Thursday, November 22, 2012

பிரிட்டனில் வெள்ள அபாய எச்சரிக்கை! பாதைகள் துண்டிப்பு!!

பிரிட்டனில் வெள்ள அபாய எச்சரிக்கை! பாதைகள் துண்டிப்பு!!




பிரிட்டனின் சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்த மழையால், சில நகரங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியிருக்க, இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்து பீதியை கிளப்பியுள்ளது.

கடந்த இரு தினங்களாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக Devon, Dorset, Somerset ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள போலீஸின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்பவர்களாக இணைந்துள்ளவர்களுக்கு இன்று காலை, “வீதிகளில் வாகனங்களை இறக்கும்போது ஞாக்கிரதையாக இருக்கவும். நீங்கள் இறங்கும் வீதியில் ஆறுபோல தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கலாம்” என்று ட்விட் மெசேஜ் போயிருக்கிறது.

மேலேயுள்ள போட்டோ, நேற்று Cheltenham Spa ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்டது. இங்கிருந்து லண்டன் செல்வதற்காக காத்திருந்த பயணிகளுக்கு, அடுத்தடுத்து 8 ட்ரெயின்கள் கேன்சல் செய்யப்பட்ட செய்திதான் வந்துகொண்டிருந்தது. ட்ரெயின் வரவில்லை.

ட்ரெயினுக்கு என்ன நடந்தது? எங்கே நிற்கிறது? அடுத்த போட்டோவுக்கு வந்து பாருங்கள்.






இதோ இங்கேதான் நிற்கிறது ட்ரெயின். ரயில்வே பாதையை வெள்ளம் முடியிருப்பதால், வெள்ளம் வடிந்து செல்லும்வரை ட்ரெயின்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து நேற்று இயங்கவில்லை. இன்று 2.5 இஞ்ச் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரயில் பாதைகள் கிளியர் ஆவது சந்தேகமே.

சரி. ரயிலில் செல்லும் யோசனையை கைவிட்டு விட்டு, காரை எடுத்துப் போகலாமா? வீதியில் நிலைமை எப்படியுள்ளது என்று பார்க்க அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.


பர்மிங்ஹாம், ரெட்னல் பகுதி வீதி ஒன்றில் நேற்று எடுக்கப்பட்ட போட்டோ இது. வீதியில் இப்படி வெள்ளம் இருந்தால், கார்களில் வேகமாக செல்ல முடியாது. ஆனால், ஓரளவுக்கு மெதுவாக செல்ல முடியும். இதனால், வழமையான 30 நிமிடங்களில் அலுவலகம் செல்பவர்கள், டஷ் டயத்தில் 3 மணி நேரத்துக்கு முன்பு கிளம்ப வேண்டியுள்ளது.

சரி, மெதுவாக டிரைவ் பண்ணினால் ஆபத்து இல்லை என்று அடித்துச் சொல்ல முடியுமா? அடுத்த போட்டோவில் வந்து பாருங்கள் என்ன ஆகிறது என்பதை.


நீங்கள் மெதுவாக சென்றாலும், உங்களுக்கு அருகே, உங்களை கடந்து செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்வார்கள் என்று சொல்ல முடியாது. பெரிய ட்ரக்குகளின் உயரம் அதிகம். டயரும் பெரியது. இதனால், அவர்களால் வேகமாக டிரைவ் செய்ய முடியும்.

கீழேயுள்ள போட்டோவில், ட்ரக்குக்கு அருகே செல்லும் வேனை பாருங்கள். ட்ரக் முழுமையாக வேனை கடந்து செல்லும் வரை, இவருக்கு வின்ட்ஷீல்டு வழியாக முன்னே எதையும் பார்க்க முடியாது. முன்னே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தால், போய் மோத வேண்டியதுதான்.

அப்படியிருந்தும், சமாளித்துக்கொண்டு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போக வேண்டிய இடம்வரை போய் சேருவது உறுதிதானா? அடுத்த போட்டோவுக்கு வந்துதான் பாருங்களேன்!







அடாடா.. வீதியின் இந்தப் பகுதி உயரம் குறைவாக இடத்தின் ஊடாக செல்கிறது. இதில் வந்து சிக்கிக் கொண்டால், வெள்ளம் வடியும்வரை காருக்குள் காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது, காரை விட்டு இறங்கி நடக்க வேண்டியிருக்கும். அப்புறம் வந்து காரை எடுத்துக் கொள்ளலாம், நாளைக்கே வெள்ளம் அதிகமாகி, காரை அடித்துக் கொண்டு செல்லாவிட்டால்!




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!