Friday, April 12, 2013

ஆபாச படம் பார்த்தால் அதை அறிவிக்கும் BlackBerry Z10?


ஆபாச படம் பார்த்தால் அதை உறவினர்கள், நண்பர்களுக்கு உடனே அறிவிக்கும் BlackBerry Z10?


BlackBerry நிற்வனம், தனக்கு என வாடிக்கையாளர் வங்கியை கொண்டுள்ளது. ஆனால் அப்பிள், சம்சுங் கலக்ஸ்ஸி என்பவற்றின் வருகையால் அது தனது வாடிக்கையாளர் மத்தியில் பின்னடைவை சந்தித்திருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க BlackBerry Z10 என்ற நவீன ஸ்மார்ட் போனை இவ் வருட ஆரம்பத்தில் வெளியிட்டது.ஆனால் அத் தொலபேசியில் உள்ள சுவாரஸ்யமான குறைபாடு தொடர்பில் தற்போது பரபரக்கப்படுகின்றது.
BlackBerry நிறுவனம் மெசெஞ்சருக்கு பிரபல்யமானது. தம்முடைய BlackBerry பயன்படுத்தும் உறவினர்கள், நண்பர்கள் இடையே நெருக்கமான மெசேச் தொடர்புகளை இதன்மூலம் பேணமுடியும்.

BlackBerry Z10 இன் மெசெஞ்சரில், BlackBerry நிறுவனம் ”show what I’m listening to” என்ற நவீன வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.இவ் வசதியை செயற்படுத்தியிருந்தால், நீங்கள் BlackBerry Z10 இல் ஒன்லைனில் ஏதாவது பாடல்களை கேட்டாலோ, வீடியோவை பார்த்தாலோ அது தொடர்பான இணையதளத்தின் விபரம் மெசெஞ்சர் ஊடாக அதனுடன் தொடர்பில் இருக்கும் போன்களுக்கு மெசேச் களாக பகிரப்பட்டுவிடும்.இதனால், ஆபாச தளம் ஒன்றில் வீடியோ ஒன்றை பார்த்தால் அது தொடர்பான விபரங்கள் தானாக பகிரப்பட்டு உங்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிவிடும்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள Crackberry forum தளம், அது தொடர்பன ஸ்கிரீன் சொட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.ஆனால் இவ் வசதியை விரும்பாவிட்டால் அதை நிறுத்திக்கொள்ளும் வசதி தரபட்டுள்ளதாக BlackBerry நிறுவன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது

நோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'

நோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'


உடல் பருமனை குறைக்க உதவும் மைக்ரோ சிப் மின்னனுக் கணினிச் சில்லு ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அதை விரைவில் முழுமையாக ஆய்வு செய்த பின் வெளியிடும் போது மனித குலத்திற்கே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மைக்ரோ சிப்களை உடலில் பொருத்திக் கொண்டவருக்கு அதிகம் பசிக்காது என்பதால் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

எப்படா வரும் இந்த மைக்கிரோ சிப், என்று பலர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்

2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்


வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பூமி சந்தித்திராத வகையில் வெப்பம் தற்போது நிலவுகிறது என்றும், 2012-13 ஆம் ஆண்டின் கோடைக் காலமே இதுவரை அதிகமான வெயில் பதிவான ஆண்டாக இருந்தது. ஆனால், வரும் ஆண்டில் இதை விட அதிகமான வெப்பம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

1910ஆம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால், 1997-98 ஆம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவானது. அதை மிஞ்சும் வகையில் 1982-83ஆம் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருந்தது. அதேப்போல, வரும் 2013ஆம் ஆண்டும் பூமி இதுவரை கண்டிராத அளவுக்கு வெப்பம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக வெப்பநிலை கண்காணிப்பு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday, April 11, 2013

மளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்மணி'யாக உயர்ந்த தாட்சர்!


மளிகைக் கடைக்காரரின் மகளாக பிறந்து 'இரும்புப் பெண்மணி'யாக உயர்ந்த தாட்சர்!


சிலரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.. அப்படிப்பட்டவர்களில் மார்கரெட் தாட்சருக்கு முக்கிய இடம் உண்டு. மாகி என்றும், இரும்புப் பெண்மணி என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர் தாட்சர். மறைந்த தாட்சர்தான் இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். மிகுந்த தைரியமும், மதி நுட்பமும், துணிச்சலாக செயல்படும் தன்மையும் கொண்டவர் தாட்சர்.

சாதாரண மளிகைகடைக்காரின் மகளாக பிறந்த தாட்சர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக, உலகமே பார்த்து வியக்கும் தலைவராக மாறியது வரலாறு. தாட்சரின் வாழ்க்கையிலிருந்து சில துளிகள்...1925ல் பிறந்து... 

1925ம் ஆண்டு கிராந்தம் என்ற இடத்தில் மார்கரெட் ராபர்ட் என்ற பெயருடன் பிறந்தார் தாட்சர்.


ஆக்ஸ்போர்டில் கல்வி 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்தார் தாட்சர்.


1951ல் திருமணம் 

1951ம் ஆண்டு டெனிஸ் தாட்சரை மணந்தார்.


இரட்டைக் குழந்தைகள் 

தாட்சர் தம்பதிக்கு கரோல் மற்றும் மார்க் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.


1959ல் எம்.பி. ஆனார் 

1959ம் ஆண்டு முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தாட்சர்.


டோரிகளின் தலைவியானார் 

1975ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியானார் மார்கரெட் தாட்சர்.


79 முதல் 90 வரை பிரதமர் 

1979ம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானார் தாட்சர். அதன் பின்னர்1990 வரை அவர் அசைக்க முடியாத பிரதமராக பதவியில் தொடர்ந்தார்.


வரலாறு படைத்தவர் 

1975ல் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு வில்லி ஒயிட்லா போட்டியிட்டார். அவரை எதிர்த்து துணிச்சலுடன் களம் இறங்கிய மார்கரெட் தாட்சர் தேர்தலி்ல் வெற்றி பெற்றபோது அனைவரும் அசந்து போயினர். காரணம், கட்சித் தலைவராக பெண் ஒருவர் வெற்றி பெற்றது அதுவே முதல் முறை என்பதால்.


நாட்டின் முகத்தை மாற்றியவர் 

பிரதமர் பதவியில் மார்கரெட் தாட்சர் இருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் முகத்தையே அவர் மாற்றியமைத்தார். உலகின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருந்தார்.


அனைவரையும் ஒருங்கிணைத்தவர் 

நாடு எப்படி இருக்க வேண்டும், நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்டிப்புடன் செயல்படுத்திக் காட்டியவர் தாட்சர். அரசியல்வாதிகள், நிர்வாகம், தொழிற்சங்கங்கள் என மூன்று முக்கியப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து அரசை நடத்தியவர் தாட்சர்.


பொருளாதாரத்தை நிமிர்த்தியவர் 

சரிந்து போய்க் கிடந்த இங்கிலாந்தி பொருளாதாரத்தை தூக்கிய நிறுத்திய பெருமையும் தாட்சருக்கு உண்டு. மிகப் பெரிய சாதனைகளை தாட்சர் இதில் படைத்துள்ளார்.


அப்பாவைப் போல பொறுப்பானவர் 

மார்கரெட்டின் தந்தை ராபர்ட் மிகவும் சிக்கணமாக வாழ்க்கை நடத்தியவர். ஒரு காசு செலவழிப்பது என்றாலும் பலமுறை கணக்குப் பார்த்து செய்தவர். மளிகைக் கடை வியாபாரம்தான் ராபர்ட்டின் குடும்பத்தைக் காப்பாற்றியது என்பதால் எப்போதும் வியாபாரம், வியாபாரம் என்றிருப்பார். தந்தையைப் பார்த்து தான் நிறையக் கற்றுக் கொண்டதாக தாட்சர் பலமுறை கூறியுள்ளார்.


அழகிய கவிஞர் 

சிறுவயதில் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளார் மார்கரெட் தாட்சர். இவருக்குப் பிடித்த கவி மேதை ருட்யார்ட் கிப்ளிங்.


ஆய்வாளராக சில காலம் 

வேதியியலில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் ஆய்வில் இறங்கினார். சில காலம் எஸ்ஸக்ஸில் உள்ள பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் ஆய்வாளராகவும் வேலை பார்த்துள்ளார்.


தேர்தலில் தோல்வி.. காதலில் வெற்றி 

1950ல் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்த சோகம் அவரைத் தாக்கிய நிலையில் டெனிஸ் தாட்சரை சந்தித்தார். காதலில் விழுந்தார். அடுத்த ஆண்டே இருவரும் மணம் புரிந்து கொண்டனர்.


1959ல் மாபெரும் வெற்றி 

சில தேர்தல்களில் நின்று தோல்வியடைந்த நிலையில், 1959ல் நடந்த தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் மார்கரெட்.


மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் 

இவர் பின்னர் கல்வி அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தார். அப்போது இவர் செய்த காரியம், இவருக்கு சுவாரஸியமான பட்டப் பெயரை பெற்றுத் தந்தது. பள்ளிகளுக்கு வழங்கிய இலவச பால் திட்டத்தை ரத்து செய்தார் தாட்சர். இதனால் இவரை எதிர்க்கட்சியினர் மார்கரெட் தாட்சர்.. மில்க் ஸ்னாட்சர் என்று கேலி செய்ய ஆரம்பித்தனர்.


இங்கிலாந்தின் காமராஜர் 

ஆனால் கல்வித்துறைக்கு இவர் நிறைய செய்துள்ளார் என்பதுதான் முக்கியமானது. கிட்டத்தட்ட இங்கிலாந்தின் காமராஜர் என்று கூறும் அளவுக்கு கல்விக்கு நிறைய செய்துள்ளார். பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். 16 வயது வரை கட்டாயக் கல்வித் திட்டம் அதில் ஒன்று. நர்சரி பள்ளித் திட்டத்தை விரிவுபடுத்தினார்.


எதிர்க்கட்சித் தலைவியாக கலக்கியவர் 

எதிர்க்கட்சித் தலைவியாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றியுள்ளார் தாட்சர். தனது கட்சியை அடிமட்ட அளவில் ஸ்திரப்படுத்தினார். அனைவரும் பார்த்து மிரளும் அளவுக்கு கட்சியை வலுப்படுத்தி கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். தன்னையும் இந்த காலகட்டத்தில் வளர்த்துக் கொண்டார்.


பிரதமராக பிரமாதப்படுத்தியவர் 

பிரதமர் பதவியில் முதல் முறையாக அமர்ந்தபோது பல சீர்திருத்தங்கள மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார் தாட்சர். அதில் முக்கியமானது வருமான வரி விகிதத்தை குறைத்தது. இதுபோக மேலும் பல வரி சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார்.


தீவிரவாத தாக்குதலில் உயிர் தப்பினார் 

அயர்லாந்து தீவிரவாதிகள் வைத்த குறியில் ஒருமுறை தாட்சர் சிக்க நேரிட்டது. 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரைட்டன் நகரி்ல நடந்த கட்சி மாநாட்டின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் தாட்சர் உயிர் தப்பினார். ஆனால் 6 பேர் உயிரிழந்தனர்.


தைரியமாக எதிர்கொண்டார் 

இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்த தாட்சர், தீவிரவாதிகளை கண்டு பயப்பட மாட்டேன், பூண்டோடு ஒழிப்பேன் என்று வீராவேசமாக பேசியபோது இங்கிலாந்து மக்கள் அசந்து போயினர்.


அயர்லாந்து தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார் 

சொன்னதற்கேற்ப தீவிரமாக செயல்பட்ட தாட்சர், 1985ம் ஆண்டே அயர்லாந்து தீவிரவாத அமைப்புக்கும், இங்கிலாந்து அரசுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமையை மாற்றினார்.


புயலுக்குப் பின் 

அமைதி பிரதமராக பல காலம் இங்கிலாந்தை திறம்பட இயக்கிய தாட்சர் தனது ஓய்வுக்குப் பின்னர் பொது வாழ்க்கையில் தலை காட்டாமல் ஒதுங்கியிருந்தார். சுயசரிதம் எழுதினார். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றார். குறிப்பாக அவரது மனம் கவர்ந்த அமெரிக்காவை வலம் வந்தார்.


பெரும் வெற்றிடம் 

சாதாரண ஒரு தலைவராக மார்கரெட் தாட்சர் இருந்ததில்லை. இரும்புப் பெண்மணியாக, புத்திசாலியாக, புதுமை விரும்பியாக திகழ்ந்தவர். சாதாரணர்கள் முதல் ராஜ குடும்பம் வரை, எலிசபெத் ராணிவரை அத்தனை பேரின் அன்பையும் பெற்றிருந்தவர் தாட்சர். அவரது மறைவு நிச்சயம் இங்கிலாந்தில் பெரும் வெற்றிடத்தையே ஏற்படுத்தியுள்ளது. தாட்சருக்குப் பிறகு பெயர் சொல்லும் பிரதமரை இங்கிலாந்து கண்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!


பிரான்ஸ் அதிபரின் ஒட்டகத்தை அடித்துச் சாப்பிட்ட மாலி நாட்டவர்

பிரான்ஸ் அதிபருக்கு பரிசாக கொடுத்த ஒட்டகத்தை அடித்துச் சாப்பிட்ட மாலி நாட்டவர்.. இன்னொன்று பார்சலாபிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்டே வுக்கு மாலி அரசு பரிசாக வழங்கிய ஒட்டகத்தை, அதைப் பராமரித்து வந்த குடும்பத்தினர் வெட்டி சமைத்துச் சாப்பிட்டு விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலி அரசு, பிரான்ஸுக்கு இன்னொரு ஒட்டகத்தை பரிசாக அனுப்புவதாக தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆப்பிரிக்க நாடான மாலிக்கு வந்திருந்தார் ஹாலன்டே. அப்போது மாலி நாட்டில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக வந்திருந்த பிரெஞ்சுப் படையினரின் பணிகளை தொடங்கி வைத்து விட்டுப் போனார். அப்போது அவருக்கு மாலி அரசு சார்பில் ஒட்டகம் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது.

அதைப் பெற்றுக் கொண்ட ஹாலன்டே, போக்குவரத்து நெரிசல் மிக்க பாரீஸில், இந்த ஒட்டகத்தில் சவாரி செய்ய விரும்புவதாக விளையாட்டாக கூறினார். பின்னர் ஒட்டகத்தை தும்புக்டு என்றஇடத்தில் பராமரிப்புக்காக விட்டுச் செல்வதாக கூறி விட்டு பிரான்ஸ் திரும்பினார்.

அதன்படி தும்புக்டுவில் ஒரு குடும்பத்தார் பராமரிப்பி்ல் இந்த ஒட்டகம் வளர்ந்து வந்தது. அதை தினசரி நேரில் பார்த்து பிரெஞ்சு அதிகாரிகள் அதிபருக்கு அப்டேட் செய்து வந்தனர். இந்தநிலையில் அந்த ஒட்டகத்தை தற்போது அடித்துக் கறியாக்கி சாப்பிட்டு விட்டனர்.

இதனால் மாலி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து பிரெஞ்சு அதிபருக்கு இன்னொரு நல்ல ஒட்டகத்தைப் பரிசாகஅளிக்கப் போவதாக மாலி அரசு அறிவித்துள்ளது. இந்த ஒட்டகத்தை நேரடியாக பாரீஸுக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் மாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே நாடாளுமன்றம் ஒப்புதல்

ஓரினச் சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே நாடாளுமன்றம் ஒப்புதல்


ஓரினச்சேர்க்கையாளர் திருமண சட்டத்திற்கு உருகுவே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான உருகுவேயில் "ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்போதும் இருக்கிறார்கள்" என்று கூறி அத்திருமணத்தை ஆதரித்து சட்டம் கொண்டுவரவேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான வாக்குகளுடன் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேல்சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், இன்னும் இரு வாரங்களில் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. கத்தோலிக்க கிறுஸ்தவ சபைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனப்பேரரசரின் அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம்


சீனப்பேரரசரின் அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம்


சீனப்பேரரசர் காலத்து அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஒன்று ஏலத்துக்கு வந்தது. இளம்சிகப்பு, மஞ்சள் மற்றும் உதா நிறத்துடன் வரையப்பட்ட அந்த தாமரை கிண்ணத்தை, ஹாங்காங் பீங்கான் பொருட்கள் விற்பனையாளர் 9.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடிக்கு) ஏலம் எடுத்தார். கடந்த வருடம் இதுபோன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம்

டெஸ்ட் டியூப் கருத்தரிப்பு முறையை உருவாக்கிய டாக்டர் ராபர்ட் எட்வர்ட்ஸ் மரணம்உலகம் முழுவதும் உள்ள இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண்களின் கண் கண்ட கடவுளாக போற்றப்படும் சர் ராபர்ட் எட்வர்ட்ஸ் தனது 87வது வயதில் மரணமடைந்தார். இவர்தான் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கும் முறையை உருவாக்கியவர் ஆவார்.

எட்வர்ட்ஸ் அன்று ஆரம்பித்து வைத்த இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறை உலகம் முழுவதும் இன்று வெகு பிரபலமாக உள்ளது. உலகில் இன்று கிட்டத்தட்ட 50 லட்சம் சோதனைக் குழாய் முறையில் பிறந்த குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் டாக்டர் ராபர்ட். உலகின் முதல் சோதனைக் குழாய் முறை குழந்தை 1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்தது. அது ஒரு பெண் குழந்தையாகும். அக்குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். 2010ம் ஆண்டு ராபர்ட்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது. 2011ல் இங்கிலாந்தின் நைட் பட்டம் கிடைத்தது.

உலகம் முழுவதும் இயற்கையான குழந்தைப் பேறை அடைய முடியாத பெண்களுக்கு தெய்வம் போல இன்று துணை நிற்பது இந்த சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறைதான்.

இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தன்னுடைய கண்டுபிடிப்பால் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் பிரவுன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் ராபர்ட். தனது குழந்தை போலவே அதை பாசத்துடன் கவனித்து வந்தார். லூயிஸ் பிரவுனுக்கும், வெஸ்லி முலிந்தருக்கும் திருமணம் நடந்தபோது கூடவே இருந்தார். லூயிஸ் பிரவுனுக்கு 2006ம் ஆண்டு இயற்கையான முறையில் மகன் பிறந்தான். அந்த பிரசவத்தின்போதும் ராபர்ட் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 34 வயதாகும் லூயிஸ் பிரவுன், ராபர்ட்டின் மரணம் தன்னை சிதறடித்திருப்பதாக கண்ணீருடன் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தாத்தா போலவே என் மீது பாசமாக இருந்தார் ராபர்ட். அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.

நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ராபர்ட் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு ரூத் என்ற மனைவியும், 5 மகள்கள், 12 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையில் 700 கிலோ தங்க காசுகள் கண்டுபிடிப்பு

பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையில் 700 கிலோ தங்க காசுகள் கண்டுபிடிப்புபத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் இருந்து 700 கிலோ எடை கொண்ட தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம். திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன.

பி அறையை தவிர மற்ற 5 அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றில் உள்ள பொக்கிஷங்கள் உச்சநீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்து வருகின்றனர். இதன் விபரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இது வரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விபரங்களை உச்சநீதிமன்றத்தில் இக்குழு தாக்கல் செய்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'சி,டி, இ மற்றும் எப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடிந்து விட்டது. ஏ அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. 216 நாட்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 1 லட்சத்து 5 ஆயிரத்து 656 பொருட்கள் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு நாளில் அதிக பட்சமாக 3 அல்லது 4 ஆபரணங்களை மட்டுமே மதிப்பீடு செய்ய முடிந்தது.

ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையிலான வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது தான் மதிப்பீடு தாமதத்துக்கு காரணம். இதுவரை ரூ. 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. இந்த நாணயங்களை மதிப்பீடுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/11/india-700-kg-gold-coin-found-trivandram-padmanabha-temple-173275.html

Tuesday, April 9, 2013

கொழுப்பை விரட்டும் கடுகு

கொழுப்பை விரட்டும் கடுகு


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று  மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும்  இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற  உதவுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல்  கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின்,  ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்பிளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு  மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம்  போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோளிணி எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த  சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

நீரிழிவின் எதிரி செர்ரி

நீரிழிவின் எதிரி செர்ரி


இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ்  அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க  சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள்  நிறைந்தது.

ஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு  பொருளாக செயல்படக் கூடியது. உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை ஆன்தோசயானின் நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும்  பணிகளில் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம்  சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் ஆன்டி-ஆக்சி  டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை.

கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். புற்றுநோளிணி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. மெலடானின் எனும் சிறந்த  நோளிணி எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல்  தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.

இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி  போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோளிணித் தடுப்புபணியை செய்கிறது. பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற  அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.

வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலாவகை செர்ரி பழங்கள், பிற  நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங்களைவிட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம்  வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது.

உப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது

உப்பு, சரக்கு, தம்.. உஷார் ஹை பீ.பி. நெருங்காது


‘அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்’ என்பது இந்த ஆண்டின் மைய கருத்தாக கடைபிடிக்கப்படுகிறது. 1948-ம்  ஆண்டு உலக சுகாதார அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற உறுப்பினர்கள் 1950-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம்  தேதியை உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலக சுகாதார தினமாக கொண்டாடுவது என்று முடிவு  செய்தனர்.

அதன்படி உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு  ஆண்டும் ஒரு மைய கருத்துடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு, உடல்நலம் பேணுவோம். ஆயுளை அதிகரிப்போம் என்பதை  நோக்கமாக கொண்டு கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, ரத்த அழுத்தத்தை தவிர்ப்போம் என்ற நோக்கத்தை  அடிப்படையாக கொண்டுள்ளது.

அதிக ரத்த அழுத்தம் என்பது நாளாவட்டத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மாரடைப்பு, ஸ்டிரோக், சிறுநீரகம் செயலிழப்பு ஆகியவற்றை  ஏற்படுத்துகிறது. கண்டுகொள்ளாவிட்டால் பார்வை இழப்பும் ஏற்படும். கடைசியில், இதய துடிப்பு தாறுமாறாகி இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி  இறப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயமும் இருக்கிறது. அதே நேரம், உரிய நேரத்தில் கண்டுபிடித்து எச்சரிக்கையாக இருந்தால் அதிக ரத்த அழுத்தம்  என்பது தடுக்கக்கூடியதே.

ஒருவேளை வந்துவிட்டாலும் சிகிச்சை பெற்று குணமாகிவிடக்கூடியதே. சராசரியாக, உலக அளவில் மூன்றில் ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 20-30 வயதுகளில் இருக்கும்போது 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. 50 வயதை  நெருங்கும்போது ஏறக்குறைய 10 பேரில் 5 பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. ஆப்ரிக்கா போன்ற வருமானம் குறைந்த நாடுகளில் 40  சதவீதம் பேருக்கு அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது.

உலகளவில் மிக இளம் வயதிலேயே இறப்பவர்கள் எண்ணிக்கை 91 லட்சத்தை தாண்டி செல்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்  என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு புகையிலை பழக்கம், சீரற்ற உணவு பழக்க வழக்கம், மது, போதிய  உடற்பயிற்சி இன்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை எதிரொலியாக நோய் தொற்றில்லா பாதிப்புகளான ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் பரிசோதனைகளை  மத்திய, மாநில அரசுகள் கடந்த ஆண்டே தொடங்கி நடத்தி வருகின்றன. அதற்கேற்ப நாமும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
‘அதிக ரத்த அழுத்த பாதிப்பு வந்துவிட கூடாது’ என்று நினைப்பவர்கள் என்ன செய்தாக வேண்டும் என்று 6 அம்சங்களை உலக சுகாதார நிறுவனம்  பட்டியல் போட்டிருக்கிறது.

உணவில் உப்பு அதிகம் சேர்க்க கூடாது.
எல்லா சத்துகளும் கிடைக்கும் வகையில் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்.
உடல்நலனை பாதிக்கும் அளவுக்கு மது அருந்த கூடாது.
போதிய அளவில் உடல் உழைப்பு இருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உயரம், வயதுக்கு ஏற்ற அளவிலேயே பருமன் இருக்க வேண்டும். அதிகம் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.
புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இவற்றை பின்பற்றி, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்போம். ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோம் என இந்நாளில் உறுதிகொள்வோம்.

அதிக தண்ணீர் குடித்தால் எடை குறையுமா?

அதிக தண்ணீர் குடித்தால் எடை குறையுமா?அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? எப்படி? 80 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 4 முதல் 5  லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படிக் குடித்தால் அந்தளவு அடிக்கடி சிறுநீரும் வெளியேறுமே... இதனால் சிறுநீரகம் பாதிக்கப்  படாதா?

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தனின் பதில்...

அதிகளவு தண்ணீர் குடிப்பதால் எடை குறைந்து விடாது. நிறைய தண்ணீரும் குடித்துக் கொண்டு, கூடவே அரிசி உணவைக் குறைத்து, காய்கறி,  பழங்களை அதிகம் எடுத்துக்கொண்டு, கலோரி குறைவான உணவு களை சாப்பிட்டு வந்தால் எடை குறையலாம். பொதுவாக வெயில் காலத்தில் அதிக  தண்ணீர் குடிக்க வேண்டும்.

வியர்வை வழியே உடலின் நீர் வெளியேறுவதால்,  அதை ஈடுகட்ட, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். வெயில் இல்லாத மற்ற  நாள்களில், வியர்வை அதிகமிருக்காது. உடலின் தண்ணீர்  சத்திலும் இழப்பிருக்காது. அதனால் அதிக தண்ணீர் குடித்தால், சிறுநீரின் அளவும்  அதிகரிக்கும். அதிக தண்ணீர் குடிப்பது என்பது, ஆரோக்கியமான  சிறுநீரகங்கள் மற்றும் இதயம் கொண்டவர்களுக்கு ஓ.கே. ஒன்றும் செய்யாது.

சிறுநீரகம் பழுதடைந்திருந்தாலோ, சுவாசப் பிரச்னை இருந்தாலோ,  கல்லீரல் அல்லது இதயக்கோளாறு இருந்தாலோ, அதிகளவு தண்ணீரானது  உடலுக்குள்ளேயே தங்கி, வெளியேற்ற முடியாமல் போகும். அந்த  நிலையை ‘ஃப்ளூயிட் ஓவர் லோடு’ என்கிறோம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள்  நாளொன்றுக்கு ஒன்றரை முதல் 2 லிட்டர் வரையிலும், இதயக்  கோளாறு இருப்பவர்கள் 1 லிட்டரும் மட்டுமே தண்ணீர் குடிக்க  அனுமதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் மட்டும் குடிக்கிற தண்ணீரின் அளவில் கவனம் செலுத்தினால் போதும்.

Monday, April 8, 2013

பெண்களுக்கோர் கெட்ட செய்தி.. காலாவதியாகப் போகிறார்களாம் ஆண்கள்!

பெண்களுக்கோர் கெட்ட செய்தி.. காலாவதியாகப் போகிறார்களாம் ஆண்கள்!சிட்னி: உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை. ஆனால் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். அதாவது உலகிலிருந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாம்.

பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியாக இருக்க முடியாது. ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தத் தகவலை சொல்லியிருப்பது ஒரு பெண் விஞ்ஞானிதான். அவரது பெயர் பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...

அழியத் தொடங்கி விட்டது ஆண் இனம் 


உலகில் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பை அடைந்துள்ளன. அதில் ஒன்றாக ஆண் இனமும் சேர்ந்திருப்பது அதிர்ச்சியான செய்திதான்.

ஏற்கனவே தொடங்கி விட்டது 


ஆனால் இதுதான் உண்மை. இந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தியாகும்.

குரோமோசோம்கள் குறைகின்றன 


பெண் பாலினத்தை நிர்ணயிப்பது எக்ஸ் குரோமோசம்கள் ஆகும். இதில் ஒரு குரோமோசோமில் 1000 ஜீன்கள் இருக்கும். அதேபோல ஆண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோமிலும், ஆரம்பத்தில் ஒரு குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் இருந்திருக்க வேண்டும்.

100 ஜீன்கள் குறைந்து விட்டன 


ஆனால், தற்போதைய ஆண்களின் குரோமோசோமில் 100 ஜீன்கள் மட்டுமே உள்ளன. காணப்படுகிறது. அதில் முக்கியமான ஜீன் எஸ்ஆர்ஒய் ஜீனும் அடக்கம். Male master switch என்று அழைக்கப்படும் இந்த ஜீன்தான் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஜீன் ஆகும்.

பெண்களுக்கு இரண்டு.. ஆண்களுக்கு 


ஒன்று தற்போதைய பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரு ஒய் குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதை அறியலாம்.

50 லட்சம் ஆண்டுகளுக்கு ஆம்பளைங்க இருப்பாங்களாம் 


இருப்பினும் ஆண் இனம் முழுமையாக அழிவதற்கு 50 லட்சம் ஆண்டுகள் பிடிக்குமாம். அதுவரை பிரச்சனை இல்லை என்கிறார் ஜென்னி கிரேவ்ஸ்.

ஆண்களே உலகில் இல்லயென்றால்... 


33 சதவீதம் கேட்டு போராட வேண்டி இருக்காது... ஆனால் நூறு சதவீதத்தை வைத்து என்ன செய்ய முடியும்?

உருவாகலாமோ விந்தணு வங்கிகள்... 


டைனோசரஸ் முட்டை மாதிரி, ஆண் விந்தணுவை சேகரித்து வைக்கும் வங்கிகள் அதிகமாகலாம். இல்லையென்றால் அறிவியல் இன்னும் பல நினைத்துப் பார்க்க இயலாத கண்டுபிடிப்புகளைத் தரலாம்.

Tested positive for alcohol include Pepsi Cola, Coca-Cola Classic Light and Coke Zero

Tested positive for alcohol include Pepsi Cola, Coca-Cola Classic Light and Coke Zero


55g of Sugar in 500 ml

Last week, The Nation highlighted the ill effects of Coca Cola, citing various researches that had delved into that aspect. However, the ball does not stop there. By extension, Pepsi and other cola drinks have been found to share the ill effects of Coca Cola.
Similar to Coca Cola, Pepsi carries high amounts of carbohydrates (sugar) in its drinks. The PepsiCo Inc. website states that each 500ml drink contains 55g of sugar, which is the same sugar content as Coke.

Cola drinks and Alcohol

Last week we highlighted the potential spermicidal effects of Coke consumption, in addition to risks of obesity, osteoporosis, tooth decay, and dehydration. The Huffington Post had reported (28.06.2012) that a recent study has revealed that more than half of leading cola soft drink brands contains small traces of alcohol. Researchers from the National Institute of Consumption (INC) in Paris claim to have found low levels of alcohol (around 10mg in every liter) in global Coca-Cola drinks, which is approximately 0.001% of alcohol per liter.

The brands tested positive for alcohol include Pepsi Cola, Coca-Cola Classic Light and Coke Zero.

Cola drinks and cancer?

The Huffington Post also reported that, a separate study warned that the chemical that gives cola-flavoured drinks their caramel colour could increase the risk of cancer,
“The chemical, known as 4-methylimidazole (4-MI), is an additive and has already been reduced in fizzy drinks in the US due to it health hazards – but no such changes has been adopted for the UK or elsewhere in the world.”
Laboratory tests led by the American group Center for Science in the Public Interest, suggest that 4-MI speeds up tumour growth in rats, but is yet to be tested on humans.

Labeling laws in Sri Lanka

In light of these potentially hazardous of Cola drinks it is a pressing need for tough and encompassing labeling laws to be enforced in Sri Lanka, at least as a first step, many authorities and consumer rights activists believe.

ஆறாவது மாதத்தில் கூடைப்பந்து விளையாடும் கேட்!

என்னா ஒரு தைரியம்... ஆறாவது மாதத்தில் கூடைப்பந்து விளையாடும் கேட்!லண்டன்: தற்போது கர்ப்பமாக இருக்கும் இளவரசர் சார்லஸின் மனைவி கேட் மிடில்டன், கூடைப்பந்து விளையாடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கணவருடன் சுவிட்சர்லாந்து சென்ற போது தான் கேட், தனது விளையாட்டு ஆர்வத்தை இப்படி காட்டியுள்ளார்.

ஆறாவது மாசம்...
ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் கேட், உலக மக்களின் எதிர்பார்ப்புகளுக்குரிய பிரபலமாக இருந்த போதிலும், சாதாரண சாமானிய பெண்களைப் போல் தனது கர்ப்பக்கால ஆசைகளுக்கு தடை விதிப்பதில்லை.
அசத்தும் ஆடை...
திருமணத்தின் போதே வித்தியாசமான தொப்பி அணிந்து, அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பிக் கொண்டவர், இன்றளவும் அதைத் தொடர்கிறார்.

மான் போல துள்ளி...
பூசிய வயிறுடன் கேட் துள்ளிக்குதித்து கூடைப்பந்து விளையாடியது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதாம் .

சிதம்பர ரகசியம்....
தங்கள் குழந்தை பற்றிய விவரங்களை இன்னும் ரகசியமாகவே பேணி பாதுகாத்து வருகின்றனர் இந்த அரச தம்பதிகள்

பாட்டி, பூட்டி பேரா...
'எலிசபெத் டயானா கரோல்' என பெண் குழந்தை பிறந்தால் பெயர் சூட்டலாம் என தம்பதிகள் தீர்மானித்திருப்பதாக வதந்திகள் நிலவுகின்றன. அதாவது பாட்டி, கொள்ளுப்பாட்டி பேரெல்லாம் சேர்த்து, இந்தப் பேராம்...

கோடைகாலத்தில் நடைப்பயணமா? அப்ப இந்த ஆடைகளை உடுத்துங்க..

கோடைகாலத்தில் நடைப்பயணமா? அப்ப இந்த ஆடைகளை உடுத்துங்க..விடுமுறையை கோடைகாலத்தில் கழிக்க நினைத்தால், அப்பொழுது எவ்வகையான உடைகளை அணிய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் ஒரு நீண்ட தூர நடைபயணத்திற்கு செல்ல நினைத்தால், போதுமான அளவிற்கு நிலைமைகளை சமாளிக்க தேவையானவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு பொழுதுபோக்கு நடைப்பயணத்திற்கு செல்ல விரும்பும் போது, சரியான உடைகளை அணியாவிட்டால் அது ஒரு கெட்ட கனவாக மாறிவிட வாய்ப்புள்ளது.

அதிலும் வெயில் காலத்தில், நடைப்பயணம் என்பது ஒரு சங்கடமான விஷயம். ஏனெனில், உடலுக்கு நீர் வறட்சி ஏற்படும். இதனால் உடல் களைப்படையும். வெயில் காலத்தில் ஒரு வரம்பிற்கு உட்படுத்தப்பட்ட துணிகள் நடைப்பயணத்தை எளிதாக்கி விடும். மிக அதிக வெயிலில் செல்லும் போது, துணிகளை உடலிலிருந்து கழற்றக்கூடாது. ஏனெனில் வெயில் கடுமையான பாதிப்புகளைத் தரும். இப்போது கடுமையான வெயில் காலத்தில் செய்யும் நடைப்பயணத்திற்கு எவ்வகையான உடைகளை அணியலாம் என்று பார்ப்போம்.

1. வெயில் காலத்தில் அணியப்படும் ஆடைகளில், முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, அவை இயற்கை பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். ஆடைகள் உடலில் ஒட்டிக்கொள்ளாதபடியும், நடைப்பயணத்திற்கு வசிதியாகவும் இருக்க வேண்டும். இதனால் தோலின் சுவாசம் தடைபடாமல் இருக்க வேண்டும்.

2. பருத்தி, ரேயான், பட்டு மற்றும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தலாம். பாலிஸ்டர் துணி அணிவது வெயில் காலத்தில் முற்றிலும் பொருத்தமற்றதாக இருக்கும். பருத்தி துணி வகையே எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம், அவற்றை எளிதில் துவைக்கவும், உலரவும் வைக்கலாம்.

3. கோடைகாலத்தில் நடைப்பயணத்துக்கு லேசான வண்ணங்களை கொண்ட ஆடைகளையே அணிய வேண்டும். மேலும் அவை வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நடைப்பயணம் செய்யும் போது குளம் போல தோன்றும் வியர்வையை ஆடை உறிஞ்சாமல் இருந்தால், மிகவும் கஷ்டமாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும். எடை குறைந்த ஆடைகள் சூரிய ஒளியிலிருந்து உடலை பாதுகாக்கும்.

4. நடைப்பயணதிற்கு அணியும் துணிகளின் நிறத்தை பற்றி பேசினால், லேசான நிறங்களையுடைய ஆடைகளையே அணிய வேண்டும். ஏனெனில் அவை சூரிய ஒளியை உறிஞ்சுவதற்கு பதிலாக, ஒளியை பிரதிபலிக்கும். இதனால் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். பழுப்பு மற்றும் வெள்ளை நிற உடைகள் இவ்வகையில் பொருந்தும்.

5. தளர்ச்சியான உடைகளையே அணிய வேண்டும். ஒன்றன் மீது ஒன்றாக உள்ள அடுக்குகளாக உடைகளை அணியலாம். அதிக வெயிலில் தேவைப்பட்டால் அடுக்குகளை எடுத்துவிடலாம். இல்லையேல் மீண்டும் போட்டுக் கொள்ளாலாம்.

6. நடைப்பயணத்துக்கு உகந்த காலணிகளையும், சாக்ஸ்களையும் அணிய வேண்டும். குறிப்பாக நைலான் சாக்ஸ்களையே பயன்படுத்த வேண்டும்.

7. சூரிய ஒளியின் கடுமையை குறைக்க பருத்தியால் செய்த தொப்பியை அணியலாம். ஏனெனில் நடைப்பயணத்தின் போது சூரியனின் கடுமையான வெப்பம் எளிதில் தலையையே தாக்கும். அதனால் எச்சரிக்கையுடன் செயல்படவும்.புத்தாண்டிற்கு விரும்பி அணியக்கூடிய புடவைகள்!!!


தமிழ் புத்தாண்டிற்கு விரும்பி அணியக்கூடிய பாரம்பரிய புடவைகள்!!!


தமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டுமின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப்பார்கள்.

அதிலும் பெண்கள் சாதாரண சிறு பண்டிகை என்றாலே தவறாமல் நல்ல ஃபேஷனான புடவைகளை வாங்கி அணிய நினைப்பார்கள். அதிலும் ஆண்டின் முதல் நாளான சித்திரை ஒன்றில் வாங்கமாட்டார்களா என்ன? அதுமட்டுமின்றி, பொதுவாக பெண்கள் எப்போதும் வாங்க நினைப்பது பட்டுப்புடவை தான். அதிலும் அந்த புடவையில் விலை மதிப்புள்ள புடவைகளை விட, நல்ல அழகான, தரமான மற்றும் விலை குறைவான புடவைகளையே வாங்க ஆசைப்படுவார்கள்.

அத்தகையவர்களுக்காக நல்ல ஃபேஷனாகவும், உடுத்துவதற்கு இதமாகவும், பார்ப்பதற்கு கிராண்டாகவும் இருக்கும் வகையில், தற்போது மார்க்கெட்டில் பல புடவை கலெக்ஷன்கள் உள்ளன. அதில் காஞ்சி பட்டு, சாமுத்ரிகா பட்டு, டசர் சில்க்ஸ், பரம்பரா பட்டு, வஸ்தரகலா பட்டு மற்றும் பல குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும் போல்டு ஸ்கை தமிழ் உங்களுக்காக, மிகவும் சிறப்பானதாகவும் மற்றும் அனைவரும் வாங்குவதற்கு ஏற்ற விலையிலும் இருக்கும் ஒருசில புடவைகளை பார்வைக்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து வாங்கி உடுத்தி, சித்திரை 1-ஐ சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.

வானத்து நீலம் மற்றும் ஊதா நிற டிசைனர் சேலை 

நீலம் மற்றும் ஊதா கலந்துள்ள டிசைனர் சேலையை, ஏதேனும் விழாக்களின் போது உடுத்தினால், பார்ப்பதற்கு சிம்பிளாகவும், ஆனால் கிராண்டாகவும் இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 12,815
நிறம்: வானத்து நீலம் மற்றும் ஊதா


வெந்தய கலர் காஞ்சி பட்டு 

காஞ்சிபுரப் பட்டு புடவையில் உடல் முழுவதும் வெந்தய கலரும், மெரூன் கலர் பார்டர் கொண்ட, இந்த புடவை உடுத்துவதற்கு நன்றாக இருப்பதோடு, விலை குறைவாகவும் உள்ளது.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ.5,925
நிறம்: வெந்தய கலர் மற்றும் மெரூன் பார்டர்


டபுள் ஷேடட் சாமுத்ரிகா பட்டு 

சாமுத்ரிகா பட்டு அதிகமான விலை என்று நினைக்கலாம். ஆனால் அவற்றின் விலை அதிகம் இருந்தாலும், அதன் தரம் நன்றாக இருக்கும். அதிலும் இரண்டு நிறங்களின் நிழல் போன்று தெரியும் டபுள் ஷேடட் பட்டுவில், பச்சை மற்றும் மஞ்சள் கலந்து காணப்படும் இந்த புடவையை உடுத்தினால் சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 45,985
நிறம்: டபுள் ஷேடட் (பச்சை மற்றும் மஞ்சள்)


இன்டிகோ ப்ளூ சாமுத்ரிகா பட்டு 

சாமுத்ரிகா பட்டுவில் ஓரளவு விலையில் மற்றும் பார்ப்பதற்கு லட்சணமாகவும் இருக்க வேண்டுமெனில் அதற்கு இந்த இன்டிகோ ப்ளு நிற புடவை சரியாக இருக்கும். அதிலும் இந்த புடவைக்கு அவ்வளவாக எந்த அணிகலனும் தேவையில்லை. கழுத்தில் மட்டும் எடுப்பான நெக்லேஸ் போட்டாலே, சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 16,875
நிறம்: இன்டிகோ ப்ளூ


க்ரீம் நிற நெட் டிசைனர் சேலை 

புடவைகளில் நெட் டிசைனிலும், அழகான க்ரீம் நிறத்தில், ஆங்காங்கு சிறு கல் வேலைபாடுகளுடன் இருக்கும் இந்த டிசைனர் சேலை பார்த்தால், விலை அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும், உண்மையில் விலை குறைவானது.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 10,875
நிறம்: க்ரீம்


வெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர் பரம்பரா பட்டு 

பரம்பரா பட்டுவில் இரண்டு பார்டர்கள் கொண்டதில், பார்ப்பதற்கு அழகான காம்பினேஷனில் இருப்பது, வெந்தயம் மற்றும் பச்சையுடன் கூடிய மெரூன் நிற பார்டர் கலந்த இந்த புடவை சூப்பராக இருக்கும். மேலும் இதன் முந்தானை அழகான வகையில் நெய்யப்பட்டுள்ளது. இதற்கு காலர் வைத்த ஜாக்கெட் அணிந்தால் அழகாக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 15,675
நிறம்: வெந்தயம் மற்றும் அடர் பச்சையுடன் கூடிய மெரூன் பார்டர்


பிங்க் நிற பனாரஸ் சில்க் பனாரஸ் 

சில்க்கில் பிங்க் நிற உடலில், கோல்டன் நிற இலை போட்டு, பச்சை நிற பார்டர் இருக்கும், இந்த புடவை உடுத்தினால் கிராண்டாக தெரியும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 17,255
நிறம்: பிங்க் மற்றும் பச்சை நிற பார்டர்


மயில் நீல பராம்பரா 

இந்த மயில் நீல பட்டுப் புடவையில் ஒரு பக்கம் பெரிய பார்டரும், மறுபக்கம் சிறு பார்டரும் மற்றும் மாம்பழ டிசைன் போட்ட முந்தானை உள்ளது. இதற்கு சாதாரணமாக பா கழுத்துள்ள ஜாக்கெட் தைத்து, அதன் இருமுனைகளிலும் ஜன்னல் போன்ற இரண்டு கோடுகளை தைத்து, போட்டால், அருமையாக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 18,755
நிறம்: மயில் நீலம்

ஆரஞ்சு மற்றும் வெந்தய நிற பரம்பரா பட்டுப்புடவை 

பெண்கள் விரும்பி அணிய நினைக்கும் பட்டுவில் பராம்பரா பட்டு ஒன்று. இந்த பட்டுவில் விலை குறைவாகவும், அழகான கலர் காம்பினேஷனுடன் காணப்படுவது, ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் கலந்த, மாம்பழ டிசைன் போட்ட, இந்த பரம்பரா பட்டு தான். இதற்கு சாதாரணமாக ஜாக்கெட் அணிந்து, நன்கு எடுப்பான அணிகலன்களை அணிந்தால், சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 13,555
நிறம்: ஆரஞ்சு மற்றும் வெந்தய நிறம்


மெரூன் மற்றும் கோல்டன் பார்டர் வஸ்த்ரகலா பட்டு 

சற்று ஜொலிக்கும் வகையில் புடவை வாங்க வேண்டுமெனில் அதற்கு வஸ்த்ரகலா பட்டு தான் சரியாக இருக்கும். அதிலும் இந்த மெரூன் மற்றும் கோல்டன் நிற பார்டருடன், ஆங்காங்கு சிறு வேலைபாடுகளுடன் கொண்ட, இந்த புடவையை அணிந்தால், நன்றாக இருக்கும். மேலும் இந்த புடவைக்கு மேட்சாக இருக்கும் அணிகலன்களை அணிய வேண்டும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை ரூ. 14,225
நிறம்: மெரூன் மற்றும் கோல்டன் பார்டர்


சர்வ லட்சண பலவண்ண சாமுத்ரிகா பட்டு 

சாமுத்ரிகாவிலும் பல்வேறு வண்ணங்கள் கலந்துள்ள பட்டுப் புடவைகள் உள்ளன. அத்தகையவற்றில் இங்குள்ள சிவப்பு, ரோஸ், கோல்டன் கலந்திருக்கும் சாமுத்ரிகா பட்டு சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 28,055
நிறம்: சிவப்பு, ரோஸ், கோல்டன் கலந்தது


ஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர் வஸ்த்ரகலா பட்டு 

இந்த ஊதா நிற எம்பிராய்டரி வஸ்த்ரகலா பட்டுவில், ஆங்காங்கு சிறு மணிகளால் எம்பிராய்டர் செய்யப்பட்டுள்ளது. அதிலும் இதற்கு போடும் ஜாக்கெட்டின் கைகளுக்கு, சேலையில் வரும் பார்டரை வைத்து தைத்தால், பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 20,045
நிறம்: ஊதா மற்றும் கோல்டன் எம்பிராய்டரி பார்டர்


வெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி 

பெண்களுக்கு பிங்க் நிறம் என்றாலே மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களுக்கு வஸ்த்ரகலாவில், கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ள இந்த பிங்க் நிற புடவை சரியானதாக இருக்கும். இது பார்ப்பதற்கு அதிக விலை போல் தெரிந்தாலும், இதன் தரத்தால் நிச்சயம் வாங்கலாம்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 16,085
நிறம்: வெளிர் நிற பிங்க் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி


நீலம் கலந்த பச்சை நிற வசுந்தரா 

பட்டு பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும், அழகான டிசைனிலும் புடவை வாங்க வேண்டுமெனில், அதற்கு வசுந்தரா பட்டு சரியானதாக இருக்கும். அதிலும் இந்த நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர் கொண்ட புட்டு புடவை சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 4,205
நிறம்: நீலம் கலந்த பச்சை மற்றும் ஊதா நிற பார்டர்


மஞ்சள் நிற வசுந்தரா 

மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், வசுந்தரா பட்டுவில் உள்ள வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர் கொண்ட புடவையை அணியலாம். அதை அணிந்தால், சற்று கிராண்டாகவும், சிம்பிளாவும் இருக்கும். விலையும் குறைவானது. குறிப்பாக இதற்கு இங்கு குறிப்பிட்டுள்ளது போல், ஜாக்கெட் அணிந்தால், சூப்பராக இருக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 5,775 நிறம்:
வெளிர் பச்சை மற்றும் மஞ்சளுடன் கூடிய மஞ்சள் பார்டர்ராமர் நீல டசர் சில்க் 

பார்ப்பதற்கு சிம்பிளா இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், டசர் சில்க் வாங்கலாம். அதிலும் ராமர் நீலம் மற்றும் வெந்தய நிற பார்டருடன் கூடிய புடவை அழகாக இருக்கும். இதன் விலையை சொன்னால் நம்பமுடியாது தான். இருப்பினும், இது தரமுள்ளதாக நீண்ட நாட்கள் உழைக்கும்.

பிராண்ட்: போத்தீஸ்
விலை: ரூ. 6,305 நிறம்:
ராமர் நீலம் மற்றும் வெந்தய பார்டர்