Friday, November 23, 2012

உலகின் அதிநவீன சூப்பர் கணனியாக அமெரிக்காவின் Titan தெரிவு

உலகின் அதிநவீன சூப்பர் கணனியாக அமெரிக்காவின் Titan தெரிவு



உலகின் அதிவேக சூப்பர் கணனியை(Super Computer) கொண்ட நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் ஓக்ரிட்ஜ் தேசிய ஆய்வுகூடத்தில் உள்ள Titan Cray XK7 என்ற கணனியே தற்போது உலகின் அதிவேக சூப்பர் கணனியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது Cray XT5 Jaguar என்ற சூப்பர் கணனியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

இந்த கணனி 560,640 Processor-களையும், 261,632 NVIDIA K20x Accelerator Cores-களையும் கொண்டுள்ளது.

மேலும் இது ஒரு Second-ல் 17.59 குவாட்ரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடியது.

இதற்கு முன்னர் உலகின் அதிநவீன சூப்பர் கணனிகளாக ஜப்பானின் 'K' என்ற கணனியும், சீனாவின் Tianhe - 1 A என்ற கணனியும் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!