Monday, November 19, 2012

சிக்கல் நிறைந்தது சீனா உறவு, வரலாற்றுப்பூர்வமானது இந்தியா உறவு: அமெரிக்கா

சிக்கல் நிறைந்தது சீனா உறவு, வரலாற்றுப்பூர்வமானது இந்தியா உறவு: அமெரிக்கா


நெருங்கிய நாடு என்ற முறையில் இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவுடனான உறவு வரலாற்றுப்பூர்வமானது, ஒருமித்த கருத்து கொண்டது என்றார்.

அதேநேரத்தில் சீனாவுடனான அமெரிக்க உறவு சிக்கல் நிறைந்தது என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, அவுஸ்திரேலியா சென்றிருந்த அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஆசிய விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இந்தியா அவுஸ்திரேலியா இடையே இராணுவ கூட்டு பயிற்சி நடந்தால் அதை அமெரிக்கா வரவேற்கும் என இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!