Friday, November 23, 2012

Sandy Island என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தீவு இல்லை

Sandy Island என்று வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தீவு நிஜத்தில் இல்லை: அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்



உலக வரைபடங்களில் பல காலமாக காண்பிக்கப்பட்டு வரும் தென் பசிபிக் சமுத்திரத்தின் சிறு தீவு என்பது நிஜத்தில் இல்லை என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Sandy Island என்ற பெயரில் காண்பிக்கப்பட்டு வரும் இந்த தீவு, அவுஸ்திரேலியாவுக்கும் பிரான்சினால் ஆளப்படுகின்ற நியூ கேளடோனியா என்ற தீவுக்கூட்டத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.

ஆனால் அந்த கடல் பகுதிக்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சென்று தேடி பார்த்த போது, அங்கே தீவு எதுவும் இல்லை கீழே பவழப் பாறைகளுடன் நீலக்கடலே இருந்துள்ளது.

"தீவு தெரியும் என்று எதிர்பார்த்து போனால், ஆயிரத்து நானூறு மீட்டர் ஆழமான சமுத்திரமே அந்த இடத்தில் இருந்தது" என்று கப்பலில் சென்று பார்த்த விஞ்ஞானி மரியா செடன் என்பவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த தீவு உலக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.









No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!