Friday, October 12, 2012

வந்து விட்டால்... கவலையில் மூழ்காதீங்க

வந்து விட்டால்... கவலையில் மூழ்காதீங்க 
வராமல் தடுக்க முதன் முறையாக ஹார்ட் அட்டாக்கில் சிக்கி, மீண்டவர்களுக்கு மார்புவலி ஏற்படும்போது நெஞ்சு பகுதியில் ஒரு பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போன்றும், நடு மார்பில் எரிச்சல் ஏற்படுவது போன்றும் தெரியும். குளித்துவிட்டு வந்தது போன்று வியர்வையும் ஏற்படும். சிலருக்கு நெஞ்சின் மைய பகுதியில் இருந்து தொடங்கி இடதுகைக்கோ, தொண்டைக்கோ, வலது கைக்கோ அல்லது வயிற்றுக்கோ வலி பரவும்.

இவர்களுக்கு முதலில் இ.சி.ஜி. சோதனை செய்யப்படும். அடுத்து ட்ரேட்மில் என்னும் இயந்திரத்தின் மீது நடக்க செய்து இசிஜி சோதனை செய்ய வேண்டும். இதில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, ஹார்ட்அட்டாக் என்று உறுதி செய்யப்பட்டால் அடுத்தக்கட்ட சோதனைக்கு மருத்துவர் பரிந்துரை செய்வார்.

ஹார்ட்அட்டாக் ஒரு தடவை வந்தவர்கள் உணவு கட்டுப்பாடு அவசியம் கடைபிடிக்க வேண்டும். வயிறு நிறைய இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அதே அளவு உணவை நான்கு அல்லது ஐந்து தடவைகளில் அரை வயிறு உணவாக சாப்பிடலாம். சர்க்கரை வியாதியையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஹார்ட்அட்டாக் உட்பட எல்லா நோய்களில் இருந்தும் நம்மை காப்பாற்றும்.

முறையான உணவு கட்டுப்பாடுகளாலும், வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளால் உடலை பாதுகாத்து, ஹார்ட்அட்டாக் அபாயத்தில் இருந்து மீளலாம் என்கிறார் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் மூர்த்தி.

ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..

ஆபத்தான தலைவலி ஒற்றைத் தலைவலி..

என்னிக்காவது ஒரு நாள் வரும் தலைவலி சாதாரணமானது. மாசத்துல 15 நாளைக்கும் மேல, 3 முதல் 4 மணி நேரத்துக்கு, தொடர்ந்து 3 மாசங்களுக்கு தலைவலி வந்தா, அது நாள்பட்ட தலைவலி. இதுல மைக்ரேன்னு சொல்ற ஒற்றைத் தலைவலி, மன உளைச்சலால உண்டாகிற டென்ஷன் தலைவலி, தினமும் வரும் தொடர் தலைவலி, ஒரு பக்கம் வரும் ஹெமிக்ரேனியா தலைவலினு நிறைய உண்டு.

பலரையும் பாடாகப் படுத்தறது மைக்ரேனும், டென்ஷன் தலைவலியும்தான்.ஒற்றைத் தலைவலிங்கிறது ஒரு பக்கம் ஆரம்பிச்சு, அப்புறம் ரெண்டு பக்கமும் பரவும். விண்... விண் னு தெறிக்கும். சாதாரணமா பண்ற வேலைகள் கூட வலியை அதிகமாக்கும். வாந்தி இருக்கும். சத்தமும், வெளிச்சமும் வலியை அதிகப்படுத்தும். வாசனையான பொருட்கள் தலைவலியை உண்டாக்கிறது.

மைக்ரேனுக்கான ஆரம்ப அறிகுறிகள்.

டென்ஷன் தலைவலிங்கிறது சின்னக் குழந்தைலேருந்து, பெரியவங்க வரைக்கும் வரக்கூடியது. தலையோட ரெண்டு பக்கங்கள்ல அல்லது தலை முழுக்க வலிக்கும். பாரமா இருக்கும். வேலை செய்தாலும், செய்யாட்டாலும் வலி இருக்கும். வாந்தி இருக்காது. சத்தமும், வெளிச்சமும் வலியை அதிகப்படுத்தாது.

மூணாவதா சொன்ன ஹெமிக்ரேனியால தொடர்ச்சியான வலியோட... கூடவே கண் எரிச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகறதெல்லாம் இருக்கும்.
என்னிக்கோ வர்ற சாதா வலிக்கு, நல்ல தூக்கம், வலி நிவாரண மாத்திரைகள், நிம்மதியான சூழல்னு சின்னச் சின்ன விஷயங்களே குணம் தரும்.

ஆனா, வாரத்துல 2 முறைக்கு மேல வலிச்சாலோ, எல்லா நாளும் வலி நிவாரண மாத்திரை தேவைப்பட்டாலோ, டாக்டர் கொடுத்ததைவிட, அதிக மாத்திரை தேவைப்பட்டாலோ, திடீர்னு தலைவலி அதிகமானாலோ, டாக்டரை பார்க்க வேண்டியது அவசியம். திடீர்னு ரொம்ப அதிகரிக்கிற வலி, கூடவே காய்ச்சல், வலிப்பு, பார்வைக்கோளாறு, பேச்சுக் கோளாறு, கழுத்து விரைப்புத் தன்மையெல்லாம் இருந்தா, அது மிக ஆபத்தான தலைவலிக்கான அறிகுறிகள்னு உணர்ந்து, உடனடியா தீவிர சிகிச்சை எடுத்துக்கணும்.

பதப்படுத்தப் பட்ட உணவுகள், இனிப்புகள், ஏரியேட்டட் பானங்கள், எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து, மன உளைச்சல் இல்லாம இருக்கிறது மூலமா தலைவலியைத் தவிர்க்கலாம்.. என்கிறார் குமார்.

டெங்கு அறிகுறிகள் என்ன?

டெங்கு அறிகுறிகள் என்ன?

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்ணின் பின்பகுதியில் வலி, தலை சுற்றல், வாந்தி, தோல் சிவந்து போவது, ரத்த போக்கு மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், உடலில் ரத்த புள்ளிகள் தோன்றுதல், அடி மூட்டுகளில் அரிப்போ, உடல் முழுவதும் அரிப்போ ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல் முற்றும் வரை காத்திருக்காமல் உடனடியாக  மருத்துவமனைக்கு செல்வதே நல்லது.

டெங்குவை தடுக்க வழிமுறைகள்

டெங்கு அறிகுறி தோன்றினால் உடனே டாக்டரை அணுக வேண்டும். வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். வீட்டில் உடைந்த
பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் அகற்ற வேண்டும். வீட்டை சுற்றிலும் கான்கிரீட் தளங்களில் தண்ணீர் தேங்க விடக்கூடாது.

தண்ணீர் தொட்டிகளில் கொசு நுழைய முடியாதபடி மூடி வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொசுவலை பயன்படுத்தி கொள்வது நல்லது. காலை, மாலைகளில் வீடுகளில் நறுமண புகை போட்டுக் கொள்வது போன்ற முறைகளை கடைபிடிக்கலாம்.

சீன எழுத்தாளர் மோவுக்கு இலக்கிய நோபல் பரிசு

சீன எழுத்தாளர் மோவுக்கு இலக்கிய நோபல் பரிசு
பெருமைக்குரிய இலக்கிய நோபல் பரிசை, தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக ஐரோப்பிய எழுத்தாளர்களே பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டில் சுவீடன் கவிதையாசிரியர் தாமஸ் டிரான்ஸ்டோமருக்கு அது கிடைத்தது. இந்த ஆண்டில் இலக்கிய நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு (57) அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது இயற்பெயர் குவான் மோயே. ஆனால், புனைப்பெயரில்தான் அவர் எழுதி வருகிறார். இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து தேர்வு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன கலாச்சாரத்தை மையமாக வைத்து யதார்த்தமாக எழுதும் இவரது எழுத்துக்கள், சீன கிராமிய பாரம்பரியம், வரலாறு, சமகாலத்து நிகழ்வுகள் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வயது குழந்தைக்கு விஸ்கி சப்ளை

2 வயது குழந்தைக்கு விஸ்கி சப்ளை

இங்கிலாந்தில் 2 வயது குழந்தைக்கு தவறுதலாக சரக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. இங்கிலாந்தின் ஸ்வான்சீ பகுதியில் உள்ளது. பிராங்கி அண் பென்னி ரெஸ்டாரன்ட். இங்கு சன்னி ரீஸ் என்ற 2 வயது குழந்தையின் 2-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. குழந்தையின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் சூழ பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எல்லோருக்கும் பலவித உணவுகள் வழங்கப்பட்டன. குழந்தைக்கும் ஜூஸ் உள்பட சில உணவுகள் ஊட்டப்பட்டன. சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை மயங்கிவிட்டது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு ஆல்கஹால் கொடுத்துள்ளனர். அதனால் மயங்கிவிட்டது என்று கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிகிச்சைக்கு பின் குழந்தை தெளிவடைந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில், குழந்தைக்கு ஜூஸ் கொடுத்த போது முகத்தை சுளித்தது. உடனே ஜூஸை சிறிது குடித்து பார்த்தேன். அப்போது ஒன்றும் தெரியவில்லை. ரெஸ்டாரன்ட் சப்ளையரை கேட்ட பிறகுதான், தவறுதலாக குழந்தைக்கு விஸ்கி கொடுத்தது தெரிந்தது என்கிறார். இந்த சம்பவத்துக்கு பிராங்கி அண் பென்னி ரெஸ்டாரன்ட் மன்னிப்பு கேட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட், பிரையனுக்கு வேதியியல் நோபல் பரிசு

அமெரிக்க விஞ்ஞானிகள் ராபர்ட், பிரையனுக்கு வேதியியல் நோபல் பரிசுஅமெரிக்க வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் ராபர்ட் லெப்கோவிட்ச், பிரையன் கோபில்கா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வேதியியல் துறைக்கான பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதன்படி, அமெரிக்க வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் ராபர்ட் லெப்கோவிட்ச் (69), பிரையன் கோபில்கா (57) ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள டுயூக் பல்கலைக்கழகத்தில் பயோமெடிசின் மற்றும் பயோகெமிஸ்ட்ரி துறை பேராசிரியராக ராபர்ட் பணியாற்றுகிறார். இதேபோல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு மருந்து பல்கலைக்கழக கல்லூரியில் மாலிக்கியூலர் மற்றும் செல்லுலார் துறை பேராசிரியராக பிரையன் பணியாற்றுகிறார்.
இவர்கள் செல் ஆராய்ச்சியில் பல்வேறு புதிய விஷயங் களை கண்டறிந்துள்ளனர். ஜி,புரோட் டீன் எனப்படும் செல்களில் இருக்கும் ஏற்பிகள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
செல் ஏற்பிகள் புதிய விஷயங்களை எப்படி ஏற்றுக் கொள்கின்றன என்பது குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

ஒழுங்காக பல் தேய்க்காமல் ஏமாற்ற முடியாது! வந்தாச்சு டூத் பிரஷ்.. ப்ளூடூத் பிரஷ்

ஒழுங்காக பல் தேய்க்காமல் ஏமாற்ற முடியாது! வந்தாச்சு டூத் பிரஷ்.. ப்ளூடூத் பிரஷ்

ப்ளூடூத் உதவியுடன் செயல்படும் டூத் பிரஷ்சை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பதை ஸ்மார்ட்போன் காட்டிவிடும். குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது மம்மிகள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று. சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர்தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ‘பீம் டெக்னாலஜீஸ்’ நிறுவனம் டிஜிட்டல் பிரஷ் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் உதவியுடன் இது செயல்படும். ஸ்மார்ட்போனில் அலாரம் செட் செய்தால், பல் துலக்க தினமும் நினைவூட்டும். அது மட்டுமின்றி, பயோ எலக்ட்ரிக் முறையில் பற்களுடன் பிரஷ் நன்றாக, போதிய அளவில் உராய்ந்ததா அதாவது, நீங்கள் ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பது கண்காணிக்கப்பட்டு, அந்த தகவலும் ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் அளவுடன் இது ஒத்துப்போனால், ‘வெல்டன் பாஸ்’ என்று மெசேஜ் வரும். இல்லாவிட்டால், ‘ச்செல்லாது ச்செல்லாது’ என்று மெசேஜ் வரும். குட்டீஸ்களை கண்காணிக்க உதவியாக இருக்கும். பீம் ப்ளூடூத் பிரஷ் விலை ரூ.2,650. அடுத்த மாதம் அமெரிக்க சந்தைக்கு வருகிறது.

அடுத்த 3 ஆண்டில் மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் எண்ணிக்கை 63 கோடியாகும்

அடுத்த 3 ஆண்டில் மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் எண்ணிக்கை 63 கோடியாகும்

இந்தியாவில் 2015ம் ஆண்டில் மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் எண்ணிக்கை 63 கோடியாக உயரும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்தியாவில் அரசு பங்களிப்புடனான மருத்துவ காப்பீடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் புதிய தலைமுறை மருத்துவ நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒருங்கிணைந்த அளவில் உடல்நலனை பாதுகாக்க முடியும். வரும் 2015ம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் தொகையில் பாதி அளவு, அதாவது 63 கோடி பேர் மருத்துவ காப்பீடு பெற்றிருப்பார்கள். இது மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

21 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் போலியோ

21 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் போலியோ
இந்தியாவில் இருந்து போலியோ நோய் விரட்டி அடிக்கப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் 21 மாத இடைவெளிக்கு பிறகு பீகாரில் 18 மாத ஆண் குழந்தைக்கு போலியோ நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு கடந்த 1950களிலேயே தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலாக அமெரிக்கா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பல நாடுகளும் போலியோவிலிருந்து விடுதலை பெற்றன.

இந்தியாவிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சுகாதார அமைப்பின் உதவியோடு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வங்கத்தில் ஒரு குழந்தைக்கு போலியோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவில் எந்த பகுதியிலும் புதிதாக போலியோ நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நாட்டிலிருந்து போலியோ நோய் விரட்டி அடிக்கப்பட்டதாக கருதப்பட்டது. உலக சுகாதார அமைப்பும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பாராட்டு தெரிவித்தது.

இந்நிலையில், பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 18 மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு போலியோ பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு இதுவரை 13 தடவை போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு வந்திருப்பது போலியோவா அல்லது வேறு நோயா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வெளிவர ஒரு வாரம் ஆகும் என சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்பங்கா உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த வாரம் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

குளோனிங் ஆடு டாலியை உருவாக்கிய கேம்பெல் மரணம்

குளோனிங் ஆடு டாலியை உருவாக்கிய கேம்பெல் மரணம்முதன் முதலில் குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் கேம்பெலும் ஒருவர். கெய்த் கேம்பெல் என்ற அவர் குளோனிங் முறையில் பெரிய ஆடுகளின் செல்களை கொண்டு அதேபோல் ஆட்டை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் குழுவில் முக்கிய பங்காற்றியவர். இந்நிலையில் கெய்த்கேம்பெல் திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பாலூட்டி வகையை சேர்ந்த ஆடு டாலி இன்றளவும் உலக சாதனையாக உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் சார்பில் குளோனிங் ஆராய்ச்சியில் இயான் வில்மாட் என்பவர் தலைமையில் இணைந்து பணியாற்றியவர்களில் கேம்பெலும் ஒருவர். குளோனிங் முறையில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட செம்மறி ஆடு டாலி. இதில் கேம்பெலின் பங்களிப்பு 66 சதவீதம் என்று இயான் தெரிவித்துள்ளார்.

70வது பிறந்த நாள் அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து

70வது பிறந்த நாள் அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து


நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இதர இந்தி திரைப்பட பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும், ரசிகர்களும் அவருக்கு நேரிலும்; போனிலும், டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாளை முன்னிட்டு ஜூகுவில் உள்ள அவரது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஏராளமான ரசிகர்கள் வீட்டின் முன் கூடி நின்று ஆடியும் பாடியும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடினர். இவர்களில் பலர் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய வடமாநிலங்களில் இருந்து வந்திருந்தனர். அப்போது காரில் அந்தேரியில் உள்ள 7 ஹில்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த அமிதாப் பச்சன் உற்சாகமாக ரசிகர்களுக்கு கைகளை உயர்த்தி காண்பித்தபடி ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

மருத்துவமனையில் நீரிழிவு நோயை பரிசோதனை செய்யும் தானியங்கி கருவி ஒன்றை மும்பையில் உள்ள இங்கிலாந்து நாட்டு துணை தூதர் அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அமிதாப் பச்சன் நீரிழிவு நோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கோரேகாவில் உள்ள பிலிம் சிட்டியில் அமிதாப் பச்சன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் ஷாருக்கான், மாதவன், மாதுரி தீட்ஷித், கரண் ஜோகர் உட்பட பல நடிகர், நடிகைகள் உள்பட ஏராளமான சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி கோலாகலமாக கொண்டாடினர். சுமார் 40 ஆண்டுகளில் அமிதாப் பச்சன் 180 படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை மத்திய அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றவர். 14 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். மத்திய அரசின் பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றவர்.

Thursday, October 11, 2012

கொஞ்சம் வெள்ளையாக அழகாக இருக்கும் மனிதனுக்கே இவ்ளாவ்! ........ இருக்குமென்றால் -- Photo Essay

கொஞ்சம் வெள்ளையாக அழகாக இருக்கும் மனிதனுக்கே இவ்ளாவ்! ........ இருக்குமென்றால் எங்களுக்கு எப்படி இருக்கனும் -- Photo Essay
Top Photo Story: ராட்சத சுறாக்களால் கடிக்கப்பட்ட 47 டன் திமிங்கிலம் கரைக்கு வந்தது!.

Top Photo Story: ராட்சத சுறாக்களால் கடிக்கப்பட்ட 47 டன் திமிங்கிலம் கரைக்கு வந்தது!. 


தென்னாபிரிக்க கடற்கரையின் பெரிய பகுதி பொதுமக்கள் பாவனைக்கு விடப்படாமல் பல மணி நேரத்துக்கு மூடப்பட்டது. காரணம், 15 மீட்டர் நீளமான திமிங்கிலம் ஒன்று கரையில் ஒதுங்கியதுதான். ராட்சத சுறாக்களால் தாக்கப்பட்ட அடையாளங்கள், இறந்துபோன திமிங்கிலத்தின் உடலில் இருந்தன. தென்னாபிரிக்காவின் கேப்-டவுன் நகரில் உள்ள முய்சென்பர்க் கடற்கரையிலேயே திமிங்கிலத்தின் உடல் ஒதுங்கியது.

கடலின் கரை பகுதியில் திமிங்கிலத்தின் உடல் பாதி கடலில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது. அப்போது கடலின் கரை பகுதிவரை சில ராட்சத சுறாக்கள் வந்து திமிங்கிலத்தின் உடலை கடித்துக் கொண்டிருந்தன. அதனால்தான், கடற்கரையின் பெரிய பகுதி பொதுமக்கள் பாவனைக்கு விடப்படாமல் பல மணி நேரத்துக்கு மூடப்பட்டது.

வேடிக்கை பார்க்கவந்த பொதுமக்கள் யாராவது கடலில் இறங்கினால், ராட்சத சுறாக்கள் தாக்கலாம் என்ற சாத்தியமே இதற்கு காரணம். கடந்த 2005-ம் ஆண்டு இதே கடற்கரையில் ஜே.பி.அன்ட்ரூஸ் என்ற டீன்ஏஜ் வாலிபன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, கரைப் பகுதிக்கு வந்த ராட்சத சுறாக்கள் தாக்கின.

கரையில் ஒதுங்கிய அன்ட்ரூஸ் இறந்து விட்டதாக அந்த இடத்தில் வைத்தே டாக்டர் கூறிவிட்டார். ஆனால், அதன்பின் அன்ட்ரூஸின் உடலில் உயிர் இருப்பது தெரிந்தது. இறுதியில் அவர் உயிர்பிழைத்துவிட்டார். ஆனால், ராட்சத சுறா அவரது ஒரு காலை விழுங்கி விட்டிருந்தது. இம்முறை திமிங்கிலம் கரையில் ஒதுங்கிய தகவல் கிடைத்து 15 நிமிடங்களிலேயே, கடற்கரையில் இருந்த பொதுமக்கள் அனைவரும் போலீஸால் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர்.

அதன்பின், கடற்கரை பக்கமாக யாரும் வரவேண்டாம் என போலீஸார் டி.வி. ரேடியோ மூலம் அறிவித்தல் விடுத்தனர். முய்சென்பர்க்கில் இருந்து, மொன்வாபிசி என்ற இடம்வரை கடற்கரை மூடப்பட்டது.
அதையடுத்து, டிசாஸ்டர் ரெஸ்பான்ஸ் டீம் களத்தில் இறங்கியது. மேலும் ராட்சத சுறாக்கள் கடிக்காமல் இருப்பதற்காக திமிங்கிலத்தின் உடலை கடலில் இருந்து முழுமையாக இழுத்து கடற்கரை மணலுக்கு கொண்டு வந்தனர். அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. காரணம், இறந்த திமிங்கிலத்தின் எடை மிக அதிகமாக இருந்தது! (பின்னர் அளவீடு செய்யப்பட்டபோது, திமிங்கிலத்தின் எடை 47,000 கிலோ என்று தெரியவந்தது)

திமிங்கிலத்தின் உடல் முழுமையான தரைக்கு இழுக்கப்படும்வரை, கடலின் கரைப் பகுதியில் ராட்சத சுறாக்களின் நடமாட்டம் இருக்கும் என்பதால், மணலுக்கு இழுக்கும் பணி வேகமாக செய்யப்பட்டது. இந்த பணியில் சுமார் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

மணலுக்கு முற்றாக உடல் இழுக்கப்பட்டதும், மணலில் இறக்கப்பட்ட புல்டோசர்கள் திமிங்கிலத்தின் உடலை ரோல் பண்ண வைத்து, ட்ரக் ஒன்றின் ரோலர்-பெட்டில் லொட் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டன. பலமணி நேரம் எடுத்தது அந்த பணி.


காரணம், ட்ரக்கை மணலில் இறக்க முடியாது. ட்ரக் மணலில் இறக்கப்பட்டு, அதில் திமிங்கிலமும் ஏற்றப்பட்டால், மணலில் ட்ரக்கின் சக்கரங்கள் புதைந்து போய்விடலாம். இதனால், கடற்கரையை ஒட்டிய வீதியில் ட்ரக் நிறுத்தப்பட்டிருக்க, திமிங்கிலத்தின் உடல் புல்டோசர்களால் உருட்டிச் செல்லப்பட்டது.

ட்ரக்கில் திமிங்கிலம் லோட் செய்யப்பட்டபோதே, அது போகவேண்டிய பாதையை கிளியர் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. ட்ரக் செல்லும் பாதையில் இருந்த போக்குவரத்து, வேறு வழிகளால் திருப்பி விடப்பட்டது.


 


 அதன்பின், வீதியின் ஒருபக்க ட்ராஃபிக் முழுமையாக நிறுத்தப்பட்டு, திமிங்கிலத்தின் உடல் ஏற்றப்பட்ட ட்ரக் ரோலர்-பெட் வீதியில் சென்றது. நகருக்கு வெளியே  குப்பைகள் கொட்டப்படும் ராட்சத கிடங்குக்குள் திமிங்கிலத்தின் உடல் போடப்பட்டுள்ளது.
ராட்சத சுறாக்களால் தாக்கப்பட்டு திமிங்கிலம் கொல்லப்பட்டதா, அல்லது திமிங்கிலம் இறந்த பின்னர் ராட்சத சுறாக்கள் அதன் உடலை கடித்தனவா என்று சொல்லமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்ம ஊரிலயா இருந்தா என்ன செஞ்சு இருப்பாங்க? உங்க கமெண்ட்ஸ் ய் கட்டாயம் கீழ சொல்லுங்க .....(Giant sharks bite 47 tonne whale came to the shore.) நன்றி ரிசி அண்ணா