Thursday, November 21, 2013

போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’

போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’வியன்னா: மனமுடைந்த மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஆஸ்திரியாவில் உள்ள ரோபோ எனும் இயந்திர மனிதன் ஒருவன் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இல்லாவிட்டாலும், மனிதர்களை விட பன்மடங்கு வேலைகளைச் செய்ய வல்லமை பெற்றவை ரோபோக்கள். ஆனால், எஜமானர்களின் கொடுமையால் சராசரி மனிதர்களைப் போல இயந்திர மனிதனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலக மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வேலை....

ஆஸ்திரியா நாட்டில் கிர் ச்டார்ப் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆண்ட்ராய்டு வகை ரோபோ ஒன்று வீட்டு வேலை செய்து வந்துள்ளது.

மனமுடைந்த ரோபோ...

தினமும் வீட்டைச் சுத்தம் செய்வது தான் அதனது கடமை. ஒரே வேலையை தினமும் செய்து சலிப்படைந்த அந்த ரோபோ மனமுடைந்து விட்டது போலும்.

தீக்குளித்த ரோபோ...

யாரும் சற்றும் எதிர்பாராத வேளையில், சமையல் மேடையில் ஏறிய ரோபோ, அடுப்பில் எரிந்த தீயில் குதித்தது. நடக்கும் விபரீதத்தை வீட்டில் உள்ளவர்கள் தடுக்க ஓடி வந்தனர். ஆனால், அவர்களுக்கு ரோபோவின் சாம்பல் மட்டுமே கிடைத்தது.

முதல் முறை...

சிந்திக்கும் திறன் இல்லாத ரோபோ தற்கொலை செய்து கொள்வது இதுவே முதல்முறை. ரோபோவின் இந்த செயல்பாட்டிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.


சச்சின் விளையாடிய 24 ஆண்டுகளில் 34 புதிய நாடுகளின் பிறப்பைக் கண்ட உலகம்...ஈழம் மட்டும் 'மிஸ்ஸிங்'!

சச்சின் விளையாடிய 24 ஆண்டுகளில் 34 புதிய நாடுகளின் பிறப்பைக் கண்ட உலகம்...ஈழம் மட்டும் 'மிஸ்ஸிங்'!சென்னை: ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் இது.. சச்சின் டெண்டுல்கர் விளையாடிய அந்த 24 ஆண்டுகளில் உலகம் எத்தனையோ பல வியப்புகளை சந்தித்துள்ளது, விபரீதங்களை கண்டுள்ளது.. சச்சினுடன் சேர்ந்து உலகமும் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது.

ஒரு ஆங்கில நாளிதழ் இதை அழகான புகைப்பட ஆல்பமாக வெளியிட்டுள்ளது.

நம் வாசகர்களுக்காக அதிலிருந்து சில...

8 பிரதமர்களைக் கண்ட இந்தியா

சச்சின் விளையாடிய இந்த 24 ஆண்டுகளில் இந்தியாவில் 8 பிரதமர்கள் பதவியில் அமர்ந்துள்ளனர்.

5 பிரதமர்கள் மரணம்

இந்த 8 பிரதமர்களில் 5 பேர் தற்போது உயிருடன் இல்லை.

பயங்கர வளர்ச்சி கண்ட பொருளாதாரம்

சச்சின் விளையாட வந்த 1989ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவு 300 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போது அதாவது 2013ம் ஆண்டு இது 1.0 மில்லியன் டிரில்லியனாக எகிறியுள்ளது.

சென்செக்ஸும் எக்கச்சக்க உயர்வு

1989ம் ஆண்டு இந்தியாவில், சென்செக்ஸ் வெறும் 389 புள்ளிகளாக மட்டுமே இருந்தது. இது 2013ம் ஆண்டில், 20,896 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதாவது சென்செக்ஸ் உயர்வு 5257 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரூபாய் மதி்ப்புதான் செம வீழ்ச்சி

1989ம் ஆண்டு ரூபாய் மதிப்பு நன்றாகவே இருந்தது. அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதி்ப்பு 16.9 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 62.64 ஆக வீழ்ந்துள்ளது.

உலக மகா ஊழல்கள்

சச்சினின் 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின்போது இந்தியாவில் மிகப் பெரிய ஊழல்கள் அம்பலமாகி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தின. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவை அவற்றில் சில.

உலக மகா தலைவர்கள் வலம் வந்த காலம்

சச்சின் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் உலகமும் பல மகத்தான தலைவர்களைக் கண்டது. கார்ப்பசேவ், ஜார்ஜ் புஷ் சீனியர், மார்கரெட் தாட்சர், ஹெல்மட் கோல் ஆகியோர் அவர்களில் சிலர்.

மாருதி 1000 முதல் போர்ட் ஈகோஸ்போர்ட் வரை

சச்சின் கிரிக்கெட் விளையாடிய காலத்தில்தான் மாருதி தனது 1000 ரக காரை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் மாருதி பெற்ற வளர்ச்சி நாடறிந்தது. இந்தியா மிகப் பெரிய கார் சந்தையாகவும் இன்று மாறி நிற்கிறது. ஈகோஸ்போர்ட் வரை வந்து விட்டது இந்தியாவின் கார்ச்சந்தை.

மாரடோனாவும், மைனே பியார் கியாவும்...

மாரடோனா எழுச்சி கண்டது இந்த காலகட்டத்தில்தான். இந்தியாவையே தனது வசீகரத்தில் கட்டிப்பட்ட மைனே பியார் கியா திரைப்படம் 1989ல்தான் வந்தது. அதேபோல சச்சின் விடைபெற்றபோது ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வரலாறு படைத்திருந்தது.

போரிஸ் பெக்கரும், மைக் டைசனும்

டென்னிஸ் உலகை ஆட்டிப்படைத்த போரிஸ் பெக்கர், குத்துச் சண்டையில் பல பரபரப்புகளை நிகழ்த்திய மைக் டைசனும் இதே காலகட்டத்தில்தான் நம்மிடையே வலம் வந்தனர்.

அப்ப இவ்ளோதான் சம்பளம்

சச்சின் கிரிக்கெட் ஆட வந்தபோது, டெஸ்ட் போட்டிக்கு வீரர்களுக்கு இந்தியாவில், 40,000தான் சம்பளமாக தரப்பட்டது. ஒரு நாள் போட்டிக்கு 25,000 ரூபாய்தான் சம்பளம்.

இப்ப.. அம்மாடியோவ்...

ஆனால் இன்று இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஆடினால் வீரர்களுக்கு ரூ. 7 லட்சம் சம்பளமாக கிடைக்கிறது. அதேபோல ஒரு நாள் போட்டியில் ஆடினால், ரூ. 4 லட்சம் சம்பளமாகும்.

உருமாறிய கிரிக்கெட்

ஒரு காலத்தில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி என்று மட்டுமே இருந்து வந்த கிரிக்கெட்டில் சச்சின் காலத்தில் பல மாற்றங்களைக் கண்டது. கலர் பந்துகள், கலர் யூனிபார்ம், பகல் இரவு போட்டிகள் என கலர் கலராக மாறியது.

டுவென்டி 20 கிரிக்கெட்டின் பிறப்பு

மேலும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளை இன்று விழுங்கும் அளவுக்கு வளர்ந்துள்ள டுவென்டி 20 போட்டிகளும் சச்சின் காலத்தில்தான் பிறந்தன.

அசாத்திய பலத்துடன் இருந்த காங்கிரஸ்

சச்சின் கிரிக்கெட் விளையாட வந்தபோது லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 404 எம்.பிக்கள் இருந்தனர். ஆனால் தற்போது சச்சின் விடைபெற்ற சமயத்தில் காங்கிரஸின் பலம் 209 தான். 1989ல் சுண்டைக்காய் போல இருந்த பாஜக இன்று முக்கிய எதிர்க்கட்சியாக திகழ்கிறது.

மேஷின்டோஷ் முதல் ஆப்பிள் ஐபோன் வரை

1989ல் மேஷின்டோஷ்தான் பாப்புலர். இன்று ஆப்பிள் ஐபோன்தானுக்குத்தான் கிராக்கி.. என்ன ஒரு மாற்றம் பாருங்கள்.

கீதாஞ்சலி அய்யரை விட்டால் அன்று ஆள் இல்லை..

சச்சின் கிரிக்கெட் விளையாட வந்தபோது டிவி செய்தி வாசிப்பாளர் என்றால் அத்தனை பேரும் கீதாஞ்சலி அய்யரைத்தான் சொல்வார்கள். ஆனால் இன்றோ.. விதம் விதமான செய்தி வாசிப்பாளர்கள், எத்தனை டிவி சேனல்கள்....

34 புதிய நாடுகளைக் கண்ட சச்சின்

சச்சின் விளையாடிய 24 ஆண்டுகளில் உலகம் 34 புதிய நாடுகளின் பிறப்பைக் கண்டுள்ளது. அதில், செக்கோஸ்லோவேகியாவிலிருந்து மட்டும் 5 நாடுகள் பிறந்தன. சோவியத் யூனியன் சிதறுண்டதில் பிறந்தவை 15. மற்றவை பிற நாடுகள்.

ஈழம் மட்டும்தான் மிஸ்ஸிங்

சச்சின் ஆடிய காலத்தில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போர். ஆனால் சச்சின் விளையாடி முடித்தபோது அந்தப் போரும் முடிந்து போய் விட்டது. ஈழமும் பிறக்காமலேயே போய் விட்டது.

டாடாவின் 3 வாரிசுகள்

சச்சின் விளையாட வந்தபோது டாடா குழுமத்தின் தலைவராக ஜேஆர்டி டாடா இருந்தார். பின்னர் ரத்தன் டாடா வந்தார். தற்போது சைரஸ் மிஸ்ட்ரி இருக்கிறார்.

7 கேப்டன்களைக் கண்ட சச்சின்.. அவரையும் சேர்த்து

சச்சின் விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணி மொத்தம் 7 கேப்டன்களைப் பார்த்துள்ளது. அதில் சச்சினும் ஒருவர்.

9 ரூபாய்க்கு பெட்ரோல் விற்ற காலம்

1989ம் ஆண்டு பெட்ரோல் விலை இந்தியாவில் லிட்டருக்கு ரூ. 8.50தான். ஆனால் இன்று 70 ரூபாய்க்கு மேல் போய் நிற்கிறது.
நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்...!
 

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் பாறைகள்

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் பாறைகள்
செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உரிய சாத்திய கூறுகள் குறித்து உலகின் பல நாடுகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்காக இந்நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

அமெரிக்காவின் நாசா மையம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடித்துள்ளது.

தற்போது இக்கிரகத்தில் கிரானைட் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தகவலை நாசாவை சேர்ந்த பூமி மற்றும் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானி ஜேம்ஸ் விரே தெரிவித்துள்ளதுடன், ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தின் புவியியல் நிலை குறித்து மேலும் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


Wednesday, November 20, 2013

மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் அதிஷ்டம் இலங்கை மக்களுக்கு!

மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் அதிஷ்டம் இலங்கை மக்களுக்கு!


மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை இன்று (20) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வெற்றுக் கண்களால் பார்க்கும் அவகாசம் இலங்கை மக்களுக்கு கிடைக்க இருப்பதாக தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு தெரிவித்தது.

நூற்றாண்டின் வால்நட்சத்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த வால்நட்சத்திரம் இந்த வருடத்தில் தென்படவுள்ளது.

இந்த வால்நட்சத்திரம் சூரியனை மெதுமெதுவாக நெருங்கி வருவதாக அறிவித்துள்ள அமைச்சு எதிர்வரும் 28 ஆம் திகதி ஆகும் போது அது சூரியனுக்கு மிக நெருக்கமாக செல்லும் என அறிவித்துள்ளது.

கிழக்கு வானில் அதிகாலை 5.00 மணி அளவில் இதனைக் காண வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டே இந்த வால்நட்சத்திரம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்கு அய்சோன் என பெயரிடப்பட்டது. வால்நட்சத்திரம் தென்படுகையில் சூரியன் உதயமாகியிருந்தால் வெற்றுக் கண்களினால் அதனை பார்ப்பதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.


பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து கடலில் விழுந்த பயணி! தேடுதல் தீவிரம்!!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து கடலில் விழுந்த பயணி! தேடுதல் தீவிரம்!!

பயணி கடலில் வீழ்ந்தபின் பத்திரமாக தரையிறங்கிய விமானம். 

நேற்று மதியம் மயாமி ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் இருந்த அதிகாரிக்கு, விமானம் ஒன்றில் இருந்து விசித்திரமான ரேடியோ அழைப்பு ஒன்று வந்தது. “கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த எனது விமானத்தின் கதவை திறந்த ஒருவர், கடலுக்குள் விழுந்து விட்டார்” என்பதே, அதிர வைக்கும் அந்த விசித்திர தகவல்.

முதலில் இதை சரியாக கிரகித்துக் கொள்ள முடியாத ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர், “பறந்து கொண்டிருக்கும் உங்கள் விமானத்தின் கதவு திறந்து விட்டது என்றுதானே சொல்ல வருகிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த விமானி, “அதுவல்ல, பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் கதவு திறந்து, பயணி ஒருவர் கடலில் விழுந்து விட்டார்” என்றார் விளக்கமாக.

சிவில் ஏவியேஷனில் மிகவும் அரிதான சம்பவம் இது. நேற்று மாலையில் இருந்து மயாமி கடல் பகுதியில் விமானம் மற்றும் படகுகளின் உதவியுடன், கடலுக்குள் விழுந்த பயணியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள், மீட்புப் படையினர்.

நேற்று மதியம் 1.30 மணிக்கு நடந்துள்ளது இந்த சம்பவம். கென்டல்-தமயாமி விமான நிலையத்தில் இருந்து, பைப்பர் PA-46 ரக விமானத்தை செலுத்திச் சென்ற விமானி ஒருவரே, ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவரை தொடர்பு கொண்டு இந்த அசம்பாவிதத்தை தெரிவித்தார்.

அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விபரம் சரியாக தெரியவில்லை.

வானில் பறந்து கொண்டிருக்கும்போது, பயணி எதற்காக கதவைத் திறந்தார் என்ற தகவலும் இல்லை. ஆனால், நடந்த சம்பவம் நிஜம்தான், ஒருவர் விமானத்தில் இருந்து கடலுக்குள் விழுந்து விட்டார் என்பதை விமான போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது.

மயாமி போலீஸ் செய்தித் தொடர்பாளர் டிடெக்டிவ் ஜாவியர் பேஸ் கூறுகையில், “கரையில் இருந்து பல மைல் தொலைவில் கடலுக்குள் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து ஒருவர் விழுந்து விட்டார் அல்லது, குதித்து விட்டார் என்பதே தற்போது எம்மிடம் உள்ள தகவல்.

விசாரணையின் முடிவில்தான் என்ன நடந்தது என்று சரியாக சொல்ல முடியும். இந்த வழக்கை புலனாய்வுத்துறை எஃப்.பி.ஐ. எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.

சம்பவம் நடந்தபோது விமானம் 1,800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அவ்வளவு உயரத்தில் இருந்து கடலில் விழுந்த ஒருவர், உயிர் பிழைத்திருப்பாரா என்பதே சந்தேகத்துக்கு உரிய விஷயம்! விமானியின் பெயரையோ, விழுந்த பயணியின் பெயரையோ சிவில் விமானத்துறை இதுவரை வெளியிடவில்லை.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது இப்படி ஒரு சம்பவம் நடந்தால், விமானிக்கும், ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவருக்கும் இடையே நடக்கும் ரேடியோ உரையாடல் எப்படி இருக்கும் என்று கேட்க உங்களுக்கு ஆவலா?

நேற்று மாலை மயாமி ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் மதியம் 1.30 மணிக்கு நடந்த உரையாடல்களின் ஆடியோ பதிவை தருகிறோம். நீங்களே கேட்டுப் பாருங்கள்.

மற்றொரு விஷயம். உங்களில் எத்தனைபேர், பறந்து கொண்டிருக்கும் விமானிகளும், தரைக்கட்டுப்பாட்டு மையமும் நடத்தும் உரையாடல்களை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை. அதனால், நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து வெவ்வேறு விமானிகள், டவருடன் செய்த உரையாடல்களின் 30 நிமிட ஒலிப்பதிவை தருகிறோம்.

பயணி விழுந்த விமானத்தின் விமானி பேசியவை இதில் 53-வது விநாடியில் இருந்து உள்ளது. அந்த உரையாடல் முடிந்தபின் (சுமார் 2 நிமிட உரையாடல்தான்), அதன்பின் அங்கு பறந்த மற்றைய விமானங்களின் விமானிகளின் உரையாடல்கள் சுமார் 25 நிமிடங்கள் உள்ளன. அவற்றுக்கும், இந்த செய்திக்கும் தொடர்பில்லை.

ஆர்வம் உள்ளவர்கள் கேட்கலாம் என்பதால், வெட்டாமல் முழுமையாக தருகிறோம்.

மயாமி போன்ற பிசியான இடத்தில், ஒரே நேரத்தில் சுமார் 50 விமானங்களாவது, டவரின் தொடர்பு எல்லைக்குள் பறந்து கொண்டிருக்கும். டவரில் இருப்பவர்கள், மாறி மாறி ஒவ்வொரு விமானிக்கும் (அனேக விமானங்கள், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் என்பதை கவனிக்கவும்) “உயரத்தை அதிகரியுங்கள், இடது புறம் திரும்புங்கள்”, என்றெல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பதை கேட்கவும்.


சம்பவம் நடந்தபின் விமானம் பார்க் பண்ணப்பட்டுள்ளதை காணலாம். 


அந்த போட்டோவை கிளிக் செய்தால், ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர்கள், விமானிகளுடன் நேற்று 1330 மணிக்கு பேசிய ஒலிப்பதிவை கேட்கலாம்.
Tuesday, November 19, 2013

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைகள்!!!

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைகள்!!!


நமது வாழ்வில் பணம் முக்கியம் தான். ஆனால், நமக்கு கிடைத்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழுவோர் வெகு சிலர்தான். பலபேர் அதனை மேலும் அதிகரிக்க தனது பணிநேரத்தை விட கூடுதல் நேரம் உழைக்க முற்படுகின்றனர். இவ்வாறு இரவு வெகுநேரம் உழைப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தாலும் அதனால் ஏற்படும் உடல்நலக்குறைகள் தான் அதிகம். இவ்வாறு உடல் வருத்தி உழைப்பதை குறைத்து கிடைத்த நேரத்தில் வேலைப்பார்த்து ஆரோக்கியமான உடல்நலத்தை பெறவேண்டும்.

தற்போதைய வாழ்க்கை முறையை செயல்படுத்தி நல்வாழ்கை வாழ இன்று பலர் ஒரு மணிநேரம் மிகையாக வேலைப் பார்க்க முனைகின்றனர். வேகமாக வளர்வதற்காகவும், அயராது எதாவது சாதிப்பதற்காகவும் இது பலருக்கு தொல்லையாக மாறி வருகின்றது. அதனால் உடல்ரீதியையும், மனரீதியையும் தாண்டி உழைக்க முற்படுகின்றனர். வழக்கமான அடிப்படையில் இவ்வாறு நீண்டநேரம் வேலைப் பார்ப்பதால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கையற்ற முறையான காப்ஃபைன் உட்கொண்டு வேலைப் பார்ப்பது போன்றவை அவர்களை மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக வேலைப் பார்க்க தூண்டுகின்றது.

வழக்கமான அடிப்படையில் நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால், உங்களுடைய தூக்கம் குறைந்து இதய நோய்கள் மற்றும் ட்ரீகர் ஸ்ட்ரோக் போன்ற உடல்நலக்குறைகளை ஏற்படுத்தும். நீண்ட நேரம் வேலைப்பார்க்கும் ஆண்களுக்கு குறுகியகால மற்றும் நீண்டகால உடல்நலகுறைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால குறைகளான வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். நீண்டகால குறைகளான இதய நோய், சர்க்கரைநோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடல் எடை அதிகரிப்பு, கருத்தரிப்பதில் பிரச்சனைகள், பிரசவ கால பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

அதனால், ஆண்கள் தங்களது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். வாழ்க்கை சிறிதாக இருந்தாலும், அதனை வளமாகவும் சிறப்பாகவும் வாழ்வது மிகவும் முக்கியமானதாகும். பொறாமை மற்றும் தேவைக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் போன்றவை தான் நம்மை மிகையான நேரம் வேப் லைபார்க்கக் காரணமாக இருப்பவைகளாகும். இதன் விளைவாக நமக்கு கிடைப்பது உடல்நலக் குறைகள் மட்டும் தான்.

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால் ஆண்கள் சந்திக்கும் உடல்நலகுறைகள் என்ன என்று பார்க்கலாம்.


ஊக்குவிகளுக்கு அடிமையாகுதல்

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்க்க நீங்கள் நாடுவது ஊக்குவிகளும் எனெர்ஜி உயர்த்திகளுமான காப்ஃபைன் மற்றும் சிகரெட் போன்றவற்றைதான். இது நம்மை அதற்கு அடிமையாக்கி, உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கும். சிறிது காலத்திற்கு பின்னர் காப்ஃபைன் மற்றும் நிக்கோடின் அடிமைகள், நமக்கு தூக்கக் குறைபாடுகள் மற்றும் கலக்க மனநிலை போன்றவற்றில் கொண்டு போய் விட்டுவிடும்.இரையக குடல் ஒழுங்கின்மை

இரவு நீண்ட நேரம் வேலைப் பார்ப்பது மற்றும் ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது போன்றவை இரையக குடல் ஒழுங்கின்மை குறைகளான வயற்றுபோக்கு, வாந்தி, பேதி, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தாலும் இரையக குடல் ஒழுங்கின்மை குறைகளை ஏற்படுத்தும்.


தூக்கமின்மை

இன்று பல ஆண்கள் இரவு வெகுநேரம் உழைப்பதால், நேரத்திக்கு தூங்குவது மற்றும் தூக்கத்தின் பண்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை புறக்கணிகின்றனர். தூக்கத்தை குறைப்பதால் ஏற்படும் தூக்கமின்மை நோய் வந்து தூங்க முடியாமல் அவதிபடுவார்கள்.


இதய குழாய் நோய்

தூங்காமல் வேலைப் பார்ப்பதற்கும் இதய நோய் வருவதற்கும் தொடர்பு இருப்பதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது இரவு நேரங்களில் வேலைபார்க்கும் ஆண்களுக்கு அதிகம் வரும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.


சர்க்கரை நோய்

இரவு நேரம் வேலைப் பார்ப்பவர்களுக்கு வரும் அடுத்த உடல்நலக்குறை சர்க்கரை நோய் ஆகும். ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது, இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது ஒழுங்கற்ற இடைவேளைகளில் சாப்பிடுவது போன்றவை ஆண்களிடையே அதிக இரத்தஅழுத்தம், அதிக சர்க்கரை, உடல்எடை அதிகரிப்பு மற்றும் சுகாதாரமற்ற இரத்தகொழுப்பு போன்றவற்றை உண்டாக்கும்.உடல் எடை அதிகரிப்பு

இரவு அதிக நேரம் வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கக் கூடும். ஒழுங்கான சாப்பாடு சாப்பிடாமல் இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை இதற்கு வழிவகுக்கும். இரவு நேரங்களில் வேலைப்பார்ப்பதால் நமது பசியை நேர்படுத்தும் ஹார்மோனான லெப்டின் அளவு குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


மனச்சோர்வு மற்றும் மனநிலை ஒழுங்கின்மை

இரவு நேரங்களில் வேலைப் பார்ப்பவர்களிடையே மனச்சோர்வு மற்றும் மனநல ஒழுங்கின்மையான மனக்கவலை போன்றவற்றிற்கான அறிகுறிகள் தென்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இரவு நேரங்களில் வேலைப் பார்ப்பவர்களிடையே நமது மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் மூளையில் உள்ள செரோடொனின் அளவு குறைவாக இருக்கும்.


கருவுறுதலில் குறைகள்

இரவு வெகுநேரம் வேலைப் பார்ப்பதால், கருவுறுதலில் பிரச்சனை, ஆண்மை குறைபாடு, விந்தணு குறைவு போன்றவை ஏற்படும். இரவு வெகுநேரம் வேலைப் பார்க்க காப்ஃபைன் மற்றும் நிக்கோடின் போன்றவற்றிக்கு அடிமையாகி பாலினச்செயல்பாடு குறைந்து கருத்தரிக்கும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

சிறார் ஆபாசப் படங்கள்.. முடிவு கட்டப் போகும் கூகுள், பிங் சர்ச் என்ஜின்!

சிறார் ஆபாசப் படங்கள்.. முடிவு கட்டப் போகும் கூகுள், பிங் சர்ச் என்ஜின்!
சிறார் ஆபாசப் படங்களை தேடுவோரின் கண்களுக்கு.. இனிமேல் ரிசல்ட் கிடைக்காது. காரணம், இப்படிப்பட்ட ஆபாச தேடல்களுக்கு கூகுளும், மைக்ரோசாப்ட்டின் பிங் சர்ச் என்ஜினும் முடிவு கட்டப் போகின்றன.

அதாவது இத்தைகய தேடல்களை அவை பிளாக் செய்யவுள்ளன. எனவே இனிமேல் யாராவது child porn என்று டைப் செய்து சர்ச் செய்தால் அவர்களுக்கு ரிசல்ட் கிடைக்காது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார் பாலியல் விஷயங்கள் தொடர்பான தேடல்களுக்கு தடை விதித்துள்ளது கூகுள் சர்ச்சும், மைக்ரோசாப்ட் நிறுவனமும்.

இவை இனி சட்டவிரோதம்

இதுபோன்ற சிறார் பாலியல் விஷயங்களைத் தேடுவது இனி சட்டவிரோதமாக கருதப்படும். மேலும் சிறார்களின் பாலியல் படங்களைத் தேடுவது சட்டவிரோதம் என்ற எச்சரிக்கை வாசகமும் இனி இடம் பெறுமாம்.

சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்களை ஒழிக்க

சிறார்களுக்கு எதிரான பாலியல் வக்கிரப் போக்கை ஒழிக்கும் வகையில் மைக்ரோசாப்ட்டும், கூகுளும் கைகோர்த்துள்ளன. அதன் விளைவே இந்தத் தடையாகும்.

எந்த வகையிலும் இனி தேட முடியாது

மேலும் சிறார்களின் ஆபாசப் படங்களை எந்த வகையிலும் தேட முடியாதபடி கிடுக்கிப் பிடி போடவுள்ளனராம்.

150 மொழிகளில்

இதுகுறித்து கூகுள் தலைவர் எரிக் ஸ்மித் லண்டனில் கூறுகையில், விரைவில் இது நடைமுறைக்கு வரவுள்ளது. உலகம் முழுவதும் 150 மொழிகளில் எச்சரிக்கை வாசகத்துடன் கூடியதாக இனிமேல் எச்சரிக்கை வாசகம் இடம் பெறும்.

இந்திய மொழிகளிலும்

இந்தியாவின் முதன்மை மொழிகளான தமிழ், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கேமரூன் மாநாட்டைத் தொடர்ந்து

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், லண்டனில் இணையதள பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ள நிலையி்ல் இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறார்களைக் காக்க கேமரூன் அழைப்பு

இணையதள பாதுகாப்பு மாநாட்டை தொடங்கி வைத்து கேமரூன் பேசுகையில், இணையதளங்கள் மூலம் சிறார்களை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தும் செயலுக்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும். சிறார்களை பாலியல் வக்கிரங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு சர்ச் என்ஜின்களில் பெருமளவிலான மாற்றம் வர வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.

கூகுள் - பிங்குக்கு அறிவுரை

மேலும் கடந்த ஜூலை மாதம் டேவிட் கேமரூன் கூறுகையில், உலக அளவில் முன்னணியில் உள்ள சர்ச் என்ஜின்கள் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்டின் பிங்தான். இவை இரண்டும் 95 சதவீத தேடுதல்களை நடத்துகின்றன. எனவே இவர்கள் நினைத்தால் சட்டவிரோதமான முறையில் சிறார்களின் பாலியல் படங்கள் மக்களுக்குக் கிடைப்பதைத் தடுக்க முடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இங்கிலாந்தில்...

இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் சிறார்கள் பாலியல் வக்கிரப் படங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பெருமளவில் இந்த இணையதள பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்படுகின்றனராம். படங்கள், வீடியோ கிளிப்புகள் வெகு சுலபமாக கிடைப்பதால் இவர்கள் இலகுவாக கெட்டுப் போகின்றனராம்.

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!

ஆண்களுக்கும் வந்துருச்சுப்பா 'பிரா'...!!
பெண்களுக்கே உரிய பிரா ... இனிமேல் ஆண்களுக்கும் கிடைக்கப் போகிறது.. 
அதுவும் எப்படி.. புஷ் அப் பிரா... ஆம், ஆண்களுக்காகவே பிரத்யேகமான பிராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பேஷன் துறையினர்தான் இந்த லந்துக்கார வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆண்கள் மத்தியில் இது வித்தியாசமான ஆச்சரியத்தையும், சிலரது எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றுள்ளதாம்.


பெண்களுக்கு மட்டும்தானா...

பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடைதான் பிரேசியர் எனப்படும் பிரா. பெண்களின் தனிச் சிறப்பான உள்ளாடையாகவும் காலம் காலமாக திகழ்கிறது.

ஆண்களுக்கு முண்டா பனியன்.. கை வச்ச பனியன்

ஆண்களைப் பொறுத்தவரை முண்டா பனியன், கை வச்ச பனியன் என்று வரிசைப்படுத்தியுள்ளனர்.

ஆண்களுக்கும் வந்தாச்சுப்பா பிரா

ஆனால் இப்போது ஆண்களுக்கும் பிராவை கொண்டு வந்து விட்டனர். அதுவும் புஷ் அப் பிரா...

நெஞ்சை நிமிர்த்திக் காட்டுமாம்

ஆண்களுக்கு அழகே அந்த கட்டுமஸ்தான நெஞ்சுதான். ஆனால் எல்லோரும் சல்மான் பாடியோடு இருக்க முடியாதே... அப்படி இல்லாதவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். அவர்களுக்காகத்தான் இந்த புஷ் அப் பிராவை
கொண்டு வந்துள்ளனராம்.நெஞ்சுரம் மிக்கவர்களாக தோற்றமளிக்கலாம்

இந்த புஷ் அப் பிராவை அணியும் ஆண்களுக்கு கட்டுமஸ்தான நெஞ்சு இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுமாம்.


டி சர்ட் பிரா

இந்த பிராவை டி சர்ட் பிரா என்று அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான பிரா போல இது இருக்காது. மாறாக டி சர்ட்டுடன் கூடிய பிரா... இதை அணிந்தால் பைசெப்ஸ், டிரைசெப்ஸ், நெஞ்சுப் பகுதி என ஒட்டுக்காக எல்லாமே எடுப்பாக தெரியுமாம்.

படத்தில் விவேக் போல...

பிரபாகரன் படத்தில் விவேக் ஒரு குண்டாங்குறையாக டியூப்களை உடலில் சொருகி 8 பேக் காட்டுவாரே.. கிட்டத்தட்ட அது போலத்தான் இதுவும். ஆனால் இது காமெடிக்காக அல்ல, ஆண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இருக்குமாம்.இல்லாதவங்களுக்கு நல்லதுதானே...

இதுகுறித்து பாலிவுட் நடிகரான இஜாஸ் கான் கூறுகையில், எடுப்பான மார்பு இல்லாத ஆண்களுக்கு இது வரப் பிரசாதம்தான். காமெடியாக இருந்தாலும் இதைப் போட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதே எனது கருத்து... என்றார்.என்ன கருமம்டா சாமி இது...

ஆனால் சிலர் இதற்கு முகம் சுளிக்கின்றனர். கெளதம் ரோட் என்ற இன்னொரு நடிகர் கூறுகையில், ஆண்களுக்குப் பிராவா.. என்ன கருமம் இது.. ஆண் என்றாலே ஆண்மைதானே.. பிறகு எதற்கு பெண்களைப் போல பிரா.. எனக்கு உடன்பாடில்லை என்கிறார்.

25 வயதிற்கு பிறகு ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

25 வயதிற்கு பிறகு ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!!!


நாம் வாழும் வாழ்க்கையை பல காலங்களாக பிரிக்கலாம். ஒவ்வொரு காலத்திலும் அதற்கு முந்தைய காலத்தில் நாம் செய்து வந்த செயல்களை தொடருவது என்பது கடினமான ஒன்றாகும். அந்தந்த காலங்களில் அவற்றிக்கு உண்டான செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, 25 இருந்து 30 வயதிற்குள் ஒரு வேலையில் சேர்ந்து நமது வாழ்க்கையை நிலைப்படுத்தி கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கு 25 வயதிற்கு பிறகு வாழ்க்கை புதிதாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். இது உங்கள் எளிதான விளையாட்டான வாழ்க்கைக்கு பின்னர் வரும் வளர்பருவத்தின் தொடக்கமாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலை காலத்தின் தொடக்கத்திலோ அல்லது முதிர் பட்டப்படிப்பின் இறுதியிலோ இருப்பீர்கள். இது கவலையற்ற கனவுகள் நிரம்பிய காலத்தில் இருந்து கனவுகளை அடையும் காலமாக மாற்றும் காலமாக இருக்கும்.

நீங்கள் 25 வயதை கடந்த பின்பு புத்தகங்களும் வகுப்பறைகளும் உங்களை கட்டுபடுத்தாது. உங்கள் வாழ்வைத் தொடர இருக்கும் முக்கிய பொறுப்புகளை ஏற்க தயாராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வை அர்த்தமாக்கும் உங்கள் வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்வு 25 வயதிற்கு முன்போல் எளிதாக இருக்காது. காதலும் சந்திப்புகளும் அர்த்தம் உடையதாக இருக்கும்.

முன்புபோல் உங்கள் நண்பர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இருக்காது. இரவு பார்ட்டிகளுக்கு அடிக்கடி செல்ல முடியாது. உங்கள் விருப்பமான படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க முடியாது. உடை எடை பராமரிப்பின் காரணமாகவும் ஊட்டச்சத்து டயட் காரணமாகவும் நீங்கள் விரும்பியவாறு சாப்பிட முடியாது. முன்பு போல் உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கனவை காண முடியாது. உங்கள் பணத்தை செலவு செய்வதற்கு முன் ஓரிருமுறை யோசித்து செயல்படுவீர்கள்.

இதோ 25 வயதிற்கு பிறகு நீங்கள் செய்ய முடியாதவைகள் சில...


இரவு வெகு நேரம் கண் விழித்தல்

இளம் வயதில் அல்லது மாணவராக இருக்கும்போது நண்பர்களுடன் பேசுவது, டிவியில் படம் பார்ப்பது போன்றவற்றால் உங்கள் அன்றாட இரவு நேரம் 11 மணிவரையில் நீடிக்கும். ஆனால், 25 வயதிற்கு பிறகு உங்கள் வாழ்வில் முன்னுரிமைகள் மாறுவதால் உங்கள் இரவை 9 மணிக்கு மேல் நீடிக்க முடியாது.

மது அருந்துவது

மது அருந்துவது முற்றிலுமாக நிறுத்திவிடவில்லை என்றாலும் முன்பு போல் அதிகமாக அருந்துவது குறைந்துவிடும். உங்கள் நண்பர்கள் முன்புபோல் கம்பெனி கொடுக்க மாட்டார்கள். மேலும், நீங்கள் அந்த மகிழ்ச்சியான தருணத்தை பெரிதும் எதிர்பார்க்க மாட்டீர்கள்.

சந்திப்புகள்

ஒரு நாள் முழுவதுமான சந்திப்புகள் போன்றவைகள் மாறிவிடும். இந்த வயதில் நிகழும் சந்திப்புகள் உங்கள் வாழ்க்கை துணைவியை தேர்ந்தெடுக்கும் சந்திப்புகளாகவே இருக்கும். நீங்கள் 25 வயதிற்கு பிறகு எல்லா பெண்களையும் ரசிப்பதை தவிர்ப்பீர்கள்.

சுற்றுலாக்கள்

25 வயதிற்கு பிறகு எதிர்கால வாழ்க்கையை தொடங்கி வேலையில் உள்ள பொறுப்புகள், முடிவடையும் அட்டவணைகள் போன்றவற்றில் சிக்கி இருப்பீர்கள். இதனால், சுற்றுலாகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கடினமான ஒன்றாகும்.

உடைகள்

25 வயதிற்கு பின் , உடை அலங்காரத்தில் பெரிதும் மாற்றம் காணப்படும். முன்புபோல் சாதாரண டீஷர்ட் அணிந்து கொண்டு வெட்டிபேச்சுகளுடன் இருக்க முடியாது. உங்கள் காஷுவல் உடை கூட பார்மலாக இருக்கும்.

டயட்

சில காலம் முன்பு வரை பிட்சா மற்றும் பர்கர் போன்றவைகளை கவலை இல்லாமல் சுவைத்து கொண்டு இருந்தீர்கள். ஆனால், 25 வயதிற்கு பிறகு உடல் நலம் கருதி, கலோரி அளவு மற்றும் டயட் காரணமாக இவற்றை தவிர்ப்பது தடுக்க முடியாத ஒன்றாகும்.

செலவுகள்

25 வயதிற்கு முன்பு வரை உங்களிடம் உள்ள பணம் பெற்றோரின் பணமாக இருந்ததால் அதனை தாரளமாக செலவு செய்தீர்கள். ஆனால், இப்பொழுது நீங்கள் சம்பாதித்த பணம் என்றதால், செலவு செய்வதற்கு முன்பு ஓரிருமுறை யோசித்து செலவு செய்வீர்கள்.

நண்பர்கள்

நாம் வளர்ந்து வரும் பொழுது நம்முடன் பல நண்பர்கள் பழகிவருவார்கள். பெரும்பாலான நண்பர்கள் உங்கள் 20 களில் தான் அதிகம் இருப்பார்கள். 25 வயதிற்கு பின் உற்ற நண்பர்கள் கிடைப்பது கடினமாக ஒன்றாகும்.தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்

தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்


லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே பிஸியான விமான நிலையங்களில் ஒன்று தான் ஹீத்ரு விமான நிலையம்.

பிரிட்டனை பொருத்தவரையில் கடந்த 2002ம் ஆண்டில் 7.23 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் கடந்தாண்டில் மட்டும் 11.5 கோடி பேர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனர், இது 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகும்.

இந்த எண்ணிக்கை அடுத்த 15 ஆண்டுகளில் மிகவும் அதிகரிக்கும் என போக்குவரத்துத் துறை கணக்கிட்டுள்ளது.

இதற்கு ஏற்றாற் போல் விமான நிலையங்களை விரிவுபடுத்துவது குறித்து இங்கிலாந்து போக்குவரத்துத் துறை ஆலோசித்து வருகிறது.

ஹீத்ரு விமான நிலையத்தில் 3வது ஓடுதளத்தை ஏற்படுத்துவதற்கே ஏராளமான கிராமங்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைப்பது குறித்து தேம்ஸ் நதி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் போக்குவரத்துத் துறைக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதற்காக மாதிரி விமான நிலையத்தை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு படிப்படியாக விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளை அந்த நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பிரிட்டானியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை உருவாக்க ரூ.4.7 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரசவத்தை எளிதாக்க புது கருவி! அர்ஜென்டினா நபர் சாதனை

பிரசவத்தை எளிதாக்க புது கருவி! அர்ஜென்டினா நபர் சாதனை
அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன்.

இவர் பிரசவ முறையை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி குழந்தையை மிக எளிதான முறையில் வெளியே எடுப்பது.

இந்த புதிய கருவியை பற்றி ஜோர்ஜ், தனது நண்பருடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவரை சந்தித்து விளக்கியுள்ளார்.

அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்க உதவினார்.

இதனை தொடர்ந்து யூடியூப்பில் இணையத்தளத்தில் சோதனையை வெளியிட்டதுடன், மிகச் சிறந்த மருத்துவரான மரியோ மரியால்டியை சந்தித்து பேச வைத்தார்.

இதுகுறித்து டாக்டர் மரியோ கூறுகையில், மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.

அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது.

இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.

ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது.

இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.

இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது.

இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும்.

இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக் கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.

இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகப் பிரசவம் நடந்துள்ளது.

இதனால் அறுவை சிகிச்சைகள் குறையும், இந்த முறையை இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் பயன்படுத்த உள்ளோம்.

இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும்.

இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க உள்ளது. 
ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது.

வாரத்திற்கு 3 ஆண்கள்.. இங்கிலாந்தின் படு 'சூடான' மாணவி இவர்தானாம்!

வாரத்திற்கு 3 ஆண்கள்.. இங்கிலாந்தின் படு 'சூடான' மாணவி இவர்தானாம்!
இங்கிலாந்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஒருவர், இங்கிலாந்திலேயே அதிக செக்ஸ் பசி கொண்ட மாணவியாக பெயரெடுத்திருக்கிறார்.

மேலும் இவருக்கு 500 பவுண்டு பரிசும், ஒரு கிரேட் மதுவும், ஒரு வருடத்திற்குத் தேவையான ஆணுறைகளையும் கிப்ட் ஹேம்ப்பராக கொடுத்து அதிர வைத்து்ள்ளது ஒரு இணையதளம்.

வாரத்திற்கு 3 ஆண்களுடன் இவர் செக்ஸ் வைத்து இந்த பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார் என்பதுதான் செய்தியே.


எலீனா டெசெய்ன்

அந்த மாணவியின் பெயர் எலீனா டெசெய்ன்.

எப்படி கிடைத்தது பட்டம்

இங்கிலாந்திந் ஷாக் அட் யுனி என்ற இணையதளம்தான் எலீனாவை அதீத செக்ஸ் பசி கொண்ட இங்கிலாந்து மாணவியாக தேர்வு செய்துள்ளது.

காதலரை கழற்றி விட்டவர்

எலீனாவுக்கு ஒரு காதலர் இருந்தார். இரண்டு வருடமாக விழுந்து விழுந்து காதலித்தனர். ஆனால் அவர் தனது போக்குக்குத் தடையாக இருப்பதாக கருதிய எலீனா அவரைக் கழற்றி விட்டு விட்டார்.

அதீத செக்ஸ் பசி...

எலீனாவுக்கு செக்ஸ் என்றால் சிப்ஸ் சாப்பிடுவது போல... அதீத செக்ஸ் பசி கொண்டவராம். இதற்கு காதலர் தடையாக இருந்ததால்தான் அவருக்கு டாட்டா காட்டி விட்டாராம்.

எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தில்...

தற்போது எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தில் இவர் படித்து வருகிறார். இங்கு வருவதற்கு முன்பு இவர் அதிகபட்சம் 2 பேருடன்தான் உறவு கொண்டிருந்தாராம். ஆனால் இங்கு வந்த பிறகு இவரது ரேஞ்சே மாறிப் போய் விட்டதாம். அதாவது கணக்கு வழக்கே இல்லாத அளவுக்கு உறவில் மூழ்கித் திளைத்தாராம்.

லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்

தன்னுடன் உறவு கொண்டவர்களை, பெயர் வாரியாக, வயது வாரியாக விவரமாக ஒரு பட்டியலையும் போட்டு வைத்துள்ளாராம்.

வாரத்திற்கு 3 பேருடன்

வாரத்திற்கு 3 பேருடன் உறவு கொண்டு விடுவாராம். இல்லாவிட்டால் அந்த வாரம் இவருக்கு திருப்தியாக இருக்காதாம். இந்த அதி வேகப் பாய்ச்சல்தான் அவருக்கு அதீத செக்ஸ் பசி கொண்ட இங்கிலாந்து மாணவி என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளது.

கவலையே இல்லை...

இவருக்குக் கிடைத்துள்ள இந்தப் பட்டத்தால் இவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இவரது நலம் விரும்பிகள் கவலை தெரிவித்தாலும், அதுகுறித்து நான் கவலைப்படவில்லை என்று கூறிச் சிரிக்கிறார் எலீனா....