Friday, September 28, 2012

உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க: ஆய்வில் அட்வைஸ்


உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க: ஆய்வில் அட்வைஸ்

லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 3 வேளையை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும். உடல் எடையும் சீராகும். உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்க வேண்டும், குறைவாக, போதிய இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும். இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சேலம் அருகே மலைப்பகுதி பள்ளிகளுக்கு கழுதைகளில் செல்லும் பாடப் புத்தகங்கள்


சேலம் அருகே மலைப்பகுதி பள்ளிகளுக்கு கழுதைகளில் செல்லும் பாடப் புத்தகங்கள்சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மலையில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பாலமலை ஊராட்சி. மலை பகுதியான இந்த ஊராட்சியில் ராமன்பட்டி, திண்ணம்பொதி, கடுக்காமரத்துக் காடு உட்பட 33 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 5 தொடக்கப் பள்ளிகளும் ஒரு நடுநிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் உண்டு உறைவிடப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு போதிய போக்குவரத்து வசதி கிடையாது. எனவே கழுதைகள் மூலம் தான் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுகின்றன. தற்போது மாநிலம் முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பாலமலை ஊராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடபுத்தகங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. இவற்றை கொளத்தூரில் இருந்து மலை பகுதியில் அமைந்துள்ள பாலமலை ஊராட்சிக்கு கழு தைகள் மூலம் கொண்டு செல்லும் பணி நடக்கிறது. இதனிடையே, மலை மீதுள்ள இப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.


கடலூரில் பயங்கர சூறாவளி 500 ஏக்கர் வாழை நாசம்


கடலூரில் பயங்கர சூறாவளி 500 ஏக்கர் வாழை நாசம்


கடலூர் மாவட்டத்தில் பயங்கர சூறாவளியுடன் கனமழை பெய்தது. சுழன்று அடித்த காற்றில், அறுவடைக்கு தயாரான 500 ஏக்கர் வாழைகள் முறிந்து விழுந்து நாசமானது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வீசிய தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட் டம். செழித்து வளர்ந்திருந்த பலா, முந்திரி, வாழை, தென்னை, மா போன்ற அனைத்து தோட்டக்கலை பயிர்களும் தானே புயலில் முழுமையாக பாதிக்கப்பட்டது.  வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 7 ஆயிரம் வீதம் தானே புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரியில் மீண்டும் வாழை சாகுபடியை விவசாயிகள் துவங்கினர். கடலூர் மாவட்டத்தின் மலை கிராமங்களான ராமாபுரம், புதூர், எம்.புதூர், கண்ணாரப்பேட்டை, வழிசோதனைபாளையம், வெள்ளக்கரை, அன்னவல்லி, கொடுக்கன்பாளையம், குமளங்குளம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட 50 கிராமங்களில் சுமார் 1000 ஏக்கரில் வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தன. தற்போது பூ பூத்து காய் காய்த்து வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் வீசிய கனமழை விவசாயிகள் கனவை கலைத்தது. இடி, மின்னலுடன் துவங்கிய மழையில் திடீரென சூறைக்காற்று சுழன்று அடித்தது. இதில் 500 ஏக்கர் பரப்பளவில் நன்கு விளைந்திருந்த வாழைகள் முறிந்து விழுந்து நாசமானது.

இது குறித்து வாழை விவசாயி ஏழுமலை கூறியதாவது: தானேவின் பாதிப்பை அடுத்து, கடந்த பிப்ரவரியில் வாழை நடவுப்பணி தொடங்கியது. நவம்பர் மாதம் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் அனைத்தும் நாசமாகியுள்ளது. இதனால் ஏக்கருக்கு 2 முதல் 2.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர் என்றார்.

டெல்டா மாவட்டங் களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் 50 வீடுகள் சேதமடைந்தன. 40 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

இன்றைய நாளின் அதி உச்ச சொகுசு பஸ்

இன்றைய நாளின் அதி உச்ச சொகுசு பஸ்


இந்தவாரம் ஜெர்மனி டியூசல்டொஃப் நகரில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில், பார்வையாளர்களை வாவ் என்று ஆச்சரியப்பட வைத்த வாகனம் இதுதான். ‘சக்கரத்தில், 40 அடி நீள சொகுசு மாளிகை’ என்று விளம்பரப் படுத்தப்பட்ட பஸ்ஸை நீங்கள் பார்க்க வேண்டாமா? 

இந்த பஸ் முற்று முழுதான சொகுசு பயண அனுபவத்தை தருவதுடன் அதி உச்சமாக இதில் உங்களது காரையும் பார்க் பண்ணும் வசதி உள்ளது. கீழே உள்ள படத்தை பாருங்கள் முன் சில்லுக்கும் பின் சில்லுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிகப்பு நிறமாக தெரிவது கார். 


பெராரி அல்லது லம்போகினி கார்களை நிறுத்துவதற்காக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளது

பஸ்ஸின் கார்கோ கம்பார்ட்மென்டை பாருங்கள். கீழ்ப்பகுதியில் உள்ள தகடு போன்ற அமைப்பு தரைக்கு வருகிறது. அதில் காரை ஏற்றிவிட்டு, பஸ்ஸில் உள்ள சுவிட்சை தட்ட வேண்டியதுதான். கார் உயர்ந்து, பஸ்ஸிக் கார்கோ கம்பார்ட்மென்டுக்குள் போய்விடுகிறது.


உட்புற ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம். போட்டோவில் உள்ள ஸ்டைல், மிக அகலமான பெட்ரூம், மற்றும் வைடு ஸ்கிரீன் டி.வி.யுடன் வருகிறது.


பிரிட்ஜ், மற்றும் பிரீஸருடன் கூடிய சொகுசு கிச்சன் பஸ்ஸிலேயே உள்ளது. போதியளவு ஸ்டோரேஜ் வசதியும் உண்டு. ஓடும் பஸ்ஸில் வெளியே காட்சிகளை பார்த்தபடி சமையல் செய்யலாம்.டிரைவர் சீட்டுக்கும், கிச்சனுக்கும் இடையே சிட்டிங் ஏரியாவும், டி.வி.யும் இருப்பதை பாருங்கள். டிரைவிங் சீட்டும் அட்டகாசமாகவே உள்ளது.விருந்தினர்களை உபசரிக்கும் பகுதி இது. லெதர் சீட்கள். விலையுயர்ந்த மர (wood) பினிஷிங் என்று அட்டகாசமாகவே உள்ளது.


பாத்ரூம். சிறப்பு டைல்ஸ், கோல்ட் கலர் டப். இங்கும் போதிய ஸ்டோரேஜ் வசதி உள்ளது. நம்மூரில் ஏழைகள் ரோட்டில் குளிக்கிறார்கள். இந்த பஸ்ஸில் கோடீஸ்வரர்களும் ரோட்டில்தான் குளிக்கிறார்கள், இல்லையா?


இது மற்றொரு ஸ்டைல் கிச்சன். பாரம்பரிய லுக் விரும்பும் ஆட்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். ட்ராடிஷனல் வீடுகளில் உள்ளதுபோல wooden floors, wooden work tops என்று, ஹோம்லியாக இருக்கும் ஆப்ஷன் இது.


பாரம்பரிய ஸ்டைலை தேர்ந்தெடுத்தால், அதன் சிட்டிங் ஏரியா இப்படித்தான் வரும்.

Thursday, September 27, 2012

இங்கிலாந்தை கலக்கும் டாக்டர் ரோபோ

லப்டப் பார்க்கும்.. பீ.பி. அளக்கும் இங்கிலாந்தை கலக்கும் டாக்டர் ரோபோ

இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ டாக்டர், நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டாக்டரிடம் போகிறோம்.. என்ன செய்கிறார்? ஸ்டெதஸ்கோப் வைத்து பார்ப்பார். பீ.பி. செக் பண்ணுவார். நமது கண்ணை திறந்து பார்ப்பார். வாய்க்குள் டார்ச் அடித்து சோதிப்பார். இந்த வேலைகளை எல்லாம் இங்கிலாந்தின் நியூரி நகரில் உள்ள டெய்சி ஹில் ஆஸ்பத்திரியில் ஒரு ரோபோ செய்கிறது. இந்த ரோபோ டாக்டரின் பெயர் ‘ஆர்பி7’. பஸ், ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் மெஷின் சைஸில் இருக்கிறது.

 நோயாளியின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு, இதய துடிப்பு ஆகியவற்றை அளவிடும் கருவிகள் இதில் இருக்கின்றன. ரோபோ டாக்டரை ஆஸ்பத்திரியில் இருக்கும் ஊழியர்கள் இயக்கலாம். அல்லது, எங்கோ வீட்டிலோ, வெளியூரிலோ இருக்கும் ‘பெரிய’ டாக்டர்கூட ஜாய் ஸ்டிக் உதவியுடன் இயக்க முடியும். அவர்கள் உத்தரவிட்டால், டாக்டர் ரோபோ மெல்ல நகர்ந்து நோயாளியின் படுக்கைக்கு அருகில் வருகிறது. பின்னர், அவர்களது கையை நீட்டச் சொல்லி நாடி பார்க்கிறது.

அடுத்து, ஸ்டெதஸ்கோப் உதவியுடன் லப்டப் துடிப்பை பார்க்கிறது. பீ.பி. சோதிக்கிறது. இவை அனைத்தையும் ரோபோவில் இருக்கும் வெப்கேமரா உதவியுடன் டாக்டர் பார்ப்பார். ரோபோவின் மேல் பகுதியில் இருக்கும் மானிட்டரில் டாக்டரின் முகம் தெரியும்.  தேவைப்பட்டால், நோயாளியின் கண்ணை அகலமாக விரிக்கச் செய்து சிவந்திருக்கிறதா, வேறு மாற்றங்கள் தெரிகிறதா என்றும் தனது நவீன கேமரா உதவியுடன் ரோபோ ‘கூர்ந்து’ கவனிக்கும். இதையும் தன் இருப்பிடத்தில் இருந்தபடியே டாக்டர் பார்வையிடுவார். அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக தரவேண்டிய முதலுதவிகள், அவசர கால மருந்துகள் ஆகியவற்றை டாக்டர் அங்கிருந்தபடியே வழங்குவார்.

‘ஆர்பி7 ரோபோ டாக்டரின் விலை ரூ.1.75 கோடி. மாரடைப்பு, ஸ்டிரோக் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டும் பிரசவ காலத்திலும் உயிருக்கு போராடிய பலர் ஆர்பி7 உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்’ என்று டெய்சி ஹில் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ஷேன் மோன் கூறினார். இன் டச் ஹெல்த் என்ற நிறுவனம் ஆர்பி7 ரோபோவை விற்பனை செய்து வருகிறது. இங்கிலாந்தின் ஷ்ராப்ஷயர் பகுதியில் மேலும் 2 ஆஸ்பத்திரிகளில் விரைவில் ஆர்பி7 ரோபோக்கள் ‘பணியை’ துவக்க உள்ளன.

வானுயர்ந்த கட்டிடங்கள் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா மிஞ்சும்

வானுயர்ந்த கட்டிடங்கள் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா மிஞ்சும்

 வானுயர்ந்த கட்டிங்களின் எண்ணிக்கையில், அடுத்த 5 ஆண்டில் அமெரிக்காவை சீனா மிஞ்சிவிடும் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில்தான் வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகளவில் உள்ளன. 150 மீட்டருக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இங்கு மிக அதிகம். ஆனால், அடுத்த 5 ஆண்டில் சீனா இந்த சாதனையை கைப்பற்றி விடும் என்று தெரியவந்துள்ளது. கட்டிடங்கள் குறித்த ஆய்வு அமைப்பான மோசியன்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

தற்போது உலகிலேயே அதிக உயரங்கள் கொண்ட கட்டிடங்கள் அமெரிக்காவில்தான் உள்ளன. இங்கு  152 மீட்டருக்கு மேற்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 533. சீனாவில் இதன் எண்ணிக்கை 470 ஆக உள்ளது. ஆனால், 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் வானுயர்ந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 539 ஆக இருக்கும். அதே ஆண்டில் சீனாவில் இந்த அளவுக்கு உயரம் கொண்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 802 ஆக அதிகரிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில், சீனாவில் இந்த எண்ணிக்கை 1,318 ஆகவும், அமெரிக்காவில் 563 ஆகவும் இருக்கும்.

தற்போது சீனாவில் 332 வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 516 கட்டிடங்கள் கட்டுமானப் பணிக்காக காத்திருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் 6 கட்டிடங்கள் மட்டுமே கட்டுமானத்தில் உள்ளன. மேலும், 24 கட்டிடங்கள் வரைபட அளவில் உள்ளன. இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், சீனாவின் பெரிய நகரங்களான ஷாங்காய், தலைநகர் பீஜிங் மட்டுமில்லாமல், 2ம் நிலை நகரங்களிலும் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பதுதான். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாமிரபரணியில் 16கிலோ கட்லா மீன் சிக்கியது

தாமிரபரணியில் 16கிலோ கட்லா மீன் சிக்கியது
தாமிரபரணியில் சுமார் 70 வகை கெண்டைகள், கெழிறு, ஆரல், விரால், அயிரை உட்பட சுமார் 150 வகை மீன்கள் உண்டு. ‘தாமிரபரணி டைகர்‘ எனப்படும் கறுப்பு, வெள்ளை, சிவப்பு வரிக்கோடுகள் கொண்ட அழகிய மீன் இதன் தனிப்பிறப்பு. இங்கு தவிர, காவிரியில் மட்டுமே இது காணப்படுகிறது.

தாமிரபரணியில் மாசும் மணல் கொள்ளையும் அதிகரித்ததால் மீன் இனவிருத்தி இல்லை. அயிரை, உளுவை, சிலேப்பி உள்ளிட்ட 10 வகைகள் அறவே ஒழிந்தன. ஆரலும், விராலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக தட்டுப்படுகின்றன. கல் ஆரல் மட் டுமே நீந்துகிறது. வெடி வைத்து பிடிக்கும் கொடிய பழக்கத்தால் மீன்கள் விரைந்து அழிந்துவருகின்றன.

தற்போது வளர்ப்பு கெண்டை மீன்களான கட்லா, ராகு, மிர்கால் போன்றவை அதிகம் கிடைப்பதாக மீன் பிடிப்பவர்கள் கூறுகின்றன. நேற்று வண்ணார்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் வலையில் 16 கிலோ கட்லா சிக்கியது.

2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்


உலகம் வெப்பமயமாவதால்

2030க்குள் 10 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்
உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் 2030ம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிக மானவர்கள் இறக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால் உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனி உருகுவது அதிகரித்துள்ளது. வெப்பநிலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், வறட்சி, கடல் நீர்மட்டம் உயர்தல் ஆகிய அபாயங்கள் ஏற்படும். தற்போது காற்று மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர். பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயரும். இவர்களில் 90% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 10 கோடி பேர் உயிரிழக்கக்கூடும்.

இதுமட்டுமின்றி பருவநிலை மாற்றத்தால் உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 சதவீதம் குறைந்துள்ளது. 2030ல் இது 3.2 சதவீதம் குறையும். அடுத்த 10 ஆண்டுகளில் காற்று மாசுபாட்டை குறைக்க உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீத நிதி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தொழிற்துறைகள் வளர்வதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 0.8 சதவீதம் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு கேன்கன் சுற்றுச்சூழல் மாநாட்டின்போது உலக வெப்பத்தை 2 சென்டிகிரேட் வரை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன.

ஆனால், மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் அளவைப் பார்த்தால் 2 சென்டிகிரேட் வெப்பத்தை குறைப்பது கூட போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பொருள் உற்பத்தி குறைவு, நோய்கள் ஆகியவற்றால் ஏழை நாடுகள் மேலும் பாதிப்படையும். 2030ல் சராசரியாக 11 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 26, 2012

பட்டு போன்ற சருமத்திற்கு

பட்டு போன்ற சருமத்திற்கு
உடல் ஆரோக்கியத்திற்கு பால் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பால் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா?

பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது.

இத்தகைய சத்துக்கள் இருப்பதால் அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும், ஈரப்பதமுள்ளதாகவும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இவை சரும வறட்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது.

1. சருமத்தில் உள்ள பழுதடைந்த செல்களை மீண்டும் புதுப்பிக்க, 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

2. பாலில் லாக்டிக் அமிலம் இருக்கிறது. இதனால் பாலை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

ஆகவே 1/8 கப் ரோஸ்மேரி மற்றும 1 தாட்பூட் பழத்தை எடுத்து அரைத்து, ஒரு கப் பாலுடன் கலந்து, அடுப்பில் தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் வைத்துக் கிளறி, பின் ஆற வைத்து காட்டன் வைத்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பிறகு கழுவ வேண்டும்.

3. பாலின் நன்மைகள் உடனே தெரிய, பாதாமை பாலுடன் சேர்த்து அரைத்து, சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதில் ஆரஞ்சு தோலை அரைத்து, அதனுடன் கலந்து, முகம் மற்றும கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பிறகு ஐஸ் கட்டிகளால் 2-3 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள தூசிகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

4. ஈஸியான முறையில் பாலை வைத்து ஒரு ஃபேசியல் போன்று செய்ய வேண்டுமென்றால், அதற்கு கொதிக்க வைத்துள்ள பாலை ஓரளவு ஆற வைத்து, காட்டனால் முகத்திற்கு 3-5 நிமிடம் தேய்க்க வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மட்டும் போவதோடு, சருமம் நன்கு அழகாகக் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சருமம் நன்கு பளிச்சென்று சுத்தமாக காணப்படும்.

5. சரும வறட்சியை நீக்குவதற்கு, வாழைப்பழத்தை நன்கு மசித்து, பால் மற்றும் தேனுடன் கலந்து முகத்திற்கு தடவி காய வைக்க வேண்டும்.

காய்ந்ததும் சிறிது பாலை தொட்டு அதன் மேல் தேய்த்து மசாஜ் செய்து பிறகு கழுவ வேண்டும்.

சரும சுருக்கத்தை நீக்குவதற்கு பால் மற்றும் தேனை கலந்து, முகத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமம் நன்கு இறுக்கமடைந்து அழகாக காட்சியளிக்கும்.

ஆண்மை ஆயுளை குறைக்கிறதா? Hot Report


ஆண்மை ஆயுளை குறைக்கிறதா? Hot Report


ஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரணியாக இருக்கக்கூடும் என்பதை குறிப்புணர்த்தும் ஆய்வின் முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

உலகம் முழுவதும் மனித இனத்தில் ஆண்களை விட பெண்களின் சராசரி வயது அதிகம். இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

அதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது. இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த தரப்பு ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.

இவர்களின் இந்த சந்தேகம், மருத்துவ விஞ்ஞான உலகின் ஆய்வு நெறிகளுக்குட்பட்ட ஆய்வுகள் மூலம் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த கருதுகோள் கணிசமான மருத்துவ விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இவர்களின் இந்த சந்தேகம் நிரூபிக்கப்படவேண்டுமானால், விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக அவர்கள் வாழும் சமூகத்தின் மற்ற ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகரிக்கிறதா என்கிற ஆய்வின் முடிவில் தான் அதை கணக்கிட முடியும். இப்படியான ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடக்கவில்லை என்றாலும், இதற்கு இணையான புதிய ஆய்வின் முடிவு இவர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.

கொரியாவில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உயிர்வாழ்ந்த விதைப்பை அகற்றப்பட்ட ஆண்கள், அதாவது தற்போது அரவாணிகள் என்றும் திருநங்கைகள் என்றும் அழைக்கப்படுகிறவர்களைப் போன்றவர்களின் ஆயுட்காலம் பற்றிய புள்ளி விவரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.இந்த காலகட்டத்தில் கொரியாவில் ஆட்சியில் இருந்த கோசுன் பேரரசில் பருவ வயதுக்கு வருவதற்கு முன்னரே விதைப்பைகள் அகற்றப்பட்ட திருநங்கைகள் அரண்மனை காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். இப்படி அரண்மனையில் முக்கிய பணியில் இருந்த திருநங்கைகள் 81 பேரின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த இன்ஹா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கியுங் ஜின் மின் அவர்கள், இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்ந்திருப்பதாக கூறுகிறார். இதில் மூன்றுபேர் நூறு வயதுக்கும் மேலாக உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.

அதேசமயம், இவர்களை பணியில் அமர்த்தியிருந்த அரச வம்ச ஆண்களின் சராசரி வயது வெறும் 45 என்றும், அரண்மனையில் இருந்த மற்ற ஆண் அதிகாரிகளின் சராசரி வயது 50 தாண்டவில்லை என்றும் கூறும் இந்த பேராசிரியர், இவர்களின் வாழ்க்கைச் சூழல், வசதி வாய்ப்புகள் போன்றவை கூட இவர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்திருக்கலாம் என்றாலும், அந்த காரணிகளைவிட ஆண்தன்மைக்கான டெஸ்டஸ்ட்ரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் நீக்கப்பட்டதே திருநங்கைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க முக்கிய காரணி என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் வாதப்படிக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இவற்றை இறுதியானதாக கொள்ளமுடியாது என்கிறார் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிளான்ஸி. வேறு சில ஆய்வுகளில் விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் வயதுக்கும் நீக்கப்படாத ஆண்களுக்கும் சராசரி வயதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு பாலியல் நாட்டம் இல்லாமல் போகும் என்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் கியுங் ஜின் மின் அவர்கள், எத்தனை ஆண்கள் தங்களின் ஆண்மையை பறிகொடுத்து ஆயுட்காலத்தை நீட்டிக்க விரும்புவார்கள் என்று கேள்வியை எழுப்புகிறார்.

Which Situation Do You Feel Worst : Comment us the Number

Which Situation Do You Feel Worst : Comment us the Number  will see the count 


1. 

2.


 
 

3.


 
 

4.

 
 

5.6.7.

 
 
 

8.

 
 

9.

 

10.


 

11.

 
 
 

12.

 
 
 

13.


திராட்சை தோட்டத்துக்கு ரோபோ தொழிலாளி : பிரான்சில் தயாரிப்பு

திராட்சை தோட்டத்துக்கு ரோபோ தொழிலாளி : பிரான்சில் தயாரிப்பு இங்கயும் வந்திட்டாங்க ஐயா

 


பிரான்சில் உள்ள திராட்சை தோட்டங்களில் சம்பளம் கேட்காமல், லீவு எடுக்காமல், கால நேரம் பார்க்காமல் வேலை செய்ய ஒரு தொழிலாளி தயாராக உள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட வால்,யே என்ற ரோபோதான் அவர். பிரான்சின் பர்கண்டி பகுதியைச் சேர்ந்த கிரிஸ்டோபி மில்லட் என்பவர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. நீளம், 20 கிலோ எடை கொண்டது. இதில் 2 கைகள் போன்ற அமைப்பு, 6 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. திராட்சை தோட்டங்களில் தொழிலாளர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இது செய்யும். திராட்சைத் தோட்டத்தில் கொடிகளுக்கு இடையே வளர்ந் திருக்கும் களைகளை அகற்றுதல், மண்ணை கிளறி விடுதல், திராட்சை கொடியின் ஆரோக்கியம், மண்ணின் தன்மை குறித்து ஆராய்தல், அவை குறித்த தகவல்களை சேகரித்தல் ஆகிய பணிகளையும் இது செய்யும். ஒரு நாளுக்கு 600 திராட்சைக் கொடிகளில் தேவையில்லாத கிளைகளை வெட்டி அகற்றும் திறன் கொண்டது. இதுகுறித்து கிரிஸ்டோப் மில்லட் கூறுகையில், Ôதிராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற பணியாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால்தான் இந்த வகை ரோபோ உருவாக்கப்பட்டது. இதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் இந்த வகை ரோ போ எங்கு பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதோ அங்கு மட்டுமே பணிபுரியும். பல விவசாயி கள் இதை வாங்க முன்வந்துள்ளனர்Õ’ என்றார்.

விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா


விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா

உக்ரைனிடம் இருந்து சீனா வாங்கிய 60,000 டன் எடை கொண்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலை நேற்று கடற்படையில் சேர்த்துள்ளது. கிழக்கு சீன கடல் பகுதியில் உள்ள சில குட்டித்தீவுகள் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால், தங்களுக்குதான் சொந்தம் என்று ஜப்பான் கூறி வருகிறது. இந்த தீவின் உரிமையை வைத்திருந்த ஜப்பானியரிடம் இருந்து அதை வாங்கிவிட்டதாகவும், அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால் சீனா , ஜப்பான் இடையே இந்த தீவு பிரச்னையால் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனா முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலை நேற்று கடற்படையில் சேர்த்தது. இந்த விமானந்தாங்கி போர்க்கப்பல், சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைனிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. பின்னர் அது சீனாவுக்கு கொண்டு வரப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. போர்க்கப்பலுக்கு, ‘லயோனிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த சீனாவின் மாகா ணம் லயோனிங். 1945ம் ஆண்டு இது ஜப்பானிடம் இருந்து விடுதலையடைந்து சீனாவுடன் சேர்ந்தது. அதன் பெயரையே, விமானந்தாங்கி போர்க்கப்ப லுக்கு சீனா வைத்துள்ளது. இது ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கை என்று கூறப்படு கிறது. 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த லயோனிங் போர்க்கப்பல் சீனாவின் கடற்படைக்கு பெரும் பலம் சேர்க்கும். இதில் 33 போர் விமானங்களை நிறுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

குறிப்பு : இதில் செலவிட்ட பணம் வேஸ்ட்” என்பதே ராணுவ வட்டாரங்களின் காமென்ட்

காரணம் இதில் ஏற்றி இறக்கத்தக்க விமானங்கள் சீனாவிடம் இல்லை, இனிமேல் தான் வாங்கவேண்டும். அடுத்தது வியட்நாமின் விமானப் படையில், 230 லேன்ட் பேஸ்டு போர் விமானங்கள் உள்ளன. ஏதாவது ஒரு தகராறு ஏற்பட்டால், இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கு சமாதி கட்ட வியட்நாம் விமானங்களால் முடியும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், சீனாவால் தமது முகத்தை எங்கேயும் கொண்டுபோய் வைக்க முடியாது! அருகிலுள்ள குட்டி நாடுகளை மிரட்டுவதற்கு இக்கப்பல் பயன்படலாம்.

பிரதீபா பாட்டில் தூக்கிச் சென்ற பரிசு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கை


பிரதீபா பாட்டில் தூக்கிச் சென்ற பரிசு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்‌களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க வேண்டுமென தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரதீபா பாட்டில் வெளிநாட்டு பயணம் செய்வதில் அதிகளவில் அரசு பணத்தை செலவிட்டடிருந்தது, ஒன்றும் பெரிய ரகசியமல்ல. அவர் ஓய்வு ‌பெற்ற பின்னர் வசிப்பதற்காக கட்டப்பட்ட வீட்டிற்கு அரசுப் பணத்தை செலவிட்டது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளார்.

சுருக்கமாக சொன்னால், ‘வாழ்க்கையில் ஒருமுறை கிடைத்த சான்ஸை’ முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். மேக்ஸிமம் எடுக்க கூடியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார்.

பாவம், ஜனாதிபதியாவதற்கு எவ்வளவு ‘செலவு’ செய்தாரோ!

பிரதீபா பாட்டில் தான் பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வசித்து வரும் அமரவாதிக்கு ‌‌எடுத்து சென்ற விவகாரம் தகவல் தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் செய்த முயற்சியால் வெளிப்பட்டது.

இது குறித்த விவரம் வெளியே தெரிந்த நிலையில் பிரதீபா பாட்டில் கொண்டு சென்ற பரிசு பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மாளி்கை ‌கேட்டுக்கொண்டுள்ளது.

பரிசு பொருளை பிரதீபா ‌கொண்டு செல்ல அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்‌‌கொள்ள வேண்டும் என சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அப்துல் கலாம் தான்பதவி வகித்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்களை தன்னுடன் ‌எடுத்து சென்றார். ஆனால் அவை அனைத்தும் பயனுள்ள ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தி வருகிறார்.

பிரதீபா பாட்டில் ஆராய்ச்சி ஏதும் செய்வதாக தகவல் இல்லை.
LATEST 10 UPDATES

Tuesday, September 25, 2012

கப்பல்கள் மோதல் 13 ஊழியர்கள் மாயம்

கப்பல்கள் மோதல் 13 ஊழியர்கள் மாயம்


சரக்குக் கப்பலுடன், சிறிய மீன் பிடிக்கப்பல் மோதி விபத்துக்கு உள்ளானதில் 13 மீனவர்களைக் காணவில்லை என்று ஜப்பான் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. 22 ஊழியர்களுடன் சென்ற 119 டன் எடை கொண்ட ஹோரியி மரூ என்ற மீன்பிடிக் கப்பலும், 25,047 டன் எடை கொண்ட நிக்கி டைகர் என்ற சரக்குக் கப்பலும் நேற்றுமுன்தினம் மோதிக்கொண்டன. சென்டய் நகரிலிருந்து 900 கி.மீ. தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் மீன்பிடிக் கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியது. மூழ்கிய கப்பலில் இருந்த 9 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணியில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 2 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சரக்குக் கப்பலில் சென்ற 21 ஊழியர்கள் பத்திரமாக உள்ளனர்.

காதலா ? காமமா ? அதையும் தாண்டியதா ?

காதலா ? காமமா ? அதையும் தாண்டியதா ?
காதல் என்ற வார்த்தை எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இடம், பொருளைப் பொருத்துதான் அது புனிதத்துவம் பெறுகிறது. பதின் பருவத்தில் வரும் காதல் இனக்கவர்ச்சி என்றும், படித்து முடித்து கைநிறைய சம்பாதிக்கும் போது வருவதுதான் உண்மைக் காதல் என்றும் திருமணத்திற்குப் பின்னர் வேறொருவடன் ஏற்படுவதை கள்ளக்காதல் என்றும் சொல்கின்றனர். ஆனால் காதல் என்பது அன்புரீதியானதா? உணர்வுகளை மட்டுமே அதை புரியவைக்க முடியுமா? எதுவும் எதிர்ப்பார்த்து வருகிறதா? என்றால் எவராலும் புரியவைக்க முடியவில்லை. காதலோ, காமமோ எதுவென்றாலும் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

பட்டாம்பூச்சி பறக்கும்

காதல் என்பதை மனதில் தோன்றுகின்ற உணர்வுகளில் மிகத் தூய்மையானது என்கிறார் ஜான் ட்ரைடன். அந்த பெண்ணை நினைச்சாலே பறக்கிற மாதிரி இருக்கு. வயிற்றில பட்டாம்பூச்சி பறக்குது என்கின்றனர் சிலர். அதேபோலதான் பெண்களுக்கும், காதல் வந்தலே தூக்கம் தவறிப்போகும். உணவு ருசிக்காது. ஆனால் காதலுக்கும், காமத்திற்கும் நூழிலைதான் வித்தியாசம் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள் சற்று பிசகினாலும் காதல், காமத்திற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.

என்ன வித்தியாசம் ?

வாழ்வு, காதலால் நிரம்பியிருக்கிறது. அதன் முடிவடையாத தொடர்ச்சிக்கு காமம் தேவைப்படுகிறது. ஆனால், காதலுக்கும் , காமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள். காதல் என்கிற உணர்வு மனதிலும், உடலிலும் உருவாக்குகிற தொடர்பு நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் வெளிவந்து விட்டன. காதலின் முதல் ஆரம்ப்புள்ளி 'லஸ்ட்', அடுத்த பால் மேடு மேற்படுத்துகிற காமத்துப்பால், கவர்ச்சி.

ஹார்மோன்களின் வேலை

ஆளு அழகா சூப்பரா இருக்காளே என்ற ரீதியில் பார்க்கத் தொடங்கி பிறை மாதிரி நெற்றி, குவளைக் கண், கூர்மையான மூக்கு என்று வர்ணிப்பதில் நிற்கும். இதற்குக் காரணம் உடலில் சுரக்கும் டெஸ்டரோஸ்டீரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள்.

மனிதர்கள் பிறந்ததிலிருந்தே உடலில் இருந்தாலும் பருவத்தில், நமக்குரிய பெண் / ஆணை பக்கத்தில் சந்திக்கும் போது தான் விழித்துக் கொள்கின்றன. அப்போது இதயத்தில் ஒரு மின்னல் வெட்டும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சியும் பறக்கின்றனர். காதுக்குள் இளையராஜாவின் வயலின் இசை ரீங்காரமிடும்.

நீங்கள் சந்தித்த நபர் உங்களை விட்டு கடந்து போன பின்னும் உங்கள் மனம் அவரைச் சுற்றியே வரும். விஞ்ஞானிகள் இந்த நிலையை 'அட்ராக்ஷ்ன்' என்று வர்ணிக்கிறார்கள். காதல் அந்த இடத்தில் தடுக்கி நிற்கிறது. சிலருக்கு நொண்டி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ஏன் ஸ்ட்ரக்? தடை என்று சொல்கிறீர்கள்?

அந்தப் பெண்ணை பார்த்த்திலிருந்து சரியாகச் சாப்பிட முடியவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பசி போச்சு, தூக்கம் போச்சு, படிப்பில் கவனம் போச்சு, எங்கேயோ பேய் அடித்த மாதிரி பார்க்க வேண்டியிருக்கிறது. உள்ளங்கை வேர்த்துப் போகிறது. ஒழுங்காக யோசிக்க கூட முடியவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று இதற்கும் பதில் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

காதல் ரசாயனங்கள்

நம் மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற ஹார்மோன்தான் இத்தகைய கிறுக்குத்தனங்களை செய்கிறது என்கின்றனர். இந்த காதல் ரசாயனம்தான் மனதிற்குள் மின்னலை வெட்டிக்கொண்டே இருக்கிறது. காதலிக்கும் நபரைப் பற்றிய சிந்தனைகளை தூண்டிவிடுகின்றனவாம். இந்த ரசாயனம் சாக்லெட்டிலும், ஸ்ட்ராபெரியிலும் இருக்கின்றன. சாக்லெட்டை காதலர்கள் உதட்டுக்கு உதடு மாற்றுவதற்குப் பின்னணியில் இந்தக் காரணம் தான் இருக்கிறது என்கிறார்கள். இந்த காதல் ரசாயனத்தை PEA என்கிற விஷயம்தான் கட்டுப்படுத்துகிறது. இதுதான் காமநிலையில் இருந்து காதல் நிலைக்கு மாற்றுகிறது. காதலிக்கும் பெண்ணின் முகம் திரும்ப திரும்ப வருகிறதா? அவளின் நினைவில் பைத்தியம் பிடித்துப் போகிறதா? மூளையில். PEA பிடித்து ஆட்டுகிறது.

பிரிக்க முடியாத நிலை

இந்த இரண்டு நிலைகளையும் தாண்டிய பிறகு வருவதுதான் 'அட்டாச்மெண்ட்' என்கிற மூன்றாவது நிலை. அதாவது நீ இல்லை என்றால் நான் இல்லை என்ற உயிரில் கலந்த உணர்வு நிலை. இந்த அட்டாச்மெண்ட் நிலைக்கு தள்ளுவது இரண்டு ஹார்மோன்கள் ஒன்று ஆக்ஸிடோஸின் என்பது மற்றொன்று வாஸோப்ரஸின். ஆக்ஸிடோஸின் காதலர்களுக்கு இடையிலான இணைப்பை உறுதி செய்கிறது. பலப்படுத்துகிறது. வாழ்நாள் முழுக்க ஒரு பந்தம் தொடர வைக்கிறது இல்லையா? அதை வாஸோப்ரஸின் செய்கிறது.

உண்மைக்காதல் உடல்ரீதியாக பார்க்காது உணர்வுரீதியாகத்தான் பார்க்கும். உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும். எதையும் எதிர்பார்க்காது. ஆனால் உடலை மட்டுமே பார்க்கும் காமநிலைக்குதான் அதிகம் எதிர்பார்ப்பு இருக்கும் ஒரு பொஸசிவ்னெஸ் இருக்கும். உங்களுடையது காதலா, காமமா? அதையும் தாண்டியதா?

68 சென்ரி மீட்டர் உயரமான பெண்: உலகிலேயே மிகச் சிறியவர் !


68 சென்ரி மீட்டர் உயரமான பெண்: உலகிலேயே மிகச் சிறியவர் !


  
இது கதை அல்ல நிஜம் , உலகில் குள்ளமான மனிதர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள் என்று நாம் புராண காலக் கதைகளில் படித்ததுண்டு. இல்லை என்றால் சிறுபிள்ளைகளின் காட்டூனில் தான் இதுபோன்ற மனிதர்கள் வருவதுண்டு. ஆனால் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு குள்ளமான மனிதர்களைப் பார்ப்பது கடினம். ஆனால் இங்கே நாம் குறிப்பிடும் பெண் 68 சென்ரி மீட்டர் தான் உயரமுடையவர். 5 வயதாகும் இப் பெண் இனி வளர வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். பிறந்தபின்னர்தான் ஒரு அரியவகை வியாதியால் இப்பெண் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் உடல் எடை, மற்றும் வளர்சி என்பன பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி செல்ல ஆரம்பித்திருக்கும் இச் சிறுமியின் பெயர் சரலொட் ஆகும்.

பள்ளிக்கூடம் செல்வது பெரிதில்லை, ஆனால் அங்கே மாணவர்களுக்கு மத்தியில் சிக்கி இவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தான் அனைவரும் கவலைப்படுகிறார்கள். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
கூகுள், ஜிமெயில் இன்று முதல் தடை!


கூகுள், ஜிமெயில் இன்று முதல் தடை!

 

“கூகுள், மற்றும் ஜி-மெயில் ஆகியவை அடுத்த சில மணி நேரத்தில் தடை செய்யப்படவுள்ளன” இந்த அறிவிப்பு இன்று சற்று நேரத்துக்குமுன் ஈரானிய தொலைக்காட்சிகளில் பிளாஷ் நியூசாக காண்பிக்கப்பட்டன. ஈரானிய அரசின் இணை அமைச்சர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக ஈரானிய தொலைக்காட்சி செய்தியில் கூறப்படுகிறது.

இந்த தடை நிரந்தரமானதா, அல்லது தற்காலிக நடவடிக்கையா என்பது தெரியவில்லை.

இந்த தடை இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்க திரைப்படம் காரணமாக செய்யப்பட்டது என்று ஈரானிய நியூஸ் ஏஜென்சி இஸ்னா தெரிவித்துள்ளது. ஆனால், அந்த திரைப்படம் நெட்டில் உலாவுவதற்கு காரணமான யு-டியூப் தடை செய்யப்படவில்லை.

இத்தாலிய வீதியில் வார்னிங் கொடுக்காமல் ஓடிய ஒட்டகச் சிவிங்கி!


இத்தாலிய வீதியில் வார்னிங் கொடுக்காமல் ஓடிய ஒட்டகச் சிவிங்கி!
போலீஸ்காரர்களை 3 மணி நேரம் இங்கும் அங்குமாக ஓடவிட்டு தண்ணி காட்டியிருக்கிறது, ஒட்டகச் சிவிங்கி ஒன்று. “அடாடா.. மடகஸ்கார் திரைப்படத்தில் வந்த காட்சி அல்லவா இது”, என்று நீங்கள் (அல்லது உங்கள் குழந்தைகள்) சொல்லலாம். கிட்டத்தட்ட அதே காட்சிதான். ஆனால், இது நிஜம்.

இத்தாலியின் இமோலா நகர வீதிகளில் திடீரென பிரமாண்ட உயரத்துடன் ஒரு ஒட்டகச் சிவிங்கி ஓடிவர, திகைத்துப் போன மக்கள் குய்யோ முய்யோ என்று கத்தியபடி தலைதெறிக்க ஓடவேண்டியதாகி விட்டது. அதுவும், இந்த ஒட்டகச் சிவிங்கி, வீதியில் ஓடத் தொடங்கியது, வீதிகளின் ஜன நடமாட்டம் அதிகம் இருந்த ரஷ் டயத்தின்போது!

ரினால்டோ ஈர்ஃபியோ சர்க்கஸில் இருந்து தப்பியோடி வந்திருந்தது, இந்த ஒட்டகச் சிவிங்கி.

சிக்கல் என்னவென்றால், சர்க்கஸில் சாதுவாக நிற்கும் ஒட்டகச் சிவிங்கி, வெளியே வந்தபின் எப்படி ரியாக்ட் பண்ணும் என்று யாருக்கும் தெரியவில்லை. கடிக்குமா, உதைக்குமா, அல்லது அதுபாட்டுக்கு நம்ம அமைச்சர் ஓ.பி.எஸ். போல தலையாட்டிவிட்டு போகுமா என்று தெரியாததால், ஆளாளுக்கு மிரண்டு ஓடினார்கள்.

இதோ இந்த போட்டோ செட்டில், ஒட்டகச் சிவிங்கியின் ஒன் டே அவுட்ங்கையும், கடைசியில் எப்படி அதை பிடித்து சர்க்கஸூக்கு கொண்டு போகிறார்கள் என்பதையும் பாருங்கள்.

கீழேயுள்ள போட்டோவில் ஒட்டகச் சிவிங்கி இமோலா நகர சர்க்கஸில் இருந்து வெளியே வந்து ஓடுகிறது. சர்க்கஸ் வேளில் துரத்திப் பிடித்து விடலாம் என்பதுதான் ஒரிஜினல் திட்டம்.

சரி, அப்படியே பிடித்தாலும், போட்டோவில் உள்ள வேனில் ஒ.சி.-யை எப்படி கொண்டு போக திட்டமிட்டார்களோ! அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.


இந்த நபர், ஒட்டகச் சிவிங்கியை பிடிக்க சென்ற ஆள். ஒட்டகச் சிவிங்கி திரும்பி அவரைத் துரத்துகிறது.


இவர் பரவாயில்லை. தமது இரு கைகளையும் விரித்து ஒட்டகச் சிவிங்கி பிடிக்க முயற்சிக்கிறார். இவரது சைஸையும், ஒ.சி.-யின் சைஸையும் பார்த்தால், இந்த திட்டமும் ஒர்க்-அவுட் ஆகாது என்று புரிந்திருக்குமே…


ஒட்டகச் சிவிங்கி சிரம பரிகாரம் செய்கையில் நைசாக அமுக்கி விடலாம் என்பது இவரது திட்டம். ஒட்டகச் சிவிங்கியும் இவர் அருகே வரும்வரை சாதுவாக படுத்திருந்து விட்டு, அப்புறம் ஓட்டம் பிடித்தது.


ஓடிய ஒட்டகச் சிவிங்கியை பிடிக்க போலீஸ் வந்திருக்கிறது. போலீஸ்காரரை கண்டு மிரளவா போகிறது ஒட்டகச் சிவிங்கி? போலீஸ்காரர்தான் குரூப்-2 வினாத்தாள் லீக் கேஸில் ஹைதராபாத் போன நம்ம திருப்பூர் போலீஸ் போல திகைத்துப் போய் நிற்கிறார், இத்தாலிய போலீஸ்கார். இவரது அதட்டலுக்கு நிற்கவில்லை ஒட்டகச் சிவிங்கி. அது ஓடிவிட்டது.


மீண்டும் பழைய ஆட்டத்தின் இரண்டாவது ஷோ தொடங்கியது. இதோ சர்க்கஸ் வேனில் ஒட்டகச் சிவிங்கியை துரத்துகிறார்கள்.


இப்போது வீதிக்கு வந்துவிட்ட ஒட்டக சிவிங்கியை பாருங்கள். ட்ரக் டிரைவர் ஒருவர் வீதியில் ஒட்டகச் சிவிங்கி வரும் என்று எதிர்பார்த்திராத காரணத்தால், திகைத்துப்போய், ட்ரக்கை ரோட்டுக்கு குறுக்கே விட்டுவிட்டார்.


தொடங்கிவிட்டது ஒட்டகச் சிவிங்கியின் நகர்வலம். பின் தொடர்வது, போலீஸ் கார்.


இப்போது ஒரு ரவுன்ட் அடித்துவிட்டு, பார்க்கிங் லாட் ஒன்றுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. மிருகக்காட்சிசாலையில் இருந்து நிபுணர்களை தருவித்து விட்டார்கள். அவர்களது ஆலோசனை நடக்கிறது.


இவர்களது ஆலோசனை பற்றி கவலை ஏதும் இல்லாமல் பார்க்கிங் லாட்டுக்குள் ரவுன்ட் அடிக்கிறது ஒட்டகச் சிவிங்கி.


ஆகா.. திட்டம் ரெடி. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் எக்சர்சைஸ் செய்வதை மறைந்திருந்து தீவிரவாதிகள் பார்ப்பதுபோல, மறைவில் இருந்து பார்ப்பவர்கள், மிருகக்காட்சிசாலையில் இருந்து வந்த நிபுணர் குழு.


இதோ, மயக்க மருந்தை போட்டு விலங்குகளை சுடும் பிரத்தியேக துப்பாக்கியால் குறிபார்க்கிறார். மி.கா.சா. நிபுணர்.


பாதி மயக்க நிலையில் உள்ள ஒட்டகச் சிவிங்கியை இப்போது ட்ரக்கில் ஏற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


ட்ரக்கில் ஏற்றப்படுகிறது ஒட்டகச் சிவிங்கி.


இதோ பூரண மயக்கத்துக்கு சென்றுவிட்டது ஒட்டகச் சிவிங்கி. கண்விழித்து எழும்போது, மீண்டும் சர்க்கஸ் கூண்டுக்குள் இருப்பதை காணப் போகிறது! நடந்ததெல்லாம் கனவா என்று யோசிக்குமா?

Please share this Article as much as possible, Follow us , like us on Facebook