Thursday, November 22, 2012

உலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருகிறது: ஐ.நா தகவல்

உலக நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருகிறது: ஐ.நா தகவல்



உலகின் பல்வேறு நாடுகளில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு குறைந்து வருவதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் பாதிக்கும் மேலாக எய்ட்ஸ் பாதிப்பு குறைந்து விட்டது என்றும், குறிப்பாக மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்த ஆப்ரிக்க நாடுகளிலும் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறைந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மலாவி(73%), போத்ஸ்வானா(71%), நமீபியா(68%), ஜாம்பியா(58%), சிம்பாவே(50%), ஸ்வாஸிலாந்து(41%), தென்னாப்பிரிக்கா(41%) போன்ற நாடுகளில் எச்ஐவி நோய்த்தொற்று பாராட்டத்தக்க அளவில் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மாத்திரிகளை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!