Friday, November 23, 2012

10 லட்சம் ஊழியர்களின் 62 லட்சம் லீவு நாள் வீண்

10 லட்சம் ஊழியர்களின் 62 லட்சம் லீவு நாள் வீண்



நீங்கள் அடிக்கடி லீவு எடுப்பீர்களா? இருக்கும் லீவை கூட எடுக்காமல் நல்ல பெயர் எடுக்க விரும்புபவரா? அப்படியானால் கண்டிப்பாக படிங்க.
பன்னாட்டு நிறுவனங்களின் விலை ஒப்பீட்டு சர்வே நடத்தும் லண்டனை சேர்ந்த டிராவல் சூப்பர் மார்க்கெட் என்ற வெப்சைட் சமீபத்தில் ஆன்லைன் மூலம் வித்தியாசமான சர்வே நடத்தியது. ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பங்கேற்று வாக்களித்தனர். சர்வே எதற்கு தெரியுமா? யார் லீவு எடுக்கின்றனர், யார் எடுப்பதே இல்லை என்பது பற்றி தான்.
சர்வே முடிவில் தெரியவந்துள்ளதாவது:

* நான்கில் ஒருவர் தங்களின் லீவு நாளில் 28 சதவீதத்தை வீணடிக்கின்றனர். 

* லீவு எடுத்தால் வேலை பறிபோகும் என்று பயந்து எடுப்பதே இல்லை என 9 சதவீதம் பேர் கூறினர்.

* வீட்டில் இருப்பதை விட ஆபீஸ் மேல் என்று லீவு எடுப்பதில்லையென 3 சதவீதம் பேர் புலம்பல்.

* அடிக்கடி லீவு எடுத்தால் ஆபீசில் நடக்கும் சமாச்சாரங்கள் தெரிவதில்லை என்று 2 சதவீதம் பேர் ஆதங்கம்.

* லீவு எடுத்தால் பிரமோஷன் போய்விடும் என்று 4 சதவீதம் பேர் நம்பிக்கை.

* மொத்தத்தில் கணக்கிட்டதால் 10 லட்சம் பேர் ஆண்டுக்கு 62 லட்சம் லீவு நாட்களை வீணடிக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!