Friday, June 8, 2012

திமிங்கிலப் போர்

திமிங்கிலங்களைப் பிடிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறுகின்ற ஜப்பானுக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கத்தினருக்கும் இடையிலான போர்.
உலகின் கடல்களில் பல வகைத் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் பல நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டும் திமிங்கிலங்களைப் பிடிக்க கப்பல்களை அனுப்பப் போவதாக ஜப்பான் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.. திமிங்கில வேட்டையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க பல கப்பல்கள் உடன் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.
ஜப்பானின் இத் திமிங்கில வேட்டையை முறியடிக்க எங்கள் கப்பல்கள் த்யார் என்று கடல் மேய்ப்பர் என்னும் இயக்கத்தினர் பதிலுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆக, வருகிற டிசம்பரில் அண்டார்டிக் கண்டத்தை ஒட்டிய கடலகளில் இரு தரப்பினருக்கும் மோதல் நிச்சயம். இந்த மோதல் புதியதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருவதாகும்.
அண்டார்டிக்கை யொட்டியுள்ள கடல்களில் இயற்கையில் நிறைய இரை கிடைப்பதால் அப் பகுதியானது திமிங்கிலங்களின் தாயகம் போல உள்ளது. இங்கு யாரும் திமிங்கில வேட்டையில் ஈடுபடாலாது என்று சர்வதேச திமிங்கில கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனாலும் இத் தடை அமல்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இதல்லாமல் வர்த்தக ரீதியில் உலக அளவில் எந்த நாடும் திமிங்கில வேட்டையில் ஈடுபடலாகாது என்ற தடை 14 ஆண்டுக்காலமாக இருந்து வருகிறது.
ஆனால் ஆராய்ச்சி நோக்கில் திமிங்கிலங்களைப் பிடிக்கலாம் என 1951 ஆம் ஆண்டு ஒப்ப்ந்தத்தில் ஒருஷரத்து உள்ளது. இந்த ஓட்டையை ஜப்பான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திமிங்கிலங்களைப் பிடிக்க ஆண்டுதோறும் அண்டார்டிக் கடல் பகுதிக்குக் கப்பல்களை அனுப்பி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ‘ ஆராய்ச்சி ‘ என்ற பெயரில் ஜப்பான் 1000 திமிங்கிலங்களைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
ஜப்பானின் திமிங்கில வேட்டையை அக் கடல் பகுதிக்கே சென்று எதிர்த்துப் போராட இருக்கின்ற கடல் மேய்ப்பர் இயக்கத்தினர் நியாயத்தை நிலை நாட்ட வன்முறையில் ஈடுபடுவது தவறல்ல என்று வாதிப்பவர்கள். கடந்த ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட முறைகள் இதையே காட்டுகின்றன.
திமிங்கில வேட்டைக் கப்பல்கள் மீது தங்களது கப்பல்களை மோதி சேதத்தை உண்டாக்குவது.. அக் கப்பல்களில் ஏறி மீன் பிடி வலைகளை நாசப்படுத்துவது. துறைமுகங்களில் நிறுத்தப்படுகிற திமிங்கில வேட்டைக் கப்பல்களைத் தாக்குவது. நடுக்கடலில் கப்பல்களின் ஊழியர்களை நோக்கி லேசர் ஒளிக் கற்றையைச் செலுத்தி அவர்களின் கண்களைக் கூச வைப்பது, துப்பாக்கியால் சுடுவது போன்றவை கடல் மேய்ப்பர் கையாளும் முறைகளில் அடங்கும்.
கடல் மேய்ப்பர் இயக்கத்தின் தலைவரான ‘கேப்டன்’ பால் வாட்சன் பிரபல கிரீன்பீஸ் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர் என்றாலும் அவர் பின்பற்றிய முறைகள் காரணமாக 1977 ல் வெளியேற்றப்பட்டார். வாட்சனின் இயக்கத்தினர் ஜப்பானியக் கப்பல்களை மட்டுமன்றி பிற நாடுகளின் கப்பல்களையும் தாக்கியது உண்டு.


Video : Please See for get idea 
Thursday, June 7, 2012

மகுடிக்கு மயங்குமா பாம்பு


உண்மையில் சொல்லப் போனால் பாம்புக்குச் சுத்தமாகக் காது கேட்காது. இது ஒரு செவிட்டுப் பிராணி என்பதே உண்மை. ஊர்வன வகையைச் சார்ந்த எந்த உயிரினத்திற்கும் பாலூட்டிகளைப் போல புறக்காது கிடையாது. ஆனால், மாண்டிபுளார் வழி எனப்படும் காது துளை உண்டு. இத்துளைகள் மூலம் இவை ஓசையை நன்கு கேட்டு அறிய முடியும். ஆனால், பாம்புக்கு மாண்டிபுளார் செவியும் கிடையாது.
அதேசமயம் பாம்பு மிகவும் அருகில் ஏற்படும் அதிர்வு களை அறிந்துகொள்ளும் திறன் பெற்றது. இதைத்தான் பாம்புக்கு கூர்மையான செவி அமைப்பு உடையதாக தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இருப்பினும் ஒரு கூடுதல் செய்தி என்னவென்றால், பாம்பாட்டிகள் மகுடி ஊதும்போது, மகுடி ஓசை மென்மையாக பூமியில் தவழ்ந்து ஓடுகிறது. அவ்வாறு தவழ்ந்தோடும் இசை பூமியின் தரை மீது இருக்கும் பாம்பின் உடலில் பட்டு அதிர்கிறது. அந்த அதிர்வுக்கு ஏற்பவே பாம்பு படமெடுத்து ஆடுகிறது.

Wednesday, June 6, 2012

இன்று வானில் நிகழப்போகும் அற்புதம்

இன்று சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் கடந்து செல்கிறது. இதனால் சூரியனின் மேல் வெள்ளி கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்லும்.

வெள்ளி கிரகம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆய்வில் இக்கிரகம் பூமி மற்றும் சூரியனை கடக்க நெருங்கி வருவது தெரிய வந்தது.
எனவே இதுகுறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டதில், நேற்று அல்லது இன்று வெள்ளி, பூமி மற்றும் சூரியனை கடக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளி கிரகம் கடந்து செல்வதை மேற்கு பசிபிக், கிழக்கு ஆசியா, மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடதுருவத்தில் உள்ள நாடுகளில் முழுமையாக காணமுடியும்.
அமெரிக்காவை பொறுத்தவரை ஜூன் 5ஆம் திகதி மாலையில் இக்கிரகம் கடக்கும். ஐரோப்பிய நாடுகளில் 6ஆம் திகதி காலை வெள்ளி கிரகம் கடப்பதை பார்க்க முடியும்.
அடுத்ததாக இச்சம்பவம் 2117-ம் ஆண்டு நடைபெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்இந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும்.இதனை பார்ப்பதற்கு சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும்.இதனால் பூமிக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

PLS Note : If viewed directly, permanent eye damage could result.

இரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவுபார்த்த விமானம் 
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லல், சந்திரனை ஆய்வு செய்தல், செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிடல் ஆகிய பணிகளுக்காக விண்ணில் ஏவப்படும் விண்கலங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். இதற்கு உதாரணமாக அமெரிக்காவின் டிஸ்கவரி, என்டேவர், மற்றும் ரஷ்யாவின் சோயுஷ் ஆகிய விண்கலங்களைக் கூறலாம்.


இவ் விமானம் முக்கியமாக சீனாவின் டியாங்கொங் நகரில் சமீபத்தில் அமைக்கப் பட்ட புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக மாட்டிக் கொள்ளாமல் அவதானிக்கவே உருவாக்கப் பட்டது. எனினும் இதன் மூலம் வடகொரியா, ஈரான், இராக், பாகிஸ்தான் மற்றும் ஆஃபகானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அணு உலைகள் மற்றும் இராணுவப் பாசறைகள் வாகனங்கள் என்பவற்றையும் அவதானிக்கவும் இவ் விமானம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும் எனவும் நம்பப் படுகின்றது.அமெரிக்காவின் இவ்விமானம், விண்ணில் ஆராட்சி என்ற பெயரில் ஏவப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் முற்றாக ரிமோட்டில் இயங்கக்கூடிய இவ்விமானம் சுமார் 29 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்டது. பல நாடுகளின் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு இவ்விமானம் விரைவில் தரையிறங்கவுள்ளது. குறிப்பாக பூமியில் உள்ள ஏனைய நாடுகளை வேவுபார்ப்பது என்பது அமெரிக்காவுக்கு கடுமையான விடையம். குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மேல் அமெரிக்க உளவு விமானத்தால் பறப்பில் ஈடுபட முடியாது. அந் நாடுகளின் ராடர்களில் மண்ணைத்தூவவேண்டி இருக்கும். ஆனால் பூமியில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில்(விண்வெளியில்) இருந்தவாறே இந்த வேவு விமானம் தான் சேகரிக்கவேண்டிய தகவல்களை சேகரிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆனால் ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல் முற்றிலும் ரகசியமாக, வேவு பணிக்காக ஒரு விண்கலம் இயங்கி வருகின்றது என்றால் நம்பமுடியுமா ? அப்படியான ஒரு விண்கலம் அல்லது உளவு விமானம் போயிங் நிறுவனத்தினது X-37B 2 எனப் பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று 17 000 mph வேகத்தில் பூமியை 110 - 500 மைல் உயரத்தில் 270 நாட்களாக சுற்றி வந்தது. இது இம்மாதம் (ஜூன்) கடைசியில் தரையிறக்கப் படவுள்ளது என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

Tuesday, June 5, 2012

மூன்று நாடுகளில் பிரம்மாண்ட தொலைநோக்கிகள் 

உலகின் மிக அதிக சக்திவாய்ந்த ரேடியோ அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூவாயிரம் ரேடியோ ஆண்டெனாக்கள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்றுக் கொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களைக் குறித்து துல்லியமாகக் கணக்கெடுக்க உள்ளது.இந்த உலகம் பற்றிய அடிப்படையான பல கேள்விகளுக்கும், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் குறித்த விவரங்களுக்கும் இந்த தொலைநோக்கியால் பதில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியை விட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்த புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த தொலைநோக்கி ஒரே நாட்டில் அல்லாமல் மூன்று நாட்டில் பகிர்ந்து வைக்கப்படுவதற்கு அறிவியல் காரணங்களை விட அரசியல் அவசியமே அதிக காரணம் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். அதேசமயம் உலகின் மிக அதிக சக்திவாய்ந்த இந்த ரேடியோஅலை தொலைநோக்கியானது, பேரண்டம் தொடர்பான ஆய்வில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

வெயில் கொடுமைக்கு ஆந்திராவில் 148 பேர் பலி ஒரேநாளில் பரிதாபம்
ஆந்திர மாநிலம் முழுவதும் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் வெயில் கொடுமைக்கு 148 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகி பொதுமக்களை வாட்டி எடுத்துவருகிறது. வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தால் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கத்திரி முடிந்தும் நேற்றுமுன்தினம் கோடை வெயிலால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதில் காக்கிநாடா, துணி ஆகிய மண்டலங்களில் 36 பேர் பலியாகினர் விசாகபட்டினத் தில் 108 டிகிரி கொளுத்திய வெயிலில் 31 பேரும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 108 டிகிரி வெயிலுக்கு 21 பேரும், கம்மம் மாவட்டத்தில் 106 டிகிரிக்கு 13 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 11 பேரும், வாரங்கல் 11 பேரும், விஜயநகரத்தில் 9 பேரும், ஸ்ரீகாகுளம், கரீம்நகர் மாவட்டங்களில் தலா 6 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 6 பேரும், சித்தூர் மாவட்டத்தில் 2 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 148 பேர் பலியாகி உள்ளனர். அந்தந்த மாவட்ட தலைநகரங்கள் வெளியிட்டுள்ள தகவல்படி இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.