Wednesday, November 21, 2012

பட்டு சேலை, வேட்டி எப்படி பாதுகாக்கணும்?

பட்டு சேலை, வேட்டி எப்படி பாதுகாக்கணும்?





பண்டிகை, திருமணம் என்றாலே பட்டுபுடவையும் பட்டு வேஷ்டியும் தான் பட்ஜெட்டில் முதல் இடம் பிடிக்கும். முக்கியத்துவமும் விலை அதிகமும் கொண்ட பட்டு ஆடைகளை எப்படி பாதுகாப்பாக வைப்பது, எப்படி இஸ்திரி போடுவது என்பது பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. இதோ அதற்கான டிப்ஸ்...

கவனிக்க வேண்டியவை:
    
பட்டு துணிகளை சுத்தமான ஈரப்பதம் இல்லாத இடத்தில் தான் வைக்க வேண்டும். நீண்ட நாள் புடவையை உபயோகப்படுத்தாமல் இருப்பின், இடையில் சிறிது நேரம் நிழலில் உலர வைத்து பின்பு மடித்து வைக்கவும்.
மரம், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றின் மீது நேரடியாக படும்படி வைக்க சுடாது. ஏதாவது பேப்பர் போட்டு அதன் மேல் வைக்கலாம்.
   
அதிகப்படியான வெளிச்சம், ஈரப்பதம், பூச்சிகள் நிறைந்த இடம், தூசி உள்ள இடங்களில் வைக்க கூடாது.நிறத்தினை பாதுகாக்க பட்டு துணிகளை வெண்மையான பருத்தி துணிகளில் சுற்றி வைக்க வேண்டும்.
பட்டினை பத்திரப்படுத்தும் இடங்களில் சிலிக்கா பாக்கெட்டுகளை உபயோகிக்கவும்.

இஸ்திரி செய்யும் போது...:

எப்போதும் குறைந்த மற்றும் மிதமான வெப்பத்திலேயே இஸ்திரி செய்ய வேண்டும். இஸ்திரி செய்யும் போது பட்டு துணியில் நீரினை தெளிக்கவோ, ஈரத்துணியால் ஓற்றி எடுக்கவோ கூடாது. எப்போதும் உள்பகுதியிலேயே இஸ்திரி செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சலவை செய்வதே சிறந்தது. துவைத்த பின் 2 அல்லது 3 முறை அலசி சோப்பினை முற்றி சாயம் போகும் என்ற சந்தேகம் இருப்பின் சிறதளவு சிட்ரிக் அமிலம் அல்லது அசிட்டிக்  அமிலம் கலந்த நீரில் ஒரு சில நிமிடம் ஊர வைத்து பின் சலவை செய்யவும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!