Friday, November 23, 2012

யாழில் கள்ளச் சாமியார் செம்பில் செய்த வித்தை: 6.5 லட்சம் அபேஸ் !

யாழில் கள்ளச் சாமியார் செம்பில் செய்த வித்தை: 6.5 லட்சம் அபேஸ் !




யாழ் சுண்ணாகம் பகுதியில் விசித்திர கொள்ளை ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சாமியார் ஒருவர், தாம் மக்களின் கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குவேன் என சுய விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ஒரு குடும்பத்தினர், தமக்கு ஒரு கஷ்டம் இருப்பதாகக் கூறி இச் சாமியாரை அணுகியுள்ளனர். 20,000 ஆயிரம் ரூபா தந்தால் தாம் அதற்கு சாந்திசெய்வதாக அவர் கூறியுள்ளார். இக் குடும்பத்தினரும் அப்பணத்தைக் கொடுத்துள்ளார்கள். பாவி அப்பணத்தோடு ஓடவில்லை. மேலும் ஒரு விளையாட்டைக் காட்டியுள்ளார். பரிகாரம் முடிந்தபின்னர், இக் குடும்பத்தாரின் வீட்டிற்கு வந்த குறிப்பிட்ட சாமியார், வீட்டில் ஒரு பூசையை நடத்தியுள்ளார். அவர் ஒரு பெரிய செம்பையும் கொண்டுவந்துள்ளார். பூஜையின் முடிவில் , வீட்டில் உள்ள எல்லா நகைகளையும் அச் செம்பில் போடுமாறு கூறியுள்ளார்.

வீட்டில் உள்ளவர்களும் அவ்வாறே செய்துள்ளார்கள். செம்பை மூடி ஒரு துணியால் கட்டிவிட்டு. பின்னர் தீர்த்தம் என்று சொல்லி ஒரு நீரை அவர் கொடுத்துள்ளார். இந்த நீரை வீட்டிற்கு வெளியே சென்று தெளிக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்த 1 நிமிடத்தில், செம்பில் உள்ள நகைகளை அப்படியே அபேஸ் செய்துவிட்டு , கற்களைப் போட்டு செம்பை திரும்பவும் துணியால் கட்டிவிட்டார் சாமியார். பின்னர் வீட்டிற்குள் வந்த குடும்பத்தாரிடம், குறிப்பிட்ட செம்பைக் கொடுத்து , தாம் இன்னும் 10 நாட்களில் திரும்பி வருவதாகவும். தோஷங்கள் நீங்க 10 நாட்கள் ஆகும், அதுவரை நகைகளை இச் செம்பில் இருந்து எடுக்கவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி மூடிக் கட்டிய துணியோடு செம்பை அப்படியே கொண்டு சென்று அக் குடும்பத்தினர் வைத்துள்ளார்கள்.

பின்னர் 10 நாட்கள் ஆகியும் சாமியார் வரவில்லை என்று, அறிந்து செம்பையாவது திறந்து பார்க்கலாம் என்று பார்த்தால் அதில் வெறும் கற்கள் தான் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார்கள். சுமார் 6. 5 லட்சம் நகைகளை அப்படியே அபேஸ் செய்துகொண்டு சாமியார் ஓடித்தப்பிவிட்டார். இப்போது தான் இந்தக் குடும்பம் உண்மையான கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். மீண்டும் மீண்டும் எப்படி தமிழர்கள் மட்டும் போலிச் சாமியாரை நம்பி ஏமாறுகிறார்கள் என்று தெரியவில்லையே ? சரவணா !

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!