Tuesday, October 30, 2012

அடைமழையிலும் மாணிக்க கல் தேடும் மக்கள்

இலங்கையில் சீரற்ற காலநிலை: இருள் சூழ்ந்த வானம்: அடைமழையிலும் மாணிக்க கல் தேடும் மக்கள்





நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அடுத்து ஆறுகள், குளங்கள், மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்ற நிலையில் கந்தளாயைச் சேர்ந்த 1000 கணக்கானோர் கந்தளாய் குளத்தைச் சுற்றி இருந்து மாணிக்கக் கற்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையில் சில மாணிக்கக் கற்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

இதனையடுத்து அந்த தகவல் குளத்தை அண்மித்துள்ள கிராமங்களுக்கு பரவியதை அடுத்து கடும் மழையையும் பொருட்படுத்தாத கிராம வாசிகள் கந்தளாய் குளத்தை சுற்றி நின்று மாணிக்கக்கல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்ததையும் பொருட்படுத்தாது மக்கள் இம்மாணிக்கக்கல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு சில மாணிக்கக் கற்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் குளத்தைச் சுற்றி சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!