Monday, November 19, 2012

லண்டனில் காந்தி எழுதிய இரு கடிதங்கள் ஏலத்தில்! (ராகுல் காந்தி அல்ல!!)

லண்டனில் காந்தி எழுதிய இரு கடிதங்கள் ஏலத்தில்! (ராகுல் காந்தி அல்ல!!)




மகாத்மா காந்தியால் எழுதப்பட்ட இரு கடிதங்கள், அடுத்த மாதம் பிரிட்டனில் ஏலம் விடப்படவுள்ளன. அத்துடன் இந்திய அரசியல் சட்டத்தின் அந்த நாளைய காப்பி ஒன்றும் ஏலத்துக்கு வருகிறது.

மகாத்மா காந்தி எழுதிய கடிதங்களில் ஒன்று, ரபிந்ரநாத் தாகூரின் மூத்த சகோதரர் த்விஜிந்த்ரநாத் தாகூருக்கு எழுதப்பட்டது. காந்தி, 1922-ம் ஆண்டு அஹ்மதாபாத் சபர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பென்சிலால் எழுதப்பட்ட 2 பக்க கடிதம், 5,000-7,000 பவுன்ட்ஸ் விலைக்கு ஏலம் போகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

காந்தியின் மற்றைய கடிதம், 3,000-4,000 பவுன்ட்ஸ் விலைக்கு ஏலம் போகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இது யாருக்கு எழுதப்பட்டது என பெயர் இல்லை. 1922-ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் கடிதம், ஒரு இரங்கல் கடிதம். கடிதத்தை பெற்றுக்கொண்ட நபரின் தாயார் இறந்த விபரம் அறிந்து காந்தி எழுதிய ஆறுதல் தெரிவிக்கும் கடிதம் அது.

ஏலத்தில் விடப்படவுள்ள இந்திய அரசியல் சட்ட காப்பி, அரசியல் சட்டத்தின் லிமிட்டட் பர்ஸ்ட் எடிஷன். வாட்மேன் பேப்பரில் ஆங்கிலத்திலும், தேவநகரியிலும் எழுதப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத்தில், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தின் ஒரிஜினல் கையொப்பம் உள்ளது.

இவை டிசம்பர் 12-ம் தேதி ஏலத்தில் விடப்படுகின்றன.

காந்திஜியின் கொள்கைகளை இந்தியாவில் ஏலம் விட்டுவிட்டோம். கடிதங்களை பிரிட்டனில் ஏலம் விட்டால் குடியா முழுகிப் போகும்? மகாத்மா காந்தி எழுதிய லெட்டர் இல்லாவிட்டாலென்ன, ராகுல் காந்தியிடம் சொல்லி ஒரு லெட்டர் வாங்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!