Saturday, May 11, 2013

நூற்றாண்டின் மிகப்பெரிய வங்கி கொள்ளை! சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் காலி!!


நூற்றாண்டின் மிகப்பெரிய வங்கி கொள்ளை! சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் காலி!!உலக அளவில் இயங்கும் குற்றவாளிகள் குழு ஒன்று சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் பணத்தை பேங்க் ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்துள்ளது என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. வங்கிகளில் கம்ப்யூட்டர் டேட்டா பேஸ்களில் ஊடுருவி, இதை அவர்கள் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

“இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை இதுதான்” என்கிறார், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் லொரெட்டா லின்ச்.

பெரும்பாலும் மத்திய கிழக்கு, அரபு நாட்டு வங்கிகளின் கம்ப்யூட்டர்களையே இவர்கள் ஊடுருவியுள்ளார்கள். முன்பணம் செலுத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களின் (prepaid credit cards) பணம் எடுக்கும் லிமிட்டை (withdrawal limits) இல்லாது செய்துவிட்டு, அந்த கணக்குகளின் கோர்ட்டை இவர்களால் எடுக்க முடிந்துள்ளது.

அந்த கோர்ட்டை தம்மிடம் உள்ள ஹோட்டல் கீ-கார்ட்டுகள், அல்லது பழைய கிரெடிட் கார்ட்டுகளில் உள்ள மேக்னெடிக் ஸ்ட்ரைப்களில் ட்ரான்ஸ்போர்ம் செய்துவிட, அரபு வங்கி வாடிக்கையாளரின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் ரெடியாகிறது. இதை வைத்து நியூயார்க் உட்பட அமெரிக்க நகரங்களில் சில மணி நேரத்தில் 45 மில்லியன் டாலர் பணத்தை எடுத்துள்ளார்கள்.

நீங்கள் அரபு வங்கி ஒன்றின் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், உடனடியான உங்கள் பேலன்ஸை செக் பண்ணி பார்க்கவும்!

Friday, May 10, 2013

கொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்


கொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்


சண்டை இல்லாத வீடு உப்பு காரம் இல்லாத சமையல் போல ருசியே இருக்காது. தம்பதியர், காதலர்கள் இடையே அவ்வப்போது சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தால்தான் அன்பின் ஆழம் தெரியும், அதை சரியாக புரிந்து கொள்ளவும் முடியும்.

உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா? என்று ஒரு கவிஞன் கேட்டதைப் போல சோற்றில் கரைந்த உப்பைப் போலவும், காபியில் கலந்த சர்க்கரையைப் போலவும் இருப்பதுதான் காதல்.

இந்த காதலும் அன்பும் ஒன்றாக காமத்தில் இணையும் போது அது தனி ருசியைத் தரும். அடிக்கடி கூடல் மட்டுமே இருந்தால் அதில் என்ன சுவாரஸ்யம்? கொஞ்சம் ஊடலும் வேணுங்க அப்பத்தானே தயிர்சாதத்திற்கு ஏற்ற ஊறுகாய் மாதிரி உறவு சும்மா சுள்ளுன்னு ருசிக்கும் என்கின்றனர். எது எதற்கு ஊடல் கொள்ளலாம் என்றும் அதை எப்படி சமாதானமாக மாற்றலாம் என்றும் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.


 சமையல் நல்லாயிருக்கா? 

விடுமுறை நாளில் காலையிலேயே தொடங்கிவிடுங்கள். சண்டே சமையல் என்றால் கொஞ்சம் ஸ்பெசலாகத்தான் இருக்கும். கூடுதல் கவனத்தோடு சமையல் செய்து கொண்டு போய் கணவர் முன்பாக வைத்து அவரின் முகத்தைப் பாருங்கள். சாப்பிட்டு விட்டு ஒன்றும் சொல்லாமல் போனால் ஊடலை தொடங்குங்கள்.

இந்த டிரஸ் எப்படி இருக்கு? 

வார விடுமுறை நாளில் வெளியே போகும் போது புதிதாக உடுத்தியிருக்கிறீர்களா? இந்த டிரஸ் எனக்கு நல்லாயிருக்கா? இதுக்கு மேட்ச் ஆ என்ன நகை போட்டுக்கலாம் என்று கேளுங்கள். கணவர் கண்டு கொள்ளாமல் கிளம்புகிறார் என்றார் சின்னதாக ஒரு சண்டையை ஆரம்பியுங்களேன்.


எவ்ளோ பிடிக்கும் உங்களுக்கு? 

தன்னுடைய கணவருக்கு தன்னை மட்டுமே பிடிக்கவேண்டும் என்பது மனைவிகளின் விருப்பமாக இருக்கும். ஒரு மாலைப் பொழுதில் டீ அருந்தும் நேரத்தில் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, என்னை உங்களுக்கு பிடிக்குமா? எவ்ளோ பிடிக்கும் என்று சின்னதாய் கேளுங்கள். கொஞ்சமாய் பிடிக்கும் என்று மனிதர் கூறினால் போடலாமே செல்லச் சண்டையை.


நான் அழகா இல்லையா? 

இருவரும் இணைந்து வெளியே போகும் தருணத்தில் கணவரின் கண்கள் உங்களைத் தவிர வேறு யாரையாவது பார்க்கிறது என்று தெரிந்தால் கொஞ்சம் கவனியுங்கள். ஏன் நான் அழகா இல்லையா என்று ஆரம்பித்து வீட்டுக்கு வாங்க மிச்சத்தை வைச்சிக்கிறேன் என்பது வரை சும்மா போடுங்கள் ஒரு சண்டை.ஊட்டி விடுங்களேன் 

சண்டை போட்டாகிவிட்டது. உங்கள் கணவரை அல்லது காதலரை சமாதானப்படுத்த வேண்டுமே எப்படி என்று யோசிக்கிறீர்களா? புன்னகையுடன் அணுகுங்கள். சமையலில் ஆரம்பித்த சண்டையை மையலில் முடியுங்கள். முடிந்தால் ஊட்டி விடுங்களேன். அப்புறம் என்ன அந்த சமையலின் ருசியே தனிதான்..

நீங்கதான் ஹீரோ 

நீங்கள் போட்டிருக்கும் உடையை கண்டுகொள்ளாமல் விட்டால் சண்டை போடுவது ஒருபுறம் இருக்கட்டும். அவர் என்ன உடை அணிந்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். எப்படி தலை சீவியிருக்கிறார் என்று கவனித்து அவரை வர்ணியுங்கள் அப்படியே உருகிப் போய்விடுவாரே உங்களவர்.

உயிராய் நேசியுங்கள் 

எவ்ளோ பிடிக்கும் என்று கேட்பதை விட அவரை எந்த அளவிற்கு நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள். ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். உயிர்வரை நேசிக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள். தாயாய் மாறி தாலாட்டுங்கள். உங்கள் அன்பில் திளைத்துப் போவார் உங்களவர்

கொஞ்சம் இடைவெளி 

சின்னச் சின்ன சண்டைகள்தான் அன்பின் ஆழத்தை உணர்த்தும் யார் சண்டை போட்டாலும் சரி எப்படி சமாதானம் ஆவது என்று யோசியுங்கள். ஒரு கோடி ரூபாய் கொடுக்காத சந்தோசத்தினை ஒரு முழம் மல்லிகை கொடுக்கும் என்பார்கள் அப்புறம் என்ன சாயந்திரம் வீட்டுக்குப் போகும் போது மறக்காமல் மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போங்களேன்.

Four in 10 women don't tell their husbands how much they REALLY spend on clothes

Four in 10 women don't tell their husbands how much they REALLY spend on clothesAround eight million people don’t tell their partner the truth about their spending, a survey suggests.
For women who keep quiet about money matters, the biggest secret is the amount they spend on clothes.
Nearly four in ten of them – 37 per cent – won’t confess to buying a new dress or pair of shoes whereas only 9 per cent of men feel so guilty about their clothes shopping that they feel compelled to fib about it.
But men do have their guilty shopping secrets too – in their case it’s the gadgets they buy.
 

The survey, based on interviews with 1,363 adults who are in a relationship, found 29 per cent of men ‘cover up their spend on gadgets such as mobile phones, tablets and video games’, compared to only six per cent of women.
 

The opposite is true for the amount of money that parents tell each other they have spent on their children.

The report found 29 per cent of women lie about how much they spent indulging their children, compared to only six per cent of men.
 

For the shopping trips which they do admit to going on, millions of people do not tell the truth about how much money they have spent, it said.And men are revealed in the report, from the investment manager Nutmeg.com, as ‘the biggest fibbers.’

On average, men ‘knock off’ £95.04 from the true cost of their shopping trip, while women will only shave an average of £57.20 from the price tag.

Overall, the report found the credit crunch, which began nearly six years ago in August 2007, has made around a quarter of Britons become less open about their spending habits.
More than a third have tried to cover up their spending by saying the item was in the sales or was a bargain when it was not.
 

Others resort to hiding things that they have bought, destroying receipts and keeping their bank statements secret.
 


Nick Hungerford, chief executive of Nutmeg.com, said: ‘In times of austerity, a quarter of the population is worried about being seen to unnecessarily splash the cash.
‘It is a real reverse from keeping-up-with-the-Joneses.
 

‘But it is rather surprising that so many would conceal their spending and savings from their partners.
‘With spend on clothing the top item people hide from partners, it is clear many are ashamed to splash the cash and treat themselves when money may be a little tight.’
 

One in five admitted that ‘secret spending’ has caused problems in their relationship, triggering arguments between them.
 

Others complain it has caused tension in their relationship and some say it was even the reason for a relationship breaking down or a divorce.


ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதற்கான 10 காரணங்கள்!!!


ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதற்கான 10 காரணங்கள்!!!


"திருமணபந்தம் ஆயிரங்காலத்து பயிர்" என்பது பழமொழி. திருமணம் - அன்பு மற்றும் மரியாதை நிறைந்த இனிய உறவு. இந்த நவீன காலத்தில் அதன் அருமை மற்றும் பெருமையை அறியாத சில ஆண்களால் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். அன்பு ,பாசம், பண்பு கொண்ட பெண்களை சில ஆண்கள் ஏமாற்றுதல், வஞ்சித்தல் மற்றும் மரியாதையின்மையுடனும் நடத்துகின்றர். அதில் சில ஆண்கள் சுயநலவாதிகளாக இருப்பதால் பெண்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர்.

ஆண்கள் பெரும்பாலும் பெண்களை ஏமாற்றுவதால், அவர்கள் ஒரு நல்ல மனைவி/காதலியை இழக்கிறார்கள். ஒரு பெண் தன் நாயகனிடமிருந்து விசுவாசத்தை எதிர்பார்க்கிறாள். ஆனால் அத்தகையவளது கணவர் இன்னொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு கொண்டிருந்தால், அதை அப்பெண்ணால் ஏற்க முடியாது. மேலும் அந்த விஷயத்தை சாதாரணமாக விடமாட்டார்கள். ஒருவேளை நிலைமையானது கட்டுக்குள் அடங்காமல் போய் விட்டால், சட்டப்படி விவாகரத்து தான் பெறும் நிலைமை ஏற்படும். இவ்வாறு ஆண்கள் தங்கள் மனைவிகளை ஏமாற்ற பல காரணங்கள் உள்ளன.

ஆண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்? இயற்கையாகவே, ஒரு திருமணத்திற்கு பிறகு ஒரு மனிதன் ஒரு உறவை நாடுகின்றான் எனில் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை ஒருவருக்கு கிடைக்க வேண்டியது அவசியமாகிறது. இப்போது ஆண்கள் ஏமாற்றூவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.


சலிப்புத்தன்மை 

ஆண்களுக்கு எப்பொழுதுமே வித்தியாசமான செயலில் ஈடுபடுவதில் அதிக உந்துதல் உண்டு. அவர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கின்றனர் மற்றும் காதலை ஒரு உற்சாகமான விஷயமாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் தற்போதுள்ள வாழ்க்கையில் சலிப்புத்தன்மைக் கொள்கின்றனர்.


தொல்லை தரும் மனைவி 

ஓயாது தொல்லைப்படுத்தும் மனைவியும், ஆண்கள் மற்றொரு பெண்ணின் உறவை நாடக் காரணமாக இருக்கிறார்கள். ஏனெனில் மற்ற பெண்களாவது தம்மை நன்றாக புரிந்துக் கொண்டு, அன்பு பேனுதலை செய்வார்கள் என்று நினைத்து, மனைவியை விட்டு செல்கின்றனர்.


சபல புத்தி 

வேலை செய்யும் போது ஒரு பெண்ணிடம் அணுகுதல் மிகவும் எளிதானது. பல ஆண்களுக்கு வணிக பயணங்களின் போது மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள போதுமான வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி தூரத்தில் இருக்கின்ற காரணத்தினால், சபல புத்தியுள்ளவரால், மற்றொரு பெண்ணோடு நேரத்தை செலவிடுவதை தவிர்க்க முடியாது. ஆகவே சபலபுத்தியும், பெண்களை ஏமாற்றுவதற்கு ஒரு காரணம்.


கவரும் தன்மை 

ஆண்கள் பெரும்பாலும் எளிதில் பெண்களை கவரும் தன்மையுடையவர்கள். அதற்கு மற்றொரு பெண்ணிடம் தங்கள் பார்வையை பதித்து மற்றும் ஏதாவது புது முயற்சிகள் செய்து, அவர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிப்பர்.


ஆண் அகம்பாவம் 

சில நேரங்களில் ஆண் தன்னுடைய ஆண் அகம்பாவத்தினால், வேறொரு பெண்ணின் துணையை நாடுவது, அவ்வளவு பெரிய தவறில்லை நியாயமானது தான் என்று மனதில் தோன்ற வைத்து, காதலிக்கும் பெண்ணை ஏமாற்ற வைக்கிறது.


உறவுமுறையில் ஒற்றுமையின்மை 

தம்பதியினர் இணக்கமற்றதாகவோ அல்லது ஒற்றுமையில்லாதவராகவோ இருந்தால், அது அந்த ஆணை வேறொரு பெண்ணிடம் ஆறுதல் பெற செய்யும்.


மோசமான செக்ஸ் வாழ்க்கை

திருமணம் அல்லது காதல் செய்யும் போது, செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாத காரணத்தினாலும், ஆண்கள் வேறொரு பெண்ணை நாடுவதற்கு காரணமாக இருக்கின்றன.


பழிவாங்குதல் 

மனைவி விசுவாசமில்லாதவளாக இருக்கின்ற பட்சத்தில், ஆணும் பின்னர் தன் மனைவியை ஏமாற்ற முயற்சிப்பான். அவனும் நேரம் நோக்கி இருந்து, தன் பழிவாங்கலை செய்ய விரும்புவான்.


சூழ்ச்சியாக ஏதாவது முயற்சித்தல் 

ஆண்கள் தங்கள் மனைவிமார்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற எண்ணத்தால், மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.


நண்பர்களின் ஏளனம் 

சில நண்பர்களின் ஏளனத்தினாலேயே, சில ஆண்கள் மனைவியை ஏமாற்றுவார்கள்.மெல்ல மெல்ல சரியும் ஐடி துறை... குறையும் பணிவாய்ப்பும் ஊதிய உயர்வும்..

மெல்ல மெல்ல சரியும் ஐடி துறை... குறையும் பணிவாய்ப்பும் ஊதிய உயர்வும்..10 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபமாக பெருநகரங்களின் புறநகரங்களை கபளீகரம் செய்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு லட்சக்கணங்களில் ஊதியத்தை வாரிக் கொடுத்து வரப்பிரசாதமாக இருந்தன ஐடி நிறுவனங்கள்... காலச்சக்கரம் மெல்ல மெல்ல அதன் அத்தனை மகிழ்ச்சிகளையும் புரட்டி போடத் தொடங்கியிருக்கிறது..

ஐடி நிறுவன வாழ்க்கை.. கிரெடிட் கார்டு புழக்கம்.. எல்லாவற்றுக்கும் லோன்... மாதாந்திர கட்டண முறை என்று ஒரு தினுசாகத்தான் போய்க் கொண்டிருந்த பலரது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிர வைத்து அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.. இந்த வருஷம் இன்கிரிமென்ட் இவ்ளோ குறைந்து போச்சா... அப்படின்னா எதை எதையெல்லாம் கட் பண்ணனும்.. எப்படியெல்லாம் செலவைக் குறைக்கனும் என்ற சிந்தனை ஐடி வாழ்க்கையில் தலையெடுக்கப் போய் "ஐடி வாழ்க்கை" யை சார்ந்த தொழில்களிலும் இது ஒரு மந்த நிலையை தாக்கிக் கொண்டு வருகிறது...

கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையின் வருவாய், பணியாளர்கள் சேர்ப்பு, ஊதிய உயர்வு ஆகியவற்றை முன்வைத்து ஒரு ஒப்பீட்டைப் பார்த்தாலே ஐடி துறையின் நிலைமை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்....

அக்னி சுட்டெரிக்க... வங்கக் கடலில் பிறந்தது மகாசேன் புயல்: தமிழகத்தில் மழை பெய்யும்!

அக்னி சுட்டெரிக்க... வங்கக் கடலில் பிறந்தது மகாசேன் புயல்: தமிழகத்தில் மழை பெய்யும்!அக்னிநட்சத்திர வெயிலில் சிக்கி மக்கள் கருகிக் கொண்டுள்ள நிலையில் சின்னதாக ஒரு சந்தோஷச் செய்தி வந்துள்ளது. அதாவது தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் நல்ல கன மழை பெய்யும் வாய்ப்பு வந்துள்ளது.தமிழகமெங்கும் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வருகிறது. மக்கள் வெளியில் தலை காட்டவே பயப்படும் அளவுக்கு வெயில் மோசமாக உள்ளது. இந்த நிலையில் வங்கக் கடலின் தென்கிழக்கில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது விரைவில் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும்.


சென்னைக்கு 1200 கிலோமீட்டர் தொலைவில் இது மையம் கொண்டுள்ளது. இது வலுவடைந்து புயலாக மாறினால், ஒடிஷாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் தமிழகத்தைத்தாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.


இருப்பினும் இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் நல்ல கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Deeee...அங்கிட்டு வேணாம்.. இங்கிட்டு போய்ப் பார்ப்போம்..!

Deeee...அங்கிட்டு வேணாம்.. இங்கிட்டு போய்ப் பார்ப்போம்..!

பெண்களைப் பார்த்து சைட் அடிப்பவர்கள் நிறையப் பேர். அதேபோல ஆண்களை சைட் அடிக்கும் பெண்களும் எக்கச்சக்கம். சரி.. நமக்குப் பிடித்த, 'ஹங்க்' பார்ட்டிகளை எங்கு பார்க்கலாம்.. இதற்காக சில டிப்ஸ்களைச் சொல்லவே மெனக்கெட்டுஇந்த 'ஆர்ட்டிகிள்'...!

ஆரிக்கிள் அண்ட் வென்டிரிக்கிள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஏரியா நமது உடலில் இருக்கிறது .. தெரியுமா...அதுதாங்க இதயம்- அந்த இதயத்துக்குள் புகுந்து புறப்பட்டு உள்ளத்தை புளகாங்கிதமடைய வைக்கும் ஆண்கள்தான் பெண்களைப் பெரும்பாலும் கவருகிறார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட ஆண்களை கண்டுபிடிப்பதுதான் சிரமம். அப்பபடியாப்பட்ட ஆண்களைக் கண்டுபிடிக்க நாம் சில யோசனைகளை கொடுப்போமே.... சரி டிப்ஸ் பார்ப்போமா...கல்யாண 'ராமன்'கள்...! 

கல்யாண வீட்டுக்கு நிறைய இளைஞர், இளைஞியர் சூப்பராக டிரஸ் செய்து கொண்டு படையெடுத்து வருவார்கள்- அழைத்தாலும் அழைக்காவிட்டாலும். ஏன் தெரியுமா.. ஜாடை மாடையாக நமக்கு ஏத்த சோடி அங்கிருக்கிறதா என்பதை அறியத்தான். ஆனால் இது பழைய பேஷனாகி விட்டது. நிறையப் புது டிரெண்டுகளைக் கொண்டு வந்து விட்டனர்.


அண்ணாச்சி கடைக்குப் போங்க... 

அண்ணாச்சி கடை என்றதும் அஸ்தினாபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வைத்திருக்கும் மளிகைக் கடை என்று நினைத்து விட வேண்டும். அதே ஏரியாவிலேயே பிரமாண்டமாக இருக்கும் நீல்கிரீஸ் போன்ற கடைகளுக்குப் போலாம். இப்போதெல்லாம் இளைஞர்கள் நிறையப் பேர் கடைகளுக்கு பர்ச்சேஸ் செய்ய வருகின்றனர்.


லைட்டாக சைட் அடித்தபடி... 

அங்கிருக்கும் கூடையை கையில் எடுத்துக் கொண்டு ஒரே ஒரு ஹமாம் சோப்பை உள்ளே போட்டுக் கொண்டு, கஷ்டப்பட்டு சாமான் வாங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களை லைட்டாக சைட் அடித்தபடி நோட்டம் விடலாம்.


இந்த சென்ட் நல்லாருக்குமே... 

மனசுக்குப் பிடித்த யாராச்சும் இருந்தால் நீங்களாகவே அவரிடம் வலியக்கப் போய் வாய் கொடுக்கலாம். இந்த சென்ட் நல்லாருக்கும் சார், யூஸ் பண்ணுங்க, எங்க பிரதமருக்குக் கூட போன வருஷம் இதையேதான் வாங்கினோம்...(அத யூஸ் பண்ணி ஏதாவது ஆயிருந்தா சொல்லிராதீக), நல்லாருக்குன்னான்..அப்படின்னு பேச்சு கொடுத்து பிரண்டாக முயற்சிக்கலாம். இது சில நேரம் செட்டாகலாம். சில நேரம் செட்டாகாமலும் போகலாம்.. நோ இஷ்யூஸ், அடுத்த கடைக்குப் போய்ட வேண்டியதுதான்.


இசை கேட்டால் அசைந்தாடும்... 

இசை நிகழ்ச்சிகளுக்குப் போகலாம். அங்கெல்லாம் இப்போது இளைஞர்கள் கூட்டம்தான். ஆனால் கர்நாடக இசைக் கச்சேரிகளுக்குப் போய் விடாதீர்கள் .. வெங்கிட்டு தாத்தாவும், சுப்புடு தாத்தாவும் வெற்றிலைக் குதப்பலுடன் உங்களை ஷாக் ஆக்கலாம்.


எனக்கும் அதேதான் பிடிக்கும் 

உங்களுக்குப் பிடித்த நபர் அங்கு இருந்தால், அந்த இசையை அல்லது அந்த இசைக்கலைஞரை காரணமாக வைத்து பேச்சுக்கொடுத்து பிரண்ட் பிடிக்கலாம். இருவரது டேஸ்ட்டும் ஒன்றாக இருந்தால் சீக்கிரமே மொபைல் எண்ணை வாங்கிட அது உதவும். மறக்காம பேஸ்புக்கிலும் ஆட் பண்ணிடுங்க.. டெய்லி ஒரு மெயிலாவது அனுப்பிருங்க.


ஜிம்முக்குப் போனா கும்முன்னு... 

ஜிம்முக்குப் போகலாம். அங்கும் நிறைய இளைஞர்கள் வெள்ளம்தான். ஜிம்மில்தான் பலரது காதல் கதைகள் பிறக்கின்றனவாம்... முறுக்கேறிய உடல் கட்டுடன் முழுசு முழுசாக நிறைய ஆண்களை அங்குதான் பார்க்கலாம். அதில் யாரையாவது பிடித்திருந்தால் சிக்னல் கொடுத்துப் பார்க்கலாம்.


விழியில் விழி மோதி 

இதயக் கதவொன்று திறந்ததே .. காதலுக்கு மரியாதை படம் பார்த்தீங்கதானே.. அங்கு விஜய்யும், ஷாலினியும் ஒரே புக்கை ரெண்டு பேரும் சேர்ந்து இழுப்பாங்களே... அதேதான். அதேபோல நீங்களும் ஏதாவது புக் ஸ்டோருக்குப் போய், உங்களுக்குப் பிடித்த நபர் இருந்தால் அவரை நைசாக பாலோ செய்து, அவர் புத்தகம் எடுத்தால் எதேச்சையாக இழுப்பது போல இழுத்து அவரையும் உங்கள் பக்கம் இழுங்கள். பார்த்து.. வேகமாக இழுத்து புக்கு கிழிஞ்சு போச்சுன்னா பெனால்டி கட்டிட்டு பே பேன்னு முழிக்க நேரிடும்.. பீ கேர்புல்.


பார்க்கிலும் கூட பார்க்கலாமே 

பார்க்கிலும் கூட நிறையப் பேரை பார்க்கலாம். இது பழைய டிரெண்டுதான் என்றாலும் கூட இன்றும் கூட நிறைய இளைஞர்களை, இளைஞிகளை இங்கு பார்க்க முடியும். பிடித்திருந்தால் பேசலாம்.. அப்படியே அங்கிருந்து பிக்கப் ஆகி பீச்சுக்குப் போய்டலாம்.... சின்னச் சின்ன டிப்ஸ்தான்.. டிரை பண்ணிப் பாருங்க.. இல்லை, இதை விட பெட்டர் டிபஸ் உங்க கிட்ட இருந்துச்சுன்னா எல்லாத்துக்கும் சொல்லுங்க.

தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...உலகை உலுக்கிய படம்!


தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...உலகை உலுக்கிய படம்!


வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கட்டட விபத்தை விட அந்த விபத்தின்போது உள்ளே சிக்கிபிணமாக மீட்கப்பட்ட ஒரு கணவன், மனைவியின் படம்தான் உலகையே உலுக்கி விட்டது.

கட்டடம் இடிந்து விழுந்தபோது மனைவியை விட்டுப் பிரியாமல், அவரைக் கட்டிப் பிடித்தபடி காணப்படுகிறார் அந்த கணவர். இந்தப் படம்தான் அனைவரையும் உலுக்கி விட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல், தப்பித்து்ப போக முயலாமல், கட்டிப் பிடித்தபடி பிணமாகியுள்ளனர்.


நாள்தோறும் விபத்து 

வங்கதேசத்தில் கட்டட விபத்துக்கள் குறிப்பாக கார்மென்ட் பேக்டரி கட்டடங்கள் இடிந்து பல நூறு பேர் சாவது இயல்பாகி வருகிறது. கிட்டத்தட்ட தினசரி ஒரு விபத்து என்று நடந்து வருகிறது.


பறிபோகும் நூற்றுக்கணக்கான உயிர்கள் 

இந்த விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய் வருகின்றனர். அவர்களில் பலர் பெண்கள், இளம் வயதினர்என்பதுதான் கொடுமையானதாக உள்ளது.


900 பேரை பழிவாங்கிய கோர விபத்து 

கடந்த மாதம் டாக்கா அருகே 8 மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா என்ற கார்மெண்ட் ஆலையின் கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர்.2000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.கணவன் மனைவியின் பிணம் 

இந்த கட்டட இடிபாடுகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அந்த இடிபாடுகளில் ஒரு தம்பதியின் உடல்கள் சிக்கியுள்ளன. அதைப் பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர். கணவனும், மனைவியும் ஒருவர் பிரியாமல் இறுக்கி அணைத்தபடி காணப்பட்டனர்.


தப்பிக்க முயலாமல் பாசத்துடன் ஒரு மரணம் 

இருவரும் தப்பித்துப் போக முயலவில்லை. மாறாக மரணத்தின் கடைசி நொடி வரை இணை பிரியாமல் இருக்க முடிவு செய்து இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்துள்ளனர். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் கலங்கிப் போய் விட்டனர்.கண்ணீருக்குப் பதில் ரத்தம் 

அந்தத் தம்பதியினரின் உடல்களின் கீழ்ப் பகுதி கீழே புதைந்து விட்டன. மேல் பகுதி மட்டுமே தெரிகிறது. அந்த ஆணின் கண்களில் கண்ணீர் போல ரத்தம் ஓடி உறைந்து போயிருந்தது. இந்தப் புகைப்படத்தை தஸ்லிமா அக்தர் என்பவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.ஜெனீவா வைர ஏலம்: ஈரானிய ராஜ வம்ச மஞ்சள் வைரம் ஏலத்துக்கு வருகிறது!

ஜெனீவா வைர ஏலம்: ஈரானிய ராஜ வம்ச மஞ்சள் வைரம் ஏலத்துக்கு வருகிறது!ஈரான் ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய, 100 ஆண்டுகளுக்கு முந்தைய, அரிய வகை மஞ்சள் நிற வைரம், சுவிட்சர்லாந்தில், ஏலத்திற்கு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில், பிரபல ஏல நிறுவனத்தின் சார்பில், பழமை வாய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இம்மாதம் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் ஏலத்திற்கு, 100 ஆண்டுகளுக்கு முன், ஈரான் நாட்டைச் சேர்ந்த, கஜர் ராஜவம்சத்தினர் பயன்படுத்திய, அரிய வகை மஞ்சள் நிற வைரம் வந்துள்ளது.

இதை ஈரான் அரசர்கள், 1909 முதல் 1925 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தியுள்ளனர். 74.53 காரட் அளவிலான, இந்த வைரத்தின் மதிப்பு, 1.8 மில்லியன் டாலர் என, ஏல நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

Thursday, May 9, 2013

World University rankings: Indian Engineering Universities on the list!

World University rankings: Indian Engineering Universities on the list!

 
A reputed British education and career advice company, ranked Indian universities on it’s list. The best performances from Indian universities came in engineering as expected. IIT Bombay, IIT Delhi and IIT Madras are all ranked in the global top 50 in at least one of the four areas of engineering: civil, mechanical, electrical and chemical.

IIT Delhi’s electrical engineering department has been ranked the 37th best world university rankings, the highest entry from India across all categories in the latest Quacquarelli Symonds (QS) world university rankings.

The IIT Bombay’s civil engineering department has been ranked 39th,

IIT Delhi’s mechanical and aeronautical engineering has been positioned 43rd,

Indian Institute of Science ranks 50th in materials science.

IITs have come as the only saving grace for Indian universities, which have taken a massive beating in the rankings released.

Not a single university or department has made it to the top 200 altogether in 12 of the 30 disciplines covered in the rankings. Important subjects without a single top-200 Indian institution include medicine, law, economics and education.

Delhi University and JNU have made it to the top 100 in the world for English literature, while the only other Indian entry in this category are Jadavpur University and University of Kolkata both of which are among the top 151-200.

IIT Bombay’s linguistic department is the only that made it in this category among the top 200.

Chinese universities on the other hand have achieved 37 top-50 rankings in 23 subjects, compared to just four for India.


Wednesday, May 8, 2013

Hewlett-Packard faces $1bn lawsuit! Lost $3bn market value in a single day!!

Hewlett-Packard faces $1bn lawsuit! Lost $3bn market value in a single day!!Hewlett-Packard tried to pull out of its $11bn takeover of British software firm Autonomy before the deal closed, according to claims in a $1bn shareholder lawsuit brought against the US computer maker.

HP’s chief executive Meg Whitman, her predecessor Léo Apotheker, the company’s former chairman Ray Lane and Autonomy founder Mike Lynch are among eight defendants named in the class action suit, filed at California’s San Francisco district court, which accuses those who oversaw the botched deal of conducting “cursory due diligence on a polluted and vastly overvalued asset”.

Whitman and Lane – who resigned as chairman in April after a shareholder revolt – are accused of ignoring damaging evidence from whistleblowers and hiding their full concerns about the Autonomy deal.
They allegedly employed “devices, schemes and artifices to defraud” shareholders into buying the stock, before eventually admitting HP had overpaid in November 2012.

The revelation of an $8.8bn writedown of HP’s book value, related to the Autonomy purchase, which came over a year after the acquisition was completed, wiped more than $3bn from the US company’s market value in a single day.

கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலரை ‘கைகழுவி தெளித்துவிட’ வேண்டிய நிலை!

கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலரை ‘கைகழுவி தெளித்துவிட’ வேண்டிய நிலை!கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலர் பெறுமதியுள்ள உரிமத்தை கைகழுவி தெளித்துவிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் கூறப்படுகிறது. 5 பில்லியன் டாலர் பெறுமதியுள்ள இந்த உரிமத்தை, மோட்டரோலாவின் துணை நிறுவனம் (subsidiary) ஒன்றில் வைத்திருக்கிறது கூகுள்.

எதற்காக கைகழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது?

கூகுள் வாங்கி வைத்துள்ள இந்த உரிமம், ஐரோப்பாவில் மோட்டரோலாவின் மொபைல் விற்பனையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சப்ஸ்டிரரி, ஐரோப்பாவில் வழக்கு ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளது.

ஜெர்மனியில் ஆப்பிளின் ஐ-போன் விற்பனையை முடக்குவதற்காக மோட்டரோலாவால் கூகுள் வைத்துள்ள உரிமம் உயோகிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கோர்ட்வரை போயிருக்கிறது. கோர்ட் தீர்ப்பு, ஆப்பிளுக்கு சாதகமாக வரப்போகிறது என்று தெரிகிறது.

அப்படி நடந்தால், இந்த உரிமத்தை கூகுளால் வெளியே விற்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது! கைகழுவி தெளித்துவிட வேண்டியதுதான்!

மோட்டரோலா மொபைலிட்டி உரிமத்தை கூகுள் 2011-ம் ஆண்டு, ‘மார்க்கெட் பெறுமதி’யைவிட அதிக விலைகொடுத்து, 12.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதற்கு அடுத்த ஆண்டே (2012) இதன் மதிப்பு 5 பில்லியன் டாலர்தான் என்று பைல் பண்ணியது.

ஒரு வருடத்தில் 7.5 பில்லியன் டாலர் பெறுமதி குறைந்தது. இப்போது, மீதி 5 பில்லியனும் காலியாகி விடும் போலுள்ளது!Monday, May 6, 2013

''கண்மணி உன் வீட்டில் சவுக்கியமா''.. செவ்வாய் கிரகத்துக்கு உங்கள் கவிதையை அனுப்ப ஆசையா?

''கண்மணி உன் வீட்டில் சவுக்கியமா''.. செவ்வாய் கிரகத்துக்கு உங்கள் கவிதையை அனுப்ப ஆசையா?
 செவ்வாய் கிரகம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அந்த கிரகத்துக்கு விரைவில் மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டத்துக்கு வேகம் தரவும் சில முயற்சிகளில் இறங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா.

செவ்வாய் கிரகத்துக்கு சில விண்கலன்களை அனுப்பி, தரையிறக்கி, மண் பரிசோதனை, பாறைகளைக் குடைந்து பரிசோதனைகளை நடத்திவிட்டது அமெரிக்கா. அந்த நாடு அனுப்பிய ஒரு ரோவர் இன்னும் செவ்வாய் கிரகத்தில் தனது ஆயுளையும் தாண்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு, அந்த கிரதத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டுள்ளது.

'மேவென்' என்றொரு விண்கலம்... 

இந் நிலையில் வரும் நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு 'மேவென்' (Mars Atmosphere and Volatile Evolution-MAVEN) என்ற ஒரு விண்கலத்தை அனுப்பப் போகிறது நாஸா. இந்த விண்கலத்தில் நாம் எழுதி அனுப்பும் கவிதைகள், தகவல்களையும் எடுத்துச் சென்று செவ்வாய் கிரகத்தில் ஒலிபரப்பப் போகிறார்கள். ''ஓ.. செவ்வாயே உன் வாய் தான் செவ் வாயோ'' என்று டுபாக்கூர் கவிதைகளாக இல்லாமல் 'நச்' என்று மூன்றே வரிகளில் ஒரு ஹைகூ மாதிரி விஷயத்தைச் சொல்லுங்கள் என்கிறது நாஸா.

ஜூலை 1ம் தேதி வரை... 


வரும் ஜூலை 1ம் தேதி வரை நாஸாவுக்கு வாசகங்கள், தகவல்கள், கவிதைகளை அனுப்பலாம். ஜூலை 15ம் தேதி முதல் இதில் எது மிகச் சிறந்த வாசகம், தகவல், கவிதை என்பது குறித்து ஆன்லைனில் போட்டி நடத்தப்படும். அதில் 3 சிறந்த தகவல்/கவிதை/வாசகம் தேர்வு செய்யப்பட்டு 'மேவென்' மூலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆன்லைனிலேயே ஒரு சான்றிதழும் தரப்படும். 

போட்டியில் பங்கேற்க... 


இந்த 'மேவென்' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேல் பரப்பு வளி மண்டலத்தை ஆய்வு செய்யப் போகிறது. இந்தக் கோளில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் அதன் காற்று மண்டலத்தில் கிடைக்கலாம் என்று திடமாக நம்புகிறது நாஸா. http://lasp.colorado.edu/maven/goingtomars என்ற லிங்க் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!

தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!
உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும்.

உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இப்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவறாமல் தொடருங்கள்.

எனர்ஜி கிடைக்கும் 

உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும். எனவே தான் உடலுக்கு எனர்ஜி வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.கழிவுகளை வெளியேற்றும் 

அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். ஏனெனில் மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.


உடல் வெப்பத்தை சீராக வைக்கும் 

உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும்.


மெட்டபாலிசம் அதிகமாகும் 

உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.


தசைப்பிடிப்புகளை தடுக்கும் 

80 சதவீத தசைகள் நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தசைகளில் பிடிப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் நீருக்கு பதிலாக கழிவுகள் தங்கி, பிடிப்புகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை வெளியேற்ற நீர் மிகவும் அவசியம் ஆகும்.


முறையான குடலியக்கம் 

நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.


பொலிவான சருமம் 

முகத்தில் முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


அசிடிட்டியை குறைக்கும் 

பொதுவாக வயிறானது உணவுகளை செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும்.


மூளை செயல்பாடுகள் 

மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.


மூட்டு உராய்வைத் தடுக்கும் 

உடலிலேயே மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.


ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு... 

உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.


எடை குறைப்பதற்கு... 

தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.


இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!


இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!


நிறைய மக்கள் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் பயப்படுவார்கள். அதனால் உடலில் ஏதாவது பிரச்சனை என்று மருத்துவர்களிடம் செல்லும் போது, மருத்துவர் அதற்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதிலிருந்து தப்பிப்பதற்கு பலவாறு முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறு இரத்தப் பரிசோதனை செய்வதை தவிர்த்தால், உடலில் உள்ள பிரச்சனைகளை சரியாக சொல்ல முடியாது.

உண்மையில் உடலில் உள்ள பிரச்சனையை சரியாக கணிப்பதற்கு இரத்தப் பரிசோதனை தான் சிறந்தது. அதனால் தான் மருத்துவர்கள், உடலை பரிசோதித்தப் பின் அதனை உறுதியாக சொல்வதற்கு, இரத்த பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். மேலும் ஒருசில பெரிய வியாதிகளை இரத்த பரிசோதனையின் மூலமே உறுதியாக சொல்ல முடியும். உதாரணமாக, எய்ட்ஸ் நோய் உடலில் இருந்தால், அதனை இரத்தப் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிக்க இயலும்.

இப்போது இந்த மாதிரியான இரத்தப் பரிசோதனையினால் எந்த நோய்களை எல்லாம் கண்டுபிடிக்கலாம் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது இரத்த பரிசோதனையை சாதாரணமாக எண்ணாமல், உடனே இரத்த பரிசோதனையை செய்து, உடலில் உள்ள நோயை ஆரம்பத்திலேயே குணமாக்குங்கள்.


இரத்த அணுக்களின் எண்ணிக்கை 

உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு சரியாக இருப்பது மிகவும் அவசியம். சிலருக்கு உடலில் இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பதால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். இவ்வாறு இரத்த சோகை இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன், எதையும் புத்துணர்ச்சியுடன் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது மருத்துவரிடம் சென்றால், அவர் முதலில் இரத்தப் பரிசோதனை செய்யுமாறு கூறுவார். ஆகவே தவறாமல் இரத்த பரிசோதனை செய்து, அதனை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2013/reasons-you-need-regular-blood-tests-003068.html#slide143702

தொற்றுகள் 

உடலில் ஏதேனும் தொற்றுகளான கல்லீரல் அழற்சி (மஞ்சள் காமாலை) அல்லது பால்வினை நோய்களான சிபிலிஸ் போன்றவை இருப்பது போல் இருந்தாலும், இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இத்தகைய தொற்றுகளை வெளியே ஏற்படும் அறிகுறிகளை வைத்து மட்டும் சரியாக கூற முடியாது.


எய்ட்ஸ் 

உயிர் கொல்லி நோயான எய்ட்ஸை, முதலில் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும். ஏனெனில் எய்ட்ஸின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு பல வருடங்கள் ஆகலாம். ஆகவே அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து கொண்டால், இந்த நோய் இருப்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடக்க முடியும்.


தைராய்டு 

தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே தைராய்டு பிரச்சனையானது வந்துவிடுகிறது. எனவே இத்தகைய தைராய்டு பிரச்சனையையும் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும்.


புற்றுநோய் 

புற்றுநோயை சாதாரண இரத்த பரிசோதனையின் போது கண்டுபிடிக்கலாம். அதிலும் உடலில் இரத்த அணுக்கள் வழக்கத்திற்கு மாறாக குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, இது புற்றுநோய் செல்கள் வளர்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.


கர்ப்பம் 

பெண்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிறுநீர் பரிசோதனை தான் செய்வார்கள். ஆனால் சில சமயங்களில், எச்.சி.ஜி யின் அளவை பரிசோதிப்பதற்கும் இரத்த பரிசோதனையானது அவசியம்.


அதிக கொலஸ்ட்ரால் 

உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என்பதையும் இரத்தப் பரிசோதனையை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்.


நீரிழிவு 

நீரிழிவை வெளிப்படையில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து கண்டறிவது மிகவும் கடினம். ஏனெனில் நீரிழிவு நோய்க்கு ஏற்படும் அறிகுறிகள், சாதாரணமாக இருக்கம். எனவே, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.