Friday, November 23, 2012

இந்திய தேசிய பாதுகாப்பு மையம் உஷார் ! இலங்கை செயற்கைக்கோள் விடையம் சூடுபிடித்தது !

இந்திய தேசிய பாதுகாப்பு மையம் உஷார் ! இலங்கை செயற்கைக்கோள் விடையம் சூடுபிடித்தது !





சுப் -ரீம் ஸட்(Supreme Sat 1) என்று அழைக்கப்படும் சட்டலைட் (செயற்கைக் கோள்) ஒன்றை இலங்கை தயாரித்துள்ளதாகவும், அது இன்று வியாழக்கிழமை சீன நேரம் 3.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் எனவும் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த செயற்க்கைக் கோள் தொலைத் தொடர்புக்காக பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இச் செயற்கைக் கோளை ஏன் சீனாவின், சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து ஏவவேண்டும் ? அயல் நாடான இந்தியாவிடம் கேட்டால், ஸ்ரீகரிக் கோட்டாவில் இருந்து ஏவியிருக்க முடியுமே ? பொருட்செலவும் மிகக் குறைவாக அமைந்திருக்கும். ஆனால் இதனை விடுத்து இலங்கை அரசானது இச் செயற்க்கைக் கோளை, ஏன் சீனாவைக் கொண்டு வடிவமைக்கவேண்டும் ? அத்தோடு இலங்கைக்கு மேலுள்ள விண் பரப்பில் இது நிலைகொள்ள உள்ளது, இந்திய தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என டெல்லியில் உள்ள சிலர் சிவப்பு மணியை அடித்துள்ளார்கள்.

இவர்களின் சிவப்பு மணி எச்சரிக்கையை, இந்திய தேசிய பாதுகாப்பு மையம் ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு இன்று தெரிவித்துள்ள கருத்துக்கள் நிச்சயமான இந்தியாவுக்கு நல்ல செய்தி அல்ல. தமக்கும் இந்த செயற்கைக் கோளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறது இலங்கை அரசு. அத்தோடு சீனக் கம்பெனி ஒன்றே இதனைத் தயாரித்துள்ளதாகவும் அதில் என்ன இருக்கிறது என்று எமக்குத் தெரியாது என்றும், ஆனால் தொடர்பாடலுக்கு உகந்த செயற்கைக் கோள் இது என்றும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட இன்று தெரிவித்துள்ளார். இதில் இருந்து இலங்கை அரசானது இச் செயற்கைக் கோள் விடையத்தில் இருந்து பின்வாங்கியுள்ளது என்பது மிகத் தெள்ளத் தெளிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, இன்று மாலை சீன நேரம் 3.30 மணிக்கு இச் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் அதனை சீன செயற்கைக்கோள் ஏவு தள அதிகாரிகள் இடை நிறுத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு மையத்தின் தலையீட்டால் தான் இது, இன்று ஏவப்படவிருந்த செயற்க்கைக் கோள் ஏவப்படவில்லை என்ற செய்திகள் டெல்லியில் இருந்து கசிந்தாலும், கால நிலை சீர்கேட்டால் அது 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. இச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய பிற்பாடு அதனைச் செயலிழக்க வைக்க இந்தியா சில முயற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும், அமெரிக்க உதவியோடு இது நடைபெற சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய இந்தச் செயற்க்கைக் கோள், மிகவும் இரகசியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, முடிவடைந்த பின்னரே இது குறித்து இலங்கை செய்தி வெளியிட்டுள்ளமையும் பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!