Thursday, November 22, 2012

“கசாப் உடலை நாம் கோரினாலும் ஆச்சரியப்பட வேண்டாம்!” -பாக். திடீரென அறிவிப்பு!

“கசாப் உடலை நாம் கோரினாலும் ஆச்சரியப்பட வேண்டாம்!” -பாக். திடீரென அறிவிப்பு!




“நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கசாப் உடலை நாம் இந்தியாவிடம் இருந்து கோரினாலும் கோருவோம்” திடீரென இவ்வாறு அறிவித்துள்ளது பாகிஸ்தான்!

கசாம் தூக்கிலடப்பட முன்னரே, மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு விபரம் அறிவிக்கப்பட்டது. அத்துடன், “தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், கசாப்பின் உடலை பெற்றுக்கொள்ள விரும்பினால் எமக்கு அறிவிக்கவும்” என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி வெளியான நேரம்வரை பாகிஸ்தானிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

இதையடுத்து, கசாப்பின் உடல், சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.

எல்லாம் முடிந்தபின் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், “தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கசாப் உடலை கோருவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. கசாப் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், அவரது உடலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்படும். அப்படி நடந்தால்கூட ஆச்சரியப்பட தேவையில்லை” என்றார்.

கசாப் குடும்பத்தினரின் கருத்தை இன்னமும் அறியவில்லையா? அவர்களது நாட்டு உளவுத்துறைக்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரின் இறந்த உடலை பெற்றுக் கொடுக்கும் விஷயத்தில், இவ்வளவுதான் பிரையோரிடியா?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!