Friday, November 2, 2012

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 7-வது முறை மிதந்து பணியாற்றி சாதனை!

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 7-வது முறை மிதந்து பணியாற்றி சாதனை!



சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 7-வது முறையாக விண்வெளியில் மிதந்து சாதனை படைத்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ், அங்கு 100வது நாளைக் கடந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சுனிதா வில்லியம்சும், மற்றொரு விண்வெளி வீரர் அகி ஹோஷிடேவும், நேற்று விண்வெளியில் மிதந்து சென்று விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

நேற்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மிதந்தவாறு கோளாறுகளை சரி செய்யும் பணிகளைச் செய்ததன் மூலம், 44 மணி நேரத்தில், தொடர்ந்து 7 முறை விண்வெளியில் மிதந்த வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!