல்லறையின் கல்வெட்டில் காணப்படுகின்றன. இங்குதான் பல படிக்கட்டு அமைப்புகளைக் கொண்ட பிரமிடுகளில் அமைந்துள்ளன.

இங்குள்ள சக்காரா என்ற மிகத் தொன்மையான கல்லறைப் பகுதியானது மெம்பிஸ் நகர அரசர்கள் பலரையும், உயர் குடியினரையும் அடக்கம் செய்த இடுகாட்டுப் பகுதியாகும்.

இந்நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்லறை கல்வெட்டு மூலம் சக்காராவின் பண்டைய வரலாறை ஆராய்ச்சி செய்வதற்கு உதவியாக இருக்கும் என கெய்ரோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.




உலகமே அழிந்தாலும் மக்களை காப்பாற்றுவோம்: புதிய முயற்சியில் இங்கிலாந்து ஆராச்சியாளர்கள்

உலகமே அழிந்தாலும் மக்களை காப்பாற்றுவோம்: புதிய முயற்சியில் இங்கிலாந்து ஆராச்சியாளர்கள்


உலகம் அழியும்போது மனிதர்களை காப்பாற்ற புதிய முயற்சி ஒன்றை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் அழியும் நிலை ஏற்படுகிறபோது மனிதர்களை காப்பாற்றி அழைத்துச் செல்வதற்காக, விண்வெளி ஓடம் ஒன்றை உருவாக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விண்வெளி ஓடம் மனிதர்களை விண்வெளிக்கு கூட்டிச்சென்று, குடியிருப்பதற்கு புதிய உலகத்தை தேடும் பணியிலும் ஈடுபடும் என்றும் இதில் மனிதர்கள் உயிருடன் இருப்பதற்கு தேவையான அடிப்படை தேவைகளும் இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இப்புது முயற்சியில் இங்கிலாந்துடன் அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.