Monday, November 19, 2012

சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க ஜப்பான் விருப்பம்

சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க ஜப்பான் விருப்பம்


இந்தியா மற்றும் ஜப்பான் இடையே கனிம இறக்குமதி மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
பிரதமர் மன்மோகன் சிங் தனது ஜப்பான் பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோசிரோ ஜெம்பா மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் தீபா வாத்வா இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 4 ஆயிரம் தொன் கனிமங்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தற்போது இந்த கனிமங்கள் சீனாவிலிருந்து ஜப்பான் இறக்குமதி செய்து வருகிறது.

இதன்மூலம் சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க ஜப்பான் விரும்புகிறது.

மேலும் இந்த கனிமங்கள் மூலம் மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்கள், ஹைபிரிட் கார்கள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க முடியும்.

அடுத்ததாக, சமூக நல ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளிலும் தங்கி வேலைபார்த்து வரும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!